Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை
பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை – சிறைத்துறை தகவல்
சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை
விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம்
வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால்
அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், பெங்களுரு சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என ஆர்.டி.ஐ. மூலம் சிறைத்துறையிடம் தகவல் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள சிறைத்துறை நிர்வாகம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆகிறார் என தெரிவித்துள்ளது.
மேலும், சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை. ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும். அபராத
தொகையை கட்டத் தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் என தெரிவித்துள்ளது.
இதன்மூலம் சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
சீனாவின் 5 பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை
சீனாவின் 5 பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை
சீனாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பருத்தி, தக்காளி, கம்ப்யூட்டர் உபகரணங்கள் உள்ளிட்ட 5 பொருட்களை
அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
சீனாவின் 5 பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை
கோப்புப்படம்
வர்த்தக போர், தென் சீன கடல் விவகாரம், கொரோனா வைரஸ் தற்போது டிக் டாக் செயலி என அமெரிக்கா- சீனா இடையிலான மோதல் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.
இந்த சூழலில் சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுபான்மையினராக இருக்கும் உய்கூர் இன முஸ்லிம்கள் மீது
சீனா அரசு வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
மேலும் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுவர்கள், பெண்கள் உள்பட சிறுபான்மை மக்களை கட்டாய தொழிலாளர்களாக பயன்படுத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
எனவே ஜின்ஜியாங் பிராந்தியத்தில் கட்டாய தொழிலாளர்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பருத்தி, தக்காளி, கம்ப்யூட்டர்
உபகரணங்கள் உள்ளிட்ட 5 சீன பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்த தடையின் மூலமாக அமெரிக்க வினியோக சங்கிலிகளில் சட்ட விரோத, மனிதாபிமானமற்ற மற்றும் சுரண்டல் நடைமுறைகளை
நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்கிற செய்தியை சர்வதேச சமூகத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முக கவசம் அணியாதவர்கள் கொரோனாவால் இறந்தவர்களுக்கு கல்லறை தோண்ட வேண்டும்- புதிய சட்டம்
முக கவசம் அணியாதவர்கள் கொரோனாவால் இறந்தவர்களுக்கு கல்லறை தோண்ட வேண்டும்- புதிய சட்டம்
இந்தோனேசியாவில் முக கவசம் அணியாமல் போலீசாரிடம் சிக்கினால் அவர்கள் கொரோனாவால் இறந்தவர்களுக்கு
கல்லறைகளை தோண்ட வேண்டும் என்று நூதன தண்டனை வழங்கப்படுகிறது.
முக கவசம் அணியாதவர்கள் கொரோனாவால் இறந்தவர்களுக்கு கல்லறை தோண்ட வேண்டும் – நூதன தண்டனை அறிவிப்பு
கோப்புப்படம்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணிவது பல்வேறு நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் முக
கவசம் அணியாத நபர்களுக்கு சிறை, அபராதம் உள்ளிட்ட தண்டனைகளும் வழங்கப்பட்டு விடுகிறது.
இந்த நிலையில் இந்தோனேசியாவில் முக கவசம் அணியாமல் போலீசாரிடம் சிக்கினால் அவர்கள் கல்லறைகளை
தோண்டவேண்டும் என்று நூதன தண்டனை வழங்கப்படுகிறது. அந்த நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் தான் இந்த நூதன தண்டனை வழங்கப்படுகிறது.
அங்கு முக கவசம் இல்லாமல் பிடிபடும் நபர்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கல்லறைகளை தோண்டுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கொரோனா பாதித்து மரணமடைபவர்களை அடக்கம் செய்ய, குழிகள்
தோண்டுவதற்கு எங்களிடம் தற்போது 3 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே முக கவசம் அணியாமல் பிடிபடும் நபர்களை
அவர்களுடன் வேலை செய்ய வைக்கலாம் என்று திட்டமிட்டேன்” என்று கூறினார்.
மேலும் அவர், “கொரோனா காலத்தில் முக கவசம் மிகவும் அத்தியாவசியமானது. எனவே இந்த தண்டனையானது
விதிமீறல்களுக்கு எதிராக ஒரு தடுப்பு விளைவை உருவாக்கும் என்று நம்புகிறேன்,” என்றும் கூறினார்.
கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வையுங்கள்- நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதிய சிஷ்யன்கள்
கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வையுங்கள்- நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதிய சிஷ்யன்கள்
திருமணமாகாமல் மன உளைச்சலில் உள்ள எங்களுக்கு கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வைக்குமாறு 1990-ம் ஆண்டு
பிறந்தவர்கள் அனுப்பி உள்ள கோரிக்கை கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வையுங்கள்- நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதிய சிஷ்யன்கள்
1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் நித்யானந்தாவுக்கு எழுதிய கடிதம்
அனுப்பர்பாளையம்:
சமீப காலமாக வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் கிண்டல், கேலி சித்திரங்கள், ஜோக்குகள், மற்றும் மீம்ஸ்கள் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
வருகிறது. அந்த பதிவுகளை லட்சக்கணக்கானோர் பார்ப்பது மட்டுமின்றி, அதை உடனடியாக நண்பர்களுக்கு அனுப்பியும், வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்சாக வைப்பதால் பல லட்சம் பேர் உடனே
பார்த்து விடுகின்றனர். இதனால் உற்சாகமடையும் நெட்டிசன்கள் தங்கள் பதிவுகளை மேலும் மேலும் அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக சமூக வலைதளங்கள் இளைஞர்கள், மாணவ-
மாணவிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் மனஉளைச்சலில் உள்ள எங்களுக்கு திருமணம் செய்து வைக்க
வேண்டும் என்று நித்யானந்தாவுக்கு 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் அனுப்பி உள்ள கோரிக்கை போன்ற கடிதம் தற்போது சமூக
வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருமண வேண்டுகோள் என்று தலைப்பிட்ட அந்த கடிதத்தில், அனுப்புதல் 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள், தமிழ்நாடு என்றும், பெறுதல் சுவாமி நித்தியானந்தா, கைலாசா நாட்டு அதிபர்,
கைலாசா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் சுவாமி, 1990-ம் ஆண்டு முதல் பிறந்த நாங்கள், தற்போது பல ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகிறோம்.
எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் பிறந்தவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலில் உள்ளோம்.
தயவுசெய்து உங்கள் ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை எங்களுக்கு திருமணம் செய்து கொடுத்து, கைலாசா நாட்டில் ஒரு குடியிருப்புடன், அரசாங்க வேலை கொடுத்து, எங்கள்
மனக்கவலையை தீர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றும், இப்படிக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன்
தங்கள் சிஷ்யன்கள் 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே நித்யானந்தாவையும், தற்போது அவர் உள்ள கைலாசா என்ற இடம் மற்றும் அவருடைய பெண் சிஷ்யர்கள் பற்றியும் ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது 1990-ம் ஆண்டில் பிறந்தவர்கள் என்ற பெயரில் திருமணமாகாமல் மன
உளைச்சலில் உள்ள எங்களுக்கு கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வைக்குமாறு கோரிக்கை விடுத்து
அனுப்பப்படுவது போன்ற கடிதம் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
2600 வருடம் பழமை வாய்ந்த வைன் தொழில் சாலை கண்டுபிடிப்பு
2600 வருடம் பழமை வாய்ந்த வைன் தொழில் சாலை கண்டுபிடிப்பு
லெபனான் நாட்டில் இரண்டாயிரத்து அறுநூறு வருடம் பழமை
வாய்ந்த வைன் தொழில் சாலை ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது
புராதான ஆய்வாரட்சியாளர்கள் நாடத்திய தேடுதல் சோதனையின்
பொழுது இந்த அழகிய பொக்கிஷம் கண்டு பிடிக்க பட்டுள்ளது
உலகில் இவ்வாறு கண்டு பிடிக்க பட்ட முதலாவது குடிபான தொழில் சாலை
இதுவாக கண்டறிய பட்டுள்ளது
தொடர்ந்து ஆய்வு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இதே பகுதியில் வேறு ஏதாவது சான்றுகள் கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது

குப்புற படுக்க வைத்தால் கொரோனா நோயாளிகளை காப்பாற்றலாம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
குப்புற படுக்க வைத்தால் கொரோனா நோயாளிகளை காப்பாற்றலாம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளை குப்புற படுக்க வைத்தால் உயிரைக்காப்பாற்றி விடலாம், ஆனால் மூட்டு நரம்புகள்
பாதிப்புக்குள்ளாகி விடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
குப்புற படுக்க வைத்தால் கொரோனா நோயாளிகளை காப்பாற்றலாம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
கோப்புப்படம்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் உலகை மிரட்டி வருகிற நிலையில் அது தொடர்பான ஆராய்ச்சிகள் நீளுகின்றன. நோயின் தீவிர தாக்கத்தால் நுரையீரல் பாதிக்கிறது. அதனால் சுவாசம்
சிக்கலாகிறபோது, அத்தகைய நோயாளிகளை வென்டிலேட்டர்களில் வைக்கிறார்கள். இப்படி வென்டிலேட்டரில்
வைக்கிற நிலையில் நோயாளிகளின் நிலை குறித்து, அமெரிக்காவில் நார்த்வெஸ்டெர்ன் பல்கலைக்கழகத்தின்
அங்கமான பெய்ன்பெர்க் மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சி நடத்தி இருக்கிறார்கள்.
இந்த ஆராய்ச்சியின் முடிவை ‘பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் அனஸ்தீசியா’வில் வெளியிட ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அவர்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்-
- வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளை முகம் குப்புற படுக்க வைக்கிறபோது, அது
- அவர்களின் சுவாசத்தை எளிதாக்கும். அவர்களின் உயிரைக் காப்பாற்றி விடலாம். அதே நேரத்தில் அது அவர்களுக்கு நிரந்தர நரம்பு சேதத்தை ஏற்படுத்தி விடும்.
- நரம்பு பாதிப்பானது, ரத்த ஓட்டம் குறைவது மற்றும் வீக்கம் குறைவதின் விளைவாகும்.
- கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் மறுவாழ்வு பெறுகிறபோது, மணிக்கட்டு, கணுக்கால் அல்லது தோள்பட்டை போன்ற முக்கியமான மூட்டுகளில் பலவீனம் ஏற்படும். இந்த
- உடல் பாகங்கள் உடலின் ஒரு பக்கத்தில் முற்றிலும் முடங்கி விடும். இது அதிர்ச்சி தருகிற பிரச்சினையாகத்தான் இருக் கிறது. கொரோனா தவிர்த்து வேறு எந்த நோயாளிகளிடமும்
- இந்தளவுக்கு நரம்பு பாதிப்பு காணப்படுவதில்லை.
- கொரோனாவின் தீவிர பாதிப்புக்குள்ளான 12 முதல் 15 சதவீதம்
- பேர், நிரந்தர நரம்பு பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த வகையில் உலகமெங்கும் பல்லாயிரகணக்கானோர் இதை அனுபவிக்கின்றனர்.
- பெரும்பாலும் மணிக்கட்டு பாதிப்பு, கணுக்கால் பாதிப்பு, கை செயல்பாட்டு இழப்பு, தோள்பட்டை முடக்கம் ஏற்படுகிறது.
- நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்கனவே இருக்கிறபோது, அது
- கொரோனா நோயாளிகளை மீட்டெடுப்பதற்கு இடையூறாக அமைந்து விடுகிறது. இதனால் அவர்களை முழுமையாக மீட்க
- முடியாது. நடக்கவோ, கணினி அல்லது செல்போனை கைகளால் பயன்படுத்தவதோ கடினமாகி விடும்.
இவ்வாறு அந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
கொரோனா பரவல்- 3 வாரம் ஊரடங்கை அறிவித்த இஸ்ரேல்
கொரோனா பரவல்- 3 வாரம் ஊரடங்கை அறிவித்த இஸ்ரேல்
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு 3 வார ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.
கொரோனா பரவல் எதிரொலி – 3 வாரம் ஊரடங்கை அறிவித்தார் இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.
உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரசின் இரண்டாவது அலை இஸ்ரேலில் தீவிரமடைந்து வருகிறது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு உள்ளநாடுகளில் இஸ்ரேல் 24 வது இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 1.55 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மேலும், அங்கு 1,119 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 1.14 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதையடுத்து, அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு 3 வார ஊரடங்கை இஸ்ரேல் அரசு அமல்படுத்த உள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறுகையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் 3 வார காலத்துக்கு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து 50 தொழிலாளிகள் பலி
காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து 50 தொழிலாளிகள் பலி
காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து 50 தொழிலாளிகள் பலி
காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து 50 தொழிலாளிகள் பலி
காங்கோ:
காங்கோ நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள கமிட்டுகா அருகே தங்க சுரங்கம் உள்ளது. இங்கு தொழிலாளர்கள் பலர் பணியாற்றி
வருகிறார்கள். இந்தநிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் மண்ணுக்குள் தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.
50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சுரங்க தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து அதிகாரிகள்
கூறும்போது, “தங்க சுரங்கம் இடிந்ததில் தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர்.
ஒருவரால்கூட வெளியே வரமுடியவில்லை. சுமார் 50 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிகிறது” என்றார்.
விஜய்க்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிப்பு
விஜய்க்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிப்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு ஆதரவான
போஸ்டர்கள் கிழிக்கப்படுவதால், அவரது ரசிகர்கள் தொடர்ந்து ஒட்டி வருகிறார்கள்.
விஜய்க்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிப்பு… தொடர்ந்து ஒட்டும் ரசிகர்கள்
விஜய்
மதுரையை போலவே தேனி மாவட்டத்திலும் அடிக்கடி நடிகர்களுக்கு ஆதரவாக பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டுவது
வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த மாதம் துணை முதல்வருக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அவை அகற்றப்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு போடியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிகர் விஜய் இருப்பது போன்ற போஸ்டர்
ஒட்டப்பட்டது. வருங்கால முதல்வரே என்ற வாசகங்களுடன் அந்த போஸ்டர் அமைந்திருந்ததால் அதனை போலீசார் அகற்றினர்.
கிழிக்கப்பட்ட போஸ்டர்
ஆண்டிபட்டியில் நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் நள்ளிரவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதில் ‘‘தமிழ் சினிமாவில்
கலெக்ஷன்னாலும் சரி, தமிழ்நாட்டில் எலக்ஷன்னாலும் சரி இனிமேல் தளபதிதான் தளபதி மட்டும்தான்’’ என்று அச்சிடப்பட்டு
இருந்தது. மேலும் ‘‘மத்திய அரசு, மாநில அரசியலை பார்த்தாச்சு… எப்போது மக்கள் இயக்க அரசியல்…’’ என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அதனை போலீசார் கிழித்து
அப்புறப்படுத்தினர். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து நடிகர்களுக்கு ஆதரவாக ஒட்டப்படும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு
வருகிறது. போலீசார் அதனை கிழித்து அப்புறப்படுத்தினாலும் மீண்டும் இது போன்ற போஸ்டர் யுத்தம் தொடர்ந்து வருகிறது.
போலீசார் சீருடை கண்டு பயந்த சிறுமியை ரோந்து காரில் அமர வைத்து அதிகாரிகள் மகிழ்வித்தனர்.
போலீசார் சீருடை கண்டு பயந்த சிறுமியை ரோந்து காரில் அமர வைத்து அதிகாரிகள் மகிழ்வித்தனர்.
போலீசார் சீருடை கண்டு பயம்- ரோந்து காரில் சிறுமியை அமர வைத்து மகிழ்வித்த அதிகாரிகள்
சிறுமி யாசியா போலீஸ் ரோந்து பிரிவின் சொகுசு காரில் அமர வைக்கப்பட்ட காட்சியை படத்தில் காணலாம்.
துபாய்:
துபாயில் வசிக்கும் அரபு நாட்டை சேர்ந்த 3 வயது சிறுமி யாசியாவுக்கு சீருடையில் உள்ள போலீசாரை பார்த்து பயம்.
குழந்தையாக இருக்கும்போதே போலீசாரை பார்த்து மிரண்டு பயந்து ஓடி ஒளிந்து கொண்டுள்ளார். அவளது பெற்றோர் எத்தனை
சமாதானம் செய்தும், விளக்கமாக கூறியும் அந்த சிறுமியின் பயம் தெளியவில்லை.
இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் எதிர்காலத்தில் தனது மகளுக்கு எதிர்மறையான நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க அவளின் பயத்தை போக்க வேண்டும் என போலீஸ் துறைக்கு
வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட போலீஸ் துறையின் சுற்றுலா பாதுகாப்பு மற்றும் ரோந்து பிரிவு
தலைவர் ஒபைத் பின் அபித் தலைமையில் தனிப்படை பெண் போலீசார் சிறுமியின் வீட்டிற்கே சென்றனர்.
அவர்கள் கையோடு சிறுமிக்கு விளையாட்டு பொருட்களை கொண்டு சென்றனர். முதலில் போலீஸ் அதிகாரிகள் சிறுமியிடம் அன்பாகவும், வேடிக்கையாகவும் பேச்சு கொடுத்தனர். குறிப்பாக
ரோந்து பிரிவில் பயன்படுத்தப்படும் சொகுசு காரில் அந்த சிறுமியை அமர வைத்தனர். பிறகு அந்த காரில் அந்த வீட்டு பகுதியில் உள்ள சாலையில் அழைத்து சென்றனர்.
இதன் காரணமாக அந்த சிறுமிக்கு பயம் நீங்கி புன்னகை புரிந்ததும் பெற்றோர் அளவில்லா ஆனந்தம் அடைந்தனர். துபாய் போலீஸ்
அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியுடன் தங்கள் நன்றியினை தெரிவித்தனர். இறுதியில் அந்த சிறுமிக்கு பரிசு பொருட்கள் மற்றும் நினைவு பரிசினை அதிகாரிகள் வழங்கினர்.
இந்த சம்பவத்திற்கு பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. குறிப்பாக அதில் பாதுகாப்பு பணி
மட்டுமல்லாமல் சமூக பணிகளிலும் அக்கறை காட்டுவது சிறப்பாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.
கனடாவில் முக கவசம் அணியாத குழந்தையால் விமானம் ரத்து
கனடாவில் முக கவசம் அணியாத குழந்தையால் விமானம் ரத்து
கனடாவில் 19 மாத பெண் குழந்தை முக கவசம் அணியாத காரணத்தால் விமான சேவை ரத்தான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கனடாவில் முக கவசம் அணியாத குழந்தையால் விமானம் ரத்து
முக கவசம் அணியாத குழந்தையால் விமானம் ரத்து
டொராண்டோ:
கனடாவில் கல்கரி நகரத்தில் இருந்து டொராண்டோ நகருக்கு வெஸ்ட்ஜெட் விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் சப்வான் சவுத்ரி என்ற பயணி தனது மனைவி மற்றும் 2 பெண்
குழந்தைகளுடன் ஏறி இருந்தார். ஆனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அனைத்து பயணிகளும் தர்ம சங்கடத்துக்கு ஆளாகினர். இதற்கு காரணம், தனது இளைய குழந்தை (19 மாத
பெண் குழந்தை) முக கவசம் அணிந்தே ஆக வேண்டும் என்று விமான நிறுவனம் கட்டாயப்படுத்துவதுதான் என்று சவுத்ரி கூறினார். மேலும், விமானம் புறப்படுவதற்கு முன் தனது 3 வயது
மகள் முக கவசம் அணியாமல், தின்பண்டம் சாப்பிட்டு கொண்டிருந்ததாகவும், குழந்தை சாப்பிட்டு முடிப்பதை கூட
சகித்துக்கொள்ளாமல் விமான சிப்பந்திகள், குழந்தை முக கவசம் அணியாவிட்டால், விமானத்தின் கதவுகளை மூட முடியாது என மறுத்து விட்டதாகவும் கூறினார்.
அதைத் தொடர்ந்து சவுத்ரியும் குழந்தைக்கு முக கவசம் அணிவிக்க சம்மதித்தார். அவரது 3 வயது மகள் முக கவசம் அணிந்து விட்டாள். ஆனால் 19 மாத குழந்தைதான் அணியவில்லை என கூறப்படுகிறது
. இதற்கிடையே நடந்த நிகழ்வுகளை பார்த்த அந்த குழந்தை வாந்தியெடுத்தது. இதில் ஆத்திரம் அடைந்த விமான சிப்பந்திகள், தீவிரமாயினர். அந்த குடும்பத்தினரை விமானத்தை விட்டு
வெளியேறுமாறு கூறினர். அப்படி அவர்கள் வெளியேறாவிட்டால் கைது, வழக்கு, தண்டனை என நடவடிக்கை நீளும் என எச்சரித்ததுடன், போலீசாரையும் வரவழைத்தனர். அதைத்
தொடர்ந்து தாங்கள் மரியாதைக்குரியவர்கள் என்று கூறி சவுத்ரி குடும்பத்தினர் வெளியேற சம்மதித்தனர். ஆனால் விமான சிப்பந்திகளோ விமானத்தை இயக்கும் மன நிலையில் இல்லை என
கூறி விட்டனர். இதற்கிடையே போலீசார் வந்து விமானத்திற்குள் இருந்த அனைத்து பயணிகளையும் வெளியேற்றினர். விமான சேவையும் ரத்தானது. இருப்பினும் கனடாவில் கொரோனா
கட்டுப்பாட்டு விதியின்படி 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முக கவசம் அணிந்தால் போதும் என தெரிய வந்துள்ளதாக சவுத்ரி தெரிவித்தார். ஆனால் விமான நிறுவனமோ, 3 வயது குழந்தை முக
கவசம் அணியாமல் இருந்ததுதான் பிரச்சினைக்கு வழிவகுத்தது என கூறியது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீன மாணவர்கள் 1,000 பேரின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா
சீன மாணவர்கள் 1,000 பேரின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா
அமெரிக்காவில் கல்வி பயின்றுவரும் சீன மாணவர்களில் 1,000 பேரின் விசாவை டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
சீன மாணவர்கள் 1,000 பேரின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா – டிரம்ப் நிர்வாகம் அதிரடி
தென்சீன கடல் விவகாரம், வர்த்தகம் தொடங்கி அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் கொரோனா வைரசுக்கு பின் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த மோதலுக்கு பின் ஹூஸ்டனில் நகரில் செயல்பட்டு வந்த சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபட்டதாகவும், அதை உடனடியாக மூடவும் அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஹூஸ்டனில் செயல்பட்டு வந்த சீன தூதரகம் மூடப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக ஷெங்டூ நகரில் செயல்பட்டுவந்த அமெரிக்க தூதரகத்தை உடனடியாக மூடும்படி சீனா உத்தரவிட்டது. இதையடுத்து ஷெங்டூ தூதரகம் மூடப்பட்டது. இந்த விவகாரங்கள் இரு நாட்டிற்கும் இடையேயான விரிசலை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், சீன நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மேலும், 2018-19 ஆண்டு கணக்கீட்டின் படி 3 லட்சத்து 70 ஆயிரம் சீன மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழங்களில் ஆராய்ச்சி மற்றும் பட்டப்படிப்புகள் படிக்க விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் தங்கி கல்வி பயின்று வரும் சீன மாணவர்களில் 1,000 பேரின் விசாவை டிரம்ப் நிர்வாகம் நேற்று அதிரடியாக ரத்து செய்துள்ளது. விசா ரத்து செய்யப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானோர் ஆராய்ச்சி மற்றும் பட்டப்படிப்பு பயின்றுவருபவர்கள் ஆகும்.
நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், ரகசிய தகவல்கள் திருடப்படுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சீன ராணுவத்துடன் ரகசிய தொடர்பில் இருந்து அவர்களுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு உள்ளிட்ட ரகசிய தகவல்களை இந்த மாணவர்கள் அளிக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இதனால் அவர்களது விசா ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் நாட்டை சேர்ந்த 1,000 மாணவர்களின் விசாவை அமெரிக்கா ரத்து செய்யப்பட்டதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனாவை தடுக்க மூக்கு வழியாக செலுத்தும் ‘ஸ்பிரே’ தடுப்பூசி
சீனாவில் கொரோனாவை தடுக்க மூக்கு வழியாக செலுத்தும் ‘ஸ்பிரே’ தடுப்பூசி
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்காக முதன் முதலாக மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யக்கூடிய தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனாவை தடுக்க மூக்கு வழியாக செலுத்தும் ‘ஸ்பிரே’ தடுப்பூசி
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்காக முதன் முதலாக மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யக்கூடிய தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழகம்,
ஜியாமென் பல்கலைக்கழகம், பீஜிங் வாண்டாய் உயிரியல் மருந்தகம் ஆகியவற்றின் கூட்டு தயாரிப்பு இது. இந்த தடுப்பூசியை
மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு சீன தேசிய மருத்துவ தயாரிப்புகள் கழகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது.
இந்த மருத்துவ பரிசோதனை நவம்பர் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் 100 பேருக்கு மூக்கு வழியாக
‘ஸ்பிரே’ செய்து அதன் விளைவுகள் ஆராயப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈராக்கில் இருந்து 3000 இராணுவத்தி விளக்கும் அமெரிக்கா
ஈராக்கில் இருந்து 3000 இராணுவத்தி விளக்கும் அமெரிக்கா
ஈராக்கில் தளம் அமைத்து நிலை கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தினரில்
மூவாயிரம் பேர் இம்மாதம் முழுமையாக விலக்க பட்டு விடுவார்கள் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்து
அங்கு ஈரானின் எதிர்ப்பு பலமாக உள்ளத்தினாலும் ,குறித்த இராணுவத்தினரின்
முகாம்கள் தொடர் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாலும்
இந்த படை விலகுதலை அமெரிக்கா திடீரென அறிவித்துள்ளது
தேர்தல் வேளையில் ஈரான் ஏதாவது சதி செய்ய கூடும் என்ற அச்சம்
காரணமாக இந்த கண்துடைப்பு விலக்கல் இடம்பெறுவதாக நம்ப படுகிறது
20 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மாமூத் எலும்பு கூடுகள் 100 மீட்பு
20 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மாமூத் எலும்பு கூடுகள் 100 மீட்பு
இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னார் வாழ்ந்த மாமூத் இன எலும்புக்கூடுகள் மெஸ்சிக்கோ நாட்டில் கண்டு பிடிக்க பட்டுள்ளது
,மலையடிவார சுரங்கம் அருகில் இவை கண்டு பிடிக்க பட்டுள்ளன
இவை நோயினால் இறந்தோ அல்லது கொலை செய்ய பட்டு இருக்கலாம் என அஞ்ச படுகிறது
எனினும் தொடர்ந்து இது குறித்து மரபியல் ஆராய்ச்சி நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு ,பரிசோதனையில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

20 ஆயிரம் ஆண்டு பழமை 
அக்டோபரில் கொரோனா இரண்டாவது அலை- மக்களுக்கு எச்சரிக்கை
அக்டோபரில் கொரோனா இரண்டாவது அலை- மக்களுக்கு எச்சரிக்கை
நாம் பாதுகாப்பாக இல்லாமல் மெத்தனமாக இருந்தால் அக்டோபரில் கொரோனா இரண்டாவது அலை வருவதை யாராலும்
தடுக்க முடியாது என்று தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் திருவேற்காடு நகராட்சியில் கட்டப்பட்ட புதிய நகராட்சி கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை அமைச்சர்
பாண்டியராஜன் நேற்று ஆய்வு செய்தார். மேலும் நகராட்சிக்கு குப்பைகளை அள்ளும் பேட்டரி வாகனங்கள் மற்றும் 2
பூங்காக்களையும் அவர் திறந்துவைத்தார்.அமைச்சர் பாண்டியராஜன் இதனை நேற்று ஆய்வு செய்தார்
பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் தெரிவிக்கையில் நாம் பாதுகாப்பாக இருந்து கொண்டால் கொரோனாவின் 2-வது அலை வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால்
நாம் மெத்தனமாக இருந்துவிட்டால் அக்டோபரில் கொரோனாவின் இரண்டாவது அலை வருவதை யாராலும் தடுக்க முடியாது.
கொரோனாவை விரட்டி அடிக்கும் பணியில் தமிழகம் முன்னணியில் உள்ளது என்று குறிப்பிட்டார்.
எம்.ஜி.ஆர். தோற்றத்தில் நடிகர் விஜயை அவரது ரசிகர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் சுவரொட்டியாக ஒட்டி உள்ளனர். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் அவர்
இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் இவ்வாறு ஒட்டி உள்ளனர். அது வரவேற்க தகுந்த விஷயம் என கருதுகிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரை சொல்லி அவர்கள் ஓட்டு கேட்டு போகாத
வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அவர்களின் பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் உரிமை எங்களுக்கு தான் உள்ளது என்றும் தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்..
தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை
தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை
பிரபல நடிகை ஒருவர் தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை
நடிகை ஸ்ரவானி
மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தவர் ஸ்ரவானி. இவர் கடந்த 8 வருடங்களாக தொலைக்காட்சித்
தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு ஐதராபாத்
மதுராநகரில் உள்ள தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் ஸ்ரவானியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்கு அனுப்பி
வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
நடிகை ஸ்ரவானி
இளம் வயதில் சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்- 10 பேர் பலி
ஆப்கானிஸ்தான் துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்- 10 பேர் பலி
ஆப்கானிஸ்தான் துணை அதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்- 10 பேர் பலி
தாக்குதல் நடந்த பகுதி
காபூல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் துணை அதிபரான அம்ருல்லா சலே இன்று தலைநகர் காபூலில் பாதுகாப்பு வாகன
அணிவகுப்புடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தன. இந்த பயங்கரவாத தாக்குதலில் துணை
அதிபர் அம்ருல்லா சலே லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். துணை அதிபரின்
பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்க உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.,
ஆப்கன் துணை அதிபர் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்
தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி
வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டவும், பயங்கரவாத உள்கட்டமைப்பு மற்றும்
ஆதரவாளர்களை ஒழிப்பதற்கும் நடக்கும் போராட்டத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானுடன் நிற்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பற்றி எரியும் காடுகள் – 14,000 தீயணைப்பு வீரக்கள் களத்தில்
அமெரிக்காவில் பற்றி எரியும் காடுகள் – 14,000 தீயணைப்பு வீரக்கள் களத்தில்
அமெரிக்கா கலிபோனியாவில் உள்ள காட்டு பகுதி பற்றி எரிந்த வண்ணம்
உள்ளது ,இந்த காட்டு தீயினை அணைக்கும் முயற்சியில் பதின் நான்காயிரம்
தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
தொடர்ந்து காடுகள் பற்றி எரிவதால் ,வனவிலங்குகள் மற்றும் அதனை அண்மித்த மக்கள் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன
தொடர்ந்து மீது படையினர் களமுனையில் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்
கொரனோவால் பிரேசில் ,மெஸ்சிக்கோவில் பலநூறு பேர் ஒரே நாளில் பலி
கொரனோவால் பிரேசில் ,மெஸ்சிக்கோவில் பலநூறு பேர் ஒரே நாளில் பலி
உலக நாடுகளை மிரளவைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி பிரேசில் மற்றும் மெஸ்சிக்கோ நாடுகளில் அதிகளவான மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
இதில் பிரேசில் நாட்டில் 310 பேரும் மெஸ்சிக்கோவில் 223 பேரும் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்
மேலும் அதிகரித்து செல்லும் இந்த நோயினை கட்டு படுத்த முடியாது அரசுகள் தினறி வருகின்றன







