இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மக்களின் பணத்தில் எம்.பிக்களுக்கு இலவச சவாரி

மக்களின் பணத்தில் எம்.பிக்களுக்கு இலவச சவாரி

இலங்கை துறைமுக அதிகார சபையினால் இரண்டு அகழ்வாராய்ச்சிக் கப்பல்களில் வரி செலுத்துவோரின் செலவில் ஆளும்கட்சி பாராளுமன்ற

உறுப்பினர்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இலவசமாக சுற்றுப்பயணம் வழங்கப்பட்டுள்ளது.

25க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த இலவச களிப்பு சவாரியில் இணைந்துள்ளனர், இது

இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு (SLPA) கிட்டத்தட்ட ரூ. 5 மில்லியன் செலவாகும் என அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் நிரோஷன் கோரகனகே தெரிவித்தார்.

மக்களின் பணத்தில் எம்.பிக்களுக்கு இலவச சவாரி

இருப்பினும், இரண்டு கப்பல்களுக்கான எரிபொருளுக்கான மொத்த செலவு சுமார் ரூ. 300, 000 எனவும் இந்த கப்பல்கள் வெளியில் இல்லாமல் துறைமுகப்

பகுதிக்குள் மட்டும் சவாரி சென்றதால் எரிபொருளுக்கான கட்டணத்தை மட்டுமே SLPA செலுத்தியது. எனவே செலவு குறைவாக இருந்தது, நம்பகமான SLPA வட்டாரங்கள் தெரிவித்தன.

50 எம் பிக்கள் கடலில் பார்ட்டி இன்ப சுற்றுலா
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

50 எம் பிக்கள் கடலில் பார்ட்டி இன்ப சுற்றுலா

50 எம் பிக்கள் கடலில் பார்ட்டி இன்ப சுற்றுலா

துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்சகாவா மற்றும் தியகாவுல்லா என்ற இரண்டு சிறிய கப்பல்களில் 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (09) உல்லாசப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) குற்றஞ்சாட்டினார்.

மக்கள் பெரும் துன்பப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், கடலில் பார்ட்டி வைத்துள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.

முந்திய செய்தி..

இலங்கை துறைமுக அதிகாரசபை இந்த இரண்டு சிறிய இழுவைப் படகுகளையும் ஒதுக்கியுள்ளதுடன், இவற்றில் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனைத்து உணவு மற்றும் குளிர்பானங்களையும் அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

50 எம் பிக்கள் கடலில் பார்ட்டி இன்ப சுற்றுலா

பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த உல்லாசப் பயணத்திற்கு எடுத்துச் சென்ற இரண்டு கப்பல்களும் துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் மணலை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படும் இரண்டு காப்புக் கப்பல்கள் எனவும் துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐம்பது பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த இன்ப பயணத்திற்காக துறைமுக அதிகாரசபை 25 இலட்சம் ரூபாவிற்கு மேல் செலவிட்டுள்ளதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவினால் தயாரிக்கப்பட்ட இந்த இன்ப பயணத்திற்கு தேவையான உணவு மற்றும் பானங்கள் மற்றும் பொருட்களின் பட்டியலை வழங்குமாறு திங்கட்கிழமை (08) துறைமுக அதிகார சபையின் தலைவரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடிதத்தின் படி, சீஸ் சாண்ட்விச்கள், வெண்ணெய் கேக், ரோல்ஸ், ஐஸ் காபி, பேப்பர் கப், சிறிய கண்ணாடி, கரண்டி மற்றும் முட்கரண்டி, சிறிய தட்டுகள், நாற்காலிகள் (கவர்களுடன்) ஒவ்வொரு வகையிலும் 55, 60 தண்ணீர் போத்தல்கள் , 5 டிஷ்யூ பாக்கெட்டுகள் , 10 நாற்காலிகள் மற்றும் மேசைகள் கொண்ட கூடாரமொன்று கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த கடிதத்தில் எம்.பி.க்களுக்கு உணவு வழங்க 5 துறைமுக ஊழியர்களை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களும் டிசம்பர் 13 ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளன.

புத்தாண்டின் ஆரம்பத்திற்காக அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தயார்படுத்தப்பட்ட கொழும்பு துறைமுக வளாகத்தின் குறுகிய கடற்படை சுற்றுப்பயணத்தில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தனித்தனியாக அழைப்பிதழ்களை வழங்கியுள்ளார் என தெரியவருகின்றது.

வீடியோ

உணவாக உரிமையாளர் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

நவகமுவ, துன்ஹந்தஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

வீடியோ

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பெண் படுகொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்

பெண் படுகொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கஹதுடுவைக்கு அருகில் பெண்ணொருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வெளிநாடுகளில் இயங்கி வரும் பெரும்

போதைப்பொருள் கடத்தல்காரரான எல்லாவல லியனகே தர்மசிறி பெரேரா என்றழைக்கப்படும் ‘தர்மசிறி’யின் மூத்த சகோதரர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயதான எல்லாவல லியனகே டன்ஸ்டன் பிரசாத் பெரேரா, பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் ஆகியோர், செவ்வாய்க்கிழமை இரவு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது, ​​BIA இல் வைத்து கைது செய்யப்பட்டனர்.

41 வயதான சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் ஊழியர் ஒருவர், செவ்வாய்க்கிழமை மாலை கஹதுடுவ இடைமாற்றுக்கு அருகில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

பிலியந்தலை, மடபாத பிரதேசத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட நபர், வேலை முடிந்து வீடு திரும்பும் போது தாக்குதலுக்கு உள்ளானார்.

பெண் படுகொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி நான்கு பிள்ளைகளையும் அவரையும் வேறொரு நபருடன் விட்டுச் சென்றதாக விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் பின்னர், அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நெருங்கிய உறவைப் பேணி வந்ததாகவும், பல நாட்களில் கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் காரில் வந்து, வேலை முடிந்து வீடு திரும்பும் போது அவரது வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டுச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

விசாரணைகளின்படி, அவர் கொலை செய்யப்பட்ட நாள் காலை முதல் அவருடன் தொலைபேசியில் வாக்குவாதம் செய்துள்ளார்.

சந்தேக நபர் கொழும்பில் விசா ஆலோசனை அலுவலகம் ஒன்றையும் கட்டிட நிர்மாண நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமை போன்று செவ்வாய்கிழமை மதியம் அவளை அழைத்துச் செல்லச் சென்ற போதும், அவர் தன்னுடன் வர மறுத்து முச்சக்கர வண்டியில் செல்ல முற்பட்டதால் ஆத்திரம் காரணமாக தனது காரில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து கழுத்தை அறுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவளைக் கொல்லும் நோக்கத்தில் தான் தாக்கவில்லை என்றும், பின்னர் அவர் இறந்துவிட்டதாகத் தெரிய வந்ததாகவும், பின்னர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பெண் படுகொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவருக்கு சந்தேகநபர் பல தடவைகள் மிரட்டல் விடுத்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக சந்தேகநபருக்கும் குறித்த பெண்ணுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு குறித்த பெண் தனது கணவருடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதேவேளை, கொலைச் சம்பவத்திற்காக சந்தேகநபர் வந்த காரை, சந்தேகநபரின் பெக்ககம வீட்டுக்கு முன்பாக நேற்று பிற்பகல் கஹதுடுவ பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது எமது youtube செய்திகளை பார்வையிட விபரம்
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

தற்போது எமது youtube செய்திகளை பார்வையிட விபரம்

தற்போது எமது youtube செய்திகளை பார்வையிட விபரம்

வணக்கம் உறவுகளே எமது youtube பக்கங்கள் இதில் பார்வை இடுக

கீழ் வரும் பக்கத்தின் ஊடாக வரும் நாட்களில் செய்திகள் பகிரப்படும் ,உங்கள் அன்பான மொழிகளுக்கும் இடைவிடாத தொடர்ச்சியான ஆதரவிற்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள் .

எமது இந்த இணைய பக்கத்தின் ஊடக அனைத்து

எமது வைபர் குழுவில் இணைந்து கொண்டு அனைத்து செய்திகளில் உடனுக்குடன் பெற்று கொள்ளுங்கள் வைபரில் இணைய இதில் அழுத்துங்க

youtube tamil news என்கின்ற எமது சணல் இனி இயங்காது .எமது பிரதான பக்கம் வாயிலாக இனைந்து கொள்ளுங்கள் மக்களே

மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

கொழுக்கட்டை மோதகம் என்கிறார் ஸ்ரீதரன்

கொழுக்கட்டை மோதகம் என்கிறார் ஸ்ரீதரன்


பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், கொழுக்கட்டை, மோதகம் ​

போன்றது என்று வியாக்கியானம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், வடிவங்கள் மாறியுள்ளன எனத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் அவர்,பயங்கரவாத தடைச்சட்டத்தால், ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

கொழுக்கட்டை மோதகம் என்கிறார் ஸ்ரீதரன்

ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். சரணடைந்த பல போராளிகள் காணாமல் போயுள்ளனர். ஒப்படைக்கப்பட்ட கணவன்,மனைவி மற்றும் பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வடகிழக்கு நீதிமன்றத்தின் ஊடாக பிரிக்கப்பட்டது. அதனூடாக நீங்கள் அடைந்த நன்மைகள் என்ன? சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதால் மட்டுமே போதாது என்றார்.

வீடியோ

பதுளையில் பாரிய மண்சரிவு 4 வாகனங்கள் சேதம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பதுளையில் பாரிய மண்சரிவு 4 வாகனங்கள் சேதம்

பதுளையில் பாரிய மண்சரிவு 4 வாகனங்கள் சேதம்

இரு வாகனங்கள் முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளதோடு இரு வாகனங்கள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

இரு சொகுசு வாகனங்கள், வேன் மற்றும் ஆட்டோவொன்றே இவ்வாறு மண்சரிவில் சிக்குண்டு சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த வாகனங்களுள் மூன்று, அப்பகுதியில் உள்ள கராஜுக்கு வந்திருந்தவை எனவும், ஆட்டோ அவ்வழியாக பயணித்த வாகனம் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் இவ்வனர்த்தத்தில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடியோ

வற் அதிகரிப்பால் பெருமளவு பாதிப்பில்லை அமைச்சர்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

வற் அதிகரிப்பால் பெருமளவு பாதிப்பில்லை அமைச்சர்

வற் அதிகரிப்பால் பெருமளவு பாதிப்பில்லை அமைச்சர்

நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) மேற்கொண்ட ஆய்வில், பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் பிரதமரின் கேள்வி நேரத்தில், SJB பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய, VAT அதிகரிக்கப்பட்ட போதிலும்

தேங்காய் எண்ணெய், பருப்பு, கோதுமை மா மற்றும் சில அரிசி வகைகளின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் விலை வற் அதிகரிப்பிற்கு முன்னரும் தற்போதும் ரூ.600 ற்கே விற்பனையாகிறது.

வற் அதிகரிப்பால் பெருமளவு பாதிப்பில்லை அமைச்சர்

ஒரு கிலோ கிராம் பருப்பு ரூ. 320 ,ஒரு கிலோ கிராம் கோதுமை மா ரூ. 220 என அதே விலையில் விற்பனையாகிறது.

VAT அதிகரித்த பின்னல் ஒரு முட்டையின் விலை ரூ.60 இலிருந்து ரூ.51 ஆக குறைந்துள்ளது.

” VAT அதிகரிப்பு குறித்து எம்.பி.க்கள் மத்தியில் பரபரப்பு இருந்தாலும்,சந்தை பரபரப்படையவில்லை,” என்று இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

இந்தக் கருத்துக்களுக்குப் பதிலளித்த எம்.பி. மரிக்கார், நாட்டில் உள்ள பெரிய பல்பொருள் அங்காடியின் சுமார் 500 விற்பனை நிலையங்கள் புத்தாண்டு தொடக்கத்திற்குப் பிறகு தங்கள் விற்பனை வீழ்ச்சியின் விளைவாக மூடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

டைனமைன்ட் வெடித்ததில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

டைனமைன்ட் வெடித்ததில் ஒருவர் பலி

டைனமைன்ட் வெடித்ததில் ஒருவர் பலி

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, ஏழு புளியடி மீள்குடியேற்ற கிராமப் பகுதியில் இன்று (10) காலை 6.30 மணியளவில் டைனமைன்ட் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

பெரிய கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய உனைதீன் ரபாய்தீன் என்பவரை இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

ஏழுபுளிடியாளியில் வசித்து வந்த இவர், தனது மனைவி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குவைட்டுக்குச் சென்று ஒன்றரை வருடங்களின் பின் மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்து ஐந்து நாட்களேயான நிலையில் , இருவருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள், சில வாய் தர்க்கங்கள் ஏற்பட்டுள்ளன.

டைனமைன்ட் வெடித்ததில் ஒருவர் பலி

வெளிநாட்டில் இருந்து வந்த மனைவி தனது கணவனுடன் அன்புடன் வாழ விருப்பமில்லை என்ன கூறியுள்ளார்.

இதன் காரணமாக மனம் சோர்வடைந்த கணவன், வெடித்து செத்துப் போவேன் என பலரிடம் கூறியுள்ளார்.

கூறியபடியே இன்று (10) காலை 6.30க்கு தனது இடுப்பில் வெடிக்கும் டைனமைன்ட் வெடிப்பொருளைக் கட்டிக் கொண்டு வெடிக்கவைத்து உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் சடலம், ஏழு புளியடி மேல் குடியேற்ற கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

சொர்க்கத்திற்கு செல்ல முயன்ற 30 பேர் மீட்பு

சொர்க்கத்திற்கு செல்ல முயன்ற 30 பேர் மீட்பு

சொர்க்கத்திற்கு செல்வதற்காக பூமியில் உயிர் துறக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கையை பரப்பி ஏழு பேரை தற்கொலைக்குத் தூண்டியதாக கூறப்படும்

ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபரின் “மிசாதிடு” கும்ப லுடன் நேரடியாக தொடர்புக்கொண்ட 30 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவை மற்றும் அம்பலாங்கொடை பிரதேசங்களில் , பௌத்த தத்துவம் எனக் கூறி பத்து வருடங்களாக கட்டுக்கதைகளை பரப்பி வருவதாக

சொர்க்கத்திற்கு செல்ல முயன்ற 30 பேர் மீட்பு

கூறப்படும் ருவன் பிரசன்ன என்ற நபர் தொடர்பில் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து ஆரம்பித்த விசாரணையின் போதே குறித்த 30 பேரும்

இனங்காணப்பட்டுள்ளதுடன், இக் குழுவில் சில பிக்குகளும் உள்ளடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த முப்பது பேரை அவர்களது மூட நம்பிக்கை தொடர்பிலான கருத்துக்களிலிருந்து மீட்பதற்காக பல திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து DIG விடுவிப்பு
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து DIG விடுவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து DIG விடுவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடுவிப்பு தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்திற்கு எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இது தொடர்பான அறிக்கையின் பிரதிகள் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அன்றைய மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த தேசபந்து தென்னகோன், லலித் பத்திநாயக்க மற்றும் நிலாந்த ஜயவர்தன

(முன்னாள் அரச புலனாய்வு தலைவர்) ஆகியோர் ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத தவறியதற்கான குற்றச்சாட்டை எதிர்கொண்டனர்.

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து DIG விடுவிப்பு

குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டு, இடமாற்றங்கள் செய்யப்பட்டு, முதற்கட்ட விசாரணைகள் தொடங்கப்பட்ட நிலையில், விசாரணைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, இந்த பொலிஸ் அதிகாரிகளை அழைத்து வாக்குமூலங்களை பதிவு செய்து தனது நடவடிக்கைகளை தொடர்ந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி, ஈஸ்டர் தாக்குதலைத் தடுப்பதில் அலட்சியமாக இருந்ததாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க மீது ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் குற்றஞ்சாட்டியது.

சிவில் அதிகாரிகள் உட்பட மூவரடங்கிய குழு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் தாமர டி பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையின்படி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வருகின்றார்.

விசாரணைகள் நிறைவடைந்தவுடன் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மற்ற அதிகாரிகள் பற்றிய அறிக்கையை குழு சமர்ப்பிக்கும் என்று அவர் கூறினார்.

வறுமைக்காக வௌிநாடு சென்றவருக்கு நேர்ந்த கதி
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

வறுமைக்காக வௌிநாடு சென்றவருக்கு நேர்ந்த கதி

வறுமைக்காக வௌிநாடு சென்றவருக்கு நேர்ந்த கதி

சவூதி அரேபியாவில் பணிபுரியும் போது விபத்துக்குள்ளான இலங்கையர் ஒருவர் தற்போது மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஸ்யால பிரதேசத்தை சேர்ந்த ரசிந்த என்ற நபரே இவ்வாறு விபத்தில் சிக்கியவராவார்.

பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் அவரது முள்ளந்தண்டு சேதமடைந்தது.

அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ரசிந்த பணிபுரிந்த நிறுவனம் அவரை வைத்தியசாலையில் இருந்து எவ்வித வசதிகளும் அற்ற இடத்தில் தடுத்து வைத்துள்ளது.

வறுமைக்காக வௌிநாடு சென்றவருக்கு நேர்ந்த கதி

தற்போது ஒரே இடத்தில் இருக்கும் ரசிந்தவை கவனிப்பதற்கு அங்கு யாரும் இல்லை என இலங்கையில் இருக்கும் அவரது மனைவி கூறுகிறார்.

மேலும் இவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்ற வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்துக்கு இது தொடர்பில் அறிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட ரசிந்தவை தற்போது ​வைத்துள்ள விதம் குறித்து, அங்குள்ள மற்றுமொரு இலங்கையர் ஔிப்பதிவு செய்த வீடியோ இது,

வீடியோ

ஹோட்டல் அறையில் அமெரிக்கரின் சடலம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஹோட்டல் அறையில் அமெரிக்கரின் சடலம்

ஹோட்டல் அறையில் அமெரிக்கரின் சடலம்

களுத்துறையில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் அறையில் அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவர் இன்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

67 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல் அறையில் அமெரிக்கரின் சடலம்

ஹோட்டல் நிர்வாகம் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, ஹோட்டலின் அறை எண் 324 இல் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை குற்றத்தடுப்பு விசாரணை நிலைய அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடியோ

கிணற்றுக்குள் இருந்து மண்ணெண்ணைய்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

கிணற்றுக்குள் இருந்து மண்ணெண்ணைய்

கிணற்றுக்குள் இருந்து மண்ணெண்ணைய்


முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணைய் வெளியேறி வருகின்றமை நேற்று (07) கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குரவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று கடந்த மழை வெள்ளத்தினால் கிணறுக்குள் வெள்ள நீர் நிரம்பிய நிலையில் கிணற்றினை சுத்தம் செய்வதற்காக கிணற்றினை நீர் இறைக்கும் இயந்திரம் கொண்டு இறைத்துள்ளார்கள்.

இதன்போது கிணற்று நீருடன் மண்ணெண்ணை கலந்துகொண்டிருப்பது கண்டறியப்பபட்டுள்ளதுடன் இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் காணி உரிமையாளர்களை கேட்டபோது 2012 ஆம் ஆண்டு மீள்குடியேறிய பின்னர் 23 அடி ஆழம் கொண்ட கிணறு தோண்டி கட்டியுள்ளார்கள்.

தற்போது கிணற்றினை சுத்தம் செய்யும் போது முதல் கருநிறத்தில் காணப்பட்ட கிணற்று நீர் பின்னர் மண்ணெண்ணைய் மணக்கத் தொடங்கியுள்ளது. கிணற்று நீரின் மேற்படலம் மண்ணெண்ணையாக

தொடர்ச்சியாக காணப்பட்டுள்ளது இந்த நிலையில், வாளியால் தண்ணீரை அள்ளி அதில் ஒரு இலையினை நனைத்து அதனை பற்றவைத்தபோது அந்த இலை எரிந்துள்ளது.

கிணற்றுக்குள் இருந்து மண்ணெண்ணைய்

அதனை விட மண்ணெண்ணை மணம் வீசியுள்ளது.

இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர்கள் கிராம சேவையாளருக்கு தொடர்பினை ஏற்படுத்தி தெரியப்படுத்தியுள்ளதுடன் கிராம சேவையாளர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ்

நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கிணற்றினை பார்வையிட்டுள்ளதுடன் கிணற்றின் எண்ணெய் கலந்த நீரின் மாதிரி எடுத்து சென்றுள்ளதுடன் இது தொடர்பில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு மேற்கொண்ட சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை, இது குறித்து மேலும் அயலவர்களை விசாரித்தபோது காணிக்கு அருகில் விடுதலைப்புலிகள் காலத்தில் விடுதலைப்புலிகளின் முகாம் ஒன்று காணப்பட்டுள்ளதாகவும் அந்த காலத்தில் நிலத்தில் புதைக்கப்பட்ட

மண்ணெண்ணைய் லீக்காகி தற்போது நிலத்தடி நீரில் கசிந்துள்ளதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என தெரிவித்துள்ளார்கள்.

தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயரமாக காணப்படுவதால் தொடர்ச்சியாக இறைத்து நீர்வரத்து பகுதியினை கண்டறியமுடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை, தங்கள் குடிநீர் மற்றும் வீட்டுதேவைக்காக பயன்படுத்தி வந்த கிணற்றில் மண்ணெண்ணெய் கலந்ததால் குடிநீரினை பெற்றுக்கொள்வதற்கும் ஏனைய தேவைகளுக்கும் பெரும் சிரமங்களை

எதிர்கொண்டுள்ளதாக அந்த குடும்பம் தெரிவித்துள்ளார்கள். வீதிக்கு சென்று வீதியில் உள்ள பொதுக் கிணற்றில் இருந்தே குடிநீரினை பெற்றுக்கொள்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்கள்

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

நடிகை ஒருவருக்கு தொல்லை கொடுத்த பொலிஸ் பரிசோதகர் கைது

நடிகை ஒருவருக்கு தொல்லை கொடுத்த பொலிஸ் பரிசோதகர் கைது

சிங்கள நடிகை ஒருவருக்கு பாலியல் தொல்லை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பொலிஸ் பரிசோதகர் 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நடிகை நேற்றிரவு சந்தேகத்திற்குரிய பொலிஸ் பரிசோதகர் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டியில் பயணம் செய்துள்ளார்.

சந்தேகநபர் பிலியந்தலை ஜாலியாகொட பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை நிறுத்தி நடிகையிடம் தவறாக நடந்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த நடிகை பிலியந்தலை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகத்திற்குரிய பொலிஸ் பரிசோதகர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

ஆலய பூசகரிடம் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஆலய பூசகரிடம் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின்

ஆலய பூசகரிடம் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின்

யுத்திய நடவடிக்கை காரணமாக தெஹிவளை மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் இருந்து தப்பிச் சென்ற ‘சோட்டா’ வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஹொரண சுனாமிவத்த பிரதேசத்தில் ஆலயமொன்றில் பூசகராக பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குறித்த ஆலயத்தில், 1500 ரூபாவுக்கு ஜாதகம் பார்த்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபருடன் சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை வலான ஊழல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்

வீடியோ

வரி அதிகரிக்க படும் - வரி அதிகரிக்கா விட்டால் இது நடக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஜனாதிபதியின் முடிவில் தான் இருக்கிறது

ஜனாதிபதியின் முடிவில் தான் இருக்கிறது

நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி முடிவு செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு நேற்று (08) கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு ஜனாதிபதியின் முடிவில் தான் இருக்கிறது. முதலில் பாராளுமன்ற தேர்தல் நடக்கலாம் இல்லை எள்றால் ஜனாதிபதி தேர்தல் நடக்கலாம் எதுவாக இருந்தாலும் ஜனாதிபதியின் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

வீடியோ

வடக்கில் கரையொதுங்கிய மிதவை
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

வடக்கில் கரையொதுங்கிய மிதவை

வடக்கில் கரையொதுங்கிய மிதவை

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமானின் உருவ சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட மிதவை ஒன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை கரை ஒதுக்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக வடமராட்சி கிழக்கில் வத்திராயன் , உடுத்துறை மற்றும் நாகர்கோவில் ஆகிய கடற்கரைகளில் படகு , மிதவை உள்ளிட்டவை கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு
Posted in YouTube Tamil News இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

வவுனியாவில் ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றாவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியாவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு செல்லும் பாதையில் வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றாவுக்கு போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும் அவரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்பட்ட போராட்டகாரர்களை

தடுத்து நிறுத்திய பொலிசார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர்.

இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது.

இதனை அடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றா மற்றும் போராட்டத்தினை காணொளி எடுத்த மீரா ஜாஸ்மின் ஆகிய இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்ற கட்டளையினை அவமதித்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அமைதிக்கு பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வவுனியா பொலிஸார்

அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றாவை எதிர்வரும் 8 ஆம்

திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் போராட்டத்தினை காணொளி எடுத்த பெண்ணிற்கு பிணை வழங்கியும் வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இன்று (08) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி சி. ஜெனிற்றாவுக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீடியோ

மின்னல் தாக்கி இளைஞன் பலி
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மின்னல் தாக்கி இளைஞன் பலி

மின்னல் தாக்கி இளைஞன் பலி

மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது

குறித்த சம்பவம் இன்றைய தினம் (08) கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 29 வயதுடைய ஜேகதீஸ்வரன் பவித்திரன் என்ற வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மின்னல் தாக்கி இளைஞன் பலி

உயிரிழந்த இளைஞனின் சடலம் கிளிநொச்சி நிதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசார் விசரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வீடியோ