Posted in இலங்கை செய்திகள்

புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வரும் சட்ட நடவடிக்கை

புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வரும் சட்ட நடவடிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வரும் சட்ட

நடவடிக்கையினை மையப்படுத்தி, சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இணையவழி கையெழுத்து

போராட்டத்துக்குமம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதோடு, இதனோடு

தொடர்புடையதாக காணப்படுகின்ற நிதிசேகரிப்பு தொடர்பிலும் விழிப்பாக இருக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக்கொள்கின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேல்முறையீட்டின் முதல்களம் வெற்றியினைக் கண்டுள்ளது. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இரு தரப்பு கருத்துகளை இரண்டு வாரங்களில்

சமர்பிக்கும்படி மேன்முறையீட்டு ஆணையம் கூறியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் பிரித்தானிய உள்துறைச் செயலர் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்புகளின்

பட்டியலிலிருந்து அகற்ற வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிடவுள்ளதோடு, அடுத்த களம் நோக்கிய சட்ட

முன்னெடுப்புக்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது.

இச்சட்டப்போராட்டத்தினை அரசியல் தளத்தில் கூர்மைப்படுத்தும் செயல்முனைப்பு தொடர்பிலான அறிவித்தலை நாடுகடந்த தமிழீழ

அரசாங்கம் அடுத்த வாரம் வெளியிடவுள்ளது. இந்த சட்டப்போராட்டத்துக்கு பங்களிப்பு செய்ய விரும்பும் உறவுகள்,

பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களையோ அல்லது UK அலுவலக தொடர்பிலக்கம் : 02071936655 மின்னஞ்சல் adminuk@tgte. org வழி தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து வைத்துக் கொள்வது என்று பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் முடிவெடுத்த போது, தடை

மீளாய்வுக் குழு தன்னுடைய முடிவுகளை உள்துறை செயலருக்கு வழங்கிய போது, அந்த முடிவுகளை தவறாக கூறியிருப்பதாக

மேன்முறையீட்டு ஆணையம் தன்னுடைய வெளிப்படையான தீர்ப்பில் கூறியுள்ளது.

கூட்டுப் பயங்கரவாதப் பகுப்பாய்வு மையம் தெரிவித்த கருத்துகளைத் இந்தக்குழு துல்லியமாக தொகுத்துச் கூறவில்லை என தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு

ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்து பட்டியலில் வைத்திருக்க

எடுக்கப்பட்ட முடிவும் சட்டத்துக்கு முரணானது என ஆணையம் தீர்ப்பளித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

Posted in இலங்கை செய்திகள்

விகாரைக்குள் புகுந்து ஆளை அடித்து கொன்ற யானை

விகாரைக்குள் புகுந்து ஆளை அடித்து கொன்ற யானை

கருவலகஸ்வெவ, ரஜவிகம விகாரையில், இன்று (30) மாலை இடம்பெற்ற விசேட பூசை வழிபாடொன்றின் போது காட்டு

யானையொன்று புகுந்து அட்டகாசம் புரிந்ததால், குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

சம்பவத்தில், நான்கு வயதான ஆண் குழந்தையொன்றே உயிரிழந்துள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.

பௌர்ணமி தினமான இன்றைய தினம், குறித்த விகாரையில் இடம்பெற்ற விசேட வழிபாட்டில், குறித்த குழந்தை, தனது தாயுடன்

அதில் கலந்துகொண்டுள்ளது. இதன்போது, காட்டு யானையொன்று விகாரைக்குள் புகுந்து அட்டகாசம் புரியத் தொடங்கியுள்ளது.

இதன்போது, குறித்த குழந்தை, அதனது தாயால் கைவிடப்பட்டிருந்த நிலையில், யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்துள்ள குழந்தை, ஆனமடுவ வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்ட போதிலும், அதற்கு முன்னரே குழந்தை உயிரிழந்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பத்தாயிரத்தை தாண்டிய கொரனோ நோயாளிகள்

இலங்கையில் பத்தாயிரத்தை தாண்டிய கொரனோ நோயாளிகள்

இன்று பிற்பகல் கொவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 314 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பேலியகொட மீன்விற்பனை சந்தை கொத்தணியைச்

சேர்ந்தவர்களாவர். 55 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தவர்கள்

என கொவிட் – 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

இன்றைய எண்ணிக்கையுடன் இலங்கையில் கொவிட்-19 தொற்றாளர்களின்

எண்ணிக்கை 10 ஆயிரத்து ஐந்தாக அதிகரித்துள்ளது. இவர்களில் 5,804 பேர்

தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக 4 ஆயிரத்து 282 பேர் குணமடைந்துள்ளனர்.

Covid -19 பரம்பலின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள்

10105 – உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

5804 – சிகிச்சை பெறும் நோயாளிகள்

314 – புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

4282 – குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்குச் சட்டம் – 1, 259 பேர் கைது

ஊரடங்குச் சட்டம் – 1, 259 பேர் கைது

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 259 பேர் இதுவரையில்

கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்

பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், 178 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன

கடந்த 4ஆம் திகதி தொடக்கம் 117 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல்

ஊரடங்குச் சட்டம் அவ்வப்போது பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

Posted in இலங்கை செய்திகள்

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 13 அதிகாரிகளுக்கு கொரோனா.

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 13 அதிகாரிகளுக்கு கொரோனா.

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை, குறித்த பிரிவின் உயர் அதிகாரியொருவர் லங்காதீப இணையத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டது.

அதன் பின்னர் அவருடன் தொடர்புகளை பேணிய ஏனைய 20 அதிகாரிகளுக்கு பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த பி.சி.ஆர். சோதனை முடிவுகளில் 13 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா இல்லாத மாவட்டம் எது

இலங்கையில் கொரோனா இல்லாத மாவட்டம் எது

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று (30)

வரையிலும் 5606 ஆக இருந்தது. அவர்கள் எந்ததெந்த மாவட்டங்களில் இருக்கின்றனர் என்பது தொடர்பிலான விவரம்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எந்தவொரு நபரும் இல்லாத

மாவட்டம், கிளிநொச்சி மாவட்டமாகும் என கொவிட்−19 ஒழிப்பிற்கான

தேசிய செயற்பாடு மையம் அனுப்பிவைத்துள்ள புள்ளிவிவரத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன

Posted in இலங்கை செய்திகள்

வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை மீண்டும் அமுலாக்குமாறு உத்தரவு

வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை மீண்டும் அமுலாக்குமாறு உத்தரவு

கொவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை மீள அமுலாக்குமாறு

மேல் மாகாணத்திலும், ஏனைய பிரதான நகரங்களிலும் இயங்கும் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் அமுலானது. அதன் போது கிடைத்த அனுபவங்களைப்

பயன்படுத்தி சேவைகளை வழங்குவதற்கு மாற்றுத் திட்டங்களை வகுக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம

செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களங்கள் – கூட்டுத்தாபனங்கள் – நியதிச் சபைகள் ஆகியவற்றின்

தலைவர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர அனுப்பி வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களுக்கு இந்த உத்தரவு விசேடமாக ஏற்புடையதாகும்.

இந்த மாவட்டங்களையும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அபாய வலயங்களாக பெயரிட்டுள்ள பிரதேசங்களையும்

தவிர ஏனைய மாவட்டங்களில் இயங்கும் அரச நிறுவனங்கள் சுகாதார விதி முறைகளை கடுமையாக அமுலாக்கி வழமை போல் இயங்க வேண்டும்.

கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதைத் தமது விடயதானத்திற்குள் உள்ளடக்கிய சகல சேவைகளையும் வழங்குவதற்கு நிறுவனத் தலைவர்கள் கடமைப்பட்டுள்ளார்கள் என

ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நிறுவனங்களும் தூரத்திலிருந்து நிறைவேற்றக்கூடிய

பணிகளையும், வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய ஊழியர்களையும் தீர்மானிக்கும் அதிகாரம் நிறுவனத் தலைவரிடம் ஒப்படைக்கப்படும்.

உரிய நிர்ணயங்களை மேற்கொண்ட பின்னர், ஆவணங்களையும், உபகரணங்களையும் முறையான அனுமதியுடன் ஊழியர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். காலை 8.30 தொடக்கம்

மாலை 4.15 வரை வீடுகளில் இருந்து வேலை செய்ய முடியும். ஊரடங்குச்சட்டம் அமுலாக்கப்படாத சந்தர்ப்பங்களில் தேவைக்கு ஏற்ற நேர மாற்றங்களை மேற்கொள்ள நிறுவனத் தலைவர்களுக்கு

அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்திற்குள் வராத ஊழியர்களை மேலதிக மனித வளங்கள் தேவைப்படும் நிறுவனங்களுடன் இணைத்துக் கொள்ள முடியும்.

வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை சிறப்பாகவும், செயற்றிறனாகவும் முன்னெடுக்க மாற்று தொலைத்தொடர்பாடல்

ஊடகங்களைப் பயன்படுத்தலாம். இவற்றில் குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி செயலிகள் போன்றவற்றை உள்ளடக்க முடியும்.

வீட்டிலிருந்து வேலை செய்வதற்குத் தேவையான நிதியை வழங்கும் பொறுப்பு பிரதம கணக்காளரைச் சார்ந்ததாகும். மக்கள் தமது தேவைகளை தாமதமின்றி முன்வைப்பதற்கு வசதியாக,

பொதுமக்களுக்கு நேரடியாக சேவை வழங்கும் சகல நிறுவனங்களும் ஒன்-லைன் தளங்களை உருவாக்க வேண்டுமெனவும் சுற்றுநிரூபத்தில் கூறப்பட்டுள்ளது. சுய

தனிமைப்படுத்தலில் ஈடுபடும் ஊழியர்களையும் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்கலாம். எனினும், கொவிட்-19 நோய்

அறிகுறிகள் தென்படும் ஊழியர்களிடம் எந்தவொரு வேலையையும் ஒப்படைக்கக்கூடாது.

சகல அரச நிறுவனங்களும் கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டுமென சுற்றுநிரூபத்தில் கூறப்பட்டுள்ளது. துறைமுகங்கள்

சார்ந்த பணிகளையும், சுங்கம் – நீர்விநியோகம் – மின்விநியோகம் முதலான சேவைகளையும் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல

வேண்டுமெனவும் ஜனாதிபதி செயலாளர் விடுத்த சுற்றுநிரூபத்தில் கூறப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (2020.10.29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், கௌரவ பிரதமர் மற்றும்

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது மத்திய கலாசார நிதியத்தின் கீழ் காணப்படும் நிறுவன கட்டுமானங்கள் நேரடி ஒப்பந்த அடிப்படையில் அரச

கட்டுமான நிறுவனங்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு கௌரவ பிரதமர் அறிவுறுத்தினார்.

தம்பானே பழங்குடியினருக்கு சொந்தமான, ஐக்கிய இராச்சியத்தின் எடின்பர்க் பல்கலைக்கழக கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த பழங்குடியின மக்களது மண்டைஓடுகள்

மீண்டும் பழங்குடி மக்கள் தலைவர் ஊறுவரிகே வன்னிலஅத்தன் அவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை எடின்பர்க்

பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது இடம்பெற்றது.

அதற்கமைய தொல்பொருள் மதிப்புவாய்ந்த, பழங்குடி மக்களுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் இந்த எலும்புகூடுகளை

வைப்பதற்கு கலைக்கூடமொன்றை நிறுவுவதற்கு மத்திய கலாசார நிதியத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் இதன்போது பிரதமர் அறிவுறுத்தினார்.

2021ஆம் ஆண்டுக்கான மத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டத்திற்கான 3400 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதும் இக்கூட்டத்தின் போது இடம்பெற்றது.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் (சட்டம்) கணேஷ் தர்மவர்தன, சுற்றுலாத்துறை அமைச்சின்

செயலாளர் சுனில் ஹெட்டிஆராச்சி, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 98 பேர் கைது

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 98 பேர் கைது

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 98 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (29) காலை 06 மணிமுதல் இன்று (30) அதிகாலை 05

மணிவரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களில் 42 பேர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா வைத்திருந்த 06 பேர், சட்டவிரோத மதுபானங்களுடன் 37 பேர், கோடா வைத்திருந்த 06 பேர் மற்றும் ஏனைய

குற்றச்சாட்டுகளில் 07 பேர் கைதுசெய்யப்பட்டள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ பரவல் எதிரொலி – 11 வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு

கொரனோ பரவல் எதிரொலி – 11 வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள 11 வர்த்தக நிலையங்களை

இன்றிலிருந்து மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தம்புத்தேகம

சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரி மிலான் யஹத்துகொட தெரிவித்துள்ளார்.

மீகொட பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து தம்புத்தேகம பொருளாதார

மத்திய நிலைதயத்துக்கு வருகைத் தந்த வர்த்தகர் ஒருவருக்கு தொற்று

உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே, குறித்த பொருளாதார

நிலையத்தின் வர்த்தக நிலையங்களை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

மேல் மாகாணத்திற்குள் உட்பிரவேசித்தல், வெளியேற தடை

மேல் மாகாணத்திற்குள் உட்பிரவேசித்தல், வெளியேற தடை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதியில் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பது அல்லது அங்கிருந்து வெளியேறுவது முழுமையாக தடை

செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இன்று மாலை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தி மேல் மாகாணத்திற்குள்

பிரவேசிக்கவோ அல்லது வெளியேரவோ முடியாது என்றும் கூறினார்.

நாளை நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் மாகாணத்தில் 112 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

இதேபோன்று குளியாப்பிட்டி பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை காலை 5.00 மணியுடன் நிறைவடைகின்றது.

ஏனைய 68 பொலிஸ் பிரிவுகளில் அதேபோன்று ஊரடங்கு சட்டம் இடம்பெறும். இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள

காலப்பகுதியில் எந்த வகையிலும் மேல் மாகாணத்தில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கோ மேல் மாகாணத்திற்கு வருவதற்கோ யாருக்கும் வாய்ப்பில்லை.

மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து நுழைவாயில் அமைந்துள்ள இடங்களில் பொலிஸ் வீதி தடைகளை ஏற்படுத்த

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வீதி தடைகள் நாளை முதல் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் மேல் மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலையும் உள்ளடங்குகின்றது. இந்த வீதி உடாக மேல்

மாகாணத்திற்கு வருவதற்கும் மேல் மாகாணத்தில் இருந்து வெளியே செல்வதற்கும் எந்த வாகனத்திற்கும் அனுமதியில்லை.

விபத்துக்கள் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மாத்திரம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். விசேடமாக அத்தியவசிய சேவையில்

ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு தமது கடமைகளை முன்னெடுக்க செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். இதை தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.

முன்னர் திட்டமிடப்பட்டிருந்த திருமண வைபவங்கள் அல்லது வேறு எந்த வைபவங்களையும் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் நடத்தப்படுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதிக்குள் பல்வேறு வைபவங்கள் தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றது. பொதுமக்கள் ஒன்று கூடுதல்,

மண்டபங்களில் மக்கள் ஒன்று கூடுதல் இந்த காலப்பகுதியில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வீடுகளில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களில் சிலர் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்காமல் இருப்பது கவனத்திற்கு

கொண்டு வந்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இந்த வைரஸ் தொற்று மார்ச் மாதம் 11 ஆம் திகதி முதல் முறையாக நாட்டில் பரவ ஆரம்பித்தது. அப்போது பொதுமக்கள் மிகவும் அவதானத்துடனும், பொறுப்புடனும் அதனை தடுப்பதற்கு

அரசாங்கம் மேற்கொண்ட நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். இதனை மீண்டும் நினைவில் கொண்டு பொதுமக்கள் செயல்படுவது அவசியம்.

வைரஸ் தொற்று தொடர்பில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவசர தேவைகளுக்காக தொலைபேசி மூலம்

தொடர்பு கொள்வதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நடமாடுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்களுக்கு

எதிராக சட்ட நடவடிகைகள் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்..

Posted in இலங்கை செய்திகள்

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்து வரையறுக்கப்பட்டுள்ளது

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்து வரையறுக்கப்பட்டுள்ளது

இன்று தொடக்கம் அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்து

வைரயறுக்கப்பட்டிருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு தொடக்கம் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை தொடர்ந்து கடவத்தை மற்றும்

கடுவல நுழைவாயிலில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் பஸ்

சேவை ஆரம்பிக்கப்படாது என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

இன்று முதல் 20 அமுலாகும்- அடுத்து என்ன …?

இன்று முதல் 20 அமுலாகும்- அடுத்து என்ன …?

கடந்த 22ஆம் திகதியன்று நிறை​வேற்றப்பட்ட, 20ஆம் திருத்தச்

சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார்.

அந்த சட்டம் இன்று (29) முதல் அமுலாகும் என

அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

குண்டுவெடித்த கொச்சிக்கடை தேவாலயதிற்கு பயணித்த அமெரிக்கா முக்கிய அதிகாரி

குண்டுவெடித்த கொச்சிக்கடை தேவாலயதிற்கு பயணித்த அமெரிக்கா முக்கிய அதிகாரி

இலங்கைக்கு வஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்

பொம்பியோ கொழம்பு

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயதிற்கு விஜயம் செய்தார்.

இதகை; தொடந்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இன்று மாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இவர் இந்திய விஜயத்தின் பின்னர் நேற்றிரவு இலங்கை வந்தடைந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பதவிக் காலத்தில் நாட்டிற்கு

வருகை தந்த உயர் அமெரிக்க இராஜாங்க அதிகாரி மைக் பொம்பியோ என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் கம்பலை மாமனிதர்

தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் கம்பலை மாமனிதர்

கண்டி மாவட்டம்  கம்பலை நகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் தெரு நாய்களுக்கு நாளாந்தம் நாய்கள் காணப்படும்

இடங்களுக்கு சென்று உணவு வழங்கி வரும் மாமனிதர ஒருவரை கானும் வாய்ப்பு கிடைத்தது. பெயர் குறிப்பிட விரும்பாத இவர்

நாளாந்தம் அதிகாலை நித்திரை விட்டு எழுந்து குடும்பத்தாரின் உதவியுடன் நாய்களுக்காக சமைத்து தனது முச்சக்கர வண்டி

மூலம் நாய்கள் இருக்கும் இடத்திற்கு சென்று சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றார்.


தினமும் குறித்த நேரத்திற்கு நாய்களுகான உணவுகள் வழங்கப்படுவதினால். நாய்கள் சரியான நேரத்திற்கு சரியான இடத்தில் ஒன்றாக வந்து நின்று தங்கள்

உணவுகளை பெற்றுக் கொள்கின்றன. சூழலுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு லஜ்சீட் போன்றவற்றையும்

நாய்களுக்கு உணவு வழங்கிவிட்டு உடனே எடுத்த செல்கின்றார்.   இந்த உன்னத புண்ணிய செயற்பாட்டை

தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லும் குறித்த நபருக்கு நாம் அனைவரும் வாழ்த்துக்களை

தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் கம்பலை மாமனிதர்
தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் கம்பலை மாமனிதர்
Posted in இலங்கை செய்திகள்

இந்த பாதையை திருத்துவது எப்போது?

இந்த பாதையை திருத்துவது எப்போது?

ஹட்டன் கொழும்பு பிரதான பாதையில் குயில்வத்த பிரதேசத்தில் தொடர்ந்து மலையகத்தில் நிலவிய காலநிலை மாற்றத்தின் போது

பாதையின் ஒரு பகுதி பாதிப்படைந்து போக்குவரத்து ஒரு வழி பயணமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நடைமுறைகள் முன் கொண்டு வரப்பட்டு பல மாதங்கள் ஆன போதும் இதனை திருத்துவதற்கான எந்தவிதமான நடடிக்கைகளும் இது வரைக்கும் முன்னெடுக்கபடவில்லை. இதனால்

போக்குவரத்தில் ஈடுப்படும் வாகனங்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இரவு வேலையில் வாகனங்களை செலுத்தும் போது பழுதடைந்த பாதை தொடர்பில் தெரிந்துக்

கொள்ள எந்தவிதமான அறிவுருத்தல்களும் இல்லை எனவும் சாரதிகள் கூறுகின்றனர். பாதிப்டைந்த இடத்தில் பாதசாரிகளின்

கடவையும் காணப்படுகின்றது. தற்போது பாதசாரிகளினால் அதனை பாவிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

இவ்வாறான நிலையில் இந்த பாதையை உடனடியாக திருத்த வேண்டிய பொறுப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின்

பொறுப்பாகும். இதனை உடனடியாக திருத்தி தறுமாறு சாரதிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த பாதையை திருத்துவது
இந்த பாதையை திருத்துவது
Posted in இலங்கை செய்திகள்

முன்னால் ஜனாதிபதியின் கம்பலை பழத்தோட்டம் எங்கே

முன்னால்ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஒர்வில் நவதேவிட்ட

மகாவலி கங்கை ஆற்றங்கரையில் “புனருதய” தேசிய சுற்றாடல் பேணல் நிகழ்ச்சித்திட்டத்தின் கிழ் “வனரோபா” தேசிய

மரநடுகையை முன்னிட்டு மாதிரி “வளர்சோலை” ஒன்று 2015 ஆம் ஆண்டு  முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வனரோபா வளர்சோலை செயற்திட்ட்த்தின் கீழ் பயன் தரும் மரங்கள் உட்பட குறுகிய காலத்தில் பயன் தரும் மர

பழச்செய்கையையும் முன்னெடுப்பதற்கும் இதன் மூலம் நாட்டுக்கு மருந்துகள் அற்ற பழங்களை வினியோகிப்பதற்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கபட்டன.

தற்போது இந்த வேலைத்திட்டம் கைவிடப்டடுள்ளது. இதற்கான கட்டடம் பற்றைகளால் மூடப்பட்டு கைவிடப்பட்ட நிலையில்

காணப்படுகின்றன. செயற்திட்டத்திற்கு என சுத்தப்படுத்தபட்ட பாரிய இடங்கள் தற்போது மீண்டும் காடாகி பயனற்று காணப்படுகின்றது.

குறித்த காலத்தில் நாட்டில் காணப்பட்ட அரசியல் ஸ்தீர தன்மை காரணமாக இந்த செயற்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிய

வந்தாலும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வது கட்டாயமானதாகும்.

பயனற்று இருக்கும் இந்த இடத்தை பயனுள்ளதாக வேண்டியதும் கட்டாயமானதாகு

Posted in இலங்கை செய்திகள்

சீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா !! எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா !! எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சீனத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பு என்பது சிறிலங்காவை சீனத்தின் குறுநில அரசாகி

( Vassal State) விடும் ஆபத்து உள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரித்துள்ளது.

ஐநா மனிதவுரிமைப் பேரவை உள்ளிட்ட பன்னாட்டு மன்றங்களில் சிறிலங்காவைப் பாதுகாப்பதாக சிறிலங்காவுக்கு சீனம் அண்மையில் வழங்கியுள்ள உறுதியினை மையப்படுத்தி

அமெரிக்க வெளியுறவுச் செயலர் பொம்பியோவுக்கு எழுதிய கடிதத்தில் இவ்விடயத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தின் 2020க்கான ஆண்டறிக்கையில் கூறியிருப்பது போல், சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனமொன்றிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ள

சிறிலங்காவின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தின் நிலை என்பது, இந்தியப் பெருங்கடலுக்குள் அதிகார நீட்சிக்கு

இத்துறைமுகதளத்தை சீனம் இராணுவ நோக்கில் பயன்படுத்த விரும்புவதாகத் தெரிகிறது என்பதனையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிதவுரிமை மீறல்களிலும், சுற்றுசூழலை வலிந்து அழிவுப்பதிலும், சீனத்தின் நடத்தை என்பது உலகறிந்த விடயம் என்பதும், சீனம்

இத்துறைமுகத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றிய அச்சம் அறிவார்ந்த ஒன்றெனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இந்தச் சிக்கல்களைக் கவனிக்க உங்கள் பதவிப் பொறுப்பின் அதிகாரத்தையும் விருப்புரிமையையும் பயன்படுத்துவது குறித்துக் கருதிப் பார்க்கும் படி சிறிலங்காவுக்கு

பயணம் செய்யவுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,

தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல், ஹம்பாந்தோட்ட துறைமுகத்தைச் சீனம் பயன்படுத்திக் கொள்ளல் ஆகிய

வியடங்களில் சிறிலங்காவை நேரடியாக கேள்விக்குட்படுத்துமாறு கோரியுள்ளது.

மேலும் அமெரிக்க வெளியுறவுச் செயலருக்கு எழுதிய கடித்தில், இலங்கைத்தீவின் இறுதிப்போரின் போது, 70 000க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, சிறிலங்கா அரசு

புரிந்த போர்க் குற்றங்களுக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் நம்பத்தக்க சான்றுகள் இருப்பதாக, ஐநாவின்

முன்னாள் பொதுச் செயலர் பான் கி மூன் அமர்த்திய வல்லுநர் குழு அறிக்கையினை பிரதமர் வி.உருத்திரகுமாரன்

சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் 2015ம் ஆண்டு ஐ.நா மனிதவுரிமை உயராணையர் அலுவலகம் தந்த சிறிலங்கா பற்றிய புலனாய்வு

(OISL) அறிக்கையில் முதன்மையாக சிறிலங்கா அரசு அமைப்புசார் குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளதனையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிகாட்டியுள்ளார்.

இதேவேளை அமைதிக்கும் நீதிக்கும் இப்பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் ஆகச் சிறந்த தீர்வாக, ஸ்காட்லாந்திலும், எரித்ரியாவிலும், கொசாவோவிலும் நடத்தப்பட்டது போல்

தமிழர்களுக்கான ஒரு பொதுவாக்கெடுப்பே என்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நம்பிக்கை என சுட்டிக்காட்டிய பிரதமர்

வி.உருத்திரகுமாரன், இந்தியப் பெருங்கடலின் புவிசார் கேந்திரமாக இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதியின் 700 கிலோ மீற்ற்ர்

கடலோரப் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்கான வேணவா நியாயமானது, செல்லத்தக்கது என பிரதமர்

வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளமை அமெரிக்காவின் இந்தியப் பெருங்கடல் அரசியலின் முக்கியமான விடயமாக உள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

Posted in இலங்கை செய்திகள்

காலியில் 3 வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை

காலியில் 3 வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை

கொரோனா தொற்றாளர்களுக்காக, காலி மாவட்டத்தில் 3 வைத்தியசாலைகள்

ஒதுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஹிக்கடுவ- ஆரச்சிகந்த வைத்தியசாலை, அம்பலாங்கொட,

கரந்தெனிய ஆகிய வைத்தியசாலைகள் கொரோனா தொற்றாளர்களுக்கு

சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையின் பின்னர், இதுவரை காலி மாவட்டத்தில்

4,837 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதுடன், 54 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி கோட்டா -பொம்பியோ பேச்சு

ஜனாதிபதி கோட்டா -பொம்பியோ பேச்சு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்

மைக்கல் பொம்பியோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி

செயலகத்தில் வைத்து சற்றுமுன்னர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை, வெளிவிவகார அமைச்சில் வைத்து சந்திப்பார்.

ஜனாதிபதி கோட்டா
ஜனாதிபதி கோட்டா