Posted in இலங்கை செய்திகள்

மக்களை சந்திக்க நேரமில்லை எனக் கூறும் வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன்

மக்களை சந்திக்க நேரமில்லை எனக் கூறும் வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன்

வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரை சந்திக்க செல்லும் மக்களை தற்போது சந்திக்க நேரமில்லை எனக் கூறி

பிரதேச செயலாளர் அனுப்பி வைப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்பங்களை சமர்ப்பித்தும், நேர்முகத் தேர்வில் தம்மை

உள்வாங்கவில்லை எனத் தெரிவித்து பாதிக்கப்பட்டோர் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் அவர்களை சந்திக்க இன்று சென்றிருந்தனர்.

இதன்போது நான் வேலையாக உள்ளேன். இன்று சந்திக்க முடியாது. உங்கள் பிரச்சனையை கடிதமாக எழுதி கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோர் கடிதத்தை எழுதி கொடுக்க

சென்ற போது பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் நேர்முகத் தேர்வில் இருந்தமையால் அவர்களிடம் கடிதத்தை கொடுக்க
முடியவில்லை. அதேபோல் பிரதேச செயலாளர் தனக்கு

நேரமில்லை எனக் கூறியதால் அவரிடம் கொடுக்காது கடிதத்துடன் பாதிக்கப்பட்டோர் திரும்பிச் சென்றுள்ளனர்.

குறித்த நேர்முகத் தேர்வுகள் 3 நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ள நிலையில் தமக்கு தீர்வினை பெற முடியாமையால் வேலைவாய்ப்பு

மறுக்கப்பட்டு எதிர்காலமே பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ள பாதிக்கப்பட்டோர் இது தொடர்பில்

ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும்
தெரிவித்துள்ளனர்.

மக்களை சந்திக்க நேரமில்லை
Posted in இலங்கை செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் சுகயீன போராட்டம் -photo

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் சுகயீன போராட்டம் -photo

நாடு பூராகவும் சம்பளப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் சுகயீன லீவுப் போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளனர்.

அதற்கமைவாக வவுனியாவிலும் ஆசிரியர்கள் சுகயீன லீவுப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமையால் பாடசாலைகளுக்கு

ஆசிரியர்கள் செல்லவில்லை. அத்துடன் மாணவர்களும் பாடசாலைகளுக்கு செல்லாமையால் பாடசாலைகள் வெறிச் சோடிக் காணப்படுகின்றது.

மேலும், ஆசிரியர் தமது சுகயீன லீவினை அறிவிக்கும் பொருட்டு வவுனியா பிரதான தபாலகத்தில் குவிந்திப்பதையும் காணக் கூடியதாக இருந்தது.

பல்வேறு கோரிக்கைகளை

Posted in இலங்கை செய்திகள்

சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிக்கான வெளியில்லை, ஈடுசெய் நீதியே இன்றைய தேவை : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிக்கான வெளியில்லை, ஈடுசெய் நீதியே இன்றைய தேவை : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் 43ஆம் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளதோடு, சிறிலங்கா தொடர்பிலான தனது வாய்மொழி அறிக்கையினை ஆணையாளர் அவர்கள்

முன்வைக்கவுள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோளொன்றினை அனைத்துலக சமூகத்திற்கு விடுத்துள்ளது.

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனிதவுரிமைகளை ஊக்கி வளர்த்தல் ஆகியவன்றை அடிப்படையாக கொண்டு, கொண்டுவரப்பட்ட ஐநா மனிதவுரிமைப்

பேரவையின் 30/1 தீர்மானத்தின் நிலைமாறுகால நீதிக்கான முன்முயற்சி காலவாதியாகி விட்டபடியால், அதற்கு உயிரூட்டும்

முயற்சியைக் கைவிட்ட, அதற்கு மாறாக ஈடுசெய்நீதிச் செயல்நிரல் ஒன்றை கைக்கொள்ளும்படியும் அனைத்துலக சமூகத்திடம் கோரப்பட்டுள்ளது.

சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புவதும்,

சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிக்கான வெளியில்லை, ஈடுசெய் நீதியே இன்றைய தேவை : பிரதமர் வி.உருத்திரகுமாரன்


இனப்படுகொலையினை தடுப்பதற்கான அனைத்துலக உட்படிக்கைக்கு அமைய,சிறிலங்கா இனப்படுகொலை அரசினை,

அனைத்துலக நீதிமன்றத்திற்கு அனுப்புவதும், ஈடுசெய் நீதிச் செயல்நிரலாக அமைய வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

ஐ.நா தீர்மானத்தின்படி தனக்குள்ள நிலைமாற்ற நீதிக் கடப்பாடுகளை வேண்டுமென்றே சிறிலங்கா நான்காண்டு காலத்தை நிறைவேற்றத் தவறியயிருந்த நிலையில்,

மனிதவுரிமைப் பேரவை சென்ற ஆண்டு அமர்விலேயே சிறிலங்கா தொடர்பான தன் வழியை மாற்றிக் கொண்டு, ஈடுசெய்நீதிச் செயல்நிரல் ஒன்றைக் கைக்கொண்டிருக்க வேண்டும் என

தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், மாறாக அத்தீர்மானத்துக்குக்

கெடுமாற்றம் தந்து தள்ளிப்போட முடிவு செய்ததன் விளைவாக, சிறிலங்காவின் தண்டனை விலக்கிய குற்றப் பண்பாடு மேலும்

ஊன்றி வலுப்பட்டதோடு, ஆய்த மோதலின் போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்குப் பெரிதும்

பொறுப்பானவர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நிலையும் ஏற்பட்டுவிட்டது எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐநா மனிதவுரிமைப் பேரவையின் நிலைமாறுகால நீதிப்பற்றுதல் சிறிலங்காவைப் பொறுப்புக்கூறல், நீதி ஆகியவற்றை நோக்கி

நகர்த்துவதற்குப் பதில் அவற்றிலிருந்து அது விலகிச் செல்வதற்கே அது முடிவில், வழிகோலிற்று எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், ஐ.நா 30/1தீர்மானத்திலிருந்து சிறிலங்கா

ஒருதரப்பாக விலகிக் கொள்வது மனிதவுரிமைகளையும் பொறுப்புக்கூறலையும் தெளிவாக மறுதலிப்பதே ஆகும் எனத் தெரிவித்துள்ளதோடு, ஐநாவின் சக உறுப்பரசுகளை அது துச்சமாக

மதிப்பதையே இது வெளிப்படுத்துகிறது. ஆகவே இந்தக் கட்டத்தில் நிலைமாற்ற நீதி பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் பொருளில்லை.

சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிக்கான வெளியில்லை, ஈடுசெய் நீதியே இன்றைய தேவை : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

சரியாகச் சொன்னால் ஈடுசெய் நீதியே இன்றையத் தேவையாகும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இடித்துரைத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 2015 தேர்தலில் இராசபட்சே தோற்று, சிறிசேனா அதிகாரத்துக்கு வந்த போது, சர்வதேச சமுதாயம் இந்த ஆட்சி மாற்றத்தை நிலைமாறுகால நீதி

அடைவதற்கு ஒரு வாய்ப்பாகப் பார்த்தது. ஆனால் உண்மை வேறுவிதமாக இருப்பதை கடந்த ஐந்து ஆண்டுக் காலம் காட்டி

விட்டது. பார்க்கப் போனால், சிறிசேனா அரசு நிலைமாற்ற நீதியை தண்டனை விலக்கிய குற்றத்தின் நவீன வடிவமாகப் பயன்படுத்திக் கொண்டது. காணாமற்போனவர்களில் பெரும்பாலார் இறந்து

விட்டார்கள் என்று சிறிலங்காவின் தலைமையமைச்சர் விக்கிரசிங்கே அறிவித்து விட்ட நிலையில் காணாமற்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டது என்பது சிறிலங்கா அரசு ஐநா

மனிதவுரிமைப் பேரவையையும் பரந்த சர்வதேச சமுதாயத்தையும் ஏமாற்றுவதற்கே நிலைமாறுநீதியைப் பயன்படுத்திக் கொண்டது என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

நிலைமாறுகால நீதிக்கான முன்னிபந்தனைகளில் ஒன்று: சம்பந்தப்பட்ட தரப்பு தான் இழைத்த மீறல்களை

ஏற்றுக்கொள்வதாகும். ஆனால் மீறல்கள் நடந்தன என்பது சிறிலங்காவில் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவே இல்லை.

சொல்லப்போனால் திரும்பத்திரும்ப நாம் கண்டது மறுப்புகளும் வெற்றி மமதையுமே ஆகும்.

அரசே மோசமான குற்றங்கள் புரிந்து, குற்றங்களுக்கு இரையானவர்களும் தப்பிப் பிழைத்தவர்களும் சார்ந்த குழுவுக்கு எதிராக – சிறிலங்காவைப் பொறுத்த வரை தமிழ் மக்களுக்கு

எதிராக – பரவலான நிறுவனவகைப் பாகுபாட்டின் சிற்பியும் கங்காணியுமாக இருக்கும் போது, பொறுப்புக் கூறல் மற்றும்

நிர்வாகச் சீர்திருத்தச் செயல்வழிகளில் அரசே தொடர்புடையதாக இருக்கும் வரை துயரப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழியே

இல்லை என்பதைத்தான் வரலாறு திரும்பத் திரும்ப நமக்குக் காட்டியுள்ளது.

இராசபட்சேக்கள் சென்ற ஆண்டு அதிகாரத்துக்கு மீண்டிருப்பதும் அது முதல் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளும் தமிழர்கள் சிறிலங்காவில் சமத்துவம் அல்லது கண்ணியத்துடன் வாழ

முடியவே முடியாது என்பதைக் காட்டுகின்றன. இராசபட்சே சிங்கள வாக்குகளைக் கொண்டு பெற்ற வெற்றி சிறிலங்கா வளைந்து

கொடுக்காத இனநாயக சிங்கள பௌத்த அரசு என்பதையும் அதில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க இடமே இல்லை எனப்தையும் காட்டும். சிங்களப் பெரும்பான்மையின் ஆதரவு இல்லாமல் எந்த அரசியல்

தீர்வு முயற்சியிலும் ஈடுபட மாட்டேன் என்று அதிபர் கூறியிருப்பது இதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது ஜனநாயகத்தின்

போர்வையில் பெரும்பான்மையின் கொடுங்கோன்மையே தவிர வேறன்று.

மேலும், 2020 பிப்ரவரி 4ஆம் நாள் சிறிலஙகாவின் அதிகாரபூர்வ சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் தேசிய கீதம் தமிழில் பாடுவதற்கு அரசாங்கம் தடை விதித்திருப்பது தமிழர்களுக்கு எதிரான பகைச்

செயலும், மீளிணக்கத்தில் அரசுக்கு ஆர்வமில்லை எனக் காட்டும் அழுத்தமான அடையாளமும் ஆகும். நீதியும் மீளிணக்கமும்

நிலைமாற்று நீதியின் இரட்டைத் தூண்கள். சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிக்கு இடமே இல்லை என்பதாகும்.

தமிழ் மக்களின் இருப்பையே இல்லாதழிக்க பாரிய மனிதஉரிமை மீறலைச் செய்தவர் இப்போது சிறிலங்காவின் அதிபராக இருக்க, அரசுத் தலைவருக்குரிய சட்டக்காப்பை ஊடுருவி அதிபர்

இராசபட்சேயை நீதியின்முன் நிறுத்தும் திறங்கொண்ட ஒரே மன்றம் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றமே. தமிழர் இனவழிப்புக்குப் பெரிதும் பொறுப்பான ஏனைய உயர்நிலை

சிறிலங்க அரசதிகாரிகள் மீதும் படையதிகாரிகள் மீதும் வழக்குத் தடுப்பதற்கு இப்போதுள்ள ஒரே மன்றமும் அனைத்துலக்க் குற்றவியல் நீதிமன்றமே. ஆகவேதான் நாடுகடந்த தமிழீழ

சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிக்கான வெளியில்லை, ஈடுசெய் நீதியே இன்றைய தேவை : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

அரசாங்கம் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப்பி வைக்குமாறு ஐநாவைக்

கேட்டுக் கொள்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இக்கோரிக்கை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக சமூகத்திற்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

சிறிலங்கா தொடர்பான 2012 ஐநா உள்ளக ஆய்வறிக்கை (பெற்றி அறிக்கை) கூறியுள்ள படி, போரின் இறுதி மாதங்களில் இப்போதைய அதிபர் கோத்தபய இராசபட்சே சிறிலங்காவின்

பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய போது, சிறிலங்கா இராணுவம் 70.000 தமிழ்ப் பொதுமக்களைக் கொன்றது. 2016இல்

வலுக்கட்டாயக் காணாமற்போதல்கள் பற்றிய ஐநா செயற்குழு அறிக்கையிட்டுள்ள படி, அதன் முன்னுள்ள காணாமற்போதல் வழக்குகளில் இரண்டாம் பெரிய தொகை

சிறிலங்காவுக்குரியதாகும். காணாமற்போன ஆயிரக்கணக்கான தமிழர்களையும் சேர்த்துக் கொள்ளும் போது, உயிரிழந்த தமிழர் தொகை போர் முடிவில் 100,000க்கு மேல் வரும்.

2015ஆம் ஆண்டு சிறிலங்காவின் கூட்டு முன்மொழிவாக மனிதவுரிமைப் பேரவையால் ஒருமனதாக இயற்றப்பட்ட 30/1 தீர்மானம் சிறிலங்காவைச் சில உறுதிப்பாடுகளுக்கு

ஒப்புக்கொடுக்கச் செய்துள்ளது; இதன் படி, சிறிலங்காவில் இடம்பெற்ற 26 ஆண்டுக்காலப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் உள்ளி

ட்ட பன்னாட்டுக் குற்றங்கள் புரிந்தவர்களைப் பொறுப்புக்கூறச் செய்திட அயல்நாட்டு நீதியர்களும் சட்டத்தரணிகளும் அடங்கலான

நீதிப் பொறிமுறையை நிறுவவும், நிலைமாற்ற நீதி வழிமுறைகளில் ஒன்றாக உண்மை மற்றும் மீளிணக்க ஆணையம் அமைக்கவும் சிறிலங்கா உறுதியளித்தது.

மனிதவுரிமைகளுக்கான ஐநா உயராணையர் மிசேல் பசலே சிறிலங்கா தொடர்பில் மிக அண்மையில் தந்த அறிக்கை இந்த வாரம் முன்னதாக வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையில் அவர்

கூறியிருப்பது சிறிலங்காவின் ஏமாற்றுத்தனத்தை மேலும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. 2015 முதற்கொண்டு ‘கடந்த கால மீற்ல்களுக்குப் பொறுப்பான தனியாட்களை அகற்றவும்,

சித்திரவதைக்கும் வலுக்கட்டாயக் காணாமற்செய்தல்களுக்கும், நீதித்துறைக்கு அப்பாற்பட்ட சாகடித்தல்களுக்கும் வழியமைத்துக் கொடுத்த கட்டமைப்புகளையும் நடைமுறைகளையும் கலைக்கவும்,

இக்குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் பெரிதாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்கிறார் உயராணையர். அதாவது தீர்மானத்தின் செயலாக்கம் ஐநா மனிதவுரிமைப்

பேரவையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தாலும், அப்பேரவையின் நிலைமாற்ற நீதி முயற்சி தோற்று விட்டது என்று பொருள்.

உயராணையர் பசேல் தன் அறிக்கையில் மேலும் சொல்கிறார்: ‘ஏற்கெனவே மனிதவுரிமைப் பேரவைக்கு உயராணையர் அளித்த அறிக்கைகளில் வெளிச்சமிட்டுக் காட்டிய நெடுங்காலத்திய

அடையாளக்காட்டான வழக்குகளில் புலனாய்வு செய்வதிலும் சிறிலங்காவின் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுப்பதிலும் சொற்ப முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது…. இந்த வழக்குகளில் முன்னேற்றம்

இல்லை என்பது குற்ற நீதியமைப்பில் பொறுப்புக்கூறலுக்கு அமைப்புசார் தடைகள் இருப்பதையே துலக்கமாக வெளிப்படுத்துகிறது.’ அதாவது பன்னாட்டு மனிதவுரிமைச்

சட்டங்களையும் பன்னாட்டு மாந்தநேயச் சட்டங்களையும் மீறிய கொடுங்குற்றங்களுக்காக அரசு அலுவலர்களைப் பொறுப்பாக்க சிறிலங்காவுக்கு விருப்பமும் இல்லை, திறனும் இல்லை. இதற்குத்

தலையாய காரணம் அரசே இந்தக் கொடுங்குற்றங்களைச் செய்தது என்பதே. விருப்பமின்மையும் திறனின்மையும் சேர்ந்து கொள்ளும் போது சரியாக இந்தச் சேர்க்கையைக் கவனித்து வெற்றி

கொள்ளத்தான் பொதுவாக ஈடுசெய்நீதியும் குறிப்பாக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றமும் வடிவமைக்கப்பட்டன.

உயராணையர் தமது மிக அண்மைய அறிக்கையில் கூறியிருப்பது போல், தண்டனை விலக்கிய குற்றநிலை தொடர்வது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். ஆட்சியாளர்கள் ‘கடந்த காலத்தை

முழுமையாகக் கையாளத் தவறுவதால் வன்முறையும் மனிதவுரிமை மீறல்களுமான சுழல் திடும்பத் திரும்ப இடம்பெறும் ஆபத்துள்ளது.’ இதற்கு சென்ற ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக

நிகழ்ந்த வன்முறையையே சான்றாகக் காட்டலாம்.
சிறிலங்க உள்நாட்டுப் போரின் முடிவு தொடர்பான மனிதவுரிமை மீறல்கள் குறித்து ஐநா பொதுச் செயலாளர் பான் கி-மூன்

அவர்களுக்கு அறிவுரைத்த சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் தொடர்பான மூவல்லுநர் குழு உறுப்பினர்களில் ஒருவரான ஸ்டீபன் ராட்னர் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் இண்டர்நேசனல் லா என்ற

ஏட்டில் எழுதியுள்ளார்: ‘சட்டத்துக்கும் நட்த்தைக்கும் இடையே பாலம் அமைப்பதில் மூன்று தெளிவான தடைகள் இருப்பதையும் சிறிலங்காவின் நேர்வு காட்டுகிறது.

முதலாவதாக, மனிதவுரிமை மீறிய கொடுமைகளுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான சட்டத்தில் பெரும்பகுதி

இப்போதைய ஆட்சியாளர்கள் முன்சென்ற ஆட்சியாளர்களைப் பற்றித் தீர்ப்புரைக்கும்படியான நிலைமைகளில் – அதாவது

உண்மையான நிலைமாற்ற நீதி நேர்வுகளில் – உருவாகியிருப்பதாகும்.

நிலைமாற்றமல்லாத நிலைமைகளில் பொறுப்புக்கூறலுக்கான தடைகள் பெரிதும் பெருகி விடுகின்றன. ஏனென்றால் தலைவர்கள்

இன்னுமதிகமாகப் பணயம் வைக்க வேண்டியதாகிறது: முழுப் புலனாய்வு என்பது சொத்துகள் முடக்கப்படுவதற்கும்

பொதுவெளியில் அவமானப்படுவதற்கும், ஏன், உள்நாட்டு, அயல்நாட்டு அல்லது பன்னாட்டுத் நீதிமன்றத்தில்

உசாவப்படுவதற்கும் (வழக்குவிசாரணை செய்யப்படுவதற்கும்) கூட வழிகோலக் கூடும்.

இன்னமும் கூட அரசாங்க அலுவலர்கள் தங்களைத் தாங்களே புலனாய்வு செய்து கொள்ள விரும்புவதில்லை என்பதே நிலைமாறுகால நீதிக்கு வரம்பிடும் கொள்கையாக உள்ளது.

தோற்ற தரப்பின் சட்ட மீறல்களைப் புலனாய்வு செய்யவே அந்த அரசுகள் விரும்பக்கூடும் – தமிழீழ விடுதலைப் புலிகளின்

குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா இப்படிச் செய்ய விரும்பலாம்…. ஆனால் இத்தகைய புலனாய்வுகள் வெற்றியாளரின் நீதியாக மட்டுமே தெரியும்.’


இராசபட்சே அதிபராக இருந்த வேளை, 2010இல் பாதுகாப்புச் செயலராக இருக்கும் போதே பிபிசிக்கு அளித்த பேட்டியில் சிறிலங்கா இராணுவம் போர்க் குற்றங்கள் புரிந்த ஒரே ஒரு நேர்வு

கூட இல்லை’ என்று அந்தச் செய்தியாளரிடம் கூறினார். 2012 பிபிசி பேட்டியில் அரசுப்படைகள் மக்களைக் காணாமற்செய்தல் பற்றிக் கேட்ட போது, கோத்தபயா இந்தக் குற்றச்சாட்டை மறுத்து விட்டுச்

சொன்னார்: ‘நான் பாதுகாப்புச் செயலர். இது குறித்துப் புலனாய்வு செய்து விட்டேன். இந்த ஆட்கள் சொல்வதை எடுத்துக் கொள்ளாமல்

நான் சொல்வதை எடுத்துக் கொள்ளுங்கள்.’ இதற்கு முற்றிலும் முரணாகத்தான் அண்மையில் அவர் ‘காணாமற்போன அனைவரும் இறந்து விட்டார்கள்’ என்று சொல்லியுள்ளார்.

காணாமற்போனவர்கள் உண்மையில் இறந்து விட்டார்கள் என்றும், இறந்தவர்களைத் தன்னால் மீட்டுக் கொண்டுவர முடியாது என்றும் சிறிலங்கா அதிபர் கூறியிருப்பதை உயராணையர் குறைத்துக்

காட்டினார் என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறோம். ஐநா மனிதவுரிமைப் பேரவையும் பிற பன்னாட்டு அமைப்புகளும் அதிபர் இராசபட்சே முன்னுக்குப் பின் முரணான தன் அறிவிப்புகளை

இணக்கப்படுத்திக் காட்ட வேண்டும் என்றும், தன்னிடமிருக்கும் எல்லாத் தகவல்கலையும் சிறிலங்கா தகவலுரிமைச் சட்டத்தின் படி அமைக்கப்பட்ட சிறிலங்கா தகவலுரிமை ஆணையத்திடம்

ஒப்படைக்க வேண்டும், தெரிந்து கொள்ளும் உரிமை, உண்மையறியும் உரிமை ஆகிய பன்னாட்டுக் கொள்கைகளுக்கு இணங்க ஐநாவிடமும் ஒப்படைக்க வேண்டும்.

மாறாக, உயராணையர் பசலே தமது மிக அண்மைய அறிக்கையில் குறிப்பிடுகிறார்: ‘கடந்த காலத்தைக் கையாள்வதை விட வளர்ச்சிக்கே அரசு முன்னுரிமை கொடுப்பதாகத் தெரிகிறது.

சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிக்கான வெளியில்லை, ஈடுசெய் நீதியே இன்றைய தேவை : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

2030ஆம் ஆண்டின் செயல்நிரலில் நிலைத்த வளர்ச்சி இலக்குகள் 16இன் படி ‘அமைதியான, அனைவருக்குமான சமூகங்களை ஊக்குவிப்பதும், அனைவருக்கும் நீதிபெறும் வாய்ப்பு வழங்குவதும்,

அனைத்து நிலைகளிலும் திறமிக்க, பொறுப்பான, அனைவருக்குமான நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதும்

அடங்கும். மனிதவுரிமைகளும் நீதியும் பொறுப்புக்கூறலும் வெளிப்படைத்தன்மையும் ஆகிய இவையெல்லாம் மக்கள்

சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வளமாகவும் வாழ்வதற்கேற்ற சூழல் மலரச் செய்வதற்கு முன்தேவைகளாக

அறிந்தேற்கப்படுகின்றன. இவற்றுக்கான ஒப்புக்கொடுப்புதான் 2030 செயல்நிரலின் அச்சாணியாகும்.’

5/1 தீர்மானத்தில் பட்டியிலிடப்பட்டுள்ள மனிதவுரிமைப் பேரவையின் முதல் குறிக்கோள் ‘களத்தில் மனிதவுரிமைகளை

மேம்படுத்துவது’ ஆகும். மாறாக 30/1 தீர்மானம் இயற்றப்பட்டது முதல் சிறிலங்காவில் நாம் கண்டிருப்பது என்னவென்றால்

மனிதவுரிமைகள் மேலும் தாழ்ந்து போயுள்ளன. இதில் வியப்பதற்கொன்றுமில்லை.

நிலைமாறுகால நீதி என்பது இனவழிப்பை நிறுத்த விரும்பாத அரசுகளின் உளச்சான்றை சாந்தப்படுத்த பொறுப்பைத்

திசைதிருப்பப் பயன்படுகிறது. துயரப்பட்டவர்களுக்கும் உயிர்பிழைத்தவர்களுக்கும் அது பயன்படுவதில்லை என

நிலைமாறுகால நீதி அறிஞர் மகாவ் டபிள்யூ. முட்டுவா அவர்கள் ருவாண்டா தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே மனிதவுரிமைப் பேரவை தன் கடமையை நிறைவேற்றும் வகையில், நிலைமாறுகால நீதியிலிருந்து நகர்ந்து போர்க்குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும்

இனவழிப்புக் குற்றமும் புரிந்த சிறிலங்கக் குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்யும் வகையில் மாறுபட்ட, செயலுக்குகந்த,

அணுகுமுறையை, அதாவது ஈடுசெய் நீதியைக் கைக்கொள்வது அவசர அவசியமாகும். நிலைமாறுகால நீதியால் ஒருபோதும்

சாதிக்க முடியாததை, ஒருபோதும் சாதிக்காததை ஈடுசெய் நீதியால் சாதிக்க முடியும் என அனைத்துலக சமூகத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

மகனை அயன் பொக்ஸல் சூடு வைத்த தாய்

மகனை அயன் பொக்ஸல் சூடு வைத்த தாய்

இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கல்வி கற்க சிறுவன் செல்லாது
நித்திரை கொண்டுள்ளான் ,அவ்வேளை அவனை எழும்புமாறு கேட்டுள்ளார் ,

அவனை அதனை தட்டி கழித்து நித்திரை கொண்டுள்ளான் .

கோபமடைந்த தாய் ,அயன்பொக்ஸை சூடாக்கி சிறுவன் உடல் முழுவதும் கதற கதற சூடு வைத்துள்ளார் .

இதனை அறிந்த அயலவர்கள் பாடசாலையிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் வீடும் வந்து சிறுவன் நிலையறிந்து மருத்துவமனையில் அவனை சேர்த்தனர்

தற்போது தாய் காவல்துறையால் கைது செய்யப்படும் நிலையில் உள்ளார் ,இப்படியும் அரக்கி தனம் கொண்ட தாய் மார் இருக்கத்தான் செய்கின்றனர்

மகனை அயன் பொக்ஸல் சூடு

Posted in இலங்கை செய்திகள்

ஐநாவில் இன்று முழங்கும் இலங்கை

ஐநாவில் இன்று முழங்கும் இலங்கை

இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகளில்

இருந்து விலகுவது குறித்து வெளிவிவகார அமைச்சர் தமது உரையின் ஊடாக அறிவிக்கவுள்ளார்.

அதேபோல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆற்றவுள்ள வாய்மூலமான உரைக்கும்

வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேபோல் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்ட 30/1 மற்றும் 2017 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட 34/1

தீர்மானங்களின்படி இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள், மனித உரிமைகள் மேம்பாடு ஆகியவற்றை உறுதிசெய்வதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

இதற்கமைய 30/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்பு செய்ய

வேண்டும் என பிரித்தானியா தலைமையில் கடந்த 2009 ஆம் ஆண்டு 40/1 என்ற தீர்மானம் இலங்கையின் இணை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்டது.

இவ்வாறு வழங்கப்பட்ட இணை அனுசரனையையே விலக்கிக்கொள்ள இலங்கை தீர்மானித்துள்ளமை குறிப்பிடதக்கது.

ஐநாவில் இன்று முழங்கும்
Posted in இலங்கை செய்திகள்

மகளை கர்ப்பம் ஆக்கிய தந்தை- இலங்கையில் நடந்த பயங்கரம்

மகளை கர்ப்பம் ஆக்கிய தந்தை- இலங்கையில் நடந்த பயங்கரம்

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ தோட்ட பகுதி ஒன்றில் 15 வயது மகள் கர்ப்பம் தரித்த சம்பவம்

தொடர்பில் தந்தையை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (25) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி வயிற்றுவலி காரணமாக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பொகவந்தலாவ

வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா, கிழங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பரிசோதனைக்கு ஈடுபடுத்தபட்ட போதே குறித்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ளதாக,

வைத்தியசாலையின் ஊடாக பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதற்கு அமைய சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

வைரஸ் நோய்த் தொற்றுக்கு சுமார் 80,000 பேரை பாதிப்பு

வைரஸ் நோய்த் தொற்றுக்கு சுமார் 80,000 பேரை பாதிப்பு

சீனாவில் தோன்றி பல நாடுகளிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து

உயர்ந்து வருவது பொதுமக்களை அச்சத்திலும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்கு

இதுவரை சுமார் 77,000 க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. உலகளவில் இந்த நோய்த் தொற்று சுமார் 80,000 பேரை பாதித்துள்ளது.

இதனிடையே கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,700 ஐ கடந்துள்ளது.

பலி மற்றும் நோய்த்தொற்று எண்ணிக்கை சீனாவில் குறிப்பாக வுஹான் மாகானத்தில் தான் அதிகம் உள்ளது. சீனாவை தொடர்ந்து

தென் கொரியாவில் தான் கொரோனா வைரஸ் அதிக பேரை பாதித்துள்ளது. அங்கு 970 பேர் இதுவரை பாதித்துள்ள நிலையில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

இதேபோல ஐரோப்பாவில் அதிக அளவாக இத்தாலியில் 270 பேருக்கு நோய்த்தொற்றும், 10 பேர் பலியாகியுள்ளனர். ஈரானில் 14 பேர் பலியாகியுள்ளனர்.

வைரஸ் நோய்த் தொற்றுக்கு
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணை கடத்திய கும்பல் – துரத்தி பிடித்த இராணுவம்

பெண்ணை கடத்திய கும்பல் – துரத்தி பிடித்த இராணுவம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் திருகோணமலையை சேர்ந்த 25வயதுடைய பெண்ணொருவர்

(முஸ்ஸிம்) தமிழ் இளைஞர் ஒருவனை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விடயம் கடந்த சில மாதங்களுக்கு பெண்ணின்

வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இதன் போது பெண்ணின் குடும்பத்தினருக்கிடையே சண்டைகள் இடம்பெற்றுள்ளது.

காதலுக்கு பெற்றோரின் எதிர்ப்பால் குறித்த பெண் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பெண்கள் விடுதியில்

தங்கிருந்து பணியாற்றி வந்துள்ளார் (அவரது வீட்டிற்கு செல்லாது). இன்று மதியம் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த சில நபர்கள்

பெண்ணை வலுக்கட்டாயமாக வானில் ஏற்றி திருகோணமலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பெண்ணை வலுக்கட்டாயமாக

இழுப்பதினை அவதானித்த வைத்தியசாலை நிர்வாகத்தினர் கிளிநொச்சி இரானுவ தலைமையகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கிளிநொச்சி இரானுவ தலைமையகத்தினர் வவுனியா இரானுவ தலைமையத்திற்கு தகவலை வழங்கி ஒமந்தை இரானுவ சாவடியில் குறித்த வானை மடக்கி பிடித்தனர். இதன் போது வாகனத்தில்

இருந்த சாரதி உட்பட ஒன்பது நபர்களை இரானுவத்தினர் பிடித்து அவர்கள் பயணித்த வாகனத்துடன் அவர்களை ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் ஆயர்படுத்தினர்கள்.

பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றவர்கள் பெண் உறவினர்கள் என தெரியவருவதாக தெரிவித்த ஒமந்தை

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

சதுரங்க போட்டியில் சாய்ந்தமருது

சதுரங்க போட்டியில் சாய்ந்தமருது அல் – ஹிலாலில் 7 பேர் வெற்றி

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மாவட்ட மட்ட சதுரங்க போட்டியில் சாய்ந்தமருது அல் – ஹிலால் பாடசாலையில் இருந்து 7 மாணவர்கள் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்.

இப்போட்டி அல் – ஹிலால் வித்தியாலயத்தில் (22) நடைபெற்றது.

படத்தில் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைசால் பிரதி அதிபர் எம்.சீ.என். றிப்கா விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எம்.எஸ்.எம்.

நுஸ்கி மற்றும் பகுதித்தலைவர்கள் ஆசிரியர் உட்பட எம்.டி.எப். சைனப் ஹானி, எம்.டி.எப். ஆபியா சைனப், ரீ.ஏ. அப்துல்லாஹ்

செய்மி, ஏ.ஆர்.ஏ. ஆதிப், ஜே.ஏ.பிஹாம், ஏம்.ஐ.ஏ. இமாஸ் ஆகிய 7 மாணவர்களும் காணப்படுகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

இராதாகிருஸ்ணன் ஒரு மில்லியன் நிதி ஓதுக்கீட்டில் -பாதை திறப்பு

நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை நியுபோட்மோர் தோட்டம் பொது மக்களின் வேண்டுகோலுக்கு அமைய நுவரெலியா மாவட்ட

பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும்

முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் ஒரு மில்லியன் நிதி ஓதுக்கீட்டின் மூலம்

நிர்மாணிக்கப்பட்ட கொங்ரீட் பாதை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட பொழுது

இராதாகிருஸ்ணன் ஒரு மில்லியன்
Posted in இலங்கை செய்திகள்

திருடர்கள் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்குங்கள் – மனோ கணேசன்

திருடர்கள் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்க விருப்பு வாக்கை ஒழுங்காக பயன்படுத்துங்கள்

தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி

அடுத்த பாராளுமன்றம் திருடர்கள் இல்லாத பாராளுமன்றமாக இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். ஆளும்கட்சி, எதிர்கட்சி எல்லா தரப்பிலும் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், கட்சி

தலைவர்களுக்கு, கட்சிகளுக்கு சிலவேளை “கள்ளர்கள்” என அறியப்பட்டவர்களுக்கும் வேட்பாளர் நியமனம் வழங்க வேண்டி வரும். நடைமுறை சிக்கல்கள் காரணமாக இது தவிர்க்க முடியாதது.

ஆகவே “திருடர்” இல்லாத பாராளுமன்றம் உருவாவது மக்கள் கைகளில்தான் உள்ளது. கொள்கை அடிப்படையில் நீங்கள் விரும்பும் கட்சி சின்னத்துக்கு வாக்களியுங்கள். ஆனால், உங்கள்

திருடர்கள் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்குங்கள் – மனோ கணேசன்

விருப்பு வாக்கை “திருடர்களுக்கு எதிராக” வழங்குங்கள். யார் நல்லவர், வல்லவர் என அறிந்து, அந்த நல்ல, வல்லவர்களுக்கு மட்டுமே விருப்பு வாக்கை வழங்குங்கள். சிங்கள வாக்காளர்கள்

மத்தியில் இன்று இந்த சிந்தனை வேகமாக ஒரு இயக்கமாகவே பரவி வருகிறது. தமிழ் மக்கள் மத்தியிலும் இந்த சிந்தனை எழுச்சி பெற வேண்டும் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும

மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர், கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து கூறிய மனோ எம்பி மேலும் கூறியதாவது,

எதிர்வரும் தேர்தலில் வாக்காளர்கள் விருப்பு வாக்கை கவனமாக வழங்க வேண்டும் என கோர விரும்புகிறேன். அதாவது “மக்கள் வரிப்பணத்தை தம் நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு திருடாத”,

“வெளிநாட்டு முதலீட்டாளர்களை நிர்பந்தித்து கமிசன் பெறாத”, “மதுசாலை பர்மிட் இல்லாத”, “எதனோல் வர்த்தகம் செய்யாத”

வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மாத்திரம் தமது விருப்பு வாக்கை மக்கள் வழங்க வேண்டும்.

அதேபோல், “சபையில் பண்புடன் நடந்துக்கொள்கின்ற”, “துணிச்சலுடன் நியாயத்திற்காக குரல் கொடுக்கின்ற”, “விசேடமாக தாய்மார்களையும், குழந்தைகளையும், இளைஞர்களையும்

நேசிக்கின்ற”, “எதிர்காலம் பற்றிய தூரப்பார்வை கொண்ட”, “மூன்று மொழிகள் முடியாவிட்டால் குறைந்தபட்சம் இரண்டு தேசிய

மொழிகளையாவது பேசி உண்மை இலங்கையராக தம்மை அடையாளம் காட்டுகின்ற” வேட்பாளர்களுக்கு மாத்திரம் உங்கள் விருப்பு வாக்குகளை வழங்குங்கள்.

இந்த விருப்பு வாக்கு புரட்சி மூலம் அடுத்த ஒன்பதாவது பாராளுமன்றம், “திருடர்கள் இல்லாத” பாராளுமன்றமாக அமையட்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். கட்சி, சின்னம்

ஆகியவை உங்களுக்கு பிடித்தமானவையாக இருந்தாலும் கூட நடைமுறை அரசியல் காரணங்களுக்காக பிழையான நபர்களுக்கு,

வேட்பாளர் நியமனங்களை அழுத்தம் காரணமாக் கட்சிகள், கட்சி தலைவர்கள் வழங்கி விடுகிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆகவே கட்சியை, சின்னத்தை மட்டும் பார்த்து, பிழையான நபர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்கி விட்டு, பின் அப்படியானவர்கள் இருக்கும் பாராளுமன்றத்தை கண்டு

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் திருடர்கள். 225 பேரும் ஒழிய, அழிய வேண்டும் என சாபம் இடுவதில் பயனில்லை.

நல்லவர்களை தெரிவு செய்யத்தான் விருப்பு வாக்கு என்று ஒன்று இருப்பதை மனதில் கொள்ளுங்கள்.

இப்படி திட மனதுடன் சிந்தித்து விருப்பு வாக்கை பயன்படுத்தமுடியாவிட்டால், என்னை போன்றவர்களுக்கு விடை

கொடுங்கள். சபைக்கு சென்று “திருடர்களுடன்” குடும்பம் நடத்த இனியும் எனக்கு முடியாது.

திருடர்கள் இல்லாத
Posted in இலங்கை செய்திகள்

ஐநா பறந்த இலங்கை அமைச்சர் – தண்டிக்க படுமா இலங்கை ..?

ஐநா பறந்த இலங்கை அமைச்சர் – தண்டிக்க படுமா இலங்கை ..?

ஐக்கியநாடுகள் மனிதஉரிமை கூட்ட தொடர் தற்பொழுது இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இதில் கலந்து கொள்ளும் முகமாக இலங்கை வெளியுறவு அமைச்சர் தனது சிறப்பு அணியுடன் பறந்துள்ளார் .

இம்முறையும் இலங்கை தமிழர் எதிர் பார்க்கும் தீர்ப்பு கிடைக்க பெறாது என நம்ப படுகிறது ,


இந்தியா ,சீன ,ரசியாவுக்கு சுற்று பயணத்தை மேற்கொண்ட மகிந்த ,மற்றும் கோத்தபாய விடுத்த வேண்டுதலுக்கு இணங்க இவர்கள் தமது ஆதரவை இலங்கைக்கு வழங்க உள்ளனர் எனவும் ,

இலங்கை மீது சுமத்த பட்ட குற்ற சாட்டுக்கள் தொடர்பில் வகைக்கெடுப்புக்கு விடப்பட்டால் இவர்கள் அதில் இலங்கைக்கு ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்க படுகிறது

ஐநா பறந்த இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

யாழில் 39 வாலிபர்கள் இராணுவத்தால் அதிரடி கைது

யாழில் 39 வாலிபர்கள் இராணுவத்தால் அதிரடி கைது

யாழ்ப்பாணம் மருதனார்மடம், காங்கேசன்துறை பகுதியில் மைந்துள்ள கொட்டல் ஒன்றுக்குள் வாலிபர்கள் ஒன்றாக கூடுவதாக

கிடைக்க பெற்ற தகவலை அடுத்து அந்த விடுதியை சுற்றிவளைத்த போலீசார் அங்கிருந்த
39 வாலிபர்களை அதிரடியாக கைது செய்து சென்றுள்ளனர் .

இவர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் கூடுவதாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்தே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது .
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

யாழில் 39 வாலிபர்கள் இராணுவத்தால்
Posted in இலங்கை செய்திகள்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் ஆபத்து

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் ஆபத்து

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவும் ஆபத்து இருப்பதாகவும், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழலில் இது உலகம் முழுதும் பரவும் நிலை இல்லை என்றாலும், உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதால் அங்கு இது குறித்த கவலை எழுந்துள்ளது.

இருப்பினும் இந்த கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது சீனாவாகவே உள்ளது. அந்நாட்டில் இதுவரை 77,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,600 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவுக்கு வெளியே சுமார் 30 நாடுகளில் 1200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 20 பேர் அதற்கு

பலியாகியுள்ளனர். இத்தாலியில் திங்களன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 உயர்ந்துள்ளது

கொரோனா வைரஸ்
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் சுட்டுக்கொலை – அதிர்ச்சியில் பொலிஸ்

ஒருவர் சுட்டுக்கொலை – அதிர்ச்சியில் பொலிஸ்

இலங்கை கொரன பகுதியில் மரம் ஆயுத தாரியால் நபர் ஒருவர் திடீரென சுட்டு படுகொலை
செய்ய பட்டுள்ளார் ,

மோட்ட சைக்கிளில் பயணித்த இரு ஆயுத தரிகள் அதே வீதியில் நிறுத்தி வைக்க பட்டிருந்த ஆட்டோ
மீது திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தினர் .

இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார் ,காவல்துறை விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

ஒருவர் சுட்டுக்கொலை
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை மீது தாக்குதல் நடத்திய நபர் கைது

காவல்துறை மீது தாக்குதல் நடத்திய நபர் கைது

இலங்கை காவல்துறையினர் மீது திடீர் தாக்குதலை நடத்திய நபர் ஒருவரை தாம் கைது
செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

பெண் ஒருவரை அவதூறாக தூற்றிய நிலையில் அந்த சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீதே
இந்த தாக்குதலை குறித்த நபர் மேற்கொண்டுள்ளார்

இதனை அடுத்து இவர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

காவல்துறை மீது தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

10வது ஆண்டாக சிறப்பாக இடம்பெற்ற பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் “கற்க கசடற 2020

10வது ஆண்டாக சிறப்பாக இடம்பெற்ற பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் “கற்க கசடற 2020

கற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக” என்ற திருவள்ளுவரின் குறளை பின்பற்றி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்படட கற்க கசடற 10 வெகு சிறப்பாக

நடைபெற்றது.புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் மொழியின் பெருமைகளை விட்டுக் கொடுக்காது எமது எதிர்கால சந்ததியினருக்கும் எங்கள் தமிழ் மொழியின் அருமை பெருமையை

எடுத்துரைத்து எம் தேசிய தலைவரின் கனவை நினைவாக்கும் வண்ணம் மொழித்திறனாய்வுப் போட்டியினை செவ்வனே செய்திருந்தார்கள். உலகத் தாய்மொழி தினத்தை முன்ணிட்டு

இடம்பெற்ற இந்த போட்டி பல சங்க கால இலக்கியங்களை உள்ளடக்கி இடம்பெற்றது. அதில் முக்கியமாக திருவள்ளுவர்

இயற்றிய திருக்குறள், தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் மற்றும் ஔவையார் இயற்றிய ஆத்திசூடி நூல்களும் அடங்கும்.

வருங்கால சந்ததியினரை ஊக்குவிற்பதே இந்த கற்க கசடற என்னும் போட்டியின் நோக்கமாகும். கற்க கசடற என்னும் இன்

நிகழ்வு வட கிழக்கு லண்டன் தொடங்கி, தொடர்ந்து தென் மேற்கு, வட மேற்கு, தென் கிழக்கு என நான்கு இடங்களிலும் அரைச்சுற்று இடம் பெற்றது.

இச்சுற்றுகள் முடிவடைந்த நிலையில் முதல் மூன்று இடத்திலும் தெரிவான மாணவர்கள் 23/02/2020 அன்று இடம்பெற்ற இறுதிச் சுற்றில் பங்கேற்றார்கள். தமிழ் இளையோர் அமைப்பு

பொறுப்பாளர் தேசத்தின் இளஞ்சுடர் செல்வி திக்சிகா ஸ்ரீபாலகிருஷ்ணன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு நினைவு வணக்க சுடரினை ஏற்றி பொதுமக்களின் நினைவஞ்சலியுடன்

ஆரம்பிக்கப்பட்ட இறுதிச் சுற்றில் ஒவ்வொரு போட்டியாளர்களும் அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வந்து சிறப்பினை

பெற்றார்கள். இது 10வது வருடம் என்பதால் ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் முதல் நான்கு இடத்தை பிடித்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

“தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு”

அதாவது தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். மொழியை இழந்தவன் அவனது சொந்த அடையாளத்தை

இழந்ததற்கு சமனாவான். மொழிதான் ஒரு இனத்தின் அடையாளம்.. மொழி தான் ஒரு இனத்தை ஒன்றுசேர்க்கும்…எப்பொழுது அதனை

இழந்துவிடுகின்றோமோ அப்போதே அந்த இனம் சிறுகச் சிறுக அழிகின்றது என்று அர்த்தம்.

இதனைத் தொடர்ந்து அனைத்துலக தாய்மொழி நாளை முன்னிட்டு போட்டியாளர்களிடம் கேள்வி பதில் போட்டிகளும் இடம்பெற்றன. மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்ட மாணவர்களிடம் 15 கேள்விகள்

கேட்கப்பட மிகவும் உற்சாகமா கலந்து ஆர்வத்துடன் பதில்களை சொல்லிக்கொண்டே சென்றார்கள். கேள்விகள் தமிழ் மொழி

பற்றியும் தமிழீழம் பற்றியும் இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது மற்றும் மாணவர்கள் அனைத்திற்கும் உடனுக்குடன் பதிலளித்து மகிழ்ந்தார்கள்.

எமது அன்புக்கும் பாசத்துக்குமுரிய தமிழ் மக்களே நாம் அந்நிய நாட்டில் அகதிகளாய் இருகின்றோம் எமது தாய்நாடு இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிங்கள பௌத்த

பேராதிக்கத்தின் கையில் சிக்கி எமது அடையாளங்களை இழந்து செல்கின்றது. நாம் எம்மொழியையும் தாய்நாட்டின் அருமை பெருமைகளையும் வளர்ந்து வரும் எம் இளம்சமுதாயத்திடம்

எடுத்துச் சொல்லவேண்டும். இத் தருணத்தில் எம் மாவீரர்களின் கனவினை நினைவாக்க எம்மாலான எல்லா முயற்சிகளையும்

எடுத்துச் செல்லுவோம் அதேபோல உங்கள் பிள்ளைகளுடன் தமிழில் உரையாடுங்கள், தமிழினை மென்மேலும் வளர வழிகோலுங்கள்.

10வது ஆண்டாக சிறப்பாக
Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்பும், கூட்டணியும் நட்பு கட்சிகள் என்ற முறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தும் -குமார் எம்பி

கூட்டமைப்பும், கூட்டணியும் நட்பு கட்சிகள் என்ற முறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தும்

வேலு குமார் எம்பி

தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் பகைமை கட்சிகள் அல்ல. இரண்டும் நட்பு கட்சிகள். எங்களுக்கு இடையில் இருக்கக்கூடிய ஒருசில முரண்பாடுகள் நட்பு

முரண்பாடுகள். அவை பகைமை முரண்பாடுகள் அல்ல. எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்று சேருதல் என்பது நல்ல ஒரு கனவு. ஆனால், நடைமுறை சிக்கல்கள், வடக்கு-தெற்கு அரசியல் கள நிலவரங்கள்,

அரசு-எதிரணி முரண்பாடுகள் காரணமாக எல்லா தமிழ் கட்சிகளும் ஒரே அணியாக ஒன்று சேர முடியாது. ஆகையால் எங்கெங்கே ஒருமித்து செயற்பட முடியுமோ, அங்கெல்லாம் நாம் ஒருமித்து

செயற்படலாம். கூட்டமைப்புக்குள் மூன்று கட்சிகளும், கூட்டணிக்குள் மூன்று கட்சிகளும் உள்ளன. இந்நிலையில் நாம்

ஒன்று சேர்ந்து செயற்பட்டால், பிரதான ஆறு தமிழ் கட்சிகள் இயன்ற மட்டங்களில் ஒன்று சேர்ந்து செயற்படுகின்றன என்று அர்த்தமாகும்

என ஜனநாயக மக்கள் முன்னணி பிரதி தலைவர் கண்டி மாவட்ட எம்பி வேலுகுமார் கூறியுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானத்தின்படி வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில்

போட்டியிடுவதானால், அது தொடர்பில் எமது ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ

கணேசன் அவர்களுடன் பேசி தீர்மானிப்போம் என கூட்டமைப்பின் பேச்சாளரும், தமிழரசு கட்சியின் பிரமுகருமான சுமந்திரன் எம்பி

கூறியுள்ளமை தொடர்பில் மேலும் வேலுகுமார் எம்பி கூறியுள்ளதாவது,

வடக்கு கிழக்கு மாகாணங்களின் சில மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பில் நாமும் ஆலோசித்து வருகிறோம்.

அதேபோல் கூட்டமைப்பும் சில தென்னிலங்கை மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பில் ஆலோசிக்கிறது. இந்த பரஸ்பர

போட்டி, தமிழ் வாக்குகளை சிதைத்து விடக்கூடாது என்பதில் இரு சாராரும் கவனமாக இருக்கின்றோம். எனவே எந்த அடிப்படையில்

நாம் புரிந்துணர்வுடன் செயற்படுவது என நமது இரண்டு அணிகள் மத்தியில் பேச்சுகள் இடம்பெறலாம். இது தொடர்பில்

கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்பி, எமது தலைவர் மனோ கணேசனுடன் தொடர்புகொண்டுள்ளார். இன்னமும் சில தினங்களில் இந்த பேச்சுகள் இடம்பெறலாம்.

கூட்டமைப்பும் கூட்டணியும்
Posted in இலங்கை செய்திகள்

சுமந்திரனையும் அவரது செவிட்டு ஊமையாக எம்.பிகளையும் தோற்கடிக்க ஒன்றுபடுவோம்; வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் photo

சுமந்திரனையும் அவரது செவிட்டு ஊமையாக எம்.பிகளையும் தோற்கடிக்க ஒன்றுபடுவோம்; வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் photo

போராட்டம் வவுனியாவில் 1101 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு


போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய போராட்டம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இக்

கவனயீர்ப்பு போராட்டத்தினை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டதையடுத்து


ஊர்வலமாக மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்து அங்கிருந்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் கோசங்களை

எழுப்பியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இதன்போது தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை இன அழிப்பே, தமிழ் தேசியவாதம் மற்றும் நிரந்தர


பாதுகாக்கப்பட்ட தமிழ் தாயகத்தினை நம்பும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் சுமந்திரனையும் அவரது

செவிட்டு ஊமை எம்பிக்களையும் தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும் என்ற பதாதைகளையும் தாங்கியவாறு

போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், சுமந்திரன் காணாமல் போன தாய்மார்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை


என்று ஐ நா மனித உரிமை அமைப்புக்கு கடிதம் அனுப்பவுள்ளதாகவும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

சுமந்திரனையும் அவரது
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் பாடசாலையின் கேற்றை பூட்டிய பெற்றோரும், மாணவரும் photo

வவுனியாவில் பாடசாலையின் கேற்றை பூட்டிய பெற்றோரும், மாணவரும் photo

வவுனியாவில் பாடசாலையின் கேற்றை பூட்டிய பெற்றோரும், மாணவரும்; பதற்றம் வவுனியா, வீரபுரம்

மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி

பெற்றோர்களும், மாணவர்களும் இன்று (24) காலை ஆர்ப்பாட்டத்தில்


ஈடுபட்டனர். குறித்த பாடசாலையில் கணக்கீடு, வர்த்தகம், இந்துநாகரீகம், கணிதம், தமிழ் மற்றும் கலை பாடங்களான

சித்திரம், சங்கீதம் இரண்டாம் மொழி பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. இதேவேளை

342மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையில் 20ஆசிரியர்களும் பகுதி நேரமாக


இரண்டு ஆசிரியர்களுமே கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஆரம்ப பிரிவில் 105 மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்

நிலையில் 3 ஆசிரியர்களே கல்வி கற்பித்து கொண்டிருக்கின்றனர். இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவு மற்றும் உயர்தர மாணவர்களுக்கு போதுமான ஆசிரியர்கள்


இன்றி இப்பாடசாலை இயங்கி வருகின்றது. இந்நிலையில், பாடசாலை வாயிலைமூடி பாடசாலையின் முன்னால் மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில்

ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கிராமத்திற்கு ஒரு நீதி நகரத்திற்கு ஒரு நீதியா?, எமது பாடசாலை எமக்கு வேண்டும் ஆசிரியர்களை உடன்


நியமி, கிராமத்தின் கல்வி வளம் கல்வியே, சமமான கல்வியை வழங்கு, ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய், கிராமப்புற பாடசாலைகளுக்கும் உங்கள் கண்களை

திருப்புங்கள், மாணவர்களின் கல்வியை நாசமாக்காதீர் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும்


எழுப்பினர். இதன்போது, செட்டிகுளம் கோட்டகல்விப் பணிப்பாளருக்கு பாடசாலையின் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பாக எடுத்துக்கூறியும் எவ்வித

நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே தாம் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு


சென்ற செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களால்

கூறப்பட்ட விடயம் தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஒரு வாரத்தில் தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்ததாக தெரிவித்தார். இதேவேளை செட்டிகுளம்


கோட்ட கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.பரீட் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்

கலந்துரையாடியிருந்தார் . இதன்போது இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவியபோது

நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை 14நாட்களுக்குள் கடமையில்


அமர்த்துவதாகவும் அவர்கள் கடமைக்கு சமூகம் தராத சந்தர்ப்பத்தில் உடனடியாக வேறு ஆசிரியர்களை

நியமிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதன் போது குறித்த ஆர்ப்பாட்டம் தேவையற்றது என கூறியபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் கோட்டக்கல்வி பணிப்பாளரு

டம் முரண்பட்டிருந்தனர். ஒருவார காலத்தில்
ஆசிரியரை நியமித்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சீராக கொண்டுசெல்ல கல்வி

திணைக்களம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தாம் தமது போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர்.

பின்னர் பாடசாலையின் வளாகத்தில் கோட்டக்கல்வி
பணிப்பாளரை பாடசாலைக்குள் நுழையவிடாது

பெற்றோர் வாயில்கதவை மூடியிருந்தனர். கோட்டக்கல்வி அதிகாரியை சரமாரியாக கேள்விக்கணைகளை

பெற்றோர்கள் தொடுத்ததையடுத்து பதில் கூறமுடியாதவாறு கோட்டக்கல்வியதிகாரி

அவ்விடத்திலிருந்து நழுவி சென்றிருந்தார். மாணவர்களும், பெற்றோர்களும்


மேற்கொண்ட இவ் ஆர்ப்பாட்டம் காலை 8 மணியிலிருந்து இடம்பெற்று பின்னர் பிள்ளைகளை பெற்றோர்கள் வீட்டிற்கு

அழைத்து சென்றிருந்தனர். கல்வி நடவடிக்கைகள் யாவும் இன்று ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பாடசாலையின்