Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
கதறி அழுத யாஷிகா
கதறி அழுத யாஷிகா
நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
கதறி அழுத யாஷிகா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
யாஷிகா ஆனந்த்,
2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில்
வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
யாஷிகா ஆனந்த்
அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டார். படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர்
பல மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சமூக வலைதளங்களிலும் யாஷிகா ஆனந்த் சுறுசுறுப்பாக இருப்பவர். ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி பல ஏடாகூடமான கேள்விக்கு பதிலளித்தும் உள்ளார்.
அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் யாஷிகா தற்போது கதறி அழும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரின்
நண்பர்களும் அழுவதால் ரசிகர்கள் யாஷிகாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு
நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு
ரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்படுதல் என்ற பிரிவில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு
நடிகர் சூரியா
நடிகர் சூரியாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாய மக்களை அவமதிக்கும் நோக்கத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு
உள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து குறிப்பிட்ட அந்த காட்சி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இது தொடர்பாக இயக்குநர் ஞானவேல் மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்த நிலையில் ஜெய்பீம் திரைப்படம் ஒரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் உள்ளதாக கூறி நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீருத்ர வன்னியர் சேவா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர் அளித்த புகார் மனு மீது வேளச்சேரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முன்னதாக பிரிவினையை ஏற்படுத்தி, ஜாதி, மத கலவரங்களை துாண்டும் வகையில், ஜெய்பீம் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் இதனால், நடிகர் சூர்யா,
இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ருத்ர வன்னியர் சேனா தலைவர் சந்தோஷ், சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்தில்,மனு தாக்கல் செய்திருந்தார்.
அதன் அடிப்படையில் சூர்யா, ஞானவேல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து அதன் விபரத்தை,
வரும் 20ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தி ஒழிக என சொல்வது என் வேலையில்லை – கமல்ஹாசன்
இந்தி ஒழிக என சொல்வது என் வேலையில்லை – கமல்ஹாசன்
இந்தி ஒழிக என சொல்வது என் வேலையில்லை ஆனால் தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை என்று விக்ரம் பட விழாவில் கமல்ஹாசன் தெரிவித்தார்.
‘இந்தி ஒழிக’ என சொல்வது என் வேலையில்லை – கமல்ஹாசன் பேச்சு
கமல்ஹாசன்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை
கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலான ‘பத்தல பத்தல’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘விக்ரம்’ திரைப்படத்தின் இசை மற்றும்
டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், இயக்குனர் பா.ரஞ்சித், பார்த்திபன், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கமல்ஹாசன்
இதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை, அதற்கு இடையூறாக யார் வந்தாலும் எதிர்த்து நிற்பேன் இதற்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை. தாய் மொழியை விட்டுவிடாதீங்க. இந்தி
ஒழிக என சொல்வது என் வேலையில்லை, ஆனால் தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை. இந்தியாவின் அழகு அதன் பன்முகத்தன்மை.
4 ஆண்டுகளுக்கு பிறகு என் படத்தின் விழா, அதற்கு நான் காரணமல்ல நீங்கள் தான். யாருமே இங்கு முழு நேர அரசியல்வாதிகள் அல்ல. முதன்முதலில் நான் அரசியலுக்கு வருகிறேன் என்ற பொழுது டி.ஆர். என்னை தேடி வந்து கதறி கதறி அழுதார், நீங்கள்
எப்படி இப்படி பண்ணலாம்னு கேட்டு அழுது என் சட்டை நனைந்துபோனது, என் முடிவுக்கு நான் உட்பட பலரும் வருத்தப்பட்டார்கள். அரசியல் களத்தில் புதிய
நாகரீகத்தை வளர்க்க அரசியல் வந்துள்ளேன். இப்ப வரவில்லை என்றால் எப்போது? என் தமிழ் உச்சரிப்புக்கு காரணம் மூவர் சிவாஜி, கலைஞர், கண்ணதாசன். தாத்தாவுடன்
தொடங்கிய பயணம் தற்போது பேரன் உதயநிதி வரை தொடர்கிறது. இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறார்களா என்று கேட்டனர். தமிழக முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்டு நண்பர். அது எப்படி என்று கேட்கலாம். ஏன் ரஜினிகாந்தும் நானும்
போட்டியாளர்களாக இருந்துகொண்டு நண்பர்களாக இல்லையா? அதுபோலதான்” என்று அவர் கூறினார்.
லிப் கிஸ் அடித்த சன்னி லியோன்
லிப் கிஸ் அடித்த சன்னி லியோன்
பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், அவருடைய பிறந்தநாள் நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
லிப் கிஸ் அடித்த சன்னி லியோன்.. வைரலாகும் புகைப்படம்
சன்னி லியோன், Sunny Leone
ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது
தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பேய்ப்படம் ஒன்றில் காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக
வைத்துள்ளார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற சன்னி லியோன் பிகினி உடையில் கவர்ச்சியாக எடுத்துகொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இருந்தார்.
சன்னி லியோன்
இந்நிலையில், சன்னி லியோன் பிறந்தநாளில் அவருக்கு நெருக்கமானவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
அதில் அவருடைய கணவர் டேனியலுடன் லிக் கிஸ் அடித்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
மர்மமாக இறந்த நடிகை
மர்மமாக இறந்த நடிகை
பிரேத பரிசோதனையில் சகானாவின் உடலில் சிறு காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை டாக்டர்கள் போலீசாரிடம் அளித்துள்ளனர்.
மர்மமாக இறந்த நடிகையின் படுக்கை அறையில் சிக்கிய போதை பொருட்கள்- கணவர் கைது
சகானா
கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் சகானா (வயது 20). மாடல் அழகி. சகானா மாடலிங்கோடு மலையாள படங்களிலும் நடித்து வந்தார். கடந்த ஆண்டு இவர் சஜாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முதலில் இவர்களின்
திருமணத்தை ஏற்க மறுத்த சகானாவின் குடும்பத்தினர், பின்னர் அதனை ஏற்று கொண்டனர். அதன்பின்பு அவர்கள் அடிக்கடி சகானா வீட்டுக்கு சென்று வந்தனர்.
சகானா நடிக்க வந்த பின்பு கோழிக்கோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவருடன் தங்கி இருந்தார். நேற்று காலை இவர்களின் வீட்டில் இருந்து அழுகுரல்
கேட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றனர். அப்போது சகானா, அவரது கணவரின் மடியில் பிணமாக கிடந்தார்.
அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சகானாவின் உறவினர்களும் தகவல் அறிந்து அங்கு சென்றனர். அவர்கள் சகானாவின்
சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது கணவர் தான் சகானாவை கொலை செய்திருக்க வேண்டும் எனவும் குற்றம்சாட்டினர்.
இதற்கிடையே அங்கு வந்த போலீசார் சகானாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சகானாவின் படுக்கை அறையையும் சோதனை செய்தனர். அங்கு கஞ்சா மற்றும் சில போதை பொருட்கள் இருந்தன. அதனை கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் சகானாவும், அவரது கணவரும் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். மேலும் அவர்களை வீட்டை காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் ஏற்கனவே கூறியிருந்ததாகவும் கூறினர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனையில் சகானாவின் உடலில் சிறு காயங்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கையை டாக்டர்கள் போலீசாரிடம் அளித்துள்ளனர்.
அதனை போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். முதற்கட்டமாக அவர்கள் சகானாவின் கணவர் சஜாத்தை கைது செய்தனர். நேற்று அவரிடம்
விசாரணை நடத்திய போலீசார் இன்று பிற்பகல் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
அப்போது சகானாவின் சாவு குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது
நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா
நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களைப் பரிசோதித்து பார்த்துக் கொள்ளுமாறு நடிகர் அக்சய்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா- கேன்ஸ் திரைப்பட விழாவை புறக்கணிப்பதாக தகவல்
நடிகர் அக்சய் குமார்
அடுத்த வார தொடக்கத்தில் நடைபெற உள்ள கேன்ஸ் 2022 திரைப்பட திருவிழாவில், ஏஆர் ரஹ்மான், ஆர் மாதவன், நவாசுதீன் சித்திக், நயன்தாரா, தமன்னா, சேகர் கபூர்
உள்பட பலருடன் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் இணைந்து பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அக்சய்குமார் கொரோனா பரிசோதனை செய்திருந்தார். இதன் முடிவில் பாசிட்டிவ் என தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதை தவிர்க்க உள்ளதாக தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.
நேற்று காலையில், நான் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.
அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். நான் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன்,
என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களைப் பரிசோதித்து பார்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மிக விரைவில் மீண்டும் வழக்கமான பணிக்கு திரும்புவேன். உங்கள் அன்பான வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி. இவ்வாறு அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மருத்துவர்களின் பரிந்துரையின் கீழ், நடிகர் அக்சய்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா பரிசோதனை செய்தபோது அக்சய்குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது முறையாக அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அக்சய்குமார் நடிப்பில் உருவாகி உள்ள பிருத்விராஜ் திரைப்படம் ஜூன் 3 ந் தேதி இந்தி,
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகையை மோசமாக நடத்திய இயக்குனர்
நடிகையை மோசமாக நடத்திய இயக்குனர்
தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ஒன்றில நடித்து பிரபலமான நடிகையை இயக்குனர் ஒருவர் மோசமாக நடத்தியது குறித்து கூறியுள்ளார்.
நடிகையை மோசமாக நடத்திய இயக்குனர்
நிக்கி டம்போலி
நடிகை நிக்கி டம்போலி தமிழில் காஞ்சனா 3ம் பாகத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் வெளியான இருட்டறையில் முரட்டு குத்து படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து அங்கும் பெரிய
அளவில் ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்திருக்கிறார். தற்போது மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்திருக்கும் நிக்கி டம்போலி சமீபத்தில் கொடுத்த பேட்டியில் அவருக்கு நடந்த சம்பவத்தி குறித்து பேசியிருக்கிறார்.
நிக்கி டம்போலி
அவர் கூறியிருப்பதாவது, தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த ஒரு இயக்குனர் என்னை மோசமாக நடத்தினார். உடல் ரீதியாக இல்லாமல் வெளிநாட்டில் நான் நடனம்
ஆடச்சென்றபோது என்னை அவமதித்து மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதால் நான் அழுதே விட்டேன். அவர் யார் என்பதை சொல்ல மாட்டேன். இப்போதும் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதைப் பார்த்து ரசிகர்கள் யார் அந்த இயக்குனர் என்று ஒவ்வொரு பெயராக இணையத்தில் கேட்டு வருகிறார்கள்.
என்னை சீரழித்து மகளை நடிகையாக்கினார்” – பிரபல நடிகை பரபரப்பு புகார்
என்னை சீரழித்து மகளை நடிகையாக்கினார்” – பிரபல நடிகை பரபரப்பு புகார்
நடிகர் சத்ருகன் சின்கா என்னுடைய கன்னித் தன்மையை விற்றுதான் தனது மக்களை நடிகையாக மாற்றினார் என்று கவர்ச்சி நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
“என் கன்னித்தன்மையை சீரழித்து மகளை நடிகையாக்கினார்” – பிரபல கவர்ச்சி நடிகை பரபரப்பு புகார்
பூஜா மிஸ்ரா
சத்ருகன் சின்காவின் மகள் நடிகை சோனாக்ஷி சின்கா. ஆடை வடிவமைப்பாளராக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியவர். இதையடுத்து, கடந்த 2010ஆம் ஆண்டு தபாங் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அனனிவரின் பாராட்டுக்களையும் பெற்றார். இதையடுத்து, இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது. சோனாக்ஷி சின்கா, தமிழில் 2014ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா படத்தில் நடித்து உள்ளார்.
இந்த நிலையில், சோனாக்ஷி தந்தை குறித்து நடிகை பூஜா மிஸ்ரா வைத்துள்ள குற்றச்சாட்டில் பாலிவுட்டில் கடும் அதிர்வலையை கிளப்பியுள்ளது. பாலிவுட் நடிகை பூஜா மிஸ்ரா. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் மற்றும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்கா மீதும் அவரது மனைவி மீதும் கடுமையான குற்றச்சாட்டை வைத்து உள்ளார்.
பூஜா மிஸ்ரா
பூஜா மிஸ்ரா கூறி இருப்பதாவது:-
என் தந்தையும் சத்ருகன் சின்காவும் நல்ல நண்பர்களாக இருந்தபோது, சத்ருகன் மனைவி என் தந்தையை மூளைச்சலவை செய்துள்ளார். பாலிவுட்டில், விபசாரம் செய்தால் தான் பிழைக்க முடியும் என்று கூறி, என்னை சினிமா துறையில் நுழைய
விடாமல் தடுத்து விட்டார். இதனால், என் வாழ்க்கையில் 17 ஆண்டுகளை இழந்துவிட்டேன். பின் என் தந்தை 2005ஆம் ஆண்டு ஓய்வு பெற்று விட்டார். அதன்பிறகு அவர் புனேவிற்குச் சென்றுவிட்டார். ஆனால், என்னை சத்ருகன் சின்காவும் அவர்
மனைவியும் மும்பையில் தொடர்ந்து தங்கும்படி நிர்ப்பந்தம் செய்தார்கள். நடிகர் சத்ருகன் சின்கா எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார். என்னை மயக்கமடையச்
செய்து என்னை வைத்து பாலியல் தொழில் செய்து இருந்தார். இதனால் எனது கன்னிதன்மையை விற்பனை செய்து பேஷன் டிசைனராக இருந்த தன் மகளை நடிகையாகினார்.
தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாலிவுட்டில் வளர்ந்து வரும் என்னை குறித்து சத்ருகன் சின்காவும் அவரது மனைவி பூனம் சின்காவும் பல்வேறு பாலியல் மோசடி செய்து உள்ளனர். இதற்காக என்னை மயக்கமடைய வைத்து, எனக்கு சூனியம்
வைத்துள்ளனர். சத்ருகன் சின்காவும், அவர் மனைவியும் சேர்ந்து என்னிடமிருந்து 35 படங்களைத் திருடி உள்ளனர். மொத்தத்தில் சத்ருகன் சின்கா குடும்பம் ஒரு பேராசை
பிடித்தது. அதுமட்டும் இல்லாமால் சத்ருகன் சின்காவும், அவர் மனைவியும் எனது வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து எனது ஸ்பான்சர்களின் பட்டியலைத் திருடிவிட்டனர்.
ஒரு முறை சத்ருகன் சின்காவின் பிறந்த நாளுக்கு நான் சென்ற போது எனக்கு எதையோ கொடுத்து சாப்பிடச் செய்து பில்லிசூனியம் வைத்தனர். நான் சிங்கப்பூரில் ஷாப்பிங் முடித்து வந்தால் போதும் அவர்கள் அந்தப் பொருட்களைத் திருடிவிடுவர்கள்.
சத்ருகன் சின்காவால் தான் நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. நான் பாலிவுட்டில் வெற்றிபெற முடியாமல் போனதற்கு காரணம் சத்ருகன் சின்காவைத் தவிர வேறு
யாரும் கிடையாது. இதனால் நான் என் வாழ்க்கையில் 17 ஆண்டுகளை இழந்துவிட்டேன் என்று கூறி உள்ளார்.
பூஜா மிஸ்ரா புகாரால் பாலிவுட் சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதற்கு சத்ருகன் மற்றும் சோனாக்ஷி சின்கா தரப்பிலிருந்து இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை.
ரஜினியுடன் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் விளக்கம்
ரஜினியுடன் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் விளக்கம்
டான் படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து ரஜினியுடன் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினியுடன் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் விளக்கம்
சிவகார்த்திகேயன் – ரஜினி
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து புதிய படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க இருப்பதாக
இணையதளங்களில் தகவல் பரவி வந்தது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, “நெல்சன் இயக்கும் படத்தில் ரஜினிகாந்துடன் நான் இணைந்து நடிக்கப் போவதாகவும், அந்த படத்துக்கு பாடல் எழுதுவதாகவும் தகவல் பரவி உள்ளது.
அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. என்னை அழைக்கவும் இல்லை. அந்த படம் இப்போது ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது.
சிவகார்த்திகேயன் – ரஜினி
எனக்கு பொழுதுபோக்கு கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவே ஆசை. சமூக விஷயங்களை பேசும் அழுத்தமான கதைகள் வந்தாலும் நடிப்பேன். கனா, வேலைக்காரன், ஹீரோ படங்களில் சமூக விஷயங்கள் இருந்தன. நான் நடித்துள்ள
டான் படம் கல்லூரி மாணவர்களின் பிரச்சினைகளை பேசும் படமாக இருக்கும். சினிமா இப்போது ஆரோக்கியமாக உள்ளது. ஓ.டி.டி.யிலும் படம் பார்க்கிறார்கள். தியேட்டர்களுக்கு வந்தும் பார்க்கிறார்கள். எனது படங்கள் பல கோடிகள் வசூலிக்கிறது
என்பதற்காக சம்பளத்தை உயர்த்தவில்லை. நியாயமான சம்பளம் வாங்குகிறேன்.
எனக்கு பிடித்த கதையில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துகிறேன்” என்றார்.
இப்போதேனும் தமிழனின் வீரத்திற்குத் தலைவணங்கு.. வைரமுத்து பதிவு
இப்போதேனும் தமிழனின் வீரத்திற்குத் தலைவணங்கு.. வைரமுத்து பதிவு
ராஜபக்சே தப்பி ஓட்டம் சர்வதேச சமூகமே தமிழனின் வீரத்திற்கு தலைவணங்கு என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
இப்போதேனும் தமிழனின் வீரத்திற்குத் தலைவணங்கு.. வைரமுத்து பதிவு
வைரமுத்து
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரண மாக மக்கள் புரட்சி
வெடித்துள்ளது. சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றாக சேர்ந்து இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். ராஜபக்சே குடும்பத்தினர் அரசு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற குரல் இலங்கை தீவு முழுக்க எதிரொலிக்கிறது.
இதனால் ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மேலும் அவரது வீடு போராட்டக்காரர்களால் தீவைத்து கொளுத்தப்பட்டதால் வீட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறி திரிகோண மலையில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதே மே மாதம் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் லட்சக்கணக்கான தமிழர்களும் கொல்லப்பட்டனர். இதன் பலனைத்தான் ராஜபக்சே
தற்போது அனுபவித்து வருகிறார் என்ற பேச்சு, உலகம் முழுவதும் எழுந்திருக்கிறது. இந்த நிகழ்வு குறித்து வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
வைரமுத்து
நான்கு பக்கம் மரணம் சூழ்ந்தபோதும் தாயகம் பிரியேன் தாய் மண்ணில் மரிப்பேன் என்ற பிரபாகரன் தமிழனின் பேராண்மை எங்கே.. ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்சே எங்கே… ஓ சர்வதேச சமூகமே இப்போதேனும்
தமிழனின் வீரத்திற்குத் தலைவணங்கு.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து உணர்ச்சிப் பொங்க தன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
41 வயதில் கர்ப்பமான நமீதா
41 வயதில் கர்ப்பமான நமீதா
பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது என நமீதா கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.
41 வயதில் கர்ப்பமான நமீதா.. வைரலாகும் புகைப்படம்
நமீதா
2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ்
ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.
விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக, நமீதா குறிப்பிட்டு இருந்தார்.
பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை மணந்து கொண்டார்.
2017-ம் ஆண்டு நமீதா-வீரேந்திர சவுத்ரி திருமணம் நடந்தது. இந்நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது பிறந்தநாளில் அறிவித்திருக்கிறார் நமீதா. ”தாய்மை… புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், மிகவும்
மென்மையாக என்னுள் ஏதோ மாறியது. பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது. நான் விரும்பியதெல்லாம் நீ தான், உனக்காக இவ்வளவு நாள் வேண்டினேன். உன்
மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகள், அனைத்தையும் என்னால் உணர முடிகிறது. நான் இதுவரை இல்லாத ஒன்றாக என்னை நீ உருவாக்குகிறாய்” என்று
குறிப்பிட்டு அந்த மகிழ்ச்சியான செய்தியை நமீதா அறிவித்திருக்கிறார்.
இது பற்றி அறிந்ததும் நமிதாவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வசூலை குவிக்கும் நயன்தாரா திரைப்படம்
வசூலை குவிக்கும் நயன்தாரா திரைப்படம்
நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வசூல் ரூ.50 கோடிக்கு மேல் தாண்டியுள்ளது.
வசூலை குவிக்கும் நயன்தாரா திரைப்படம்
நயன்தாரா
சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் முதலில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் இப்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப்
பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என்று மூன்று பெரிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக விக்னேஷ் சிவன் அறிவித்திருக்கிறார்.
காத்து வாக்குல ரெண்டு காதல் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது படம். அவரது திட்டமே திருமணத்திற்கு முன்பே பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதுதான்.
விஜய் சேதுபதியை இயக்கி விட்டார். அடுத்து அஜித் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார்.
ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஆலியா பட்
ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஆலியா பட்
நடிகை ஆலியா பட் பணத்திற்காக எதையும் செய்யத் துணியக்கூடாது என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஆலியா பட்
ஆலியா பட்
நடிகை ஆலியா பட் சமீபத்தில் வெளியான கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளை பெற்று வந்தார். ஆர்.ஆர்.ஆர். படத்திலும் அவருக்கு சீதா
வேடம் கொடுக்கப்பட்டதால் ரசிகர்களிடம் நல்ல மதிப்பை பெற்றிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடித்திருந்தார்.
அதில் சர்க்கரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று குறிப்பிட்டுள்ளார். இதை எதிர்த்து ரசிகர்கள் சில வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். இந்த
வீடியோவில் ஆலியாபட் நடித்த கலங்க் என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சியில் ஆலியாபட் நான் சர்க்கரை சாப்பிடுவதில்லை. அது ஆரோக்கியமற்றது என்று
குறிப்பிட்டிருக்கிறார். இதைப் பகிர்ந்து வரும் ரசிகர்கள்
பணத்திற்காக எதையும் செய்யத் துணியக்கூடாது என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்
சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்
மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சாய்பல்லவி எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்
சாய்பல்லவி
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய
அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்திலேயே ‘களி’ என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகைகளில்
ஒருவரானார். பின்னர் ‘பிடா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்குச்
சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
தற்போது சாய்பல்லவி படங்களில் நடிப்பதைக் குறைத்து கொண்டு வருகிறார் என்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஷியாம் சிங்காராய் படம்
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவருக்கு நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தும் எந்த படத்திலும் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை.
அவரது கடைசி படமாக ராணா டகுபதியுடன் விராட பர்வம் என்ற படத்தில் நடித்திருந்தார். இதன் வெளியீடு தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.
சமீபத்தில் தயாரிப்பாளர்கள் ஜூலை 1-ம் தேதி இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஆனாலும் இதன் பிறகு வேரு எந்த படங்களிலும் சாய் பல்லவி
நடிக்க சம்மதிக்காதது ரசிகர்களுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாய்
பல்லவிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறதோ என்பதுதான் அந்த சந்தேகம்.
இது பற்றி இணையத்தில் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
அம்மா அவதாரம் எடுத்த நயன்தாரா
அம்மா அவதாரம் எடுத்த நயன்தாரா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா அடுத்ததாக அம்மா அவதாரம் எடுத்துள்ளார்.
அம்மா அவதாரம் எடுத்த நயன்தாரா..
நயன்தாரா
நயன்தாரா நடித்து முடித்திருக்கும் படம் ‘ஓ-2’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. விக்னேஷ் என்பவர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட
இருக்கிறார்கள். சமீபத்தில் கொரோனாவால் ஆக்சிஜன் என்பது எவ்வளவு அவசியம்
என்பதை அனைவரும் தெரிந்து கொண்டோம். அதை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் விக்னேஷ்.
விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சினைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்சிஜன்
சிலிண்டரை பேருந்தில் சக பயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் “ஓ-2”. தமிழ்நாடு,
கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.”
இந்த படத்தில் அம்மா பார்வதியாக நயன்தாரா நடிக்கிறாராம்.
கவர்ச்சி உடையில் சமந்தா
கவர்ச்சி உடையில் சமந்தா
சமந்தா எல்லைமீறும் கவர்ச்சியில், அட்டை படத்திற்கு போஸ் கொடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
புதிய கவர்ச்சி உடையில் சமந்தா… வைரலாகும் புகைப்படம்
சமந்தா
விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா தன் விடா முயற்சியில் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். திருமணத்துக்கு பிறகும் அரைகுறை உடையில் நடித்து பரபரப்பு
ஏற்படுத்திய நிலையில், மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு கணவர் நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்து விட்டார். சமீபத்தில் திரைக்கு வந்த புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடிய குத்தாட்டத்துக்கும் கண்டனங்கள் எழுந்தன.
பாடல் வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்துவரும் சமந்தா தற்போது கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். சமந்தா சமூகத்தளங்களிலும் தன்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகின்றார். சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம், வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.
தற்போது கைவசம் பல படங்கள் வைத்திருக்கும் சமந்தா பாலிவுட் பக்கம் பிசியாக உள்ளார். அதுமட்மின்றி, ஹாலிவுட் திரையுலகிலும் கால்பதித்துவிட்டார். இதனை
தொடர்ந்து சமந்தா சோலோ ஹீரோயினாக கலக்கியுள்ள யசோதா திரைப்படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இணையத்தில், அவ்வப்போது வலம் வரும் ரசிகர்களை
குஷியாக்க இவர் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.
தற்போது, சமந்தா எல்லைமீறும் கவர்ச்சியில், அட்டை படத்திற்கு போஸ் கொடுத்து அதன்
புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு
விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், இவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது
, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
சமீபத்தில் நயன்தாரா, சமந்தாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில்
ஓடிக்கொண்டிருக்கிறது. நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
இந்நிலையில், இவர்கள் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற இருக்கிறது.
விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இன்று திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துள்ளார்கள்.
கவர்ச்சி உடையில் விஜய் பட நடிகை
கவர்ச்சி உடையில் விஜய் பட நடிகை
தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கவர்ச்சி உடையில் விஜய் பட நடிகை.. வைரலாகும் புகைப்படம்
மாளவிகா மோகனன்
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார்.
மாளவிகா மோகனன்
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடைசியாக இவர்
தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான ‘மாறன்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது
புதிய கவர்ச்சி புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். வெள்ளை நிற உடையில் இவர்
கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை மர்ம மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல நடிகை மர்ம மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல நடிகை மரணம் அடைந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல நடிகை மர்ம மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
கைலியா போஸி
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடர் “டாட்லர்ஸ் & டியரஸ்”. சிறு குழந்தைகள் பங்குபெற்று போட்டியிட்டுக் கொள்ளும் இந்த தொடரில் இறுதியாக
நடுவர்கள் மூலம் ஒரு வெற்றியாளர் தேர்ந்து எடுக்கப்படுவர். இது 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக பங்குபெற்று உலகம் முழுவதும் தனது ஜிஐஎப்(GIF) புகைப்படத்தால் புகழ் பெற்றவர் நடிகை கைலியா போஸி. தற்போது
16 வயதான இவர் வாஷிங்டனில் மர்மான முறையில் இறந்துள்ளார். கைலியா போஸி
தற்கொலை செய்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இவரது மரணத்திற்கான அதிகாரபூர்வ காரணம் வெளியாகவில்லை.
இந்த செய்தியை அவரது தாயார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர், “என்னிடம் வார்த்தைகளோ எண்ணங்களோ இல்லை.
ஒரு அழகான பெண் குழந்தை இறந்துவிட்டது. கைலியாவை இழந்து தவிக்கும் எங்களுக்கு தனியுரிமை கொடுங்கள்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். உலகம்
முழுவதும் உள்ள கைலியா போஸி ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் கைலியா போஸிக்கு அவரது ரசிகர்கள்
தங்கள் இரங்கலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
முத்தமிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பார்த்திபன்
முத்தமிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பார்த்திபன்
இரவின் நிழல் பட விழாவில் பார்த்திபன், மைக் வேலை செய்யாத்தால் அதனை தூக்கி எறிந்த சர்ச்சைக்கு முத்தமிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
முத்தமிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பார்த்திபன்
பார்த்திபன்
இரவின் நிழல் பட விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முன்னிலையில் நடிகர் பார்த்திபன் வேலை செய்யாத மைக்கை தூக்கி முன்வரிசையில் கோபத்தோடு
எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சமூக வலைத்தளங்களிலும் விமர்சனங்களை கிளப்பின. இதற்கு பார்த்திபன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில்
அவர் கூறும்போது, “மைக்கை தூக்கி எறிந்தார் பார்த்திபன். இவ்வளவு அகங்காரம் தேவையா என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் பேசப்படுகிறது. தூக்கிப்போட்டது
மைக், ஆனால் உடைந்தது என்னவோ எனது மனது. வைரல் ஆக வேண்டும் என்பதற்காக எல்லாம் இல்லை.
பார்த்திபன் பதிவு
கடந்த சில நாட்களாக சரியான உறக்கம் இல்லை. ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைப்பது பெரிய விஷயமாக இருந்தது. பெரிய பொருட்செலவில் விழா
நடத்தினேன். ஏ.ஆர்.ரகுமானுக்கு அளித்த கேடயம் கீழே விழக்கூடாது என்ற பதற்றம். இப்படி நிறைய விஷயங்கள் எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தின. பயம், படபடப்பு
எல்லாம் சேர்ந்து உள்ளே பேய் புகுந்த மாதிரி ஆனது. வைரலாக்கும் நோக்கோடு இது நடக்கவில்லை. மேடைக்கு நாகரிகங்கள் இருக்கின்றன. ஏ.ஆர்.ரகுமானிடம் மன்னிப்பு
கேட்டு குரல் பதிவு அனுப்பினேன்.
ரோபோ சங்கரிடமும் மன்னிப்பு கேட்டேன்” என்றார்.






