Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
ஷங்கர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ராஷ்மிகா
ஷங்கர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ராஷ்மிகா
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான ‘கிரிக்பார்ட்டி’ மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த கீதா
கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படங்கள் தமிழிலும் வெளியாகி வரவேற்பை பெற்றன.
தமிழில் இவர் நடித்துள்ள முதல் படம் சுல்தான். இப்படம் வருகிற ஏப்ரல்
மாதம் ரிலீசாக உள்ளது. இது தவிர இரண்டு பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா.
இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகாவுக்கு, ஒரு பிரம்மாண்ட பட
வாய்ப்பு தேடி வந்துள்ளதாம். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்க
உள்ள புதிய படத்தில் ராஷ்மிகா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு – சிவகார்த்திகேயன் உள்பட 42 பேருக்கு விருது
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு – சிவகார்த்திகேயன் உள்பட 42 பேருக்கு விருது
தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது
சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கலைமாமணி விருது பெறும் நடிகர்கள்
ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கலைமாமணி விருது பெறும் நடிகைகள்
பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி ஆகியோருக்கும், நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ்
, தேவதர்ஷினி, மதுமிதா ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது பெறுவோர் பட்டியல்
கலைமாமணி விருது பெறும் இசையமைப்பாளர்கள், பாடகர்கள்
இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா ஆகியோருக்கும், பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது பெறும் தயாரிப்பாளர்கள்
கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ் ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கலைமாமணி விருது பெறுவோர் பட்டியல்
கலைமாமணி விருது பெறும் இயக்குனர்கள்
கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா ஆகிய நால்வருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது.
கலைமாமணி விருது பெறும் சீரியல் நடிகர்கள்
நடிகர் நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ் மற்றும் நித்யா ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது பெறுவோர் பட்டியல்
இதுதவிர ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ், நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காமகொடியன், காதல் மதி,
வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுனாத ரெட்டி ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களுடன் செல்பி எடுத்த அஜித்
ரசிகர்களுடன் செல்பி எடுத்த அஜித்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின்
படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதனை விரைவில்
வெளிநாட்டில் படமாக்க உள்ளனர். இதையடுத்து அஜித் நடிக்கும் புதிய படத்தையும் வலிமை பட இயக்குனர் ஹெச் வினோத் தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்
இந்நிலையில், நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
. மொட்டையடித்தபடி புது லுக்கில் இருக்கும் அஜித்துடன் ரசிகர்கள் மற்றும் காவல்துறையினர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சென்னை
ரைபில் கிளப்பிற்கு அஜித் வந்தபோது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சன்னி லியோன்
பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன். இவர் படப்பிடிப்புக்கு கேரள மாநிலம் வந்துள்ளார். கணவர் டேனியல் மற்றும் 3 வளர்ப்பு குழந்தைகளுடன் திருவனந்தபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி உள்ளார்.
இந்நிலையில் சன்னி லியோன், கேரள வழக்கப்படி அழகான சேலை கட்டி, தலையில் மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு, தான் தங்கியுள்ள
விடுதியில் தோற்றம் அளிக்கும் போட்டோவை விடுதி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சன்னி லியோன்
அவரது கணவர் டேனியல், வேட்டியும், குர்தாவும் அணிந்திருக்க, குழந்தைகள் டவுசர்- சட்டையில் போஸ் கொடுத்துள்ளனர்.
சன்னி லியோன் சேலை அணிந்துள்ள போட்டோ, ரசிகர்களை
ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இளையராஜா ஸ்டுடியோவிற்கு திடீரென புகுந்த ரஜினி
இளையராஜா புதியதாக திறந்திருக்கும் ஸ்டுடியோவை பார்த்து வியந்த ரஜினி, கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு என்று பாராட்டி இருக்கிறார்.
இளையராஜா ஸ்டுடியோவிற்கு திடீர் விசிட் அடித்த நடிகர் ரஜினி
இளையராஜா, ரஜினி
சென்னை தி நகரில் இளையராஜா சொந்தமாக “இளையராஜா ஸ்டுடியோ” என்ற பெயரில் ஸ்டுடியோ கட்டி இசைப்பணிகள்
மேற்கொண்டு வருகிறார். திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை பதிவு பணிகள் அங்கே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று இளையராஜாவின் தி நகர் வீட்டுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், அவருடன் பல விஷயங்கள் பேசியிருக்கிறார். பின்னர் இளையராஜா சொந்த ஸ்டுடியோ கட்டியிருப்பதை
கேள்விப்பட்டு அந்த ஸ்டுடியோவுக்கு இளையராஜாவுடன் சென்று இருக்கிறார் ரஜினிகாந்த். ஸ்டுடியோவை சுற்றி பார்த்து, வியந்து,
கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது என பாராட்டி இருக்கிறார். பின்னர் இசைஞானியுடன் நீண்ட நேரம் பல விஷயங்கள் பேசியிருக்கிறார்.
ரஜினி – இளையராஜா
இந்நிலையில் இன்றும் 2வது முறையாக இளையராஜா ஸ்டுடியோவுக்கு மீண்டும் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில்
ஆழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த். சமீபகாலமாக பொது நிகழ்ச்சி, விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வரும் ரஜினியின் இந்த வருகை பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அந்த நடிகர் பேர் சொன்னால் தலை தெறித்தோடும் நடிகைகள்
அந்த நடிகர் பேர் சொன்னால் தலை தெறித்தோடும் நடிகைகள்
சில ஆண்டுகளாக படங்களில் சரிவர நடிக்காமல் இருந்த நடிகர் ஒருவர், தற்போது மீண்டும் பிசியாக நடிக்க தொடங்கியுள்ளாராம்.
அந்த நடிகருக்கு ஒரு காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம். அதற்கு அந்த நடிகர் சட்டென ஓகே சொல்லிவிட்டாராம்.
அப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகிகளை நடிக்க வைக்க இயக்குனர் முயற்சி செய்தாராம்.
திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்
ஆனால் அந்த நடிகருடன் நடிக்க அந்த முன்னணி நாயகிகள் தயக்கம் காட்டி வருகிறார்களாம். அதில் ஒரு நடிகையெல்லாம்,
அதிக சம்பளம் கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். இதனால் வேறு சில
நடிகைகளிடம் கதையை சொல்லி வருகிறாராம் அந்த இயக்குனர்.
காதலை மறைக்கும் நடிகை
காதலை மறைக்கும் நடிகை
வாரிசு நடிகை ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவரை காதலித்து வந்தராம். இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்க, விரைவில்
திருமணம் செய்து கொள்ள இருந்தாராம் நடிகை. நடிப்பை விட்டு விலகலாம் என்று முடிவு செய்து இருக்கும் நிலையில், திடீர் என்று காதலரை பிரிந்தாராம் நடிகை.
திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்
இதையடுத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகை, தற்போது மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கிய இருக்கிறாராம்.
ஆனால், இந்த முறை யாருக்கும் தெரியாமல் மறைத்து வருகிறாராம்.
விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புதிய பட தலைப்பு அறிவிப்பு
விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புதிய பட தலைப்பு அறிவிப்பு
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்.
இந்நிலையில், அவர்கள் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அறிமுக இயக்குனர் விநாயக் இயக்கும் ‘ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்கிற படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் பட போஸ்டர்
விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து ஏற்கனவே நெற்றிக்கண், கூழாங்கல் போன்ற படங்களை தயாரித்து
விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்
செக்ஸ் தொல்லையால் அவதிப்படும் இவர்கள்
வருகின்றனர். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. அதேபோல் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை செவன் ஸ்கிரீன்
நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
50 கோடி -வசூல் வேட்டையில் விஜய் சேதுபதி படம்
50 கோடி -வசூல் வேட்டையில் விஜய் சேதுபதி படம்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் கடந்த பிப்.12-ந்
தெலுங்கில் வெளியான படம்
தேதி தெலுங்கில் வெளியான படம் உப்பென்னா. அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்
புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதோடு, ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
உப்பென்னா பட போஸ்டர்
இந்நிலையில், உப்பென்னா படத்தின் வசூலை அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. அதன்படி இப்படம் மூன்று நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம்.
கதாநாயகனாக நடிக்கும் திண்டுக்கல் ஐ லியோனியின் மகன்.
கதாநாயகனாக நடிக்கும் திண்டுக்கல் ஐ லியோனியின் மகன்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ எஸ்தல் எண்டர்டெய்னர்
நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”.
இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார்.
பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ
சிவக்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக
சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
திண்டுக்கல் ஐ லியோனி
படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் துவங்கி சென்னை மற்றும் மதுரையில் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
13 கிலோ எடை குறைத்த ஐஸ்வர்யா தத்தா
தமிழ் சினிமாவில் நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவருமான ஐஸ்வர்யா தத்தா, நடிப்பில் தற்போது ‘ஷ்’
என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக 13 கிலோ உடல் எடையினை குறைத்து இருக்கிறார்.
கதாப்பாத்திரத்திற்காக நடிகர்கள் உடல் எடையை குறைப்பதையும், கூட்டுவதையும் நாம் அறிந்திருப்போம். ஆனால் எப்போதும்,
நடிகைகள் அவ்வாறு செய்வதில்லை. ஆனால் இந்த விதியினை உடைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
ஐஸ்வர்யா தத்தா
புலிகளினால் கடத்த பட்ட சோனிகள்
பிக்பாஸ் மூலம் புகழடைந்த அவர், தற்போது தமிழில் நாயகியாக 7 படங்களில் நடித்து வருகிறார். ஆரி நடிக்கும் அலேகா, பப்ஜி,
கூடவன், கன்னித்தீவு, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, பாலாஜி மோகன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும்
தலைப்பிடப்படாத படம் மற்றும் மிளிர் முதலான படங்களில் நடித்து வருகிறார்.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான கதைகளங்களில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்துடன் அமைந்திருக்கின்றன. இப்படங்கள்
தன் திரைவாழ்வின் முக்கியமான படங்களாக, திருப்புமுனை தருமென பெரும் நம்பிக்கையில் உள்ளார்.
நடிகையை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க
சிவந்த வானம், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் வில் வித்தை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும், ஆண்ட்ரியா கிட்ட
கத்துக்கோங்கா என கலாய்த்துள்ளனர். காரணம் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ஆண்ட்ரியாவின் காட்சி லாஜிக் இல்லாமல் இருந்ததாக கூறி கருத்து தெரிவித்து வருகிறார்கள்
ராதிகா திடீர் அறிவிப்பு- அதிர்ச்சியில் ரசிகர்கள்
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சித்தி’ தொடரின் இரண்டாம் பாகம் தனியார் தொலைக்காட்சியில் தற்போது
ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடிகை ராதிகா நடித்து வந்தார். இந்நிலையில் சீரியல்
நடிப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக ராதிகா தரப்பில் கூறும்போது, ”சில வாரங்களுக்கு முன்பே எடுத்த முடிவுதான் இது.
ராதிகா
அடுத்தடுத்த சில காலம் தீவிர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதால் ராதிகா இந்த முடிவை எடுத்துள்ளார். சினிமா நடிப்பில்
எப்போதும்போல கவனம் செலுத்துவார். அதேபோல, அவரது தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் ‘சித்தி 2’ சீரியல் தொடர்ச்சியாக
ஒளிபரப்பாகும். அவர் சீரியலில் நடிப்பதை மட்டுமே தற்போது நிறுத்தியுள்ளார். என்றார்.
காதலரை அறிமுகப்படுத்திய நடிகை
நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிரேமம்’. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அந்த படம் வெகுவாக கவர்ந்தது.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் ராபி ஆபிரகாம். இவர் ‘நேரம்’, ‘ஓம் ஷாந்தி ஓஷானா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மடோனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் “உன்னை
சந்தித்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. உன்னை சந்தித்தையும், உன்னோடு
சேர்ந்து இருப்பதையும் மிகவும் அருமையாக உணர்கிறேன். கடவுள்
உங்களை எப்போதும் ஆசிவதிப்பார்” என்று பதிவு செய்திருக்கிறார்.
மடோனா
தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்துடன் இந்த பதிவை
செய்திருக்கிறார் மடோனா. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் பாலியல் நடிகை ஶ்ரீ ரெட்டி
தெலுங்கு சினிமாவில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்றும், பட வாய்ப்பு தருவதாக கூறி திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்
கொண்டனர் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி.
மேலும் இதற்காக அவர் அரைநிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார்.
தெலுங்கு சினிமா தவிர தமிழ் சினிமாவிலும் அத்தகைய போக்கு
இருப்பதாக சர்ச்சையைக் கிளப்பிய அவர், பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது பரபரப்பு புகார் கூறினார்.
சில்க் ஸ்மிதா
தற்பொழுது நடிகை ஸ்ரீரெட்டி மறைந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதாவின்
வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாக்கப்படுகிறது.
நான் காதல் திருமணம் செய்ய வில்லை – கயல்
நான் காதல் திருமணம் செய்ய வில்லை – கயல்
கயல் படம் மூலம் அறிமுகமான ஆனந்தி தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். கடந்த மாதம்
திடீரென்று திருமணம் செய்துகொண்டார். அவர் முதன்மை நாயகியாக நடித்துள்ள கமலி பிரம் நடுக்காவேரி படம் வரும் 19ந்தேதி வெளியாகிறது. ராஜசேகர் துரைசாமி இயக்கி உள்ளார்.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஆனந்தி அளித்த பேட்டி, ‘என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இது முக்கியமான
படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அனைத்து பெண்களையும் இணைக்கும் விதமாக இருக்கும். பெற்றோர்கள்
ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் ஏன் இதேபோல படங்களைத்
தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டதுதான் நினைவிற்கு வந்தது. ஆனால், இந்த கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்.
ஆனந்தி
என் திருமணத்தை சென்னையில் ஒரு வரவேற்பு வைத்து அறிவிக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அதற்குள் வெளியில் வந்துவிட்டது.
இது முழுக்க முழுக்க பெற்றோர் நிச்சயித்த திருமணம். காதல் திருமணம் அல்ல. அவர் எங்கள் குடும்ப நண்பர். மரைன்
இஞ்சினியர். மேலும் இணை இயக்குனரும் கூட. விரைவில் அவர் படம் இயக்குவார். எனக்கு நாயகியாக வாய்ப்பு தருவார் என
காத்திருக்கிறேன். திருமணத்துக்கு முன்பே நான் தேர்ந்தெடுத்து தான் நடிப்பேன். இனியும் அப்படியே நடிப்பேன். கணவர்
குடும்பத்தில் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்கள்’. இவ்வாறு அவர் கூறினார்.
கீர்த்தி சுரேஷுடன் அனிருத் காதல்
கீர்த்தி சுரேஷுடன் அனிருத் காதல்
நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில்
அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.
தெலுங்கில், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை
பெற்றார். தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். மேலும் 2 தெலுங்கு படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேசும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 3
மாதங்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடிய அனிருத்துக்கு, நடிகை கீர்த்தி சுரேஷ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததுடன்
அவருடன் நெருக்கமாக இருக்கும் 2 புகைப்படங்களையும் பகிர்ந்தார்.
அனிருத், கீர்த்தி சுரேஷ்
தற்போது அந்த புகைப்படங்களை வலைத்தளத்தில் வைரலாக்கி, இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரப்பி வருகிறார்கள். இருவரும்
விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பேசுகிறார்கள். ஆனால், இதனை கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத்
தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. இருவரும் நண்பர்கள்தான். காதல் இல்லை என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மறுத்தார்கள்.
ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியாவை அனிருத் முத்தமிடும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ரஜினியுடன் மோத தயாராகிறாரா மணிரத்னம்
ரஜினியுடன் மோத தயாராகிறாரா மணிரத்னம்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ரஜினியும், பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்னமும் பட வெளியீட்டில் மோத உள்ளார்களாம்.
ரஜினியுடன் மோத தயாராகிறாரா மணிரத்னம்?
ரஜினி, மணிரத்னம்
‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி
வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு,
மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இரண்டு பாகங்களாக
இப்படத்தை உருவாக்குகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம்
மீண்டும் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் முதல் பாகத்துக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம்.
பொன்னியின் செல்வன், அண்ணாத்த பட போஸ்டர்கள்
தற்போது வரை 70 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளனர். மார்ச் 5-ந் தேதிக்குள் முதல் பாகத்துக்கான முழு படப்பிடிப்பும்
முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது. அதேபோல் பின்னணி பணிகளை நான்கு, ஐந்து மாதங்களில் முடிக்க
திட்டமிட்டுள்ளார்களாம். அவ்வாறு முடிக்கப்பட்டால் இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஜினியும்
மணிரத்னமும் பட வெளியீட்டில் நேருக்கு நேர் களம் காண்பார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பிரபல இசை பாடகர் ஆல்பத்தில் நடனமாடும் ஹன்ஷிகா
பிரபல இசை பாடகர் ஆல்பத்தில் நடனமாடும் ஹன்ஷிகா
இந்திய மொழிகள் அனைத்திலும் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டிருப்பவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. அவரது நடிப்பில்
50 வது படமான ”மஹா” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் பிரபல பாலிவுட் இசைப்பாடகர் டோனி
கக்கார் ( Tony Kakkar ) உருவாக்கியிருக்கும் ஒரு ஆல்பம் பாடலில் நடனமாடியுள்ளார் நடிகை ஹன்ஷிகா. கக்கார் ( Tony Kakkar )
இசையமைத்து உருவாக்கியுள்ள இப்பாடலை சட்டி தில்லான் இயக்கியுள்ளார்.
இது குறித்து நடிகை ஹன்ஷிகா மோத்வானி கூறியதாவது….
ஹன்ஷிகா
இசை துறையில் அனைவரும் கொண்டாடும், இந்தியா முழுதும் வெறித்தனமான ரசிகர்களை கொண்டிருக்கும் இசைப்பாடகர்
டோனி கக்கார்
அவர்கள் உருவாக்கிய பாடலில் நானும் பங்கேற்பது மிகப்பெரும்
மகிழ்ச்சியை தந்துள்ளது. மிகப்பெரும் சாதனைகள் படைத்து வெற்றியின் உச்சத்தில் இருந்தாலும் மிக எளிமையாகவே
பழகினார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அற்புதமானதாக இருந்தது. இப்பாடல் உருவாகியுள்ள பெரும்
திருப்தியை அளித்துள்ளது. ரசிகர்களின் வரவேற்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் கண்டிப்பாக அவர்களும் கொண்டாடுவார்கள் என்றார்.
அண்ணாத்த ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்
அண்ணாத்த ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்
சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணாத்த ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்
ரஜினி
சிவா – ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில்
நடைபெற்று வந்தபோது, படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால்
படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர்.
இதையடுத்து ரஜினிகாந்த் உடல்நிலையை கருதி சென்னையிலேயே மீதிப் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக
கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி
உள்ளது. அதன்படி பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என கூறப்படுகிறது.
ரஜினி
இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர்
. இமான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை வருகிற தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்






