Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பொலிஸார் மீது குடும்பமே தாக்குதல்
பொலிஸார் மீது குடும்பமே தாக்குதல்
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் மீது இளைஞன் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த 4 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து சம்பவத்தில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் அவரது தாயார், சகோதரி உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் சனிக்கிழமை (06) ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 17 ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
பொலிஸார் மீது குடும்பமே தாக்குதல்
கொக்குவில் 2ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் சம்பவதினமான வெள்ளிக்கிழமை 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு மதுபோதையில் இருந்துள்ளார்.
அந்த பகுதி வீதியில் நிறுத்திவைத்திருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளது. இந்நிலையில், அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இதனையடுத்து மதுபோதையில் இருந்த இளைஞனை அவரது தாயார் சகோதரி தமது தோல்களில் சுமந்தவாறு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு
சென்ற போது அங்கிருந்த பொலிஸ் சாஜன் ஒருவர் கதிரையில் இருக்குமாறு தெரிவித்துள்ளார். அப்போது குறித்த இளைஞன் அந்த கதிரையை தூக்கி பொலிஸ் மீது தாக்குதல் மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்தார்.
இந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் இருந்த ஏனைய பொலிஸார் குறித்த இளைஞனை மடக்கிபிடித்து கைவிலங்கிட்டு பொலிஸ் நிலைய கைதி கூட்டின் வெளிபகுதில் வைத்திருந்த நிலையில் அந்த இளைஞன் தனது தலையை கூண்டின் கதவில் அடித்துக்கொண்டார்.
மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் அதனை தடுக்க முற்பட்டபோது அவரை வாயால் கடித்து அவரது சீருடையை கிழித்துள்ளார்.
அந்த பொலிஸ் உத்தியோகத்தரை காப்பாற்ற சென்ற இரு பொலிஸார் மீதும், இளைஞனுடன் அவரது தாயார், சகோதரிகள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸார் மீது குடும்பமே தாக்குதல்
காயமடைந்த 4 பொலிஸார் மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய இளைஞன் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச் சம்பவத்தில் இளைஞன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் சனிக்கிழமை (06) ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, கைது செய்யப்பட இளைஞன் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் வீதியல் செல்வோர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
300 கிலோ கிராம் லீக்ஸ் திருட்டு இருவர் கைது
300 கிலோ கிராம் லீக்ஸ் திருட்டு இருவர் கைது
விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த இலீக்சில், சுமார் 300 கிலோ கிராம் இலீக்சை திருடிச்சென்று விற்பனைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஹோல்டன் தோட்டத்தில் சனிக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.
300 கிலோ கிராம் லீக்ஸ் திருட்டு இருவர் கைது
விவசாய தோட்டத்தின் உரிமையாள செய்த முறைப்பாட்டை அடுத்து களவாடிய இலீக்சை நோர்வூட் நகரில் விற்பனை செய்தனர் என்றக்
குற்றச்சாட்டின் கீழ் இருவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும், ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் விநாயகமூர்த்தி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 10 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பழைய உறுப்பினர்கள் பாதிக்கப்படக் கூடாது பொன்சேகா
பழைய உறுப்பினர்கள் பாதிக்கப்படக் கூடாது பொன்சேகா
புதிதாக ஐக்கிய மக்கள் சக்தியில் பிறர் இணையும் போது, ஏற்கனவே கட்சியில் தற்போதைய இருந்த உறுப்பினர்கள் ஓரங்கட்டப்படக் கூடாது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
“புதியவர்களுக்கு இடமளிக்கும் போது 2020 இல் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட SJB இன் தற்போதைய உறுப்பினர்கள் பாதிக்கப்படக்கூடாது” என்று பீல்ட் மார்ஷல் பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
“கட்சி மாறி வந்தவர்கள் கட்சியின் ஆதரவாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். கட்சித் தலைவரைக் காட்டிலும் கட்சியின் சாதாரண உறுப்பினர்களுடன் பழக வேண்டும் என்பதால் இது அவசியம்,” என்று அவர் மேலும் கூறினார்.
மூன்று எம்பிக்கள் உட்பட ஏழுபேர் விடுவிப்பு
மூன்று எம்பிக்கள் உட்பட ஏழுபேர் விடுவிப்பு
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்து கொண்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உட்பட எழு பேரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் விடுவித்தது.
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி இடம்பெற்ற பேரணியில் பங்கேற்றவர்களில் எழுவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான , சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ். மாநகர
முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட எழு பேரே வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
மூன்று எம்பிக்கள் உட்பட ஏழுபேர் விடுவிப்பு
தேர்தல் காலத்தில் போராட்டம் நடத்தியமை, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 7 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அத்துடன், கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலருக்கு எதிரான வழக்கு விசாரணையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.
குறித்த இரண்டு வழக்குகளும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (08) எடுத்துகொள்ளப்பட்டது.
வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டுமென பொலிஸார் தெரிவித்த போது பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி இரண்டு வழக்குகளையும் கிடப்பில் போட்டு அனைவரையும் விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து இரண்டு வழக்கையும் கிடப்பில் போட்ட நீதிமன்றம், பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்குகளில் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் சட்டத்தரணி பிருந்தா சந்திரகேஷ் ஆஜராகியிருந்தார்.
ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை 3000 ரூபா
ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை 3000 ரூபா
சிலர் வெளியில் தலையைக் காட்டாது வீட்டுக்குள்ளேயே இருப்பதற்கு விரும்புகின்றனர். அந்தளவுக்கு விலைவாசிகள் அதிகரித்துள்ளன.
சந்தையில் மரக்கறிகளின் விலை உயர்வினால் யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்த நாட்களில் முருங்கை அறுவடை கிடைக்காததாலும், ஏனைய வகை மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாலும், முருங்கையின் விலையும் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை 3000 ரூபா
இந்த விலைகளின்படி யாழ்ப்பாணத்தில் முருங்கைக்காய் ஒன்றின் விலை 1,000 ரூபாவாகும்.
யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் மொத்த விலை 2,500 ரூபாவாக காணப்பட்டதுடன், யாழ்ப்பாணத்திலிருந்து பல மாகாணங்களுக்குச் செல்லும் பேருந்துகளிலும் முருங்கைக்காய் மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
சஜித் பிரேமதாஸ, உயர்நீதிமன்றத்தில் செய்தார் சஜித்
சஜித் பிரேமதாஸ, உயர்நீதிமன்றத்தில் செய்தார் சஜித்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, உயர்நீதிமன்றத்தில் இன்று (08) வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் இலங்கை மின்சார சபை 52 பில்லியன் ரூபாaய் பாரிய இலாபத்தை ஈட்டியிருக்கும் வேளையில்,இந்த இலாபம் நாட்டின் மின்சார நுகர்வோருக்கு நிவாரணமாக வழங்கப்படாமை,மின் கட்டணம்
அதிகப்படியாக அதிகரிக்கப்பட்டதால் மின்கட்டணத்தைச் செலுத்த முடியாத 8 இலட்சம் மின் நுகர்வோரின் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளமை மற்றும் இதன் மூலம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள்
மீறப்பட்டுள்ளன எனக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கால் செய்தார்.
இலட்சக்கணக்கான மின் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,அமைச்சின் செயலாளர் எம்.பி.டி. யு.கே.மாபா பத்திரன மற்றும் சட்டமா அதிபரை பிரதிவாதியாகத் குறிப்பிட்டு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
மதிப்பிடப்பட்ட நீர்மின் உற்பத்தி 3750 முதல் 4510 ஜிகாவோட் வரை தாண்டியுள்ளமை, மின்சாரத் தேவை மணிக்கு 400 ஜிகாவோட் குறைந்துள்ளமையினால் 26 பில்லியன் ரூபாவும்,மின்சார அலகு ஒன்றின்
விலையை 18 சதவீதத்தால் அதிகரித்ததன் காரணமாகவும், மின்சார சபை தலா 26 பில்லியனாக ரூபாய் வீதம் 52 பில்லியன் ரூபாய் இலாபத்தை இத்தருணத்தில் ஈட்டியுள்ளமையினாலும், இந்த இலாபம் நாட்டின் மின்
சஜித் பிரேமதாஸ, உயர்நீதிமன்றத்தில் செய்தார் சஜித்
நுகர்வோருக்கு நிவாரணமாக வழங்கப்படாது,மின் நுகர்வோர்,நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களையும் மேலும் ஒடுக்குவதற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் வினைதிறனான மின் உற்பத்தி கொள்கை இல்லாததால்,மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலும்,வினைதிறனான சேவை வழங்குவதிலும் பல சிக்கல்கள் நிலவுகின்றன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் ஒரு அலகு மின்சாரத்தின் விலை குறைந்த மட்டத்தில் கொடுக்கக்கூடிய தருணத்தில்,இதை மையமாக கொண்ட எந்த வேலைத்திட்டமும் நாட்டில் இல்லாததால், இது பெரும் பிரச்சினையாக உள்ளது.
அனைத்து மின்சார நுகர்வோரின் உரிமைகளுக்காகவும் வேண்டியே இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.
இதன் மூலம் மின்சார விலையை குறைக்க வேண்டும்.இதற்கான பணிகளை பொதுப் பயன்பாட்டு ஆணைக்கு மேற்கொள்ள வேண்டும்.இதனால் கிடைக்கும் இலாபத்தை மக்களுக்கு வழங்க வேண்டும்.
அதுமட்டுமின்றி,வறிய மக்களுக்கான மின் நுகர்வோருக்காக வேண்டி புதிய மின்சார விலைச்சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
நாட்டிலுள்ள மொத்த மின் நுகர்வோர் குறித்து சரியான தரவுகள் மின்சார சபையிடமோ அல்லது மின்சக்தி அமைச்சரிடமோ இல்லை.இந்த 2 நிறுவனங்களும் வைத்திருக்கும் தரவுகளில் முரண்பாடுகள்
உள்ளன.இவ்வாறான முரண்பாடுகள் இருந்தும்,துறைக்குப் பொறுப்பான அமைச்சர் பல்வேறு சட்டங்களை முன்வைத்துள்ளமை வியப்பளிக்கிறது.ஹிட்லரைப் போன்று மாறாமல் மகாத்மா காந்தி போன்று
செயற்படுமாறே துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கூற வேண்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.
08 கைதிகளுக்கு மூளைக் காய்ச்சல்
08 கைதிகளுக்கு மூளைக் காய்ச்சல்
காலி சிறைச்சாலையில் மேலும் 08 கைதிகள் மூளைக் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார்.
மடு மாதாவிற்கு மணி முடி சூடிய நூற்றாண்டு விழா
மடு மாதாவிற்கு மணி முடி சூடிய நூற்றாண்டு விழா
மாதாவிற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு மாதாவின் திருச்சொரூபம் மன்னார் மறைமாவட்ட பங்குகளுக்கு திருப்பயணமாக எடுத்துச் செல்லும் நடவடிக்கை இன்று (07) காலை மடு திருத்தலத்தில் இருந்து ஆரம்பமாகியது.
1924 ஆம் ஆண்டு கொழும்பு ஆயரும் அவருடன் இணைந்து இந்தியாவிலிருந்து வந்த ஆயரும் மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்ட தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு 25 ஆவது ஆண்டு யூபிலியை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட
பாதுகாவலியாம் மடு அன்னையின் திருச்சுரூபம் மன்னார் மறைமாவட்ட பங்கு தளங்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழமையான தொன்றாகும்.
இதற்கமைய இவ்வருடமும் மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்டு 100 ஆவது ஆண்டு யூபிலியை முன்னிட்டு மடு அன்னையின் திருச்சுரூபம் மடுவிலிருந்து மன்னார் வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறை
மாவட்டங்களின் பங்குத் தளங்களுக்கு இன்று (07) முதல் கொண்டு செல்லப்படுவதற்கு சகல ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மடு மாதாவிற்கு மணி முடி சூடிய நூற்றாண்டு விழா
‘மரியன்னையோடு நம்பிக்கையின் திருப்பயணிகளாகும்’ என்ற கருப்பொருளுக்கேற்ப மக்களின் தேவைகள் நிறைவேறப்படவும் . நாட்டில் அமைதியான சூழ்நிலை உருவாக வேண்டும் என்றும் சமாதானத்துக்கான ஒரு திருப்பயணமாக இது அமைவதாக மன்னார் திரு அவையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (07) காலை 8 மணியளவில் மடு அன்னையின் திருச்சுரூபம் அன்னை வீற்றிருக்கும் சிம்மாசனத்தில் இருந்து இறக்கப்பட்டு மன்னார் பேராலயத்திற்கு எடுத்து வரப்பட்டார்.
மன்னார் தள்ளாடி சந்தியில் இருந்து மன்னார் நகர் வரை மோட்டார் சைக்கிள் பவனியூடாக மடு அன்னை ஊர்தியில் அழைத்து வரப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து மன்னார் நகர மத்தியில் அமைந்துள்ள மடு அன்னையின் திருச் சொரூபம் அமைந்துள்ள பகுதி புதுப்பிக்கப்பட்டு மன்னார் மறைமாவட்ட ஆயரினால் திறந்து வைக்கப்பட்ட தோடு,சமாதான புறா மற்றும் சமாதான பலூன் என்பன பறக்கவிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மடு அன்னையின் ஊர்தி பவனி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயம் நோக்கி பயணித்தது.
இதற்கமைய மடு அன்னையின் திருச்சுரூபம் இறைமக்களின் தரிசிப்புக்காக இன்று (07) காலை 11.30 மணியிலிருந்து நாளை (08) காலை 8 மணி வரைக்கும் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் எழுந்தருளி இருப்பார்.
அதனைத்தொடர்ந்து மன்னார் மறைமாவட்டத்தின் ஏனைய பங்குகளை நோக்கி மடு அன்னையின் திருப்பயணம் இடம் பெறும். இன்றைய தினம் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசி பெற்றனர்.
வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்
வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்
நாட்டின் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எல்பிட்டிய – அம்பலாங்கொட வீதியில் 09 ஆவது மைல்கல் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று, கெப் வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் பின்னால் சென்ற இருவரும் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்
பத்தேகம பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய ஆணும் 38 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தின் பின்னர் கெப் வண்டியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கொழும்பு – நீர்கொழும்பு வீதியின் துடெல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று கெப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
48 வயதுடைய ஆணும் 46 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் கெப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஜாஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கிரானேகம, வட்டகல சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 31 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்
வடக்கு ரயில்வே தற்காலிகமாக மூடப்படும் ரயில்வே திணைக்களம்
வடக்கு ரயில்வே தற்காலிகமாக மூடப்படும் ரயில்வே திணைக்களம்
வடக்கு ரயில்வேயின் மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான மார்க்கம் இன்று (07) முதல் தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான அபிவிருத்தி நடவடிக்கைக்காக 06 மாத காலத்திற்கு இந்த மார்க்கம் மூடப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே குறிப்பிட்டார்.
அதன்படி இன்று முதல் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு ரயில்வே தற்காலிகமாக மூடப்படும் ரயில்வே திணைக்களம்
இதேவேளை, வடக்கு ரயில் மார்க்கத்திற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மார்க்கத்தையும் இவ்வருடம் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய ரயில் சேவையையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
வடக்கில் ஜனாதிபதி வழங்கிய உறுதி
வடக்கில் ஜனாதிபதி வழங்கிய உறுதி
வட மாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் எதிர்வரும் 02 வாரங்களில் வடக்கிற்கு விஜயம் செய்து இவ்விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும், வடமாகாண வர்த்தக சமூகத்தினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு செயலூக்கமான நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
யாழ்.மாவட்ட தொழில்துறையினர், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுடன் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்தைச் சேர்ந்த தொழில்துறையினர், மீனவ சமூகம் மற்றும் விவசாயிகள் உள்ளடங்கிய சுமார் 300 பேர் கொண்ட குழு இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், தமது தொழில்துறை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் புதிய முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.
அந்த அனைத்து விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சில பிரச்சினைகளுக்கு அதே நேரத்தில் தீர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்தார்.
வடக்கில் ஜனாதிபதி வழங்கிய உறுதி
வடமாகாணத்திற்கு கைத்தொழில் வலயமொன்றை வழங்குமாறு கைத்தொழில்துறையினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்குத் தேவையான காணியை இனங்காணுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், மாகாண வர்த்தக ஊக்குவிப்பு நிலையமொன்றை வடமாகாணத்திற்கு விரைவாக வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
வடமாகாணம், தேசிய பொருளாதாரத்திற்கு வினைத்திறனாக பங்களிப்பதற்கு தொழில்துறைகளை அபிவிருத்தி செய்வது இன்றியமையாதது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் யாழ்.பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று (07) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா உட்பட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்கள் இதில் கலந்துகொண்டதுடன், யாழ்.பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கான திட்டமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
நவீன தொழில்நுட்பத்துடன் பல்கலைக்கழக துறையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பல்கலைக்கழக மாணவர்களின் ஆங்கில மொழி அறிவை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
வடக்கில் ஜனாதிபதி வழங்கிய உறுதி
அதற்காக தற்போதுள்ள மனித வளப் பற்றாக்குறையைத் தீர்க்க தொலைக் கல்வி முறைகளைப் பயன்படுத்துவதற்கான இயலுமையையும், அதற்காக பல்கலைக்கழக பேராசிரியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற புலம்பெயர்
உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கான திறனையும் ஜனாதிபதி விளக்கினார். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் விரிவுரையாளர் பரிமாற்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு மாணவர்களையும் கவரக்கூடிய வகையில் இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் புதிய பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் எதிர்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, யாழ்.மாவட்ட செயலாளர் எஸ். சிவபாலசுந்தரன் ஜனாதிபதியின் தொழிற்சங்க
பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் மற்றும் வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.மங்களேஷ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றில் கட்சி தாவல் அறிகுறி
பாராளுமன்றில் கட்சி தாவல் அறிகுறி
புதிய வருடத்தில் பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கும் நாளில் பாராளுமன்றத்தில் காட்சி தாவல்கள் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் ஆளும் கட்சிக்கு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தனர்.
இதன் அடிப்படையில் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கட்சி தாவல் தொடர்பில் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றில் கட்சி தாவல் அறிகுறி
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள அந்த குழு தயாராக இருப்பதாகவும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதற்கிடையில், அரசாங்கம் கலைக்கப்படும் என பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனமும் அதன் மீது திரும்பியுள்ளது.
இந்த நிலைமையை கருத்திற் கொண்டு கட்சி தாவல்கள் துரித கதியில் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
18 அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புதிய கூட்டணிக்கு முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை
காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை
யாழ்ப்பாணம் – மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
இலங்கை விமான படையின் 73 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 73,000 பாடசாலைகளை புனரமைக்கும் வேலை திட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று (06) ஆரம்பித்து வைத்தபோதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை
205 வருடகால வரலாற்றை கொண்ட யாழ்ப்பாணம் மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான 2.5 பர்சஸ் காணி இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளதாகவும், விளையாட்டு மைதானம் புனரமைக்கப்படவில்லை எனவும் பாடசாலையின் அதிபர் இதன்போது கூறினார்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
ஏனைய உட்கட்டமைப்பு பிரச்சினைகள் தொடர்பில் எழுத்துமூலம் கோரிக்கைகளை சமர்பிக்குமாறும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய வடமாகாண ஆளுநர் எதிர்வரும் ஆண்டுக்குள் இலங்கையில் அனைத்து காணி அற்றவர்களுக்கு காணிகளும் வீடுகளும் வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் படிப்படியாக
பொதுமக்களின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் எனவும் வனவிலங்கு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் காணியற்ற மக்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தா
இலங்கைக்கு வருகிறார் ஜப்பான் நிதியமைச்சர்
இலங்கைக்கு வருகிறார் ஜப்பான் நிதியமைச்சர்
ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி, இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்தவாரம் வரவுள்ளார்.
ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி எம்.பெரேரா மற்றும் ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி ஆகியோருக்கு இடையில் டோக்கியோவில் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ஜப்பான் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
10 வருடங்களின் பின்னர் ஜப்பான் நிதியமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கார் விற்பனையில் வரி தொடர்பில் அவதானம்
கார் விற்பனையில் வரி தொடர்பில் அவதானம்
கார் விற்பனையில் வரி தொடர்பில் அவதானம் தேவை பதிவு செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்யும் போது வற் எனப்படும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பின் தாக்கம் .
தொடர்பில், கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் இதனை குறிப்பிட்டுள்ளார்.
யாழில் இரண்டு ஆட்டோ தீக்கிரை
யாழில் இரண்டு ஆட்டோ தீக்கிரை
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு ஆட்டோ தீக்கிரையாக்கப்பட்டது.
குறித்த சம்பவம் நேற்று (05) இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இரண்டு வன்முறை கும்பல் இடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இரண்டு ஆட்டோ தீக்கிரையாக்கப்பட்டது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் அனுப்பிய பணம்
வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் அனுப்பிய பணம்
2023 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களால் டிசம்பர் மாதம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் 569.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
2023 இல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மொத்த பணம் 5,969.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 57.5% அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன
வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை
வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை
கம்பஹா, பாண்டியமுல்ல பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்த வீட்டில் வசித்து வந்த 81 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (05) பிற்பகல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நேற்று காலை வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு பூஜை செய்து விட்டு வீடு திரும்பியது தெரியவந்துள்ளது.
வீட்டில் உள்ள பொருட்களை திருட வந்த நபர் அல்லது குழுவால் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, அம்பலாந்தோட்டை 100 அடி வீதியில் பல்லகஸ்வெவ சந்திக்கு அருகாமையில் நேற்று படுகொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் பாரகம, அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 4 ஆம் திகதி பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸில் இவரின் சகோதரர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து காணாமல் போனவரை தேடியபோது, அந்த இடத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் ஒருவர் பலி நால்வருக்க காயம்
விபத்தில் ஒருவர் பலி நால்வருக்க காயம்
கொழும்பு – கண்டி வீதியின் தித்தவெல்லகட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்று வேனை கடந்து சென்று கொண்டிருந்த போது வேன் மீது மோதியதுடன் முன்னால் வந்த 2 வேன்களுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் ஒருவர் பலி நால்வருக்க காயம்
வேன் ஒன்றின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த மூவர் படுகாயமடைந்து வத்துப்பிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காயமடைந்த சாரதி உயிரிழந்தார். 58 வயதுடைய கம்பளை, மரியாவத்தை பகுதியைச் சேர்ந்த சாரதியே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்களில் ருமேனிய பிரஜை ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது
வீடியோ
இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 23.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவானதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
கடந்த நவம்பர் மாதம் இந்நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 3.57 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இதில், சீனா வழங்கிய 1.4 பில்லியன் நிதி வசதியும் இதில் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது




































