Author: நலன் விரும்பி
கருணாவுக்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள்
கருணாவுக்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள்
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும்
விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் தினங்களில் 2020 ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை வாழ் இளைஞர்கள்
திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கப்பல் இலச்சினையுடன் போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளரான கருணா அம்மானிற்கு 35 அடி நீளமான கட்டவுட்களை முக்கிய சந்திகளில் வைத்துள்ளனர்.
அம்பாறை- கல்முனை பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் எங்கும் செல்வோம் எதிலும்
வெல்வோம் என்ற வாசகத்துடன் கப்பல் இலட்சனையுடன் கல்முனை நகர பகுதியிலுள்ள மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துண்டுப்பிரசுரங்களை பாண்டிருப்பு சந்தை தாளவட்டுவான் சந்தி நீலாவணை நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது
அங்கொடை தேசிய தொற்று நோய்கள் -ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவுக்கான புதிய கட்டிடம்
அங்கொடை தேசிய தொற்று நோய்கள் -ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவுக்கான புதிய கட்டிடம்
அங்கொடை தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவுக்காக (CT
Scanner Unit) கடற்படையின் பங்களிப்புடன் கட்டபட்ட இரண்டு மாடி கட்டிடம் 2020 ஜூன் 04 அன்று அதிகாரப்பூர்வமாக குறித்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஒரு பாராட்டத்தக்க வேலையைச்
செய்து வரும் சுகாதாரப் பணியாளர்களின் வசதிகளை மேம்படுத்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் நேரடி
மேற்பார்வையின் கீழ் பல திட்டங்கள் கடற்படை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முதன்மை கவனிப்பை வழங்குவதில் பெரும் பங்கு வகிக்கும் அங்கொடை
தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்திற்கு நீண்டகால தேவையாக இருந்த கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு இயந்திரம் (CT
Scanner) சுகாதார அமைச்சகம் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்ட பின்னர் 2020 ஏப்ரல் 10 ஆம் திகதி கடற்படை
கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவுக்கான கட்டடத்தின் கட்டுமானத்தை ஆரம்பித்ததுடன் 50 நாட்களுக்குள்
கட்டுமானத்தை முடித்து, மருத்துவ உபகரணங்களை நிறுவுவதற்காக 2020 மே 29 அன்று வைத்தியசாலை ஊழியர்களிடம் ஒப்படைத்துள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட கட்டிடத்தில் கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு இயந்திரம் நிறுவப்பட்ட பின்னர், கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவு 2020 ஜூன் 4
ஆம் திகதி அதிகாரபூர்வமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவம் அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னியராச்சி, சுகாதாரத்
துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் கடற்படைத் தலைமை பணியாளர் ஆகியோர் முன்னிலையில் வைத்தியசாலைக்கு
ஒப்படைக்கப்பட்டன, இந் நிகழ்வுக்காக அங்கொடை தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தின் அதிகாரிகள், மருத்துவ
பணியாளர்கள் மற்றும். கடற்படையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய சுகாதார அமைச்சர், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு முப்படையினர்
வழங்கிய பங்களிப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்ததோடு, இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் கடற்படை வழங்கிய சுகாதார சேவைகளைப் பாராட்டினர்.
மணல் கொள்ளையர்களுக்கு வைக்க பட்டுள்ள ஆப்பு
மணல் கொள்ளையர்களுக்கு வைக்க பட்டுள்ள ஆப்பு
கூடுதலான விலையில் மணலை விற்பனை செய்வோரின் மணல் நில உரிமையாளர்களுக்கான சுரங்க அனுமதிப்பத்திரம்
இரத்துச்செய்யப்படும் என்று புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் அறிவித்துள்ளது.
பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல இதுதொடர்பாக அறிக்கை ஒன்ரை விடுத்துள்ளார்.
அனுமதிபத்திரம் பெற்ற மணல் நில உரிமையாளர்கள் குறிப்பிட்ட கட்டணத்திலும்
பார்க்க கூடுதலான விலைக்கு மணலை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்
பிரிட்டனில் மருத்துவ மனைக்கு செல்பவர்கள் – கட்டாயம் முக கவசம் அணியவேண்டும்
பிரிட்டனில் மருத்துவ மணிக்கு செல்பவர்கள் – கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்
பிரிட்டனில் மருத்துவ மனைகளுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம்
அணிய வேண்டும் என பிரிட்டன் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
நாப்பது ஆயிரம் மக்கள் வரைக்கு கொரனோ வைரஸ் நோயினால் இறந்துள்ள நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது
இயல்பு நிலைக்கு மக்களை அழைத்து செல்ல அரசு முனைகிறது பொழுதும்
பீதியில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய வண்ணம் உள்ளதை வெறிச்சோடி கிடக்கும் வீதிகள் காண்பிக்கின்றன
துணிந்தவர்கள் என வேலைகளுக்கு சென்று வந்த பலர் பலியாகியும் உள்ளனர்
பிரிட்டன்,அமெரிக்காவில் இதுவரை இந்த நோயினால் இறந்தவர்களில் ஆசிய நாட்டவர்கள் ,அதாவது கறுப்பினத்தவர்களே அதிகம் என்பது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரனோ மரணம்
பிரிட்டனில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரனோ மரணம்
பிரிட்டனில் வேகமாக பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை நாற்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்
அதேபோல அமெரிக்காவில் 108 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்
உலகம் தழுவிய நிலையில் 67 லட்சம் மக்கள் பாதிக்க பட்டும் , நான்கு லட்சம் வரையில்
மக்கள் பலியாகியுள்ளனர்
தொடர்நது பல நாடுகளில் அடித்து பூட்டும் நிலவரம் தொடர்கிறது
பத்தாவது ஆண்டில் உச்சங்களை தொட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
பத்தாவது ஆண்டில் உச்சங்களை தொட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
பத்தாவது ஆண்டில் காலடி வைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், புதிய உச்சங்களை தொட்டவாறு தனது அரசவை
அமர்வினை கடந்த மே22,23ம் தேதிகளில் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.
2009, போரின் இறுதிக்கட்டத்தில் தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற போராட்ட வடிவத்தின் ஊடாக
ஜனநாயக வழியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவித்திருந்தனர். மதியுரைஞர்
குழுவின் வழிகாட்டுதலுக்கு அமைய 2010ம் மே18ம் நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது முதலாவது அரசவையினைக் கூட்டி இற்றைக்கு பத்து ஆண்டுகளை தொட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக அரசவை அமர்வினை நேரடியாக கூட்ட முடியாத நிலையில், இணையவழி தொழில்நுட்பத்தின் மூலம் கூட்டி, எத்தகைய
சவாலான காலத்திலும் விடுதலைக்கான போராட்டம் முன்னெடுக்கப்படும் என்ற உறுதியினை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த அமர்வின் தொடக்க நிகழ்வில் மத்திய தென்னமெரிக்க கயானா நாட்டு முன்னாள் அதிபர் Donald Ramotar அவர்கள் சிறப்பு
அதிதியாக கலந்து கொண்டு, ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான போராட்டத்துக்கான தமது தேசத்தின் தோழமையினை வெளிப்படுத்தியிருந்தார்.
முன்னராக மே18 தமிழீழத் தேசிய துக்க நாளின் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை கிழக்கு தீமோரின் முன்னாள் அதிபர்
முனைவர் ஹொசே ரமோஸ்-ஹோர்தா அவர்கள் கலந்து கொண்டு, தமிழீழ விடுதலைப் போராட்டதுக்கான தனது தோழமையினை வெளிப்படுத்தியிருந்தார்.
இதேவேளை அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் சிறப்பு பிரதிநிதிகளாக
- Stephen J. Rapp (அமெரிக்க அரசாங்கத்தின் போர்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் சிறப்புத்தூதர் United States Ambassador-at-Large for War Crimes Issues )
- Arvin Boolell (மொறிசியஸ் நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய எதிர்கட்சித்தலைவர்)
- Professor David.L .Phillips ( அமெரிக்காவின் கொலம்பிய பல்கலைக்கழகம் (Director,Peace-building and Rights Program
- Institute for the study of Human Rights- Columbia University,) பங்கெடுத்திருந்தனர்
இவ்வாறு தனது பத்தாவது ஆண்டில் தனது கடந்த கால இராஜதந்திர செயற்பாட்டின் உச்சத்தினை வெளிப்பாடுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இடம்பெற்றிருந்தது.
மேற்சபை உறுப்பினர்களுக்கும், அரசவை உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்றிருந்த கூட்டு கருத்துபரிமாற்றத்தின் போது, பல்வேறு செயற்திட்டங்கள் உரையாடப்பட்டிருந்தன. இதில்
குறிப்பாக தமிழர்களுக்கான உலகளாவிய வங்கி ஒன்றினை நிறுவுவது, கொரோனா வைரஸ் நெருக்கடியான நாடுகளுக்கு
தமிழர்களின் தோழமையினை வெளிப்படுத்தும் வகையில் தமிழர் மருத்துவ குழுவினை அனுப்புவது என செயற்திட்டங்கள் இனங்காணப்பட்டிருந்தன.
உலக அரசியல் வெளியில் நாடுகடந்த அரசியல் (Transnational Politics) என்ற கோட்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த வந்த பாதை, அதன் எதிர்காலம் எனும் தொனிப்பொருளில்
கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு அமைச்சுக்களும் தமது செயற்பாட்டு அறிக்கையினை சமர்பித்திருந்ததோடு,
அரசவை உறுப்பினர் பலரும் தமது கருத்துக்களையும் சபையில் முன்வைத்திருந்தனர்.
பல்வேறு அரசியல் பரிமாணங்களை கொண்டிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த முன்னெடுப்பினை இணைய
ஊடகங்கள் ஊடாகவும், சமூகவலைத்தளங்கள் ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்ததோடு பலரும் தமது
பாராட்டுதல்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தெரிவித்து வருகின்றனர்.

சிறுவன் மீது காவல்துறை அகோர தாக்குதல் – மக்கள் கொந்தளிப்பு
சிறுவன் மீது காவல்துறை அகோர தாக்குதல் – மக்கள் கொந்தளிப்பு
இலங்கையில் முஸ்லீம் இனத்தை சேர்ந்த 14 வயதுஸ் சிறுவன் ஒருவனை சிங்கள காவல்துறையினர் சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும் என மகிந்த மகன் நாமல் ,சங்ககாரா உள்ளிட்டவர்க்ள குரல் கொடுத்துள்ளனர்
போலீஸ் தலைமையகமும் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளது
சிங்கள காவல்துறையினர் ஊரடங்கு வேளையில் இவ்விதம் காட்டும் மிராண்டித்தனமாக மக்களை தாக்கி வருகின்றமை குறிப்பிட தக்கது

புத்தமதத்தின் போதனையின் அடிப்படையில் இலங்கையில் கொரனோவை வென்றோம் – மகிந்தா திமிர் பேச்சு
புத்தமதத்தின் போதனையின் அடிப்படையில் இலங்கையில் கொரனோவை வென்றோம் – மகிந்தா திமிர் பேச்சு
நாமனைவரும் நாடு என்றவகையில் ஒன்றிணைந்து செயற்பட்டமையினாலும், புத்தமதத்தின்போதனையின் அடிப்படையில் உயரிய பண்புகள், சடங்குகளைப்
பின்பற்றியமையினாலும் இலங்கை கொவிட் 19 தொற்றை வெற்றிகொள்ளும் பாதையில் பயணிக்க முடிந்துள்ளது என்று
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பொசொன் றோன்மதி தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தேசத்தை நாகரிகமடையச் செய்த முதிர்ச்சியடையச் செய்த தேசத்தை முன்னேற்றி பாதுகாத்த புத்த மதத்திற்கு அடிப்படையாக
அமைந்த புனித பொசொன் போயா தினம் இம்முறை இரண்டாயிரத்து முன்னூற்றி இருபத்தியெட்டாவது தடவை பிறக்கிறது.
இந்த தர்மவிஜய செய்தியுடன் அறியாமையினால் மங்கிப் போயிருந்த சிங்கள தீபம் சத்தியத் தத்துவம் காரணமாக பிரகாசம் பெற்று ஒளிவீசத் தொடங்கியது. அதன் மூலம் குறுகிய காலத்தில்
தூய கலாசாரத்தையும் கொண்ட நாகரிக மடைந்த தேசமாகமாற்றமடைந்தது. அதன் பிரதிபலனாக இந் நாட்டை ஒற்றுமைப்படுத்திய சிரேஷ்ட இளவரசர்கள், தீரமிகு தளபதிகள்
, காட்டிலிருந்த பாரிய கருங்கல்லில் அன்பு, கருணை, மன அமைதி போன்ற உயர்ந்த பண்புகளையும் சேர்த்துச் செதுக்கிய வியப்
பூட்டும் கலைஞர்கள், இயற்கையின் அழகை சொற்களில் வடித்த கவிஞர்கள் போன்றோர் இந்நாட்டை செழுமைப்படுத்தினர்.
இம்முறை பொசொனின் பிறப்புடன் உலக சுற்றாடல் தினமும் அதேதினத்தில் கொண்டாடப்படுகிறது. எமது மூதாதையரின் முழு உடம்பிலும் ஒன்றித்துப்போயிருந்த இந்த சிரேஷ்ட தத்துவம்
காரணமாக உயிரினங்கள் உட்பட இயற்கையின் அனைத்து அம்சங்கள் மீதும் நிதமும் அன்பு செலுத்தி, அவற்றைப் பாதுகாக்கின்ற பலமான தேசமொன்று தோற்றம் பெற்றது.
இன்று அதற்கு மாறாக நடந்துகொண்டமையினால் முழு உலகும் மீண்டும் தம்மை சுயவிசாரணை செய்துகொள்ள வேண்டும்
என்பதே கொவிட் – 19 தொற்று எடுத்துக்கூறும் முக்கிய பாடமாகும். நாமனைவரும் நாடு என்றவகையில் ஒன்றிணைந்து செயற்பட்டமையினாலும்,
புத்தமதத்தின் போதனையின் அடிப்படையில் உயரிய பண்புகள், சடங்குகளைப்பின்பற்றியமையினாலும் இலங்கை
அத்தொற்றுநோயை வெற்றிகொள்ளும் பாதையில் பயணிக்க முடிந்துள்ளது. இன்னும் சிறிய காலப்பகுதிக்குசுகாதார மற்றும்
பாதுகாப்புப் பிரிவினர் வழங்கும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் நாமனைவரும் செயற்பட வேண்டியுள்ளது
சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் — போக்குவரத்து அமைச்சு
சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் — போக்குவரத்து அமைச்சு
சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று
போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்தியவசியமற்ற பயணங்களுக்காக பொது சேவையினை பயன்படுத்த வேண்டாம் என போக்குவரத்து அமைச்சர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்வரும் தி;ங்கட்கிழமையில் இருந்து போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளன. இதன்போது சுகாதார ஆலோசனைகள் உரிய வகையில் அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்pத
போக்குவரத்து அமைசசர் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளுக்கு அனுமதி வழங்குவது கட்டாயமாகும்.
சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில்
பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. பஸ் மற்றும் ரயில்வே நிலையங்களில் கை கழுவுவதற்கான வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சகல பஸ் களிலும் ஆசனங்களில், 50 வீதமான பயணிகளுடன் பஸ் தனது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதேவேளை, பாடசாலை பஸ்கள் மற்றும் சுற்றுலா பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பஸ்களை தற்காலிகமாக பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களை பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயணிகள்
போக்குவரத்தில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படின் இந்த பஸகளை சேவையில் ஈடுபடுத்துவதாக அமைச்சர் மஹந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் வங்கிகளில் உள்ள பணத்திற்கு அரசு பொறுப்பு இல்லை-மக்கள் பணத்திற்கு ஆப்பு
இலங்கையில் வங்கிகளில் உள்ள பணத்திற்கு அரசு பொறுப்பு இல்லை-மக்கள் பணத்திற்கு ஆப்பு
அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் வைப்பீடுகளில் 6,00 000 ரூபாவுக்கு மாத்திரமே இலங்கை மத்திய வங்கி பொறுப்புக்கூறும்
நிதி நிறுவனமான த பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தலா 6 இலட்சம் ரூபாய் இழப்பீடு
வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்..
அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் வைப்பீடுகளில் 6,00 000 ரூபாவுக்கு மாத்திரமே இலங்கை மத்திய வங்கி பொறுப்புக்கூறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறான நிதி நிறுவனங்களில் 6,00 000 ஆறு இலட்சத்துக்கு மேற்பட்ட தொகையை வைப்பீடு செய்வது தொடர்பில் பொது
மக்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கிராம மக்கள் தமது பணத்தை வைப்பீடு செய்யும் கூட்டுறவு வங்கிகள் குறித்தும் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும்
இதுதொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருபபதாகவும் அமைசசர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நிதி நிறுவனங்கள் வீழ்ச்சி கண்டமையால்
சிரமங்களுக்குள்ளாகியுள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நேற்றைய அமைச்சரவைச கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது என்று தெரிவித்த அமைச்சர்
கௌரவ பிரதமரின் தலைமையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படதாகவும் தெரிவித்தார்.
இதன் போது , நிதி நிறுவனம் வீழ்ச்சியடைதல் மற்றும் மூடப்படுவதினால் வைப்பீட்டாளர்கள் எதிர்நோக்கும் சிரமம்
தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் மத்திய வங்கி ஆளுனரினால் எதிர்காலத்தில் நிதிநிறுவனங்களின் மீது
நம்பிக்கைத் தன்மையை ஏற்படுத்துவதற்கும் வைப்பீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் குறித்தும் சுட்டிக்காட்டப்படடுள்ளது.
த பினான்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையை கவனத்தில் கொள்ளும் பொழுது இந்த நிறவனம் ஏலமிடப்படும் வரையில் அந்த
நிறுவனத்தில் வைப்பீட்டாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அமைச்ர் கூறினார்.
மத்திய வங்கியினால் இந்த விடயம் தொடர்பாக பிரதமருக்கு அறிவிக்கப்பட்டதற்கு அமைய 93 வீதமான வைப்பாளர்களின்
பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதுடன் வைப்பீட்டாளர்களின் பணத்தை விதிகளுக்கு அமைவாக செலுத்துவதற்கு .நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இலங்கையில் இன்று சந்திர கிரகணம்
இலங்கையில் இன்று சந்திர கிரகணம்
இந்த வருடத்திற்கான (2020 ஆம் ஆண்டுக்கான) சந்திர கிரகணம் இன்று 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளது
இலங்கை நேரப்படி இன்று (05) இரவு 11.15 மணியளவில் சந்திர கிரகணம் ஆரம்பமாவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
அதிகாலை 2.34 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது. சந்திர கிரகணத்தின் உச்சம் நள்ளிரவு 12.54 க்கு இடமபெறும் என்றும் அவர் கூறினார்.
சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். இந்திய
நேரப்படி இன்று இரவு 11.15 மணி முதல்இ நாளை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும். வானிலையில் எந்த
மாற்றமின்றி தெளிவாக இருக்கும்பட்சத்தில் இந்தியாவில் இதனை முழுமையாக காண முடியும்.
அறிவியலின் படி சந்திர கிரகணம் என்பது எந்த பாதிப்புமற்ற பாதுகாப்பான ஒன்று. எனவே சந்திர கிரகணத்தை பார்க்க எந்த
முன்னெச்சரிக்கை மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் ஏதும் தேவையில்லை.
இருப்பினும் இந்திய புராணத்தின் படி சந்திர கிரகணத்தின் போது பல்வேறு அறிவுரைகள் மற்றும் செய்யக்கூடாதவை என்று சில விஷயங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி சந்திர
கிரகணத்தின் போது காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால், கிரகணத்தின் போது ஏற்படும் தீமையின் தாக்கத்திலிருந்து விலக முடியும். உணவுப்பொருட்களில் துளசி இலையை சேர்ப்பது
மற்றவர்களுக்கு யாசகம் வழங்குவது போன்றவற்றை செய்யலாம்.மேலும் சந்திர கிரகணத்தின் போது உணவு உட்கொள்ள கூடாது. கிரகணம் ஆரம்பிக்கும் 3 மணி நேரத்திற்கு முன் உணவு
எடுத்து கொள்ள வேண்டும். இந்தியாவின் பழமையான மரபுப்படி கிரகண நேரத்தின் போது வெளியே செல்லக்கூடாது.
இன்று உலக ஆக்கிரப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம்
இன்று உலக ஆக்கிரப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம்
குழுந்தைகளை பாதுகாப்போம்..
இனக்கலவரம் மதக்கலவரம் போர் வன்முறை போன்ற செயல்களால் அதிகம் பாதிக்கப்படுவது ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளும் பெண்களும் தான். போரின்போது பள்ளிக்
கட்டிடங்களே குறிவைத்து தாக்கப்படுகின்றன. அது மட்டும்மல்லவா வருமையிலும் குழந்தைகள் பாதிக்கின்றனர். என்று
கூறுகின்றார் உலக ஆக்கிரப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மலையக மக்கள்
முன்னணியின் தலைரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்…
தொடர்ந்து அவரது அறிக்கையில்
இன்று இலங்கை மலையகத்தில் குழந்தைகளின் பிறப்பு வீதம் குறைந்துந்துள்ளது. குழந்தைகளுக்கு மந்த போஷணம் அதிகரித்து வருகின்றது. மலையக குழந்தைகளின் இந்த பிரச்சனைக்கு தீர்வு
காணப்பட வேண்டும் பாடசாலைகளில் சத்தணவுத்திட்டம் அனைவருக்கும் கிடைக்க அரசு புதிய திட்டங்களை முன் வைக்க
வேண்டும். மலையகத்தில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தல் பாலியல் துஸ்பிரயோகம் காரணமாகவும் குழந்தைகள் நாளாந்தம் பாதித்து வருகின்றனர். இதற்கு எல்லாம் தீர்வு காணப்பட வேண்டும்
ஐ.நா.வின் முடிவுப்படி 1984-ஆம் ஆண்டிலிருந்து ஆக்கிரப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம் ஜூன் 4ஆம் தேதி இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த விடயம் மலையகத்தில் எத்தனை பேருக்கு தெரியும். மலையகத்தில் யுத்தம் நடைபெறாவிட்டாலும் இனக்கலவரம் உட்பட
பலவேறு காரணங்கினால் குழந்தைகள் நாளாந்தம் பாதிப்படைந்து வருகின்றனர். இதில் இருந்து நாமும் குழந்தைகளை பாதுகாப்போம் என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தள்ளா

பிரிட்டனில் மரக்கறிக்குள் 12 மில்லியன் போதவைஸ்து – லொறியை மடக்கி பிடித்த பொலிஸ்
பிரிட்டனில் மரக்கறிக்குள் 12 மில்லியன் போதவைஸ்து – லொறியை மடக்கி பிடித்த பொலிஸ்
பிரிட்டன் வாட அயர்லாந்து பகுதியில் மரக்கறி ஏற்றி வந்த குளிர் ஊட்ட
பட்ட லொறி ஒன்றுக்குள் சுமார் அறுநூறு கிலோ எடையுள்ள போதைவஸ்து
மறைத்து வைத்து எடுத்துவர பட்ட பொழுது காவல்துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது
போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இந்த மிக
பெரும் போதைவஸ்து கடத்தல் மடக்கி பிடிக்க பட்டுள்ளது,இதன் மொத்த
பெறுமதி சுமார் பன்னிரெண்டு மில்லியன் பவுண்டுகள் என தெரிவிக்க பட்டுள்ளது
,இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதுடன்
இந்த கடத்தலுடன் தொடர்புடைய குழுக்களும் கைது செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது

பிரிட்டன் பிரதமர் மீண்டும் தனிமை படுத்தல் – மயங்கி வீழ்ந்த அமைச்சர்
பிரிட்டன் பிரதமர் மீண்டும் தனிமை படுத்தல் – மயங்கி வீழ்ந்த அமைச்சர்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரனோ நோயில் சிக்கி சிகிச்சை
பெற்று வந்தார் ,அதன் பின்னர் குணமடைந்து தனது பணியை புரிந்து வந்தார் ,
அமைச்சர் ஒருவரை சந்தித்தன் பின்னர் ,குறித்த அமைச்சருக்கு கொரனோ
தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் மீளவும் தற்போது பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனிமை படுத் தலுக்கு உள்ளாக்க பட்டுளளார்
மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளார்
மீளவும் இந்த நோயானது பரவியுள்ளதா என்பது தொடர்பாக இதுவரை தெரியவரவில்லை , ஆசிய நாட்டை சேர்ந்த எம்பி ஒருவரே மயக்கம் உற்று வீழ்ந்தவர் ஆவர்
அவரும் தற்போது தனிமை படுத்த பட்டு சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளார்
இந்த சந்திப்பில் இருவரும் நோயின் அபாயகால ,சமூக இடைவெளியை இவர்கள் பின் பற்றவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது ,பிரதமருக்கு வந்த சோதனையை பாரு

வாழைச்சேனை கடதாசி உற்பத்தி செயற்பாடுகள்- மீண்டும் ஆரம்பம்
வாழைச்சேனை கடதாசி உற்பத்தி செயற்பாடுகள்- மீண்டும் ஆரம்பம்
வாழைச்சேனை கடதாசி ஆலை மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டது, சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் அபிவிருத்தி
அமைச்சர் விமல் வீரவன்ச கடதாசி ஆலைக்கு (30 மே) விஜயம் செய்து இயந்திரங்களின் இயக்கங்களையும் உற்பத்தியையும் நேரில் பார்வையிட்டார்.
அத்தோடு மற்றைய கடதாசி வகைகளின் உற்பத்திகளையும் விரைவாக ஆரம்பிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை
தெரிவித்ததாக கடதாசி ஆலையின் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், கடதாசி ஆலையின்
உற்பத்தி கடந்த 6 வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடதாசி ஆலை தனது உற்பத்தியின்
ஒரு பகுதியான ‘காட்போட்’ உற்பத்தியை இப்போது ஆரம்பித்துள்ளது.
இது இன்னும் ஓரிரு மாதங்களில் கடதாசி உற்பத்தியில் இறங்கிவிடும். எமது நாட்டின் கடதாசித் தேவையின் 78 விகித்தை
இது நிறைவு செய்திருந்தது. இதனுடைய அப்போதைய ஆளணி 3000 ஆகும். இதன் திருத்த வேலைகளை பாதுகாப்புப் படையின்
கடற்படை, இராணுவம் என்பன இந்திய பொறியியலாளர்களின் ஆலோசனையோடு நிறைவேற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கோட்டா பெயரில் மோசடி செய்த நபர் கைது
கோட்டா பெயரில் மோசடி செய்த நபர் கைது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கையொப்பத்தையும் கடிதத் தலைப்பையும் மோசடியாக பயன்படுத்திய ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் இலக்கம் 531, சுந்தராபொல வீதி, யத்தன்பலாவ, குருணாகலை முகவரியில் வதியும் ஈ.எம்.பீ.ஏ குமார என்பவராகும்.
பணித் தடைக்கு உள்ளாகியுள்ள அவர் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பதவியுயர்வுகளுடன் மீண்டும் சேவையில் அமர்த்துமாறு
குறிப்பிட்டு ஜனாதிபதி அவர்களின் கடிதத் தலைப்பையும், ஜனாதிபதி அவர்களின் கையொப்பத்துடன் எழுதப்பட்டுள்ள
கடிதமொன்றையும் இலங்கை வங்கி தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அது போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குமார என்பவரை வங்கி தலைமையகத்திற்கு அழைத்ததன்
பின்னர் நேற்று (03) கைது செய்யப்பட்டார். ஆவணத்தை தயார் செய்வதற்கு பயன்படுத்திய மடிக் கணினி மற்றும் ஏனைய
உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவரை நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 08 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது
மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்
இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென் மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது
மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து
ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது
மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளும் காலியிலிருந்து
ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
வனமி’ இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
வனமி’ இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட
வடமேல் மாகாணத்தில் ‘வனமி’ இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த மாகாணத்தில் பல ஆண்டுகளாக இறால் செய்கை பலதரப்பட்டவர்களாலும் முன்னெடுக்கப்பட்டுவந்த போதிலும்
அவை விஞ்ஞானபூர்வமான பொறிமுறைகளை கொண்டு மேற்கொள்ளப்படாமையால் பெரும் நட்டங்களை செய்கையாளர்கள் சந்திக்க நேரிட்டது.
ஆனாலும் குறித்த மாகாணத்தில் நவீன வசதிகளுடன் விஞ்ஞான பொறிமுறைகளை உள்ளடக்கிய வகையில் பொதுவான இறால்
செய்கையை மேற்கொள்ளக் கூடிய இடங்களில் முன்னெடுத்தால் அதிக விளைச்சலை பெற்றுக்கொள்ளக்கூடிய ஏதுநிலை உள்ளதால்
அதற்கான பொறிமுறைகளை உள்ளடக்கிய ‘வனமி’ இறால் செய்கை திட்டத்தை முன்னெடுப்பதற்கான அனுமதியை அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் கோரிக்கையாக சமர்ப்பித்திருந்தார்.
இந்நிலையில் நேற்றையதினம் அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வைத்த ‘வனமி’ இறால் செய்கை
ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
இலங்கை மத்திய வங்கியின் 2019 ஆம் ஆண்டுக்கான அறிக்கை மத்திய வங்கி ஆளுநர் சுஜீவ ராஜபக்ஷவினால் பிரதமர் மஹிந்த
ராஜபக்ஷவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
பிரதமரின் விஜேராம இல்லத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. மத்திய வங்கியின்
பதில் பொது முகாமையாளர் பொனிபஸ் சில்வா,மற்றும் அஸாம் அஹமட் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
முல்லையில் தொடர் தற்கொலைகள் – நடப்பது என்ன ..?
முல்லையில் தொடர் தற்கொலைகள் – நடப்பது என்ன ..?
அம்பலவன் பொக்கணை கிராம அலுவலர் பிரிவின் மாத்தளன் பகுதியில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில்
மீட்கப்பட்டு வைத்தியசாலை கொண்டு சென்றபோதும் அவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அம்பலவன் பொக்கணை கிராமத்தினை சேர்ந்த 15 அகவையுடைய கிருஸ்மூர்த்தி துஸ்யந்தன் (மதுசன்) என்ற சிறுவனே இவ்வாறு
தவறான முடிவினால் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளான்.
நேற்று காலை வீட்டில் இருந்து விளையாடிய சிறுவன் தாயார் கடற்கரைக்கு தொழிலுக்காக சென்ற நிலையில் தந்தையார்
வீட்டிற்கு வெளியே உறங்கிக்கொண்டிருந்த நிலையில் சிறுவன் தூக்கிட்டுள்ளான் .
தாயார் வேலை முடிந்து வீடு வந்து பார்த்தபோது சிறுவன் தூங்கிய நிலையில் காணப்பட்டுள்ளான்.
உடனடியாக சிறுவனை மீட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை எடுத்து சென்றபோதும் சிறுவன் உயிரிழந்துள்ளான் என வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார்கள்
இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
சிறுவனின் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது







