Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது ,அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யூனிட் 19, 03 எல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்போபுர பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (02) இரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
54 வயதுடைய யூனிட் 19, அக்போபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி மாமியாரை வெட்டியா கணவன்
மனைவி மாமியாரை வெட்டியா கணவன்
மனைவி மாமியாரை வெட்டியா கணவன் வவுனியா சமயபுரம் பகுதியில் மனைவி மற்றும் அவரது தாயாரை கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் இன்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா சமயபுரம் பகுதியில்
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு இன்று இரவு வருகைதந்த உயிரிழந்த நபர் வீட்டில்
இருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டையும் தீ வைத்து கொழுத்தியுள்ளார்.
காயமடைந்த இரு பெண்
இதனால் படுகாயமடைந்த இரு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த குற்றச்செயலை புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடும்பஸ்தர் அந்த வீட்டின் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் வீழ்ந்தாரா அல்லது வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என்பது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, உயிரிழந்த குடும்பஸ்தரும், காயமடைந்த பெண்ணும் வெவ்வேறு பகுதிகளை சேந்தவர்கள் என கிராமமக்கள் தெரிவித்ததுடன் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக கடந்த ஒரு வருட காலமாக சமயபுரம்
பகுதியில் வசித்து வருவதாக தெரிவித்தனர். அத்துடன் அவர்கள் இருவரும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது.
சம்பவத்தில் வசந்தி வயது 30, அவரது தாயாரான இந்திரா வயது 69, என்ற இரு பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஸ்ணகுமார் வயது 45 என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை வந்த எலோன் மஸ்க்
இலங்கை வந்த எலோன் மஸ்க்
இலங்கை வந்த எலோன் மஸ்க் ,உலகப் புகழ்பெற்ற SpaceX நிறுவனத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க், இன்று (2) ‘Starlink’ என்ற வேகமான இணைய சேவை இலங்கையில் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்குவதாக அறிவித்தார்.
வேகமான இணைய வசதி
வேகமான இணைய வசதிகளை வழங்குவதற்காக இந்த இணைய செயற்கைக்கோள் அமைப்பு 2019 ஆம் ஆண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதற்கு பின்னர் சுமார் 130இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த இணைய சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் அமைந்துள்ள ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் அமைப்பு, பயனர்களுக்கு வேகமான மற்றும் தடையற்ற இணைய அணுகலை வழங்கும்.
இந்த செயற்கைக்கோள்களில் 7,000 இற்கும் மேற்பட்டவை பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன
தற்போது, இந்த செயற்கைக்கோள்களில் 7,000 இற்கும் மேற்பட்டவை பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் இந்த எண்ணிக்கை 2026 ஆம் ஆண்டுக்குள் 12,000 ஆகவும், எதிர்காலத்தில் 30,000 இற்கும் அதிகமாக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த இணைய அமைப்பு மிகவும் எளிதாக நிறுவக்கூடிய ரவுட்டராக வருகிறது.
பதிவிறக்க வேகம் 50mbps – 250mbps வரை இருக்கும் என்று SpaceX குறிப்பிட்டுள்ளது.
இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைது
இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைது
இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைது ,இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும், படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (01) அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘இந்திய மீனவர்களின் அத்துமீறலானது எமது மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கே பாதகமாக அமைந்துள்ளது. இது தொடர்பில் இந்திய தரப்புக்கும் தெரிவித்திருந்தோம். கடந்த மூன்று மாதங்களாக இந்திய
மீனவர்களின் பிரச்சினை இருக்கவில்லை. தற்போது மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைய ஆரம்பித்துள்ளனர். அவர்களை நாம் கைது செய்தோம்.
இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. அவை அரசுடமையாக்கப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறுவதை நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லையேல் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மீனவர் பிரச்சினை
மீனவர் பிரச்சினை தொடர்பில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளோம்.
கடற்படைக்கு கூடுதல் வளங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தடுத்து நிறுத்தப்படும். இலங்கை கடற்படையினர் மிகவும் கட்டுக்கோப்பாகவே நடந்துவருகின்றனர்.
இந்திய மீனவர்களின் ரோலர் படகுகளால்தான் இலங்கை கடல்வளம் நாசமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமை தொடர்ந்தால் இலங்கை கடற்பரப்பு கடல் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது என தெரிவித்தார்.
வவுனியா இளைஞன் கடத்தி தாக்குதல்
இளைஞன் கடத்தி தாக்குதல்
வவுனியா இளைஞன் கடத்தி தாக்குதல் பணத்தையும் பறித்து சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் நேற்று (01) தெரிவித்தனர்.
வவுனியா இளைஞன் கடத்தி தாக்குதல் ,யாழில் இருந்து வருகை தந்து வவுனியா இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய்
யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மூவர் கார் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு வருகை தந்து வவுனியா, புதிய பேரூந்து
https://www.youtube.com/@vannimainthanநிலையம் முன்பாக நின்ற 18 வயதான இளைஞன் ஒருவரை காரில் கடத்திச் சென்று குடியிருப்பு குளக்கட்டு பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பின்னர் அவரது வங்கி அட்டையை பறித்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் பெற்று விட்டு தாக்குதலுக்குள்ளான இளஞனை புதிய பேரூந்து நிலையம் முன்பாக இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமைப் பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த விசாரணைகளையடுத்து யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 19, 21 மற்றும் 19 வயதான இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்
, மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான்
இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான்
இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான் ,City of Dreams SriLanka திட்டத்தின் தொடக்க விழாவில் பொலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் விசேட விருந்தினராக கலந்து கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
City of Dreams SriLanka அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் தனித்துவமான
திட்டமான இது, அனைத்து வசதிகளையும் கொண்ட தெற்காசியாவின் முதல் முழுமையாக
ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா ஹோட்டல் வளாகமாகவும், தனியார் துறையால் செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடாகவும் கருதப்படுகிறது.
சர்வதேச தரநிலைகள் மற்றும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு கேசினோ ஹால், சூப்பர் சொகுசு Nüwa ஹோட்டல் வளாகம் மற்றும் ஷொப்பிங்
மால் ஆகியவற்றைக் கொண்ட இந்த திட்டம், தெற்காசிய சுற்றுலா மற்றும் ஆடம்பர ஹோட்டல் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கிறது.
இலங்கையின் பொருளாதாரத்தின் மையமான கொழும்பின் மையத்தில் அமைந்துள்ள இந்த ஆடம்பர சுற்றுலா ஹோட்டல் வளாகம், சிறந்த
ஹோட்டல்கள், உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு, ஷொப்பிங் மற்றும் MICE (Meetings, Incentives, Conferences, and Exhibitions) அனுபவங்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கிறது.
சிறுபோக நெல் அறுவடை
சிறுபோக நெல் அறுவடை
சிறுபோக நெல் அறுவடை ,சிறுபோக அறுவடை ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், அதன்படி, நாளை (03) முதல் அரசு களஞ்சியசாலைகள் அறுவடை இடங்களில் திறக்கப்பட்டு நெல் கொள்முதலை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் பிற குழுக்களுடன் சமீபத்தில் நடைபெற்ற கூட்டுக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறிய பிரதியமைச்சர், அதன்படி, அம்பாறை, கிளிநொச்சி,
முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வடமேல் மற்றும் தென் பிரதேசங்களில் நெல் கொள்முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது நெல் கொள்முதல் செய்வதற்கு 600 மில்லியன் ரூபாய் இருப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
ஒரு கிலோ நாட்டு நெல் ரூ.120க்கும், ஒரு கிலோ சம்பா நெல் ரூ.125க்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல் ரூ.132க்கும் அரசு களஞ்சியசாலைகளில் கொள்வனவு
செய்யப்படும் என்றும், இந்த களஞ்சியசாலைகளுக்கு அனைத்து விவசாயிகளும் தரப்படுத்தப்பட்ட நெல்லை வழங்க முடியும் என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.

இதற்கிடையில், இந்த முறை ஈரமான நெல்லுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதன்படி, ஒரு கிலோ நாட்டு நெல் ரூ. 102, ஒரு
கிலோ சம்பா நெல் ரூ. 105 மற்றும் ஒரு கிலோ கீரி சம்பா நெல் ரூ. 112 என விவசாயிகள் விற்பனை செய்யலாம்.
அரசு களஞ்சியசாலைகளில் ஈரமான நெல்லை பெற முடியாத நிலை இருப்பதாகவும் கூறிய பிரதியமைச்சர்,
விவசாயிகள் அநீதி இழைக்கப்படாமல் இருக்க அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.
- பாகிஸ்தான் காவல் நிலையம் மீதான தாக்குதலில் 11 அதிகாரிகள் மற்றும் 15 தாக்குதல் நடத்தியவர்கள் பலி

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

சிக்கிய மஹிந்த மகன் யோஷித
சிக்கிய மஹிந்த மகன் யோஷித
சிக்கிய மஹிந்த மகன் யோஷித ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணமோசடி
தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் இரு பிரதிவாதிகளையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.
இந்த வழக்குக்கு இணையான மற்றொரு வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி மேல் நீதிமன்றம் இலக்கம் 1 இல் அழைக்கப்படவுள்ளதாக அரசு தரப்பு சட்டத்தரணி ஒஸ்வல்ட் பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த வழக்கின் ஆவணங்களும் இந்த வழக்கின் ஆவணங்களும் ஒன்றே என்பதை சுட்டிக்காட்டிய அரசு சட்டத்தரணி, சம்பந்தப்பட்ட ஆவணங்களில்
ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தனக்குத் தெரிவிக்குமாறு பிரதிவாதிகள் சட்டத்தரணிகளிடம் கோருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் மற்றும் அனில் சில்வா ஆகியோர், தொடர்புடைய ஆவணங்களை ஆராய்ந்து,
ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக தெரிவித்தனர்.
பின்னர் வழக்கை ஓகஸ்ட்மாதம் 4 ஆம் திகதி அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி மற்றும், 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முறைகேடாக ஈட்டிய 59 மில்லியன் ரூபாயிக்கும் அதிகமான பணத்தை மூன்று தனியார் வங்கிக்
கணக்குகளில் நிலையான வைப்பு கணக்குகளில் வைப்பு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக குறித்த
பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபாரால் மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள்
இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள்
இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் ,இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு

வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர் தெரிவித்தனர்.
தற்போதுள்ள முதலீட்டு வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துதல் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இந்திய கைத்தொழில் சம்மேளனத்தின் (CII) ஒருங்கிணைப்பின் கீழ் பல
முக்கிய இந்திய நிறுவனங்களின் பிரதானிகள் உட்பட சுமார் 20 இந்திய தொழில்முனைவோர் குழு எமது நாட்டில் செயற்பாட்டிலுள்ள திட்டமொன்றில்
பங்கேற்கிறது. இந்தக் குழு இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
இந்தியாவிற்கு அண்மையில் மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்தக் குழு இலங்கை வந்துள்ளது.
பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடனும் இலங்கை முதலீட்டுச் சபை போன்ற முன்னணி அரசு நிறுவனங்களுடன் அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை முதலீட்டாளர்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கியுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாட்டின் சிறந்த பொருளாதார நிலைமை மற்றும் முதலீட்டிற்கு உகந்த சூழலை உருவாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இந்திய தொழில்முனைவோருக்கு ஜனாதிபதி விளக்கினார்.
பாரிய அளவிலான முதலீடுகளைத் தக்கவைத்து அவற்றைப் பராமரிக்க தேவையான சட்ட கட்டமைப்பும், நிறுவன கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முதலீடுகளில் வீண் விரயம் மற்றும் ஊழலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக பிராந்திய முதலீட்டாளர்களை எளிதாக ஈர்ப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்,
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல துறைகளில் புதிய வணிக வாய்ப்பு
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல துறைகளில் புதிய வணிக வாய்ப்புகளுக்கு வாய்ப்புள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் மூலோபாய இருப்பிடம் முதலீட்டாளர்களிடமிருந்து வலுவான ஆர்வத்தை ஈர்த்துள்ளது என்று கூறிய இந்திய தொழில்முனைவோர்,
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதியின் தெளிவுபடுத்தலைப் பாராட்டியதோடு அது அவர்களுக்கு ஊக்கத்தையும் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது என்றும் கூறினர்.
தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதிஅமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே,
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள், இந்திய கைத்தொழில் சம்மேளனத்தின் (CII) முன்னாள் தலைவரும் ITC லிமிடெட் தலைவரும் முகாமைத்துவப்
பணிப்பாளருமான சஞ்சீவ் பூரி மற்றும் பல முன்னணி இந்திய நிறுவனங்களின் பிரதானிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அணுசக்தி விபத்தால் ஏற்படும் ஆபத்து
அணுசக்தி விபத்தால் ஏற்படும் ஆபத்து
அணுசக்தி விபத்தால் ஏற்படும் ஆபத்து ,அணுசக்தி விபத்தின் போது நாட்டிற்கு ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை ஸ்தாபிக்க இலங்கை அணுசக்தி முகவர்
நிறுவனத்துடன் இணைந்து ஒழுங்குபடுத்தல் பேரவை திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள கடற்படை முகாம்
நாட்டிலுள்ள கடற்படை முகாம்களை கேந்திரமாக கொண்டு 5 இடங்களில் இந்த அமைப்புகள் நிறுவப்படவுள்ளதாக இலங்கை அணுசக்தி
ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆய்வு மற்றும் அமுலாக்கப்பிரிவின் பணிப்பாளர் பிரகீத் கடதுன்ன தெரிவித்தார்.
குறித்த கட்டமைப்பின் ஊடாக நாட்டிற்கு அருகிலுள்ள நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்களில் ஏற்படும் இயற்கையான அல்லது செயற்கை
விபத்துகளின் போது நாட்டிற்குள் வரும் கதிர்வீச்சை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கற்பிட்டி, மன்னார், நெடுந்தீவு, மட்டக்களப்பு
கற்பிட்டி, மன்னார், நெடுந்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் இந்த கட்டமைப்புகள் நிறுவப்படவுள்ளதாக இலங்கை அணுசக்தி
ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆய்வு மற்றும் அமுலாக்கப்பிரிவின் பணிப்பாளர் பிரகீத் கடதுன்ன தெரிவித்தார்.
லிப்டில் சிக்கி 4 எம்பிக்கள்
லிப்டில் சிக்கி 4 எம்பிக்கள்
லிப்டில் சிக்கி 4 எம்பிக்கள் லிப்டில் சிக்கி 4 எம்பிக்கள்பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர், மின்னுயர்த்தியில் (லிஃப்டில்) சிக்கிக்கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில்
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் உள்ள ஒரு லிஃப்டிலேயே இந்த நான்கு எம்.பிக்களும் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
மாநாட்டு மண்டபத்தில் ஒரு ஆய்வு அமர்வில் கலந்து கொண்டிருந்த வழக்கறிஞர்கள் சமிந்த்ராணி கிரியெல்ல, சித்ரால் பெர்னாண்டோ மற்றும் சதுரா கலப்பத்தி ஆகியோர் அடங்குவர்.
சம்பவம் நடந்தபோது, பண்டாரநாயக்க நினைவு மாநாட்டு மண்டபத்தில் உள்ள ஆய்வு மண்டபத்தில் இருந்து லிஃப்டில் இருந்து கீழே வந்து கொண்டிருந்தனர்.
இது தொடர்பாக, நாங்கள் விசாரித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சித்ரால் பெர்னாண்டோ,
நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள்
அவர் உட்பட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் லிஃப்டில் சிக்கிக்கொண்டதாகவும், ஊழியர்கள் குழு தங்களை மீட்கப்பட்டதாகவும் கூறினார்.
சம்பவம் குறித்து, கண்டி மாவட்ட கவுன்சிலர் சமிந்த்ராணி கிரியெல்ல கூறுகையில், எதிர்பாராத சம்பவத்தால் தான் மிகவும் சங்கடப்பட்டதாகக் கூறினார்.
- பாகிஸ்தான் காவல் நிலையம் மீதான தாக்குதலில் 11 அதிகாரிகள் மற்றும் 15 தாக்குதல் நடத்தியவர்கள் பலி

- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்

- சீனாவின் ஆயுதங்கள் ஈரான் போர் முனையில் அலறும் அமெரிக்கா

- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு

அதிகரித்த புத்தகங்களின் விலை
அதிகரித்த புத்தகங்களின் விலை
அதிகரித்த புத்தகங்களின் விலை ,பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதால் அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வர்த்தகர்கள் சங்கத்தின் வருடாந்திர ஆண்டு
தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் வருடாந்திர ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர இந்தக் கருத்தை வெளியிட்டார்.
ஒரு புத்தகத்தின் விலை 20% அதாவது ஐந்தில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் குழம்பியுள்ளனர். முன்பு, எழுதுபொருள் உட்பட அனைத்திற்கும் VAT வரி விகிதம் 15% ஆக இருந்தது. ஆனால் அச்சிடப்பட்ட
புத்தகங்களுக்கு VAT வரி இல்லை. அதற்குதான் நேரடியாக 0 – 18%ஆக அறவிடப்பட்டது. எழுதுபொருட்களுக்கு 3%ஆக மட்டுமே இருந்தது.
அவர்கள் இந்த இரண்டு விடயங்களால் குழம்பிப் போயுள்ளனர். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, ஜனாதிபதி செயலகத்திலிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது,
அதில் அவர்கள் VAT வரி தொடர்பாக சில விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும், பின்னர் ஒரு பதிலை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் புரவலர் காமினி மொரகொடவும் இது குறித்து ஊடகங்களுக்கு தனது கருத்துக்களை தெரிவித்தார்.
புத்தகங்களுக்கு VAT வரி அறவிடப்படுகிறது
உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு எங்கள் புத்தகங்களுக்கு VAT வரி அறவிடப்படுகிறது. இலங்கையில் 75 ஆண்டுகளாக நடைமுறையில்
இல்லாத VAT வரி, ஜனவரி 2024 முதல் விதிக்கப்பட்டதால் புத்தக விற்பனை அழிவடைந்து வருகிறது. இது தொடருமாக இருந்தால் ஒரு பிள்ளைக்கு புத்தகம் கூட வாங்க முடியாது.
பஸ் விபத்து கதிர்காமத்தில்
பஸ் விபத்து கதிர்காமத்தில்
பஸ் விபத்து கதிர்காமத்தில் ,கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தி சிக்கிய நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவு
இன்று காலை (30) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்களை ஆரையம்பதியில் இறக்கி விட்டு
மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதி வழியே தேற்றாத்தீவு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பேருந்து கிரான்குளம்
சரஸ்வதி வித்தியாயலயத்திற்கு அருகாமையில் பயணிக்கும் போது வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த வம்மி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்தில் பஸ் சாரதியும் உதவியாளர்கள்
இந்த விபத்து இடம்பெறும் போது பேருந்தில் பஸ் சாரதியும் உதவியாளர்கள் இருவர் இருந்துள்ள நிலையில் மூவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தோர் பாண்டிருப்பு களுதாவளை பகுதியை சேர்ந்தவர்களாகும். விபத்தில் பேருந்து பாரிய சேதத்துக்குள்ளான நிலையில் வம்மி மரமும் முறிந்து வீதியில் விழுந்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- பாகிஸ்தான் காவல் நிலையம் மீதான தாக்குதலில் 11 அதிகாரிகள் மற்றும் 15 தாக்குதல் நடத்தியவர்கள் பலி

- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்

- சீனாவின் ஆயுதங்கள் ஈரான் போர் முனையில் அலறும் அமெரிக்கா

- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு

மழை சிலபகுதிகளில் பல தடவைகள்
மழை சிலபகுதிகளில் பல தடவைகள்
மழை சிலபகுதிகளில் பல தடவைகள் ,தீவின் சில பகுதிகளில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில்
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை
மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறார்கள்.
உலக சமூகஊடக தினம் இன்று
உலக சமூகஊடக தினம் இன்று
உலக சமூகஊடக தினம் இன்று ,உலக சமூக ஊடக தினம் இன்று (ஜூன் 30) கொண்டாடப்படுகிறது.
உலகளாவிய தகவல்தொடர்புகளை மாற்றுவதில் சமூக ஊடகங்களின் ஆழமான தாக்கத்தை அங்கீகரிக்கும் ஒரு உலகளாவிய அனுசரிப்பு இது, மேலும் மக்கள் எவ்வாறு இணைகிறார்கள்,
பகிர்ந்து கொள்கிறார்கள் மற்றும் தகவல்களைப் பெறுகிறார்கள் என்பதை வடிவமைக்கும் மிகவும் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாக இது மாறியுள்ளது.
சமூக ஊடகங்கள் உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைத்து, உண்மையிலேயே உலகளாவிய சமூகத்தை உருவாக்கியுள்ளன. இது செய்தி அல்லது பொழுதுபோக்குக்கான ஒரு தளத்தை விட அதிகமாக உள்ளது, மக்கள்
எவ்வாறு கருத்துக்களை உருவாக்குகிறார்கள், சமூகங்களில் இணைகிறார்கள் மற்றும் சமூகத்துடன் ஈடுபடுகிறார்கள் என்பதில் இது ஒரு முக்கிய பகுதியாக மாறியுள்ளது.
புதிய ஊடக போக்குகள் மூலம், சமூக ஊடகங்கள் சமூகக் குழுக்களின் இன்றியமையாத பகுதியாக மாறியுள்ளன. தகவல் மற்றும் பொழுதுபோக்கை
வழங்குவதற்கான அதன் அசல் நோக்கத்திற்கு அப்பால், பொதுக் கருத்தை வடிவமைப்பதில் இது இப்போது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமூக ஊடகங்களின் பயணம் 2002 இல் ஃப்ரெண்ட்ஸ்டர் மற்றும் 2003 இல் மைஸ்பேஸ் போன்ற தளங்களுடன் தொடங்கியது.
ஃபேஸ்புக் 2004 இல் தொடங்கப்பட்டது மற்றும் விரைவில் தொழில்துறையில் ஒரு மேலாதிக்க சக்தியாக மாறியது. ட்விட்டர் (இப்போது X என்று
அழைக்கப்படுகிறது) பயனர்கள் தங்கள் எண்ணங்களை 140 எழுத்துக்கள் அல்லது அதற்கும் குறைவாகப் பகிர்ந்து கொள்ள ஊக்குவித்தது.
இன்ஸ்டாகிராம் மற்றும் பிளிக்கர் ஆகியவை நம்மை காட்சி ரீதியாக வெளிப்படுத்துவதை எளிதாக்கின,
அதே நேரத்தில் யூடியூப் மற்றும் டிக்டாக் வீடியோ பகிர்வில் புரட்சியை ஏற்படுத்தி கலாச்சார முக்கிய இடங்களாக மாறிவிட்டன.
சமூக ஊடகங்கள் இப்போது உலகளாவிய அரசியலிலும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன, மேலும் அவை அன்றாட தகவல்தொடர்புக்கு அவசியமாகிவிட்டன.
மக்களை ஒன்றிணைக்கும் சக்தி அதற்கு இருந்தாலும், அது பிளவுகளையும் உருவாக்க முடியும், இதனால் மக்கள் அதைப் பொறுப்புடன் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.
- பாகிஸ்தான் காவல் நிலையம் மீதான தாக்குதலில் 11 அதிகாரிகள் மற்றும் 15 தாக்குதல் நடத்தியவர்கள் பலி

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

முக்கிய போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
முக்கிய போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
முக்கிய போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
காவல்துறை அதிகாரிகள்
அதன் அடிப்படையில் ஐந்து மிக முக்கியமான அது உயர் தரத்திலான காவல்துறை அதிகாரிகளை திடீரென உடனடியாக அமிலுக்கு வரும் நிலையில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றம் என்பது காவல்துறையில் இடம்பெறுகின்ற சாதாரண இடமாற்றம் எனவும் ,அவ்வாறான நிலையில் தற்பொழுது இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமான அதிகாரிகரத்தில் நான் அதிகாரிகள் திடீர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்ற விடயம் தற்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விடயம் என்பது அரசியல் பழிவாங்கல் காரணமா அல்லது இயல்பான ஒரு நடவடிக்கை என்பது ஆகவே கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
வன்முறைகள் ,விபத்துக்கள்
அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டாலும், இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெறுகின்ற வன்முறைகள் ,விபத்துக்கள் இந்த அதிகாரிகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
எனவே புதிய பதாவி உயர்வு வழங்க பட்டு இடமாற்றம் செல்லும் இவர்கள் உரிய முறையில் நாட்டை பாதுகாக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பி நிக்கிறது .
ஹந்தானை மலையில் மாயமாகியிருந்த குழுவினர்மீட்பு
ஹந்தானை மலையில் மாயமாகியிருந்த குழுவினர்மீட்பு
ஹந்தானை மலையில் மாயமாகியிருந்த குழுவினர்மீட்பு ,கண்டி, ரட்டேமுல்ல பகுதியில் 12 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு, நேற்று மாலை ஹந்தானை மலை உச்சியைப் பார்வையிடுவதற்காக ஒன்று கூடியிருந்தது.
பின்னர் மூடுபனி மற்றும் மழை காரணமாக, அவர்களால் திரும்பி வருவதற்கு பாதையைக் கண்டறிய முடியாமல் வழி தவறியிருந்தனர்.
இதைப் பற்றி பெற்றோருக்கு அறிவித்த பின்னர், இராணுவமும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாணவர்கள் உட்பட குழுவினரைக் கண்டறிந்தனர்.
மீட்கப்பட்ட குழுவினர் பேராதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் காவல் நிலையம் மீதான தாக்குதலில் 11 அதிகாரிகள் மற்றும் 15 தாக்குதல் நடத்தியவர்கள் பலி

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

இலங்கையுடனான ஒப்பந்தமே பிரச்சனைக்கு காரணம்
இலங்கையுடனான ஒப்பந்தமே பிரச்சனைக்கு காரணம்
இலங்கையுடனான ஒப்பந்தமே பிரச்சனைக்கு காரணம் ,அவசர காலத்தின் போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே தமிழக மீனவர் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளதாக இந்திய வௌிவியறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இடம்பெற்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அவசர நிலை காலத்தின்போது பாராளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இல்லாமல் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்வது குறித்து நாம் கேட்டிருக்கிறோம். அதற்கு அவசர காலத்தின்போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தமே காரணம்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் சில குறிப்பிட்ட கடற்பகுதிகளில் மீன் பிடிக்கும் நமது உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டது.
அவசர நிலை காலத்தின்போது உண்மையான பாராளுமன்றம் செயல்பாட்டில் இருந்திருந்தால் இது குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கும். அப்போது இந்த முடிவு ஏற்கப்பட்டிருக்காது.
அதன் விளைவுகளை தமிழ்நாட்டில் நாம் இன்னும் காண்கிறோம்.
உலகின் பழமையான, மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற இந்தியாவின் பிம்பம் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதன் மூலம் உடைந்தது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் பொலிஸார் சோதனை நடத்தியதை நானே நேரில் பார்த்தேன்.
அவசரநிலை பிரகடனத்தால் அரசியலமைப்பும், ஜனநாயகமும் படுகொலை செய்யப்பட்ட பிறகு இந்தியாவின் முடிவை ஆதரிப்பதற்கு எவ்வளவு கடினமாக
இருந்தது? என்பதை வெளியுறவுத்துறையில் உள்ள எனது மூத்த அதிகாரிகளிடம் இருந்து கேட்டறிந்தேன்.
நாட்டை விட ஒரு குடும்பமே முக்கியம் என்ற நிலை வரும்போது அவசர நிலை உருவாகிறது. சிலர் தங்கள் பாக்கெட்டுகளில் அரசியல் சாசன புத்தகத்தை
வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் இதயத்தின் உணர்வோ வேறுமாதிரி இருக்கிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற எத்தகைய நிலையையும் தவிர்ப்பதற்கு மக்கள் அதிகாரம் பெற வேண்டும். அதிகாரம் பெற்ற மக்கள் இதை ஒருபோதும் நடக்க விடமாட்டார்கள் என இந்திய வௌிவியறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

- BASL சிறப்புப் பொதுக் கூட்டம் தொடங்கியது

- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை

- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது

- யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி

- மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு

காணாமல் போன மீனவர் சடலங்கள்மீட்பு
காணாமல் போன மீனவர் சடலங்கள்மீட்பு
காணாமல் போன மீனவர் சடலங்கள்மீட்பு ,களுத்துறை, பேருவளை, மொரகல்ல பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில், காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
கடற்கரையில் மீனவர்களின் சடலங்கள்
பெந்தோட்டை கடற்கரையில் மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (28) காலை மீன்பிடிக்கச் சென்றிருந்த போது அவர்கள் இந்த விபத்திற்கு முகம் கொடுத்திருந்தனர்.
இறந்தவர்கள் அளுத்கம பகுதியைச் சேர்ந்த நதுன் குமார மற்றும் அவரது சகோதரர் துமிந்த நதுன் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், பிரதேசவாசிகள் படகுகள் மூலம் அவர்களைத் தேடியிருந்தனர் .
மீனவ படகுகள் கடலில் விபத்தில்
தற்போது மீனவ படகுகள் கடலில் விபத்தில் சிக்கி மீனவர்கள் காணாமல் போவதும் ,மரணமாகி வருகின்ற சம்பவங்கள் ,மக்கள் மத்தியில் மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
இவ்விதமான விடயங்கள் மக்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது . என்பது குறிப்பிடத்தக்கது.
08 இந்திய மீனவர்கள் கைது
08 இந்திய மீனவர் கைது
08 இந்திய மீனவர்கள் கைது ,இலங்கை கடற்படையினர், இன்று (29) அதிகாலை மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி
இந்திய மீன்பிடி படகு
நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த எட்டு இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைது செய்யதனர்.
நாட்டின் கடற்பரப்பை மீறி வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின்
வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை
அதன்படி, இன்று ( 29) வடமத்திய கடற்படை கட்டளை மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில்
ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் பலவற்றை அவதானித்ததோடு, அந்த மீன்பிடி படகுகளை இலங்கையிலிருந்து அகற்றும் விசேட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
அங்கு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீன்பிடி படகொன்று (01) இலங்கை கடற்படையினரால் முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், எல்லை விதிகளை மீறி சட்டவிரோத மீன்பிடியில்
ஈடுபட்டிருந்த எட்டு (08) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைது செய்யதனர்.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகொன்றும் (01) அதில் இருந்த எட்டு (08) இந்திய மீனவர்கள்
மன்னாரில் உள்ள தால்பாடு படகுத்துறைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்..
- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

- BASL சிறப்புப் பொதுக் கூட்டம் தொடங்கியது

- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை

- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது

- யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி

- மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு















































