Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
நடிகையின் குடியிருப்புக்கு சீல் வைத்த அதிகாரிகள்
நடிகையின் குடியிருப்புக்கு சீல் வைத்த அதிகாரிகள்
பிரபல இந்தி நடிகை வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள்.
இந்தி நடிகையின் குடியிருப்புக்கு சீல் வைத்த அதிகாரிகள்
அங்கிதா லோகந்தே
பிரபல இந்தி நடிகை வசிகங்கனா ரனாவத் நடித்த ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கை வரலாற்று படமான மணிகர்னிகாவில்,
ஜால்காரிபாய் எனும் போராளி வேடத்தில் நடித்தவர் நடிகை அங்கிதா லோகந்தே. டைகர் ஷெரப்பின் பாகி 3 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அங்கிதா வசித்து வருகிறார். அந்த குடியிருப்பில் உள்ள ஒருவருக்கு கொரோனா
நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டிற்கு சென்று திரும்பியதால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்கு தனிமை வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வரும் அதிகாரிகள், அங்கிதா வசித்து வரும் அடுக்குமாடி
குடியிருப்பை தனிமைப்படுத்தி சீல் வைத்துள்ளனர். மேலும், அந்த அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வரும் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனாவில் இருந்து மீண்டார் பாடகி கனிகா கபூர்
கொரோனாவில் இருந்து மீண்டார் பாடகி கனிகா கபூர்
பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூர், 6-வது முறையாக பரிசோதனை
செய்ததில், கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி ஆகியுள்ளது.
கொரோனாவில் இருந்து மீண்டார் பாடகி கனிகா கபூர்
கனிகா கபூர்
பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூர், லண்டனுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பிய நிலையில், வீட்டில் தன்னை
தனிமைப்படுத்திக் கொள்ளாமல் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நட்சத்திர ஓட்டலிலும் தங்கி இருந்தார். பின்னர்
அவருக்கு உடல் நிலை குன்றியதால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன்
நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள்.
கனிகாவை கைது செய்ய வேண்டும் என்றும் சிலர் வற்புறுத்தினர்.
கனிகா கபூர்
கொரோனா நோயாளிகளுக்கு 48 மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதனை நடத்தப்படும். கனிகாவுக்கு 5 முறை பரிசோதனை
செய்தும் கொரோனா தொற்று இருப்பதையே உறுதிப்படுத்தியது. தற்போது 6-வது முறையாக பரிசோதனை செய்தனர்.
அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை முடிவுகள் வெளிப்படுத்தின.
இதையடுத்து அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். வீட்டிலேயே
ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கனிகா கபூருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

இதை செய்தால் கொரோனாவை எளிதில் ஜெயிக்கலாம் – தமன்னா
இதை செய்தால் கொரோனாவை எளிதில் ஜெயிக்கலாம் – தமன்னா
தமிழில் பேசி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ள தமன்னா, இதை செய்தால்
கொரோனாவை எளிதில் ஜெயிக்க முடியும் என கூறியுள்ளார்.
இதை செய்தால் கொரோனாவை எளிதில் ஜெயிக்கலாம் – தமன்னா
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இதை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு
வீட்டில் முடங்கி உள்ளனர். சினிமா படப்பிடிப்புகள் ரத்தானதால் நடிகர்-நடிகைகள் வீட்டில் இருக்கிறார்கள்.
ஊரடங்கை மீறி சிலர் வெளியே சுற்றவும் செய்கின்றனர். அவர்களால்
கொரோனா மேலும் பரவலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
அவர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில் நடிகர்-நடிகைகள் பலர் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை தமன்னா வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:- “நம்மால் கோவிட்-19 வைரசை எளிதாக
ஜெயிக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்கள்தான்.
நாம் அனைவரும் இந்த நேரத்தில் வீட்டில்தான் இருக்க வேண்டும்.
தமன்னா
இப்போது அதுதான் நமக்கு பாதுகாப்பு. கொரோனா வைரசிடம் இருந்து ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது நமது கையில்தான்
இருக்கிறது. எனவே அரசாங்கம் சொல்வதை கேளுங்கள். சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். விலகி நின்று
ஒன்றிணைவோம். கொரோனா வைரசை ஒழிப்போம்”. இவ்வாறு தமன்னா கூறியுள்ளார்.
இந்த வீடியோவில் அவர் தமிழில் பேசி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன்
கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன்
கொரோனா விழிப்புணர்வுக்காக ரஜினி, அமிதாப், சிரஞ்சீவி நடித்த குறும்படம் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன்
அமிதாப்பச்சன், ரஜினி
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. மிகப்பெரிய அச்சுறுத்தலாக
உருவாகியிருக்கும் கொறோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சினிமா பிரபலங்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் குறும்படம் ஒன்றின் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நடிகர்கள் அமிதாப்
பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் முன்வந்துள்ளனர் . இந்த குறும்படத்திற்கு ‘ஃபேமிலி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி
ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல் நலனைப் பேணுவது, வீட்டில் இருந்து பணிபுரிவது, சமூக விலகல்
உள்ளிட்ட விஷயங்களை பற்றி பேசும் இப்படத்தை ப்ரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார்.
இக்குறும்படம் இன்று (06.04.20) இரவு 9 மணி சோனி டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

தனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி
தனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் சூரி, தனது ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கியுள்ளார்.
தனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி
‘கொரோனா வைரஸ்’ ஒட்டுமொத்த உலகையும் மிரட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அரசு பிறப்பித்துள்ள
ஊரடங்கால் பல்வேறு துறையினரும் வீட்டில் முடங்கி உள்ளனர். அந்த வகையில் பசி, தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபல
நடிகர்-நடிகைகளுக்கும் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஒய்வு நேரத்தை
அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவழித்து வருகின்றனர்.
இதுகுறித்து நகைச்சுவை நடிகர் சூரி கூறியதாவது: “மனைவி குழந்தைகளுடன் பேசக்கூட நேரம் இல்லாமல், ஓடி ஓடி உழைத்துக்
கொண்டிருந்த எனக்கு பயம் கலந்த ஓய்வு கிடைத்து இருக்கிறது. இந்த ஓய்வில், வீட்டு வேலைகளில் மனைவிக்கு எப்படியெல்லாம்
உதவ முடியுமோ, அப்படியெல்லாம் உதவுகிறேன். குழந்தைகளை குளிப்பாட்டி விடுகிறேன்.
சாப்பிட வைக்கிறேன். ஊரில் இருக்கும் உறவினர்களிடம் போன் மூலம் பேசி, நலம் விசாரிக்கிறேன்.
பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள்… அன்னியர்களை வீட்டுக்குள் விடாதீர்கள்
என்று கேட்டுக்கொள்கிறேன். நான் நடத்தி வரும் ஓட்டல்களில், மொத்தம் 350 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் விடுமுறை கொடுத்து விட்டேன். அவர்களின்
சம்பளத்தில் எந்த பிடித்தமும் செய்யாமல், முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டேன்.
இதேபோல் வறுமையில் வாடும் நாடக நடிகர்-நடிகைகளுக்கு நடிகர் சங்கம் மூலம்
ரூ.1 லட்சம் கொடுத்து இருக்கிறேன். மூன்றாம் உலகப்போர் வந்தது போல் ஒரு
அச்சத்தை கொரோனா ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் எல்லோரும்
பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

தினமும் 200 பேருக்கு உணவு வழங்கும் ரகுல் பிரீத் சிங்
தினமும் 200 பேருக்கு உணவு வழங்கும் ரகுல் பிரீத் சிங்
தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் தினமும் 200 பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.
தினமும் 200 பேருக்கு உணவு வழங்கும் ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் பிறருக்கு செய்து வருகிறார்கள்.
நடிகைகள் பொதுவாக இம்மாதிரியான நேரங்களில் எந்த விதமான உதவியும் செய்வதில்லை என்ற ஒரு பேச்சு உண்டு.
ஒரு சிலர் மட்டுமே நிதியுதவி செய்து வருகிறார்கள். ஆனால், சிலர் வேறு விதமான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
நடிகை ரகுல் பிரீத் சிங் அவர் வசிக்கும் டில்லி குர்கான் நகரத்தில் தினமும் 200 பேருக்கு இரண்டு வேளை உணவு வழங்கி
வருகிறாராம். ஊரடங்கு தள்ளிப் போனாலும் அதுவரை வழங்குவேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

பிரபல நடிகையை நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்
பிரபல நடிகையை நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்
கொரோனா பீதியால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் வெளியே நடைபயிற்சி செய்த நடிகையை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் நடந்துள்ளது.
நடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்
நடிகை ஆஞ்சல் குரானா
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் வீட்டில் முடங்கி
உள்ளார்கள். உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்யும்படி அறிவுறுத்தி விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஊரடங்கில் வெளியே நடைபயிற்சி செய்த நடிகையை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் நடந்துள்ளது.
அந்த நடிகையின் பெயர் ஆஞ்சல் குரானா. இவர் ஏராளமான இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். டெல்லியில்
வசிக்கிறார். ஊரடங்கில் ஆஞ்சல் குரானா, தனது நாய் குட்டியுடன் வெறிச்சோடி கிடந்த சாலையில் நடைபயிற்சி செய்தார். சிறிது
தூரம் சென்றதும் மூன்று தெருநாய்கள் அவரை சுற்றி வளைத்து குரைத்தன. திடீரென்று அந்த நாய்கள் அவர் மீது பாய்ந்து இடது பக்க இடுப்பு, வலது கால் முட்டியில் கடித்து குதறின.
காயங்களுடன் நடிகை ஆஞ்சல் குரானா
இதனால் அவர் அலறினார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஊசி போடப்பட்டது.
இதுகுறித்து ஆஞ்சல் குரானா கூறும்போது, “நான் நடைபயிற்சி செய்த போது ஊரடங்கால் சாலையில் யாரும் இல்லை. அப்போது நாய்கள் சுற்றி வளைத்து என்னை கடித்து விட்டன” என்றார்.

கொரோனா நிவாரணம்: அர்னால்டு, டிகாப்ரியோ ரூ.98 கோடி உதவி
கொரோனா நிவாரணம்: அர்னால்டு, டிகாப்ரியோ ரூ.98 கோடி உதவி
ஹாலிவுட் பிரபலங்கள் அர்னால்டு, டிகாப்ரியோ ஆகியோர் ரூ.98 கோடி கொரோனாவுக்கு நிதி கொடுத்துள்ளார்கள்.
கொரோனா நிவாரணம்: அர்னால்டு, டிகாப்ரியோ ரூ.98 கோடி உதவி
அர்னால்டு, டிகாப்ரியோ
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் இதற்கு 5 ஆயிரத்துக்கும் மேல் பலியாகி உள்ளனர்.
2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறார்கள். கொரோனா பரவலை தடுக்கவும், வைரஸ் தடுப்பு
மருந்துகளை கண்டுபிடிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு உதவவும் அங்கு பலர் நிதி வழங்கி வருகிறார்கள்.
‘டைட்டானிக்’ உள்பட பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான லியானர்டோ டிகாப்ரியோ, தனது அறைக்கட்டளை
மூலம் கொரோனா நிதியாக இந்திய மதிப்பில் ரூ.91 கோடி திரட்டி உள்ளார். இந்த தொகையை ஏழைகளுக்கு உணவு வழங்கவும்,
ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு பயன்படுத்தவும் வழங்குகிறார்.
இது போல் ஹாலிவுட் நடிகரும், முன்னாள் கலிபோர்னியா கவர்னருமான அர்னால்டு இந்திய மதிப்பில் ரூ.7.5 கோடி நிதி
வழங்கி உள்ளார். ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த போராடும் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு
உபகரணங்கள் வாங்குவதற்காக இந்த நன்கொடையை வழங்கி இருக்கிறார். “கொரோனாவை எதிர்த்து மருத்துமனைகளில்
போராடும் உண்மையான கதாநாயகர்களை பாதுகாக்க இந்த நிதியை வழங்கியதில் பெருமைப்படுகிறேன். தற்போதைய
மோசமான சூழ்நிலையில் வீட்டில் இருந்து குறை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று அர்னால்டு கூறியுள்ளா

பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கிய நயன்தாரா
பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கிய நயன்தாரா
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா பெப்சி தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்கி உள்ளார்.
பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கிய நயன்தாரா
நயன்தாரா
கொரோனா பாதிப்பால் திரைப்பட துறை முடங்கிப்போய் உள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த 25 ஆயிரம்
உறுப்பினர்களில், 18 ஆயிரம் பேர் தினக்கூலிகள். இவர்களுக்கு ரேஷன் கார்டுகள் இல்லை. இதனால் அரசு அறிவித்த இலவச
பொருட்களையும், பணத்தையும் வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.
எனவே அவர்களுக்கு பெப்சி மூலமாகவோ அல்லது திரைப்பட நலவாரியம் மூலமாகவோ அரசு உதவி வழங்க வேண்டும் என்று
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி, பலர் உதவி செய்து வருகிறார்கள்.
தற்போது தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா பெப்சி தொழிலாளர்களுக்கு ரூபாய் 20 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ஆன்லைனில் இலவச நடன பயிற்சி அளிக்கும் மாதுரி தீட்சித்
ஆன்லைனில் இலவச நடன பயிற்சி அளிக்கும் மாதுரி தீட்சித்
பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித் ஆன்லைனில் இலவசமாக நடன பயிற்சி அளிக்க தயாராகி உள்ளார்.
ஆன்லைனில் இலவச நடன பயிற்சி அளிக்கும் மாதுரி தீட்சித்
மாதுரி தீட்சித்
கொரோனா பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்
முடங்கி உள்ளனர். உடற்பயிற்சி, யோகா, புத்தகம் படித்தல், தொலைக்காட்சி பார்த்தல் என்று பலரும் நேரத்தை கழிக்கிறார்கள்
. இவர்களுக்காக தூர்தர்ஷன் ‘ராமாயணம்’ தொடரை மறு ஒளிபரப்பு செய்கிறது. ‘சக்திமான்’ தொடரையும் ஒளிபரப்பும் முயற்சியில் இறங்கி உள்ளது.
இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித் வீட்டில் இருப்பவர்களுக்கு இலவச நடனம் சொல்லி கொடுக்க தயாராகி
உள்ளார். இதற்காக பிரத்யேகமான இணையதளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த இணையதளத்தில் ஒவ்வொரு வாரமும் 2
இலவச நடன பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஏப்ரல் மாதம்
முழுவதும் இலவச நடன பயிற்சி அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மாதுரி தீட்சித்
மேலும் அவர் கூறும்போது, “இப்போது அனைவரும் கஷ்டமான காலக்கட்டத்தில் இருக்கிறோம். ஊரடங்கு தவிர்க்க முடியாதது.
இந்த நேரத்தில் எனது குழுவினர் மூலம் நடன பயிற்சி அளிக்கிறேன். ஏப்ரல் 30-ந்தேதி
வரை இந்த பயிற்சி அளிக்கப்படும் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” என்றார்.

பிரபல நடிகருடன் சுனைனா காதல்
பிரபல நடிகருடன் சுனைனா காதல்
தமிழில் ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சுனைனா பிரபல நடிகரை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகருடன் சுனைனா காதல்
சுனைனா
தமிழில் ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, சமர்,
யாதுமாகி, சில்லு கருப்பட்டி, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் வந்தார். தற்போது ‘டிரிப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தை ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், சுனைனாவுக்கும், நடிகர் கிருஷ்ணாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.
‘வன்மம்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருந்தனர். கிருஷ்ணா பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி ஆவார்.
இவர் கற்றது களவு, வல்லினம், யாமிருக்க பயமே, யட்சன் உள்ளிட்ட பல படங்களில்
நடித்துள்ளார். கிருஷ்ணா, ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்துவிட்டார்.
கிருஷ்ணா, சுனைனா ஜோடியாக சுற்றி காதலை தீவிரமாக்கி இருப்பதாகவும், 2 மாதங்களில் இருவரும் திருமணம் செய்துகொள்ள
திட்டமிட்டு உள்ளனர் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை இருவரும் உறுதிப்படுத்தவில்லை

கொரனோ பீதியில் மூன்றடி விலகி நின்ற குரங்குகள் -மிரண்டு போன நடிகர்
உணவின்றி தவித்த குரங்குகளுக்கு உணவளித்த நடிகர் ஒருவர், அவை சமூக இடைவெளியை கடைபிடித்ததை பார்த்து நெகிழ்ந்து போனாராம்.
சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்…. நெகிழ்ந்து போன நடிகர்
குரங்குகளுக்கு உணவளித்த நடிகர் சந்தன்குமார்
சிக்பள்ளாப்பூர் அருகே நந்திமலை அமைந்துள்ளது. இங்கு தினமும்
ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவ்வாறு நந்திமலைக்கு சுற்றுலா வருபவர்கள், அங்கு வசித்து வரும் 500-க்கும்
மேற்பட்ட குரங்குகளுக்கு உணவு வழங்குவார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக, ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நந்திமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக,
நந்திமலையில் உள்ள குரங்குகள் உணவுகள் கிடைக்காமல் பரிதவித்து வந்தன.
இதுபற்றி அறிந்ததும் கன்னட நடிகர் சந்தன்குமார், நந்திமலைக்கு சென்று அங்கு வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு
பழங்கள் வழங்கினார். அந்த குரங்குகள் குறிப்பிட்ட இடைவெளி விட்டு பழங்களை வாங்கி சாப்பிட்டன. குரங்குகளுக்கு பழம்
வழங்கியதை சந்தன்குமார் படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘சமூக விலகல் குறித்து நான் கற்றுக்கொண்ட பாடம்.

காதலரை பிரித்த கொரோனா – வருத்தத்தில் நடிகை.
காதலரை பிரித்த கொரோனா – வருத்தத்தில் நடிகை.
தற்போது உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தனது காதலனை பிடித்து விட்டதாக நடிகை வருத்தத்தில் இருக்கிறாராம்.
காதலரை பிரித்த கொரோனா – வருத்தத்தில் நடிகை
கிசுகிசு
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இயக்குனர் ஒருவரை காதலிக்கும் விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே.
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்களாம்.
தற்போது பரவிவரும் கொரோனா வைரசால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்களாம்.
ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த இவர்கள், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா அதிகம் பரவுவதாக அறிந்து
இருவரும் பிரிந்து இருக்கிறார்களாம். சமீபத்தில் இவர்கள் 2 பேரும் வெளிநாட்டுக்கு சென்று திரும்பியதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்களாம்.

சீனர்களை வறுத்தெடுக்கும் பிரபல நடிகை
சீனர்களை வறுத்தெடுக்கும் பிரபல நடிகை
கொரோனாவில் இருந்து மீண்ட சீனர்கள் மீண்டும் வவ்வால், தேள் போன்ற மாமிச உணவுகள் உண்பதை பிரபல நடிகை கடுமையாக சாடியுள்ளார்.
கொரோனா வந்தும் திருந்தலையா? – சீனர்களை விளாசும் பிரபல நடிகை
ஸ்ரத்தா தாஸ்
சீனாவின் உகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகம் ழுழுவதும் பரவி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று
குவித்துள்ளது. சீனாவில் மட்டும் இந்த வைரசால் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். உகானில் உள்ள சந்தையில்
உணவுக்காக பாம்பு, நாய், எலி, தேள், கரப்பான் பூச்சி, வவ்வால், முதலைகள், எறும்புத் தின்னி, ஒட்டகம் உள்ளிட்ட 122 விலங்குகளின் இறைச்சிகள் உணவுக்காக விற்கப்படுகின்றன.
இந்த இறைச்சி சந்தையில் ஏதோ ஒரு விலங்கில் இருந்துதான் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு தொற்றியதாக கூறப்படுகிறது
. கிருமியால் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த சந்தையில் வேலை பார்த்தவர்கள்தான். தற்போது சீனாவில் வைரஸ் தொற்று
குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், அங்குள்ள சந்தைகளில் மீண்டும் இதே விலங்குகளை விற்கவும், வாங்கவும் தொடங்கி உள்ளனர்.
ஸ்ரத்தா தாஸ்
இதை கேள்விப்பட்ட இந்தி நடிகை ஸ்ரத்தா தாஸ் சீனர்களை கடுமையாக சாடி உள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில்,
“‘கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகும் இப்படி வவ்வால், எலி, நாய்கள், கரப்பான் பூச்சி, முயல், தேள் இதையெல்லாம்
திண்கிறீர்களே? உங்களுக்கு புத்தி இல்லையா?” என்று கண்டித்துள்ளார். இறைச்சி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவுக்கு ஆதரவாக மேலும் ஏராளமானோர் சீனர்களை திட்டி கருத்து பதிவிட்டு வருகிறார்கள்

மகளுடன் மாஸ்க் அணிந்து விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர்
மகளுடன் மாஸ்க் அணிந்து விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர்
தற்போது பல படங்களில் நடித்து வரும் ரோபோ சங்கர், தனது மகளுடன் இணைந்து விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
மகளுடன் மாஸ்க் அணிந்து விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர்
மகளுடன் ரோபோ சங்கர்
உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருவதால் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவன ஊழியர்கள் மட்டும் வீட்டில் இருந்தே வேலை செய்து
வருகின்றனர். பலர் டிவி, இன்டர்நெட்டில் நேரத்தை போக்கி வருகிறார்கள்.
பிரபலங்கள் மற்றும் ஊடகங்கள் மக்களை மன அழுத்தத்தில் இருந்து விலகி இருக்க பெரும் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு மகளுடன் ஆடியிருக்கும்
வீடியோவை ரோபோ சங்கர் வெளியிட்டிருக்கிறார். இது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

குடுமிப்பிடி சண்டை போட்ட பிரபல நடிகை
குடுமிப்பிடி சண்டை போட்ட பிரபல நடிகை
தமிழில் காதல் கண் கட்டுதே படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அதுல்யா தம்பியுடன் சண்டை போட்டுள்ளார்.
தம்பியுடன் குடுமிப்பிடி சண்டை போட்ட அதுல்யா
அதுல்யா ரவி
அதுல்யா 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானர்.
அதை தொடர்ந்து ஏமாலி (2018) , நாடோடிகள் 2 (2019) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது படப்பிடிப்புகள் இல்லாததால் மேலும் தமிழகத்தில் 144 தடை விதிக்கப்பட்டு இருப்பதால்
அதுல்யா தன்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். வீட்டில் சும்மா இருக்க முடியாத அதுல்யா
தன்னுடைய தம்பியுடன் குடுமிப்பிடி சண்டை போட்டுள்ளார். இதை அதுல்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகர் குடும்பத்திற்கு கொரோனா
பிரபல நடிகர் குடும்பத்திற்கு கொரோனா
மனைவி கஜோல் மற்றும் மகளுக்கு கொரோனா பாதிப்பு என்று வெளியான செய்திக்கு நடிகர் அஜய் தேவ்கான் விளக்கம் அளித்துள்ளார்.
மனைவி, மகளுக்கு கொரோனா பாதிப்பா? – அஜய் தேவ்கான் விளக்கம்
மனைவி கஜோல் உடன் அஜய் தேவ்கன்
இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகனாக
இருப்பவர் அஜய்தேவ்கான். இவருக்கும் நடிகை கஜோலுக்கும் 1999-ல்
திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கஜோல் தமிழில் பிரபுதேவா ஜோடியாக
‘மின்சார கனவு’ படத்தில் நடித்து இருந்தார். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இந்த தம்பதியின் 16 வயது மகளான நைசா, சிங்கப்பூரில் உள்ள பள்ளியொன்றில் படித்து வருகிறார். சமீபத்தில் கஜோல்
சிங்கப்பூருக்கு சென்று இருந்தார், கொரோனா பரவல் காரணமாக அங்கு பள்ளிகள் மூடப்பட்டதால் மகளை மும்பைக்கு அழைத்து
வந்துவிட்டார். இந்த நிலையில் மகளை அழைத்துக்கொண்டு கஜோல் மருத்துவமனைக்கு சென்று இருந்தார். இதனால்
இணையதளம் ஒன்றில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியானது.
இது இந்தி திரையுலகினர் மத்தியில் பீதியை கிளப்பியது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக
பரவவும் ஆரம்பித்தது. இதனை அஜய்தேவ்கான் டுவிட்டரில் மறுத்துள்ளார்.
“மனைவியும், மகளும் நலமாக உள்ளனர். எந்த பாதிப்பும் இல்லை. அவர்களை பற்றி பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை. உடல்நலம்
குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூருக்கு கொரோனா
பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூருக்கு கொரோனா
5-வது பரிசோதனையிலும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்ய பட்டுள்ளது.
5-வது பரிசோதனையிலும் பாடகி கனிகாவுக்கு கொரோனா உறுதி
பாடகி கனிகா கபூர்
பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூர், லண்டனுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பிய நிலையில், வீட்டில் தன்னை
தனிமைப்படுத்திக் கொள்ளாமல் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நட்சத்திர ஓட்டலிலும் தங்கி இருந்தார்.
பின்னர் அவருக்கு உடல் நிலை குன்றியதால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது
கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து லக்னோவில் உள்ள
சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன்
நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள்.
கனிகாவை கைது செய்ய வேண்டும் என்றும் சிலர் வற்புறுத்தினர். கொரோனா
நோயாளிகளுக்கு 48 மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதனை நடத்தப்படும்.
கனிகாவுக்கு 4 முறை பரிசோதனை செய்தும் கொரோனா தொற்று இருப்பதையே உறுதிப்படுத்தியது.
தற்போது 5-வது தடவையாக பரிசோதனை செய்தனர். இப்போதும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதையே முடிவுகள்
வெளிப்படுத்தின. ஆனாலும், அவரது உடல்நிலை கவலைப்படும்படி இல்லாமல் சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போதைக்கு அடிமையான பிரபல நடிகை
போதைக்கு அடிமையான பிரபல நடிகை
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், போதைக்கு அடிமையாகி பின்னர் மீண்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
போதைக்கு அடிமையாகி மீண்டது எப்படி? – கங்கனா ரணாவத் விளக்கம்
கங்கனா ரணாவத்
பிரபல இந்தி நடிகையான கங்கனா ரணாவத், தற்போது ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார். வீடியோ
ஒன்றில் இளமை கால வாழ்க்கையை நினைவு கூர்ந்து அவர் பேசி இருப்பதாவது:- “எனக்கு 15 அல்லது 16 வயது இருக்கும்போது
வீட்டைவிட்டு ஓடினேன். நட்சத்திரத்தை பிடித்துவிட முடியும் என்று அப்போது நினைத்தேன். அதன்பிறகு சினிமாவில் நடிக்க
ஆரம்பித்தேன். போதை பழக்கம் ஏற்பட்டது. ஒன்றரை ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை போதைக்கு அடிமையாக இருந்தேன்.
கங்கனா ரணாவத்சில வகையான மனிதர்கள் வந்தனர். அவர்களிடம் இருந்து
மரணத்தால் மட்டுமே என்னை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்தது.
இந்த கஷ்டங்கள் எனது ‘டீன் ஏஜ்’ வாழ்க்கையில் நடந்தன. அதன் பிறகு நல்ல நண்பர் ஒருவர் வந்து யோகாவை சொல்லி
கொடுத்தார். ராஜயோகா புத்தகம் ஒன்றையும் வழங்கினார். சுவாமி விவேகானந்தரை குருவாக ஏற்று என்னை வளர்த்துக்கொண்டேன்.
எனது வாழ்க்கையில் அந்த சவாலான நேரங்கள் வராமல் இருந்திருந்தால் கூட்டத்தோடு காணாமல் போய் இருப்பேன்.
எனக்கு மன உறுதியும், திறமையும் உருவாக ஆன்மிகம் வழிகாட்டியது.
மோசமான நேரங்கள்தான் உண்மையில் நல்ல நேரங்கள்”. இவ்வாறு வீடியோவில் பேசி உள்ளார்.

கேரளாவில் விருது பெறும் விஜய் சேதுபதி, அமலாபால்
கேரளாவில் விருது பெறும் விஜய் சேதுபதி, அமலாபால்
தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் சேதுபதி, அமலா பால் இருவரும் கேரளாவில் விருது பெற இருக்கிறார்கள்.
கேரளாவில் விருது பெறும் விஜய் சேதுபதி, அமலாபால்
விஜய் சேதுபதி, அமலாபால்
கேரளாவில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு அங்குள்ள விமர்சகர்கள் கில்டு சார்பில் விருதுகள்
வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழில் சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுகிறது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை
கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருதை பெறுகிறார். இந்த படத்தை இயக்கிய தியாகராஜன் குமார ராஜா
சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுபோல் தமிழில் சிறந்த நடிகைக்கான விருது ‘ஆடை’ படத்தில் நடித்த அமலாபாலுக்கு வழங்கப்படுகிறது.
இந்த படத்தில் அவர் நிர்வாணமாக துணிச்சலாக நடித்து இருந்தார். சிறந்த மலையாள படத்துக்கான விருது மது சி.நாராயணன்
இயக்கிய ‘கும்பளாங்கி நைட்ஸ்’ படத்துக்கு கிடைத்துள்ளது. இதில் பகத் பாசில், ஷேன் நிகம் ஆகியோர் நடித்து இருந்தனர். சிறந்த
மலையாள நடிகருக்கான விருது காலித் ரகுமான் இயக்கத்தில் ‘உண்டா’ படத்தில் நடித்த மம்முட்டிக்கும், சிறந்த நடிகைக்கான
விருது ‘உயரே’ படத்தில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்த பார்வதிக்கும் வழங்கப்படுகிறது. ‘வைரஸ்’ படத்தை
இயக்கிய ஆஷிக் அபுவுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது







