கோர புயலினால் விமான சேவைகள் இரத்து -மக்களுக்கு எச்சரிக்கை

Spread the love

அரபிக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல், இன்று இந்தியாவில் மும்பை அருகே உள்ள அலிபாக் பகுதியில் கரை கடக்கத் தொடங்கியது.

தீவிர புயலாக வலுப்பெற்று தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த நிசர்கா புயல், இன்று பிற்பகல் இந்திய

மாநிலமான மகாராஷ்டிரா- தெற்கு குஜராத் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளது.

மும்பையில் இருந்து 94 கிமீ தொலைவில் உள்ள அலிபாக் அருகே கரைகடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 11 மணிக்கு பிறகு அலிபாக் அருகே புயல் கரையை கடக்கத்

தொடங்கியது. இதனால் கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. கனமழையும் பெய்கிறது. கிட்டத்தட்ட 2 மணி

முதல் 3 மணி நேரத்திற்குள் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

நிசர்கா புயலால் மகாராஷ்டிராவின் மும்பையும், கடலோர மாவட்டங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை

நிலையம் தெரிவித்து இருக்கிறது. குஜராத்தை விட மகாராஷ்டிரா தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் கூறி உள்ளது. இதனால் இரு

மாநிலங்களிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், நிசர்கா புயல் எதிரொலியால் மும்பையில் நாளை புறப்பட வேண்டிய 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நாளை 17 விமானங்களை ரத்து செய்துள்ளது. 3 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.


ஏர் ஏசியா, ஏர் இந்தியா, கோ ஏர், ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் நாளை மும்பைக்கு வருகை தரும் 12 விமானங்களை மட்டுமே சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளன.

      Leave a Reply