Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
ஏழு மில்லியன் கஞ்சா மடக்கி பிடிப்பு – பலர் கைது
ஏழு மில்லியன் கஞ்சா மடக்கி பிடிப்பு – பலர் கைது
Dublin Port பகுதியில் பிரிட்டனை சேர்ந்த இருவர் மற்றும் Dublin னை சேர்ந்த
இருவர் உள்ளிட்டவர்கள் மறைத்து வைத்திருந்த 352 கிலோ கஞ்சா மீட்க
பட்டுள்ளது .இதன் மொத்த பெறுமதி சுமார் ஏழு மில்லியன்
என தெரிவிக்க பட்டுள்ளது
கைதானவர்களிடம் தொடர்விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இவர்களுடன் தொடர்பில் உள்ள ஏனையவர்களை கைது செய்யும்
வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 90,000 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு -189 பேர் பலி
பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 90,000 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு -189 பேர் பலி
பிரிட்டனில் இந்த வாரம் நாள் ஒன்றுக்கு சுமார் 53,000 and 90,000 பேர் கொரனோ
நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக நோய் தடுப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்
இதுவே கடந்த வாரம் முதல் நாற்பத்தி மூவாயிரம் முதல் எழுபத்தி நான்காயிரம், பேர் பாதிக்க பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 189 பேர் பலியாகியுள்ளனர்
என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது ,எனினும் இழப்பு இதைவிட அதிகமாகும் என ஏதிர் பார்க்க படுகிறது
இவ்விதம் தொடர்ந்து செல்லும் எனின் எதிர் வரும் நான்கு வாரத்திற்குள்
பிரிட்டன் முழுவதுமான லொக்கடவுன் நிலைக்கு செல்லும் என்பது நமது கணிப்பாகும்
கனடாவில் சிக்கிய $143 மில்லியன் கஞ்சா தோட்டம் – photo
கனடாவில் சிக்கிய $143 மில்லியன் கஞ்சா தோட்டம் – photo
கனடா ஒன்ராரியோ மாகாணத்தில் சட்டவிரோதமாக வளர்க்க
பட்ட கஞ்சா தோட்டம் பொலிஸாரின் திடீர் முற்றுகையில் சிக்கியது
மேற்படி தோட்டத்தில் இருந்தும் ,அந்த குழுவினர் தங்கியிருந்த வீடுகளில்
இருந்தும் சுமார் முப்பத்தி ஏழு ஆயுதங்கள் மற்றும் எழுபத்தி ஐந்தாயிரம் டொலர்கள் என்பன மீட்க பட்டுள்ளன .
மேலும் 192 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது ,
இவர்கள் பாவனைக்கு உட்படுத்திய ஆடம்பர கார்களும் மீட்க பட்டுள்ளன

பறந்த விமானத்தில் பலியான கொரனோ நோயாளி பெண்
பறந்த விமானத்தில் பலியான கொரனோ நோயாளி பெண்
அமெரிக்காவில் Spirit Airlines flight விமானத்தில் பறந்து கொண்டிருந்த
பெண்மணி ஒருவர் அமெரிக்காவை உலுப்பி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளார்
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த வேளை ,நோயின்
தாக்குதல் உக்கிரத்தால் பலியாகியுள்ளார்
குறித்த விமானத்தில் பயணித்தவர் முப்பது வயதுடைய பெண்மணி என
தெரிவிக்க பட்டுள்ளது ,இதனால் அந்த விமானம் போக்குவரத்தில்
இருந்து தற்காலிகமாக இடை நிறுத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது

பெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா?
பெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா?
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பெரிய ஏரியில் ஏரியில் டைனோசர் முட்டை போல் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன.
பெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா?
குன்னம் பெரிய ஏரியில் டைனோசர் முட்டை போல் காணப்படும் படிமங்கள்
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பள்ளிக்கு பின்புறமுள்ள ஓடையில் புதைந்திருந்த கல் மரம் ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. 5 மீட்டர் நீளமுடைய இந்த கல் மரமானது சுண்ணாம்பு பாறை
ஒன்றில் புதைந்த நிலையில் உள்ளது. அதன் மேற்பகுதி மட்டும் வெளியில் தெரிகிறது. மேலும் ஓடையில் சிறுசிறு கிளைகள் போன்ற அமைப்புடைய மரத்துண்டுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஏற்கனவே இது போன்ற கல்மரம் பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூரில் உள்ளதை கடந்த 1940-ம் ஆண்டில் எம்.எஸ்.கிருஷ்ணன்
என்ற புவியியல் ஆய்வாளர் பதிவு செய்தார். அதன் பின்னர் பல்வேறு கல் மரத்துண்டுகள் இந்த பகுதியின் சுற்று வட்டார கிராமங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது கண்டெடுக்கப்பட்ட கல்மரமும், சாத்தனூர் கல்மரத்தை போன்றதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆலத்தூர்
வட்டத்தில் மட்டுமே காணக்கிடைக்கப்பெற்று வந்த இந்த வகை கல்மரத்துண்டுகள் தற்போது குன்னம் கிராமத்தில்,
முதன்முறையாக ஓடையில் கண்டறியப்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் செயல்பட்டாளர் ரமேஷ் கருப்பையா தெரிவித்தார்.
இதேபோல் குன்னம் பெரிய ஏரியில் நேற்று மண் எடுத்து கொண்டிருந்தபோது, அம்மோனைட் எனப்படும், கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும் சிதைவுற்ற நிலையில் கிடைத்துள்ளது.
மேலும் அந்த ஏரியில் டைனோசர் முட்டை போல் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன. அதனை புவியியல்
ஆய்வாளர் வந்து பார்வையிட்டு, அது டைனோசர் முட்டையா?, இல்லையா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த கடல்வாழ் நத்தைகளின் படிமங்களையும், உருண்டை வடிவிலான படிமங்களையும் வருவாய்த்துறையினர் கைப்பற்றி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
மேலும் குன்னம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்படிமங்களை அதே இடத்திலும் பாதுகாத்தும், சிலவற்றை அதன் அருகிலுள்ள பள்ளிகளிலும் சேகரித்து வைத்தும் உள்ளூர்
அளவிலான காட்சியகங்கள் ஏற்படுத்தி பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல்படிமங்கள்
கிடைக்கப்பட்டுள்ள பகுதிகளை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
தீபாவளியையொட்டி வசூல் வேட்டை நடந்த கனிம வளத்துறை துணை இயக்குனரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 100 பவுன் நகை, ரூ.4 லட்சம் சிக்கியது.
அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
பவானியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திய பெருமாள் வீடு
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் 2-வது தளத்தில் கனிம வளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில்
தீபாவளி வசூல்வேட்டை நடப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை
லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது போலீசாரை கண்டதும் சிலர் ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக வெளியே வீசினர். அந்த பணத்தை கைப்பற்றிய போலீசார், அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர்.
மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 11 மணி வரை நடைபெற்றது. இதில் ரூ.1 லட்சத்து 150 பறிமுதல் செய்யப்பட்டது.
அதுதொடர்பாக கனிம வளத்துறை துணை இயக்குனர் பெருமாள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
கனிமவளத்துறை துணை இயக்குனர் பெருமாள் திண்டுக்கல் ராஜீவ்நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார். எனவே,
அவரை ராஜீவ்நகரில் இருக்கும் வீட்டுக்கு அதிகாலை 2.30 மணிக்கு போலீசார் அழைத்து சென்று சோதனை நடத்தினர்.
அங்கு காலை 5.30 மணி வரை சோதனை நடைபெற்றது. அப்போது வீட்டில் இருந்த ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் சிக்கியது. அந்த பணம் கணக்கில் வராதது என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக கனிம வளத்துறை துணை இயக்குனர் பெருமாள் மற்றும் அலுவலக ஊழியர் செல்வமணி ஆகியோர் மீது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
துணை இயக்குனர் பெருமாளின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானி கவுண்டர்நகர் ஆகும். எனவே, அவருடைய சொந்த ஊரில் இருக்கும் வீட்டிலும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
அதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம் 2 கார்களில் பவானி கவுண்டர்நகருக்கு சென்று பெருமாளின் வீட்டில்
அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பெருமாளின் மனைவி எழிலரசி இருந்தார்.
சுமார் 5 மணி நேரம் வீடு முழுவதும் நடத்திய சோதனையில் 100 பவுன் நகைகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்து அந்த நகைகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை- தனிப்படை போலீசார் ம.பி. விரைவு
15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை- தனிப்படை போலீசார் ம.பி. விரைவு
சூளகிரி அருகே கன்டெய்னர் லாரியை கடத்திச்சென்று ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் விரைந்தனர்.
ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை- தனிப்படை போலீசார் ம.பி. விரைவு
விசாரணை நடத்திய போலீசார்
சென்னை பூந்தமல்லியில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு நேற்று முன்தினம் மதியம் 15 அட்டை பெட்டிகளில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான மொத்தம் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
தனியார் நிறுவன செல்போன்களை ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை பூந்தமல்லியை சேர்ந்த
சதீஷ்குமார் (வயது 29) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக கோவையை சேர்ந்த அருண் (26) என்பவர் உடன் வந்தார்.
இந்த கன்டெய்னர் லாரி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால்
மற்றொரு லாரியில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் கன்டெய்னர் லாரியை திடீரென வழிமறித்தது. தொடர்ந்து அந்த கும்பல், டிரைவர்கள் சதீஷ்குமார், அருண் ஆகியோரை
ஆயுதங்களால் தாக்கியது. பின்னர் அவர்களது கை, கால்களை கட்டி சாலையோர புதரில் போட்டு விட்டு கன்டெய்னர் லாரியை கடத்தி சென்றது.
இந்த நிலையில் புதரில் கிடந்த டிரைவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டனர். இதையடுத்து டிரைவர்கள் 2 பேரும் சூளகிரி போலீஸ்
நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து டிரைவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, கன்டெய்னர் லாரியில் 15 பெட்டிகளில், 14,576
செல்போன்கள் இருந்ததாகவும், இவற்றின் மதிப்பு சுமார் ரூ.15 கோடி என்பதும், 10 பேர் கொண்ட மர்ம கும்பல் கன்டெய்னர் லாரியை வழிமறித்து கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து டிரைவர்கள் 2 பேரையும் போலீசார் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே செல்போன்களுடன் கடத்தப்பட்ட
கன்டெய்னர் லாரி, சூளகிரியை அடுத்த அழகுபாவி தேசிய நெடுஞ்சாலையோரம் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது லாரியில் செல்போன்கள் எதுவும் இல்லை என்பதும், அந்த கும்பல் அவற்றை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் மற்றும் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி ஆகியோர் நேரில்
சென்று விசாரணை நடத்தினர்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை ஆய்வு செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட
கொள்ளையர்களை பிடிக்க, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விசாரணையில் ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களுடன் சென்ற கன்டெய்னர் லாரியை சென்னையில் இருந்தே ஒரு லாரி பின் தொடர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
பின்தொடர்ந்து வந்த லாரி போலியான பதிவு எண் கொண்டது என்பதும், போலி பதிவு எண் கொண்ட லாரி மத்திய பிரதேசத்தில் ஓடுவதாகவும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து 9 தனிப்படை போலீசார் செல்போன்களை கொள்ளை அடித்தவர்களை பிடிக்க மத்திய பிரதேசம் விரைந்துள்ளனர்.
சீனா வங்கியில் வாங்கி கணக்கு- மாட்டிய டிரம்ப்
சீனா வங்கியில் வாங்கி கணக்கு- மாட்டிய டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனா வங்கியில் கணக்கு வைத்திருப்பது தெரியவந்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ளது.
சீனாவில் உள்ள வங்கியில் டிரம்ப் கணக்கு வைத்துள்ளார் -நியூயார்க் டைம்ஸ் தகவல்
சீனாவில் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் குறித்து அதிபர் டிரம்ப் விமர்சித்ததோடு இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போரை தூண்டி விட்டார்.
இந்த நிலையில் டிரம்பின் தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் நிதி விவரங்கள் தொடர்பான ஆவணத்தை பெற்ற நியூயார்க் டைம்ஸ்,
அவருக்கு சீனா வங்கியில் கணக்கு உள்ளது என்பதை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கு இருப்பதாக ஒப்புக்கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் ஜனாதிபதியானபோது, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க கூட்டாட்சி வரிகளில் 750 டாலர்கள் செலுத்தி உள்ளார்.
அவரது சீன வங்கிக் கணக்கு உள்ளூர் வரிகளில் 188,561 டாலர் செலுத்தியுள்ளது என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சீனா வங்கி கணக்கானது டிரம்ப் இன்டர்நேஷனல் ஓட்டல் மேனேஜ்மென்ட் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் 2013 மற்றும் 2015 க்கு இடையில் உள்ளூர் வரிகளை செலுத்தி உள்ளது.
இது ஆசியாவில் ஓட்டல் ஒப்பந்தங்களுக்கான சாத்தியங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டதாக டிரம்ப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
வெற்றிகரமாக தரையிறங்கியது நாசா விண்கலம்
வெற்றிகரமாக தரையிறங்கியது நாசா விண்கலம்
குறுங்கோள் பென்னுவை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய விண்கலம் 4 ஆண்டு பயணத்திற்கு பிறகு குறுங்கோளில் தரையிறங்கியது.
4 ஆண்டு பயணத்திற்கு பிறகு பென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசா விண்கலம்
பென்னு குறுங்கோளில் தரையிறங்கிய விண்கலம்
வாஷிங்டன்:
பூமியில் இருந்து 330 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறுங்கோள்களான பென்னுவை ஆய்வு செய்வதற்காக
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ‘ஓசிரிஸ்-ரெக்ஸ்’ எனப்படும் செயற்கை கோளை அனுப்பியது. 2016ம் ஆண்டு
அனுப்பப்பட்ட இந்த செயற்கைக் கோள், 2018ம் ஆண்டு பென்னு குறுங்கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து சீராக பயணம் மேற்கொண்டது.
அதன்பின்னர் படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டு நேற்று பென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக
தரையிறங்கியது. பென்னு குறுங்கோளில் இருந்து பாறைத் துகள்களை ஆய்வுக்காக பூமிக்கு எடுத்துவர திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி ஓசிரிஸ் ரெக்ஸ் செயற்கைக் கோளில் உள்ள இயந்திரக் கரங்கள் குறுங்கோளை துளையிட்டு பாறைத் துகள்களை எடுக்கத் தொடங்கியது. இதேபோல் தூசித் துகள்களையும் சேகரிக்கிறது.
பாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி
பாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்ளிட்ட 15 பலியானார்கள்
பாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி
விசா விண்ணப்பம் வாங்க குவிந்த மக்கள்
ஆப்கானிஸ்தான் ஜலாலாபாத் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசாக்களுக்கு விண்ணப்பிக்க இன்று டோக்கன்
வழங்கப்பட்டது. இதற்காக அங்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி
பெண்கள் உள்பட 15 ஆப்கானிஸ்தானியர்கள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எட்டு பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். கூட்டத்தில் நின்று இருந்த பல வயதானவர்களும் காயமடைந்தனர் என்று
தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் மருத்துவ சிகிச்சை, கல்வி மற்றும்
வேலைகளைப் பெறுவதற்காக அண்டை நாடான பாகிஸ்தானுக்குச் செல்கின்றனர். இரு நாடுகளும் கிட்டத்தட்ட 2,600 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.
போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் வன்முறை, மத துன்புறுத்தல் மற்றும் வறுமையை விட்டு வெளியேறிய சுமார் 30 லட்சம்
ஆப்கானஸ்தான் அகதிகள் மற்றும் பொருளாதார குடியேறியவர்களை பாகிஸ்தான் கொண்டுள்ளது.
கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
கொரனோ அதிகம் -பிரிட்டனில் South Yorkshire முற்றாக அடித்து பூட்டு
பிரிட்டனில் South Yorkshire முற்றாக அடித்து பூட்டு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்பொழுது
பிரிட்டனின் முக்கிய பகுதியாக விளங்கும் South Yorkshire முற்றாக சிவப்பு
எச்சரிக்கை விடப்பட்ட நிலையில அடித்து பூட்ட பட்டுள்ளது
மக்கள் வீடுகளை விட்டு வெளியில் நடமாட முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது
தொடர்ந்து இது போன்ற நடை முறை லண்டன் நகரத்தில் இடம்பெற கூடும்
என எதிர்பார்க்க படுகிறது ,இந்த பகுதி இலக்கம் இரண்டில் உள்ளது ,அதாவது
அதிக நோயாளர்களை கொண்ட மாநகரமாக மாற்றம் பெற்றுள்ளது
சிவப்பு எசசரிக்கை எப்பொழுதும் இங்கு அறிவிக்க படலாம் என்பதே எதிர் பார்ப்பாகும்
கொரனோவால் எகிறிய சீனாவின் பொருளாதாரம் – கொதிக்கும் அமெரிக்கா
கொரனோவால் எகிறிய சீனாவின் பொருளாதாரம் – கொதிக்கும் அமெரிக்கா
உலக நாடுகளை தொடர்ந்து ஆட்டி படைத்தது வரும் கொரனோ
நோயினால் அந்த நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது .
இவ்வாறான நிலையில் சீனாவின் பொருளாதாரம் அசுர வளர்ச்சியை
எட்டடி பிடித்துள்ளது ,சுமார் 4.9 விகிதம் அதன் பொருளாதார வளர்ச்சி இவ்வேளை இடம் பெற்றுள்ளது
உலக சண்டியர் அமெரிக்காவின் பொருளாதாரம் இதனை விட
அதிக பாதாளத்திற்குள் வீழ்ந்து கிடக்கிறது .
முகக் கவசம் மற்றும் கொரனோ சோதனை கிட்டுக்கள் என்பன சீனாவில்
இருந்து பில்லியன் கணக்கில் இறக்குமதி செய்ய படுகின்றமை குறிப்பிட தக்கது
இப்போது கேள்வி எதுவெனில் யார் வல்லரசு ..? சீனா வா ..?அமெரிக்காவா …?
துருக்கி எல்லையில் தடுப்பு சுவர் கட்டிய கிரேக் – மாப்புள்ள இப்படி குதித்தாரு
துருக்கி எல்லையில் தடுப்பு சுவர் கட்டிய கிரேக் – மாப்புள்ள இப்படி குதித்தாரு
துருக்கி எல்லையோரத்தில் அகதிகள் தமது நாட்டுக்குள்
நுழைவதை தடுக்க கிரேக் பெரும் கம்பி வேலிகளை கொண்டு
தடுப்பு சுவர் அமைத்தது .
ஆனால் அவர்களுக்கு அல்வா கொடுத்து அகதிகள் அந்த சுவரை
தண்டி ஏறி குதித்து உள்நுழையும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது
அமெரிக்காவின் பாணியில் சுவரை கட்டிய பொழுதும் ,அதற்கு
மாற்று வழிகளை கண்டுபிடித்து சட்டவிரோத குடியேற்றவாசிகள் நுழைந்து வருகின்றனர்
இது அந்த நாட்டுக்கு பெரும் தலை இடியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

அலெக்ஸ்சாவில் பாரிய நில நடுக்கம் – தப்பிய சுனாமி
அலெக்ஸ்சாவில் பாரிய நில நடுக்கம் – தப்பிய சுனாமி
அலெக்ஸ்சா கடல் பகுதியில் 7,5 அளவில் பாரிய நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது ,இது சுனாமி தாக்குதலை ஏற்படுத்தும் வல்லமை
பொருந்தியதாக உள்ளது ,எனினும் எதிர்பார்த்தது போலவே சுனாமி பெருகவில்லை
இதனால் இழப்புக்கள் தடுக்க பட்டது ,எனினும் இந்த நில
நடுக்கத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
மக்கள் சுனாமி ஏற்படும் என எதிர் பார்ப்பதால் ,அங்கு பீதி நிலவுகிறது
ஐப்பான் ஒலிம்பிக் கணணிக்குள் நுழைந்த ரஷியா கைக்கிங்க நபர்கள்
ஐப்பான் ஒலிம்பிக் கணணிக்குள் நுழைந்த ரஷியா கைக்கிங்க நபர்கள்
உலக நாடுகளுக்கு கைக்கிங் நபர்கள் பெரும் சவாலாக திகழ்ந்து வருகின்றனர்
அவ்விதம் ஜப்பான் தலைநகர் இடம்பெற இருந்த ஒலிம்பிக் போட்டியில்
குழப்பத்தை ஏற்படுத்த ரசிய கைக்கிங் இராணுவ நிபுணர்கள் முனைந்துள்ளது அம்பலமாகியுள்ளது
இதற்கு என அவர்கள் உருவாக்கிய கணனி செயல் இழப்பு வைரஸ் வலையமைப்பு மென் பொருட்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன
தொடர்ந்து பரவி வரும் வைரஸ் நோயினை அடுத்து பின் போட பட்டுள்ள
பொழுதும் ,ரசியா தொடர்ந்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்த முயன்று
வருவது மூன்று நாட்டு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிட தக்கது
இது வரை பில்லியன் டொலர்கள் சேதமாக்க பட்டுள்ளதாக குறிப்பிட பட்டுள்ளது
சூடு பிடிக்கும் அமெரிக்கா தேர்தல் 2,மில்லியன் விளம்பரங்களை அகற்றிய பேஸ்புக்
சூடு பிடிக்கும் அமெரிக்கா தேர்தல் 2,மில்லியன் விளம்பரங்களை அகற்றிய பேஸ்புக்
அமெரிக்காவில் இடம்பெற்றவுள்ள தேர்தலை அடுத்து சமுக வலைத்தளங்களை
மையப்படுத்தி தேர்தல் பரப்புரைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,
இதில் ஆளும் அரச அதிபர் டிரம்ப் பலத்த தோல்வியை தழுவுவார் எனவும் ,
பைடனே வெற்றிபெறுவார் என்ற கருது கணிப்பு பலமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவ்வாறு இந்த போர் நடந்து கொண்டிருக்க பேஸ்புக் ,மற்றும் இன்ஸாகிராமில்
சுமார் .22 லட்சம் விளம்பரங்கள் அகற்ற பட்டுள்ளன ,மேலும் 120,000 பதிவுகள் அகற்ற பட்டுள்ளன
பேஸ்புக் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவினால் டிரம் மற்றும் பைடன்
தரப்பு கடும் அதி திருப்தியில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
நியூலாந்தில் செத்து மிதந்த திமிங்கலங்கள் – நடந்தது என்ன …?
நியூலாந்தில் செத்து மிதந்த திமிங்கலங்கள் – நடந்தது என்ன …?
நியுசுலாந்து கடல் பகுதியில் இராட்சத திமிங்கலங்கள் திடீரென
செத்து மிதந்துள்ளது .இந்த மீன்கள் இறந்தமைக்கான உடனடி காரணம் தெரிவிக்க படவிலை
சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட திமிங்கலகங்கள் கரையில் மிதந்ததாகவும்
இதில் சுமார் பல டசினுக்கு மேற்பட்டவை இறந்த நிலையில் காணப்படுவதாக
கடல்வாழ் உயிர் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்
இவ்வாறு இந்த திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது சுனாமி போன்ற
பேரழிவுகள் ஏற்பட கூடும் என்ற ஐயம் மக்கள் மத்தியில் நிலவுகிறது

இத்தாலியில் மீள அதிகரித்துள்ள கொரனோ 11,705 பேர் பாதிப்பு – 69 பேர் பலி
இத்தாலியில் மீள அதிகரித்துள்ள கொரனோ 11,705 பேர் பாதிப்பு – 69 பேர் பலி
இத்தாலியில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார்
11,705 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
அதேபோல 69 பேர் பலியாகியுள்ளனர் ,இவை எதிர்வரும் நாட்களில் இரட்டிப்பாக
கூடும் என்ற அச்சம் வெளியிட பட்டுள்ளது ,மக்கள் அரசு கூறும் விதிகளை
கடை பிடிக்க மறுத்துவருவதால் இந்த தொற்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது
சூட்டு வீழ்த்த பட்ட நவீன ரக போர் விமானம் – சண்டை உக்கிரம்
சூட்டு வீழ்த்த பட்ட நவீன ரக போர் விமானம் – சண்டை உக்கிரம்
Azerbaijan நாட்டு இராணுவத்தினால் சு 25 ராகத்தை சேர்ந்த அதி உயர்
தாக்குதல் விமானம் ஒன்று விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் சுட்டு
வீழ்த்த பட்டுள்ளதாக குறித்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது
ஆனால் அர்மேனிய இராணுவமோ அதற்கு மேல் ஒரு படி மேல் சென்று
தாம் 25 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அறிக்கை போர் நடத்தி வருகிறது
இந்த பரப்புரைகள் ஒரு பக்கம் இடம்பெற்ற வண்னம் இருக்க ,மறுபுறத்தே
பல நகரங்களை மீட்டவாறு ஆர்மேனியா இராணுவம் நுழைந்த வண்ணம் உள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவித்துவருகின்றன
ஒரே நாளில் 400,000 பேர் கொரனோவால் பாதிப்பு
ஒரே நாளில் 400,000 பேர் கொரனோவால் பாதிப்பு
உலக நாடுகளை மீள நடுக்கத்தில் உறைய வைத்து வரும் கொரனோ
வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் நான்கு லட்சம் பேர் ஒரே
நாளில் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இதுவே எதிர் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை
விடுக்க பட்டுள்ளது ,இவ்வாறு
பாதிக்க
பட்ட நாடுகளில் ஐரோப்பா முன்னிலை வகிப்பதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது







