Posted in இலங்கை செய்திகள்

தமிழர் பகுதியில் 4 கொரோனா வைத்தியசாலைகள்

தமிழர் பகுதியில் 4 கொரோனா வைத்தியசாலைகள்

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக, கிழக்கு மாகாணத்தில் உள்ள நான்கு

வைத்தியசாலைகள் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுத் தொடர்பில் சுகாதார அமைச்சுப் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சுகாதாரப்

பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன், மாவட்டம் தோறும் ஒரு வைத்தியசாலையை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தும்

திட்டத்திற்கு அமையவே இவ்வாறுப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக, கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை,

கல்முனை உள்ளிட்டச் சுகாதாரப் பிரிவுகளில் உள்ள வைத்தியசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

ஆடை தொழிற்சாலையின் 119 பேரை தேடும் பொலிஸ்

ஆடை தொழிற்சாலையின் 119 பேரை தேடும் பொலிஸ்

பிரன்டிக்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்த மேலும் 119 பேர் தொடர்பில் விசேடமாக

தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கம்பஹா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் கொவிட் 19 நிலைமை தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினத்தில் (09) குறித்த எண்ணிக்கை சுமார் 250 ஆக

காணப்பட்ட நிலையில் அதனை குறைத்துக் கொள்ள கூடியதாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

குறித்த நபர்களை தேடுவதற்காக பாதுகாப்பு பிரிவினால் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த நபர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தல் அல்லது சுகாதார

நிலையங்களுக்கு அனுப்பி வைக்க சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில்

கம்பஹா மாவட்டத்தினுள் கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த கூடியதாக இருக்கும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகர், கெப்டன் விகாஷ் சூட், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று (ஒக்டோபர்,09) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் இருதரப்பு

உறவுகளை சுட்டிக்காட்டிய கெப்டன் விகாஷ், அண்மையில் நீயூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு “ஒபெரேசன்ஸ்

சாகர் ஆரக்ஷா” நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக நிறைவுசெய்தமைக்கு தனது பாராட்டினையும் தெரிவித்தார்.

குறித்த பணியினை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்லும் வகையில் ஒத்துழைப்பு வழங்கிய இந்திய அரசுக்கு நன்றி

தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், இரு நாடுகளுக்கிடையேயான துரித செயற்பாடு மற்றும் தீவிர நடவடிக்கை காரணமாக கடல்சார்

கூட்டுறவின் முக்கியத்துவம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடல் வளங்கள், கடல்வாழ் இனங்கள், சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடி வளங்களை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட

கடற்படை ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேஜர் ஜெனரல் குணரத்ன இதன்போது பாராட்டினார்.

இதேவேளை, மாற்றுத்திரனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இந்தியாவின் ஜெய்பூர் செயற்கை கால்கள் தயாரிப்பு

தொடர்பாக இலங்கைக்கு அறிமுகம் செய்வது தொடர்பில் கெப்டன் விகாஷ் இதன்போது கலந்துரையாடினார்.

மேலும் இங்கு இடம்பெற்ற சினேகபூர்வமான கலந்துரையாடலில், இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர செயற்பாடுகள் குறித்து

இரு உயர்மட்ட அதிகாரிகளினாளும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் மீது பொலிசார் தாக்குதல் video

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் மீது பொலிசார் தாக்குதல் video

இலங்கைத் தமிழரகசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஜெயக்குமார் மீது


பொலிஸ் உப பரிசோதகரும் கிளிநொச்சி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியுமான


ஜெசிந்தன் கிளிநொச்சி பொதுச் சந்தை வளாகத்தில் வைத்து நேற்றைய தினம்


தாக்குதல் மேற்கொண்டுள்ளார்

ஜெயக்குமார் ஒரு முன்னாள் போராளி ,மாற்றுத்திறனாளி என்பதுடன் அவர் ஒரு
சந்தை வர்த்தகரும் கூட

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

நேற்றைய தினம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் தந்து மரக்கறி வாணிபத்தில்


வியாபாரம் செய்து கொண்டிருந்த தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு
உறுப்பினர் ஜெயக்குமார் மீது சிவில் உடையில் இருந்த பொலிஸ் உப


பரிசோதகரும் கிளிநொச்சி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியுமான ஜெசிந்தன்


இழுத்து விழுத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்

நேற்றைய தினம் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு விஜயம் மேற்கொண்ட ஜெசிந்தன்


தலமையிலான பொலிஸ் குழுவினர் சந்தை வர்த்தகர்களிடம் முகக்கவசம் அணியுமாறு


அறிவுறுத்திச் சென்றிருந்தனர் மீண்டும் 5 நிமிடத்தில் வந்த அவர்கள்
ஜெயக்குமாரிடம் ஏன் முகக்கவசம் அணியவில்லை என கேட்டுள்ளார்கள்

நண்பகல் என்பதால் நுகர்வோர் அதிகமாக இருக்கிறார்கள் கடையை இப்படியே


விட்டு செல்ல முடியாது அதனை விட ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி எனது


உதவியாளர் வருகைக்காக காத்திறுக்கின்றேன் என பதிலளித்துள்ளார்

உனக்கு கடைக்கு போய் வாங்குவதற்கு என்ன என்று கேட்டவாறூ சிவில் உடையில்


இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாற்றுத்திறனாளியான ஜெயக்குமா ரை இழுத்து
வீழ்த்தி தாக்கியுள்ளார்

தாக்குதலுக்குள்ளான தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுஉறுப்பினரும் சந்தை


வர்த்தகருமான ஜெயக்குமார் கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபர்


காரியாலயத்திலும் மனித உரிமை ஆணைக் குழுவிலும் தனது முறைப்பாட்டை பதிவு
செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தாக்குதல் காணொளி இணைக்கப்பட்டுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பாடசாலையில் பிறந்த நாள் வாழ்த்து பாட தடை – அதிர்ச்சியில் மாணவர்கள்

பிரிட்டனில் பாடசாலையில் பிறந்த நாள் வாழ்த்து பாட தடை – அதிர்ச்சியில் மாணவர்கள்

பிரிட்டனில் வகுப்பறைகளில் மாணவர்களின் பிறந்த நாள்

நிகழ்வின் பொழுது ,அவர்களுக்கு வாழ்த்து பாட தடை விதிக்க பட்டுள்ளது ,

இவ்வாறான செயல் ஊட்டம் மூலம் தற்கால ரீதியில் பரவி வரும் நோயின்

தாக்குதல் அதிகரித்து வரும், நிலையில் இந்த தடை உத்தரவு வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 15,166, பாதிப்பு -81 பேர் பலி

பிரிட்டனில் 15,166, பாதிப்பு -81 பேர் பலி

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் பாதிப்பில் சிக்கி 15,166 பேர்

பாதிக்க பட்டுள்ளனர் .மேலும் 81 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 2400

க்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுகிறது .

மேலும் எதிர்வரும் வாரத்தின் இருந்து நாள் ஒன்றுக்கு 40

ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

தொடர்ந்து வரும் குளிர்கால நிலவரத்தை அடுத்து மேலும் நோயின் தாக்குதல்

அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

9 பிள்ளைகளினால் துரத்த பட்ட வயதன தாய் – இப்படியும் பிள்ளைகள்

9 பிள்ளைகளினால் துரத்த பட்ட வயதன தாய் – இப்படியும் பிள்ளைகள்

இந்தியா தமிழகத்தில் எழுபத்தி ஐந்து வயதன ஒன்பது பிள்ளைகளின்

தாய் ஒருவர் அவரது ஐந்து ஆண் பிள்ளைகள் மற்றும் நான்கு பெண் பிள்ளைகளினால் வீட்டை விட்டு துரத்தியடிக்க பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது

அரசு வழங்கும் ஆயிரம் ரூபா பணத்தை வைத்து மக்கள் வழங்கும் உணவை வைத்தும் தனது வாழ்வை ஒட்டி வருகின்றார் .

தமது மனைவிகள் மற்றும் ,கணவன்களுடன் இனைந்து தனது வீட்டை

அபகரித்து அங்கிருந்து துரத்தியடித்து விட்டதாக வயதான தாயார் தெரிவித்துள்ளார்

இது குறித்து காவல்துறையிடம் இரண்டு வருடங்களுக்கு முன் வழங்கிய

புகாரினை விசாரிக்கும் படி கோரிய நிலையில் ,மேற்படி விடயங்கள்

ஊடகங்களில் பரவியத்தை அடுத்து தற்பொழுது போலீசார் தீவிர விசாரணைகளை

மேற் கொண்டு வருவதுடன் தாயாரை கொடுமை படுத்திய குற்ற சாட்டின் கீழ் பிள்ளைகள் கைது செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது

9 பிள்ளைகளினால் துரத்த பட்ட
9 பிள்ளைகளினால் துரத்த பட்ட
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் பொலிஸ் காரை திருடி சென்ற திருடர்கள் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பிரிட்டனில் பொலிஸ் காரை திருடி சென்ற திருடர்கள் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதியில் காவல்துறை சிப்பாய் ஒருவர் நபர் ஒருவரை

பின் தொடர்ந்து துரத்தி சென்றனர் ,அவ்வேளை அவரை மடக்கி பிடிக்க

தமது காரினை வீதியில் விட்டு விட்டு குறித்த நபரை துரதியுள்ளனர் ,ஆனால்

திருடன் ஒருவன் போலீஸ் காரை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளார்

காவல்துறை காரை திருடிய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

,தொடர்ந்து திருடர்கள் எதாவது வில்லங்க தனம் செய்ய கூடும் என்பதால் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

மக்களே யாக்கிரதை ,தொடர்ந்து இது தொடர்பான விடயத்தை தம் அறிய

தந்த வண்ணம் இருப்போம் என தெரிவிக்க பட்டுள்ளது ,இவர்கள் சிலவேளை

இந்த காரினை தீவிரவாத செயலுக்கும் பயன் படுத்த கூடலாம் ,காரில்

காவல்துறை உடை இல்லாது யாராவது அந்த காரில் இருந்தால் உடனே பொலிசாருக்கு தெரிய படுத்துங்கள் ,போலீசுக்கே ஆப்பா ..? செம திருடன்யா

Posted in இலங்கை செய்திகள்

514 அதிகாரிகள் மற்றும் 14140 ஏனைய இராணுவ சிப்பாய்கள் பதவி உ யர்வு

514 அதிகாரிகள் மற்றும் 14140 ஏனைய இராணுவ சிப்பாய்கள் பதவி உ யர்வு

இலங்கை இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தற்பொழுது

514 அதிகாரிகள் மற்றும் 14140 ஏனைய இராணுவ சிப்பாய்கள் தங்கள் பதவி உயர்வுகளைப் பெற்றுள்ளனர்.

அதன்படி, நான் இராணுவத் தளபதியாக பதவியேற்றதிலிருந்து 1897 அதிகாரிகள்

மற்றும் 41910 இராணுவ சிப்பாய்கள் அவர்களின் அடுத்தடுத்த பதவிகளில்

உயர்த்தப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

20 தொடர்பான உயர் நீதிமன்ற நிலைபாடு சபாநாயகரிடம்

20 தொடர்பான உயர் நீதிமன்ற நிலைபாடு சபாநாயகரிடம்

20 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்த மூலத்திற்கு எதிராக தாக்கல்

செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான இரகசிய நிலைபாடு தனது அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை அலுவலகத்திற்கு சென்று அதனை திறந்து பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில்

குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

குறைந்த வருமான பெறுபவர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம்

குறைந்த வருமான பெறுபவர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம்

கொவிட் 19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள சமுர்த்தி மற்றும் குறைந்த வருமான

பெறுபவர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தொடர்ந்து தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு நிலையில் இந்த நிலமை

தொடர்ந்து நீடித்தால் அவர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை

எடுப்பதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

வரணி பகுதி கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு

வரணி பகுதி கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு

யாழ். தென்மராட்சி வரணி பகுதியில் உள்ள அந்தோணியார் தேவாலய கிணற்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

வரணியில் அமைந்துள்ள குறித்த அந்தோணியார் தேவாலயத்தின் திருவிழா ஆரம்பமாக உள்ள நிலையில் இன்று (09) கிணறு துப்பரவு செய்யப்பட்டது.

இதன்போது சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் இருப்பதை அறிந்து

பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதையடுத்து அக்கிணற்றில்

இருந்து இன்று மாலை ஒரு தொகுதி வெடி பொருட்கள் கொடிகாமம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

12 மோட்டார் குண்டுகளும் ஒரு கைக்குண்டு என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெடி பொருட்கள் மீட்கப்பட்ட வரணி அந்தோணியார் தேவாலய வளாகத்திற்கு முன்பாக இராணுவ முகம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 533 பேர் பலி – 422 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் 533 பேர் பலி – 422 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் உள் நாட்டு மோதல்களால்

சிக்கி கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 533 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் 422 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,ஆப்கான் இராணுவத்திற்கும்

,தாலிபான் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்று வந்த மோதல்களில்

சிக்கியே இவர்கள் பலியாகியுள்ளதாக தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது

Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய வெதுப்பகம் =- கருகி இறந்த நால்வர்

வெடித்து சிதறிய வெதுப்பகம் =- கருகி இறந்த நால்வர்

லெபனான் தலைநகர் பேரூட் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றின்

டீசல் தாங்கி வெடித்து சிதறியதால் அந்த வெதுப்பகம் முற்றாக

பற்றி எரிந்தது ,இதனால் அங்கு பணியாற்றிய நால்வர் தீயில் கருகி பலியாகினர்

இந்த சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

வெடித்து சிதறிய வெதுப்பகம்
வெடித்து சிதறிய வெதுப்பகம்
Posted in உலக செய்திகள்

துருக்கி எல்லையில் ஒருவர் சுட்டுக் கொன்று ஈரான் இராணுவம் வெறியாட்டம்

துருக்கி எல்லையில் ஒருவர் சுட்டுக் கொன்று ஈரான் இராணுவம் வெறியாட்டம்

கிழக்கு குருதீஸ்தான் பகுதியில் இருந்து துருக்கி எல்லைவலியாக நுழைய

முயன்ற ஒருவரை ஈரானிய இராணுவத்தினர் சுட்டு படுகொலை செய்துள்ளனர்

பலத்த காயமடைந்த நிலையில் அப்பாவி பொதுமகன் சிகிச்சை வழங்க

பட்ட பொழுதும் அது பயனின்றி அவர் பலியாகியுள்ளார்
சட்டவிரோத

குடியேற்ற வாசிகளும் இவ்விதம் நுழைந்து,இராணுவ சூட்டு

தாக்குதலில் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் மரண வீட்டில் குவிந்த கூட்டம் – பனாட்டி அடித்த பொலிஸ்

பிரிட்டனில் மரண வீட்டில் குவிந்த கூட்டம் – பனாட்டி அடித்த பொலிஸ்

பிரிட்டன் ஐரீஸ் பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரணமாகியுள்ளார்

,அவரது இறுதி பிரியாவிடையின் பொழுது பலநூறு மக்கள் கூடியதுடன்

விமானத்தில் ஐரீஷ் கொடி வானில் பறக்க விட்ட படி அவரது இறுதி ஊரவலாம் எடுத்து செல்ல பட்டது ,

வானில் விமானம் வழித்துணை வழங்கி அஞ்சலிக்க, விலை உயர்ந்த கார்கள் பவனி வர குதிரையில் சடலம் எடுத்து செல்ல பட்டது

அரச விதிமுறைகளை மீறி பலநூறு மக்கள் கூடியதால் நிகழ்வு நடத்தியவர்களுக்கு தண்டம் அறவிடபட்டது

போலீசாரை புகுந்ததினால பரபரப்பட்டு ஏற்பட்டது

மக்களை காப்பாற்றும் முகமாக 15 பேருக்கு மேல் கூடிட வேண்டாம் என

அறிவுறுத்தல் விடுக்க பட்ட பொழுதும் ,அதனை மீறி மக்கள் இவ்விதம் கூடி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

வேகமாக பரவும் கொரனோ – புதிதாக 16 பேர் பாதிப்பு

வேகமாக பரவும் கொரனோ – புதிதாக 16 பேர் பாதிப்பு

இலங்கையில் மிக வேகமாக பரவி வருகிறது கொரனோ ,இவ்வேளை

ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் உள்ளிட்ட பதினாறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்கள் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் ,


மேலும் பாதிக்க பட்ட இடங்களுக்கு மக்கள் செல்வதற்கு தடை விதிக்க

பட்டுள்ளதுடன் ,அப்பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் அடித்து பூட்ட பட்டு வருகிறது

இவ்வேளை இலங்கை எங்கும் வெளிநாட்டு சாராய கடைகள்

,காசினோக போன்றவை நடத்த 31 ஆம் திகதி வரை தடை விதிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பப்பா ஜோன்சன் பிட்சா நிறுவனம் 250 ஆயிரம் மோசடி – மடக்கிய வருமான வரித்துறை

பிரிட்டனில் பப்பா ஜோன்சன் பிட்சா நிறுவனம் 250 ஆயிரம் மோசடி – மடக்கிய வருமான வரித்துறை

பிரிட்டனில் புகழ் பெற்று விளங்கும் பாப்பா ஜோன்சன் பிட்சா நிறுவனம் ஒன்று வரி ஏய்ப்பு செய்து சிக்கியுள்ளது

கொரனோ பொருட்களை வாங்குவதற்கு அரசு வாழங்கிய பவுச்சர் ஊடாக இடம்பெற்றுள்ளது

நாள் ஒன்றுக்கு இவர்கள் ஐநூறு முதல் ஆயிரம் வரை அல்லது வாரம் ஒன்றுக்கு

பத்து ஆயிரம் பவுண்டுகளை இலக்கு வைத்து இந்த மோசடி இடம்பெற்றுள்ளது

இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரம் பவுண்டுகள் வரி ஏய்ப்பு செய்த நிலையில் வருமான வரித்துறையினர் சந்தேகம் அடைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்

குறிப்பாக ஒரு நிமிடத்தில் 16 ஆடார்கள் இவ்விதம் இடம்பெற்றுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,


தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகிறது ,அங்கு பணி புரிந்த தொழிலார்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது

,மேலும் குறித்த நிறுவனம் பெரும் மோசடியில் சிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

முக்கிய ஊடகம் ஒன்று இந்த விடயத்தை மேப்பம் பிடித்த நிலையில் மேற்படி சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் பாப்பா ஜோன்சன்
பிரிட்டனில் பாப்பா ஜோன்சன்
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது

இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது

இந்தியா தமிழகத்தில் 16 வயதுடைய இளம் பெண் ஒருவரை கடத்தி

சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த வாலிபர் ஒருவர்

காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார் ,

இவர் மீது கடத்தல் ,கற்பளிப்பு குற்ற சட்டது கீழ் வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது

,சிறுமி மீட்க பட்டு பெற்றவர்களிடம் ஒப்படைக்க பட்டுள்ளார்

,மேற்படி சம்பவம் அந்த பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

ஆற்றில் மிதந்த பெண் சிசு – பொலிஸ் குவிப்பு

ஆற்றில் மிதந்த பெண் சிசு – பொலிஸ் குவிப்பு

தமிழகத்தில் ஆறு ஒன்றும் குளித்து கொண்டிட்ருந்த நபர்களுக்கு பெரும்

அதிர்ச்சி காத்திருந்தது ,அதில் பிறந்த பெண் சிசு ஒன்று தொப்பிள்

கொடியுடன் மிதந்து வருவதை கண்டு அதிர்ச்சி உற்றனர்

இது குறித்து போலீசாரிடம் தெரிவித்த நிலையில் போலீசார்

சடலத்தை மீட்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கள்ள காதல் ஊடாக பிறந்த சிசு இவ்விதம் கொலை செய்ய பட்டு ஆற்றில் வீச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது

இதுவரை எவரும் கைது செய்ய படவில்லை