Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா
கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா
எட்டியாந்தோட்டை இங்கிரியாவத்த பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணி
பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, சுகாதார பரிசோதகர்களால் குறித்த பெண்,
ஐ.டி.எச்-இல் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த பெண்ணின் தந்தைக்கு முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று
காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மனைவி தாலிக்கொடியை அறுத்தா திருடனை துரத்தி பிடித்த கணவன்
தாலிக்கொடியை அறுத்தெடுத்து தப்பிக்க முயற்சித்த நபரைப் பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கிய கணவன், மனைவி, பிள்ளை, தாலியை அபகரித்த நபர் மற்றும் வீதியில் பயணித்த ஆசிரியர் #
ஒருவர் உட்பட ஐவர் விபத்துக்குள்ளாகி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இவர்களில் இருவர், மேலதிக சிகிச்சைக்காக கல்முனை மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பிரதான வீதியில், நேற்றிரவு (02) இடம்பெற்றுள்ளதுடன்,
சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் மூன்றும் காரொன்றும் சேதமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பனங்காடு பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி, மோட்டார் சைக்கிளில் மேற்படி குடும்பம் சென்று கொண்டிருக்கையில், மனைவியின் தாலியை, பிறிதொரு மோட்டார்
சைக்கிளில் வந்த நபரொருவர் அறுத்தெடுத்து தப்பித்துச் செல்கையில், அந்நபரைக் கணவன் பின்தொடர்ந்துள்ளார்.
இதனையடுத்து, சாகாமம் பிரதான வீதி, பல்நோக்குக் கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக அந்நபரை இடைமறிக்க கணவன் முற்பட்ட வேளை, அங்கு நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த காரொன்றில் மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதாக, விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு, வீதியில் பயணித்துக்கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் இவ்விபத்தில் சிக்கியுள்ளது.
இதனால் ஐவரும் காயமடைந்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மயக்க
நிலையடைந்த கணவன், சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாலியை அபகரித்த நபர், அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் பெண்ணின் வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கான சிகிச்சையும் பிள்ளை மற்றும்
ஆசிரியருக்கான சிகிச்சையும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்துக்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸார், பறிக்கப்பட்ட தாலியை மீட்டு, விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவில் கருவாட்டு தொழிற்சாலையை இயக்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் நடவடிக்கை
முல்லைத்தீவில் கருவாட்டு தொழிற்சாலையை இயக்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் நடவடிக்கை
முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசத்தின் கருவாட்டு தொழிற்சாலையின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கொவிட் – 19 காரணமாக கருவாடு உற்பத்தி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று (02.11.2020) சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, தொழிற்சாலை கொறோனா தொற்று நீக்கப்பட்டு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த
தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகின்ற இயந்திரத்தின் ஊடாக ஐந்து மணித்தியாலங்களில் சுமார் 400 கிலோ கிராம் கருவாடு உற்பத்தி செய்ய முடியும்.
இந்நிலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற கருவாடுகளை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் ஊடாக கொள்வனவு செய்து
சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக சந்தைப்படுத்துவதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 பெட்டி டிஜிட்டல் வெப்பமானிகள் வன்னி பாதுகாப்பு படையினருக்கு அன்பளிப்பு
10 பெட்டி டிஜிட்டல் வெப்பமானிகள் வன்னி பாதுகாப்பு படையினருக்கு அன்பளிப்பு
வன்னியில் உள்ள படையினரால் வைரசுக்கு எதிராக ஆற்றிய பங்கை பாராட்டிய ஒரு பிரபலமான நன்கொடையாளர் திரு சரத் களுஆராச்சி வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல்
பிரியந்த பெரேராவிடம் வியாழக்கிழமை (29) மிரிசவெத்திய ரஜமகா விகாரையில்வைத்து பத்து பெட்டி டிஜிட்டல் வெப்பமானிகளை நன்கொடையாக வழங்கினார்.
குறித்த நன்கொடையானது மிரிசவெத்திய ரஜமகா விகாரையின் தலைமை தேரர் வென் ஈதல்வெட்டுநுவெவ ஞானதிலக தேரர் மூலம் வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதியிடம் வழங்கப்பட்டது.
அந்த டிஜிட்டல் வெப்பமானிகள் கொவிட்-19 வைரஸ் பரவுவதற்கு எதிராகப் பயன்படுத்தப்படுத்துவதற்காக வன்னி பாதுகாப்புப்
படைத் தலைமையக கட்டளையின் கீழ் உள்ள அனைத்து பிரிவுகளிலும் விநியோகிக்கப்பட உள்ளன.
இந்த நிகழ்வின் போது (வட மத்திய), முன்னரங்கு பாதுகாப்பு பகுதி படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால், 21 வது படைப்
பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுற்றுலா விடுதிகள், சுற்றுலா முகாம்களை தற்காலிகமாக மூட உத்தரவு
சுற்றுலா விடுதிகள், சுற்றுலா முகாம்களை தற்காலிகமாக மூட உத்தரவு
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மூலம் நிர்வகிக்கப்படும்
சுற்றுலா விடுதி முகாம் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுதப்பட்டுள்ளது.
கொவிட் – 19 தொற்று நிலைமை மீண்டும் நாட்டில் பரவியதன் காரணமாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் முகாம்
நிலப்பரப்புக்களில் அருகில் உள்ள பகுதிகளை 2020.11.02 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக மூடிவிடுவதற்கு தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாக இங்கு வசதிகளை ஒதுக்கீடு செய்துக்கொண்ட சுற்றுலா
பயணிகளுக்காக வேறு தினமொன்றை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் அறிவிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட சுற்றுலா வசதிகளை ஒதுக்கி கொண்டுள்ள சுற்றுலா குழுவினருக்கு தனித்தனியாக
அறிவிப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று வனஜீவராசிகள் பாதுகாப்பு
திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிப்பு
மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிப்பு
கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாதகம, மாவனெல்லை, புளத்கொஹூபிடிய ஆகிய பொலிஸ் வலயங்கள் மற்றும் கலிகமுவ
பிரதேச சபை எல்லைப்பகுதிக்கு உட்பட்ட பகுதியும் குருணாகல் மாவட்டத்தில் கிரிஉல்ல பொலிஸ் வலயமும் தற்போதிருந்து
தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என்ற ரீதியில் பெயரிடப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரையின்
அடிப்படையில் ஊழுஏஐனு 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
பாலத்தில் வெள்ளம் – பயணிகள் அவதி – படம் உள்ளே
பாலத்தில் வெள்ளம் – பயணிகள் அவதி – படம் உள்ளே
பொதுவாக பாலங்கள் அமைப்பது நீர் உள்ள இடங்களில்; நீர் ஆற்றின்
கீழே செல்ல வாகனங்கள் மேலே செல்வதற்கே. இதற்கு மாறாக நீர் பாலத்தின் மேலே செல்வதற்கு பாலம் ஒன்று கண்டி
மாவட்டம் உடபளாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட இரட்டைப்பாதை தொரகல நீவ்பீககொக் பிரதான பாதையில் அமைக்கப்பட்டுள்ளது.
“சங்கிலி” பாலம் என அழைக்கப்படும் இப்பாலத்தின் ஊடாக நாளாந்தம்
ஆயிரகணக்கான பொது மக்கள் பயணித்து வருகின்றன. தொhரகல கிராமத்திற்கும் நயாபான
தோட்டத்திற்குமாக இரண்டு அரச போக்குவரத்து சேவைகளும் தனியார்
பஸ்களும் முச்சக்கர வண்டிகளும் தொரகல பிரதேசத்தில் 15.000 ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாயிகளும் நீவ்பீகொக்
தோட்டம் ஓல்ட்பீகொக் தோட்டம் நயாப்பன தோட்டம் தொரகல கிராமத்தை சேர்ந்ந மக்களும்; நாளாந்தம் இந்த பாihயை பாவித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் அன்மை காலங்களில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த பாலத்தின் நிர்மாண பனிகள் சீர் இன்மை
காரணமாக பாலம் பழுதடைந்து குற்றும் குழியுமாக நீர் தேங்கி போக்குவரத்திற்கு பொருத்தமற்று காணப்படுகின்றது.
இதனால் பயணிகளும் பயணிக்கும் வாகனங்களும் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
இந் நிலையில் இந்த பாலத்தினை சீர் செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


மாமியை அடித்து கொன்ற மருமகள்
மாமியை அடித்து கொன்ற மருமகள்
குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக, மருமகளால் தாக்கப்பட்ட மாமியார் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின்போது
தாக்குதலுக்கு இலக்கான மாமனார், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இச்சம்பவம், நேற்று (01) காலை, நானு-ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மாரிமுத்து கோவிந்தம்மா (வயது 80) என்ற 4 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார் என்றும் இவரது கணவர்
அங்கமுத்து மாரிமுத்து (வயது 85 ), வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மூன்று பிள்ளைகளின் தாயான மருமகள், சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு பின்னர் கைக்கலப்பாக மாறியதாகவும் இதன்போது,
மாமியாரையும் மாமனாரையும், மருமகள சரமாறியாகத் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பிரதான வீதியில் பலத்த காயங்களுடன் வீழ்ந்து கிடந்த தாயையும் மலசலக்கூடத்தில் காயங்களுடன் காணப்பட்ட
மாமனாரையும் பிரதேசவாசிகள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு, 1990 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி, மாமியார் உயிரிழந்துள்ளார் எனத் தெரியவருகின்றது.
எனினும் கைது செய்யப்பட்ட மருமகள், தனது மாமி, மாமனாரை, இனந்தெரியாதோர் தாக்கியதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
9 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு
9 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு
தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால், மேல் மாகாணத்தில்
பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு
எதிர்வரும் 9ஆம் திகதி காலை 5 மணிவரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாளை காலை 5 மணி தொடக்கம் எதிர்வரும் 9ஆம் திகதி வரை,
இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
பிரதேசங்களிலும் குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலும்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்
கிளிநொச்சியில் கொரோனா சூழ்நிலையில் கடமைகளை
இலகுபடுத்துவதற்காக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.
தற்போதைய கொரோனா வைரஸ் பரவும் இக்கட்டான நிலையில் கடமைகளை
இலகு படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் உலக வங்கியின்
நிதியில் Covid 19 Emergency response and Health systems preparedness project மூலம் வழங்கப்பட்டது.
நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 12 பொதுச் சுகாதார
பரிசோதகர்களுக்கு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளி மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு சுய தனிமைப்படுத்தல்
வெளி மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு சுய தனிமைப்படுத்தல்
எந்த ஒரு மாவட்டத்திலிருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வருபவர்கள் அனைவரும் தம்மை சுய தனிமைப்படுத்தலிற்கு
உட்படுத்த வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இம்மாவட்டத்திலிருந்து பிறமாவட்டங்களுக்கு தொழில் நிமித்தம் சென்று வருபவர்கள் அல்லது அங்கு தங்கி தொழில் புரிபவர்கள் அல்லது வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அரச, தனியார் மற்றும்
சுயதொழில் புரிபவர்கள், அல்லது பிற மாவட்டத்தில் வசிக்கும் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்திருந்தால் எவராக
இருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு இம்மாவட்டத்திற்குள் வருகைதந்தவர்கள் தமது விபரங்களை பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது பொலிஸ், பிரதேச செயலாளர் அல்லது தமது கிராம சேவை
உத்தியோகத்தர்களிடம் தெரிவித்து இரண்டு வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறும், இக்காலப்பகுதிக்குள் தமக்கு ஏதாவது நோய்த் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ
உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அதசாங்க அதிபர் கருணாகரன் தெரிவித்தார்.
பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடையவர்கள் தவிர்ந்த வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்களில் 5 பேர்
கொரோனா நோயாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கடமை நிமிர்த்தம் வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்களும், அவ்வாகனங்கள் பற்றிய விபரங்களை
குறித்த திணைக்களங்கள் மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துவிட்டுச் செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதுதவிர கொரோனா நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ள வெல்லாவெளி, பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட வாழைச்சேனைப் பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் சிகைஅலங்கார நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்படுவதுடன், சகல சுகாதார விதிமுறைகளைப்
பேணுவதுடன் வரும் வாடிக்கையாளர்களது விபரங்களை பதிவேடொன்றில் பதிந்து கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் கருணாகரன் கேட்டுக்கெண்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா மேலும் ஒருவர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா மேலும் ஒருவர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா நோய் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்தள்ளார்.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
ஊடக அறிக்கை
பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 31ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த நோயாளியின் பிரேத
பரிசோதனையில் அவர் கொவிட் நோய் தொற்றுக்குள்ளானவர் என்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தொற்று நோயியல் பிரிவு சற்று முன்னர் அறிவித்தது.
உயிரிழந்த நபர் 27 வயது ஆண் ஆவதுடன் பாணந்துறை பிரதேசத்தைச்
சேர்ந்தவர். அத்துடன் இந்த மரணம் தற்கொலை முயற்சியினால் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இது 22ஆவது கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவரின்; மரணமாக தொற்று நோயியல் பிரிவு உறுதிசெய்துள்ளது.
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தாமதம் என அறிவிப்பு
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தாமதமடையலாமெனக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தாமதமடையலாமெனக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்துதெரிவிக்கையில் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை முடிந்து மீண்டும் எதிர்வரும் 9ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க
திட்டமிட்டிருப்பினும் தற்போது பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக உரிய திகதியில் பாடசாலைகளை மீள திறக்க முடியாது போகும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதார அதிகாரிகளிடம் பரிந்துரைகளை கேட்டுள்ளதாகவும் சுகாதார
பரிந்துரைகளின் அடிப்படையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தாமதடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த பேரூந்தில் பயணித்தவர்களுக்கு கொரனோ
அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த பேரூந்தில் பயணித்தவர்களுக்கு கொரனோ
ஓக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று, கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த WP NF 7666 என்ற இலக்கத்தையுடைய தனியார் பஸ்ஸில் பயணித்தவர்கள்
உடனடியாக தமக்கு அருகிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களைத் தொடர்புகொள்ளுமாறு, கல்முனை பிராந்திய
தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ஆர்.ஆரிப் கேட்டுக்கொண்டுள்ளார்.
பயணித்த அனைவரும் தாங்களாகவே தங்கள் குடும்பத்துடன் இம்மாதம் 09ஆம் திகதி வரை சுய தனிமைப்படுத்தலுக்கு
உள்ளாகுமாறும் கேட்டுக்கொண்டுள்ள வைத்திய அதிகாரி, மேற்படி தனியார் பஸ்ஸில் பயணித்தோர் குறித்த விவரங்களைத் தத்தமது
பொதுச் சுகாதார பரிசோதகருக்குத் தெரியப்படுத்தத் தவறும் பட்சத்தில் 0777258376 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறும் கேட்டுள்ளார்.
இதேவேளை, மேற்படி பஸ்ஸில் பயணித்த 35 பேரில் 16 பேரே, பொதுச் சுகாதார பரிசோதகர்களைத் தொடர்புகொண்டு
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் ஏனையோரை, பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ்
இலங்கையில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ்
இலங்கையில் தற்போது கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் வகையைச் சேர்ந்தது என
சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் டொக்டர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்தார்.
இந்த நுண்ணுயிர் முன்னர் பரவியதைவிட வித்தியாசமான வைரசாக உள்ளது. இது ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக செயலாளர் கூறினார்.
இந்த வைரஸ் கந்தக்காட்டில் பரவிய வைரஸ் வகை அல்ல என்பதை பல்கலைக்கழக ஆய்வு அறிக்கையின் மூலம் அறிந்துகொள்ள முடிந்ததாக செயலாளர் நேற்று தெரிவித்தார்.
இந்த வைரஸ் வீரியத்தைக் கொண்டது. இது தீவிரமாக மற்றவர்களுக்கு பரவக்கூடிய ஆற்றலைக் கொண்டது. இதனால்தான் குறுகிய கால்திற்குள் பெரும் எண்ணிக்கையிலானோர் வைரஸ் தொற்றுக்குள்ளாகினர் என்றும் அவர் தெரிவித்தார்.
நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் (Department of Immunology and Molecular Medicine and Allergy> Immunology and Cell Biology Unit of
University) பிரிவைச் சேர்ந்த, பேராசிரியர் நீலிகா மலவிகே தலைமையில், வைத்தியர் சந்திம ஜீவந்தர, வைத்தியர் டெஸ்னி
ஜயதிலக, வைத்தியர் தினுக ஆரியரத்ன, லக்சிறி கோமஸ், தியனாத் ரணசிங்க ஆகியோரினால் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஸ்ரீ ஜயவர்தனபுர பலலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மருத்துவம் தொடர்பான ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சந்தீம ஜிவன்தர இது தொடர்பாக தெரிவிக்கையில், மினுவங்கொடை
மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட 16 வைரசு மாதிரிகளில் 13 வைரஸ் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அவை அனைத்தும் வெவ் வேறு இடங்களில் பெறப்பட்டாலும் இவை அனைத்தும் ஒரே மாதிரியானவை. B1 42 சார்ஸ் வகைக்கு உட்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவை. B 1, 6 1 4 G வைரஸ் இனத்தைச் சேர்ந்தவை என எண்ணுகின்றோம். இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் என நம்புகின்றோம்.
B 1, B 2, B 4 ஆகியவற்றில் B 1 னே ( பீ ஒன்றே) ஆரம்பத்தில் ஜரோப்பிய நாடுகளில் அதிகாமாக பரவியுள்ளது. இந்த வைரஸ் தற்பொழுது டென்மார்க்கிலும் சுவிடனிலும் காணப்படுகின்றது. மற்றவர்களுக்கு தொற்றக்கூடிய வாயப்புகள் அதிகம். இது தொடர்பில் எமக்கு சரியான தெளிவு இன்னும் இல்லை.
பல்வேறு மட்டத்தில் இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த தொற்று ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும் என்று கூறமுடியாது இருப்பினும் விசேடமாக வேறு நோய் உள்ளவர்களை இந்த வைரஸ் வெகுவாக பாதிக்கக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் மார்ச் மாதம் தொடக்கம் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வைரஸ்கள் காணப்பட்டன. இவை அனைத்திலும் பார்க்க இது வேறுபட்டது. இதற்கு முன்னர் இலங்கையில் இந்த புதிய வைரஸ் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பில் 1592 குடும்பங்களைச் சேர்ந்த 3,959 பேர் தனிமைப்படுத்தலில்
மட்டக்களப்பில் 1592 குடும்பங்களைச் சேர்ந்த 3,959 பேர் தனிமைப்படுத்தலில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1592 குடும்பங்களைச் சேர்ந்த 3,959 பேரிற்கு விடுகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
அதற்கு மேலதிகமாக கொரோனா தொற்று என மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதியானவர்கள் மாவட்டத்தில் 35 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதில் கொறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் 31பேரும் வெல்லாவெளி பட்டிப்பளை களுவாஞ்சிக்குடி ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலக பிரிவில் தலா ஒருவர் என அடையாளம் கானப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
கொரோனா நோய் தொற்றுகாரனமாக தொழில் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான 5000.00 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொருட்களை
வழங்குவதற்கான நிதியினை அரசாங்க அதிபரின் துரித நடவடிக்கையினால் திறைசேரியின் செயலாளர்
எஸ்.ஆர்.ஆட்டிக்கலவினால் உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளர்களுக்கு நேற்று முதல் உலர் உணவுப்பொதிகளை வழங்குவதற்கு அரசாங்க அதிபர் உத்தரவிட்டார்.
உலர் உணவு பொருட்களை வழங்கும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது எதிர்காலத்தில் தொழில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அனைவரும் வெளிமாவட்டங்களில் தொழில் நிமிர்த்தம் சென்று வந்தவர்களாகவே உள்ளனர்.
இவர்களுக்கான மருத்துவ உதவிகளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளின் கண்காணிப்பில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து செயற்படுத்தி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
நோய் அறிகுறிகள் காணப்படும் கர்ப்பிணி தாய்மார்கள் தாமதமின்றி சிகிச்சைக்காக வைத்தியசாலையை நாடுமாறு ஆலோசனை
நோய் அறிகுறிகள் காணப்படும் கர்ப்பிணி தாய்மார்கள் தாமதமின்றி சிகிச்சைக்காக வைத்தியசாலையை நாடுமாறு ஆலோசனை
கர்ப்பிணி மற்றும் பிரசவத்திற்குப் பின்னரான தாய்மார்கள் நோய் நிலைமையின் போது சிகிச்சைக்காக சமூகமளிக்காமையினால் துர்பாக்கிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவலகள்; வெளியாகியுள்ளன.
இந்த தாய்மார்களுக்கு காச்சல், இருமல், மூச்சு எடுப்பதில் சிரமம், கர்ப்ப பை வாய் குழாய் ஊடான இரத்தபோக்கு, திரவ போக்கு, குழந்தை துள்ளுதல் தொடர்பான உணரும் ஆற்றல் குறைவு,
மயக்கம், உணர்விழந்த தன்மை, தலைச்சுற்றுதல், உடல் குலுக்கம், உடம்பு வீக்கமடைதல், அதிக இரத்த அழுத்தம் போன்ற நோய்
அறிகுறிகள் காணப்படுமாயின், உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு செல்லுமாறு குடும்ப சுகாதார பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அறிகுறிகள் காணப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுவதுடன் எந்த காரணத்தை கொண்டும்
இதில் தாமதம் ஏற்படகூடாது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோய்வாய்க்கு உட்படும் தாய்மார்களுக்கு தேவையான சிகிச்சையை 24 மணித்தியாலயமும் வழங்குவதற்கு அனைத்து அரச வைத்தியசாலைகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ள குறிப்பு புத்தகம் அவசரகால அனுமதி பத்திரமாக கருதப்படும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எத்தகைய சந்தர்ப்பத்திலும் அல்லது பிரச்சினையை எதிர்நோக்கப்படும்; பொழுதும் பிரதேச குடும்ப சுகாதார சேவை
அதிகாரி, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அல்லது சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் 1999 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ள முடியும்.
எத்தகைய நோய் சந்தர்ப்பதிலும் 1990 என்ற தொலைபேசி இலக்க சுவசெரிய அம்புலன்ஸ் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்று
இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார அலுவலகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் – 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதி
கம்பஹா தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் – 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதி
கொவிட்-19 தொற்று பரம்பலை அடுத்து கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்காக உலர் உணவு
நிவாணரப் பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகிறது.
ஒவ்வொரு பொதியும் பத்தாயிரம் ரூபா பெறுமதியானவை. இவற்றில் 14 நாட்களுக்கு தேவையான உலர் உணவும், பழ
வகைகளும் உள்ளடங்கி இருக்கின்றன. இதற்காக 68 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது.
நிவாரண பொதிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் பிரதேச செயலாளர் பிரிவுகள் மட்டத்தில் முன்னெடுக்கப்படும். இங்கு 13
பிரதேச செயலாளர் பிரிவுகளில் 6,800 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, முடக்க நிலை காரணமாக ஒரு மாத காலத்திற்கு மேலாக வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு 5,000 ரூபா
கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.
இலங்கையில் மேலும் ஒரு கொரோனா தொற்று நோயாளி மரணம்
இலங்கையில் மேலும் ஒரு கொரோனா தொற்று நோயாளி மரணம்
இலங்கையில் நேற்று மேலும் ஒரு கொரோனா தொற்று நோயாளி மரணமாகியுள்ளார்.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றைய தினம் (30) உயிரிழந்த நோயாளியின் PCR பரிசோதனை அறிக்கைக்கு
அமைவாக கொவிட் 19 தொற்று நோயாளி என்பது சற்று முன்னர் தொற்று நோயியல் பிரிவினால் உறுதி செய்யப்பட்டுள்ளது..
உயிரிழந்த இவர் 54 வயது பெண் ஆவார்.
கடந்த 29 ஆம் திகதி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் நாட்பட்ட நோய்களினால் அவதிப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
இது இலங்கையில் பதிவான 20ஆவது கொவிட் 19 தொற்று நோயாளியின் மரணமாக தொற்று நோயியல் பிரிவு உறுதி செய்துள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வலி.கிழக்கு விவசாயிகள் கோரிக்கை!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வலி.கிழக்கு விவசாயிகள் கோரிக்கை!
வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் விவசாயிகள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள்
தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தெரியப்படுத்தியதுடன் அதற்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்றையதினம் வலிகாமம் கிழக்கு விவசாயிகள்
கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே இவ்வாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
குறித்த சந்திப்பின்போது உருளைக்கிழங்கு விதைகளை மானிய அடிப்படையில் பெற்றுத் தருமாறும் கோரியதுடன் நீர் இறைக்கும்
இயந்திரங்களையும் மானிய அடிப்படையில் பெற்றுத்தருமாறு கேட்டிருந்தனர்.
அத்துடன் யூரியா மற்றும் அமோனிய உள்ளிட் உரங்களை விவசாயிகளுக்கு தேவையான அளவு பெற்றுத் தருமாறும் கோரியதுடன் அம்பன் புயலினால் சேதமடைந்த வாழைப் பயிற்
செய்கைக்கான இழப்பிடுகளை வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்திருந்தனர்.
மேலும் யாழ்மாவட்ட சந்தைகளில் விவசாய உற்பத்திகளுக்கு 10Kg இற்கு 1Kg என்ற கழிவு என்ற நடைமுறை காணப்படுவதனால்
விவசாயிகளிடையே பெரும் இடர்பாடுகள் ஏற்படுகின்றது. எனவே அது தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறு கோரிக்கைவிடுத்திருந்தனர்.
குறித்த விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கெட்டறிந்துகொண்ட அமைச்சர் அவை தொடர்பில் உரிய தரப்பினருடன் கதைத்து விரைவில் தீர்வகளை பெற்றுத்தர
நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்ததுடன் அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகளை வழங்கவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில்
அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்திப்பின்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் வடமாகாண விவசாய பணிப்பாளர்
சிவகுமார் மற்றும் கட்சியின் வலி கிழக்கு நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அகியோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.







