Posted in உலக செய்திகள்

அனைத்து மக்களையும் தனிமைப்படுத்த அர்ஜென்டினா உத்தரவு

அனைத்து மக்களையும் தனிமைப்படுத்த அர்ஜென்டினா உத்தரவு

அர்ஜென்டினாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வரும் 31-ம் தேதி வரை மக்கள் அனைவரும் கட்டாயம்

தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மார்ச் 31 வரை வெளியே வரவேண்டாம்- அனைத்து மக்களையும் தனிமைப்படுத்த அர்ஜென்டினா உத்தரவு
அர்ஜென்டினா அதிபர் பெர்னாண்டஸ்


பியூனஸ் அயர்ஸ்:

உலகை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், 9800க்கும் மேற்பட்ட மனித உயிர்களை காவு வாங்கி உள்ளது.

தொடர்ந்து அதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால், வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்படுகின்றன.

கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் இல்லாததால், மக்களை தனிமைப்படுத்தி வைப்பது மட்டும்தான் இப்போதைக்கு

சிறந்த நிவாரணம். எனவே, லேசான வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகள் தவிர எந்த காரணத்திற்காகவும் வீடுகளை

விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது கொரோனா பரவாமல் தடுக்கும் சோதனை முயற்சியாகும்.

வைரஸ் பரவாமல் தடுக்க கிருமி நாசினி தெளிக்கும் ஊழியர்கள்

இந்நிலையில், கொரோனா பரவி உள்ள அர்ஜென்டினா நாட்டில் அனைத்து மக்களும் வரும் 31-ம் தேதி வரை தங்களை

தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

‘நள்ளிரவு முதல் மக்கள் அனைவரும் தடுப்பு மற்றும் சமூக தனிமையில் இருக்க வேண்டும். யாரும் வீட்டை விட்டு வெளியேற

வேண்டாம். இந்த நடவடிக்கை மார்ச் 31 வரை இருக்கும்’ என அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் அறிவித்துள்ளார்.

‘இந்த நடைமுறையை பாதுகாப்புத் துறையினர் கண்காணித்து உறுதி செய்வார்கள். உண்வு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய

பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் மக்கள் வெளியே செல்லலாம். ஆனால், யாராக இருந்தாலும் வீட்டை விட்டு வெளியேறினால்

அதற்கான காரணத்தை பாதுகாப்பு படையினரிடம் தெரிவிக்க வேண்டும்’ என அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜென்டினாவில் இதுவரை 128 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா

தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மற்ற நாட்டு மக்கள் நுழையாதபடி 15 நாட்களுக்கு எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மக்களையும்
அனைத்து மக்களையும்
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

பிரான்சில் ஒரேநாளில் 108 பேர் பலி

பிரான்சில் ஒரேநாளில் 108 பேர் பலி

இவர்களில் 10 ஆயிரத்து 47 பேர் உயிரிழந்துள்ளனர். 88 ஆயிரத்து

441 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும்

, 1 லட்சத்து 47 ஆயிரத்து 400 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஐரோப்பியா நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ்

தாக்குதலுக்கு இதுவரை 3 ஆயிரத்து 405 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்தப்படியாக பிரான்ஸ் நாட்டில்

கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 108

பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் உயிரிழந்தோர்

எண்ணிக்கை 372 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 10 ஆயிரத்து 995 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது..

பிரான்சில் ஒரேநாளில்
பிரான்சில் ஒரேநாளில்
Posted in உலக செய்திகள்

உலக பங்கு சந்தையில் பெரும் வீழ்ச்சி – பலகோடி நஷ்டம்

உலக பங்கு சந்தையில் பெரும் வீழ்ச்சி – பலகோடி நஷ்டம்

உலகம் தழுவிய நிலையில் பரவியுள்ள கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக உலக பங்கு சந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .

இந்த வீழ்ச்சியானது 2008 ஆம் ஆண்டின் பின் இடம்பெற்றுள்ளது என உலக பங்குசந்தை நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்

சுமார் 97 நாடுகளில் இந்த நோயானது பரவிய நிலையில் இந்த் பாரியாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது

இது போலவே இம்மாதம் பாரிய வீழ்ச்சியில் தங்கமும் செல்லும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்

உலக பங்கு சந்தையில் பெரும்
Posted in உலக செய்திகள்

கிளர்ச்சி படைகள் இரகசிய நீல கீழ் சுரங்கம் கண்டு பிடிப்பு

கிளர்ச்சி படைகள் இரகசிய நீல கீழ் சுரங்கம் கண்டு பிடிப்பு

சிரியாவில் அரச இராணுவத்திற்கு எதிராக போராடி வந்த துருக்கிய ஆதரவு குருதீஸ் போராளிகள் பயன் படுத்தி வந்த நில கீழ் சுரங்க பதுங்கு குழி ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது

இது சுமார் நானூறு மீட்டர் நீளமான பதுங்கு குழி எனவும் இதற்குள் வெடி மருந்துகள் ,மருத்துவ பொருட்கள் என்பன இருந்துள்ளது

கண்டு பிடிக்க பட்டுள்ளது என சிரியா அரச இராணுவம் தெரிவித்துளளது

தாம் மீட்ட பகுதிகளை சுற்று காவல் தேடுதலுக்கு உள்ளாக்கிய பொழுதே மேற்படி பதுங்கு குழி கண்டு பிடிக்க பட்டுள்ளதாக குறித்த அரச இராணுவம் அறிவித்துள்ளது

சமாதான உடன் படிக்கை முன்னெடுக்க பட்டுள்ள பொழுதும் அமெரிக்கா இராணுவத்துடன் இவர்கள் சில பகுதிக்குள் நுழைய முயன்றதாக சிரியா அரசு இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது

கிளர்ச்சி படைகள்
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் பிள்ளையை பெற்று பற்றைக்குள் எறிந்த பெண் சிக்கினார்

பிரிட்டனில் பிள்ளையை பெற்று பற்றைக்குள் எறிந்த பெண் சிக்கினார்

பிரிட்டனில் பிள்ளையை பெற்று பற்றைக்குள் எறிந்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற பெண்ணை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர் .

கைதான பெண் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்ட பின்னர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளார்

36 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்ய பட்டுள்ளார் .இந்த சிசுவை கொலை செய்தமைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

பிரிட்டனில் பிள்ளையை
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

இத்தாலியில் கொரனோ தாக்குதல் 366 பேர் பலி -7,313 பேர் பாதிப்பு

இத்தாலியில் கொரனோ தாக்குதல் 366 பேர் பலி -7,313 பேர் பாதிப்பு

வடக்கு இத்தாலியில் மையம் கொண்டு கோரமாக மக்களை தாக்கி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் சிக்கி இதுவரை 366 பேர் பலியாகியுள்ளனர் மேலும் சுமார் 7,313 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

14 மாநிலங்களில் வசிக்கும் சுமார் 16 ம்,மில்லியன் மக்கள் லக் டவுன் செய்ய பட்டுள்ளனர் .

அதாவது வெளியில் நடமாட முடியாத படி வீட்டுக்குள் சிறை வைக்க பட்டுள்ளனர் .

வீதியில் யாரவது உலாவினால் அவர்கள் கைது செய்ய படுகின்றனர் ,இராணுவம் வீதிகளில் காவலுக்கு நிறுத்த பட்டுள்ளது

சீனாவை அடுத்து இத்தாலியே தற்பொழுது அதிகம் இந்த நோயால் இரண்டாவதாக பாதிக்க பட்டுள்ளது


குறிப்பிட தக்கது .உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

இத்தாலியில் கொரனோ
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் மூவர் பலி

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் மூவர் பலி

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி தற்பொழுது மூன்றாவது நபரும் பலியாகியுளளார் .


இவ்வாறு பலியானவர் இத்தாலிக்கு விடுமுறையில் சென்று வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

மேலும் கடந்த தினம் மொத்தமாக 273 பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளதும் 23 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த சோதனைக்கு

உள்ளாக்க பட்டுள்ளனர் என பிரிட்டன் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது


உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என ந
ம்ப படுகிறது

பிரிட்டனில் கொரனோ
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் டுவிட்டர் கணக்கு கைக்கிங் – அதிர்ச்சியில் இஸ்ரேல்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் டுவிட்டர் கணக்கு கைக்கிங் – அதிர்ச்சியில் இஸ்ரேல்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Defense Minister Naftali Bennett’s Twitterகணக்கி கைக்கிங் புரிந்த நபர்கள் அவரது கணக்கு

பக்கத்தில் பாலஸ்தீனத்தின் கொடியை பறக்க விட்டுள்ளதுடன்

துருக்கிய கவிதை வரிகளை அதில் பதிவு செய்துள்ளனர் .

இவரது இந்த கணக்கை கைக்கிங் செய்த குழுவின் செயலால்

குறித்த அமைச்சர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்

இவரது கணணிக்குள்ளும் இவர்கள் புகுந்து இருக்க கூடும் என நம்ப

படுகிறது,துருக்கிக்கு ஆதரவாக இஸ்ரேல் சிரியாவில் சமர் புரிந்து

வருகிறது

அதற்கு பதிலடியாக இந்த் தாக்குதல் இடம்பெற்று இருக்கலாம் என நம்ப படுகிறது

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்
Posted in உலக செய்திகள்

கொரனோ வைரசால் – இத்தாலிக்கான் கப்பல் சேவையை நிறுத்திய Tunisia

கொரனோ வைரசால் – இத்தாலிக்கான் கப்பல் சேவையை நிறுத்திய Tunisia

இதழியல் வேகமாக பறவை வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து துனிசியா நாடு இத்தாலி நாட்டுக்கான தமது கப்பல் போக்குவரத்தை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது

இத்தாலி சென்ற பல் நாட்டு உல்லாச பயணிகள் இந்த நோய் தாக்குதலில் சிக்கிய நிலையில் பல நாட்டு விமான நிறுவங்கள் தமது விமான பறத்தல்களை நிறுத்தின

அதுபோலவே தற்போது இந்த நாடு தனது கப்பல் போக்குவரத்தையும் இடை நிறுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

கொரனோ வைரசால்
https://www.youtube.com/watch?v=ia4XPkDKB7A
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

கொரனோ வைரஸ் தாக்குதலில் – ஈரானில் எம்பி மரணம்

கொரனோ வைரஸ் தாக்குதலில் – ஈரானில் எம்பி மரணம்

சீனாவை தாயகமாக கொண்டு பரவிய கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஈரானின் 23 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்க பட்டனர் ,

அவ்வாறு பாத்திக்க பட்டவர்களில் முதல் பெண் பாரளுமன்ற உறுப்பினரான Fatema Rahbar என்பவர் இன்று பலியாகியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது

உலகம் தழுவிய நிலையில் இறந்த முதல் பாரளுமன்ற உறுப்பினர் இவராக பதிவாகியுள்ளார் .


ஈரானில் ஆறாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளதாகவும் அதனை வெளியில் கூறாதது அந்த அரசு மறைத்து

வருவதாக எம்பிக்கள் முதல் பல அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்கள் மீது தமது கருத்துக்களை பதிவு செய்து

வருவதுடன் ,இது தொடர்பான காணொளிகளையும் வெளியிட்டு வருகின்றனர் .

ஈரானின் சில பகுதிகளில் மக்கள் இறந்து கிடக்கும் காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன

கொரனோ வைரஸ்
https://www.youtube.com/watch?v=ia4XPkDKB7A
Posted in உலக செய்திகள்

லொறிக்குள் பதுங்கி வந்த 10 அகதிகள் லண்டனில் கைது

லொறிக்குள் பதுங்கி வந்த 10 அகதிகள் லண்டனில் கைது

பேலியம் நாட்டில் இருந்து பிருட்டனுக்குள் நுழைந்த லொறி ஒன்றுக்குள் பதுங்கி வந்த சட்ட விரோத குடியேற்ற வாசிகள் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்கள் 4 பெரியவர்கள் ஏனையவர்கள் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

தற்போது லொறி சாரதி கைது செய்ய பட்டுள்ளார் .

இவர்கள் அனைவரும் லாரியின் சக்கரத்தின் அச்சில் பதுங்கியவாறு பயணித்துள்ளனர்

லொறி வேகமாக பயணிக்கும் பொழுது மிக ஆபத்தான ஒன்று பயணம் ,மிகவும் குளிர் நிலவும் இவ்வேளையில்


இவர்கள் உயிரை பணயம் வைத்து இவ்வாறு லண்டனுக்குள் புகுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

மேலும் இது தொடர்பான ஆட்கடத்தல் குற்ற சாட்டில் சோதனை நடத்திய பொழுது இருவர் ஆயுதங்களுடன் கைது செய்ய பட்டுள்ளனர்

லொறிக்குள் பதுங்கி வந்த
https://www.youtube.com/watch?v=bTQd8Pl3QYU
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் Liverpool பகுதியில் மூவர் கொரனோ வைரசால் பாதிப்பு

பிரிட்டன் Liverpool பகுதியில் மூவர் கொரனோ வைரசால் பாதிப்பு

பிரிட்டன் Alder Hey Hospital in Liverpool மருத்துவ மனையில் மூவர்

கொரனோ வைரஸ் பாதிப்பால் அடையாளம் கண்டு பிடிக்க

பட்டுள்ளனர் .


இதில் சிறுவர் ஒருவர் உள்ளடங்களாக மூவர் அடங்கு கின்றனர்

மேலும் பிரிட்டன் தழுவிய நிலையில் 116 பேர் அடையாளம் காண

பட்டுள்ளனர் ,முதன் முதலாக பிரிட்டனில் ஒருவர் பலியாகியுள்ளார்

மிக வேகமாக தற்பொழுது குறித்த நாட்டையும் கொரனோ ஆக்கிரமித்து

வருகிறது ,இதன் வேகமான பரவல் காரணமாக மக்கள் மத்தியில்

பீதி ஏற்பட்டுள்ளது

பிரிட்டன் Liverpool பகுதியில்
https://www.youtube.com/watch?v=bTQd8Pl3QYU
Posted in உலக செய்திகள்

ஈரான் இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை – நிறுத்துமா இந்தியா ..?

ஈரான் இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை – நிறுத்துமா இந்தியா ..?

இந்தியா சிறுபான்மை முஸ்லீம்கள் மீது மேற்கொண்டு வரும் தொடர் அடக்குமுறைகள் ,வன்முறைகள் ,கைதுகள் ,பழிவாங்கும்

சம்பவங்களை உடனே நிறுத்த வேண்டும் என ஈரான் இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது

இந்து மத ஆட்சியாளர்களினால் மேற்கொள்ள படும் இந்த தாக்குதல்கள் உடன் நிறுத்த பட வேண்டுமென ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது

ஈரானின் இந்த எச்சரிக்கையை செவி மடுத்து இந்தியா செல்லுமா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

ஈரான் இந்தியாவுக்கு கடும்
https://www.youtube.com/watch?v=bTQd8Pl3QYU
Posted in உலக செய்திகள்

கொரனோ தாக்குதல் ஒரேநாளில் இத்தாலியில் 148 பேர் பலி

கொரனோ தாக்குதல் ஒரேநாளில் இத்தாலியில் 148 பேர் பலி

இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி நேற்று


மட்டும் சுமார் 148 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 3500 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

குறிப்பாக மேலும் 48 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக இத்தாலிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

இத்தாலியில் உள்ள சில தேவாலயங்களில் இந்த நோய் பரவல் ஏற்பட்டுள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இதுவரை இந்த

நோய்க்கு தடுப்பு மருந்துகள் பாவனைக்கு ,பயன் பாட்டிற்கு வராத நிலையில் மக்கள் உயிரிழப்புக்கள் அதிகரித்து செல்கிறது

இதன் தாக்கம் எதிர்வரும் 20 தம் திகதி வரை இருக்கும் எனவும், அதன் பின்னர் குறைந்து விடுமென்ற கருத்து முன் வைக்க பட்டுள்ளது

அது அதிக வெப்ப நிலை மாற்றம் ஏற்படும் என்பதாக உள்ளது ,அதனால் இந்த திகதி இங்கே முன் வைக்க படுகிறது .

இத்தாலி மற்றும் ஈரானில் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை அடித்து மூட பட்டுள்ளது குறிப்பிட தக்கது

கொரனோ தாக்குதல்
https://www.youtube.com/watch?v=bTQd8Pl3QYU
Posted in உலக செய்திகள்

பறந்த மர்ம விமானத்தால் -அடித்து பூட்ட பட்ட ஜேர்மன் Frankfurt விமான தளம்

பறந்த மர்ம விமானத்தால் -அடித்து பூட்ட பட்ட ஜேர்மன் Frankfurt விமான தளம்

நேற்று முன்தினம் திகட்கிழமை காலை 11 மணியளவில் ஜேர்மன் Frankfurt விமான தளம் அவசரமாக அடித்து மூட பட்டது ,அணைத்து

விமானங்களும் தரை இறங்கவிடாது இரத்து செய்ய பட்டு வேறு விமான தளங்களுக்கு திசை திருப்பி விட பட்டன .

இந்த சம்பவம் சுமார் இரண்டு மணித்தியாலம் வரை நீடித்தது ,பின்னர் வளமை போல விமான தளம் இயங்கியது ,இதனால்

அங்கிருந்த பயணிகள் பீதியில் உறைந்தனர் ,குறித்த வான்தளம் மேலாக மர்ம உளவு விமானம் ஒன்று பறந்து சென்றதால் இந்த

விமான பறத்தல் தடை செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இது எந்த நாட்டு உளவு விமானம் என்பதை ஜேர்மன் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை

பறந்த மர்ம விமானத்தால்
Posted in உலக செய்திகள்

சிரியாவின் மூன்று விமானத்தை இரு நாட்களில் சுட்டு வீழ்த்திய துருக்கி

சிரியாவின் மூன்று விமானத்தை இரு நாட்களில் சுட்டு வீழ்த்திய துருக்கி

சிரியா அரச படைகளில் மூன்று வானூர்திகளை தாம் இரு நாட்களில் சுட்டு வீழ்த்தியுள்ளதாக துருக்கிய இராணுவம் அறிவித்துள்ளது

கடந்த ஞாயிறு இரு வானூர்த்திகளும் செய்வாய் கிழமை L-39

விமானத்தையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக துருக்கி உரிமை

கோரியுள்ளது

துருக்கியின் கணக்கு படி இதுவரை ஒன்பது சிரியா படைகளின்

விமானத்தை அது சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது

தொடர்ந்து துருக்கியின் எல்லை பகுதியாகி விளங்கும் இட்லி

பகுதியில் உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

என்பது குறிப்பிட தக்கது

சிரியாவின் மூன்று விமானத்தை
Posted in உலக செய்திகள்

80 நாடுகளில் பரவிய கொரனோ வைரஸ் 3,203, பேர் பலி

80 நாடுகளில் பரவிய கொரனோ வைரஸ் 3,203, பேர் பலி

சீனாவை தாயகமாக கொண்டு பரவிய கொரனோ வைரஸ் தற்பொழுது என்பது நாடுகளில் பரவியுள்ளது .இந்த நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளது

மேலும் 93,191, பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,அமெரிக்காவில் ஒன்பது பேர் பலியாகியும் 122 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

,அதுபோல பிரிட்டனில் இதுவரை 87 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இத்தாலியில் ஒரே நாளில் 107 பேர் பலியாகியும் கிட்ட தட்ட மூவாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,

அதுபோல ஈரானில் 67 பேர் பலியாகியுள்ளனர் ,அவ்வாறே துருக்கியில் 2,336 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் அசுர

வேகத்தில் பரவி வரும் இந்த நோய் தாக்கத்தால் மக்கள் பெரிதும் பீதியில் உறைந்துள்ளனர்

80 நாடுகளில் பரவிய கொரனோ
Posted in உலக செய்திகள்

இத்தாலியில் ஒரேநாளில் 80 பேர் பலி – மிரட்டும் கொரனோ

இத்தாலியில் ஒரேநாளில் 80 பேர் பலி – மிரட்டும் கொரனோ

இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 80 பேர் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளதாக

தெரிவிக்க பட்டுள்ளது மேலும் மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாத்திக்க பட்டுள்ளனர் .
பாடசாலைகள் ,பல்கலை கழகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்க பட்டுள்ளது

தொடர்ந்து இந்த நோய் ஐரோப்பா எங்கும் பரவும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது ,மக்க பீதியில் உறைந்துள்ளனர்

இத்தாலியில் ஒரேநாளில்
Posted in உலக செய்திகள்

தலைமறைவானதாக அறிவிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தக்கோரி இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எ

தலைமறைவானதாக அறிவிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தக்கோரி இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எ

தலைமறைவானதாக அறிவிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தக்கோரி இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுத பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தும்படி இங்கிலாந்து அரசுக்கு கடிதம் – பாகிஸ்தான் முடிவு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அல் அஜிசியா மில்ஸ் ஊழல் வழக்கில் அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், லண்டனில் சிகிச்சை பெற செல்ல வேண்டும் என்று அவர் தரப்பில் கூறப்பட்டது. அதை ஏற்று, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

மற்றொரு ஊழல் வழக்கில் அவருக்கு லாகூர் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. மருத்துவ அறிக்கை அடிப்படையில், இந்த ஜாமீனை

அவ்வப்போது நீட்டிக்க பஞ்சாப் மாகாண அரசுக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்தது.

அதையடுத்து, கடந்த நவம்பர் மாதம், நவாஸ் ஷெரீப் சிகிச்சை பெறுவதற்காக லண்டனுக்கு சென்றார். அங்கு அவர்

உறவினர்களுடன் ஒரு உணவகத்தில் சாப்பிடுவது போன்ற புகைப்படம் வெளியானது. எனவே, சமீபத்தில் பஞ்சாப் மாகாண

அரசு அவருக்கு ஜாமீனை நீட்டிக்க மறுத்து விட்டது. ஜாமீனை நீட்டிக்க சட்டரீதியான, தார்மீக, மருத்துவரீதியான எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து, நவாஸ் ஷெரீப், தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுத பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் பிர்தவுஸ் ஆ‌ஷிக் அவான், லாகூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மருத்துவ காரணங்களுக்காக, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) தலைவர் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது. ஆனால்,

அந்த ஜாமீன் நிபந்தனைகளை அவர் பின்பற்றவில்லை. அவர் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்டார்.

ஆகவே, அவரை நாடு கடத்தி பாகிஸ்தானிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து அரசுக்கு இந்த வாரம் கடிதம் எழுத கொள்கை அளவில் முடிவு செய்துள்ளோம்.

நவாஸ் ஷெரீப், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, கடந்த நவம்பர் 19-ந் தேதி லண்டனுக்கு சென்றார். ஆனால் அவர் சிகிச்சைக்காக

எந்த ஆஸ்பத்திரியிலும் இதுவரை சேரவில்லை. எனவே, அவரும், அவரது கட்சியும், ஊடகங்களும் நாடகம் ஆடி வருகின்றனர். தங்கள் பிள்ளைகள் செய்து வரும் வர்த்தகத்தை பாதுகாக்கவே, நவாஸ் ஷெரீப்பும், அவருடைய தம்பியும் லண்டனுக்கு சென்றுள்ளனர். நவாஸ் ஷெரீப் தனது உடல்நிலை குறித்து சொன்னது எல்லாம் பொய் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியோ, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கடிதம் எழுதுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பஞ்சாப் மாகாண செய்தித்தொடர்பாளர் அஸ்மா பொகாரி கூறுகையில், ‘‘நவாஸ் ஷெரீப்பை நாடு

கடத்துமாறு பாகிஸ்தான் அரசு இங்கிலாந்துக்கு கடிதம் எழுதினால், இம்ரான் கானுக்கு சட்டவிரோதமாக பிறந்த குழந்தை தொடர்பான

வழக்கை மீண்டும் தோண்டி எடுக்குமாறு அமெரிக்க அரசுக்கு நாங்கள் கடிதம் எழுதுவோம்.

நவாஸ் ஷெரீப், கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளார். இதயகோளாறால் அவதிப்பட்டு வருகிறார். விரைவில் அவருக்கு

இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலையை வைத்து விளையாடாமல், இம்ரான் கான் அரசு, தேச பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்‘‘ என்றார்.

ஜாமீனை நீட்டிக்க முடியாது என்ற பாகிஸ்தான் அரசின் முடிவை எதிர்த்து கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் வழக்கு தொடருவார் என்று அவரது கட்சியின் மற்றொரு நிர்வாகி கூறினார்.

தலைமறைவானதாக அறிவிக்கப்பட்ட
Posted in உலக செய்திகள்

புதிய வகை காய்ச்சலுக்கு சிக்கி 100 பேர் பலி

புதிய வகை காய்ச்சலுக்கு சிக்கி 100 பேர் பலி

நைஜீரியாவில் 2 மாதத்தில் 100-க்கும் மேற்பட்டோர் லாசா காய்ச்சல் தாக்கி பலியாகி உள்ளனர் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் முகமது அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் 2 மாதத்தில் ‘‘லாசா’’ காய்ச்சலுக்கு 100 பேர் பலி
லாசா காய்ச்சல் பரிசோதனை

உலகில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நைஜீரியாவை ‘லாசா’ காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. லாசா காய்ச்சல் என்பது லாசா

வைரசால் ஏற்படும் ஒரு கடுமையான ரத்தக்கசிவு நோயாகும். கடந்த 2012-ம் ஆண்டில் இந்த காய்ச்சலுக்கு 112 பேர் பலியாகினர்.

இந்தநிலையில் அங்கு இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் லாசா காய்ச்சல் தாக்கி பலியாகி உள்ளனர் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் முகமது அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த காய்ச்சலுக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்தை அரசு தொடங்கி இருப்பதாக கூறிய அவர், எலிகள் மற்றும் பிற

உயிரினங்களிடம் இருந்து தங்கள் வீடுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொண்டார். அவற்றின்

மூலமாகவே இந்த நோய் பரவுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பிரசாரம் மூலம் நாட்டில் சுகாதாரம் மோசமாக இருக்கும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு,

நாட்டின் சுற்றுச்சூழல் சுத்தமாக இருப்பதை அமைச்சகம் உறுதி செய்யும் என்றும், இதுவே நோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி எனவும் அபுபக்கர் கூறினார்.

1969-ம் ஆண்டு நைஜீரியாவின் லாசா நகரில் இந்த வைரஸ் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டதால் அதற்கு ‘‘லாசா காய்ச்சல்’’ என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய வகை காய்ச்சலுக்கு