Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கொழும்பில் 14 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பில் 14 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பின் பல பகுதிகளில் இன்று 14 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொழும்பு 01,02,03,04 மற்றும் கொழும்பு 07 முதல் 15 வரையான பகுதிகளுக்கு இவ்வாறு நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் விநியோகத்தை நாளை (16) எட்டரை மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்த வேண்டியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் 14 மணித்தியால நீர் வெட்டு
அன்றைய தினம் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் எனவும், அதன்படி பேலியகொட, வத்தளை, ஜா-எல கட்டுநாயக்க, சீதுவ நகரசபை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட உள்ளூராட்சி சபை பகுதிகள் மற்றும் கம்பஹா உள்ளுராட்சி சபையின் ஒரு பகுதிக்கு நீர்விநியோகம் இவ்வாறு இடை நிறுத்தப்படுவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
வெட்டு காயங்களுடன் சடலம் மீட்பு
வெட்டு காயங்களுடன் சடலம் மீட்பு
மொனராகலை, படல்கும்புர வீதியில் 11 ஆவது மைல்கல் அருகில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பழக்கடை ஒன்றிற்கு அருகில் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், படல்கும்புர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (14) பிற்பகல் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
புஸ்ஸல்லாவ, படல்கும்புர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெட்டு காயங்களுடன் சடலம் மீட்பு
விசாரணையில் இறந்தவர் பழக்கடை உரிமையாளர் என்பது தெரியவந்தது.
கடந்த 12 ஆம் திகதிக்கும் நேற்றைய (04) தினத்திற்கும் இடையில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபரோ அல்லது கொலைக்கான காரணமோ இதுவரை அறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கும்புர பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
லோடியா என்ற மீன் இனம் கிழக்கிலிருந்து தெற்கிற்கு
லோடியா என்ற மீன் இனம் கிழக்கிலிருந்து தெற்கிற்கு
கிழக்கு கடற்கரையில் இருந்த ‘லோடியா’ என்ற மீன் இனம் தெற்கு கடற்கரையிலும் பரவியுள்ளதாக தேசிய விஷ தகவல் மையம் அறிவித்துள்ளது.
இந்த உயிரினம் மனித உடலில் உரசினால் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக அதன் பிரதானி வைத்திய நிபுணர் கலாநிதி ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை இந்த மீன் இனத்தை கடலில் காணமுடியும் என கலாநிதி ரவி ஜயவர்தன குறிப்பிடுகின்றார்.
லோடியா என்ற மீன் இனம் கிழக்கிலிருந்து தெற்கிற்கு
இந்த மீன் ஒரு சிறிய பலூனைப் போலவும், வயிற்றில் நீலமான நுாலை போன்ற சுரப்பிகளைக் கொண்டிருப்பதாகவும் மருத்துவர் குறிப்பிடுகிறார்.
இந்த மீனை தொடுவதன் மூலம், ஒரு நபர் ஒவ்வாமையிலிருந்து அதிர்ச்சி நிலைக்குச் செல்லலாம், இதன் மூலம் நரம்பு மண்டலம், இதயம் மற்றும் சுவாச மண்டலம் பாதிக்கப்படலாம் என்பது மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவத்தின் புதிய பிரதானி நியமனம்
இராணுவத்தின் புதிய பிரதானி நியமனம்
இலங்கை இராணுவத்தின் புதிய பிரதானியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, ஜெனரல் ஹெமில்டன் வனசிங்கவின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழர் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கடற்படை சிப்பாய் கைது
தமிழர் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கடற்படை சிப்பாய் கைது
வவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 10 கிலோ 74 கிராம் கேரளா கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய் ஒருவரை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று இரவு (14.07) கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் கேரளா கஞ்சா கடத்துவதாக வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தவலின் குறித்த பேரூந்தினை வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் வைத்து சோதனைக்குட்படுத்தினர்.
தமிழர் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கடற்படை சிப்பாய் கைது
இதன் போது ஐந்தாக பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட 10 கிலோ 74 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதுடன், அதனை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த பேரூந்தில் பயணித்த கடற்படை சிப்பாயை பொலிஸார் கைது செய்தனர்.
மேலும் குறித்த கடற்படை சிப்பாயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் முழங்காவிலில் உள்ள முகாமில் பணியாற்றிவரும் 27வயதுடைய நபர் எனவும் தெரிய வந்துள்ளது.
வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவினையும், சந்தேகநபரையும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
வடை விற்று கோடீஸ்வரன் கோடிகளை அள்ளும் தமிழன்
வடை விற்று கோடீஸ்வரன் கோடிகளை அள்ளும் தமிழன்
வடை விற்று கோடீஸ்வரன் ஆன இலங்கை தமிழன் ஒருவர்
வீதியோர உணவகம் ,வடை ,ரோல் ,பட்டீஸ் ,பொரியல் ,
கட்லட் ,கடல வடை ,பஸ் ,ஆட்டோ ,வீடு வாங்கி கோடிகளில் சம்பாதிக்கும் தமிழன் ,குவியும் பாராட்டு ,
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது

- நேபால் வெள்ளத்தில் 3 பேர் உயிருடன் மீட்பு

- இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலையால் 1,15,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான போட்டியில் சாதித்த தமிழ் மாணவி
பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான போட்டியில் சாதித்த தமிழ் மாணவி
பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான போட்டி நிகழ்வில் பளுதூக்கல் போட்டியிலே பங்குகொண்ட வவுனியா மாணவி 3ம் இடத்தை பெற்று சாதித்து உள்ளார்.
பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான போட்டியில் சாதித்த தமிழ் மாணவி
2023ம் ஆண்டிற்கான அகில உலக பளு தூக்கல் போட்டிக்காக இலங்கையின் வடமாகாணத்தில் வவுனியாவிலிருந்து கிலோ எடை பிரிவில் 16 வயதையொட்டிய வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி கோசியா திருமேனன் தெரிவாகிய நிலையில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் 40 கிலோ எடைப்பிரிவில் 16 வயது மாணவி கோசியா திருமேனன் போட்டியிட்ட நிலையில் 92 கிலோ வரை தூக்கியதன் மூலம் 3ம் இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.
வடக்கிற்கு 24 புதிய பேருந்துகள் கையளிப்பு
வடக்கிற்கு 24 புதிய பேருந்துகள் கையளிப்பு
இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வில் பேருந்துகள் கையளிக்கப்பட்டது.
அந்தவகையில் வவுனியா 4, கிளிநொச்சி 4, மன்னார் 3, முல்லைத்தீவு 3, யாழ்ப்பாணம் 4, பருத்தித்துறை 3, காரைநகர் 3 என 24 பேருந்துகள் வடமாகாண சாலைகளுக்கு பகிரப்பட்டது.
வடக்கிற்கு 24 புதிய பேருந்துகள் கையளிப்பு
குறித்த நிகழ்வில் போக்குவரத்து பெருந்தெருக்கள் ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ்
ஜெயபாஸ்கரன், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் எஸ்.எம்.டி.அல்விஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த கெட்டகொட,
ரகுமான் மற்றும் போக்குவரத்து சபை ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வைத்தியசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்
வைத்தியசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்
நேற்று (13) சொட்டுக்கருவி ஊடாக ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக காய்ச்சல் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவி மேலாளர் என தெரிவிக்கப்படுகிறது.
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த சொட்டுக்கருவியில் இருந்து கிருமித் தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வைத்தியசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காய்ச்சலினால் காலி பிரதேசத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பொருத்தப்பட்டிருந்த சொட்டுக்கருவியில் இருந்து இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.
பின்னர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இருதய நோயாளர் என்பதால் வேறு வைத்தியசாலைக்கு மாற்ற வைத்தியர்கள் முயற்சித்தனர்.
எனினும், அங்கு அவர் உயிரிழந்துள்ள நிலையில், சொட்டுக்கருவியில் இருந்து ஏற்பட்ட கிருமித் தொற்று மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்
தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் வீட்டில் நடந்தது என்ன
தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் வீட்டில் நடந்தது என்ன
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எக்ஸ். குலநாயகம் வீட்டில் நேற்று (12) மாலை திருட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அருகில் உள்ள வீட்டிலேயே குறித்த திருட்டு சம்பவம் பதிவானது.
தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் வீட்டில் நடந்தது என்ன
வீட்டில் இருந்தவர்கள் நித்திரையில் இருந்த சமயத்தில் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் சிறிய தொகைப் பணமும் இதன் போது திருடிச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி கண்காணிப்பு கமராவின் காணொளியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி
by நிருபர் காவலன் - டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு
by நிருபர் காவலன் - பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு
by நிருபர் காவலன் - பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன
by நிருபர் காவலன் - கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
by நிருபர் காவலன்
பாடசாலை சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
பாடசாலை சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை கடத்த முயற்சித்த சம்பவமொன்று பண்டாரவளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
பண்டாரவளை, மகுலெல்ல, வனசிரிகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று காலை 6.50 மணியளவில் பாடசாலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டார்.
10 வயதுடைய சிறுமி மகுலெல்ல வித்தியாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறாள்.
சிறுமி வழமை போல் டர்பன்டைன் பாதுகாப்பு வனப்பகுதி வீதியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்துள்ளார்.
பாடசாலை சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
அவ்வாறு சென்றுக் கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் வந்த இருவர் தன்னை வலுக்கட்டாயமாக முச்சக்கரவண்டிக்கு ஏற்றிச் சென்றதாக சிறுமி மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த இருவரும் தன்னை முச்சக்கர வண்டியில் ஏற்றிய பின்னர் ஒரு வித பானத்தை குடிக்க கொடுத்ததாக கடத்தப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அது கசப்பாக இருந்ததால், அவற்றை வாயில் வைத்திருந்த வௌியில் துப்பிவிட்டு முச்சக்கரவண்டியில் இருந்த பாய்ந்து சிறுமி தப்பியுள்ளார்.
பின்னர், முச்சக்கரவண்டியில் இருந்து தப்பிச் சென்ற குறித்த சிறுமி, பாடசாலைக்குச் சென்று வகுப்பறையில் அழுதுகொண்டிருந்தபோது, வகுப்பு ஆசிரியர் இது குறித்து வினவியுள்ளார்.
பாடசாலை சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
பின்னர் அதிபர், ஆசிரியர் ஒருவருடன் சம்பந்தப்பட்ட சிறுமியை பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பண்டாரவளை பொலிஸ் மகளிர் பணியகம் தற்போது மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன
by நிருபர் காவலன் - 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்
by நிருபர் காவலன் - குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி
by நிருபர் காவலன் - டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு
by நிருபர் காவலன் - சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்
by நிருபர் காவலன்
1000 ரூபாவால் குறைவடையும் உரம்
1000 ரூபாவால் குறைவடையும் உரம்
நாளை (15) முதல் 50 கிலோ கிராம் ‘பண்டி’ உரம் எனப்படும் MOP உர மூட்டை ஒன்றின் விலை 1000 ரூபாவால் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இன்று (14) காலை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்
சமோதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது
சமோதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது
சமோதி சந்தீபனி ஜயரத்ன என்ற 21 வயதுடைய யுவதி தனக்கு வழங்கப்பட்ட மருந்தினால் அல்ல, ஒவ்வாமையினால் உயிரிழந்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர் முழுமையான அறிக்கையை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வைத்தியர் அர்ஜுன திலகரத்ன,
அர்ஜுன திலகரத்ன – “மருந்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இது நடந்தது என்று சொல்வது கடினம். ஒவ்வாமையால் ஏற்படும் நிலை. மற்ற நோயாளிகளுக்கு 2700 டோஸ் Ceftriaxone கொடுக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர் – ஏதேனும் தவறு அல்லது அதிகப்படியான டோஸ் வழங்கப்பட்டுள்ளதா என நீங்கள் ஆராய்ந்தீர்களா?
சமோதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது
அர்ஜுன திலகரத்ன – “Ceftriaxone என்பது ஒரு நாளைக்கு ஒரு முறை வழங்கப்படும் மருந்து. 2 மி.கி வழங்க வேண்டும.
ஒரு குப்பியில் ஒரு மில்லிகிராம் உள்ளது.
அதனால்தான் இரண்டு டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஏதேனும் ஒவ்வாமையை இருந்ததா என பார்த்தோம். இந்த நோயாளிக்கு இதற்கு முன் எவ்வித ஒவ்வாமையும் இல்லை.
பத்திரிக்கையாளர் – முதல் டோஸின் பின்னர் லேசான ஒவ்வாமை ஏற்படும் போது, அடுத்ததைக் கொடுக்காமல் இருப்பதற்கான வாய்ப்பு இல்லையா?
அர்ஜுன திலகரத்ன – “முதலில் கொடுத்தபோது ஒவ்வாமை ஏற்படவில்லை. இரண்டையும் கொடுத்த பின் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அறிகுறிகள் தோன்றின.”
சமோதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது
இது தொடர்பான மருந்துகள் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பேராதனை போதனா வைத்தியசாலையின் உடலியல் துறைத் தலைவர் பேராசிரியர் வைத்தியர் உதய ரலபனாவ.
பேராசிரியர் வைத்தியர் உதய ரலபனாவ – “ஒவ்வாமையில் அதிகரிக்கும் சிஆர்பி புரோட்டீன் மதிப்பு. சாதாரணமாக 6 அலகிற்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த யுவதியின் மதிப்பு 270 அலகாக அதிகரித்திருந்தது.
மதிப்பு 270 அலகிற்கு மேல் இருக்கையில் பற்றீரியாவின் அறிகுறிகள் தென்படுகின்றன. நோய்த்தொற்று பிறகு நோய் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன, பொதுவாக Ceftriaxone மருந்து
பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மருந்து ஒவ்வாமை. அரிதாக, சிலர் இறக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, இந்த யுவதியும் இறந்துவிட்டார்.”
நீரில் மூழ்கிய நபர் காப்பாற்றிய வாலிபர் குவியும் பாராட்டு
நீரில் மூழ்கிய நபர் காப்பாற்றிய வாலிபர் குவியும் பாராட்டு |The teenager who saved the drowning man
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலிby நிருபர் காவலன்
- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்புby நிருபர் காவலன்
- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடுby நிருபர் காவலன்
- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டனby நிருபர் காவலன்
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுby நிருபர் காவலன்
கொலையில் முடிந்த மது விருந்து
கொலையில் முடிந்த மது விருந்து
நண்பர்கள் குழுவொன்று நேற்றிரவு (12) நடத்திய மதுபான விருந்தின் பின்னர் கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மொரகஹஹேன தலகல ஏல காணியொன்றில் தொழிலாளர்கள் குழு ஒன்று கூடி இந்த மதுபான விருந்தை நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர், மினுவாங்கொடை மாபொதல இத்தவத்த பிரதேசத்தில் வசிக்கும் அகழ்வு இயந்திர சாரதியாக பணிபுரிந்த பி. நிரோஷன் சந்திமா 39 வயதான ஒரு பிள்ளையின் தந்தை என தெரியவந்துள்ளது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்துடன் முன்னாள் விமானப்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சாரதுயாக பணியாற்றி வந்த உயிாிழந்த நபர் பணி முடிவடைந்ததால், மற்ற ஊழியர்கள் அவருக்கு மது விருந்துக்கு ஏற்பாடு செய்தனர்.
இந்த விருந்தில் பங்கேற்பதற்காக நிரோஷன் சந்திம நேற்று வீட்டில் இருந்து வந்துள்ளார்.
கொலையில் முடிந்த மது விருந்து
கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மெல்சிறிபுர பகுதிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, கொலை செய்யப்பட்ட நபர் அவரது கழுத்தை நெரித்து தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் கோபமடைந்த அவர் பையில் இருந்த கத்தியை எடுத்து இந்த கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏல நிலத்தின் அலுவலகத்திற்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், கொலை செய்யப்பட்ட நபரின் தலையில் தலையணை வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தலையணை வைத்தவர் யார் என்று கூற யாரும் முன்வர வில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக வேறு இடத்தில் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஏல நிலத்தின் 07 ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலிby நிருபர் காவலன்
- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்புby நிருபர் காவலன்
- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடுby நிருபர் காவலன்
- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டனby நிருபர் காவலன்
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுby நிருபர் காவலன்
முதியவரை கடத்திய பெண்
முதியவரை கடத்திய பெண்
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் , பெண்ணொருவருக்கு புன்னாலைக்கட்டுவன் பகுதியில் காணி ஒன்றினை விற்பனை செய்வதற்கான முற்பணமாக 13 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்.
காணியை பெண்ணுக்கு விற்காத நிலையில் , கொடுத்த பணத்தினை , பெண் திருப்பி கேட்டுள்ளார் முதியவர் பணத்தினை கொடுக்காது காலத்தை இழுத்தடித்துள்ளார்.
முதியவரை கடத்திய பெண்
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) , பணம் கொடுத்த பெண் வாகனம் ஒன்றில் நான்கு ஆண்களுடன் முதியவரின் வீட்டுக்கு அருகில் சென்று முதியவரை வாகனத்தில் கடத்தி சென்று , தாக்கி , அவரிடமிருந்து 13 இலட்ச
ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்ட பின்னர் முதியவரை விடுவித்துள்ளனர். அதனை தொடர்ந்து முதியவர் தன்னை கடத்தி பணம் பறித்தவர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவரை மானிப்பாய் பகுதியில் வைத்து நேற்றைய தினம் புதன்கிழமை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி
by நிருபர் காவலன் - டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு
by நிருபர் காவலன் - பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு
by நிருபர் காவலன் - பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன
by நிருபர் காவலன் - கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
by நிருபர் காவலன்
யாழில் மாணவிகள் துஸ்பிரயோகம் ஒருவர் கைது
யாழில் மாணவிகள் துஸ்பிரயோகம் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் , புதன்கிழமை (12) , தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றினை நடாத்தி இருந்தனர்.
குறிப்பிட்ட கருத்தரங்கின் போது , 13 வயதான மாணவிகள் இருவர் இலவச வகுப்புக்களை நடாத்தி வந்த நபர் ஒருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்ததை அடுத்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்யதுள்ளனர்
பொதுமன்னிப்பு குறித்து மைத்திரி விளக்கம்
பொதுமன்னிப்பு குறித்து மைத்திரி விளக்கம்
ரோயல்பார்க் கொலையாளி ஜூட் ஜயமஹவிற்கு பொதுமன்னிப்பை வழங்கியதன் மூலம் தான் அரசியல் அமைப்பை மீறி செயற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
குறித்த நபரின் பொதுமன்னிப்பானது சகல நடைமுறைகளுக்கும் உட்பட்ட அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைவானது என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொதுமன்னிப்பு குறித்து மைத்திரி விளக்கம்
2005 இல் அத்துருகிரிய பிரதேசத்திலுள்ள ரோயல்பார்க் தொடர்மாடியில் பெண்ணொருவரை கொலை செய்தமைக்காக கொழும்பை சேர்ந்த செல்வந்தரின் மகனிற்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது.
2019 நவம்பர் 9 ம் திகதி ஜூட்ஜெயமகவிற்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பொதுமன்னிப்பை வழங்கினார்.தனது பதவிக்காலத்தின் இறுதியில் சிறிசேன பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார்.
அதன் பின்னர்ஜெயமஹ நாட்டிலிருந்து வெளியேறினார் அவர் தற்போது எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை.
இந்நிலையிலேயே தான் பொதுமன்னிப்பை வழங்கியதன் மூலம் அரசியலமைப்பைமீறவில்லை என சிறிசேன நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி
by நிருபர் காவலன் - டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு
by நிருபர் காவலன் - பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு
by நிருபர் காவலன் - பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன
by நிருபர் காவலன் - கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
by நிருபர் காவலன்
வலம்புரி சங்கை விற்க முயன்ற அறுவர் கைது
வலம்புரி சங்கை விற்க முயன்ற அறுவர் கைது
பெறுமதி மிக்க அரிய வகை வலம்புரி சங்கை 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்ய முயன்ற இரண்டு பெண்கள் உட்பட ஆறு சந்தேகநபர்களை ஜால பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிரிந்திவல, நிட்டம்புவ, மருதானை மற்றும் அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலிby நிருபர் காவலன்
- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்புby நிருபர் காவலன்
- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடுby நிருபர் காவலன்
- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டனby நிருபர் காவலன்
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுby நிருபர் காவலன்
பிக்குவுடன் இரண்டு பெண்கள்-8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு
பிக்குவுடன் இரண்டு பெண்கள்-8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு
நவகமுவ மொமிரி ராஸ்ஸபான பிரதேசத்தில் விகாரையின் பெயரில் நடத்தப்பட்ட வீட்டுக்குள், பௌத்த தேரர், யுவதி மற்றும் பெண்ணொருவரை
நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிில் வைக்கப்பட்டுள்ள எட்டுப்பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் எட்டுப்பேரும் கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (12) ஆஜர்படுத்தப்பட்டனர் அதன்போதே நீதவான் ஷாமினிமா விஜேபண்டார மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
பிக்குவுடன் இரண்டு பெண்கள்-8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு
அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தேகநபர்கள் எட்டுப்பேரில் எழுவரை சாட்சியாளர்கள் இருவர் அடையாளம் கண்டுப்பிடித்தனர். ஒருசாட்சியாளர் எவரையும் அடையாளம் காட்டவில்லை.
இந்நிலையில் முறைப்பாட்டார்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, சம்பவம் தொடர்பில் இன்னும் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்படவேண்டி உள்ளனர். ஆகையால், அதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவுறுத்துமாறும், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கவேண்டாம் என்றும் நீதிமன்றிடம் கேட்டுக்கொண்டார்.


























