Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

துரோகியே செத்து போ …!

துரோகியே செத்து போ …!

ஏர் பிடித்து நான் உழுத
ஏக்கர் காணிகளை
யார் பிடித்து ஆள்வதுவோ
யாகம் நடக்கிறது

போர் பிடித்து மண் பறித்த
பொல்லா படை ஆழ
யார் பிடித்து இன்றென்ன
யாவரும் ஆழட்டும்

வேர் பிடித்து நாம் ஆளும்
வேளையது வருவீர்
வேண்டி நீர் பறித்தீர்
வேண்டி வந்து தருவீர்

ஆணவம் தலை பிடித்து
ஆடி அன்று நின்றீர்
ஆதலால் இன்று
அடி பணிந்து வந்தீர்

கூ னுள்ளம் புடை சூழ
கூனி போனீர்
எது செய்வீர் இனி
எழுந்தே இறந்து போவீர் …!

வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் 22-06-2020

துரோகியே செத்து போ
துரோகியே செத்து போ
      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      நான் படித்த புத்தகம் நீ …!

      நான் படித்த புத்தகம் நீ …!

      நான் படித்த புத்தகத்தில்
      நீ ஓர் பக்கமடி
      வாழ்க்கை புத்தகத்தில்
      வரலாறாய் ஆனாயடி

      தேடி படித்ததில
      தெவிட்டாத வரலாறு
      கற்று நான் தேற
      கற்கை ஆனதடி

      உடல் கூற்று ஆய்வினிலே
      உன் கூற்று முதல் பதிப்பு
      படித்த புத்தகத்தில்
      பாவை நீ முதல் பதிப்பு

      ஆய்வு கூடத்தில
      அழகான கூட்டலடி
      இன்று நினைத்தாலும்
      இளமை உருகுதடி …..

      இயற்கை அவன் படைப்பு
      இதுவே தினம் பிடிப்பு
      அழியா உன் நினைவுகளை
      ஆள் மனதில் சுமக்கின்றேன் …!

      வன்னி மைந்தன் (ஜெகன் )
      ஆக்கம் 21-06-2020.

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          அறியா பருவத்தில் புரியாதவை ….!

          அறியா பருவத்தில் புரியாதவை ….!

          உருகி உருகி அழுதேனே
          உன்னால் தானே துடித்தேன
          காளை உந்தன் இரசனை எல்லாம்
          காமத்தின் முடிவிலா ..?

          கண்டதும் நீர் பாய்ச்சும்
          கால் வாயின் கோலமா ..?
          வெட்டாத ஆற்றுக்குள்
          வெள்ளம் தேடி வரலாமா ..?

          சத்தான காய் கறிகள்
          சந்தைக்கு விடலாமா ..? ..?
          பட்டணத்து விலைவாசி
          பட்டாடை கட்டிடவோ …?

          எது சொன்னேன் புரியலையோ
          என் மனசே தெரியலையோ ..?
          விதி போடும் விளையாட்டில்
          விவரங்கள் தாமதமே

          நாள் கடந்து விழித்தெழுந்து
          நமக்கேதும் பயனில்லை
          முற் போக்கை முன் வைத்து
          முன்னேறு கை வைத்து

          வன்னி மைந்தன் (ஜெகன் )
          ஆக்கம் 20-06-2020

          அறியா பருவத்தில்
          அறியா பருவத்தில்
              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              பொறுத்திரு வருகிறேன் …!

              பொறுத்திரு வருகிறேன் …!

              திக்கு வாயில் மொழி சிக்க
              திண்ணையிலே இருக்கேண்டி
              கத்துக்கிட்டு வாறேன்டி
              காத்திருக்க மாட்டாயா ..?

              பத்திரமா நெஞ்சுக்குள்ளே
              பாசமா இருக்கிறியே
              செத்திடவா போறேன்
              செவந்து விழி எதுக்கடி …?

              கத்திடமா இருக்குமா
              கடல் அலை இல்லையடி
              பத்து மாதம் சுமப்பவளே
              பாதகமாய் வேணாண்டி

              சத்துணவு நான் தாரேன்
              சாந்தமாய் இருந்திடடி
              பந்தியிலே அழைக்கிறேன்
              பரவசம் கூடிடடி

              சாரல் வந்து அடிக்குதடி
              சாளரத்தை பூட்டிடடி
              செந்தணலை ஏற்றிடவே
              செந்தாமரையே காத்திடடி

              வன்னி மைந்தன் (ஜெகன் )
              ஆக்கம் 19-06-2020

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  என் காதலை ஏற்று விடு …!

                  என் காதலை ஏற்று விடு …!

                  எச்சி ஊறும் உன் அழகை
                  ஏய் பிடிக்க நான் வரவா ..?
                  அர்த்தமுள்ள பாசமதை
                  அள்ளி வந்து தந்திடவா ..?

                  அழகான மாம்பழமே
                  அணில் கொத்த போகுதடி
                  அகிலமே உன் பின்னால்
                  அடியெடுத்து வைக்குதடி

                  காற் றுடைக்கும் மெல்லிடையில்
                  கண் வந்து தாக்குதடி
                  மூச்சிழுக்கும் உன் அழகில்
                  முழு உடலும் கொதிக்குதடி

                  பேரழகை கண்டதினால்
                  பேச்சு வர மறுக்குதடி
                  பேரின்பம் நெஞ்சில் வந்து
                  பேரலையாய் தாக்குதடி

                  எவர் செய்த சிலையதுவோ
                  ஏங்க வைத்து போகுதே ..
                  என் தூக்கம் பறித்தவளே
                  எனை ஏற்க மாட்டாயா …?

                  வன்னி மைந்தன் (ஜெகன் )
                  ஆக்கம் 18-06-2020

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  வெற்றி தந்த மகிழ்வு ….!

                  வெற்றி தந்த மகிழ்வு ….!

                  ஆறாம் அறிவை தட்டு
                  அகிலம் எழுந்து முட்டு
                  தெரியா தென்று இருக்காதே
                  தெரிந்தாய் இன்று மறக்காதே

                  முடியும் என்று முன்னேறு
                  மூட்டி பாரு நீ போரு
                  கட்டி போட்டார் கட்டெல்லாம்
                  கைகள் வெட்டி பறக்கும்

                  தட்டி கழித்தார் கை எல்லாம்
                  தட்டி உன்னை அழைக்கும்
                  சிந்தை திறந்தால் போதும்
                  சிகரம் கட்டி அணைக்கும்

                  பங்கு சந்தை பின்னல்
                  பகுத் தறிந்தால் மின்னல்
                  கோடி அள்ளி வீசும்
                  கோடி மணம் வீசும்

                  தளரா துணிவை நட்டு
                  தமிழ் கொடியை வா நட்டு
                  முடியும் என்று சொன்னேன்
                  முடிவு விரைவில் சொல்வேன்

                  மூன்று ஆண்டு போரு
                  முடிவில் கண்டேன் வேரு
                  நாளை மலர்வேன் நன்று
                  நம்பி சொன்னேன் இன்று

                  வன்னி மைந்தன் (ஜெகன் )
                  ஆக்கம் 17-06-2020

                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                      கதறி அழும் காதல் ….!

                      கதறி அழும் காதல் ….!

                      உன்னை நம்பி வந்தேனே
                      உயிரை தந்து நின்னேனே
                      தப்பாய் போய்ச்சு இன்று
                      தவறு செய்தேன் நன்று

                      ஆடை உருவி அழகை தடவி
                      அள்ளி தின்றாய் நன்று
                      அன்பை பறித்து அழுகை வைத்து
                      அட போட்டாய் ஏனோ கொன்று …?

                      கூண்டை விட்டு பறக்கத்தானே
                      கூடி வந்தேனே
                      கூடி ஆடி மகிழ்ந்துவிட்டு
                      கூண்டில் விட்ட தென்ன …?

                      மானே தேனே மயிலே குயிலே
                      மயங்கி சொன்னாய் அன்று
                      மயக்கம் தெளிந்து விழித்தாயோ
                      மறந்து இன்று பறந்தாயோ …?

                      கண்ணீர் மட்டும் பரிசாக
                      கண்ணில் இன்று தந்தாயே
                      மறந்து பறந்தாய் நன்றே
                      மறக்க மாட்டேன் இன்றே …..!

                      வன்னி மைந்தன் (ஜெகன் )

                      ஆக்கம் 13-06-2020

                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                          எச்சரிக்கை ….!

                          எச்சரிக்கை ….!

                          சேனை படை கொண்டு
                          செந் தமிழ் நாட்டுக்குள்
                          வந்தவரை தமிழ் என்ன
                          வழி தொழவோ …?

                          முற் புதருக்குள்
                          முன் வர பயந்தவர்கள்
                          நெஞ்சிடித்து இன்றென்ன
                          நெருக்கும் உரசல் …?

                          கந்தக ஒலியில்
                          காட் சட்டை நனையும்
                          கோமாளிகள் இன்றென்ன
                          கோமகனோ …?

                          கோவண கயிற்றிலே
                          கொடி பிடிக்கும் தலைகளை
                          காப்பாற்ற முடியா
                          காலம் எழும்

                          குமுறும் ஏரி மலை
                          குன்று வெடிக்கும்
                          நஞ்சு கட்டியே
                          நாடு கொதிக்கும்

                          பஞ்சில் தீ
                          பற்றி பிடிக்கும்
                          கறுப்பு முகங்கள்
                          கருகி மிதக்கும்

                          உலக விதியில்
                          உழலும் பிழையில்
                          திருத்தி எழுத
                          திருப்பம் நடக்கும்

                          வன்னி மைந்தன் (ஜெகன் )
                          ஆக்கம் 11-06-2020

                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                          செத்து போ …..!

                          செத்து போ …..!

                          நீ மறந்து போனதற்கு
                          நீதி என்ன சொல்லு …?
                          நீசர்க்களாய் வந்தவரை
                          நீ எனக்கு சொல்லு ….?

                          பாதகமாய் செய்த தென்ன
                          பா இதழே சொல்லு …?
                          பாடி தானே அழைக்கிறேன்
                          பா மகளே மெல்லு ….

                          கூடு கட்டி வாழ்ந்தவளே
                          குற்றம் என்ன சொல்லு ..?
                          கூண்டு விட்டு போனவளே
                          குற்றுயிரை கொல்லு …..

                          நீ பார்த்த விழிக்குள்ளே
                          நினைவுகளை தொலைத்தாயா …?
                          நித்தம் நானும் துடித்திட தான்
                          நினைவுகளை நட்டாயா …?

                          மறந்து விட்டு போனவளே
                          மார்கழியாய் அலைகிறேன் ..
                          இதயம் இல்லா போனவளே
                          இன்னும் ஏனோ வாழ்கிறாய் …?

                          வன்னி மைந்தன் (ஜெகன் )

                          ஆக்கம் 10-06-2020

                              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                              என்னை திருமணம் செய்

                              என்னை திருமணம் செய்

                              சன்னி வண்டியில
                              சாலை போகையில
                              முன்னே வந்தவளே
                              முன் விழி பறித்தவளே

                              நெஞ்சை பறி கொடுத்து
                              நெடு நாளா நான் தவிக்க
                              கஞ்ச தனம் படைத்து
                              காண போறவளே

                              கூந்தல் நிலம் கூட்ட
                              குயில் குரல் பாட்டிசைக்க
                              சலங்கை மணி ஒலிக்க
                              சாலை எழுந்து வர

                              வீதி போறவளே
                              விளையாடல் செய்பவளே
                              என்னை பறி கொடுத்தேன்
                              ஏன் என்று கேட்காயோ ..?

                              உன்னை தேடுதடி
                              உயிர் ஒன்று வாடுதடி
                              காதல் செய்து விட்டேன்
                              கல்யாணம் பண்ணிக்கடி ….!

                              வன்னி மைந்தன் (ஜெகன் )
                              ஆக்கம் 06-06-2020

                              ன்னி மைந்தன் கவிதைகள்

                              என்னை-திருமணம்-செய்
                                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                  காதல் சொல்லிட வா

                                  காதல் சொல்லிட வா

                                  ஏழைந்து நாட்களாக
                                  என்னுயிரை காணலையே
                                  முன்னே நானழுது
                                  மூவாறு பெருகிடிச்சே

                                  ஏழு நாளு வாரத்தில
                                  ஏங்கி போனேன் பூச்சியமா
                                  ஏழேழு ஜென்மங்களும்
                                  ஏய் நீ தா காட்சியம்மா

                                  ஒன்ப தாண்டு வாழ்விலே
                                  ஒடிந்து போனேன் மூனாக
                                  தென்பை தந்து நின்னவளே
                                  தேடுகிறேன் தானாக

                                  வந்திடுவாய் என்று தனே
                                  விழியோரம் காத்திருக்கேன்
                                  தந்து விட்டேன் இலக்கமதை
                                  தாகத்தோடு அழைத்து விடு

                                  பூச்சியத்தில் இருந்து தான்
                                  பூமி சுத்துதே
                                  நாளுக்கு நாலு நாலு
                                  நாட்டை ஆழுதே

                                  கை பேசி இலக்கத்தை
                                  கவிதைக்குள்ளே வைத்தேன
                                  கண்டு பிடித் தழைப்பாய்
                                  காதல் கூறி நிற்பாய்

                                  வன்னி மைந்தன் (ஜெகன் )
                                  ஆக்கம் 05-06-2020
                                  இதற்குள் பிரிட்டன் 11 இலக்கம் கொண்ட கைபேசி இலக்கம் உள்ளது கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

                                  வன்னி மைந்தன் கவிதைகள்

                                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                    காதல் சொல்லிட வா …!

                                    காதல் சொல்லிட வா …!

                                    ஏழைந்து நாட்களாக
                                    என்னுயிரை காணலையே
                                    முன்னே நானழுது
                                    மூவாறு பெருகிடிச்சே

                                    ஏழு நாளு வாரத்தில
                                    ஏங்கி போனேன் பூச்சியமா
                                    ஏழேழு ஜென்மங்களும்
                                    ஏய் நீ தா காட்சியம்மா

                                    ஒன்ப தாண்டு வாழ்விலே
                                    ஒடிந்து போனேன் மூனாக
                                    தென்பை தந்து நின்னவளே
                                    தேடுகிறேன் தானாக

                                    வந்திடுவாய் என்று தனே
                                    விழியோரம் காத்திருக்கேன்
                                    தந்து விட்டேன் இலக்கமதை
                                    தாகத்தோடு அழைத்து விடு

                                    பூச்சியத்தில் இருந்து தான்
                                    பூமி சுத்துதே
                                    நாளுக்கு நாலு நாலு
                                    நாட்டை ஆழுதே

                                    கை பேசி இலக்கத்தை
                                    கவிதைக்குள்ளே வைத்தேன
                                    கண்டு பிடித் தழைப்பாய்
                                    காதல் கூறி நிற்பாய்

                                    வன்னி மைந்தன் (ஜெகன் )
                                    ஆக்கம் 05-06-2020

                                    இதற்குள் பிரிட்டன் 11 இலக்கம் கொண்ட கைபேசி இலக்கம் உள்ளது கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

                                    காதல் சொல்லிட
                                    காதல் சொல்லிட
                                        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                        நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்

                                        நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்

                                        அறுவடையின் நாளுக்காய்
                                        அலங்காரம் செய்து
                                        காத்திருக்கும் நெற்கதிராய்
                                        கண்ணுக்குள் நீ ….

                                        ஊட்டி ஊட்டி வளர்த்தவனே
                                        உன்னை அறுக்கின்ற நாள் …
                                        உழவு சக்கரத்தில்
                                        உன்னை மிதிக்கும் நாள் …

                                        நேசித்தவனே உன்னை
                                        நெஞ்சில் குத்தும் நாள்
                                        காலம் இது தான்
                                        கண் முன்னே கடக்கிறது …

                                        உன்னோடு வருவதற்கு
                                        உறவுகள் யாருமில்லை ..
                                        கண்ணீரை துடைப்பதற்கு
                                        கரங்கள் ஏதுமில்லை …

                                        நட்பு என்று சொல்ல
                                        நாவில் ஏதும் இல்லை …
                                        தப்பான காலத்தில்
                                        தளிர்களை காணவில்லை …

                                        முடிந்து போன முடிவுகளினால்
                                        மூழ்கி போன தேசம் ….
                                        நீந்தி கரையேற முடியாது
                                        நீச்சல் இன்றி தவிக்கிறது ….

                                        விதைகள் முளைக்கும் என்ற
                                        விசால நம்பிக்கையில் …
                                        கனத்த வலிகளுடன் ….
                                        கால்கள் நடக்கின்றன

                                        வன்னி மைந்தன் (ஜெகன் )
                                        ஆக்கம் 04-06-2020

                                        வன்னி மைந்தன் கவிதைகள்

                                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                          எழுந்து வா…!

                                          எழுந்து வா…!

                                          தடை எடு படை எடு
                                          தளரா துணிவெடு ..
                                          அடியெடு உடை எடு
                                          அடிமை தடை எடு …

                                          ஒளி எடு வெடி எடு
                                          ஒளி இடும் வாழ்விடு
                                          புதிர் எடு தளிர் இடு
                                          புதுயுகம் நீ இடு ….

                                          குழி எடு முதல் இடு
                                          குடித்தவன் உடல் நடு
                                          வெடி எடு முதல் இடு
                                          வெடித்தவன் உடல் வெட்டு ,,,,

                                          தமிழ் எழு தடை எடு
                                          தரணியில் உனை நடு
                                          வலி எடு உயிர் எடு
                                          வலித்தவர் உயிர் குடு

                                          வன்னி மைந்தன் (ஜெகன் )
                                          ஆக்கம் 03-06-2020

                                          புரியாதிருக்கும் -ஆனால் புதிர் இருக்கும்

                                              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                              இவர் தான் கடவுள்

                                              இவர் தான் கடவுள்

                                              எழுதாத புத்தகத்தை
                                              எடுத்து படிக்கத் தான்
                                              அழகாய் ஒரு கூட்டம்
                                              அலைகிறது இங்கே …

                                              கண்ணீரில் மகிழவும்
                                              கை தட்டி சிரிக்கவும்
                                              ஏய் மனித இங்கே
                                              ஏராளம் கூட்டம் ….

                                              வாயடி ஓசையில்
                                              வானத்தில் வெடிகள் …
                                              ஆடையில்லா நிலவு
                                              அசிங்க மானது ….

                                              அம்மணமாய் ஒருவன்
                                              அருகில் இருக்க ..
                                              பசியோடு ஒருவன்
                                              பக்கம் இருக்க

                                              கண்டு கொள்ள மனிதங்கள்
                                              கை தொழுதென்ன …?
                                              ஆண்டவனை தேடுகிறாய்…..
                                              அருகில் உள்ளான் காணலையோ …..!

                                              வன்னி மைந்தன்
                                              ஆக்கம் -31-05-2020

                                              வன்னி மைந்தன் கவிதைகள்

                                                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                                  விபச்சாரத்தை விட்டிடு

                                                  விபச்சாரத்தை விட்டிடு

                                                  என் பணத்தை நீ பறிக்க
                                                  எனக்கென்ன வலை விரிப்போ …
                                                  உன் கணக்கில் நான் இலக்கோ ..?
                                                  உறவாட வரி விலக்கோ …?

                                                  தூங்காத கண் மணியே
                                                  துயிலுரிக்க முடியாதே ….
                                                  மயங்காத மனிடமே
                                                  மனதை நீ எறியதே ….

                                                  உருகாத மெழு கொன்றில்
                                                  உஷ்ணத்தை ஏற்றாதே …
                                                  கறையான் புற்றொன்றில்
                                                  கை கழுவ முடியாதே ….

                                                  ஏறி கின்ற தூண்டிலுக்குள்
                                                  ஏய் மனமே சிக்காதே ..
                                                  தப்பான கணக்கொன்றில்
                                                  தவறியது ஏன் தானோ ..?

                                                  முறையான கணக்கென்றால்
                                                  முன்னே நாம் வந்திடலாம் …
                                                  பிழையான கணக்கொன்றில்
                                                  பிள்ளைகள் யாம் வீழ்ந்திடவோ ..?

                                                  என் உடலை நான் காட்ட
                                                  எனக்கவன் முதலாளி …?
                                                  அவன் சொல்லில் நான் ஆடும்
                                                  அம்மண தொழிலாளி ….

                                                  இது தானோ உன் வாழ்வு ..?
                                                  இவ்வுலகில் நீ தாழ்வு ….
                                                  அறியாமல் அலைகின்றாய்
                                                  அவசரத்தில் விதைக்கின்றாய் …

                                                  உயிர் கொல்லி நோய் வாங்கி
                                                  உன் உடலை ஏன் அழித்தாய் ..?
                                                  இது போன்ற தொழில் ஒன்று
                                                  இனி வேண்டாம் விட்டிடுவாய் …?

                                                  வன்னி மைந்தன்
                                                  ஆக்கம் -26-05-2020

                                                  வன்னி மைந்தன் கவிதைகள்

                                                  விபச்சாரத்தை-விட்டிடு
                                                  விபச்சாரத்தை-விட்டிடு
                                                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                                      முள்ளி வாய்க்கால் அழுகிறது …!

                                                      முள்ளி வாய்க்கால் அழுகிறது …!

                                                      எழுந்து நடந்த தமிழன் இன்று
                                                      விழுந்து முறிந்த நாள் …
                                                      ஏறி வந்த குண்டு தைத்து
                                                      எரிந்து விழுந்த நாள் …..

                                                      அழுகுரல்கள் வான் அதிர
                                                      அகதியான நாள் ….
                                                      அழுத விழி குத்தி – பகைவன்
                                                      ஆடி மகிழ்ந்த நாள் …..

                                                      உயிர் குடித்து சிங்களவன்
                                                      உலவி திரிந்த நாள் …..
                                                      உளம் வலிக்க உடல் வலிக்க
                                                      உயிர் பிழிந்த நாள் ….

                                                      கைதொழுதும் கண்டு கொள்ளா – உலகு
                                                      கண்ணுறைந்த நாள் ……
                                                      கை தொழுத புலிகள் பலம்
                                                      கால் முறிந்த நாள் …..

                                                      விண்ணதிர எழுந்த தமிழ்
                                                      விசை இழந்த நாள் ….
                                                      முள்ளி வாய்க்கால் முள்ளாய் குற்ற
                                                      முனகி எழும் நாள் …!

                                                      வன்னி மைந்தன் – ( ஜெகன் )
                                                      ஆக்கம் -17/05/2019

                                                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                                      தவிக்கும் ஆசை …!

                                                      தவிக்கும் ஆசை …!

                                                      இஞ்சி இடையழகி
                                                      இதயம் கவர் உடலழகி …
                                                      பேசும் கிளி மொழியழகி
                                                      பேராவல் நீயழகி ….

                                                      தூங்கும் இரவொன்றில்
                                                      துயில் கலைக்கும் நினைவழகி ..
                                                      தழுவும் காற்றாகி
                                                      தாலாட்டும் இயல் அழகி ….

                                                      ஓடி காதோரம்
                                                      ஒலிக்கின்ற சலங்கை ஓலி ….
                                                      வீசி போகின்ற
                                                      விளையாடடு குறும்பழகி ….

                                                      ஆடி காற்றடித்து
                                                      அரையிடை இடிந்து விழ …
                                                      கொங்கை தலையிடித்து
                                                      கொதிக்கின்ற பேரழகி …..

                                                      உன்னை நான் அணைக்கும்
                                                      உயில் எழுதும் நாள் ஒன்றில் ….
                                                      என்ன நீ செய்வாய் …?
                                                      எண்ணம் தவிக்கிறது ….!

                                                      வன்னி மைந்தன் – ( ஜெகன் )
                                                      ஆக்கம் -17/05/2019

                                                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                                      சொல்லாமல் வந்த காதல் .!

                                                      சொல்லாமல் வந்த காதல் .!

                                                      பெற்றவரை நீ இழந்து
                                                      பேரழகே வாடையில…..
                                                      நெஞ்சமெலாம் வேகுதடி
                                                      நினைவிழந்து சாகுதடி……

                                                      ஒற்றையிலே நீ இருந்து
                                                      ஓரமா அழுகிறியே ….
                                                      சாத்தியமா உனை காக்க
                                                      சம்பந்தம் செய்யலேயே …..

                                                      தேடி வந்த வேளையிலே – என்
                                                      தேதியில நீ இல்ல …
                                                      வேரறுத்து போகையில- நீ
                                                      வேறாகி போனாயே …

                                                      தங்கிட தான் துடித்தேண்டி
                                                      தவமாய் தவித்தேண்டி …
                                                      விதி வந்து விளையாட
                                                      விலகி நீ போனாயே …

                                                      இன்ரழுது துடித்தேண்டி
                                                      ஈர் விழியால் உடல் நனைத்தேண்டி …
                                                      என்னழகே உனை தேற்றிடவே
                                                      என்ன யான் செய்திடுவேன் …?

                                                      வன்னி மைந்தன் – ( ஜெகன் )
                                                      ஆக்கம் -11/05/2019

                                                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                                      பட்டினியின் கதறல் – பசி போக்காக யார் வருவார்

                                                      பட்டினியின் கதறல் – பசி போக்காக யார் வருவார் .

                                                      ஊரடங்கை போட்டு வைத்து
                                                      ஊரெல்லாம் அடக்கி வைத்து
                                                      ஏழைகளை வதைக்குது பார்
                                                      ஏறெடுத்தும் பார்கலை பார் …..

                                                      நாடாளும் மன்னர் என்று
                                                      நா கிழிய கத்துகிறார் …
                                                      ஒத்த வேளை உணவின்றி
                                                      ஓலை குடில் அழுகுது பார் ….

                                                      கத்துகிற இவர் சேதி
                                                      காதோரம் கேட்கலையோ ..?
                                                      சொத்தெழுதி கொடுக்க வேண்டாம்
                                                      சோறு போட முடியலையையோ ..?

                                                      வந்த கொரனோ அடக்கிடத்தான்
                                                      வழியேதும் தெரியலையோ …?
                                                      திண்ணையில அழுகிறவர் – குரல்
                                                      தெருவேதும் கேட்கலையோ …?

                                                      ஏ மனிதா உன் மனதை
                                                      எங்கு கொண்டு சிறை வைத்தாய் ..?
                                                      பாலகர்கள் பசிபோக்க
                                                      பைந்தமிழே முடியலையோ …?

                                                      பட்டினியின் கதறல் – பசி போக்காக யார் வருவார்

                                                      பட்டினியால் ஊர் கதற
                                                      பாரதமும் காணலையோ ..?
                                                      கொட்டுகிற கண்ணீரில்
                                                      கொடுங்கோலும் கரையலையோ …?

                                                      ஒட்டு வாங்க ஓடி வந்தார்
                                                      ஒரு வரையும் காணலையே …
                                                      நம்பி நின்ற மக்களையே
                                                      நாடி வந்தும் பார்க்கலையே ….

                                                      தேம்பி தேம்பி அழும் பிள்ளாய்
                                                      தேவைகளை போக்கிடுவாய் …
                                                      தேவடியா பயலுகளா
                                                      தேர்தல் வந்தால் வருவீரா ….!