Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பறக்கும் படை வேட்டை – 1,281 பேர் கைது
பறக்கும் படை வேட்டை – 1,281 பேர் கைது
இலங்கையில்; இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்போது கண்காணிப்பு பணி தீவிரமாக்க பட்டுள்ளது
இவ்வேளை நிகழ்கால கொரனோ விதிகளை மீறினார்கள் எந்த குற்ற சாட்டில் கடந்த தினம்
மட்டும் 1,281 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்
- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி
- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்
சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும்
மனோ கணேசன்
சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும்
மனோ கணேசன்
வண எல்லே குணவன்ச தேரர், “பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்” என கூறுகிறார். நல்லது. ஆனால், உண்மையில் எனக்கு வண. தேரர்கள் இதை போதிக்க தேவையில்லை.
1999ம் ஆண்டில் மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டதில் இருந்து எனக்கு கிடைக்கும் சம்பளம், கொடுப்பனவுகள் எல்லாவற்றையும் நான் பொது காரியங்களுகாகவே தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளேன். அது மட்டுமல்ல, எனது கடும் சொந்த உழைப்பினால் நான் தேடிப்பெற்ற பெறுமதியான சொத்துக்களையும், பொது காரியங்களுகாகவே விற்று செலவழித்துக்கொண்டு இருக்கின்றேன்.
நான் ஒருபோதும் பொது சொத்தை திருடியது கிடையாது. ஏனெனில் எனக்கு திருட தெரியாது. இவைதான் என் தந்தை எனக்கு சொல்லித்தந்து விட்டு போன பாடங்கள். விட்டுத்தந்த மிகப்பெரிய சொத்துகள். என் தந்தையைவிட, எனக்கு வழிக்காட்ட பெரிய மதத்தலைவர் என்று எவருமில்லை.
ஆனால், இந்நாட்டின் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத தலைவர்களை விட, விசேட அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ள மிகப்பல பெளத்த தேரர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும், உங்களை போன்ற தேரர்களை தம்வசம் வைத்துக்கொள்ள, வழங்கிய பென்ஸ், ரேஞ் ரோவர், டொயோடா போன்ற சொகுசு வாகனங்கள், சொகுசு வசிப்பிடங்கள் உட்பட்ட வசதிகளையும், வரப்பிரசாதங்களையும் பொது மக்களுக்காக அர்ப்பணியுங்கள். ஆலயங்களுக்கு சொந்தமான சொத்துக்களையும், பொதுக்காரியங்களுக்காக வழங்கி இந்த பணியினை ஆரம்பித்து வையுங்கள்.
கெளதம புத்தன் போதித்ததை போன்று, “கொலை இல்லை, திருட்டு இல்லை, பணம் இல்லை, பாலியல் உறவு இல்லை, பொய் இல்லை, போதைப்பொருள் இல்லை, மதிய உணவுக்குப் பிறகு சாப்பாடு இல்லை, நடனம், இசை இல்லை, நகைகள் ஒப்பனைப்பொருட்கள் இல்லை, எழுந்த படுக்கையில் தூக்கம் இல்லை,” என்ற பெளத்த துறவியின் எளிய துறவு வாழ்க்கையை வாழ உங்களால் முடியாவிட்டாலும் “பரவா-இல்லை”.
தேரர்களாகிய நீங்கள், “இன-மதவாத அரசியல் இல்லை” என்று வாழ்ந்தாலே போதும். இந்நாடு உருப்படும். நாளாந்தம் கொடுமைகளின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவி தமிழ், முஸ்லிம் மற்றும் அப்பாவி ஏழை சிங்கள மக்களும் உங்களை போற்றி வணங்குவார்கள்.
அசிட்டை அருந்தியவர் உயிரிழப்பு
அசிட்டை அருந்தியவர் உயிரிழப்பு
சாராயமென நினைத்து, லொறியின் பெட்டரி அசிட்டை (அமிலம்) அருந்திய இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக, காலி கராப்பிடிய போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காலி – படதுவ பூர்வாராம மாவத்தையைச் சேர்ந்த (53 வயது) கராஜில் வேலை செய்யும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லொறியின் பெட்டரி அசிட்டை மாற்றுவதற்காக லொறியின் உரிமையாளரும் இன்னும் இருவரையும் அழைத்துக்கொண்டு கராஜ்ஜுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற இவர்கள், சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட சாராய போத்தலையும், அசிட் போத்தளையும் எடுத்துக்கொண்டு வந்துள்ளனர்.
லொறியின் பெட்டரியை சார்ஜ் செய்துவிட்டு, அவர்கள் வாங்கி வந்த மதுபானத்தை அருந்தியுள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாகத் தவறுதலாக அசிட்டை சாராயமென நினைத்து சோடாவுடன் கலந்துள்ளார்கள்.
இதனை, அருந்திய லொறியின் உரிமையாளர் காலி கராபிடிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார். அசிட்டை அருந்தியதாலேயே இவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரி எனக்கூறி பணமோசடி
பொலிஸ் அதிகாரி எனக்கூறி பணமோசடி
வீட்டிலுள்ள தொலைபேசி அழைப்பு விடுத்து பணமோசடி செய்யும் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் அதிகாரி என தெரிவித்து இவ்வாறு மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிரசித்தி பெற்ற பொலிஸ் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
சீன பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
சீன பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சுரேஷ் சிரேஷ்ட கேர்ணல் வான் டோங் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவை (ஓய்வு) நேற்று சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த
விடயங்கள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
மேலும் இந்த கலந்துரையாடலின்போது, சீன தனது புதிய வின்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளமைக்காக ஜெனரல் குணரத்ன தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்காரவும் கலந்து கொண்டார்.
சட்டத்தை மீறிய 1,390 பேர் கைது
சட்டத்தை மீறிய 1,390 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,390 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் இன்றும் சுற்றி வளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ தளபதி மரணம்
முன்னாள் இராணுவ தளபதி மரணம்
இலங்கை இராணுவத்தில் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் மிகவும் பாராட்டப்பட்ட இராணுவத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், இராணுவ பதவி நிலை பிரதானியுமான (ஓய்வு) ஜெனரல் சிரில் ரணதுங்க புதன்கிழமை (16) தனது 91 வயதில் இயற்கை எய்தினார்.
1980 களில் இலங்கை இராணுவ படைப்பிரிவின் படைத் தளபதி , கூட்டு நடவடிக்கைக் கட்டளை மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானி ஆகிய தலைமை பொறுப்புக்களை வகித்த அவர், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூகினியா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக பணியாற்றியிருந்ததுடன், சேர் ஜோன் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
அன்னாருக்கான இறுதி சடங்குகள் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக வியாழக்கிழமை (17) நண்பகல் 12.30 மணிக்கு பொரளை பொது மயானத்தில், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இடம்பெற்றது. அவரது குடும்பத்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய மேற்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
தீபகற்பத்தில் குருநகர் பகுதியில் 1971 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போர் சூழல் உக்கிரமடைவதை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைளில் அவர் பெருமளவில் பங்களிப்பு செய்திருந்த சிரேஷ்ட அதிகாரியான அவர், விஸிஸ்ட சேவா விபூசணய பதக்கம், இராணுவ அலங்காரம் உள்ளிட்ட பல பதக்கங்கள் தாய்நாட்டிற்கான சேவைக்காக வழங்கப்பட்டுள்ளன.
1977 ஆம் ஆண்டு ஜனவரியில் அவர் இராணுவ தலைமையகத்தின் இராணுவ செயலாளராகவும், 1978 ஆம் ஆண்டு ஜனவரியில் பனாகொடை மேற்கு படைத்தளத்தின் கட்டளை தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். 1978 பெப்ரவரியில் அவர் பிரிகேடியர் பதவிக்கு நிலை உயர்த்தப்பட்டார். 1980 ஜனவரியில் அவர் மேற்கு படைகளின் கட்டளைத் தளபதியாக பணியாற்றியதோடு உதவிப் படைகளின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். அத்தோடு இராணுவத்தினரின் எதிர்காலத்திற்கான வைப்பு நிதியத்தை உருவாக்குவதற்கும் பங்களிப்புச் செய்திருந்தார்.
1982 பெப்ரவரியில் அவர் இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானியாகவும், யாழ். பாதுகாப்பு படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். குறித்த காலத்தில் போர்க்குணம் மிகுந்த தமிழ் பகுதியான குருநகரில் சேவையாற்றினார். அப்பகுதியில் இராணுவ புலனாய்வு துறையை நிறுவி ஊக்குவித்த அவர் , 1983 இராணுவத்திலிருத்து ஓய்வு பெற்றார்.
ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஜெனரல் ரணதுங்க விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவராக பணியாற்றியிருந்ததுடன், ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களினால் 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதுடன், அங்கு பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவு விவகாரங்களுக்கு பொறுப்பாகவும் செயற்பட்டார். பின்னர் அவர் 1993 ஆண்டு பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து விலகினார்.
மிரட்டும் கொரானா ஒரே நாளில் 51 பேர் மரணம்
மிரட்டும் கொரானா ஒரே நாளில் 51 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் சுமார் 51 பேர் பலியாகியுள்ளனர்
நோயினை தடுப்பதற்குபயண கட்டு பாடுகள் விதிக்க பட்டுள்ள பொழுதும் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை
அமைச்சர் டக்ளசுக்கு பாராட்டையும், கவலையையும், கோரிக்கையையும் ஒருசேர தெரிவிக்கிறேன் மனோ
அமைச்சர் டக்ளசுக்கு பாராட்டையும், கவலையையும், கோரிக்கையையும் ஒருசேர தெரிவிக்கிறேன்
- தமுகூ தலைவர் மனோ கணேசன்
13ம் திருத்தத்தின்படி மாகாணசபைகளுக்கு உரித்தான மருத்துவமனைகளை மத்திய அரசு சுவீகரிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொண்டமை அரசியலமைப்புக்கு முரணானது என்பதை அமைச்சரவையில் சுட்டிக்காட்டினேன் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா
கூறியுள்ளமை பாராட்டுக்குரியது. ஆனால், அதற்கான காரணமாக தமிழ் மக்கள் தனது கட்சிக்கு வாக்களித்து, தனக்கு அரசியல் பலத்தை தராமையே எனவும் அவர் மேலும் கூறியுள்ளமை கவலைக்குரியது.
உண்மையில் ராஜபக்ச அரசின் “அதிகார பரவலாக்கலுக்கு” எதிரான பெருந்தேசியவாத நிலைப்பாடே இதற்கு காரணம். எனவே அமைச்சர் இதுபற்றி தனது அரசுக்குள்ளே விடாமல் போராட வேண்டும். அவருக்கு அரசுக்குள்ளே இருக்கும் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள், இது தொடர்பில் ஆதரவளிக்க வேண்டும் இது எம் கோரிக்கை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ எம்பி மேலும் விவரித்து கூறியுள்ளதாவது,
அமைச்சரவை தீர்மானத்தின்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளை, மத்திய அரசு சுவீகரிப்பது தொடர்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின்படி, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மாகாண வைத்தியசாலைகளும் பறிக்கப்படும். ஆகவே இவை பற்றி வடக்கில், கிழக்கில், மலையகத்தில் இருந்து அரசுக்குள் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் சமகாலத்தில் எதிரணியில் இருந்து அரசு பக்கம் சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்பீக்களும் தமது எதிர்ப்புகளை காட்ட வேண்டும்.
உண்மையில், 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல் செயயும்படியே, இந்திய அரசாங்கம், ஐநா மனித உரிமை ஆணையம், ஐரோப்பிய பாராளுமன்றம் என்பவை கோதாபய ராஜபக்ச அரசாங்கத்தை திரும்ப, திரும்ப கூறுகின்றன.
13ம் திருத்தத்தை முழுக்க அமுல் செய்வதை நிறுத்தியது ஒருபுறமிருக்க, இப்போது இருப்பதையும் பறிக்கும் செயன்முறையை இந்த அரசு மேற்கொள்கிறது. இது நிச்சயமாக, இந்திய அரசுடனான உறவு, செப்டம்பரில் அடுத்து வரும் ஐநா மனித உரிமை ஆணையரின் வாய்மொழி அறிக்கை, ஐரோப்பிய பாராளுமன்ற ஜிஎஸ்பி+ விவகாரம் ஆகியவற்றில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அமைச்சர் தனது ஜனாதிபதிக்கு எடுத்து கூற வேண்டும். பார்க்கப்போனால், இந்த ஜனாதிபதிக்கு உள்நாட்டு அரசியல் சட்டமும் தெரியவில்லை. இலங்கை பற்றிய வெளிநாட்டு நகர்வுகளும் தெரியவில்லை போல் எமக்கு தெரிகிறது.
13ம் திருத்தத்தின்படி மாகாணசபைகளுக்கு உரித்தான மருத்துவமனைகளை மத்திய அரசு சுவீகரிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொண்டமை அரசியலமைப்புக்கு முரணானது என்பதை அமைச்சரவையில் சுட்டிக்காட்டினேன் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளமை பாராட்டுக்குரியது.
ஆனால், அதற்கான காரணமாக தமிழ் மக்கள் தனது கட்சிக்கு வாக்களித்து, தனக்கு அரசியல் பலத்தை தராமையே எனவும், அது தமிழ் மக்களின் தீர்க்கதரிசனமற்ற தீர்மானமே எனவும் அவர் மேலும் கூறியுள்ளமை கவலைக்குரியது.
உண்மையில் ராஜபக்ச அரசின் “அதிகார பரவலாக்கலுக்கு” எதிரான பெருந்தேசியவாத நிலைப்பாடே இதற்கு காரணம். எனவே அமைச்சர் இதுபற்றி தனது அரசுக்குள்ளே விடாமல் போராட வேண்டும். அவருக்கு அரசுகுள்ளே இருக்கும் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள், இது தொடர்பில் ஆதரவளிக்க வேண்டும்.
இந்நாட்டில், அதிகார பரவலுக்காக தமிழ் மக்கள் சிந்திய இரத்தம், கொடுத்த விலை என்பவை சில அமைச்சரவை தீர்மானங்களால் சுலபமாக பறி போக கூடாது. இந்த உண்மை, அரசில் இருக்கும் தமிழ், முஸ்லிம் முழு அமைச்சர்கள், அரை அமைச்சர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள், எம்பீக்கள் ஆகியோருக்கு தெரிய வேண்டும்.
வவுனியாவில் கிணற்றில் இருந்து நபர் சடலமாக மீட்பு
வவுனியாவில் கிணற்றில் இருந்து நபர் சடலமாக மீட்பு
வவுனியா கற்குழி பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட நபர் இன்று (16) காலை பொது கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர் உட்பட அவரின் உறவினர்கள் சுகாதார பிரிவினரினால் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டனர்.
இந்நிலையில் நேற்று (15) இரவு வீட்டிலிருந்து கணேசன் இளங்குமரன் (வயது-51) என்ற நபர் வெளியே சென்றுள்ள நிலையில் அவரை உறவினர்கள் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று (16) காலை கற்குழி பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை வீதியிலுள்ள பொது கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்
இலங்கையில் உயிர் குடிக்கும் கொரனோ -55 பேர் மரணம்
இலங்கையில் உயிர் குடிக்கும் கொரனோ -55 பேர் மரணம்
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த தினம் மட்டும் ஐம்பத்தி ஐந்து பேர் மரணமாகியுள்ளனர்
பலத்த கட்டுப்பாடுகள் ,பயண முடக்கம் ஏற்படுத்த பட்ட பொழுதும் மக்கள் இழப்பை தடுக்க முடியாது இலங்கை திணறி வருகிரது
பாயும் பறக்கும் படை -1,411 பேர் கைது
பாயும் பறக்கும் படை -1,411 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் சட்டங்களை மீறிய குற்ற சாட்டில் கடந்த தினம் மட்டும் சுமார்
1,411 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,இவர்கள முககவசம் மற்றும் மாகாண எல்லைகளை
கடந்தனர் பேன்ற குற்ற சாட்டுக்கள் சுமத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
சிந்திக்குமா கல்வித்துறை ..???மாணவர்களது எதிர்காலம் என்ன ..வீடியோ
சிந்திக்குமா கல்வித்துறை ..???மாணவர்களது எதிர்காலம் என்ன ..வீடியோ
எமது தமிழ் சமுகத்தின் இருப்பின் மிக முக்கியாமான பொக்கிசம் கல்வி அதனை எவ்வாறு நவீன
முறையில் இலகுவாக கொண்டு செல்ல முடியும் என்ற வகையில் இந்த கலந்தாய்வு இடம்பெறுகிறது
சிந்திக்குமா கல்வித்துறை ..??? – YouTube
பச்சையாக மீன்களை உண்ணும் மீன் வியாபாரிகள்
பச்சையாக மீன்களை உண்ணும் மீன் வியாபாரிகள்
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்கு உள்ளான காரணத்தால் கடல் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு
ஏற்பட்ட பாதிப்பினை தொடர்ந்து இந்நாட்டு மீன் வியாபாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பேலியகொடை மீன் சந்தை வியாபாரிகள் கடுமையான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
´நாம் தினம் தோறும் பச்சையாக மீன்களை சாப்பிட்டு காட்டுகிறோம். எனினும் மீன் வியாபாரம் குறைவடைகிறது.
குறித்த ஆமைகள் இன்று நேற்று உயிரிழக்கும் விலங்குகள் இல்லை. பல வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்து தற்போது கரையொதுங்கி வருகின்றன. என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் வேட்டை -1,356 பேர் கைது
பொலிசார் வேட்டை -1,356 பேர் கைது
இலங்கையில் தனிமை பாடுதல் சட்டத்தை மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் சுமார் 1,356 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதான அனைவரும் முககவசம் இன்றி உலாவியதும் ,மாகாண எல்லைகளை கடந்த குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்
பேக்கரி பொருட்களின்விலைகள் திடீர் அதிகரிப்பு
பேக்கரி பொருட்களின் விலைகள் திடீர் அதிகரிப்பு
இலங்கையில் கொரனோ நோயினால் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில் பேக்கரி
பொருட்களின் விலை திடீரென அதிகரிக்க பட்டுள்ளது ,பாண் தவிர்ந்த அனைத்து பொருள்களும் விலை உயர்த்த பட்டுள்ளன
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா
சமுர்த்தி பெறுநர்களுக்கு மேலதிகமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையில் உள்ள சிக்கல்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரிசி விலையை கட்டுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்
கிளிநொச்சியில் பசுமாட்டை கொன்று தின்ற திருடர்கள்
கிளிநொச்சியில் பசுமாட்டை கொன்று தின்ற திருடர்கள்
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்ட கேப்பை இன பசு மாட்டை களவாடி இறைச்சியாக்கியுள்ளனர் என மாட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்வாதாரமாக வளர்க்கும் கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சியாக்கும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.
நேற்றைய தினமும் (13) உருத்திரபுரம் 10ம் வாய்க்கால் பகுதியில் வீட்டில் கட்டிவிடப்பட்ட பால் தருகின்ற உயர் ரக பசுமாட்டினை களவாடி உருத்திரபுரம் பொது மயானத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டிடத்திற்குள் இறைச்சியாக்கி விட்டு பசுமாட்டின் தலை தோல்களை விட்டு சென்றுள்ளனர்.
சுமார் 80,000 ரூபா பெறுமதிக்கு மேலான குறித்த பசு மாடு பால் தற்சமயம் பால் தருகின்ற
நிலையில் இறைச்சி ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் உரிமையாளர், அண்மைய நாட்களாக ஆடு, மாடு, கோழிகள் என்பன தொடர்ச்சியாக களவாடப்பட்டு வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளன
இனவாத சிங்களவர்க்ள வாழும் கழுத்துறையில் அதிக கொரனோ நோயாளிகள்
இனவாத சிங்களவர்க்ள வாழும் கழுத்துறையில் அதிக கொரனோ நோயாளிகள்
இனவாத சிங்களவர்க்ள வாழும் கழுத்துறையில் அதிக கொரனோ நோயாளிகள்
அடையாளம் காணப்பட்டுள்ளனர் , நேற்று மட்டும் சுமார்
2,361 கொரனோ நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்
இதனால் அந்த பகுதி தனிமை படுத்த பட்டு போலீசார் இராணுவத்தினர் பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது
பறக்கும் படை வேட்டை -1,198 பேர் கைது
பறக்கும் படை வேட்டை -1,198 பேர் கைது
இலங்கையில் தொடர்ந்து பரவி வரும் நோயின் தாக்குதலை அடுத்து பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுஉள்ளனர்
இவர்களின் இந்த கண்காணிப்பில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் கடந்த தினம் மட்டும் , சுமார் 1,198 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைதானவர்களில் முகக்கவசம் அணிய மறுத்தமை ,மாகாண எல்லைகளை மீறிய குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
இதுவரை முப்பத்தி இரண்டாயிரம் பேர் இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளனர்






