Posted in சினிமா

மண் தரையில் தூங்கிய சிம்பு – ‘எளிய மனிதர்’ என வியந்து பாராட்டிய வெங்கட் பிரபு

மண் தரையில் தூங்கிய சிம்பு – ‘எளிய மனிதர்’ என வியந்து பாராட்டிய வெங்கட் பிரபு

மாநாடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மண் தரையில் தூங்கிய சிம்பு – ‘எளிய மனிதர்’ என வியந்து பாராட்டிய வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு டுவிட்டரில் பகிர்ந்த சிம்புவின் புகைப்படம்


நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சிம்பு, எஸ்.ஜே.சூர்யா

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, சிம்புவை எளிய மனிதர் என குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த 2 புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

. அதில் ஒரு படத்தில் சிம்பு, மண் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். மற்றொரு படத்தில் தரையில் படுத்திருக்கும் சிம்புவின் பக்கத்தில் நின்று எஸ்.ஜே.சூர்யா பேசிக்

கொண்டிருக்கிறார். இந்தப் படங்களைப் பார்த்த சிம்பு ரசிகர்கள், அதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

    Posted in சினிமா

    கமலுக்காக வீதியில் இறங்கி குத்தாட்டம் போட்ட அக்‌ஷரா ஹாசன்.

    கமலுக்காக வீதியில் இறங்கி குத்தாட்டம் போட்ட அக்‌ஷரா ஹாசன்.

    தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கமலுக்காக அவரது மகள் அக்‌ஷரா ஹாசன் வீதியில் இறங்கி குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரித்து இருக்கிறார்.

    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் முதன்முதலாக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    கமலுக்கு ஆதரவாக திரையுலகினர் யாரும் பிரச்சாரம் செய்யவில்லை என்றாலும் அவரது அண்ணன் மகள் சுகாசினி கடந்த சில நாட்களாக கோவையின் ஒவ்வொரு தெருவிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

    அக்‌ஷரா ஹாசன் – சுஹாசினி

    இந்த நிலையில் தற்போது கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசனும் கோவையில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்.

    அக்சராவும் சுஹாசினியும் தெருவில் குத்தாட்டம் போட்டு வாக்குகளை திரட்டிய வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அவரது ஆட்டத்தை பார்த்த அந்த பகுதியில் உள்ள பெண்களும் அவருடன் சேர்ந்து ஆடினார்கள்.

      Posted in சினிமா

      வயது குறைவானவரை திருமணம் செய்வேன்… கவர்ச்சி நடிகை அறிவிப்பு

      வயது குறைவானவரை திருமணம் செய்வேன்… கவர்ச்சி நடிகை அறிவிப்பு

      என்னைவிட வயது குறைவான சின்ன பையனை தான் திருமணம் செய்வேன் என்று பிரபல கவர்ச்சி நடிகை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

      வயது குறைவானவரை திருமணம் செய்வேன்… கவர்ச்சி நடிகை அறிவிப்பு
      கவிதா ராதேஷ்யம்
      ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி’. இந்த படத்தில் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்தவர் நடிகை கவிதா ராதேஷ்யம். பாலிவுட் நடிகையான இவர் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே கவர்ச்சியாக நடித்திருப்பார்.

      கவிதா ராதேஷ்யம்

      சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் கவிதா ராதேஷ்யம், தற்போது அவர் மேலாடை மட்டுமே அணிந்த ஒரு கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்து இருக்கிறார்.

      கவிதா ராதேஷ்யம்

      மேலும், எனக்கு யாருடனும் எந்த விதமான ரிலேஷன்ஷிப் இல்லை, எனக்கு நிச்சயதார்த்தமோ, திருமணமோ ஆகவில்லை

      . நான் இன்னும் 5 வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்வேன். ஆனால் கண்டிப்பாக என்னை விட வயது குறைவானவரைதான் திருமணம் செய்து கொள்வேன். எனவே என்னை பற்றி பரப்பும் வதந்தியை நிறுத்துங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

        Posted in சினிமா

        தளபதி 65 படத்தில் வில்லனாக நடிப்பது உண்மையா? – நடிகர் வித்யூத் ஜமால்

        தளபதி 65 படத்தில் வில்லனாக நடிப்பது உண்மையா? – நடிகர் வித்யூத் ஜமால்

        பிரபல பாலிவுட் நடிகரான வித்யூத் ஜமால், துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

        தளபதி 65 படத்தில் வில்லனாக நடிப்பது உண்மையா? – நடிகர் வித்யூத் ஜமால் விளக்கம்
        விஜய், வித்யூத் ஜமால்


        நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

        மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

        அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது.

        வித்யூத் ஜமால்

        இப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் வித்யூத் ஜமால் வில்லனாக நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

        இந்நிலையில், இதனை நடிகர் வித்யூத் ஜமால் மறுத்துள்ளார். மேலும் விஜய்யுடன் நடிக்க ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என துப்பாக்கி பட பாணியில் அவர் தெரிவித்துள்ளார்.

        நடிகர் வித்யூத் ஜமால், துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

          Posted in சினிமா

          இந்தி நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா

          இந்தி நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா

          இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் அரசியல்வாதிகள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை.

          இந்தி நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு
          ஆலியா பட்
          புதுடெல்லி:

          இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28). இவர் மும்பையில், சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

          ஆலியா, தனது இன்ஸ்டாகிராமில் நள்ளிரவில் வெளியிட்ட செய்தியில், அனைவருக்கும் வணக்கம். எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவேன்.

          என்னுடைய மருத்துவர்கள் அறிவுரையின்படி அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

          மேலும், அவர் தன்னுடைய பதிவில், உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி என ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

            Posted in சினிமா

            சென்னையில் சீமானின் அதிவேக பிரச்சாரம் video

            சீமானோடு நின்று கேள்வி கேட்டவர்! சென்னையில் சீமானின் அதிவேக பிரச்சாரம் video

            தாய்த் தமிழ் உறவுகளே இந்த முறையும் இரண்டு திராவிட கழகங்களுக்கும் வாக்கு செழுத்தி மறுபடியும் நீங்கள் தோற்று


            விடாதீர்கள், வெல்லவையுங்கள் விவசாயியை, நாம் தமிழர் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி
            இளைஞர்களுக்கு

            அண்ணன் தாய்மார்களுக்கு மகன் பெண்களுக்கு சமத்துவமும் தேர்தல்களில் வெற்றியாளன்

            கூட்டணிக்கு மயங்கதவன் நாட்டுக்கு தேவையானவன் .என்றும் அன்புடன் நம்பிக்கை ஆனவன்

            click here video

            Posted in சினிமா

            முத்தம் கொடுத்து கண்கலங்கிய தனுஷ்

            முத்தம் கொடுத்து கண்கலங்கிய தனுஷ்

            தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் இயக்குனர் ஒருவருக்கு முத்தம் கொடுத்து கண்கலங்கி இருக்கிறார்.

            முத்தம் கொடுத்து கண்கலங்கிய தனுஷ்
            தனுஷ்
            மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். தாணு தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

            இதில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும்போது, கர்ணனைக் கண்ட நாள் முதல் கேட்ட நாள் வரை திரையில் தான் காண்பேன் என உறுதியாக இருக்கிறார் தாணு சார்.

            கர்ணன் திரைப்படத்தை சுதந்திரமாக என்ன எடுக்க விட்டார்கள். பரியேறும் பெருமாள் படத்தையும் அப்படித்தான் எடுத்தேன். கர்ணன் திரைப்படத்தை கிராமத்து பகுதியில் எடுப்பதற்கான காரணம் அந்த படத்திற்கு உயிரோட்டம் கொடுக்கத்தான்.

            மாரி செல்வராஜ் – தனுஷ்

            என் ஊர் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்தில் என்னுடைய நடிப்பை மேலும் மெருகேற்றியது என்னுடன் கூட நடித்த அந்த ஊர் மக்களும் சக கலைஞர்கள்

            தான் என்று தனுஷ் சார் சொன்னார். இந்த படத்தை பார்த்து என்னை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து பாராட்டினார். என்றார்.

              Posted in சினிமா

              வாழ்க்கையை நினைத்தால் சோகமும் பயமும் வருகிறது – ராதிகா ஆப்தே

              வாழ்க்கையை நினைத்தால் சோகமும் பயமும் வருகிறது – ராதிகா ஆப்தே

              பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, வாழ்க்கை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைத்தால் சோகமும் பயமும் உருவாகிறது என்று கூறியுள்ளார்.

              வாழ்க்கையை நினைத்தால் சோகமும் பயமும் வருகிறது – ராதிகா ஆப்தே
              ராதிகா ஆப்தே


              ராதிகா ஆப்தே நடிப்பில் ‘தாண்டவ்’ என்ற வெப் சீரிஸ் கடந்த ஜனவரி மாதம் ஒடிடி தளத்தில் வெளியானது. இந்துக் கடவுள்களை தவறாக சித்தரித்து ஒளிபரப்பான இந்த தொடரை தடை செய்யவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

              இந்த விவகாரம் பெரிதாக வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வெப் சீரிசை உடனடியாக நீக்க வலியுறுத்தி நடிகை

              கங்கணா உள்ளிட்ட பல பிரபலங்கள் போர்கொடி உயர்த்தினர். இதை பார்த்த மத்திய அரசு, ஓடிடி தளங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் சட்ட விதிமுறைகளை வகுத்தது.

              ராதிகா ஆப்தே

              இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளதாவது, ’ஒரு விஷயத்திற்கு எதிராக மாற்று கருத்து உருவாகும்போது சுதந்திரத்துக்கும், சகிப்புத் தன்மைக்கும் இடம் கொடுக்க வேண்டும்.

              நமது வாழ்க்கை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைத்தால் சோகமும் பயமும் உருவாகிறது. ஓடிடி தளங்களால்

              ஏராளமான வாய்ப்புகள் இருந்தாலும் கூட ஐந்து ஆண்டுகள் பொருத்திருந்து பார்த்தால் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

                Posted in சினிமா

                கொரோனாவால் பாதிக்கப்பட்ட சந்தானம் பட நடிகை

                கொரோனாவால் பாதிக்கப்பட்ட சந்தானம் பட நடிகை

                கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மராட்டியத்தில் அதிகமானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது

                . மும்பையில் தங்கி உள்ள நடிகர்கள் கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு நடிகர்கள் அமீர்கான், மாதவன், மிலிந்த் சோமன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

                வைபவி ஷாண்டில்யா

                இந்நிலையில் தமிழில் சந்தானத்துடன் சக்கபோடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வைபவி ஷாண்டில்யா தனக்கும் தனது தாய், தந்தையரும் கொரோனா

                தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மும்பையில் தான் வசிக்கும் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின்

                எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

                  Posted in சினிமா

                  30 கோடி நஷ்டஈடு கேட்ட நடிகை

                  30 கோடி நஷ்டஈடு கேட்ட நடிகை

                  பிரபல இந்தி நடிகை சாக்‌ஷி மாலிக் சில வருடங்களுக்கு முன்பு போட்டோ ஷூட் நடத்தி அதில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்

                  . அந்த புகைப்படங்களை சாக்‌ஷியிடம் அனுமதி பெறாமல் நானி, அதிதிராவ், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியான ‘வி’ படத்தில் பயன்படுத்தி இருந்தனர்.

                  இந்த புகைப்படத்தை திரையில் காட்டும்போது பாலியல் தொழிலாளி சம்பந்தமான வசனமும் பேசப்பட்டு இருந்தது.

                  இதையடுத்து சாக்‌ஷி மாலிக் மும்பை கோர்ட்டில் ரூ.30 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். படத்தில் இருந்து சாக்‌ஷி மாலிக் புகைப்படம் கோர்ட்டு உத்தரவின் பேரில் நீக்கப்பட்டது. படக்குழுவினர் மன்னிப்பும் கேட்டனர்.

                  சாக்‌ஷி மாலிக்

                  இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.எஸ்.படேல் பட நிறுவனம் சாக்‌ஷி கேட்கும் தொகையை நஷ்ட ஈடாக வழங்குமா?

                  இதில் முடிவு எடுக்கவில்லை என்றால் வழக்கை கோர்ட்டு விசாரித்து வழக்கில் சாக்‌ஷி வெற்றி பெற்றால் அவர் கேட்கும் தொகையை வழங்க வேண்டும்.

                  இதுகுறித்து பேசி முடிவு எடுத்து ஏப்ரல் 1-ந் தேதிக்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

                    Posted in சினிமா

                    கணவர் சம்மதித்தால் திருமணம் செய்துக் கொள்கிறேன்- பிரியாமணி பதில்

                    கணவர் சம்மதித்தால் திருமணம் செய்துக் கொள்கிறேன்- பிரியாமணி பதில்

                    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பிரியாமணி. நடிகர் கார்த்தி நடித்த

                    முதல் படமான ’பருத்தி வீரன்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

                    இந்த நிலையில் சமீபத்தில் பிரியாமணி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து இருந்தார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்தது.

                    பிரியா மணி

                    இதில் ரசிகர் ஒருவர் ‘என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்க அதற்கு பதில் அளித்த பிரியாமணி, ’

                    எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, ஆனால் என் கணவரிடம் அனுமதி கேளுங்கள், அவர் சம்மதம் தெரிவித்தால் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

                      Posted in சினிமா

                      பவித்ரா வீட்டில் விசேஷம்

                      பவித்ரா வீட்டில் விசேஷம்

                      குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்து இருக்கும் பவித்ரா லட்சுமியின் வீட்டில் நடந்த விசேஷத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

                      சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதில் பவித்ரா லட்சுமி என்பவர் கலந்துக் கொண்டு கவனம் பெற்று வருகிறார்.

                      சமீபத்தில் பவித்ரா லட்சுமி, பட்டு புடவை கட்டி தொடை தெரியும் அளவிற்கு கத்தரிகோலால் வெட்டி கிழிந்திருக்கும் படி போட்டோஷூட் ஒன்றை எடுத்து வெளியிட்டிருந்தார். இது சமூக வலைத்தளத்தில் வைரலானது.

                      பவித்ரா லட்சுமி

                      பவித்ரா செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். கோகோ என்று பெயர் வைத்திருக்கும் செல்லப்பிராணியின் முதல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் பவித்ரா. நாய்க்கு பிங்க் நிற ஆடை அணியச் செய்து போட்டோஷூட்டையும் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

                      Posted in சினிமா

                      நடிகர் மரணம் – அனுஷ்கா உருக்கமான பதிவு

                      நடிகர் மரணம் – அனுஷ்கா உருக்கமான பதிவு

                      பிரபல நடிகர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து நடிகை அனுஷ்கா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு செய்துள்ளார்.

                      நடிகர் மரணம் – அனுஷ்கா உருக்கமான பதிவு
                      அனுஷ்கா
                      கடந்த 2007ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வேதம்.

                      தமிழில் இந்தப்படம் வானம் என்கிற பெயரில் சிம்பு, பரத், அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது. தமிழ், தெலுங்கு இரண்டு படத்திலும் ஒரே கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்திருந்தார்.

                      வேதம் படத்தில் ராமு என்கிற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் நாகையா அழுத்தமான நடிப்பை கொடுத்திருந்தார். மேலும் அனுஷ்கா நடித்த பாகமதி உள்ளிட்ட படங்களிலும் நாகையா

                      நடித்திருந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வேதம் நாகையா சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

                      அனுஷ்கா

                      தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் தொடர்ந்து இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகை அனுஷ்கா தனது சமூக

                      வலைத்தள பக்கத்தில், “நல்ல ஆத்மா நம்மை விட்டு சென்றது. அவர் நிச்சயம் சொர்க்கத்திற்குச் செல்வார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பகிர்ந்துள்ளார்

                        Posted in சினிமா

                        ஜுவாலா கட்டாவுடன் திருமணம்- உறுதி செய்த விஷ்ணு விஷால்

                        ஜுவாலா கட்டாவுடன் திருமணம்- உறுதி செய்த விஷ்ணு விஷால்

                        வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

                        இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ்குடவாலாவின் மகன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார்.

                        அதைத்தொடர்ந்து சில நடிகைகளுடன் இவரை இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்தன. இதனிடையே,

                        பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். கடந்தாண்டு இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

                        விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா

                        இந்நிலையில், ஜுவாலா கட்டாவுடன் திருமணம் எப்போது என்பது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

                        அதன்படி ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

                          Posted in சினிமா

                          ஷாருக்கான் – அட்லீ இணையும் படத்தின் முக்கிய அப்டேட்

                          ஷாருக்கான் – அட்லீ இணையும் படத்தின் முக்கிய அப்டேட்

                          நடிகர் விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, அடுத்ததாக ஷாருக்கான் படத்தை இயக்க உள்ளார்.

                          ஷாருக்கான் – அட்லீ இணையும் படத்தின் முக்கிய அப்டேட்
                          அட்லீ, ஷாருக்கான்


                          2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்து வருகிறார் அட்லீ.

                          இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், அதில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அதன்பின் அந்தப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை.

                          ஷாருக்கான், அட்லீ

                          சமீபத்தில் ஷாருக்கான் படத்திற்கான கதை விவாதத்தில் இயக்குனர் அட்லீ ஈடுபட்டிருக்கும் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. இதன்மூலம் ஷாருக்கான் – அட்லீ இணையும் படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது உறுதியானது.

                          இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஷாருக்கான் – அட்லீ இணையும் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

                          தற்போது பதான் என்ற படத்தில் நடித்து வரும் ஷாருக்கான் அதையடுத்து அட்லீ இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

                            Posted in சினிமா

                            நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் கே.எஸ்.ரவிகுமார் திரைப்படம்

                            நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் கே.எஸ்.ரவிகுமார் திரைப்படம்

                            2020-ல் ‘லாக்கப்’, ‘கபெ.ரணசிங்கம்’, ‘முகிலன்’, ‘ஒரு பக்க கதை’ ஆகிய படங்கள் ஜீ5 தளத்தில் வெளியானது. தற்போது மதில் என்னும் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

                            இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

                            பிரபல இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார்.

                            ‘மதில்’ படத்தில் மைம் கோபி, ‘பிக்பாஸ்’ மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

                            மதில் படக்குழுவினர்

                            மதில் திரைப்படம் தமிழ் நாட்டில் அடிக்கடி நிகழும் முக்கிய பிரச்சனை பற்றி பேசுகிறது. கடினமாக உழைத்து,

                            சேமித்து அதன் மூலம் சொந்த வீடு கட்ட முயற்சிக்கும் அனைவரின் கதை இது. இப்படம் ஏப்ரல் 14 அன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.

                              Posted in சினிமா

                              உடல் பு குறித்து விமர்சனம்… கடுப்பான இலியானா

                              உடல் பு குறித்து விமர்சனம்… கடுப்பான இலியானா

                              தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானவர் இலியானா. கேடி படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு,

                              இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானா அளித்துள்ள பேட்டியில், “எல்லோரும் எனது உடல் அமைப்பு குறித்து விமர்சனம் செய்கிறார்கள்.

                              உடல் தோற்றத்தை வைத்து முன்பெல்லாம் இடுப்பழகி அன்று அழைத்தனர். இப்போது தோற்றம் மாறி இருப்பதால் வேறு மாதிரி விமர்சிக்கிறார்கள். இது வருத்தமாக உள்ளது.

                              இலியானா

                              எனது உடல் தோற்றத்தில் எனக்கே அதிருப்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் விமர்சனம் செய்கிறவர்கள் என் உடம்பில் இருக்கிற அழகான விஷயங்களையும்

                              கவனிக்க வேண்டும். எனது மூக்கு, உதடு அவ்வளவு அழகாக இருக்காது. எனது உயரமும் சரியானது இல்லை.

                              கைகள் மிகவும் ஒல்லியாக இருக்கும். கலரும் குறைவுதான். ஆனால் அதற்காக நான் அழகாக இல்லை என்று சொல்லிவிட முடியாது.

                              எனது உடலில் இன்னும் அழகான பகுதிகள் நிறைய உள்ளது. அதற்காக என்னை பாராட்டினால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

                                Posted in சினிமா

                                அமீர்கான், மாதவனை தொடர்ந்து பிரபல நடிகருக்கு கொரோனா

                                அமீர்கான், மாதவனை தொடர்ந்து பிரபல நடிகருக்கு கொரோனா

                                பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் மாதவனுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், தற்போது பிரபல நடிகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


                                கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மராட்டியத்தில் அதிகமானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மும்பையில் தங்கி உள்ள நடிகர்கள்

                                கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள். இரு தினங்களுக்கு முன்பு நடிகர்கள் அமீர்கான், மாதவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

                                இந்நிலையில் பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தனக்கு கொரோனா தொற்று இருக்கும் தகவலை மிலிந்த் சோமன் தனது சமூக வலைத்தள

                                பக்கத்தில் பகிர்ந்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து உள்ளார்.

                                மிலிந்த் சோமன்

                                மிலிந்த் சோமன் தமிழில், கவுதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் குரூர வில்லனாக அறிமுகமானார்.

                                தொடர்ந்து கார்த்தியின் பையா, அலெக்ஸ் பாண்டியன் படங்களிலும் வில்லனாக நடித்து இருந்தார்.

                                  Posted in சினிமா

                                  சாய் பல்லவி நடிக்க மறுத்த வேடத்தில் ஒப்பந்தமான நித்யா மேனன்

                                  சாய் பல்லவி நடிக்க மறுத்த வேடத்தில் ஒப்பந்தமான நித்யா மேனன்

                                  மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர்.

                                  இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

                                  இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய, தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் உரிமையை வாங்கி

                                  வைத்திருக்கிறார். அதே போல் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை, தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார்.

                                  பவன் கல்யாண், நித்யா மேனன்

                                  இந்த படத்தில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா நடிக்க உள்ளார். இதில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

                                  அதேபோல் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அவர் நடிக்க மறுத்ததால் தற்போது நித்யா மேனனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

                                  நடிகை நித்யா மேனன், பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

                                    Posted in சினிமா

                                    19 வருடங்களுக்கு பின் பிறந்த தங்கை – மகிழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை

                                    19 வருடங்களுக்கு பின் பிறந்த தங்கை – மகிழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை

                                    வாணி ராணி, சித்தி 2, பாக்யலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையின் தாய்க்கு குழந்தை பிறந்துள்ளதாம்.

                                    19 வருடங்களுக்கு பின் பிறந்த தங்கை – மகிழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை
                                    நேகா மேனன்


                                    கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை நேகா மேனன். நாரதன், ஜாக்சன்துரை ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். வாணி ராணி, சித்தி 2, பாக்யலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

                                    19 வயதாகும் நடிகை நேகா, கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதள பக்கத்தில், தன் குடும்பத்தில் ஒரு குட் நியூஸை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், நேரம் வரும்போது அதனை அறிவிப்பதாகவும் தெரிவித்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் சிலர், அவருக்கு திருமணமாகப் போவதாக கமெண்ட் செய்து வந்தனர்.

                                    நேகா மேனனின் சமூக வலைதள பதிவு

                                    இந்நிலையில் அந்த குட் நியூஸ் என்னவென்று நேகா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “என் அம்மா கடந்த 8 மாதங்களாக கர்ப்பமாக இருந்தார்.

                                    தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. எனது தாய்க்கும், தங்கைக்கும் உங்களின் ஆசியை வழங்குங்கள். தற்போதைக்கு இவர்கள் தான் என்னுடைய உலகம்.

                                    இதை பார்த்தபின் வரும் மோசமான கமெண்டுகளை எல்லாம் நான் கண்டுகொள்ள மாட்டேன். அவ்வாறு செய்து உங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். தற்போது அக்கா என்பதை விட தாயாக உணர்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.