Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
நடிகையின் செயலால் கடுப்பான இயக்குனர்
நடிகையின் செயலால் கடுப்பான இயக்குனர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த வாரிசு நடிகை, காதலால் சில காலமாக படங்களில் நடிக்காமல்
இருந்தாராம். தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை, படப்பிடிப்பு தளத்தில் இருந்து யாருக்கும் சொல்லாமல் திடீரென வெளியேறினாராம்.
இதனால் கடுப்பான இயக்குனர் நடிகை சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக வேண்டி இருந்தாலும் அவை படத்தில்
இல்லையென்றாலும் பரவாயில்லை என அத்துடன் நடிகையை படப்பிடிப்புக்கு அழைக்காமல் புறக்கணித்திருக்கிறாராம் இயக்குனர்.
மேலும் டப்பிங், புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் நடிகையை புறக்கணிக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் இயக்குனர்.
கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த சிம்பு பட நடிகை
கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த சிம்பு பட நடிகை
தெலுங்கு சினிமாவில் 2010-ல் வெளிவந்த ‘லீடர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன’
படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே வருடத்தில் சிம்பு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்திலும் நடித்தார். அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்தவர் அமெரிக்காவிற்கு படிக்கச் சென்றுவிட்டார்.
அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து முடித்தார். நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தபோதே அவர் நடிப்பை விட்டு விலகி படிக்க சென்றது பலருக்கும்
ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் இரண்டு படங்களிலுமே அவருடைய நடிப்பும், கவர்ச்சியும் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக இருந்தது.
கணவருடன் ரிச்சா கங்கோபாத்யாய்
நடிகை ரிச்சா, கடந்த 2019-ம் ஆண்டு ஜோ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன்
அமெரிக்காவில் வசித்து வரும் ரிச்சா, தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வருகிற ஜூன் மாதம் குழந்தை பிறக்க
உள்ளதாகவும் அவர் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்ற விஜய் சேதுபதி
ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்ற விஜய் சேதுபதி
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த
‘]வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. முருகானந்தம் தயாரிக்க உள்ள இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார்.
முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். தற்போது ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று
வருகிறது. அதனைத் தொடர்ந்து ஏலகிரியில் சில காட்சிகளைப் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் முக்கிய
கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பிசாசு
அந்தக் காட்சிகளை முடித்துக் கொடுப்பதற்காக திண்டுக்கல்லுக்குச் சென்றுள்ளார் விஜய் சேதுபதி.
உள்ளாடைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிக்பாஸ் ரேஷ்மா
உள்ளாடைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிக்பாஸ் ரேஷ்மா
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரேஷ்மா.
இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர்
டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடித்து வரும் 3:33 என்ற திரைப்படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.
ரேஷ்மா
இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனலை ஆரம்பித்த ரேஷ்மா அதில் பெண்களின் உள்ளாடைகள் குறித்து விரைவில் ஒரு
வீடியோவை வெளியிட இருக்கிறாராம். பெண்களுக்கு உள்ளாடைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த போவதாகவும்
உள்ளாடை குறித்த பல சந்தேகங்களை அவர் தீர்க்க போவதாகவும் அதில் அறிவித்துள்ளார்.
யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்
யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்
தமிழில் கவலை வேண்டாம் படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவர்ச்சியாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம்
அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பாடம், துருவங்கள் பதினாறு, மூக்குத்தி அம்மன் படங்களிலும் நடித்து இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.
தற்போது வெங்கட் ராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘கடமையை செய்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வரும்
யாஷிகா, சமூக வலைத்தள பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
யாஷிகா
அந்த வகையில் சமீபத்தில் வெள்ளை நிற மார்டன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி அவர் வெளியிட்ட புகைப்படம்
சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு லைக்சும் குவிந்து வருகிறது.
இணையத்தை கலக்கும் அஜித் – ஷாலினியின் செல்பி
இணையத்தை கலக்கும் அஜித் – ஷாலினியின் செல்பி
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. பின்னர் குறுகிய காலத்தில் அஜித், விஜய்
உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பெயர் பெற்றார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே
அஜித்தை காதலித்து திருமணம் செய்த ஷாலினி, பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
ஷாலினி, அஜித்
இந்நிலையில், நடிகை ஷாலினி, அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படம்
சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்தப் புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
விரைவில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு வருகிற மே 1-ந் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
அர்ச்சனா வீட்டில் விசேஷம்-குவிந்த பிக்பாஸ் பிரபலங்கள்
அர்ச்சனா வீட்டில் விசேஷம்… ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா. பிக்பாஸ் வீட்டுக்குள் அன்புதான்
ஜெயிக்கும் என்று தொடர்ச்சியாக கூறி வந்த அர்ச்சனா, தன்னுடைய தலைமையில் ஒரு குரூப்பை உருவாக்கி வைத்திருந்தார்.
ரியோ, நிஷா, ஜித்தன் ரமேஷ், கேபி, சோம் ஆகியோர் அதில் இடம்பெற்று இருந்தனர். அந்த குரூப்பிற்கு அன்பு கேங் என்றும்
அழைத்து வந்தனர். இதைப்பார்த்த இதர போட்டியாளர்கள் அர்ச்சனா குரூப்பிஸம் செய்து வருவதாக குற்றம் சாட்டினர்.
நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அர்ச்சனா தான் தானாகவே இருந்ததாக விளக்கமளித்தார்.
அர்ச்சனா
இந்நிலையில் அர்ச்சனாவின் தங்கை அனிதாவுக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இதில் ஜித்தன் ரமேஷ், சம்யுக்தா, கேபி, நிஷா, சோம்,
அனிதா சம்பத் உள்ளிட்ட பிக் பாஸ் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
காதலியுடன் உல்லாசம் கூட பறந்த பிரபல நடிகர்
காதலியுடன் உல்லாசம் கூட பறந்த பிரபல நடிகர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், தனது காதலியுடம் மாலத்தீவு சென்றிருக்கிறார்.
காதலியுடன் மாலத்தீவு பறந்த பிரபல நடிகர்
விஷ்ணு விஷால்
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்
அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஷ்ணுவிஷால் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி நட்ராஜ் என்பவரை கருத்து
வேறுபாட்டினால் கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.
இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷாலுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும்
காதலித்து வந்த நிலையில், ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளில் மோதிரம் அணிவித்து திருமணம் செய்துகொள்ள உள்ளதை விஷ்ணு விஷால் உறுதிப்படுத்தினார்.
விஷ்ணு விஷால்
இந்நிலையில் மாலத்தீவுக்கு ஜுவாலா கட்டாவுடன் சென்றிருக்கும் விஷ்ணு விஷால் அங்கு எடுக்கப்பட்ட போட்டோவை சமூக
வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் மழையில் நடனமாடுங்கள். அந்த நொடியை மகிழ்ச்சியுடன்
கொண்டாடுங்கள். வலியை புறந்தள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.
நடிகையின் அறைக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குரங்குகள்
நடிகையின் அறைக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குரங்குகள்
விஷால் நடிப்பில் வெளியான ‘திமிரு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவருடைய கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இதையடுத்து வசந்தபாலனின் வெயில்,
பிரியதர்ஷனின் காஞ்சிவரம் உள்ளிட்ட கதைக்கும் தனது கேரக்டருக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தார். கடைசியாக ‘அண்டாவ காணோம்’ படத்தில் நடித்திருந்தார் ஸ்ரேயா ரெட்டி.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி, கடந்த 2008-ம்
ஆண்டு விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். மேலும் விஷாலின் தோரணை, வெடி உள்ளிட்ட படங்களையும் ஸ்ரேயா ரெட்டி தயாரித்துள்ளார்.
ஸ்ரேயா ரெட்டி
இந்நிலையில் சமீபத்தில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்த ஸ்ரேயா ரெட்டி அங்கு குரங்குகளுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
முதல் வீடியோவில் ஸ்ரேயா தங்கியிருந்த வீட்டின் பால்கனிக்கு வந்த இரண்டு குரங்குகள் அங்கு டேபிளில் வைக்கப்பட்டிருந்த
முந்திரி உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுகின்றன. அடுத்த வீடியோவில் ஜன்னல் வழியாக அறைக்குள் புகுந்த குரங்குகள்
அங்கிருந்த ஸ்ரேயாவின் பேக், உணவுகளை எடுத்து அட்டகாசம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இளம் பாடகியை பாராட்டிய வைரமுத்து
இளம் பாடகியை பாராட்டிய வைரமுத்து
தான் எழுதிய பாடலுக்கு கவர் பாடலை உருவாக்கிய இளம் பாடகியை பாடலாசிரியர் வைரமுத்து நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.
இளம் பாடகியை பாராட்டிய வைரமுத்து
நக்ஷா சரண், வைரமுத்து
சென்னையை சேர்ந்தவர் நக்ஷா சரண்.
பாடல்கள் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர், பல வருடங்களுக்கு முன்பு அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான்
இசையமைத்து வெளிவந்த முதல் திரைப்படமான ரோஜா படத்தில் இடம் பெற்ற “புது வெள்ளை மழை” எனும் பாடல் ரொம்பவே ஈர்த்துவிட்டதாம்.
இந்த நூற்றாண்டின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று என சிலாகிக்கும் நக்ஷா சரண், தற்போது இந்த பாடலுக்கு தமிழ்,
தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் புதிய வடிவிலான கவர் சாங் அமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார்.
தனது வைர வரிகளால் ரசிகர்களை கட்டிப்போட்ட பாடலாசிரியர் வைரமுத்து, ஐந்து லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்று
கொண்டிருக்கும் இந்த கவர் பாடலை யூடியூபில் பார்த்துவிட்டு, நக்ஷா சரணை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
பிக்பாஸ் ஜூலியின் புதிய முயற்சி
பிக்பாஸ் ஜூலியின் புதிய முயற்சி
ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துக் கொண்டு பிரபலமான ஜூலியின் புதிய முயற்சிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலருடைய கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
பிரபலமானார். அந்தப் போட்டியில் நடைபெற்ற சில சர்ச்சைகளினால் இவருக்கு ஆதரவுகளோடு எதிர்ப்புகளும் கிளம்பின.
பின்னர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக மாறினார். அடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி திரைத்துறையிலும்
இவர் கால் பதித்தார். இவரது நடிப்பில் தற்போது “பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்“ என்ற படத்தில் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் ஜூலி விதவிதமான போட்டோக்களை பதிவு செய்தும் வருவார். இந்நிலையில், தற்போது செல்வராகவன்
இயக்கத்தில் வெளிவந்த 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் வரும்,‘நினைத்து நினைத்து பார்த்தால்’ பாடலை பாடி வீடியோ
வெளியிட்டு ஒரு முயற்சி என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிர்கள் பலர் சிறப்பாக இருக்கு என்று பாராட்டி வருகிறார்கள்.
அந்த படத்துல நடிச்சது தப்பா போச்சு – புலம்பும் நடிகை
அந்த படத்துல நடிச்சது தப்பா போச்சு – புலம்பும் நடிகை
பிரபல நடிகரின் படத்தில் நடிச்சது தப்பா போச்சு என கோலிவுட் நடிகை ஒருவர் சினிமா வட்டாரங்களில் புலம்பி வருகிறாராம்.
அந்த படத்துல நடிச்சது தப்பா போச்சு – புலம்பும் நடிகை
கிசுகிசு
முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய நடிகை ஒருவர், சமீபத்தில் முன்னணி நடிகரின் படம் ஒன்றில் நடித்தாராம். அந்த படத்தில்
நடித்தால் அடுத்த லெவலுக்கு சென்று விடலாம் என்று அவர் எண்ணினாராம். கதைக்கு முக்கியமான வேடம் என்று சொல்லி
தன்னை டம்மி பண்ணி விட்டதாக சினிமா வட்டாரங்களில் தற்போது புலம்பி வருகிறாராம் அந்த நடிகை.
அவருக்கு தற்போது வரும் வாய்ப்புகளும் முக்கியத்துவம் இல்லாதது போன்ற வேடங்களே வருகிறதாம். ஆகவே, இனிமேல் ஆரம்ப
காலத்தைப் போலவே தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம். குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறாராம்.
40 வயது இயக்குனரை காதலிக்கும் நடிகை
40 வயது இயக்குனரை காதலிக்கும் நடிகை
தமிழில் துப்பறிந்த நடிகை அதன்பிறகு கடவுளின் பெயரைக் கொண்ட நடிகருடன் இணைந்து நடித்தாராம்.
இவர் தெலுங்கு மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளாராம். இவர் தெலுங்கு இயக்குனருடன் நெருங்கி பழகி வருகிறாராம்.
இயக்குனருடன் நெருக்கமாக இருப்பதால்தான் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வருகிறாராம் நடிகை.
அந்த இயக்குனருக்கு 40 வயது ஆகிறதாம். நடிகைக்கு 23 ஆகிறதாம்.
இவர்களுடைய காதல் தான் தற்போது தெலுங்கு பட உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறதாம்.
அவர் எனக்கு காதலை தெரிவித்து 26 வருடங்கள் ஆகிவிட்டது… குஷ்பு
அவர் எனக்கு காதலை தெரிவித்து 26 வருடங்கள் ஆகிவிட்டது… குஷ்பு
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பு. வருஷம் 16 என்ற திரைப்படத்தின் மூலம்
கதாநாயகியாக அறிமுகமான அவர் அதனை தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும்
ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருந்தார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் குஷ்பு. அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
சுந்தர் சி – குஷ்பு
இந்த நிலையில் இன்று சுந்தர் சி குஷ்புக்கு காதலை தெரிவித்து 26 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தனது
ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர், சுந்தர் சி காதலைத் கூறி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிறது. அப்போது எது உங்களது காதலை உடனே ஏற்க வைத்தது என்று எனக்கு
தெரியவில்லை. அந்த மாதிரியான நேரத்தில் உள்ளுணர்வை நம்பி எடுக்கும் முடிவு சிறப்பாக அமையும். அதையேதான் நானும்
செய்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்
நடிக்க வாங்க – வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன்
நடிக்க வாங்க – வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன்
திரைப்படங்களில் நடிக்க தடை விதித்ததால் ஒதுங்கி இருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேல் சமீபத்தில் வாட்ஸ் அப் குழு நண்பர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது,
“நான் நடிக்காமல் 10 வருடங்களாக வீட்டில் முடங்கி கிடப்பது பெரிய ரணம். எனது உடலில் தெம்பு இருக்கிறது. நடிக்கவும் ஆசை
இருக்கிறது. ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை” என்றார். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற பாடலை பாடியும் கண்கலங்கினார்.
அதைப் பார்த்து வருந்திய நடிகை மீரா மிதுன் வெளியிட்டுள்ள வீடியோவில், “வடிவேலுவின் சமீபத்திய பேச்சுகள், பேட்டிகளை பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்று வருத்தப்பட்டு
இருந்தார். எப்போதும் வெற்றிகரமான ஒரு மனிதரை வஞ்சகமாகவும், மோசடி செய்தும்தான் வீழ்த்துவார்கள். ஆனாலும்
யாரையும் யாருமே ஒதுக்க முடியாது. இது எனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம்.
மீரா மிதுன்
உங்கள் தெனாலிராமன் படம் பார்த்து இருக்கிறேன். அந்த படத்துக்கு நான் பெரிய ரசிகை. நிறைய பேர் நடிப்புக்கான
விதிமுறையே தெரியாமல் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் பெரிய சகாப்தம். கண்கலங்க கூடாது. நான்
சொந்தமாக படம் தயாரிக்கிறேன். எனது படத்தில் உங்களுக்கு நடிக்க விருப்பம் இருந்தால் நடியுங்கள். பெருமைப்படுவேன்” என்று கூறியுள்ளார்.
நடிகையிடம் ரசிகர்கள் ஆபாச கோரிக்கை
சமூகவலைதளங்களால் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் எளிதாக தொடர்பில் இருக்க முடிகிறது. ஆனால் சில நெகட்டிவான மனிதர்களின் வக்கிரமான செயல்களையும் இதில் தவிர்க்க
இளம் நடிகை பிரியா
முடிவதில்லை. இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், ‘ஓரு அதார் லவ்’ படத்தின் ‘மாணிக்க மலராய பூவி’ என்ற பாடலில் கண் சிமிட்டியதால், 2018-ஆம் ஆண்டில் இணையத்தில் வைரலானார்.
பின்னர் அவர் இந்திய அளவில் கவனிக்கப்பட்டார். அதோடு ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும்
பெற்றார். சமூக ஊடகங்களில் தீவிரமாக உள்ள பிரியா, ‘ஹேப்பி நியூ இயர்’ என்ற படத்தில் இடம் பெற்றுள்ள ‘மான்வா லாகே’ பாடலுக்கு உதட்டை அசைத்து வீடியோ ஒன்றை பதிவேற்றியிருந்தார்.
பிரியா வாரியர் பதிவிட்ட புகைப்படம்
இதற்கு பிரியாவின் நண்பரும், இணைய பிரபலமுமான ஷரன் நாயர், “உங்கள் உதட்டை எப்படி கடிக்க வேண்டும் என்று எனக்குக் கற்றுக் கொடுங்கள்” என்று கேட்டிருந்தார். எதிர்பார்ப்புகளுக்கு
மாறாக இருபத்தி இரண்டு வயதான நடிகை பிரியா, “ஹ்ம்ம்ம்ம் நான் செய்வேன்” என்று பதிலளித்திருந்தார். இப்போது தங்களுக்கும்
அதை கற்பிக்க வேண்டுமென, மற்றவர்களும் பிரியாவுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நடிக்க உடம்பில் தெம்பு இருக்கு…. யாரும் வாய்ப்பு தருவதில்லை – கண்கலங்கிய வடிவேலு
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய
படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.
இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி அவருக்கு வாய்ப்பு அளிக்க பட அதிபர்கள் தயங்குகின்றனர்.
வடிவேலு
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வடிவேலு, பட வாய்ப்பு கிடைக்காதது குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது: “உங்களுக்கெல்லாம் ஒரு வருஷம் தான் லாக்டவுன்.
பட வாய்ப்பு இல்லை வடிவேலு
ஆனால் நான் பத்து வருஷமா லாக்டவுனிலேயே தான் இருக்கிறேன். இப்போதும் நடிக்க உடம்பில் தெம்பு இருக்கு, ஆனால் யாரும்
வாய்ப்பு தருவதில்லை எனக்கூறிய வடிவேலு, கர்ணன் படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலில் வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற வரியை பாடும்போது கண்கலங்கினாராம்.
பிறந்து 12 நாட்களே ஆன குழந்தைக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நடிகை
பிறந்து 12 நாட்களே ஆன குழந்தைக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நடிகை
தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர்
இயக்கிய சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்
. ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கு, இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
கணவருடன் அனிதா ஹசானந்தனி
கடந்த 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 9-ந்
தேதி ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயரை வைத்துள்ளனர். நடிகை அனிதா
ஹசானந்தனி, தனது குழந்தை ஆரவ் ரெட்டிக்காக இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய பக்கத்தையும் ஆரம்பித்துள்ளார்.
அதில் தனது குழந்தையின் புகைப்படங்களை பதிவிடுவதற்காக இந்த பக்கத்தை அவர் தொடங்கி உள்ளார்
கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பித்த சிவகார்த்திகேயன்
2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். நடிகர், நடிகையர், இலக்கியம், நடனம், இசை, நாடகம், தெருக்கூத்து,
வில்லிசை, பம்பைக்கலைஞர், இசை நாடக நடிகர், மெல்லிசை கலைஞர் உள்ளிட்ட பிரிவுகளில் 134 பேருக்கு விருது வழங்கப்பட்டது
விருதுபெற்ற திரையுலக பிரபலங்ளுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு கிடைத்த விருதை தன் தாய்க்கு சமர்ப்பணம் செய்வதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
முதல்வரிடம் இருந்து விருது பெற்ற சிவகார்த்திகேயன்
‘சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற
எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்’ என சிவகார்த்திகேயன் கூறி உள்ளார்.
அத்துடன், முதலமைச்சரிடம் இருந்து விருது பெற்றபோது எடுத்த புகைப்படம் மற்றும் அந்த விருதை தாயாரிடம் கொடுத்து, அவரது
காலில் விழுந்து ஆசி பெற்றபோது எடுத்த புகைப்படத்தையும் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஓவியா
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சென்னை வந்தபோது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘கோபேக் மோடி’ என்ற ஹேஷ்டேக் உருவானது. அதில் நடிகை ஓவியாவும் மோடிக்கு எதிரான பதிவை
வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியாவை பலர் கண்டித்தனர்.
நடிகை காயத்ரி ரகுராமும் “வாயை மூடு. உன்னை அவமதிப்பதற்கு எதுவும் இல்லை. இது தி.மு.கவின் திசை திருப்பும் வேலைதான். ஓவியாவை வேலைக்கு அமர்த்தி இதை செய்ய வைத்துள்ளனர்”
என்று சாடினார். ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
ஓவியா
இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஓவியா தனது சமூக வலைத்தள பக்கத்தில், “ஜெய்ஹிந்த் கருத்து சுதந்திரம்” என்று பதிவிட்டுள்ளார். கருத்து சொல்ல உரிமை இருக்கிறது என்று
எதிர்ப்பாளர்களுக்கு இதன் மூலம் பதிலடி கொடுத்து இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி ஓவியாவின் பதிவை வைரலாக்கி வருகிறார்கள்.






