Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
யாழ்ப்பாணத்து யூடியூபர் உட்பட நால்வருக்கு விளக்கமறியலில்
யாழ்ப்பாணத்து யூடியூபர் உட்பட நால்வருக்கு விளக்கமறியலில்
யாழ்ப்பாணத்து யூடியூபர் உட்பட நால்வருக்கு விளக்கமறியலில் ,யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளையில் நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூபர் உள்ளிட்ட
நால்வரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று, அதன் ஊடாக உதவி செய்வது போன்ற காணொளிகளை தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் பாடசாலை மாணவியொருவரின் வீட்டுக்கு இரவு வேளை சென்ற குறித்த நபர், பாடசாலை மாணவியை காணொளி எடுக்க முற்பட்டுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே, காணொளியில் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து பல்வேறு தரப்பினரும், தமது கண்டனங்களை தெரிவித்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இவ்வாறு உதவி செய்பவர்களின் நிதி கையாடுகைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி வந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் சமரசம் பேசச் சென்றபோது, அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
பொலிஸார் யூடியூபரையும் மேலும் மூவரையும் கைது செய்து விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விசாரணைகளின் பின்னர், நால்வரையும் விளக்கமறியலில் வைக்கவும், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது விசாரணை நடத்தி கைது செய்யவும் மன்று உத்தரவிட்டது.
ரோயல் பார்க் கொலை சம்பவம் மைத்திரிக்கு நோட்டீஸ்
ரோயல் பார்க் கொலை சம்பவம் மைத்திரிக்கு நோட்டீஸ்
ரோயல் பார்க் கொலை சம்பவம் மைத்திரிக்கு நோட்டீஸ் ,ரோயல் பார்க் கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (11) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து
செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக, இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவருக்கு தண்டனை வழங்காமல் இருப்பதற்கான காரணத்தை ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
ஒரு மாதத்திற்குள் ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன, மைத்திரிபால சிறிசேன இன்றுவரை அந்தத் தொகையை செலுத்தவில்லை என்று தெரிவித்தார்.
அதன்படி, மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த இழப்பீட்டை செலுத்தத் தவறியதற்காக தண்டிக்கப்படாமல் இருப்பதற்கான காரணத்தை முன்வைக்குமாறு கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி, ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள றோயல் பார்க் தொடர் மாடி வீடமைப்பு தொகுதியில் 19 வயதான இவோன் ஜோன்சன் என்ற வெளிநாட்டு யுவதி கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
CIDயில் முன்னிலையானார் கிரிவெஹெர விகாராதிபதி
CIDயில் முன்னிலையானார் கிரிவெஹெர விகாராதிபதி
CIDயில் முன்னிலையானார் கிரிவெஹெர விகாராதிபதி ,கதிர்காமம் கிரிவெஹெர விகாரையின் தலைமை விகாராதிபதி வண. கொபவக தம்மிந்த தேரர் இன்று (11) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்
லஞ்ச ஊழல் ஒழிப்போம் என கூறி வந்த அனுரா ஆட்சியில் உள்ளுராட்ச்சி தேர்தலில் இவ்வாறான கண்துடைப்பு விசாரணைகளை நடத்தி வருவதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன
பிரதேச சபைத் தேர்தலில் சமல் ராஜபக்ஷ
பிரதேச சபைத் தேர்தலில் சமல் ராஜபக்ஷ
பிரதேச சபைத் தேர்தலில் சமல் ராஜபக் ,எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அனைவரின் வேண்டுகோளின்படி தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும், மாவட்டத்தில் எந்த இடத்திலிருந்தும் போட்டியிட முடியும் என்றும் சமல் ராஜபக்ஷ கூறினார்.
மேலும், அனைவரும் மீண்டும் மாற்றத்தை விரும்புவதாக கூறிய அவர், அரசியலில் மேலிருந்து கீழே செல்வது சகஜம் என்று தெரிவித்தார்.
அத்துடன், தான் மீண்டும் கீழிருந்து தொடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் இந்தியர்கள் செய்யும் மோசமான செயல்
இலங்கையில் இந்தியர்கள் செய்யும் மோசமான செயல்
இலங்கையில் இந்தியர்கள் செய்யும் மோசமான செயல் ,சுற்றுலா விசாவின் மூலம் இலங்கைக்குள் உள்நுழைந்த 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் சிற்ப தொழில் மற்றும் நோய்களை குணப்படுத்துவதாகக் கூறி மதப்பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மதப்பிரசாரங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் கடந்த 8 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் சிற்ப தொழிலில் ஈடுபட்டிருந்த 8 இந்தியர்களும், விருந்தகத்தில் பணிப்புரிந்த 5 பேரும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் வழியாக நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரபல பாடகர் இலங்கைக்கு விஜயம்
பிரபல பாடகர் இலங்கைக்கு விஜயம்
பிரபல பாடகர் இலங்கைக்கு விஜயம் ,உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் ஆலோ பிளாக், இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு திங்கட்கிழமை (10) காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தார்.
உலகெங்கிலும் உள்ள 22 நாடுகளில் இசை தரவரிசையிலும் அமெரிக்காவில் கிராமி விருதுகளுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களிலும் முதலிடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சுகாதார துறையில் முதலீட்டுத் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோமிக உடுகமசூரியவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கு இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோரால் வறவேற்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டி
தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டி
தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டி ,தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே
போட்டியிடுகின்றது எனவும் எதிர்வரும் வாரத்திற்குள் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
என தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்களின் கலந்துரையாடல் அம்பாறை மாவட்டம்
ஆலையடிவேம்பு பகுதியில் சனிக்கிழமை(08) இரவு பொத்துவில் தொகுதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.கோடீஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளருமான எம். ஏ. சுமந்திரன் கல்முனைத் தொகுதி தலைவர் அ.நிதான்சன் சம்மாந்துறை
தொகுதியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான த.கலையரசன் மற்றும் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்களும் கலந்து கொண்டு தீர்மானங்கள் எட்டப்பட்டன.
இதன்போது இக்கூட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளும் கைப்பற்றப்படல் வேண்டும் பெண்கள் பிரதிநிதித்துவம்
இளைஞர்களுக்கு தேர்தலில் பங்கேற்க வாய்ப்பு வழங்குதல் உட்பட இலங்கை தமிழரசுக் கட்சியானது இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது
தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு 4700 தோட்ட வீடுகள் நிர்மாணிக்கப்படும்
இந்த ஆண்டு 4700 தோட்ட வீடுகள் நிர்மாணிக்கப்படும்
இந்த ஆண்டு 4700 தோட்ட வீடுகள் நிர்மாணிக்கப்படும் ,இந்திய உதவித் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 4,700 பெருந்தோட்ட வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
10,000 வீடுகள் கட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக தோட்டப்பகுதி வீடுகள் கட்டப்படும் என்று அமைச்சர் வித்யாரத்ன தெரிவித்தார்.
வீட்டுவசதி பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசியல் சார்பு இருப்பதாக முன்னர் செய்திகள் வந்தாலும், இந்த முறை, இந்த செயல்முறை அதிக
வெளிப்படைத்தன்மையுடனும் அரசியல் சார்பு இல்லாமலும் நடத்தப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
எஸ்டேட் வீட்டுவசதி மேம்பாடு மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக உள்நாட்டு நிதியில் ரூ.1.3 பில்லியன் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உள்கட்டமைப்பு தொடர்பான
அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
இஷாரா இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை
இஷாரா இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை
இஷாரா இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை ,பாதாள உலகக் கும்பலை சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி
இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை என நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக சமூகத்தில் பரவி வரும் வதந்திகளை குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சம்பவ தினமான பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சில மணி நேரத்திற்குள்ளே செவ்வந்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும்
அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.”
புலனாய்வுக் குழுக்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் ஆராய்ந்து வருகின்றனர். இவ்வாறான சம்பவங்களின் போது, பல்வேறு வதந்திகள் பரப்பி விசாரணைகளை திசை திருப்புவதற்காக சிலர் இதுபோன்ற
தகவல்களை வெளியிடுகின்றனர். செவ்வந்தியை கைது செய்வதற்கு புலனாய்வுக் குழுக்கள் தீவிரமான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.” என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் பின்வாங்கியது தமிழரசுக்கட்சி
கொழும்பில் பின்வாங்கியது தமிழரசுக்கட்சி
கொழும்பில் பின்வாங்கியது தமிழரசுக்கட்சி ,எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது என கட்சியின் பதில் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கொழும்பில் போட்டியிடுகின்றமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அந்த வகையில் கொழும்பு மாநகரசபையின் கீழ் தமிழ் மக்கள் வசிக்காத வட்டாரங்களும் உள்ளன. அங்கு வேட்பாளர்களை நியமிப்பது சவாலான ஒரு நிலையை ஏற்ப்படுத்தியுள்ளது. இங்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து
போட்டியிட்டாலும் அதன் வேட்பாளர்களின் பின்புலம் தொடர்பாக ஆராய்வதில் பல்வேறு சவால்கள் உள்ள காரணத்தினால் இம்முறை கொழும்பில் போட்டியிடுவதில்லை என மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது என தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி
மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விஷயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த கூட்டத்தில் பதில் பொதுச்செயலாளர் எம்.எ,சுமந்திரன்,பாராளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், எஸ்,சிறிதரன்,
ஞா.சிறிநேசன்,குகதாசன்,சிறிநாத், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அனுரா அரசு தமிழருக்கு தீர்வு தராது சிறிநேசன் எம்பி முழக்கம்
அனுரா அரசு தமிழருக்கு தீர்வு தராது சிறிநேசன் எம்பி முழக்கம்
அனுரா அரசு தமிழருக்கு தீர்வு தராது சிறிநேசன் எம்பி முழக்கம் ,அனுரா அரசானது தமிழ் மக்களுக்கு எதுவித தீர்வும் தராது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் ஞானமுத்து அவர்கள் வன்னி
மைந்தன் டிக் டாக் தளத்தில் கடந்த தினம் இரவு கலந்து கொண்ட பொழுது தெரிவித்துள்ளார் .
கடந்த 76 வருடங்களாக தமிழர்கள் அடக்க பட்டு வருகின்ற இனமாக காணப்படுகிறது .
ஆளுகின்ற அரசுகள் சிங்கள பவுத்த பேரினவாத கொள்கைகளுக்கு உள்ளே உள்வாங்க பட்டு செயல்படுகின்றன .
இவர்கள் தமிழர் காணிகள் ,மற்றும் நிலங்களை அபகரித்து ,அதன் ஊடாக .அடக்கி ,அடிமை படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் .
எனவே ஆளும் அனுரா ஆட்சி தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு வழங்க மாட்டாது என அவர் இடித்துரைத்தார்
யாழில் மாணவர்களுக்கு மாவா விற்பனை
யாழில் மாணவர்களுக்கு மாவா விற்பனை
யாழில் மாணவர்களுக்கு மாவா விற்பனை ,யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா போதைப்பொருள் கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்
வண்ணார் பண்ணை பகுதியில் வீடொன்றில் வைத்து, மாணவர்களை இலக்கு வைத்து மாவா பாக்கினை இளைஞன் ஒருவர் விற்பனை செய்து வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்
அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , குறித்த வீட்டில் இருந்து, கஞ்சா கலந்த 4 kg 250g மாவா பாக்கு, பீடித்தூள் 12 kg 500g, மற்றும் வாசனை திரவியம் 24 ரின்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.
அதனை அடுத்து மாவா பாக்கினை தயாரித்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டில் இளைஞனை கைது செய்த பொலிஸார் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உள்ளூராட்சித் தேர்தல் சிறப்பு சுற்றறிக்கை வெளியீடு
உள்ளூராட்சித் தேர்தல் சிறப்பு சுற்றறிக்கை வெளியீடு
உள்ளூராட்சித் தேர்தல் சிறப்பு சுற்றறிக்கை வெளியீடு ,வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக மொத்தம் 57 சுயேச்சைக் குழுக்களும் 18 அரசியல் கட்சிகளும் இதுவரையிலும் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
168 உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதுடன், செலுத்தும் காலம் மார்ச் 3 ஆம் திகதி தொடங்கி மார்ச் 19 ஆம் திகதியுடன் முடிவடையும்.
உள்ளூட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகும்.
மேலும், தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்க தேசிய தேர்தல் ஆணைக்குழு ஒரு சிறப்பு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை அமைச்சக செயலாளர்கள், மாகாண சபைகள், கட்சி பொதுச் செயலாளர்கள், ஆணைக்குழுச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
அதானி காற்றாலை மின் திட்டம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை அமைச்சர்
அதானி காற்றாலை மின் திட்டம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை அமைச்சர்
அதானி காற்றாலை மின் திட்டம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை அமைச்சர்
அதானி காற்றாலை மின் திட்டம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை அமைச்சர் ,அதானி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படவிருந்த காற்றாலை மின் திட்டம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை என்று மின்துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.
சமீபத்தில் (06) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பத்தாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் எரிசக்தி தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்தின் போது அமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
இந்தத் திட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரித்தபோது, அதானி நிறுவனத்தின் மின் திட்டத்தின் விலை அதிகமாக இருந்ததால், இந்த விவகாரம் மறுபரிசீலனைக்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர்
குமார ஜெயக்கொடி மேலும் தெரிவித்தார். அந்த நேரத்தில், இந்திய அதானி தாய் நிறுவனம் இந்தத் திட்டத்திலிருந்து விலகுவதாக இலங்கை முதலீட்டு வாரியத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது, அதன்படி, முதலீட்டு வாரியம்
இது குறித்து அமைச்சகத்திற்குத் தெரிவித்திருந்தது என்று அமைச்சர் மேலும் கூறினார். இருப்பினும், காற்றாலை மின் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் இலங்கையில் உள்ள அதானியின் பிரதிநிதி
நிறுவனத்துடன் நடத்தப்பட்டன, எனவே, இந்த விஷயத்தை பரிசீலிக்க அந்த நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பிறகு இரண்டு வாரங்களுக்குள் இந்த விவகாரம் தொடர்பான பதில் எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.
இந்த இரண்டு வாரங்களுக்குள் எதிர்மறையான பதில் கிடைத்தால் மட்டுமே மாற்று வழியை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
கூடுதலாக, எதிர்காலத்தில், இதுபோன்ற திட்டங்கள் அரசாங்கத்திற்கு அரசு (G2G) ஒப்பந்தங்கள் மற்றும் போட்டி கொள்முதல் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்
முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி நந்த மல்லவராச்சிக்கு பிணை
முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி நந்த மல்லவராச்சிக்கு பிணை
முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி நந்த மல்லவராச்சிக்கு பிணை வழங்கப்பட்டது
இலங்கை இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி (ஓய்வு) மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி, 2014 ஆம் ஆண்டு விளையாட்டு அமைச்சகத்திற்கான விளையாட்டு உபகரணங்களை வாங்கியது தொடர்பாக
குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்படலாம் என்ற கோரிக்கையை அடுத்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மேஜர் ஜெனரல் மல்லவராச்சி 2014 ஆம் ஆண்டு விளையாட்டு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியபோது, கொள்முதல் விவகாரம் தொடர்பாக
குற்றப் புலனாய்வுத் துறை அவரைக் கைது செய்ய முயற்சிப்பதாக அவர் சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மகிந்தானந்த அளுத்கமகே விளையாட்டு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியபோது, அவர் அமைச்சராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம்
தொடர்பாக மல்லவராச்சி சந்தேகநபராகப் பெயரிடப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதே சம்பவம் தொடர்பாக கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்ற விசாரணை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கில், தங்கள் கட்சிக்காரர் ஏற்கனவே வழக்குத் தொடுப்பவராக
சாட்சியங்களை வழங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தார். தனது கட்சிக்காரர் ஏற்கனவே வழக்குத் தொடுப்பவரின்
சாட்சியாக சாட்சியமளித்திருந்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் சந்தேக நபராக மாற்றப்பட்டார் என்பது குறித்து பிரதிவாதி மேலும் அதிருப்தி தெரிவித்தார்.
சந்தேக நபருக்காக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் சாலிய பீரிஸ், 76 வயதான அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதைக் காரணம் காட்டி ஜாமீன் கோரினார்.
மாவில் ஆறு நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய கட்டளைத் தளபதி மல்லவராச்சி என்பதை குறிப்பிட்டு, நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவையையும் அவர் எடுத்துக்காட்டினார்.
இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர சந்தேக நபரை 5 மில்லியன் ரூபாய்க்கான இரண்டு பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்
இலங்கையில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் 2,785 என பதிவாகியுள்ளன
இலங்கையில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் 2,785 என பதிவாகியுள்ளன
இலங்கையில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் 2,785 என பதிவாகியுள்ளன ,இலங்கையில் பெண்கள் பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலை அதிகரித்து வருகின்றனர், 2024 ஆம் ஆண்டில் காவல்துறை
2,785 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது என்று துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரேணுகா ஜெயசுந்தர கூறினார்.
“இருப்பினும், இதுபோன்ற வழக்குகள் குறித்து புகார் அளிப்பது குறைவாக இருப்பதால், இவை அனைத்தும் நாட்டில் நடந்த [பாலியல் துன்புறுத்தல்] சம்பவங்கள் அல்ல என்பதை நாங்கள் அறிவோம்.”
அதிக எண்ணிக்கையிலான பாலியல் வன்முறைகள் வீடுகளுக்குள் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டு வீடு தொடர்பான வன்முறைகள் 1,852 ஆகவும், அதைத் தொடர்ந்து சைபர் துன்புறுத்தல் 348 ஆகவும், பொது இடங்களில் 289 ஆகவும், சாலைகளில் 176 ஆகவும், அலுவலகத்தை மையமாகக் கொண்ட துன்புறுத்தல் 70 ஆகவும் பதிவாகியுள்ளன
முல்லைத்தீவில் 67 விகாரைகள் எம்பி ரவிகரன் காட்டம்
முல்லைத்தீவில் 67 விகாரைகள் எம்பி ரவிகரன் காட்டம்
இலங்கை முல்லைதீவில் 67 புத்தவிகாரைகள் அமைக்க பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் முல்லைதீவு பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்த்துள்ளார் .
இறுதி யுத்தம் முடிவுற்ற கால பகுதியின் பின்னர் இந்த புத்த விகாரைகள் முல்லைதீவு பகுதியில் நிறுவ பட்டுள்ளதாக கடந்த தினம் எமது வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் நேரலையில் பேசும் பொழுது ரவிகரன் தெரிவித்தார் .
தமிழர் பகுதிகளை பவுத்த தேசமாக மாற்றும் நடவடிக்கையில் சிங்கள இனவாத அரசு செயல்பட்டு வருவதாகவும் ,இதனை தமிழரால் தடுக்க முடியாத சூழல் இடம்பெறுவதாக கவலை வெளியிட்டார் .
அடக்கு முறைக்குள் தமிழர் தேசம் அமிழ்த்த பட்டு பேரினவாத சிந்தனை மேலோங்கி நிற்பதாக அவர் குற்றம் சுமத்தினார் .
இவை இலங்கை பவுத்த தேசம் என்பதையும் ,தமிழர்கள் பவுத்தர்களாக மாற வேண்டும் என்பதை காண்பிப்பதாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரணவீர தப்பியோட்டம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரணவீர தப்பியோட்டம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரணவீர தப்பியோட்டம் ,கிரிபத்கொட பகுதியில், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்திற்கு போலி பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள்
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவைக் கைது செய்ய, களனியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது, அவர் தனது வீட்டை விட்டு ஓடிவிட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்று பிரசன்ன ரணவீரவைக் கைது செய்யச் சென்றிருந்தது.
அந்த நேரத்தில் பிரசன்ன ரணவீரவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருந்ததாகவும், குற்றப் புலனாய்வுத் துறையினர் அவரது
மனைவியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ததாகவும், பின்னர் ரணவீரவின் சாரதியிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிக்கு போலியான பத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் களனி பிராந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
வீதி விபத்தில் பெண் மரணம்
வீதி விபத்தில் பெண் மரணம்
வீதி விபத்தில் பெண் மரணம் ,கொஹுவல பொலிஸ் பிரிவின் சுமனாராம வீதியில் நேற்று (7) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் இறந்த பெண் தனது மகன் மற்றும் மருமகளுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, கார் திடீரென நின்றுள்ளது.
இதன் காரணமாக, மகன் காரின் முன் சக்கரத்தில் ஒரு கல்லை வைத்து காரை இயக்க முயற்சி செய்துள்ளார்.
இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணும் அவரது மருமகளும் காரை இயக்குவதற்காக முன் சக்கரத்திலிருந்து கல்லை அகற்றியுள்ளனர்.
இருப்பினும், வாகனம் சரிவான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததால், அது திடீரென முன்னோக்கி நகர்ந்துள்ளது.
இதன்போது, இறந்த பெண் காரின் சில்லில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கார் முன்னோக்கி வந்த போது மருமகள் உடனடியாக விலகிய போதும், உயிரிழந்த பெண்ணால் விலக முடியாததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றும் 59 வயதுடையவர் என்றும், கொஹுவல சுமனாராம வீதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்
இலங்கையின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி
இலங்கையின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி
இலங்கையின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி ,இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் காணொளி தொழில்நுட்பம் மூலம் நடத்தப்பட்ட சந்திப்பு பற்றி
அவர் தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்ட ஒரு பதிவில் இதை கூறினார்.
முதலீட்டை ஈர்த்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


























