Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஓமந்தை விபத்தில் இறந்தவர்கள் வெள்ளவத்தையைச் சேர்ந்தவர்கள்!
ஓமந்தை விபத்தில் இறந்தவர்கள் வெள்ளவத்தையைச் சேர்ந்தவர்கள்!
வவுனியா – ஓமந்தையில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் யாழ், காரைநகரைச் சொந்த இடமாகவும்,
கொழும்பு வெள்ளவத்தையில் வசிப்பவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஓமந்தை பொலிஸார் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.
வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து
மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெள்ளவத்தை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து காரணமாக ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் 25இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை வாகனத்திற்குள் சாரதி சிக்கியிருந்த நிலையில், காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில்
பேருந்தும் வானும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் சாரதி தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் வான் சாரதி உட்பட 4 ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான அரச பேருந்தின் சாரதியும் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தையில் வாழும் காரைநகரைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரான பார் சோமர் என்று
அழைக்கப்படும் ராமலிங்கம் சோமசுந்தரம் (வயது 83), ஆறுமுகம் தேவராஜா (வயது 62), தேவராஜா சுகந்தினி (வயது
51), தேவராஜா சுதர்சன் (வயது 30) மற்றும் சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் (வயது 24) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியாவில் பொதி செய்யப்பட்ட சப்பாத்தியை வாங்கிய நோயாளருக்கு கிடைத்த பேரதிர்ச்சி PHOTO
வவுனியாவில் பொதி செய்யப்பட்ட சப்பாத்தியை வாங்கிய நோயாளருக்கு கிடைத்த பேரதிர்ச்சி PHOTO
சுகயீனமடைந்த ஒருவருக்கு வவுனியா வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு கொள்வனவு செய்யப்பட்ட ஆட்டாமா
சப்பாத்தி காலாவதித்திகதி முடிய முன்னரே பூஞ்சனம் பிடித்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நோயாளருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் பொதிகள் செய்யப்பட்டு வியாபார நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரும் ஆட்ட மா சப்பாத்தியே இவ்வாறு பூஞ்சனம் பிடித்த நிலையில்
பொதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 11.02.2020 உற்பத்தி திகதியும் காலாவதித்திகதி 25.02.2020 என்று காணப்பட்டுள்ளது. நேற்று இரவு 21.02.2020 வவுனியாவிலுள்ள
வர்த்தக நிலையத்தில் குறித்த ஆட்டாமா சப்பாத்தி கொள்வனவு செய்யப்பட்டு இரவு உணவிற்காக எடுத்துச்
செல்லப்பட்டு தயார் செய்வதற்கு பொதி பிரித்துப்பார்வையிட்டபோது சப்பாத்தியில் பூஞ்சனம் பிடித்துக் காணப்பட்டுள்ளது.
காலாவதித்திகதியாக நான்கு தினங்கள் இருக்கும் நிலையிலேயே குறித்த சப்பாத்தியில் பூஞ்சனம் பிடித்த நிலையில் காணப்பட்டுள்ளது கொள்வனவு செய்த
நோயாளருக்கு மேலும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான உணவுப் பொருட்கள்
குளிரூட்டியில் வைக்கப்பட்டு பாதுகாப்பு மேற்கொள்ளுமாறு பொதியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் பொதிகள் செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் தராதரம் பாதுகாப்பு என்பனவற்றை
வர்த்தக நிலையங்களில் பரிசீலனை செய்து நோயாளர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் கற்பிணித்தாய்மார்கள்
இவ்வாறான பழுதடைந்த உணவுகளை உண்பதை தவிர்க்கப்படவேண்டும். வவுனியா நுகர்வோர் பாதுகாப்பு
அதிகாரசபையினர், பொது சுகாதாரத்துறையினர் இவ்விடயத்தில் கவனம் எடுத்துச் செயற்படுமாறு பொதுமக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் குறித்து வவுனியா வர்த்தகர் சங்கத்திடம் வினவியபோது, வவுனியாவிலுள்ள குறித்த சப்பாத்தி
பொதிகளை விநியோகம் செய்யும் விநியோகஸ்தரிடம் தொடர்பு கொண்டு வினவியுள்ளதாகவும் கொழும்பில்
பொதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் வர்த்தக நிலையங்களிலுள்ள குளிரூட்டியில் வைத்து
வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கியதுடன் நுகர்வோர் பாதுகாப்பு
அதிகார சபையினருடன் தொடர்புகொண்டு மேலதிக நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இனிவரும் காலங்களில்
இவ்வாறான நடவடிக்கை இடம்பெறாமல் இருப்பதற்குரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.



பற்றி எரிந்த கடை நடந்தது என்ன ..?
பற்றி எரிந்த கடை நடந்தது என்ன ..?
இலங்கை பிலியந்தலை பகுதியில் கடை ஒன்று திடீரெனதீ பற்றி கொண்டது ,இந்த தீ விபத்தில் கடை முற்றாக சேதமடைந்துள்ளது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ யணைப்பு படையினர் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் ,.
இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இந்தியாவுக்கு பெண்களை விபச்சாரத்திற்கு கடத்திய கும்பல் கைது
இந்தியாவுக்கு பெண்களை விபச்சாரத்திற்கு கடத்திய கும்பல் கைது
இலங்கையில் இருந்து இந்தியவனுக்கு பெண்களை மசாச் நிலைய பணிக்கு என அழைத்து சென்று அவர்களை விபச்சாரத்திற்கு விற்று வந்த கும்பல் ஒன்று இலங்கை காவல்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது
சுமார் நாப்பது பெண்கள் இவ்வாறு இந்தியாவுக்கு கடத்தி செல்ல படவிருந்த நிலையில் கைது செ ய்ய பட்டுள்ளனர் .#
இந்த கடத்தலில் இலங்கையை சேர்ந்தவரை மணம் முடித்த இந்திய பெண்மணி இணைந்து இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது
தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன மேலும் பலர் கைது செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது
ஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி – 19 பேர் காயம்;
ஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி – 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஐவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன்
19 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஜீப் ரக வாகனமும் வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பயணித்த போது நேருக்கு நேர் மோதி
விபத்துக்குள்ளானது. காயமடைந்தார்கள் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஐவர் மரணமடைந்துள்ளனர். இதன்போது அங்கிருந்தவர்களால் ஜீப் மற்றும் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட அவை தீயில் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயணத்தை மேற்கொண்ட மக்களின் உடமைகளும் தீயில் எரிந்துள்ளன. தீப்பற்றிய வாகனங்களை வவுனியா நகரசபை தீயணைப்பு படையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயன்ற போதும் அதுபயனளிக்கவில்லை. நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களாக நால்வர் தெரிவு
வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களாக நால்வர் தெரிவு
நாடு பூராகவும் நடைபெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலின் வவுனியா மாவட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் க.கோகுலன், அ.கொன்சீசியஸ், ப.ராமேஸ்வரன், எச்.பிரியதர்சன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
நேற்றைய தினம் (22.02) நாடு பூராகவும் இளைஞர் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றன. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தின் வவுனியா, வவுனியா வடக்கு, வெண்கல செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து ஒவ்வொரு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில் 11 பேர் போட்டியிட்டு இருந்தனர்.
இதில் வவுனியா பிரதேச தேர்தல் தொகுதிதியில் க.கோகுலன் – 359, க.சிம்சுபன் – 139, ஜ.மின்ஹாஜ் – 43, கு.பவேந்திரன் – 15 ஆகியோரும், வெண்கல செட்டிகுளம் தேர்தல் தொகுதியில்
அ.கொன்சீசியஸ் – 282, கா.கிரிதரன் – 259, மொ.ரிப்நாஸ் – 215 ஆகியோரும், வவுனியா வடக்கு தேர்தல் தொகுதி ப.ராமேஸ்வரன் – 253, யொ.மிதுர்சன் – 128 ஆகியோரும், வவுனியா தெற்கு தேர்தல் தொகுதியில் எச்.பிரியதர்சன் – 133, எஸ்.செனவிரத்ன – 122 ஆகியோரும் போட்டியிட்டு இருந்தனர்.
குழு மோதலில் ஒருவர் அடித்து கொலை
குழு மோதலில் ஒருவர் அடித்து கொலை
இங்கை எல்பிட்டிய பகுதியில் இரு குழுவுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் அடித்து கொலை செய்ய பட்டுள்ளார்
மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ள்ளார் .
காயமடைந்தவர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
குறித்த சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

வவுனியாவில் ஊடகவியலாளர்களுக்கு தேர்தல் அறிக்கையிடல் பயிற்சி பாசறை
வவுனியாவில் ஊடகவியலாளர்களுக்கு தேர்தல் அறிக்கையிடல் பயிற்சி பாசறை
வடக்கு கிழக்கு பகுதியினை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான தேர்தல் அறிக்கையில் தொடர்பான பயிற்சி பாசறை வவுனியா மில் வீதியில்
அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்றும், இன்றும் நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் அதனை எவ்வாறு அறிக்கையிடுவது தொடர்பாக
ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இன்டர் நியூஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இவ் பயிற்சி பாசறை இடம்பெற்றது.
ஒய்வு நிலை தேர்தல் ஆணையாளர் நாயகம் எல்.எம்.மொஹமட் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான சட்டங்கள், குற்றச்செயல்களின்
தண்டனைகள், வழிகாட்டு நெறிகள், பாராளுமன்றம் கலைப்பதில் உள்ள சிக்கல்கள், ஆரம்ப கால நாடாளுமன்ற
தேர்தல் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.
இவ் பாசறையில் திருகோணமலை, அம்பாறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா உட்பட வடக்கு கிழக்கினை சேர்ந்த
இருபதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.



சின்னத்துக்கு மாத்திரம் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பவர்கள், மலையக மக்கள் என நினைக்க வேண்டாம்
சின்னத்துக்கு மாத்திரம் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பவர்கள், மலையக மக்கள் என நினைக்க வேண்டாம்
நான் “டீலர்” இல்லை. நான் ஒரு “லீடர்” என்கிறார் மனோ கணேசன் எம்பி
சின்னத்தை மாத்திரம் கண்டு, கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பவர்கள், மலையக மக்கள் எனக்கூறி அந்த மக்களை அவமானப்படுத்த வேண்டாம். கடந்த காலங்களில்
அவர்கள், யானை, பூனை, அன்னம், வெற்றிலை, வேப்பிலை, ஏணி என எத்தனையோ சின்னங்களுக்கு சிந்தித்து வாக்களித்துள்ளனர். பல சந்தர்ப்பங்களில் நகர மக்களை
விட அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். சிலருக்கு யானை சின்னம் வேண்டும் என்பதற்காக மலையக மக்களை இதில்
இழுக்க முயல்கிறார்கள். மலையகத்தோர் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கும் மக்கள் என கூறுகிறார்கள்.
அப்படி கூறி அவர்களை அவமானப்படுத்த வேண்டாம். அவமானப்படுத்தி என் கோபத்தை கிளற வேண்டாம்.
எனக்கு வெறுப்பேற்றினால் நான் சும்மா இருக்க மாட்டேன். இது உங்களுக்கு தெரியும் என முன்னாள் தேசிய
ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர், கொழும்பு மாவட்ட எம்பி,
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கருத்து கூறிய மனோ எம்பி மேலும் கூறியதாவது,
உண்மையில் இங்கே சின்னம் ஒரு பிரச்சினை இல்லை. அது டீலர்” களின் பிரச்சினை. நான் “டீலர்” இல்லை. நான் ஒரு
“லீடர்”. எங்களை பொறுத்தவரையில், யானை கிடைத்தால் நல்லது. அன்னம் கிடைத்தாலும் நல்லது. எமது கூட்டணிக்கு
யானையை தர யார் மறுக்கிறார்கள் என தேடி பாருங்கள். அப்போது உரிய விடை கிடைக்கும். இவர்களது நோக்கம்
இப்படி எதையாவது சொல்லி, எமது கூட்டணி அமைவதை தாமதம் செய்வது ஆகும். இந்த தந்திரம் எம்மிடம் இந்த
முறை பலிக்காது. இன்னும் இரண்டு தினங்களில் நாம் எமது கூட்டணி அமைவதை அதிகாரபூர்வமாக நாம் அறிவிப்போம்.
யானை இருந்தால் தான் கூட்டணி அமைக்க முடியும் என்று கூறுபவர்கள் அதை எமக்கு தர வேண்டும். தரவும்
மாட்டீர்கள். யானை என்று ஓலம் இட்டுக்கொண்டும் இருப்பீர்கள். அப்புறம் அன்னம் என்பீர்கள் அதையும் இழுத்தடிப்பீர்கள்.
போதாதற்கு யானைக்கு மாத்திரமே மலையக மக்கள் வாக்களிப்பார்கள் என கூறி என்னை வெறுப்பேற்றாதீர்கள். எனக்கு வெறுப்பேற்றினால் நான் சும்மா இருக்க மாட்டேன்.
இது உங்களுக்கு தெரியும். கொள்கைகளை பார்த்து, ஆளைப்பார்த்து, கட்சியை பார்த்து, தெளிவுடன் வாக்களிக்க
மலையக மக்களுக்கு முடியும். தெரியும். கண்ணை மூடிக்கொண்டு, பொய்களை நம்பி, பயந்து, நமது மக்கள் வாக்களித்த காலம் இன்று மலையேறிவிட்டது.
சின்னத்தை சொல்லி, சொல்லி, காட்டி, காட்டி, இழுத்தடிப்பது, ஆளுகின்ற அரசுடன் போடப்படும் “டீல்”. ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள்ளேயே சாயம் வெளுத்து
வரும் இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று தரும் “டீல்”. இந்த உண்மையை வெளியேசொன்னால், உங்களுக்கு என் மீது கோபம்
வருகிறது. உங்களை போன்ற “டீலர்”களுக்கு மசிகின்றவன் நானல்ல. உங்கள் “டீல்”களை அப்படியே ஏற்றுக்கொள்ள
நான் ஒரு “டீலர்” இல்லை. நான் ஒரு “லீடர்”. இதை மறக்க வேண்டாம்.

ஐநா மனித உரிமை ,கூட்ட தொடர் நாளை ஆரம்பம்
ஐநா மனித உரிமை ,கூட்ட தொடர் நாளை ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட தொடர் நாளை ஆரம்பிக்கிறது .
இந்த கூட்ட்ட தொடர் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை அதில் இருந்து விலகி கொள்கிறது .
இலங்கையின் இந்த முடிவால் அதற்கு அங்கு ஆப்பு வைக்க படும் சென்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது
குறித்த கூட்ட தொடரில் இருந்து இலங்கை தான் தப்பித்து கொள்ள இந்தியா அமெரிக்கா ரசியா ,சீனாவின் உதவியை நாடி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
இந்த கூட்ட தொடரில் தமிழருக்கு எவ்வித தீர்ப்பும் கிடைக்காது எனபதே தமிழர்கள் எண்ண கருத்தாக உள்ளது

ஐநாவில் இருந்து இலங்கை விலகுவதால் பிரச்னை இல்லையாம் -சுமந்திரன்
ஐநாவில் இருந்து இலங்கை விலகுவதால் பிரச்னை இல்லையாம் -சுமந்திரன்
இலங்கை ஐநா மனித உரிமை கூட்ட தொடரில் இருந்து விலகுவதால் எந்த பிரச்னையும் ஏற்படாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் .
இவர் இலங்கை அரசுக்கு ஒத்து ஊதி வருகின்றவர் என்பதும் இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ் தேசிய விடுதலை தொடர்பாக பேசி வருகிறார்
இவரது இவ்வாறான பேச்சுகளுக்கு மக்கள் மத்தியில் பலத்த கொதிப்பு நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது
விபத்தில் சிக்கி ஒருவர் பலி 13 பேர் காயம்
விபத்தில் சிக்கி ஒருவர் பலி 13 பேர் காயம்
இலங்கை கட்டுநாயாக்க பகுதியில் அனுராதபுரம் நோக்கி யாத்திரைக்கு சென்ற நபர்கள் பயணித்த வாகனம் கவிழந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளது
மேலும் பெண்மணி ஒருவர் பலியாகியுள்ளார் ,சாரதி உறக்கத்தில் வாகனத்தை செலுத்தியதால் இந்த விபத்து
ஏற்பட்டுள்ளது ,போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
ஐநா மனித உரிமை ஆணையாளரை சந்தித்து இலங்கை பேச்சு
ஐநா மனித உரிமை ஆணையாளரை சந்தித்து இலங்கை பேச்சு
நாளை (24) ஆரம்பமாகவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வுக்கு முன்னதாக, 2015 அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 2017 மார்ச் மாதம்
நிறைவேற்றப்பட்ட 34/1 ஆகிய பிந்தைய தீர்மானங்களை தோற்றுவித்த, ´இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை
ஊக்குவித்தல்´ குறித்த 2019 மார்ச் மாத 40/1 தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரணையை இலங்கை அரசாங்கம் திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் குறித்து வெளிவிவகார
செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மனித உரிமைகள் பேரவையின் தலைவரான தூதுவர் எலிசபெத் டிச்சி-பிஸ்ல்பெர்கர் அவர்களுக்கு விளக்கினார்.
கடந்த புதன்கிழமை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவை விஞ்ஞாபனத்தைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்திற்கு
அமைச்சரவை அங்கீகாரம் அளித்ததாக தற்போது ஜெனீவாவில் இருக்கும் வெளிவிவகார செயலாளர் மனித
உரிமைகள் பேரவையின் தலைவரிடம் வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 21) தெரிவித்தார்.
இந்தத் தீர்மானம் வியாழக்கிழமை பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது. மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வுக்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு அமைச்சர்
குணவர்தன தலைமை தாங்குவார் என்றும், பெப்ரவரி 26 புதன்கிழமை சபையின் உயர் மட்ட அமர்வில்
உரையாற்றும்போது அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தை சபையின் உறுப்பினர்களுக்கு முறையாக அறிவிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பெப்ரவரி 27 ஆம் திகதி உயர்ஸ்தானிகரால் மேற்கொள்ளப்படவுள்ள இலங்கை குறித்த வாய்மூல தகவல் புதுப்பித்தல்களுக்கு பதிலளிக்கும் அமைச்சர் குணவர்தன,
ஜெனீவாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்சலெட்டை சந்திக்கவுள்ளார்.
அமைச்சரவையின் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்படுகையில், ஐ.நா. தீர்மானத்தை மேற்கொள்வதற்கு வழிவகுத்த ´மையக் குழுவின்´
(இங்கிலாந்து, ஜேர்மனி மற்றும் கனடா) கொழும்பில் வதியும் தூதுவர்களுக்கு இது குறித்து அமைச்சர்
குணவர்தனவினால் விளக்கப்பட்டதாக வெளிவிவகார செயலாளரால் அவருக்கு மேலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயம் குறித்து தனக்கு விளக்கமளிப்பதற்கான இலங்கையின் முயற்சியை தூதுவர் டிச்சி-பிஸ்ல்பெர்கர் பாராட்டினார்.
கோவிலுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கள்
கோவிலுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கள்
நுவரெலியா மாவட்டம் டயகம வெர்வள்ளி தோட்டம் ஆடலலி பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் ஆலய பரிபாவலன சபையின் வேண்டுக்கோலுக்கு அமைய நுவரெலியா
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி
வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆலய பரிபாலன சபையிடம் வழங்கப்பட்டது


ஜப்பான் மிதக்கும் போர்க்கப்பல் இலங்கையில் தரிப்பு
ஜப்பான் மிதக்கும் போர்க்கப்பல் இலங்கையில் தரிப்பு
ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான கடற்படை மிதக்கும் கப்பல் ஒன்று தற்போது கொழும்பில் தரித்துள்ளது .
இருநாடுகளுக்கும் இடையிலான கடல் படை பயிற்சிகளை முன்னிட்டு இந்த கப்பல் வருகை தந்துள்ளதாம் .
விடுதலை புலிகள் அந்த மண்ணில் அழிக்க பட்டதன் பின்னர் இவ்வாறான கப்பல்கள் இலங்கைக்கு தொடராக வந்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

யாழில் தீப்பற்றி எரிந்த தந்தையும் மகளும்
யாழில் தீப்பற்றி எரிந்த தந்தையும் மகளும்
யாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்கள்
முயற்சியினால் தீ அணைக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
பிறவுன் வீதி- நரிக்குண்டு குளம் பகுதியில் இன்று (22) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தந்தையும் மகளும் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
திருத்தல் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை வாகனத்தில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதியில் பயணித்தவர்களின் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டுள்ள நிலையில் தந்தையும் மகளும் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு தங்குமிடம் விரைவில்-ஆறுமுகன் தொண்டமான்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு தங்குமிடம் விரைவில்- ஆறுமுகன் தொண்டமான்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்ற மலையக மாணவர்களுக்கு தங்குமிடம் அமைப்பதற்கு
காணியொன்றை அடையாளப்படுத்திக் கொடுக்குமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்
அங்கஜன் இராமநாதனிடம் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு காணிகளை வழங்கினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தங்குமிடமொன்றை விரைவில்
அமைத்துக் கொடுக்கப்படுமென்றும் தெரிவித்த தொண்டமான் எந்தச் சந்தர்ப்பத்திலும் எதற்கும்
சலனப்படாமல் மாணவர்கள் கல்வியைத் தொடர வேண்டுமென்றும் கேட்டுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்ற மலைய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ் மாவட்டச் செயலகத்தில்
நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்து உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, எமது மலையகத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த உதவிகளை வழங்கி வைப்பது மகிழ்ச்சியாக
இருக்கிறது. இதே போன்று இன்னும் பல உதவிகளை இந்த மாணவர்களுக்கு வழங்குவதற்கும் தயாராகவே
இருக்கின்றேன். அதற்கமைய என்னுடைய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றேன்.
குறிப்பாக கடந்த முறை மாணவர்கள் என்னைச் சந்தித்த போது தமக்கான புத்தகங்கள் மற்றும் துவிச்சக்கர
வண்டிகள் தொடர்பில் கேட்டிருந்தனர். இதற்கமைய புத்தகங்களை பெற்றுக் கொடுத்திருந்த நிலையில்
தற்போது துவிச்சக்கர வண்டிகளையும் வழங்கி வைக்கின்றேன்.
அதே நேரத்தில் யாழிலிருந்து மலையகத்திற்கான பேருந்து சேவை தொடர்பிலும் என்னிடம் தெரியப்படுத்தியிருந்தமை தொடர்பில் விசேட கவனத்தைச் செலுத்தியிருக்கின்றேன்.
அந்தப் பிரச்சனையையும் விரைவில் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு உங்களுக்கான வசதி வாய்ப்புக்களை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்கத் தயாராகவே இருக்கின்றோம்.
அதற்கமைய நிச்சயம் செய்த கொடுப்போம். ஆனால் நீங்கள் எதற்காகவும் எப்பொதும் உங்கல் கல்வியை
இடைவிடாது தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். ஆகவே நீங்கள் உங்கள் படிப்பை சரியாக
செய்தாலே போதுமானது. மற்றத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
இதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் அண்மையில் இந்தியா சென்ற போது இந்தியாவிடம் பல்வேறு
கோரிக்கைகளை முன்வைத்திருந்திருந்தேன். இந்திய அரசிடம் ஏற்கவே பல உதவிகளை நாம்
பெற்றிருக்கின்றோம். ஆனால் தொடர்ந்தும் எமக்கு உதவி செய்ய வேண்டுமென்று கேட்டிருக்கின்றோம். அதற்கமைய
அவர்களும் எமக்கு உதவிகளைச் செய்வதாகவே தெரிவித்திருக்கின்றனர்.
குறிப்பாக பல ஆயிரம் வீட்டுத் திட்டங்களை இந்தியாவிடம் இருந்து நாங்கள் பெற்றிருக்கிறோம். அதே போன்று வீட்டுத்
திட்டங்களை இம்முறையும் கேட்டிருக்கிறேன். குறிப்பாக மலையகத்திற்கு மட்டுமல்லாமல் வடக்கிற்கும் சேர்த்து
தான் வீடுகளைக் கேட்டிருந்தேன். எங்களுக்கு ஏற்கனவே பல உதவிகளைச் செய்த வருகின்ற இந்திய அரசாங்கம்
இந்த உதவிகளையும் வழங்குவதாக கூறியிருக்கின்றமை சிறப்பானது.
இவ்வாறு நாம் மக்களுடைய தேவகைள் பிரச்சினைகளை அறிந்து அதற்குரிய தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுத்து
வருகின்றோம். ஆகவே எங்களது மூலதனமாக இருக்கின்ற கல்வியை தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். அதனூடக சிறந்த முறையில் முன்னேற்றமடைய வேண்டும் என்றார்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ள குற்றச்சாட்டை அரசு நிராகரிப்பு
மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ள குற்றச்சாட்டை அரசு நிராகரிப்பு
பலவந்தமாக காணாமல் போனோரின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் தொடர்பில்
இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரால் தகவல் திரட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு
வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளதை பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுக்கின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல் பலவந்தமாக
காணாமல் போனோரின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் தொடர்பில் இலங்கை
பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் தகவல்களை திரட்டியும் கண்காணித்தும் வருவதாக மனித
உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுக்கும்
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரட்ன, வழக்கமாக முன்னெடுக்கப்பட்டு வரும்
பாதுகாப்பு செயற்பாடுகளைத் தவிர பாதுகாப்பு படையினரோ புலானாய்வுப் பிரிவினரோ எந்தவொரு
நபரையோ குறிப்பிட்ட குழுக்களையோ கண்காணிக்கும் நடவடிக்கையில் ஒரு போதும் ஈடுப்படவில்லை என்றும்
காணாமல் போனோர் குடும்பத்தினரை இலக்கு வைத்து கண்காணிக்க எந்தவொரு நடவடிக்கைகளிலும் பாதுகாப்பு படையினரோ அல்லது பொலிஸாரோ
ஈடுப்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு பாதுகாப்பு தரப்பினரும் பொலிஸாரும் தயார் நிலையில் உள்ளனரே
தவிர இலங்கையிலுள்ள எந்தவொரு தரப்பினரையோ குழுவினரையோ இலக்கு வைத்து செயற்படுவதில்லை.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கருத்தின் பிரகாரம் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஆறு இடங்களில்
பலவந்தமாக காணாமல் போனோரின் உறவினர்களுடன் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் செயலாற்றி
வருகின்றனர். இந்நிலையில் அரசாங்கம் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
விஷேடமாக காணாமல் போனோரின் குடும்ப உறவினர்களை கண்காணிப்பது தொடர்பில் எந்த
நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வதில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரை
இலக்கு வைத்து அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு படையினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில்
இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்கனை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டும் தேசிய பாதுகாப்பை
மேலும் பலப்படுத்தும் வகையிலும் எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்கும் வகையிலும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரை
செயலிழந்து போய் இருந்த புலனாய்வு வலையமைப்பு தற்பொழுது பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இலங்கையின் பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு துறையினரும் பயமுறுத்துவதாக காணாமல் போனோர்
குடும்ப உறுப்பினர்களும் அவர்களுக்கு ஆதரவாக செயற்படும் செயற்பாட்டாளர்களும் கூறும் தகவல்களின்
உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என நியூயோர்க்கை தளமாக கொண்டு செயற்படும்
உரிமைகளுக்கான அமைப்பான மனித உரிமை கண்காணிப்பகத்திடம் பாதுகாப்புச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வவுனியாவில் கொங்கிறீட் பனல் வீடு நிர்மாணிப்பு photo
யுத்தத்தில் பாதிப்படைந்த மக்களுக்காக வவுனியாவில் கொங்கிறீட் பனல் வீடு நிர்மாணிப்பு வட மாகாணத்தில்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தொழில் நுட்பத்துடனான கொங்கிறீட் பனல் மற்றும் பயனாளிகளால் நிர்மாணிக்கப்படும் வீட்டுத்தொகுதிகளின்
முதல் வீடு வவுனியா மாவட்டத்தில் ஓமந்தை மகிழங்குளத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களினால் (21.02)
அடிக்கல் நாட்டி அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்
அவர்களின் முயற்சியால் அரச நிதியின் கீழ் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் “நாட்டைக்
கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் மூலம் பிரதமரின் நெறிப்படுத்தலில் சமூக வலுவூட்டல் மற்றும்
தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின்
வழிகாட்டலில் உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் ஆகியோரின்
வாழ்வாதாரத்திற்காக குறித்த கொங்கிறீட் பொருத்து வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் 650 சதுர அடிகளைக் கொண்டதாக
இவ்வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
அத்துடன் இவ்வீடுகள் பதினான்கு நாட்களில் இருந்து மூன்று வாரத்திற்குள் பூரணப்படுத்தி மக்களிற்கு
கையளிக்கப்படவுள்ளமை குறிப்படத்தக்கது. வவுனியா மாவட்டச் செயலாளர் சமன் பந்துலசேன அவர்களின்
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்
தர்மபால செனவிரட்ன, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் எஸ்.கனகரத்தினம், பிரதேசச்
செயலாளர்கள், திட்டமிடல் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கிராம அலுவலர், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்


ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட பூஜைகள்
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட பூஜைகள்
மகா சிவராத்திரியை முன்னிட்டு நுவரெலியா ஆவெலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட
பூஜைகளில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டார்.







