Posted in இலங்கை செய்திகள்

மொரட்டுவ தாக்குதல் – சிலர் கைது

மொரட்டுவ தாக்குதல் – சிலர் கைது

மொரட்டுவ, சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

      Posted in இலங்கை செய்திகள்

      யாழ்ப்பாணம் பாசையூர் கடலில்- வாலிபன் சடலம் மீட்பு

      யாழ்ப்பாணம் பாசையூர் கடலில்- வாலிபன் சடலம் மீட்பு

      யாழ்ப்பாணம் பாசையூர் கடலில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

      பாசையூர் பகுதியைச் சேர்ந்த சில்வெஸ்ரர் சஜித் (27) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

      கடற்றொழிலாளர்கள் நான்கு பேர் இன்று (03) பூம்புகார் கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது, காணாமல் போயுள்ளனர்.

      ஒரு இடத்தில் இவரை நிறுத்திவிட்டு, மற்றொரு இடத்தில் தொழில் பார்க்கச்சென்றுள்ளனர்.திரும்பி வந்து பார்த்த போது, அவரைக்

      காணவில்லை. பின்னர், மீனவர்கள் சேர்ந்து தேடிய போது, பூம்புகார் கடற்பகுதியில் சடலமாக கரையொதுங்கிய நிலையில், சக மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது.

      மீனவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பின்னர், யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் திடீர் மரண

      விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் ஆகியோர் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக

      யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

          Posted in உலக செய்திகள்

          அரை நிர்வாணமாக தோன்றிய மெக்சிகோ பெண் செனட்டர்

          அரை நிர்வாணமாக தோன்றிய மெக்சிகோ பெண் செனட்டர்

          மெக்சிகோவைச் சேர்ந்த பெண் செனக்டர் வீடியோ கால் ஆலோசனையின்போது அரை நிர்வாணமாக தோன்றிய காட்சி வெளியாகியுள்ளது.

          வீடியோ கால் ஆலோசனையின்போது அரை நிர்வாணமாக தோன்றிய மெக்சிகோ பெண் செனட்டர்
          செனட்டர் மர்தா லூசியா மிச்செர்


          கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. அரசு அலுவலகங்கள் இயங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. தற்போது

          தென்அமெரிக்கா நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமான அளவில் உள்ளது.

          இதனால் அரசு அதிகாரிகள் ஜூம் வீடியோ கால் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மெக்சிகோ பெண் செனட்டர்

          அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த தயாராக இருந்தபோது அவருடைய அரை நிர்வாணப்படம் வெளியானது. இதை சக

          செனட்டர்கள் கவனித்து அவரிடம் தெரிவிக்க, அந்த செனட்டர் உடனனே சரி செய்து கொண்டார்.

          66 வயதான அந்த பெண் செனட்டர் மர்தா லூசியா மிச்செர் இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டதுடன்,

          விளக்கக் கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ‘‘சக செனட்டர்களுடன் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலை குறித்து

          முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் துரதிருஷ்டவசமாக இந்த சம்பவம் நடைபெற்று விட்டது.

          அந்த கூட்டத்தின் ஒரு பகுதியில் கம்ப்யூட்டரின் கேமரா ஆனில் இருந்ததை கவனிக்காமல் நான் எனது உடையை மாற்றிக்

          கொண்டேன். அதன்பின் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றேன். என்னுடைய பிழையை நான் உணர்ந்தேன். எனக்கு அந்த சமயத்தில்

          உதவிய சக செனட்டர்கள் அலேஜான்ட்ரோ அர்மென்ட்ரா மியர் மற்றும் ஓவிடியோ பெரால்டா சுவாரஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

          செனட்டர் மர்தா லூசியா மிச்செர்

          இப்படம் வெளியானது குறித்து பலவிதமான கருத்துக்கள் வெளியானது. அதற்கு மர்தா லூசியா மிச்செர் பதில் அளிக்கையில்

          ‘‘நான் மாலு மிச்செர். தற்செயலாக என்னுடைய உடலை காட்டிய இந்த சம்பவத்திற்கான நான் அவமானப்படப் போவதில்லை.

          ஏனென்றால், அது பெண்களின் சாதாரண மற்றொரு உறுப்பு போன்றதுதான். பெண்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்களில் நான் எதிர்த்து போராடியுள்ளேன்.

          எனக்கு தற்போது 66 வயதாகிறது. நான்கு குழந்தைகளுக்க பாலூட்டியுள்ளேன். தற்போது மூன்று பேர் தொழில் செய்து

          வருவதுடன் பொறுப்புள்ள ஆண்களாக இருக்கிறார்கள். எனது உடல் அவர்களுக்கு ஊட்டமளித்ததற்காக பெருமைப்படுகிறேன்’’ என்றார்.

          அரை நிர்வாணமாக
          அரை நிர்வாணமாக
              Posted in இலங்கை செய்திகள்

              வவுனியா தெற்கு வலயத்தினால் மாணவர்களுக்கான இலவச வகுப்புக்கள்

              வவுனியா தெற்கு வலயத்தினால் மாணவர்களுக்கான இலவச வகுப்புக்கள்

              வவுனியா தெற்கு வலய கல்வித் திணைக்களத்தினால் மாணவர்களுக்கான இலவச சூம் வகுப்புக்கள் நடைபெறுவதாகவும்,

              மாணவர்களை அதற்கு வழிப்படுத்துமாறும் வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

              கொவிட்- 19 தாக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.

              இதனையடுத்து மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ள நிலையில் அவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

              அந்தவகையில் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா தெற்கு வலயத்தின் ஏற்பாட்டில்

              க.பொ.த உயர்தரம், க.பொ.த. சாதாரணதரம், புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான இலவச சூம் வகுப்புக்கள் எந்தவித

              கட்டணமுமின்றி இலவசமாக வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

              இதில் மாணவர்கள் பங்குபற்றுவதற்கு அதிபர்கள் வழிப்படுத்துவதுடன், பாட ஆசிரியர்களும் தமது மாணவர்களின்

              பங்குபற்றுதலை உறுதிப்படுத்தவும், குறித்த வகுப்புக்களில் பங்குபற்றாத மாணவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளையும்

              மேற்கொள்ளுமாறும் வலயக் கல்விப் பணிப்பாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

                  முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

                  கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் 04 ஆம் , 05ஆம் , 06ஆம்

                  மற்றும் 07ஆம் ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

                  இதன்போது ஒவ்வொரு பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் அனைத்து சுற்றாடல் பகுதிகளும் பரிசோதனைக்கு

                  உட்படுத்தப்படவுள்ளதாகவும் , இந்த இடங்களை பரிசோதனை செய்யும் பணியில் பொது மக்கள் சுகாதார அதிகாரியொருவருடன்

                  பொலிஸார் ஒருவரும் கழிவு முகாமைத்துவத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரும் இடம்பெறுவர்.

                  இதற்கமைவாக நகரத்தில் அனைத்து வடிகான் கட்டமைப்பு, இயற்கை கழிவுப்பகுதி மற்றும் சாக்கடைப் புழை (Manhole)

                  ஆகியன பரிசோதனை செய்யப்பட்டு சுத்தம் செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

                  சம்பந்தப்பட்ட சுற்றாடல் பகுதிகள் பரிசோதனை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய

                  இடங்கள் அடையாளங் காணப்பட்டால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும்

                  அறிவிக்கப்ட்டுள்ளது.
                  கொழும்பு நகரம் டெங்கு நுளம்பு அற்ற வலயமாக

                  முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கொழும்பு மாநகர ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

                      Posted in உலக செய்திகள்

                      பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி 359.பேர் பலி

                      பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி 359.பேர் பலி

                      பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 359.பேர் பலியாகியுள்ளனர் .


                      மேலும் இந்த நோயில் சிக்கி இதுவரை 39,728 பேர் பலியாகியுள்ளனர்

                      அது தவிர மூன்று இரண்டு லட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது


                      தொடர்ந்து நோயின் தாக்குதல்கள் தீவிரம் பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக வரலாற்றில் ஒரு சாதனை இயக்கம்

                          தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக வரலாற்றில் ஒரு சாதனை இயக்கம்

                          ஆறு ஆண்டுகள் நிறைவு தொடர்பில் தலைவர் மனோ கணேசன்
                          சுமார் நான்கே வருட காலம் ஆட்சியில் பங்காளியாக இருந்த, தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையக வரலாற்றில் பல சாதனைகளை

                          செய்து முடித்துள்ளது. இலங்கையில் மாறி, மாறி வந்த அரசாங்கங்களில், 1978ம் ஆண்டு முதல் சுமார் 38 வருடங்கள்

                          ஆட்சியில் இருந்த, பல மலையக கட்சிகளின் சாதிப்பு எமது இந்த நான்கு வருட சாதனை பட்டியல் நினைவில் நிற்கும்படியாக

                          உள்ளதை ல் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் நான் இன்று நினைவு கூறுகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும்

                          முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

                          2015ம் வருடம் ஜூன் 3ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவு பெறுவதையிட்டு

                          கருத்து கூறியுள்ள கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

                          எமது சாதனைகள், மலையக அரசியல், சமூக, கலாச்சார பரப்பின் சகல துறைகளையும் குறுக்கு வெட்டாக ஊடறுத்து சென்றுள்ளது.

                          எமது கூட்டணியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும், எமது பொது செயலாளராக அன்டன் லோரன்ஸ் மற்றும் இன்றைய பொது

                          செயலாளர் சந்திரா சாப்டர் உட்பட எமது ஆலோசகர்களாக இருந்த வாமதேவன் மற்றும் பெ. முத்துலிங்கம் ஆகியோரின் பங்களிப்பில் இந்த சாதனைக நிகழ்த்தப்பட்டுள்ளன.

                          எமது முதற்கட்ட கட்டமைப்பு சாதனை பட்டியலை இன்று வெளியிடுகிறேன். இது தவிர நுவரெலியா, கொழும்பு, கண்டி,

                          பதுளை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை மற்றும் வாடா கிழக்கு மாவட்டங்களான

                          யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைதீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகியவற்றில்

                          அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அடுத்த பட்டியலில் வெளியிட உள்ளேன்.

                          முதற்கட்ட கட்டமைப்பு பட்டியல்:

                          1) தொழிலாளர் குடும்பங்களுக்கு தோட்டங்களில் “ஏழு பேர்ச் காணி” வழங்களுக்கான இலங்கை அரசின் அமைச்சரவையில்

                          தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சரவை பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

                          2) “நாங்கள் இனிமேலும் நாட்கூலி தொழிலாளர்களாக இருக்க மாட்டோம், எதிர்காலத்தில், கிராமவாசிகளாக மாறுவோம்” என்ற

                          கொள்கையின்படி, மலையகத்தின் புத்தெழுச்சியை உறுதிப்படுத்த, தமிழ் முற்போக்கு கூட்டணியின் வலியுறுத்தலின் பேரில், “மலையக புதிய கிராமங்கள்..” என்ற பெயரில் அமைச்சு உருவாக்கப்பட்டது.

                          3) நான்கு வருடங்களாக ஆரம்பிக்கப்படாமல் நின்று போயிருந்த “இந்திய அரசின் வீடமைப்பு உதவி திட்டம்”, இந்திய

                          அரசாங்கத்துடன், எமது “புதிய மலைநாட்டு கிராமங்கள்…” அமைச்சு கையெழுத்திட்ட ஒப்பந்தம் மூலம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

                          4) அமைச்சரவை பத்திரத்தின்படி எமது நல்லாட்சி அரசு வழங்கிய சொந்த காணிகளில் சொந்த உறுதி பத்திரம் கொண்ட “தனி வீடுகள்” மலைநாட்டில் கட்டப்படும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

                          5) கடந்த காலத்தின் “லயன் குடியிருப்பு“ என்ற அடையாளத்தை தூக்கி எறிந்து, கட்டப்படும் அக்குடியிருப்புகள், “மலையக தமிழ் கிராமங்களாக” அறிவிக்கப்படும் நடைமுறை ஆரம்பமானது.

                          6) அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டத்தின்படி “மலையக அபிவிருத்திக்கான அதிகார சபை” உருவாக்கப்பட்டது.

                          7) மலையகத்தில் அரசியல் அதிகார பகிர்வு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நுவரேலியா மாவட்டத்தில், “புதிய ஆறு பிரதேச சபைகள்” அமைக்கபட்டன.

                          8) புதிய ஆறு பிரதேச சபைகளுக்குள், புதிய பிரதேச செயலகங்களும், கிராம சேவையாளர் பிரிவுகளும் அமைக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பமானது.

                          9) “மலையக மக்களால் வாக்களித்து பிரதேச சபைகளை தெரிவு செய்யும் பிரதேச சபைகளால், தோட்ட புறங்களுக்கு நிதி ஒதுக்கி,

                          அபிவிருத்தி செய்ய முடியாது” என்ற 30 வருட அடிமை சட்ட விதி அமைச்சரவையில் தூக்கி எறியப்பட்டு, மலையக தோட்டப்புற

                          பிரதேச சபைகளின் அதிகார எல்லை 33ம் விதி சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்டது.

                          10) சுமார் 300 தோட்டபுற பாடசாலைகளுக்கு அவ்வவ் தோட்டங்களில் மேலதிக அண்மை காணிகளை பிரித்து வழங்குதல் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

                          11) மலையக மக்களுக்கு, தேசிய அரசியலமைப்பு பணியில் காத்திரமான சம பங்கும், அந்தஸ்தும் வழங்கப்படுவது, கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

                          12) பெருந்தோட்ட மறுசீரமைப்பு இலக்கில், தோட்ட தொழிலாளர்களின் வருமானத்தை கூட்டி, அவர்களை

                          வெளிப்பயிர்செய்கை வருமான திட்டத்தின் அடிப்படையில் “மலையக தமிழ் விவசாயி”யாக மாற்றும் சிறுநில உடைமையாளர் திட்டம், கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

                          13) “மலையக பல்கலைக்கழகம்” பற்றிய சாத்தியப்பாட்டு அறிக்கை, மலையக சான்றோர் குழுவினாரால் தயாரிக்கப்பட்டு, கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கையில் 30 பேருக்கு கொரோனா தொற்று

                              இலங்கையில் 30 பேருக்கு கொரோனா தொற்று

                              இலங்கையில் மேலும் 30 ​பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                              அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது.

                              இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 823 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                              இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 849 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கனகராயன்குளம் ஏ9 வீதி விபத்தில் இரு பளையை சேர்ந்த தமிழ் போலீசார் பலி

                                  கனகராயன்குளம் ஏ9 வீதி விபத்தில் இரு பளையை சேர்ந்த தமிழ் போலீசார் பலி

                                  கனகராயன்குளம் ஏ9 வீதி விபத்தில் இரு போலீசார் பலி

                                  வவுனியா கனகராயன்குளம் ஏ9 வீதியில் இன்று (03) காலை இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.

                                  குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

                                  மட்டகளப்பில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை நிமித்தம் யாழ்பாணத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு

                                  பிறிதொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

                                  இதன் போது இன்று காலை 5:30 மணியளவில் கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியில்

                                  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

                                  விபத்தில் அரசடி வீதி நல்லூரை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஜெயமூர்த்தி திசிகாந்தன், – வீதி

                                  யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிசான் யனுஸ்டன் ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர்.

                                  சடலம் வவுனியா பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      முல்லையில் கிணற்றில் இருந்து இளம் பெண் சடலமாக மீட்பு

                                      முல்லையில் கிணற்றில் இருந்து இளம் பெண் சடலமாக மீட்பு

                                      முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராம அலுவலர் பிரிவில்

                                      கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

                                      குறித்த யுவதி கடந்த 31 ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் கடந்த முதலாம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸ்

                                      நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

                                      இந்நிலையில் குறித்த யுவதியின் உடலம் கிணற்றில் கிடப்பது இன்று (03) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

                                      சடலமாக மீட்கப்பட்ட குறித்த யுவதி அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய இராமலிங்கம் நிறோஜினி என்பது கண்டறியப்பட்ட

                                      நிலையில் கொலையா? தற்கொலையா? என விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

                                      சம்பவம் குறித்த விசாரணைகளை சம்பவ இடத்திற்குச் சென்ற புதுக்குடியிருப்பு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          கோர புயலினால் விமான சேவைகள் இரத்து -மக்களுக்கு எச்சரிக்கை

                                          அரபிக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல், இன்று இந்தியாவில் மும்பை அருகே உள்ள அலிபாக் பகுதியில் கரை கடக்கத் தொடங்கியது.

                                          தீவிர புயலாக வலுப்பெற்று தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த நிசர்கா புயல், இன்று பிற்பகல் இந்திய

                                          மாநிலமான மகாராஷ்டிரா- தெற்கு குஜராத் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளது.

                                          மும்பையில் இருந்து 94 கிமீ தொலைவில் உள்ள அலிபாக் அருகே கரைகடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 11 மணிக்கு பிறகு அலிபாக் அருகே புயல் கரையை கடக்கத்

                                          தொடங்கியது. இதனால் கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. கனமழையும் பெய்கிறது. கிட்டத்தட்ட 2 மணி

                                          முதல் 3 மணி நேரத்திற்குள் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

                                          நிசர்கா புயலால் மகாராஷ்டிராவின் மும்பையும், கடலோர மாவட்டங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை

                                          நிலையம் தெரிவித்து இருக்கிறது. குஜராத்தை விட மகாராஷ்டிரா தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் கூறி உள்ளது. இதனால் இரு

                                          மாநிலங்களிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

                                          இந்நிலையில், நிசர்கா புயல் எதிரொலியால் மும்பையில் நாளை புறப்பட வேண்டிய 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

                                          இண்டிகோ ஏர்லைன்ஸ் நாளை 17 விமானங்களை ரத்து செய்துள்ளது. 3 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.


                                          ஏர் ஏசியா, ஏர் இந்தியா, கோ ஏர், ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் நாளை மும்பைக்கு வருகை தரும் 12 விமானங்களை மட்டுமே சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளன.

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              திங்கட்கிழமை முதல் பொதுப் போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பும்- அரசு

                                              திங்கட்கிழமை முதல் பொதுப் போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பும்- அரசு

                                              எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொதுப் போக்குவரத்து சேவையை வழமை போன்று முன்னெடுப்பதற்கு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.

                                              அடுத்துவரும் சில தினங்களில் மக்களின் செயற்பாடுகள் மற்றும் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பில் சுகாதாரப் பிரிவு

                                              வழங்கும் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை

                                              வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

                                              இலங்கை போக்குவரத்து சபைக்கு உட்பட்ட 5,300 பஸ்களும் தனியார் துறையைச் சேர்ந்த 23,000 பஸ்களும் இருந்தபோதிலும்

                                              தற்போதைய நிலைமையில் பயணிகளின் போக்குவரத்துக்கு இவை போதுமானதல்ல என்று அமைச்சர் மகிந்த அமரவீர

                                              தெரிவித்துள்ளார். ரயில் மற்றும் பஸ் சேவைகள் உரிய முறைப்படி இடம்பெறும். இது தொடர்பான கலந்துரையாடல் இன்று போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது.

                                              கொரோனா வைரஸ் காரணமாக ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் போக்குவரத்து கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதனால்,

                                              சாதாரண பொதுப் போக்குவரத்துச் சேவையை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. எதிர்காலத்தில் தற்போதுள்ள

                                              தனியார் மற்றும் அரச பஸ் போக்குவரத்துச் சேவையை உயர்ந்தபட்ச அளவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

                                              இது தவிர, பாடசாலை போக்குவரத்து பஸ்கள் சுற்றுலா மற்றும் யாத்திரிகைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பஸ்கள் மற்றும் பதிவு

                                              செய்யும் ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ள பஸ்கள் தற்காலிகமாக பிரயாணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும். இந்த

                                              பஸ்களை தற்காலிகமாக பதிவு செய்யும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பமாகும்.

                                              ரயிலிலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் அனுமதிக்கப்படுவதால், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும்

                                              போது அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பயணங்களை மட்டுப்படுத்துமாறு அமைச்சர் மகிந்த அமரவீர பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்..

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  கிளிநொச்சியில் காற்றினால் வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு – நிவாரண கொடுப்பனவு

                                                  கிளிநொச்சியில் காற்றினால் வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு – நிவாரண கொடுப்பனவு

                                                  கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் வீசிய கடுமையான காற்றின்

                                                  காரணமாக பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

                                                  இந்த வருடம் கடந்த மே மாதம் கிளிநொச்சி மாவட்டத்தில் வீசிய பலத்த

                                                  காற்றின் காரணமாக 89 வீடுகள் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்திருந்தன.

                                                  இவ்வாறு பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைப்பதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும்

                                                  தலா 10000 ரூபா வீதம் முற்பணமாக வழங்குவதற்கான ஏற்பாட்டினை

                                                  கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேற்கொண்டிருந்தது.

                                                  அந்த வகையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் தேசிய அனர்த்த நிவாரண

                                                  சேவைகள் நிலையத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வருகின்றது.

                                                      Posted in உலக செய்திகள்

                                                      திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் தற்கொலை செய்து நடிகை

                                                      திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் தற்கொலை செய்து நடிகை

                                                      பெங்களூருவில் திருமணத்திற்கு காதலன் மறுத்ததால் சின்னத்திரை நடிகை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

                                                      திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை
                                                      தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சந்தனா


                                                      பெங்களூரு சுத்தகுண்டே பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணமூர்த்தி லே-அவுட்டில் வசித்து வந்தவர் சந்தனா (வயது 29). இவர், கன்னட சின்னத்திரை நடிகை ஆவார். தனியார்

                                                      தொலைக்காட்சிகளில் பல்வேறு நாடகங்களும், சில விளம்பரங்களிலும் சந்தனா நடித்துள்ளார். இவருக்கும் தினேஷ்

                                                      என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் தினேஷ், சந்தனா இடையே காதலாக

                                                      மாறியது. இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்தனர்.

                                                      இந்த நிலையில், தனது வீட்டில் இருந்த நடிகை சந்தனா திடீரென்று விஷத்தை ஊற்றி குடித்தார். இதனால் அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிய

                                                      சந்தனாவை, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்தனா பரிதாபமாக இறந்து விட்டார்.

                                                      இதுபற்றி அறிந்ததும் சுத்தகுண்டே பாளையா போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று சந்தனாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சந்தனா தான் தற்கொலை

                                                      செய்தவற்காக விஷத்தை குடிப்பதை தனது செல்போனில் செல்பி வீடியோ எடுத்து வைத்திருந்தார். மேலும் தன்னுடைய தற்கொலைக்கு காதலன் தினேஷ் தான் காரணம் என்று அந்த

                                                      வீடியோவில் அவர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். அதாவது சந்தனாவும், தினேசும் 5 ஆண்டுக்கும் மேலாக

                                                      காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு 2 பேரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். அத்துடன் சந்தனா, தினேசுக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்திருந்தார்கள்.

                                                      அதே நேரத்தில் சந்தனாவிடம் இருந்து ரூ.5 லட்சத்திற்கும் மேல் தினேஷ் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது சந்தனாவை திருமணம் செய்ய தினேஷ் மறுத்ததுடன், பணத்தையும் திரும்ப

                                                      கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த சந்தனா விஷம் குடித்து தற்கொலை செய்தது

                                                      தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுத்தகுண்டே பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தினேசை வலைவீசி தேடிவருகிறார்கள்.

                                                      திருமணம் செய்ய காதலன்
                                                      திருமணம் செய்ய காதலன்
                                                      Posted in உலக செய்திகள்

                                                      டெல்லியையும் விட்டுவைக்காத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 22132 ஆக அதிகரிப்பு

                                                      டெல்லியையும் விட்டுவைக்காத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 22132 ஆக அதிகரிப்பு

                                                      டெல்லியில் நேற்று மேலும் 1,298 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு

                                                      அடைந்தோர் எண்ணிக்கை 22,132 ஆக அதிகரித்துள்ளது.

                                                      டெல்லியையும் விட்டுவைக்காத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 22132 ஆக அதிகரிப்பு
                                                      சிகிச்சை பெறும் நோயாளிகள்

                                                      சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

                                                      இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

                                                      நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 72 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

                                                      இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நேற்று மேலும் 1,298 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து

                                                      அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.132 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை

                                                      556 ஆக உயர்ந்துள்ளது என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          இலங்கையில் பாணின் விலை இன்று இரவு முதல் அதிகரிப்பு

                                                          இலங்கையில் பாணின் விலை இன்று இரவு முதல் அதிகரிப்பு

                                                          இலங்கையில் ஆளும் கோட்டபாய ஆட்சிக்கு வந்ததன் பின்னர்

                                                          மூன்றாவது முறையாக பாணின் விலைகள் அதிகரிக்க படுகின்றன

                                                          இந்த திடீர் விலை அதிகரிப்பால் அடிப்படை பொருளாதாரா வசதி இன்றி

                                                          தவிக்கும் மக்கள் பெரிது பாதிக்க படுகின்றனர் ,ஆனால் அவற்றை எல்லாம்

                                                          கருத்தில் கொளளது வீழ்ந்து போன பொருளாதரத்தை நிமிரத்திட கோட்டபாய ஆட்சி பீடம் இந்த அடாவடியை நடவடிக்கையை தொடர்கிறது

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              சிங்கப்பூரில் தவித்த 291 இலங்கையர் விசேட விமானம் மூலம் நாடு வந்தனர்

                                                              சிங்கப்பூரில் தவித்த 291 இலங்கையர் விசேட விமானம் மூலம் நாடு வந்தனர்

                                                              கொரனோ வைரஸ் தாக்குதலினால் சிங்கப்பூரில் சிக்கி தவித்த

                                                              இலங்கையை சேர்ந்த சுமார் 291 இலங்கையர்கள் ,இலங்கை அரச எயார்லைங்கா விமானத்தின் மூலம் அழைத்து வரப் பட்டுள்ளனர்

                                                              கட்டு நாயக்க விமான நிலையத்தில் இருந்து சிறப்பு பேரூந்துகளில் ஏற்றி செல்ல பட்டு தனிமை படுத்தல் முகாமில் சிறை வைக்க பட்டுள்ளனர்

                                                              14 நாட்கள் முடிவடைந்த பின்னரே அவர் தம் உறவுகளுடன் இணைவதற்கு விடுவிக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  இறம்பொடை வௌன்டன் தோட்டத்தில் தீ வீபத்து காரணமாக 03 வீடுகள் பாதிப்பு photo

                                                                  இறம்பொடை வௌன்டன் தோட்டத்தில் தீ வீபத்து காரணமாக 03 வீடுகள் பாதிப்பு photo

                                                                  நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட வௌன்டன் தோட்டம் தொழிற்சாலை பிரிவில் இலய குடியிருப்பு

                                                                  ஒன்ற்pல் நேற்று (01) இரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ வீபத்தினால் மூன்று வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. தீ

                                                                  ஏற்பட்ட உடன் பொது மக்களின் உதவியியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தீ ஏனைய வீடுகளுக்கு

                                                                  பரவாமல் காப்பாற்றபட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கேள்விபட்ட ஜீவன் தொண்டமான் சம்பவ இடத்திற்கு விஜயம்

                                                                  செய்து தீ அணைப்பவர்களுடன் இனைந்து செயற்பட்டதுடன். பாதிக்கபட்டவர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க

                                                                  நடவடிக்கை எடுத்துள்ளார். மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்க் கொண்டு வருவதுடன் மின் ஒழுக்கு காரணமாக

                                                                  இந்த தீ வீபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேக்கப்படுகின்றது. இந்த

                                                                  தீ வீபத்தினால் பெருமளவு பெருமதியான பொருட்கள் சேதமாகி உள்ளது

                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      இரண்டு சிங்கள இராணுவத்தினர் பலி – நடந்தது என்ன …?

                                                                      இரண்டு சிங்கள இராணுவத்தினர் பலி – நடந்தது என்ன …?

                                                                      இலங்கை பாதுகாப்பு படையினர் இருவர் பயணித்த ஊந்துருளி விபத்தில் சிக்கியதில்
                                                                      அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்

                                                                      இந்த விபத்து Damanayaya in Bakamuna பகுதியில் இடம்பெற்றுள்ளது ,27,மற்றும்

                                                                      28 வயதுடைய இளம் இராணுவ சிப்பாய்கள் இவ்விதம் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                                                      குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகிறது

                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                          இறந்த கருஞ் சிறுத்தை மரபணு சோதனைகள் ஆரம்பம்

                                                                          இறந்த கருஞ் சிறுத்தை மரபணு சோதனைகள் ஆரம்பம்

                                                                          சமீபத்தில் பொறியொன்றில் சிக்கி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த கறுஞ்சிறுத்தை தொடர்பான மரபணு பரிசோதனை

                                                                          பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியல் தொழில்நுட்ப நிலையத்தில் நடத்தப்படவுள்ளது.

                                                                          வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய,

                                                                          மரபணு பரிசோதனையை நடத்துவதாக நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பிரதீபா பண்டார தெரிவித்தார்.

                                                                          உயிரிழந்த கறுஞ்சிறுத்தையின் இரத்த மாதிரியும், தற்போது உயிர்வாழும் ஒருவகை சிறுத்தையின் இரத்த மாதிரியும்

                                                                          பெறப்பட்டு, ஒப்பீட்டு முறையிலான டிஎன்ஏ சோதனைகள் நடத்தப்படும்.

                                                                          இதன் மூலம், இந்தக் கறுஞ்சிறுத்தை பிரத்தியேகமான வகையைச் சேர்ந்த உயிரினமா அல்லது தற்போதுள்ள உயிரினத்தின் தோலில்

                                                                          ஏற்பட்ட நிறமூர்த்த குறைப்பாட்டால் கறுப்பாக இருக்கிறதா என்பது கண்டறியப்படும் என கலாநிதி பண்டாரநாயக்க கூறினார்.

                                                                          இறந்த கருஞ் சிறுத்தை
                                                                          இறந்த கருஞ் சிறுத்தை