Posted in Uncategorized

ஜேர்மன் சுவிசில் இருந்து 24 பேர் இலங்கைக்கு நாடு கடத்தல்

ஜேர்மன் சுவிசில் இருந்து 24 பேர் இலங்கைக்கு நாடு கடத்தல்

இலங்கையில் இருந்து முகவர்கள் ஊடக ஜெர்மனி மற்றும் சுவிஸ் நாட்டுக்கு அகதிகளாக

சென்றடைந்த 24 தமிழர்கள் இன்று இலங்கைக்கு நாடு கடத்த பட்டுள்ளனர்

இருபது பேர் ஜெர்மனியில் இருந்தும் நான்கு பேர் சுவிட்சார்லாந்தில் இருந்தும் நாடு கடத்த பட்டுள்ளனர்

இலங்கையில் ஆளும் தமிழ் இனக் கொலையாளிகளினால் பெரும் அச்சறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் மேற்படி தமிழர்கள் நாடு கடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    புலிகள் தங்கம் தோண்டிய ஐவர் கைதாம் – புலி பீதியை கிளப்பும் சிங்களம்

    புலிகள் தங்கம் தோண்டிய ஐவர் கைதாம் – புலி பீதியை கிளப்பும் சிங்களம்

    இலங்கை வட்டகச்சி மாயவனூர் பகுதியில் புலிகளினால் மறைத்து வைக்க பட்ட தங்கத்தை தேடி குழிகள் வெட்டிய ஐந்து நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

    புதையல் தோண்டுகிறார்கள் என கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

    ஐநாவில் இலங்கை அரச இனப்படுகொலை இறுக்கம் பெற்று வரும் நிலையில் இவ்விதமான புலி

    பீதியை ஆளும் அசிங்கள பவுத்த இனவாதம் கட்டவிழ்த்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      வெளிநாட்டு ஆசையுடன் வந்த தமிழ் வாலிபன் – இடையில் குளிரில் இறந்த பரிதாபம்

      வெளிநாட்டு ஆசையுடன் வந்த தமிழ் வாலிபன் – இடையில் குளிரில் இறந்த பரிதாபம்

      இலங்கை யாழ்பாணத்தில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்குள் நுழையும் முகமாக ஏயன்ஷி

      மூலம் பணம் கட்டி வருகை தந்த தமிழ், வாலிபர் ஒருவர் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் வழியில் குளிரில் சிக்கி இறந்துள்ளார்

      பல கனவுகளை சுமந்து பயணித்த வாலிபர் சடலமாக தனது நாட்டுக்கு சென்ற சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

      வெளி நாட்டு வாழ்வு இவ்வாறு உள்ளதும் ,அங்கு மக்கள் எவ்வாறு வாழ்கின்றனர் ,கொடிய குளிர் என்பதை எல்லாம்

      தெரிந்து கொளளது உள்ள பெற்றோர்கள் முட்டாள் தனமான சிந்தனையால் இவ்விதம் தமது பிள்ளைகளை பறிகொடுத்து வருவது வேதனை தருகிறது

      இலங்கையில் யுத்தம் இல்லை என வெளி நாடுகளில் அகதி தஞ்சம் கோரியவர்களை அனுப்புகின்ற

      செய்திகள் வெளிவருகின்ற பொழுது அவற்றை கண்டு கொளளது நடந்தேறியதன் விளைவு ஒரு அப்பாவி உயிர் பலியாக காரணமாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        யாழில் வெளிநாட்டவர் காணிகளை பிடிக்கும் சிங்கள கூலிகள்

        யாழில் வெளிநாட்டவர் காணிகளை பிடிக்கும் சிங்கள கூலிகள்

        யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பகுதிகளில் உள்ள வெளி நாடுகளில்,.வசிக்கும் தமிழர்களின் காணிகளை விதானையின் ஆதரவுடன் கண்டறிந்து

        மக்கள் அற்று ,அநாதரவாக உள்ள காணிகளை தாமதாக்கி அங்கு சிங்களவர்களை குடியேற்றும் நகர்வில் சிங்கள பவுத்த பேரினவாதிகள் ஈடுபட்டுள்ளனர் .

        இவர்களின் இந்த செயல் பாட்டுக்கு அஞ்சி சில மக்கள் சென்றுள்ளதும் ,இந்த விடயத்தினை அறியாது பல மக்கள் உள்ளதாக அங்கிருந்து வரும் இரகசிய தகவல்கள் நமக்கு தெரிவித்தன

        எனவே இவ்வாறான வெறும் காணிகளை அடைத்து உங்கள் காணிகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மக்களே பாதுகாத்து கொள்ளுங்கள்

        தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு ஆபத்து ,தமிழர்களே உசார்

          Posted in Uncategorized

          கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த நபர் சிக்கினார்

          கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த நபர் சிக்கினார்

          இலங்கையில் இருந்து கனடாவுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தை கூறிய நபர் ஒருவரிடம் முப்பது லட்சம் ரூபாயினை மோசடி புரிந்த நபர் ஒருவர் சிக்கினார்

          பணத்தை பெற்றதும் இவர் திடீரென தலை மறைவாகியுள்ளார் ,பாதிக்க பட்டவர் பொலிசாருக்கு வழங்கிய தகவலை

          அடுத்து இருபத்தி ஒன்பது வயதுடைய அந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார் ,இவ்வாறு பலர் போலி

          எய்னச்சிகளாக உருவாகி பல லட்சம் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          இந்தியா இராணுவத்தால் -ஆயுதங்களுடன் பிடிக்க பட்ட இலங்கை மீன்பிடி படகு

          இந்தியா இராணுவத்தால் -ஆயுதங்களுடன் பிடிக்க பட்ட இலங்கை மீன்பிடி படகு

          தென் இந்திய கடற் பரப்பில் பயணித்து கொண்டிருந்த மீன் பிடி படகு ஒன்றின் மீது ஏற்பட்ட

          சந்தேகத்தை அடுத்து அந்த படகை சுற்றிவளைத்த இந்திய கடலோர காவல்படையினர்
          படகை சோதனை செய்தனர்

          அப்பொழுது அந்த படகில் 300 கிலோ கொக்கையின் போதைவஸ்து மற்றும் ,ஐந்து ஏகே ரக துப்பாக்கிகள் ஆயிரம் ரவைகள் ,மாற்றும் கை துப்பாக்கிகள் என்பன மீட்க பட்டுள்ளன

          இவ்விதம் மூன்றாவது முறையாக ஆயுதங்களுடன் இவ்விதமான படகு சிக்கியுள்ளதும் ,குறித்த படகில் சென்றவர்கள்

          மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இந்த கடத்தல் காரர்களின் பின்புலத்தில் அரசியல்வாதிகள் இருக்கலாம் என நம்ப படுகிறது

            Posted in Uncategorized

            இலங்கைக்கு சீனா வழங்கும் ஆறு லட்சம் தடுப்பூசி – போலியானதா ..?

            இலங்கைக்கு சீனா வழ்ஙகும் ஆறு லட்சம் தடுப்பூசி – போலியானதா ..?

            இலங்கை மக்களுக்கு உதவும் முகமாக சீனா தயாரித்துள்ள ஆறு லட்சம் தடுப்பூசிகள் இன்று இலங்கை வருகின்றன


            இந்த ஊசிகள் கிடைக்க பெற்றதும் துரித வேகத்தில் மக்களுக்கு செலுத்த படும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

            இந்தியா வழங்க நிலையில் அதற்கு போட்டியாக சீனாவும் இப்பொழுது இந்த ஊசிகளை வழங்குகிறது

            சீனா வழங்கிய கொரனோ சோதனை கருவிகள் போலியானவை என இலங்கை தெரிவித்து

            இருந்த நிலையில் இன்று வருகின்ற ஊசிகளும் அவ்விதம் போலியானதாக அமைய கூடும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்

            Posted in இலங்கை செய்திகள்

            கொழும்பில் தூண்கள் மேல் ஓடும் ரயில் சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை

            கொழும்பில் தூண்கள் மேல் ஓடும் ரயில் சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை

            கொழும்பு நகரில், தூண்கள் மேல் ஓடும் புதிய ரயில் கட்டமைப்புகளை நிர்மாணிக்க, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

            கொழும்பு நகரை மையப்படுத்தி, அரச மற்றும் தனியார்த் துறையினர் ஒன்றிணைந்த வேலைத்திட்டமாக

            4 ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக, அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

            சிவப்பு, பச்சை, நீலம், நாவல் ஆகிய நான்கு வர்ணங்களில் இந்த நான்கு ரயில் பாதைகளும் பெயரிடப்பட்டுள்ளன

            என்றும் தெரிவித்த அவர், 42 கிலோ மீற்றர் நீளமுடைய சிவப்பு ரயில் பாதை, ராகம முதல் புறக்கோட்டை ஊடாக கொட்டாவை வரை நிர்மாணிக்கப்படவுள்ளது.

            28 கிலோ மீற்றர் நீளமான பச்சை ரயில் பாதை, மொரட்டுவை முதல் நாரஹேன்பிட்டி ஊடாக களனி வரையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

            23 கிலோமீற்றர் நீளமான நீல ரயில் பாதை, கொட்டாவை முதல் இசுறுபாய ஊடாக ஹுனுபிட்டிய வரை நிர்மாணிக்கப்படவுள்ளது.

            நான்காவது நாவல் ரயில் பாதை, துறைமுக நகர் முதல் பொரளை ஊடாக அத்துருகிரிய வரையில் நிர்மாணிக்கப்படும் என்றும், அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

            Posted in இலங்கை செய்திகள்

            ஜெனீவா விவகாரம் தேசிய பிரச்சினை-அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

            ஜெனீவா விவகாரத்தை தேசிய பிரச்சினை-அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

            ஜெனீவா விவகாரத்தை, அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய பிரச்சினையாகக் கருத வேண்டும் எனத் தெரிவித்த கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அரசியல் நோக்கங்களை விடுத்து, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வுகாண அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

            கட்சியின் தலைமையகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

            அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கை இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது சாதாரண காரியமல்ல என்றும் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 பிரேரணையைச் செயற்படுத்த, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அதிகாரம் கிடையாது எனத் தெரிவித்தார்.

            உள்ளகப் பொறிமுறை ஊடாக ஒரு சில விடயங்களை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட அமைச்சர், ஜெனீவா விவகாரத்தை, எதிர்த் தரப்பினர் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் இலங்கை இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது சாதாரண விடயமல்ல என்றும் கூறினார்.

            சர்வதேச நீதிமன்றக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ள ரோம் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என்றும், ஆகவே இலங்கை தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்றும் கூறினார்.

            இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் அதிகாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கிடையாது என்றும் பாதுகாப்புச் சபைக்கே இவ்வதிகாரம் காணப்படுகிறது என்றும் குறிப்பிட்ட அவர், பாதுகாப்புச் சபையில், சீனா, ரஸ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படும் என்பதால், சர்வதேச நீதிமன்ற விவகாரம் சாத்தியமற்றது என்றார்.

            Posted in இலங்கை செய்திகள்

            ரவுடி போலீஸ் அதிகாரி கைது – கோட்டா ஆட்சியில் நடந்தேறும் அசிங்கம்

            ரவுடி போலீஸ் அதிகாரி கைது – கோட்டா ஆட்சியில் நடந்தேறும் அசிங்கம்

            நடுவீதியில், பொதுமகன் ஒருவரை கடுமையாக தாக்கி, கீழே தள்ளிவிட்டு ஏறி குதித்து மிதித்த குற்றச்சாட்டின் கீழ் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி

            கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

            நடுவீதியில், பொதுமகன் ஒருவரை கடுமையாக தாக்கும் காட்களின் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.

            பன்னிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

              Posted in இலங்கை செய்திகள்

              பழிவாங்கும் கோட்டா முன்னாள் நிதி அமைச்சர் சிறையில்

              பழிவாங்கும் கோட்டா முன்னாள் நிதி அமைச்சர் சிறையில்

              முன்னாள் அமைச்சர் ரவி கருநாயாக்கவும் ,ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய நபராக விளங்கிய

              ரவி கருணாநாயக்காவை தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறுநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

              இவருடன் எட்டு பேரது பிணை முறிவு விவரம் தொடர்பாக இடம்பெற்ற விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              மனைவியை அடித்து கொன்று கடலில் வீசிய கணவன்

              மனைவியை அடித்து கொன்று கடலில் வீசிய கணவன்

              தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலைவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் கடந்த 25 ஆம் திகதி மீட்கப்பட்ட குடும்ப பெண்ணின் சடலம் தற்கொலை அல்ல, கொலை என அக்கரபத்தனை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண், அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டொரிடன் தோட்டத்தைச் சேர்ந்த வனராஜா

              சித்தரவள்ளி (28 வயது) எனவும், அவர் 2 பிள்ளைகளின் தாய் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.இதனை தொடர்ந்து தலவாக்கலை மற்றும் அக்கரபத்தனை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.இந்நிலையில் கைரேகை அடையாளப் பரிவினர் விசாரணை

              மேற்கொள்வதற்காக வீட்டுக்கு செல்லும் போது குறித்த சந்தேக நபரான கணவன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். அதனை தொடர்ந்து கணவன் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் நேற்று அவரை கைது செய்து புலன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.அதன் போது கூலி வாகன சாரதியாக வேலை செய்யும் குறித்த நபர் வேலை செய்து விட்டு கடந்த 23 ஆம் திகதி வீட்டுக்கு சென்றதாகவும்

              அதன் போது தனக்கு தன்னுடைய மனைவிக்கும் சண்டை ஏற்பட்டதாகவும், மனைவி ஒருவருடன் உள்ள தொடர்பு காரணமாகவே குறித்த சண்டை ஏற்பட்டதாகவும், அதனால் தான் தாக்கியதில்

              மனைவி மரணம் அடைந்ததாகவும் அதனை தொடர்ந்து மனைவியை வீட்டில் பூட்டி வைத்து விட்டு இரண்டு பிள்ளைகளையும் தனது தாய் தந்தையர்களிடம் ஒப்படைத்து விட்டு வழமை போன்று

              வாகனம் ஓடியதாகவும் கணவன் தெரிவித்துள்ளார்.மேலும் தான் இதில் இருந்து தப்ப வேண்டும் என்பதற்காக இரவு 11 மணி அளவில் மனைவியின் சடலத்தினை ஏற்றிக்கொண்டு மேல்

              கொத்மலை நீர்த்தேக்கத்தில் போட்டதாகவும், தான் கொலை செய்ய வேண்டும் என்று தாக்கவில்லை என்றும் இது தற்செயலாக நடந்தது என்றும் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

              Posted in இலங்கை செய்திகள்

              பன்மைதன்மையை ஏற்காமல், ஒருபோதும் இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப முடியாது- மனோ கணேசன்

              பன்மைதன்மையை ஏற்காமல், ஒருபோதும் இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப முடியாது

              • ஆனந்தா கல்லூரி பழைய மாணவர்களிடம் மனோ கணேசன் எம்பி

              இலங்கையின் பன்மொழி, பல்லின, பன்மத, பன்மைத்தன்மையை புரிந்துக்கொண்டு இலங்கையை ஒரு பன்மைத்தன்மை கொண்ட நாடாக ஏற்காமல் இலங்கை தேசத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. சிங்களம் மட்டும், பெளத்தம் மட்டும் என்ற அடிப்படைகளில், தம்மை

              இரண்டாம், மூன்றாம் பிரஜைகளாக நிலைநிறுத்தும் நிலைமையை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க போவதில்லை என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

              இங்கிலாந்தில் வாழும், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்களின், “ஜனநாயகத்துக்கான ஆனந்தியர்கள்” என்ற அமைப்பு நேற்றிரவு நடத்திய இணையரங்கத்தில் கலந்துக்கொண்டு சிங்கள மொழியில் உரை நிகழ்த்திய மனோ எம்பி மேலும் கூறியதாவது,

              ஆனந்த கல்லூரி இலங்கையின் புகழ் பெற்ற சிங்கள பெளத்த கல்வி நிறுவனம். இலங்கையின் பிரபல சிங்கள அரசியல் நண்பர்களை உருவாக்கிய கல்லூரி இதுவாகும். ஆகவே இதன் பழைய மாணவர்களாகிய நீங்கள், “இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம்” என்ற நிகழ்வை நடத்துவது சாலப்பொருத்தமானது.

              இலங்கையில் சிங்கள மொழி பேசுகின்றவர்கள், பெளத்த மதத்தை பேணுகின்றவர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மை. அதில் எமக்கு பிரச்சினை இல்லை. அதுபற்றி உண்மையில்

              நான் மகிழ்கிறேன். ஆனால், இந்த சிங்கள, பெளத்தம் மட்டும் இலங்கை அல்ல. எழுபத்தி ஐந்து என்பது நூறு அல்ல. தொண்ணூற்று ஒன்பது கூட நூறு அல்ல. எழுபத்தி ஐந்துடன் இன்னொரு இருபத்து ஐந்து சேர வேண்டும். அதுதான் நூறு. அதுதான் இலங்கை.

              ஆகவே இலங்கை நாட்டின் தேசியத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால், நம் நாட்டின் பன்மை தன்மையை முதலில் நீங்கள் ஏற்க வேண்டும். இதுதான் ஐக்கிய இலங்கைக்கான முதல் நிபந்தனை.

              தமிழர்களுக்கு அதிகாரம் பிரித்து கொடுத்தால், அவர்கள் தனியொரு நாட்டை அமைத்துக்கொண்டு போய் விடுவார்கள் என்ற பயம் சிங்கள மக்களுக்கு இருக்கிறது. தமிழர் மத்தியில் ஆயுத போராட்டம் மீண்டும் தலையெடுக்கும் என்ற பயமும் இருக்கிறது.

              மிக நியாயமான பயங்கள் இவை. சிங்களவர் ஏன் இப்படி நினைக்கிறார்களே என சில தமிழ் அரசியல்வாதிகள் கூறுவதுண்டு. நான் அவர்களிடம், இல்லை, அவர்களின் இந்த பயம் நியாயமானது. அதை நாம் நிவர்த்திப்போம் என்று கூறுகிறேன்.

              அதேபோல் தமிழர் மத்தியிலும் பயங்கள் உண்டு. இந்த நாட்டை சிங்கள மட்டும், பெளத்தம் மட்டும் என படிப்படியாக மாற்றியமைக்க சிங்கள அரசியல்வாதிகள் முயல்கிறார்கள், என்று தமிழர்கள்

              நினைக்கிறார்கள். தமிழரை, முஸ்லிம்களை இரண்டாம், மூன்றாம் பிரஜைகளாக நடத்த சிங்கள அரசியல் தலைமை முயல்கிறது என்ற அச்சம் தமிழர் மத்தியில் உள்ளது. இதுவும் மிக, மிக நியாயமான பயம். இதை சிங்கள மக்கள் நிவர்த்தி செய்ய வேண்டும்.

              அப்புறம் இந்த அதிகார பகிர்வு என்ற விடயத்தை பாருங்கள். அதிகார பகிர்வு என்றால், சிங்கள மக்களின் அதிகாரத்தை பிடுங்கி எடுத்து, தமிழ் அரசியல்வாதிகளிடம் கையளிப்பது என சிங்கள மக்கள் நினைக்க வைக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் கையளிப்பது என சிங்கள மக்கள் நினைக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

              இது அப்பட்டமான பிழை. அதிகார பகிர்வு என்றால் சிங்கள அதிகாரத்தை தமிழ், முஸ்லிம்களிடம் கையளிப்பது என்பதல்ல. அது ஒரு ஜனநாயக சித்தாந்தம். கொழும்பில் குவிந்துள்ள

              அதிகாரங்களை மாகாணங்களுக்கு, மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப வேண்டும் என்றால், அவை வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்ல, மஹியங்கனை, மொனராகலை, காலி, மாத்தறை, எம்பிலிபிடிய ஆகிய சிங்கள பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.

              உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? கொழும்பு தலைநகரில் ஒரு கும்பல் இருக்கிறது. அது ஒரு வகுப்பு. கொழும்பில் எந்த அரசாங்கம் நிலைபெற்றாலும், அந்த கும்பல் அந்த அரசாங்கத்தை பிடித்து கொள்கிறது. வாக்களித்து அரசாங்கங்களை உருவாக்கும் மக்களை விட இந்த கும்பல் அரசாங்கங்களுக்கு உள்ளே செல்வாக்கு மிக்கது.

              இது எல்லா அரசாங்கங்களையும் பிடிக்கும். இப்போதைய அரசாங்கத்தையும் இது பிடித்து வைத்துள்ளது. சேனநாயக்க, பண்டாரநாயக்க, விக்கிரமசிங்க, ராஜபக்ச அரசுகள் மட்டுமல்ல, நாளை சஜித் ஆட்சி வந்தாலும், அந்த அரசாங்கத்தை இது பிடிக்கும்.

              அந்தளவு செல்வாக்கு இந்த கும்பலுக்கு உள்ளது. இதற்கு இன, மத அடையாளங்கள் இல்லை. ஆகவேதான், அதிகாரங்களை பிரித்து எல்லா மாகாணங்களுக்கும் அனுப்ப வேண்டும் என நான் கூறுகிறேன். ஆகவே அதிகார பகிர்வை இந்த அடிப்படையில் பாருங்கள்.

              மேலும் இது என்ன, மன்னராட்சியா? இங்கு அரண்மனை உள்ளதா? கொழும்பில் ராஜா, ராணி, யுவராஜா, யுவராணி இருக்கிறார்களா? ராஜகுடும்பம் உள்ளதா? ஆகவே கொழும்பில் குவிந்துள்ள

              அதிகாரங்களை பிரித்து எல்லா தமிழ், சிங்கள, முஸ்லிம் பிராந்தியங்களுக்கு அனுப்ப வேண்டும். இவற்றையெல்லாம் புரிந்துக்கொள்ளுங்கள். இலங்கை தேசத்தை கட்டியெழுப்பலாம். நான் இரண்டு கைகளையும் உயர்த்தி யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தருகிறேன்.

                Posted in இலங்கை செய்திகள்

                சுவிட்சர்லாந்தில் எழுத தமிழ் சஞ்சிகை வெளியீடு

                சுவிட்சர்லாந்தில் எழுத தமிழ் சஞ்சிகை வெளியீடு

                சுவிட்சர்லாந்தில் 27/03/ 2021. அன்று எழுத தமிழ் சஞ்சிகை அருட் தந்தை நா.பிரபாகர் தலைமையில் சஞ்சிகை குடும்பத்தினால், வெளியீடு செய்யப்பட்டது.

                இன அழிப்பில் இருந்து தமிழ் மக்கள் தன் இனத்தை பாதுகாக்கவும் விழிப்புணர்வு பெற்றுக் கொள்வதற்கும்


                உரித்துடையதாக பரப்புரை தளத்தை மைய படுத்தியும் சர்வதேச ஆதரவு தளத்தை விரிவு படுத்தும் நோக்கினை கொண்டு இந்த வெளியீடு இடம்பெற்றுள்ளது

                போரின் பின்னர் தமிழர்கள் சந்திக்கும் இன அழிப்பு தொடர்பாகவும் இந்த சஞ்சிகை முன்னெடுத்து செல்லவுள்ளது குறிப்பிட தக்கது

                எழுத தமிழ் சஞ்சிகை
                எழுத தமிழ் சஞ்சிகை
                எழுத தமிழ் சஞ்சிகை
                  Posted in இலங்கை செய்திகள்

                  கொரனோ அதிகரிப்பு -யாழில் பாடசாலைகள் அடித்து பூட்டு

                  கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், யாழ். மாவட்டத்தில் மிக வேகமாக அதிகரித்து

                  வருவதால், யாழ். கல்வி வலையத்திலுள்ள சகல பாடசாலைகளும் ஒரு வாரத்துக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

                  இன்று (29) முதல் ஒரு வாரத்துக்கு, பாடசாலைகள் மூடப்படும். அதுதொடர்பிலான தீர்மானம் நேற்று (28) மாலை எட்டப்பட்டுள்ளது .

                  .வடமாகாண ஆளுநர், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

                  இதேவேளை, மேல் மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் முதலாம் தரத்தைத் தவிர, ஏனைய அனைத்துத் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (29) ஆரம்பமாகுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                  மாணவர்களை குழுக்களாகப் பிரித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கலாம்

                  என அறிவுறுத்தி, கல்வி அமைச்சின் செயலாளரால், ஒழுங்கு விதிகள் அடங்கிய சுற்றறிக்கையும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                    Posted in Uncategorized

                    நித்திரையில் கணவனை வெட்டி கொன்ற மனைவி

                    தன்னுடைய கணவனை ​அவருடைய வீட்டுக்குள் வைத்தே படுகொலைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், தாயும் மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                    இந்த சம்பவம் லுணுவில கொஸ்வத்தையில் இடம்பெற்றுள்ளது.

                    தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவே அந்தப் பெண், தன்னுடைய கணவனை படுகொலைச்

                    செய்துள்ளார்” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

                    44 வயதான நபரே, 38 வயதான பெண்ணினால் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். அப்படுகொலைக்கு படுக்கை விரிப்பே பயன்படுத்தப்பட்டுள்ளது.

                    இந்தவேளை அவ்விருவரின் மூன்று பிள்ளைகளும் பொலிஸ் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

                      Posted in Uncategorized

                      எனது உயிருக்கு ஆபத்து – சந்திரிக்கா

                      முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பலவீனமானது என பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

                      “அவருடைய வீட்டுக்குள் இனந்தெரியாத நபர்கள் நுழைந்துள்ளனர். அதுவும் சந்தேகத்துக்கு

                      இடமானது. அவ்வாறான சம்பவத்துடன் விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படாமையானது முரண்பாடாகும்” என்றார்.

                      லசந்த விக்கிரமதுங்கவுக்கு இடம்பெற்றதைப் போல, அவருக்கும் (சந்திரிகா) இடமளிக்கமுடியாது.

                      அவருடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமாயின், அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

                      இந்த விவகாரம் தொடர்பில், பாராளுமன்றத்திலும் அண்மையில் குமார் வெல்கம எம்.பிய உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        திடீர் சுற்றிவளைப்பில் 1,120 பேர் கைது

                        திடீர் சுற்றிவளைப்பில் 1,120 பேர் கைது

                        மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1,120 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

                        நேற்று (28) காலை 07 மணிமுதல் பிற்பகல் 05 மணிவரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                        கைதுசெய்யப்பட்டவர்களில், குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 47 பேரும், நீதிமன்றத்துக்கு

                        சமூகமளிக்காமல் இருந்த 418 பேரும், இலஞ்ச குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 549 சந்கே நபர்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                        கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் இன்று(29) முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                          Posted in Uncategorized

                          கிட்டு பூங்காவை எரித்த கோட்டா அடிமைகள் – கொதிப்பில் தமிழர்

                          கிட்டு பூங்காவை எரித்த கோட்டா அடிமைகள் – கொதிப்பில் தமிழர்

                          யாழ்ப்பாணத்தில் அமைக்க ப்பட்ட கிட்டு பூங்கா ஆளும் கோட்டா அடிமைகளினால் தீ வைத்து எரிக்க பட்டுள்ளது

                          இதன் முன்னரங்கம் மற்றும் அதனை அண்மித்த சில பகுதிகள் தீயில் எரிந்து அழிந்துள்ளது ,நல்லூர் கோவிலை

                          இடித்து மலலசல கூடம் கட்டுவேன் என சிங்கள அடிமைகள் கூக்குரலிட்ட சில நாட்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

                          இவ்வாறு பல வன்முறைகள் தொடர்ந்து வெடிக்கும் என்பதை அடித்து கூறலாம்

                            Posted in Uncategorized

                            தமிழர்களை குற்றவாளிகளாகவும் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தை நீதி வழங்கும் நிலையிலும் நிறுத்தியுள்ள ஐ. நா

                            தமிழர்களை குற்றவாளிகளாகவும் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தை நீதி வழங்கும் நிலையிலும் நிறுத்தியுள்ள ஐ. நா

                            அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!!!

                            கடந்த 23.03.2021 அன்று ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறிய சிறீலங்கா தொடர்பான 46/1 தீர்மானம் தமிழர் தேசத்தின்அபிலாசைகளை புறக்கணித்துள்ளதுடன், தமிழினவழிப்பை முற்றாக மூடிமறைத்துள்ளது.

                            இத்தீர்மனத்தின் மூலம் தமிழீழ மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றும், சிறீலங்கா அரசு தோல்வியடைந்துள்ளது என்றும் பலர் தமிழ் பேசும் உலகில் விளித்துக்கொள்ளும் அவலத்தையும் நாம் பார்க்கின்றோம். இந்நிலையில் தமிழீழ மக்களின் மீது இடம்பெற்றுக்கொண்டிருக்கும்

                            தமிழினவழிப்பிற்கு எதிராகவும், தமிழீழ மக்களின் இறையாண்மையை வென்றெடுப்பதற்காகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட்டுகொண்டிருக்கும் தமிழர் இயக்கம் இவ்வூடக அறிக்கையினூடாக ஓர் கோட்பாடுசார் தெளிவூட்டலை மக்கள் முன் நிறுவுகின்றோம்.

                            இத் தீர்மானத்தின் இன்றைய தன்மையை ஆராய்வதற்கு முன் இதன் முந்தைய தீர்மானங்களின் அடிப்படையை நாம் சரியாக உள்வாங்குதல் அத்தியாவசியமானதாகும். முந்தைய தீர்மானங்களான 19/2 – 22 March 2012, 22/1 – 21 March 2013, 25/1 – 27 March 2014, 30/1 – 1 October 2015, 34/1 – 23 March 2017, 40/1 – 21 March 2019 தீர்மானங்களில் தமிழ் என்ற சொற்பிரயோகம்

                            பாவிக்கப்படவில்லை. மாறாக இடம்பெற்ற குற்றங்கள் அனைத்தும் இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள் என்றே குறிப்பிடப்பட்டன. தமிழர்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற தமிழின அழிப்பை பார்க்கத் தவறிய இத் தீர்மானங்கள்

                            தமிழீழ மக்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக எதிர் நோக்கும் திட்டமிட்ட தமிழினவழிப்பை மூடி மறைத்துள்ளது. இதனூடாக இனவழிப்புக் குற்றவாளியான சிறீலங்காவை தப்பிக்க வழிவகுத்ததுடன் தொடர்ச்சியான தமிழினவழிப்பை தொடர சிறிலங்காவிற்கு பச்சைக் கொடி

                            காட்டியுள்ளது எனக் கொள்ளலாம். 2012 அம் ஆண்டு வெளிவந்த 19/2 தீர்மானத்தில் பயங்கரவாதத்தை அழித்த சிறீலங்கா அரசிற்கு வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம் என்று

                            புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. இதனூடாக இத் தீர்மானம் தமிழர்களின் இறையாண்மைக்கானதும், இனவழிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கானதுமான சுதந்திர விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து மடைமாற்றி உள்ளது.

                            இலங்கையில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் இடம்பெற்றதாக கூறும் இத் தொடர் தீர்மானங்கள், அக்குற்றங்கள் யார்மீது பிரயோகிக்கப்பட்டது

                            என்று குறிப்பிடவில்லை. அவ்வழியில் தமிழர்கள் தான் பாதிப்புக்குள்ளானர்கள் என்று சுட்டிக்காட்டத் தவறியுள்ள இப் புதியதீர்மானம் கூட தமிழ்த்தே சிய இனத்தை வலுக்கட்டாயமாக சிறீலங்கர்களாகவே அடையாளப்படுத்த முனைகிறது.

                            இனவழிப்பு அரசாங்கமான சிறீலங்காவின் இறையாண்மை மீதும், ஒருமைப்பாட்டின் மீதும் முழத்திற்கு முழம் கரிசனை கொண்டு வெளிவந்துள்ள இத்தீர்மானம், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இறையாண்மையின் கீழ் ஓர் தேசிய இனமான தமிழீழ மக்களின்

                            இறையாண்மை மறுக்கப்பட்டு திட்டமிட்ட தமிழினவழிப்பு மேற்கொள்ளப்படுவதை கரிசனையில் எடுத்துக்கொள்ளவில்லை. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அரச பயங்கரவாதத்தை கண்டிக்கவோ, கண்டுகொள்ளவோ முன்வரவில்லை.

                            இவ்வாறாக தமிழர்களின் அடிப்படைக் கோட்பாடுகளை முற்றாக மறுத்துள்ள இத் தீர்மானங்களின் முக்கிய பகுதி ஒன்றை தமிழீழ மக்கள் மிகவும் ஆழமாக உற்று அவதானிக்க

                            வேண்டும். கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இப்பந்தி 2012 தொடக்கம் 2021 வரை வெளிவந்த அனைத்து தீர்மானங்களிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

                            Stresses the importance of a comprehensive accountability process for all violations and abuses of human rights committed in Sri Lanka by all parties, including those abuses by the Liberation Tigers of Tamil Eelam, as highlighted in the comprehensive report of the Office of the High Commissioner on Sri Lanka.


                            தமிழாக்கம்: 2015 ஆம் ஆண்டு செப்டெம்பரில் வெளியிடப்பட்ட இலங்கை குறித்த உயர் ஆணையாளரின் அலுவலகத்தின் விரிவான அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டவாறு, தமிழீழ விடுதலைப் புலிகள் புரிந்த மீறல்கள் உட்பட, இலங்கையில் அனைத்துத் தரப்பினராலும்

                            புரியப்பட்ட அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும், அத்துமீறல்களுக்கும் பொறுப்புக் கூறுவதற்கான முழுமையான பொறிமுறையின் முக்கியத்துவதை வலியுறுத்துகிறது.

                            இப்பந்தி 23.03.2021 வெளிவந்த தீர்மானத்தின் Operative Paragraph 4 ல் அமைந்துள்ளது. இதில் தமிழீழ நிழல் அரசின் இராணுவமான தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் ஏனைய தரப்புகள்

                            மேற்கொண்ட குற்றங்களை விசாரித்து விரிவான பொறுப்புக்கூறல் ஒன்றை வழங்கவேண்டும் என பரித்துரைக்கப்பட்டுள்ளது. இதில் சிறீலங்கா அரசு குற்றவாளியாக சுட்டிக்காட்டப்படவில்லை. அவ்வாறாயின் சிறீலங்கா அரசை விசாரிக்கப்போவது யார்?

                            தமிழீழ நிழல் அரசை விசாரிக்க சிறீலங்காவிடம் பரிந்துரைக்கும் சர்வதேசம் இலங்கை அரசை விசாரிக்கவும், நீதியை நிலை நாட்டவும் இனவழிப்பு யுத்தம் மூலம் நிர்மூலமாக்கிய தமிழீழ

                            இராசதாணியை மீளமைத்து தமிழீழ நீதிமன்றத்தின் முன் சிறிலங்கா அரசை விசாரிக்கும் படி கோருவதே சரியான செயற்பாடாகவிருக்கும்.

                            வெளிவந்திருக்கும் இப்புதிய தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பொறுப்புக்கூறலுக்கான பரிந்துரைகளையும் இலங்கை அரசின் கூட்டிணைவுடன் உள்ளகப் பொறிமுறைகள் ஊடாகவே ஐ.நா மனிதவுரிமைகள் சபை செயற்படுத்த முனைகிறது. இதனூடாக குற்றவாளியான இலங்கை அரசிடமே தான் செய்த குற்றத்தை விசாரணை செய்யும்படியும்,

                            பொறுப்புக்கூறும்படியும் ஐ.நா மனிதவுரிமைகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது. குற்றமிழைத்தவரை நீதி வழங்க அழைப்பது அடிப்படை சட்டக் கோட்பாடுகளை மீறும் செயலாகும். குறிப்பாக “தமிழினவழிப்பை அங்கீகரியுங்கள், ஓர் அனைத்துலக சுயாதீன

                            விசாரணையை நடத்துங்கள், அதன் வழியில் அனைத்துலக நீதிமன்றிலோ அல்லது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிலோ பாரப்படுத்துங்கள்” போன்ற இனவழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழீழ

                            மக்களின் கோரிக்கைகள் எதுவும் கருத்தில் கொள்ளப்படாமல், அவர்களின் வகிபாகம் இல்லாமல் வெளிவந்திருக்கும் இந்த ஒருதலைப்பட்சமான தீர்மானமானது ஐநா மனிதவுரிமைகள் சபையின் சரத்துக்களை மீறும் செயலாகும்.

                            இத்தீர்மானத்தின் ஊடான பன்னாடுகளின் அழுத்தம் என்பது சிறீலங்கா ஈட்டிய வெற்றியே. ஏனெனில் இனவழிப்பு குற்றங்களில் இருந்து 22 நாடுகளின் ஆதரவுடன் சிறிலங்கா அரசு

                            தப்பித்துக்கொண்டுள்ளது. இதையே தாம் சாதித்த வெற்றியாக எம்மினத்தில் சிலர் கூறியும் வலம் வருகின்றனர்.

                            இதனால் இத்தீர்மானத்தினை தமிழர் இயக்கம் வரவேற்கவில்லை என்பதனை உலகத் தமிழர்களின் ஆதரவுடன் அறுதியாகத் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் இத்தீர்மானத்தை வரவேற்று தமிழினவழிப்பை மூடி மறைப்பதற்கும் தமிழர்களின் இறையாண்மைக்கான சுதந்திர

                            விடுதலைப் போராட்டத்தை கருத்தியல் ரீதியாக நிராகரிப்தற்கும் துணைபோக வேண்டாம் என்று தமிழ் அமைப்புக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். இத்தீர்மானத்தை வரவேற்பது இனவழிப்பின் 10வது படிநிலையான மறுதலிப்பிற்கு சமமாகும்.

                            சிறீலங்கா அரசின் இனவழிப்பை வெளிக்கொணரவும், அதற்கான அனைத்துலக நீதியை நிலை நாட்டவும் எதிர்வரும் 18 மாத கலாத்திற்கான சிறப்பு வேலைத்திட்டம் ஒன்றையும் தமிழர் இயக்கம்

                            நாம் முன்னெடுத்துள்ளோம். அதற்கான உங்கள் தார்மீக ஆதரவுகளையும் உதவிகளையும் இச்சந்தர்ப்பத்தில் அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம்.

                            வெல்வது உறுதி தமிழர் இயக்கம்