Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் – மாதவன்
கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் – மாதவன்
தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் மாதவன், கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் என்று கூறியிருக்கிறார்.
கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் – மாதவன் நெகிழ்ச்சி
மாதவன்
கடந்த மாதம் 25ம் தேதி மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் 14 நாட்கள் வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார். தற்போதைய சோதனையில்
மாதவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ள மாதவன், ”எனக்காக அக்கறையுடன் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.
மாதவன்
அம்மா உள்பட அனைவருக்கும் கொரோனா தொற்று நெகட்டிவ் என்று வந்துள்ளது. வைரஸ் தொற்று நிலையை முற்றிலுமாக கடந்து வந்துவிட்டோம். கடவுள் அருளால் அனைவரும் நலமுடன்
ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். கொரோனாவில் இருந்து மீண்டு வந்துவிட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எச்சரிக்கையாக இருந்து வருகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
சின்னதம்பி 30 வருட கொண்டாட்டம் – குஷ்பு நெகிழ்ச்சி
சின்னதம்பி 30 வருட கொண்டாட்டம் – குஷ்பு நெகிழ்ச்சி
சின்னத்தம்பி படம் வெளியாகி 30 வருடம் ஆகிவிட்டது என நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
சின்னதம்பி 30 வருட கொண்டாட்டம் – குஷ்பு நெகிழ்ச்சி
குஷ்பு
தமிழ் திரையுலகில் கடந்த 1991ஆம் ஆண்டு நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் சின்னதம்பி. இயக்குனர் பி வாசு இயக்கியிருந்த
இந்தப் படத்தில் மனோரமா, கவுண்டமணி, ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் மூலம் பி.வாசுவின் மகன் சக்தி சினிமாவில் அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது.
இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குஷ்பு
அதில் ‘சின்னத்தம்பி படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. நேரம் வேகமாக பறக்கிறது . பி வாசு சாருக்கு எப்போதும் நன்றி உள்ளவளாக இருப்பேன். இசைஞானி இளையராஜா,
தயாரிப்பாளர் கே பாலு (சமீபத்தில் அவரை இழந்தோம் ) மற்றும் பிரபு சார் அனைவருக்கும் நன்றியும் அன்பும்’ என பதிவிட்டுள்ளார்.
நடிகரை கிண்டல் செய்த பிரியா பவானி
நடிகரை கிண்டல் செய்த பிரியா பவானி
தமிழில் மேயாதமான் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர், காமெடி நடிகரை கிண்டல் செய்து இருக்கிறார்.
நடிகரை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர்
நடிகர் சதீஷ், படங்களில் நடிப்பதைப் போலவே நிஜ வாழ்விலும் கலகலப்பாக இருப்பவர். அவரது சமூகவலைதள கமெண்டுகளை வைத்தே அதைத் தெரிந்து கொள்ளலாம்.
சமீபத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய போட்டோஷூட் படங்களை வெளியிட்டு “இப்போ நான் என்ன நினைக்கிறேன்?” என்று பதிவிட்டிருந்தார்.
அதற்கு “சதீஷ் கூட ஹீரோயினா நடிக்க முடியாம போச்சே” என்று சதீஷ் கமெண்ட் அடித்தார்.
பிரியா பவானி சங்கர் – சதீஷ்
அதற்கு பதிலளித்த பிரியா, சதீஷ் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “அப்டி சொல்லாதீங்க கோபால்”
என்று நக்கலாக பதிலளித்துள்ளார். பிரியா பவானி ஷங்கரின் இந்த பதில், சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகப் பரவி வருகிறது
சிம்புவின் அடுத்த படம் இவருடனா?… வைரலாகும் புகைப்படம்
சிம்புவின் அடுத்த படம் இவருடனா?… வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, மாநாடு, பத்துதல படத்தை தொடந்து அடுத்ததாக பிரபல தயாரிப்பாளருடன் இணைய இருக்கிறார்.
சிம்புவின் அடுத்த படம் இவருடனா?… வைரலாகும் புகைப்படம்
சிம்பு
நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து ’பத்துதல’ படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் கவுதம்மேனன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் உடன் சிம்பு எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள லிப்ரா புரொடக்ஷன் ரவீந்திரன்,
பார்த்தா தெரியாது நட்பு
பழகினால் தான் தெரியும் நட்பு
இவர் மேல சில பேருக்கு வெறுப்பு
அதற்கு அவர் இல்லை பொறுப்பு
சிம்பு – ரவீந்திரன்
என்று பதிவு செய்துள்ளார். மேலும் நாங்கள் இருவரும் அவ்வப்போது பொதுவான விஷயங்களுக்காக சந்திப்போம்
என்றும் ஆனால் எங்களைப் பற்றி மிக அதிக அளவில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருவதாக குறிப்பிட்டு உள்ளார்.
மிக விரைவில் சிம்புவின் திரைப்படத்தை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்
இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்.
இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது.
இந்நிலையில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார்.
படக்குழுவினருடன் உதயநிதி ஸ்டாலின்
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும்,
வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆர்ட்டிகில் 15’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவில் குடும்பத்துடன் ‘கர்ணன்’ படம் பார்த்த தனுஷ்
அமெரிக்காவில் குடும்பத்துடன் ‘கர்ணன்’ படம் பார்த்த தனுஷ்
அமெரிக்காவில் கர்ணன் படம் அரங்கம் நிறைந்த காட்சியாக ஓடியதைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் குடும்பத்துடன் ‘கர்ணன்’ படம் பார்த்த தனுஷ்
கர்ணன் படத்தின் போஸ்டர்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9-ந்தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இப்படம் முதல் நாளில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், தற்போது தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள தனுஷ், தனது மனைவி மற்றும் மகன்களுடன், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள திரையரங்கில் ‘கர்ணன்’ படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து ரசித்திருக்கிறார்.
தனுஷ்
அமெரிக்க திரையரங்குகளில் கர்ணன் படம் அரங்கம் நிறைந்த காட்சியாக ஓடியதைக் கண்டு
தான் மகிழ்ச்சியடைந்ததாக தயாரிப்பாளர் தாணுவிடம் நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ராக்கி சாவந்த்யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்
ராக்கி சாவந்த்யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்
யோகி பாபு
தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த புகார் மனுவில், நடிகர் யோகிபாபு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
புகார் மனு விவரம் வருமாறு:-
யோகி பாபு
நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம், சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் முடிதிருத்தும்
தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படம் முழுவதும் இது போன்ற காட்சிகள் உள்ளன.
முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள
இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

திருமணம் பற்றி பேசுவதை நிறுத்துங்க நடிகை
திருமணம் பற்றி பேசுவதை நிறுத்துங்க நடிகை
தமிழில் காதலில் விழுந்தேன், நீர் பறவை, வம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்த சுனைனா, திருமணத்தை பற்றி பேசுவதை நிறுத்துங்க என்று கூறியிருக்கிறார்.
திருமணம் பற்றி பேசுவதை நிறுத்துங்க… சுனைனா வருத்தம்
சுனைனா
காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா, தொடர்ந்து நீர் பறவை, வம்சம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். 2019 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் சுனைனாவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
சமீபத்தில் டிரிப் என்னும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ராஜ ராஜ சோரா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சுனைனா அளித்த பேட்டியில், ‘கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன.
பல வகையான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. மேலும் சில இயக்குனர்கள், என்னை மனதில் கொண்டு கதைகளை எழுதியுள்ளது உற்சாகம் அளிக்கிறது” என்கிறார் சுனைனா.
சுனைனா
தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தொடர்ந்து வெளியாகும் செய்திகளை மறுத்த அவர் இவை அனைத்தும்
வந்ததிகளே என்றும் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
திரை வாழ்க்கையில் கவனம் செலுத்துவதாக கூறிய சுனைனா, தனது திருமணம் பற்றி பேசுவதை விட்டுவிட்டு தனது திரைப்படங்கள் பேச வேண்டும்’ என்றார்.
தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை.
தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை.
கன்னடம் பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர் நடிகை சைத்ரா. இவர் கடந்த மாதம் நாகார்ஜூனன் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டர்.
இருவரும் கடந்த சில வருடங்கள் காதலித்து வந்ததாகவும், அதன் பின்னரே திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீரென நடிகை சைத்ரா தனது வீட்டில் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.
இதனை அடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இவருடைய தற்கொலை முயற்சி கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சைத்ரா
இவர் தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் நடிகை சைத்ராவை தொழிலதிபர் நாகார்ஜூனன்
மிரட்டி திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணமாகி ஒரு மாதம் ஆகியும் இன்னும் இருவரும் ஒன்றாக வாழவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வரும் நடிகை சைத்ராவின் வாக்குமூலத்தை வாங்கிய பின்னரே இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனக்கு கொரோனா இல்லை – ராதிகா
எனக்கு கொரோனா இல்லை – ராதிகா
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ராதிகா சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா இரண்டு நாட்களாக எந்த பதிவும் செய்யாததால்,
கொரோனா தான் காரணம் என்று ரசிகர்களும், ராதிகா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பலரும் பதிவு செய்து வந்தார்கள்.
ராதிகாவின் பதிவு
இந்நிலையில் ராதிகா இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில், அனைவரின் அன்புக்கும் நன்றி. எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எல்லாம் இல்லை.
தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு உடம்பு வலி மட்டுமே. என் உடல்நலம் மற்றும் வழக்கு குறித்து ஆன்லைன்
மீடியாக்கள் கண்டதையும் எழுதுகின்றன. நாங்கள் மேல் நீதிமன்றங்களில் முறையிடுவோம். நான் வேலைக்கு திரும்பிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
தனுஷ் பட நடிகைக்கு கொரோனா.
தனுஷ் பட நடிகைக்கு கொரோனா.
மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ்
இயக்கி உள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
ஐஸ்வர்யா லட்சுமி
இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறிய அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு பாசிடிவ் வந்துள்ளது.
இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கை முறைகளையும் அவர் எடுத்துள்ளார்
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி
ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி, தனது ரசிகரின் குழந்தையைக் கொஞ்சி, தலையில் முத்தமிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் கடைசி விவசாயி, நவரசா, மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் உள்ளன. இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வந்தாலும், ரசிகர்கள் மீது தீராத அன்பு கொண்டவர் விஜய் சேதுபதி. அவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார்.
விஜய் சேதுபதி
இந்நிலையில் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு விஜய் சேதுபதியிடம் கேட்டுள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்று அந்த ஆண் குழந்தைக்கு
துருவன் என பெயர் சூட்டியுள்ளார். மேலும் விஜய் சேதுபதி, அந்த ரசிகரின் குழந்தையைக் கொஞ்சி, தலையில் முத்தமிடும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு குவியும் லைக்குகள்
பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு குவியும் லைக்குகள்
பூனம் பாஜ்வா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சேவல் படத்தின் மூலம்
தமிழில் அறிமுகமான இவர் அதையடுத்து சில தமிழ் படங்களில் நடித்தார். கடைசியாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாசின் ‘குப்பத்து ராஜா’ படத்தில் நடித்திருந்தார்.
பூனம் பாஜ்வா
அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் சமூகவலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியாக
புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பூனம் தற்போது வெளியிட்டுள்ள
கிளாமர் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. இந்த போட்டோஷூட்டிற்கு ரசிகர்கள் லைக்குகள் குவிந்து வருகின்றன.
தனுஷுடன் மோதும் நயன்தாரா
தனுஷுடன் மோதும் நயன்தாரா
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் தனுஷும், நயன்தாராவும் பட வெளியீட்டில் மோத உள்ளனர்.
தனுஷுடன் மோதும் நயன்தாரா
தனுஷ், நயன்தாரா
தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் கர்ணன். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். தமிழில் உருவாகியுள்ள
இப்படத்தை மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கைப்பற்றி உள்ளார். மேலும் இப்படத்தை கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.
கர்ணன் மற்றும் நிழல் பட போஸ்டர்கள்
இந்நிலையில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மலையாள படமான ‘நிழல்’ அதே தினத்தில் வெளியாக உள்ளதால், இந்த இரண்டு படங்களுக்கு கடும் போட்டி நிலவும் என
எதிர்பார்க்கப்படுகிறது. நிழல் படத்தில் குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடித்துள்ளார். பிரபல படத்தொகுப்பாளரான
அப்பு என் பட்டாத்திரி இப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது.
காதல் கணவரை கன்னத்தில் அறைந்த நடிகை
காதல் கணவரை கன்னத்தில் அறைந்த நடிகை
நடிகை அனிதா ஹசானந்தனி, கடந்த 2013-ம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
காதல் கணவரை கன்னத்தில் அறைந்த நடிகை – வைரலாகும் வீடியோ
அனிதா ஹசானந்தனி, ரோகித் ரெட்டி
தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில்
நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கு, இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
கடந்த 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 9-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயர் வைத்துள்ளனர்.
காதல் கணவரை கன்னத்தில் அறைந்த நடிகை
இந்நிலையில், நடிகை அனிதா ஹசானந்தனி, தனது கணவரை கன்னத்தில் அறையும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அனிதாவின்
கணவர் ரோகித் ரெட்டி, இதனால் தான் தனக்கு ரீல்ஸ் பிடிக்காது என சோகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
காதல் தோல்வியின் வேதனையை தாங்கி கொள்வது கஷ்டம் – நடிகை
காதல் தோல்வியின் வேதனையை தாங்கி கொள்வது கஷ்டம் – நடிகை
அங்காடி தெரு’ படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து
வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் எடையை குறைத்து
மெலிந்த தோற்றத்துக்கு மாறிய அவர், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
அவர் காதல் தோல்வியில் இருந்து மீண்டது குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: நான் காதலில் விழுந்தேன் என்றும், எனக்கு குழந்தைகள் இருக்கிறது என்றும் தகவல்
பரவி உள்ளது. காதலில் விழவே இல்லை என்று நான் பொய் சொல்ல மாட்டேன். ஒருவரோடு காதலில் இருந்தேன். அது நிறைவேறவில்லை. அது நடந்து இருந்தால் நானே பெருமையாக எல்லோருக்கும் சொல்லி இருப்பேன்.
அஞ்சலி
நடிகை மட்டுமன்றி எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் காதல் தோல்வியானால் அந்த வேதனையை தாங்கி கொள்வது கஷ்டம்தான். பெண்கள் இதயம் கல் இல்லை.
ஆனால் அந்த வேதனையில் இருந்து நான் கொஞ்சம் சீக்கிரமாகவே வெளியே வந்து விட்டேன். அதற்கு எனது அம்மாதான் காரணம்.
அவர் வலிமையான பெண். அம்மா கொடுத்த தைரியத்தில்தான் இன்னும் சினிமாவில் நீடிக்கிறேன்”. இவ்வாறு அவர் கூறினார்.
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

ஒரு வருடத்திற்குப் பிறகு திருமணம் செய்துக் கொண்ட நடிகை
ஒரு வருடத்திற்குப் பிறகு திருமணம் செய்துக் கொண்ட நடிகை
மலையாள நடிகை ஊர்மிளாவின் மகள் நடிகை உத்ரா உன்னி, ஒரு வருடத்திற்குப் பிறகு காதலரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
ஒரு வருடத்திற்குப் பிறகு திருமணம் செய்துக் கொண்ட நடிகை
கணவருடன் உத்ரா உன்னி
பழம்பெரும் மலையாள நடிகை ஊர்மிளாவின் மகள் நடிகை உத்ரா உன்னி. இவர் தமிழில் வவ்வால் பசங்க என்ற படத்தில் நடித்திருக்கிறார்
. இவருக்கும் நிதேஷ் நாயர் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அவர்களது திருமண கொண்டாட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டது.
கணவருடன் உத்ரா உன்னி
இந்நிலையில், ஒரு வருடத்திற்குப் பிறகு இவர்கள் திருமணம் இன்று எளிமையாக கேரளாவில் நடைபெற்றுள்ளது.
திருமண புகைப்படங்களை உத்ரா உன்னி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். இவரது திருமணத்திற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
உடல்நலக் குறைவால் நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
உடல்நலக் குறைவால் நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் கார்த்திக் சென்னையில் உள்ள மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
உடல்நலக் குறைவால் நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
நடிகர் கார்த்திக்
நடிகர் கார்த்திக்கிற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 21-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவமனையில் கார்த்திக் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
அதன்பின், தீவிர சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கார்த்திக்கை ஓய்வெடுக்கச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், அவர் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வந்தார்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்துக்கு பின்னர் சென்னை திரும்பிய கார்த்திக்கிற்கு இன்று மாலை திடீரென மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அடையாறில் உள்ள
மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் பட தயாரிப்பாளருக்கு கொரோனா
தனுஷ் பட தயாரிப்பாளருக்கு கொரோனா
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மும்பையில் தங்கி உள்ள நடிகர்கள்
கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு நடிகர்கள் அமீர்கான், மாதவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதுபோல் தமிழ் நாட்டில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை கவுரி கிஷன், உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு
கொரோனா தொற்று இருப்பதாக பதிவு செய்தார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சசிகாந்த்
தயாரிப்பாளர் சசிகாந்த், தமிழில் இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, ஏலே, மண்டேலா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.
மேலும் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்தையும் சசிகாந்த் தனது ஒய் நாட் ஸ்டியோஸ் மூலம் தயாரித்துள்ளார்.
ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்ற கொள்ளையடித்தால் ஜோடி
ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்ற கொள்ளையடித்தால் ஜோடி
பிரபல இயக்குனர் அகத்தியனின் இளைய மகள் நிரஞ்சனி. இவர் கடந்தாண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.
நடிகை நிரஞ்சனியும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும் காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததால், இருவரும் பிப்ரவரி 25ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
நிரஞ்சனி
இந்நிலையில், இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்றிருக்கிறார்கள். மாலத்தீவில்
இருக்கும் புகைப்படத்தை நடிகை நிரஞ்சனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.






