Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் உணவகத்தை உடைத்து புகுந்த திருடர்கள் பியரை குடித்து கொறட்டை விட்ட அதிசயம்

பிரிட்டனில் உணவகத்தை உடைத்து புகுந்த திருடர்கள் பியரை குடித்து கொறட்டை விட்ட அதிசயம்

பிரிட்டனில் உணவகம் ஒன்றுக்குள் புகுந்த இரண்டு திருடர்கள் அங்கிருந்த

பியர்,மற்றும் சீஸ் கேக் போன்ற சில பொருட்களை திருடி மப் அடிக்கும் வாளி ஒன்றுக்குள்

நிரப்பி வைத்து விட்டு அங்கிருந்த பியர்களை உடைத்து குடித்து ,கேக்கையும் சாப்பிட்டுள்ளனர்

போதை தலைக்கேற அப்படியே அந்த கழிவறைக்குள் நித்திரை கொண்டுள்ளனர்

காலை உணவக்கத்தை திறக்க வந்த உரிமையாளர்கள் குறட்டை சத்தம்

வருவதை கண்டு சென்று பார்த்தால் அங்கு திருடர்கள் இருவர் அழகாக

குறட்டை விட்டபடி தூங்கிய வண்ணம் இருந்துள்ளனர் அந்த காட்சிகளை

அப்படியே படம் பிடித்த அவர் பேஸ்புக்கில் பதிவிட்டதுடன் பொலிசாருக்கும் தகவல் வழங்கியுள்ளார்

வந்த போலீசார் அவர்களை கைது செய்து சென்றுள்ளனர்

இப்படியும் நல்ல திருடர்கள் இருக்கத்தான் செய்கின்றனர், வட போச்சே

பிரிட்டனில் உணவகத்தை உடைத்து
பிரிட்டனில் உணவகத்தை உடைத்து
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் புதிய அணுகுண்டு உலைகளை அமைத்து வருகிறது – அமெரிக்கா வெளியிட்ட செய்மதி புகைப்படம்

ஈரான் புதிய அணுகுண்டு உலைகளை அமைத்து வருகிறது – அமெரிக்கா வெளியிட்ட செய்மதி புகைப்படம்

ஈரான் அமெரிக்காவையும் சவாலாக அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து

முன்னெடுத்து வருகிறது ,இதற்கு அமைவாக அது புதிய யுரேனியம் செரிவாக்கல்

தளங்களை, நிலக்கீழ் சுரங்கத்தை அமைத்து உருவாக்க்கி வருகிறது

எனவும் அதற்காக அது இரண்டு புதிய நிலையங்கள்

ஆரம்பிக்க பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது

கடந்த சில வாரங்களுக்குள் மூன்று ஏவுகணை சோதனையை

ஈரான் நடத்தி இருந்தமை குறிப்பிட தக்கது

ஈரான் புதிய அணுகுண்டு உலைகளை
ஈரான் புதிய அணுகுண்டு உலைகளை
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் லொத்தரியில் 79 மில்லியனை அள்ளி சென்ற நபர்

பிரிட்டனில் லொத்தரியில் 79 மில்லியனை அள்ளி சென்ற நபர்

பிரிட்டனில் கடந்த தினம் செய்வ்வாய் கிழமை இடம்பெற்ற யூரோ மில்லியன்

குழுக்களில் கீழ் வரும் இலக்கங்களை பெற்றுThe numbers were 13, 15, 28, 44, 32

and the Lucky Stars were 3 and 12. நபர் ஒருவர்
எழுபத்தி ஒன்பது மில்லியன் பவுண்டுகளை தனதாக்கி சென்றுள்ளார்

வாரம் தோறும் முப்பது மில்லியன் பவுண்டுகளை பல்வேறு பட்ட லொத்தர்

குழுக்கள் மூலம் வெற்றியர்கள் தட்டி செல்வதாக குறித்த நிறுவனம்

தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் லொத்தரியில் 79 மில்லியனை
பிரிட்டனில் லொத்தரியில் 79 மில்லியனை
Posted in உலக செய்திகள்

லண்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் படகு கவிழந்தது – நால்வர் பலி – பலரை காணவில்லை

லண்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் படகு கவிழந்தது – நால்வர் பலி – பலரை காணவில்லை

பிரிட்டனுக்கும் நுழையும்ம் முகாமாக பிரான்ஸ் மற்றும் லண்டன் கலை

வழியாக நுழையும் முகமாக படகு ஒன்றில் பயணித்த சட்டவிரோத குடியேற்றவாசிகள்

பயணித்த படகு திடீரென கவிழ்ந்ததில் அதில் பயணித்த ஐந்து மாதம் மற்றும் எட்டு மாத சிசு உள்ளிட்ட நால்வர் பலியாகினர்

மேலும் பதின் ஐந்து பேர் இராணுவத்தால் மீட்க பட்டுள்ளனர்

மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்

காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது

லண்டனுக்குள் நுழைய முயன்ற
Tலண்டனுக்குள் நுழைய முயன்ற
Posted in உலக செய்திகள்

நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது – உறுதிபடுத்திய நாசா

நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது – உறுதிபடுத்திய நாசா

நிலவில் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

விஞ்ஞானிகள் நினைத்தை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது – உறுதிபடுத்திய நாசா
நிலவில் தண்ணீர் இருக்கலாம் என அங்கீகரிக்கப்படும் பகுதிகளின் :

இந்தியாவின் சந்திராயன் – 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் மேற்பரப்பில் முதன்முதலில் தண்ணீர்

இருப்பதை கண்டுபிடித்தது. ஆனாலும், சந்திராயன் விண்கலம் கண்டுபிடித்தது

நீர் மூலக்கூறுகளா? அல்லது ஹைட்ராகிசில் மூலக்கூறுகளா? என விஞ்ஞானிகளால் கணிக்க முடியமல் இருந்தது.

இந்த நிலையில் நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்தில் இருந்து சோபியா தொலைநோக்கி மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர்

மூலக்கூறை கண்டறிவது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சோபியா தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில் நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தண்ணீர் நிலவின் குறிப்பிட்ட பகுதிகளில் இல்லாமல் பெருமளவு பரவி இருப்பது தெரியவந்துள்ளது. நீர் மூலக்கூறுகள்

நிலவில் பனிசூழ்ந்த பகுதிகள், நிழல்பகுதிகளில் மட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளிலும் பரவி இருப்பது தெரியவந்துள்ளது.

சூரிய ஒளி விழாத நிலவின் தென்துருவ பகுதியில் பனிக்கட்டி வடிவில் 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு நீர் ஆதாரம் உள்ளதாக

தெரிவிக்கப்பட்டது. இதில் விஞ்ஞானிகள் கணித்ததை விட நிலவின் மேற்பரப்பில் அதிக அளவு தண்ணீர் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிலவில் நாம் முன்பு நினைத்ததை விட அதிகமான தண்ணீர் இருக்க கூடும்.

சந்திர துருவ பகுதிகள் நிரந்தரமாக நிழலாடிய குளிர் பள்ளங்களில் பனி சேமிக்கப்படுகிறது.

நிலவின் தென் அரை கோளத்தில் அமைந்துள்ள, பூமியில் இருந்து கண்ணுக்கு புலப்படும் மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றான கிளாவியஸ் பள்ளத்தில் நீர் மூலக்கூறுகள் இருப்பது
கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி நீண்டகாலமாக சூரிய ஒளி படாத பனித்திட்டுகளில் நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமங்களிலும் நீர் மூலக்கூறுகள்

மறைந்து உள்ளன. முந்தைய ஆய்வின்படி அல்லாமல் நிலவில் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் நீர் ஆதாரம் காணப்படுகிறது.

இதுகுறித்து விஞ்ஞானி ஹொன்னிபால் கூறும்போது, “புதிய ஆய்வின் மூலம் நிலவில் சூரிய ஒளி உள்ள பகுதியில் கூட மூலக்கூறு

நீரை வைத்திருக்கிறது என்பதற்கு மேலும் ரசாயண ஆதாரம் கிடைத்துள்ளது.

தொடர் ஆராய்ச்சிகள் மூலம் நீர் எங்கிருந்து வந்திருக்கலாம். அது எப்படி சேமிக்கப்படுகிறது என்பதை நன்கு உணர்ந்து கொள்ள முடியும். சில இடங்களில் தண்ணீர் ஏராளமாக இருப்பதை கண்டால்

அதை மனித ஆய்வுக்கான வளமாக பயன்படுத்தலாம். இது குடிநீர், சுவாசிக்க கூடிய ஆக்சிஜன் மற்றும் ராக்கெட் எரி பொருளாக பயன்படுத்தலாம்” என்றார்.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் எதிர்காலத்தில் மனிதன் அல்லது ஆய்வு கலன்கள் நிலவை அடையும் போது குடிநீர் அல்லது எரிப்

பொருளுக்கான மூலப் பொருட்களாக இந்த நீர் மூலக்கூறுகள் விளங்கும் என்று நாசா தெரிவித்து உள்ளது.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் நவம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறதா ஆக்ஸ்போர்டு கொரனோ தடுப்பூசி

லண்டனில் நவம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறதா ஆக்ஸ்போர்டு கொரனோ தடுப்பூசி

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நல்ல நோய் எதிர்ப்பு – நவம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறதா ஆக்ஸ்போர்டு தடுப்பூசி?

4 கோடியே 37 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு 11 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன.

ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.

இதற்கிடையில், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும், இந்த தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நல்ல மற்றும் ஒரே அளவிலான நோய் எதிர்ப்பு

சக்தியை உருவாக்குவது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி அனைத்து தரப்பினருக்கும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது தெரியவந்துள்ள நிலையில்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இங்கிலாந்தில் விரைவில் பயன்பாட்டிற்குவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் பிரபல செய்தி நாளிதழ் வெளியிட்டுள்ள தவலின் படி, லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முதல் தொகுப்பு வரும் நவம்பர் முதல் வாரத்தில்

(நவம்பர் 2) வழங்கப்படும் எனவும் இதற்காக தயார் நிலையில் இருக்கும்படி மருத்துவமனைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும் விரட்டியடிப்பதும் கைது

செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

இந்நிலையில் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் மீனவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர். பல

லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படை சேதப்படுத்தி உள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இலங்கை கடற்படை அட்டூழியத்தால் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரை திரும்பினர்.

Posted in உலக செய்திகள்

கைது செய்யப்பட்ட குஷ்பு

கைது செய்யப்பட்ட குஷ்பு

ஜனநாயக உரிமையான அமைதியான முறையிலான போராட்டம் நடத்த முயற்சிக்கும்போது எங்களுக்கு அனுமதி தடுக்கப்படுவது

ஏன்? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பாஜகவின் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் – கைது செய்யப்பட்ட குஷ்பு டுவிட்
கைது செய்யப்பட்ட குஷ்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து இன்று பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொள்ள இருந்தனர்.

ஆனால், சிதம்பரத்தில் பாஜக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

ஆனாலும், தொல்.திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்க சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு சிதம்பரம் நோக்கி காரில் பயணம் மேற்கொண்டார். அவரை முட்டுக்காடு அருகே தடுத்து நிறுத்திய போலீசார் தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்க சென்றதற்காக குஷ்புவை கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டது தொடர்பாக குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியதாவது:-

கைது செய்யப்பட்டுவிட்டேன்…. போலீஸ் வாகனத்தில் ஏற்றிச்செல்கின்றனர். பெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம். பிரதமர் மோடி எப்போதும்

பெண்களின் பாதுகாப்பு பற்றியே பேசுவார். அவரின் பாதையில் செல்வோம். அங்குள்ள சிலரின் அட்டூழியங்களுக்கு நாங்கள் தலைவணங்கப்போவதில்லை… பாரத மாதவுக்கு ஜே..

கோழைகள் விடுதலை சிறுத்தைகள். மகிழ்ச்சியில் இருக்காதீர்கள். இது உங்கள் தோல்விதான். எங்கள் சக்தி எவ்வளவு என்று அவர்களுக்கு தெரியும் அதனால் தான் கைது செய்யப்பட்டுள்ளோம்

. பாஜக ஒரு போதும் தலைவணங்கப்போவதில்லை. இந்த மண்ணின் ஒவ்வொரு மகளின் மரியாதையையும் உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை நரேந்திரமோடி மேற்கொள்வார்.

கோழைகள் விடுதலை சிறுத்தைகள். பெண்களுக்கு மரியாதை அளித்தல் உங்களுக்கு கூட்டணியா?

உங்கள் பயணம் பலத்தால் தடுத்து நிறுத்தப்படும்போது நீங்கள் சரியாக பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

மற்ற கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும்போது ஜனநாயக உரிமையான அமைதியான முறையிலான போராட்டம் நடத்த அனுமதி கேட்கும்போது நாங்கள் தடுக்கப்படுவது ஏன்? என

அதிமுக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நான் கேள்வி எழுப்புகிறேன். இந்த பாரபட்சம் ஏன்? அல்லது விடுதலை சிறுத்தை கட்சி கலவரத்தை


ஏற்படுத்த திறனுடையவர்கள் என அதிமுக அரசுக்கு தெரிந்திருப்பதால் அவர்கள் பயப்படுகிறார்களா?’ என்று பதிவிட்டுள்ளார்.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க கோரி மருத்துவர்கள் பிரிட்டன் பிரதமருக்கு கடிதம்

பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க கோரி மருத்துவர்கள் பிரிட்டன் பிரதமருக்கு கடிதம்

பிரிட்டனில் ஆரம்பித்துள்ள பாடசாலை விடுமுறையை அடுத்து வறுமையில்

வாடும் குடும்பங்களின் மாணவர்களுக்கு ஆளும் அரசு இலவச உணவு

வழங்க வேண்டும் என கொரனோ நோயுடன் போராடி மக்களை காப்பாற்றி

வரும் மருத்துவர்கள் அவசர கடிதம் ஒன்றை ஆளும் பிரதமர் ஜோன்சனுக்கு எழுதியுள்ளனர்

இவர்கள் கோரிக்கையை ஏற்று நான்கு மில்லியன்

மாணவர்களுக்கும் இவ்விதம் இலவச உணவு வழங்க படுமா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது ..?

ஜோன்சன் எடுக்க போகும் அந்த முடிவு என்ன என்பதே மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது

Posted in உலக செய்திகள்

பாங்கொக்கில் அந்த நாட்டு தலைவரை பதவி விலக கோரி லட்சம் மக்கள் போராட்டம்

பாங்கொக்கில் அந்த நாட்டு தலைவரை பதவி விலக கோரி லட்சம் மக்கள் போராட்டம்

பாங்கொக்கில் ஆளும் அந்த நாட்டின் அதிபர் உடனடியாக பதவி விலக

கோரி லட்ச கணக்கான மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர் .இது மூன்றாவது

முறையாக இடம் பெற்றுள்ளது எனினும் அந்த நாட்டு அதிபர் பதவி விலக தொடர்ந்து மறுத்து வருகிறார்

சீனாவின் பின்புலத்தில் இந்த மக்கள் போராட்டம் இடம் பெறுகிறது ,சீனாவுக்கு

எதிராக கருத்துக்களை கூறி அமெரிக்காவுடன் ஒட்டி உறவாடி ஆயுதங்களை

வாங்கி குவித்து வருகிறது ,இதனால் இந்த போராட்டம்

வெடித்துள்ளது குறிப்பிட தக்கது

பாங்கொக்கில் அந்த நாட்டு
பாங்கொக்கில் அந்த நாட்டு
Posted in உலக செய்திகள்

ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் – கைக்குண்டு தாக்குதல்

ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் – கைக்குண்டு தாக்குதல்

ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர் இதன்

ஆண்டு நிறைவு விழாவில் பல்லாயிரம் மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்

இதன் பொழுது காவல்துறையினர் மக்கள் மீது துப்பாக்கி சூடு

மற்றும் கைக்குண்டு தாக்குதல் நடத்தினர்

கடந்த போராட்டத்தில் ஐநூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியது குறிப்பிட தக்கது

ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்
ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்
Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

பிரான்சில் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

பிரான்ஸ் நாட்டில் மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

பிரான்சில் மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – 11 லட்சத்தை கடந்தது பாதிப்பு
கொரோனா பரிசோதனை

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம்

முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ஸ்பெயினைப் பின்னுக்கு தள்ளி பிரான்ஸ் 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு

உள்ளது. இதனால் அங்கு வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 38 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் அந்நாட்டில் 116 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து

761 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Posted in உலக செய்திகள்

இன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம்

இன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம்

இன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம் இடம் பெறுகிறது ,குளிர்காலம்

வந்துள்ளதால்
ஒருமணி நேரம் பின் நகர்த்த படுகிறது

உதாரணம் பத்து மணி என்றால் அதுவே ஒன்பது மணியாக பின்

நகர்த்த படுகிறது

வேலைக்கு செல்பவர்கள் உங்கள் நேரங்களை சரி பார்த்து கொள்ளுங்கள்

நித்திரை பிரியர்களுக்கு குஷிதான்

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் நான்கு மாகாணங்கள் முடக்கம் – பல மில்லியன் மக்கள் தவிப்பு

பிரிட்டனில் நான்கு மாகாணங்கள் முடக்கம் – பல மில்லியன் மக்கள் தவிப்பு

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்

தாக்குதலில் சிக்கி நான்கு மாகாணங்கள் மக்கள் நடமாட தடை விதிக்க பட்டுள்ளன

இதனால் பல மில்லியன் மக்கள் முடக்க பட்டுள்ளனர்

வீதிகளில் இராணுவம் ,போலீசார் காவலில் ஈடுபடுத்த பட்டுள்ளதுடன் ,

அதிக விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன .இதனை மீறுபவர்கள் மீது தண்டம் அறவிட படுகிறது

இதே போன்ற நிலை ஒட்டு மொத்த பிரிட்டனில் வரும் நான்கு

வாரங்களுக்குள் அமூல் படுத்த படலாம் என நம்ப படுகிறது

Posted in உலக செய்திகள்

தாலிபான்கள் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை

தாலிபான்கள் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை

ஆபிகானிஸ்தானில் அமெரிக்கா இராணுவத்தால் தேட படும் பட்டியலில்

இணைக்க பட்டு தேட பட்டு வந்த Abu Muhsin al-Masri என்ற முக்கிய

தளபதி நேற்று நடத்திய தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுள்ளார்

மக்கள் நிறைந்த இடமொன்றில் பதுங்கி இருந்த இவர் மீது நடத்த

பட்ட துல்லியமான தாக்குதலில் அவர் பலியானார்

இவர் பல்வேறு பட்ட முக்கிய தாக்குதலுக்கு மொழியாக செயல்பட்டவர் என அரச இராணுவம் தெரிவித்துள்ளது

தமது முக்கிய தாக்குதல் தளபதி பலியானதற்கு பதிலடியாக

தாலிபான்கள் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வாக்களிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வாக்களிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் புளோரிடா மாகாணத்தில் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வாக்களித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார். இவரை

எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார்.download 1தேர்தல் நவம்பர் 3 ஆம்; திகதி

நடைபெற்றாலும், முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை அமெரிக்காவில்

உண்டு. வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவே முன்கூட்டியே

வாக்களிக்கும் வசதி உண்டு இந்நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக புளோரிடா மாகாணத்துக்கு சென்ற ட்ரம்ப்,

அங்குள்ள வாக்களிப்பு மத்திய நிலையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அப்போது அவர் தனது முகத்தில் முககவசம் அணிந்து இருந்தார்.

ஜாதிபதி தேர்தலையொட்டி கிட்டத்தட்ட 5.5 கோடி அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துளளன..

Posted in உலக செய்திகள்

இந்தோனேசியாவில் 4,070 பேர் பாதிப்பு – 128 பேர் பலி

இந்தோனேசியாவில் 4,070 பேர் பாதிப்பு – 128 பேர் பலி

கடந்த இருபக்த்தி நமக்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ

வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி இந்தோனேசியாவில் 4,070 பேர் பாதிக்க பட்டுள்ளனர் மேலும் சுமார் 128 பேர் பலியாகியுள்ளனர்

தொடர்ந்து அதிகமானவர்கள் பாதிக்க பட்டு வருவதால் உயிர்பலிகள் இரட்டிப்பாகலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

நையீரியாவில் தொடரும் வன்முறை 51 பேர் பலி

நையீரியாவில் தொடரும் வன்முறை 51 பேர் பலி

நையீரியாவில் ஆளும் அரசுக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டத்தை

தடுக்க ஆயுத படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிக்கி 51 மக்கள்

பலியாகினர் ,மேலும் மக்கள் ,மற்றும் வன்முறையாளர்கள் நடத்திய திருப்பி

தாக்குதலில் சிக்கி 11 போலீசார் மற்றும் ஏழு இராணுவத்தினர் உட்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்

அது தவிர சுமார் முப்பத்தி ஏழு பொது மக்கள்

படுகாயமடைந்துள்ளனர் ,மக்கள் சொத்துக்களும் சேதமாக்க பட்டுள்ளன .

தொடர்ந்தது அரசுக்கு எதிராக போராட்டங்கள் இடம் பெற்றவண்ணம் உள்ளன

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

வடக்கு லண்டனில் ஒருவர் வெட்டி கொலை

வடக்கு லண்டனில் ஒருவர் வெட்டி கொலை

பிரிட்டன் வடக்கு லண்டன் Westbury Road, Walthamstow, பகுதியில் கடந்த

இரவு 9.20 மணியளவில் பத்தொன்பது வயது வாலிபர் மீது பலத்த கத்தி

வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இதில்

அவர் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார்

இவரது கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

லண்டன் பகுதியில் சாமீப காலமாக இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 12 வயது சிறுமியுடன் செக்ஸ் உறவாட முனைந்த போலீஸ் ஊழியர் கைது

பிரிட்டனில் 12 வயது சிறுமியுடன் செக்ஸ் உறவாட முனைந்த போலீஸ் ஊழியர் கைது

பிரிட்டனில் Cheshire பகுதியை சேர்ந்த ஐம்பத்தி ஒன்பது வயதுடைய

காவல்துறை ஊழியர் ஒருவர் செக்ஸ் உறவு வைத்திட முனைந்துள்ளார்

குறித்த சிறுமிக்கு அது தொடர்பான படங்கள் என்பனவற்றை அனுப்பியுள்ளார்

இதனால் இவரை பின்தொடர்தா நிழல் பிரிவினர் இவரை மடக்கி பிடித்தனர் ,

இது தொடர்பான நீதி விசாரணியாகில் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம்

உள்ளது ,இவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்க பட்டால் பல்லாண்டு

சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது