Author: நலன் விரும்பி
அரசாங்கத்துடன் ஒட்டி இருந்து கொண்டு பந்தம் பிடிப்பவரே அங்கஜன்
அரசாங்கத்துடன் ஒட்டி இருந்து கொண்டு பந்தம் பிடிப்பவரே அங்கஜன்
அரசாங்கத்துடன் ஒட்டி இருந்துகொண்டு பந்தம் பிடிப்பவரே அங்கஜன். நாமல் கழிப்பறைக்கு சென்றாலும் பின்னால் செல்பவர். அவருக்கு ஏதோ ஒரு சில வாக்குகள் கிடைத்துவிட்டது.
அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அடுத்த முறை அவருக்கு மக்கள் வாக்களிக்க
மாட்டார்கள். அவருடைய கூற்றை நாங்கள் முக்கியமாக கருத வேண்டிய அவசியமில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா என்பது நாடகமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தமை தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையிலே தமிழ் தேசிய கட்சிகள் எல்லோரும் இணைந்து பேசி ஒருமித்து ஒரு அறிக்கை அனுப்ப வேண்டுமென பேசியிருந்தோம். பின்னர் அதிலிருந்து
இழுத்து இழுத்து செய்யாதிருந்ததால் இனியும் தாமதித்தால் காலம் தாமதித்து விடும் என்பதால் எஞ்சியிருந்த ஏனைய கட்சிகளை இணைத்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தோம்.
எங்களுடைய அறிக்கை ஒருமித்து சென்றால் நல்லது தான். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அதனை செய்ய முடியாது போனாலும் மிகவும் முக்கியமானது நாங்கள்
எங்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். எங்களுக்குள்ளே இருக்கிற பிரச்சினைகளுக்காக நாங்கள் அடிபட்டு கொண்டிருந்தாலும் அவர்களுக்கு
முழுமையான விடயங்களை வழங்க வேண்டும். இதிலே நாங்கள் இணைந்து செயல்பட்டால் நல்லது. அடுத்த தடவை இணைந்து செயற்படுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றார்.
தமிழ் கைதிகளை சுட்டு கொல்வேன் – சிறைச்சாலை அமைச்சர் மிரட்டல்
தமிழ் கைதிகளை சுட்டு கொல்வேன் – சிறைச்சாலை அமைச்சர் மிரட்டல்
இலங்கை அனுராதபுரம் சிறை சாலையில் தடுத்து வைக்க பட்டுள்ள கைதிகளை தான் சுட்டு கொல்வேன் என சிறைசாலை அமைச்சர் மிரட்டியுள்ளார்
இவரது இந்த செயல் வெளிப்படுத்தல் கைதிகள் மற்றும் அவர் தம் உறவினர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
இத்தாலியில் மகிந்தா – சிங்களவர்களுடன் சந்திப்பு
இத்தாலியில் மகிந்தா – சிங்களவர்களுடன் சந்திப்பு
இத்தாலியில் வாழும் இலங்கை மக்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று போலோக்னா நகரில் நேற்று (14) இடம்பெற்றது.
இத்தாலியின் பல்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைத்தந்திருந்த இலங்கை பிரதிநிதிகள், பிரதமரை சந்தித்து விரிவாக கலந்துரையாடினர்.
கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியிலும் இவ்வாறு இத்தாலிக்கு விஜயம் செய்து இத்தாலியில் வாழும் இலங்கை மக்களை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கியமை குறித்து இலங்கை பிரதிநிதிகள் இதன் போது பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்
பிரதமர் ஜனாதிபதியாகவிருந்த காலப்பகுதியில் இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட இருதரப்பு நட்பு காரணமாக இதுவரை இத்தாலியில் வாழும் இலங்கை மக்களுக்கு கிடைக்கும் வசதிகள் தொடர்பிலும் அங்கு வருகை தந்திருந்த பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
மிலான் நகரில் இலங்கை கொன்சியூலர் அலுவலகம் அமைப்பதற்கு அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட தொலைநோக்கு செயற்பாடு
காரணமாக பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதில் இலங்கையர்கள் பலரது காலமும் பணமும் மிச்சப்படுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் மீண்டும் இலங்கைக்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் காணப்படும் இத்தாலியிலுள்ள இலங்கை மக்களுக்கு இருபது ஆண்டு சேவை காலத்தின் பின்னர் அந்நாட்டில் வழங்கப்படும்
ஓய்வூதியத்தை தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னரும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெற்றுத் தருமாறு அங்கு வருகைத்தந்திருந்த பிரதிநிதிகள் பிரதமரிடம் கேட்டுக் கொண்டனர்.
இதுதொடர்பாக இத்தாலி அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிசை அச்சந்தர்ப்பத்திலேயே அறிவுறுத்தினார்.
ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் எதிர்வரும் சில தினங்கள் அங்கு தங்கியிருந்து இராஜதந்திர சந்திப்புகளிலும் ஈடுபடவுள்ளார்.
இந்த சந்திப்பில் போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இத்தாலிக்கான பதில் இலங்கை தூதுவர் சிசிர செனவிரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குண்டு வைத்து சிறையை தகர்த்த பயங்கரவாதிகள்
குண்டு வைத்து சிறையை தகர்த்த பயங்கரவாதிகள்
நைஜீரியாவில் வெடிகுண்டு வைத்து சிறையை தகர்த்த பயங்கரவாதிகள் அங்கிருந்த 240 கைதிகளை தப்ப வைத்துள்ளனர்.
நைஜீரியாவில் துணிகரம் – குண்டு வைத்து சிறையை தகர்த்த பயங்கரவாதிகள்
குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சிறை
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கோகி மாகாணத்தில் கப்பா என்கிற நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்த சிறையில் 224 விசாரணை கைதிகள் மற்றும் 70 குற்றவாளிகள் என மொத்தம் 294 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். சிறைச்சாலையின் தடுப்பு சுவரில் சக்திவாய்ந்த
வெடிகுண்டுகளை வைத்து தகர்த்த பயங்கரவாதிகள், உள்ளே நுழைந்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சிறைக்காவலர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் பயங்கரவாதிகள் சிறை அறைகளை உடைத்து கைதிகளைத் தப்ப வைத்தனர். இப்படி மொத்தம் 240 கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடினர்.
இதுதொடர்பாக, அந்நாட்டின் உள்துறை மந்திரி ராப் அரெக்பசுலோ கூறுகையில், தப்பியோடிய கைதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. கைதிகளை பற்றிய
தகவல்களை இண்டர்போல் அமைப்பிடம் சமர்ப்பித்திருக்கிறோம். ஒருவேளை நாட்டை விட்டு அவர்கள் வெளியேறினாலும் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. 2 சிறைக் காவலர்களைக் கொன்று கைதிகளை தப்பவைத்த பயங்கரவாதிகளையும் விரைவில் பிடிப்போம் என்றார்.
சிறையைத் தகர்த்து கைதிகளை தப்பவைத்த இந்த சம்பவத்துக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் நைஜீரியாவின் தென்கிழக்கில் இமோ மாகாணத்திலுள்ள ஒரு சிறையில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி 1800-க்கும் அதிகமான கைதிகளை தப்பவைத்தது நினைவுகூரத்தக்கது.
ஆசிட் வீசி கொல்ல முயன்றான் – முன்னாள் காதலர் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்
ஆசிட் வீசி கொல்ல முயன்றான் – முன்னாள் காதலர் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்
தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்ததோடு, தன்னை சினிமா துறையில் இருந்து வெளியேற்றவும் தனது முன்னாள் காதலன் சதி செய்ததாக நடிகை அக்ஷரா சிங் தெரிவித்துள்ளார்.
ஆசிட் வீசி கொல்ல முயன்றான் – முன்னாள் காதலர் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்
அக்ஷரா சிங்
இந்தி, போஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளவர் அக்ஷரா சிங். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமான இவர்,
தனது முன்னாள் காதலர் ஆள் வைத்து ஆசிட் வீச முயன்றதாகவும், அதில் இருந்து தப்பியதாகவும் பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் ஒருவனை காதலித்தேன். திடீரென்று இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து அவனை பிரிய முடிவு செய்தேன். இதனால் அவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்தான். என்னை சினிமா துறையில் இருந்து வெளியேற்றவும் சதி செய்தான்.
ஒரு கட்டத்தில் எனது முகத்தில் ஆசிட் வீசி கொலை செய்வதற்காக சிலரை அனுப்பி வைத்தான். அவர்களிடம் இருந்து நான் அதிர்ஷ்டவசமாக தப்பினேன்.
எனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது” என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படகில் போட்டோஷூட் நடத்திய நடிகை கைது
படகில் போட்டோஷூட் நடத்திய நடிகை கைது
பாம்பு போன்ற நீண்ட வடிவில் இருக்கும் படகில் ஏறி நின்று நடிகை நிமிஷா புகைப்படம் எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
படகில் போட்டோஷூட் நடத்திய நடிகை கைது
நிமிஷா பிஜோ
கேரளாவில் உள்ள பல கோவில்களுக்கு சொந்தமாக நீண்ட பாம்பு வடிவிலான படகுகள் உள்ளன. இந்த படகுகளை கேரள மக்கள் புனிதமாக கருதுகின்றனர். இவற்றை பூஜை செய்த பிறகே விழாக்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் பிரபல மலையாள நடிகை நிமிஷா பிஜோ, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து பம்பை ஆற்றில் சாமி ஊர்வலத்தின்போது
பயன்படுத்தப்படும் அரன்முலா கோவிலுக்கு சொந்தமான, பாம்பு போன்ற நீண்ட வடிவில் இருக்கும் படகில் ஏறி நின்று புகைப்படம் எடுத்துள்ளார்.
அப்போது காலில் அவர் செருப்பும் அணிந்து இருந்தார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நிமிஷாவை பலரும் கண்டித்தனர்.
கேரள தேவஸ்தானம் சார்பில், நிமிஷா மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நிமிஷாவை போலீசார் கைது செய்தனர். நிமிஷா கூறும்போது, “இந்த படகு
புனிதமானது என்று எனக்கு தெரியாது. கேள்விப்பட்டதும் இல்லை. தெரியாமல் இந்த தவறை செய்து விட்டேன்” என்றார்.
முதன்முறையாக வடிவேலு உடன் கூட்டணி அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்
முதன்முறையாக வடிவேலு உடன் கூட்டணி அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு, அடுத்ததாக சுராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
முதன்முறையாக வடிவேலு உடன் கூட்டணி அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்
வடிவேலு
நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில
வருடங்களாக அவர் நடிக்கவில்லை. தற்போது தடை நீக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.
அவர் நடிக்க உள்ள புதிய படத்தை சுராஜ் இயக்க உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளாராம். சமீபத்திய பேட்டி மூலம் அவர்
இதனை உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் இப்படத்தில் வடிவேலு 2 பாடல்கள் பாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர்.
இலங்கையில் கொரனாவுக்கு சிக்கி 60 வயதிற்கு மேலானோர் அதிக மரணம்
இலங்கையில் கொரனாவுக்கு சிக்கி 60 வயதிற்கு மேலானோர் அதிக மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
அறுபது வயதிற்கு அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது
நாள் தோறும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இலங்கையில் மரணமாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிகம் சம்பளம் பெறுவோரிடமிருந்து வரி அறவிடப்படமாட்டாது
ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிகம் சம்பளம் பெறுவோரிடமிருந்து வரி அறவிடப்படமாட்டாது
ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேல் சம்பளம் பெறுவோரின் சம்பளத்தில் இருந்து 5% வரி அறவிடும் எந்த எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை
இது தொடர்பில் எந்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்ததார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் வெளியிட்ட கூற்று தொடர்பில் அங்கு கேள்வி எழுப்பப்பட்டது பல்வேறு பிரதேசங்களில் நிலவும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு அடுத்த வாரத்தின் பின்னர் இல்லாமல் போகும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
மக்கள் காணிகளை அபகரிக்கும் காட்டு வாசிகள் – களத்தில் குதித்த சிறிதரன் எம்பி
மக்கள் காணிகளை அபகரிக்கும் காட்டு வாசிகள் – களத்தில் குதித்த சிறிதரன் எம்பி
வனவளத் திணைக்களத்தினரால் எல்லைப்படுத்தப்பட்டுள்ள ஜெயபுரம் மக்களின் காணிகளை நேரில் சென்று பார்வையிட்டார் சிறீதரன் எம்.பி!
கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் ஜெயபுரம் வடக்குப் பகுதியில், ஏறத்தாழ அறுபது குடும்பங்களுக்குச் சொந்தமான மேட்டுநிலப் பயிர்ச்செய்கைக் காணிகளை
வனவளத் திணைக்களத்தினர் எல்லைப்படுத்தியுள்ளதாக, பாதிக்கப்பட்ட மக்களால் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, நேற்றுமுன்தினம் குறித்த காணிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
ஜெயபுரம் வடக்கு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட திக்குவில், எத்தாவில், சுண்ணாவில், தும்புருவில் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 1965 ஆம்
ஆண்டிலிருந்து திக்குவில் குளத்தை நீர் மூலமாகக் கொண்டு மேட்டுநிலப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். காலத்துக்குக்காலம் நடைபெற்ற இடப்பெயர்வுகளின் பாதிப்புக்களை
எதிர்கொண்டு, இறுதியாக 2010 ஆம் ஆண்டு மீள்குடியேறியதிலிருந்து இன்றுவரை அம்மக்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் குறித்த காணிகளை எல்லைப்படுத்தியுள்ள வனவளத்
திணைக்களத்தினர் அக்காணிகளில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாதென மக்களைத் தடுத்து வருகின்றனர்.
ஆனால் அதே பகுதியில் தனது தந்தையாருக்குச் சொந்தமான 100 ஏக்கர் காணி உள்ளதாகக்கூறி, காடழித்து நிரந்தர அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுவரும் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களத் தனவந்தர் ஒருவருக்கு எதிராக வனவளத் திணைக்களத்தினர் எவ்வித எதிர்ப்பு
நடவடிக்கையையும் மேற்கொள்ளாத நிலையில், வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தமக்கு காணிகளை மீளப் பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்களால்
முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நேற்றைய தினம் (2021.09.12) நேரில் சென்று குறித்த காணிகளைப் பார்வையிட்ட, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு கடிதங்களை அனுப்புவதன் மூலம் காணிகளை மீளப்பெற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.
இதன்போது, பூநகரி பிரதேசசபையின் ஜெயபுரம் வட்டார உறுப்பினர் சுப்பிரமணியம் சந்திரபோஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஜெயபுரம் வட்டார அமைப்பாளர்
திரு.செல்வராஜ் குமாரவேல், ஓய்வுநிலை அதிபர் திரு.இரவீந்திரன் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது



மருத்துவமனை மலசல கூட்டத்திற்குள் வெடிகுண்டு
மருத்துவமனை மலசல கூட்டத்திற்குள் வெடிகுண்டு
இலங்கை நாரஹேன் பிட்டியவில் உள்ள தனியார் மருத்துவ மனையின் கழிவறை ஒன்றுக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்க பட்டுள்ளது
மேற்படி குண்டு எவ்விதம் இங்கு எடுத்துவரப்பட்டது என்பது தொட்ரபில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்
பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்
மலையாளத்தில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமான ரிச பாவா, தமிழிலும் காசு, தென்றல் வரும் தெரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி
ரிச பாவா
மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் ரிச பாவா. இவர் கடந்த 1990-ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கிய ‘டாக்டர் பசுபதி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகம்
ஆனார். பின்னர் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானார். ‘இன் ஹரிகர் நகர்’ படம் அவருக்கு மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றுக் கொடுத்தது.
150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், பின்னர் டி.வி. சீரியல்களில் நடித்தார். தமிழில் காசு,
தென்றல் வரும் தெரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருது பெற்றார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பு மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பபட்டு சிகிச்சை பெற்றார்.
நேற்று மாலை திடீரென இவரது உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
அவருக்கு வயது 55. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மரணம் அடைந்த ரிச பாவாவுக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
பெண்ணை இறக்கிவிட்டு தப்பிய படகு சிக்கியது
பெண்ணை இறக்கிவிட்டு தப்பிய படகு சிக்கியது
இலங்கை பெண்ணை அரிச்சல்முனையிலுள்ள மணல் திட்டில் இறக்கிவிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட படகை தமிழக கரையோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றனர்.
அரிச்சல்முனை மணல் திட்டில் நிர்க்கதியாகியிருந்த போது அந்தப் பெண் கடந்த 5 ஆம்
திகதியன்று கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் நாடு திரும்ப முயற்சித்த அப்பெண் முல்லைத்தீவை சேர்ந்தவர் ஆவார்
இவர் சென்னையிலுள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமானம் மூலமாக சென்றிருந்த நிலையில், சட்டவிரோதமாக படகு மூலம் நாடு திரும்பும் நோக்கில் தரகர் ஒருவரின் உதவியை நாடியிருந்தார்.
இதற்கமைய, இராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் அரிச்சல்முனை பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவர் அங்குள்ள மணல் திட்டில் இறக்கிவிடப்பட்டிருந்தார்.
இலங்கை படகிற்காக சுமார் 8 மணி நேரம் காத்திருந்த போதும் படகு வராத நிலையில், நிர்க்கதியாகியிருந்த பெண்ணை தமிழக கரையோர பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவரது வாக்குமூலத்திற்கு அமைய, விசாரணைகளை முன்னெடுத்த தமிழக பொலிஸார்
அரிச்சல்முனைக்கு படகை செலுத்திய சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுமா?
இலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுமா?
அண்மையில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என அரசாங்கம் கூறுகிறது.
ஆகையால், தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்த வாரம் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கொரோனா ஜனாதிபதி ஆணைக்குழு பரிசீலனை செய்த பிறகு இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சிறு வணிகங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே டாக்டர் ரமேஷ் பத்திரண பதிலளித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்றார்.
இந்த மாத இறுதிக்குள் நிலைமையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐநாவின் கேள்விக்கு இன்று இலங்கை பதில்
ஐநாவின் கேள்விக்கு இன்று இலங்கை பதில்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது ‘நில-இயல்’ கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று மாலை ஆரம்பமானது.
எதிர்வரும் எட்டாம் திகதி வரை இந்த கூட்டத் தொடர் இடம்பெறும். 40க்கும் மேற்பட்ட நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிபுணர்களும் நிறுவனங்களும் முன்வைத்துள்ள சுமார் 90 அறிக்கைகள் குறித்து இந்த பேரவைகள் கலந்துரையாடப்படும்.
30க்கும் மேற்பட்ட விவாதங்களும் இடம்பெறும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பச்சிலட் பேரவையின் முதலாவது தினமான நேற்று தனது வருடாந்த அறிக்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட விடயங்களை முன்வைத்தார்.
இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அவர் முன்வைத்த விடயங்கள் விசேட கவனத்தை ஈர்த்தது.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 16 எல்ரிரிஈ முன்னாள் உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டதை அவர் பாராட்டினார். ஜனாதிபதி சிவில்
நெல் சந்தைப்படுத்தும் சபை ,போட்டி விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு
நெல் சந்தைப்படுத்தும் சபை ,போட்டி விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு
தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக நெல் அறுவடையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக ஒரு கிலோ நாட்டரிசி நெல்லை 55ரூபாவுக்கு போட்டி விலையில்; நெல்
சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்யும் என்று அமைச்சரவை இணை பேச்சாளரும் பெருந்தோட்ட அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண தெரிவித்தார்..
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாடு இன்று (14) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் இதனை
தெரிவித்தார். அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் மொஹான் சமரநாயக்க ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
சிறுபோக நெல் கொள்வனவு தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
08.2021 சிறுபோக நெல் கொள்வனவு வேலைத்திட்டம்
2021 சிறுபோக அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின் நெல் அறுவடையை போட்டி விலையில் கொள்வனவு செய்யும் நோக்கில் நாடு ஒரு கிலோ 55ஃ-
ரூபாவுக்கு நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் கொள்வனவு செய்வதற்கும், அவ்வாறு கொள்வனவு செய்யும் நெல்லை அரிசியாக்கி சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பிள்ளையார் கோவில் சுவரில் புத்தர் – வெடித்த சர்ச்சை
பிள்ளையார் கோவில் சுவரில் புத்தர் – வெடித்த சர்ச்சை
யாழ். பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான பிள்ளையார் குளத்தைச் சுற்றி, பௌத்த கொடிகளில் காணப்படும் வர்ணங்களை ஒத்தவகையில் நிறம் தீட்டும் செயற்பாடு இடம்பெற்று வருகிறது.
உலக வங்கியின் நிதி அனுசரணையுடன், மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்ற பிள்ளையார் குளத்தின் சுற்று கம்பங்களுக்கே, இவ்வாறு பௌத்த கொடிகளில் உள்ள நிறங்களை பொறிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
1996ஆம் ஆண்டு 1.51(0.6063) ஏக்கராக இருந்த இந்தக் குளத்தின் பரப்பளவு 2013ஆம் ஆண்டு மீள அளக்கப்பட்ட போது, 1.26(0.5078) ஏக்கராக குறைவடைந்துள்ளமை தெரியவந்தது.
இவ்வாறான நிலையில், குறித்த குளம் தற்போது புனரமைக்கப்பட்டு வரும் நிலையில், குளத்திலிருந்து தூர்வாரப்பட்டு மண்ணை மீண்டும் குளத்தின் சுற்றுப்புறங்களில் கொட்டியதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.
இவ்வாறான நிலையில், அவர் பார்வையிட்டு சென்ற நிலையில், இவ்வாறு இடம்பெறுவது பலருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.
பரந்தன் ,கண்டாவளை ஆகிய பகுதிகளில் இரு கமநல சேவை நிலையங்கள்
பரந்தன் ,கண்டாவளை ஆகிய பகுதிகளில் இரு கமநல சேவை நிலையங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் கண்டாவளை ஆகிய பகுதிகளில் இரு கமநல சேவை நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான வேலைத் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 23 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய செய்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் செய்கையாளர்களுக்கான சேவையை வழங்கும் விதமாக கிளிநொச்சி கமநல சேவை மையம் காணப்படுகின்றது
குமரபுரம் பரந்தன் உமையாள்புரம் ஆனையிறவு தட்டுவன்கொட்டி கோரக்கன் கட்டு ஆகிய 6 கிராம அலுவலர் பிரிவுகளைக் உள்ளடக்கிய வகையில் சுமார் எண்ணாயிரத்து 413 வயல்களிலும் 950 ஏக்கர் ஐம்பத்தி ஆறு ஏக்கர் நிலம் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் 1883 விவசாய
குடும்பங்களுக்கு சேவை வழங்கும் வகையில் பரந்தன் கமநல சேவை நிலையத்தினையும் ,ஊரியான் முரசுமோட்டை கண்டாவளை ஆகிய மூன்று கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய
வகையில் பதினோராயிரத்தி 371 ஏக்கர் வயல்களிலும் 668 ஏக்கர் மேட்டுக்காணிகளிலும் பயிர் செய்கை மேற்கொள்ளும் 1443 விவசாய குடும்பங்களுக்கு சேவை வழங்கும் வகையில்
கண்டாவளை கமநல சேவை நிலையத்தினை அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
சோதனைச் சாவடிகளில் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை
சோதனைச் சாவடிகளில் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை
மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில் நாளை மறுதினம் (15 ஆம் திகதி) முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டையை பரிசோதிக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பீ.சி.ஆர். அல்லது அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முடிவுக்கு வருகின்ற நிலையில் உள்ளது.இதன் அடிப்படையில் இது வரையில் 71,396 பேர் முதலாவது கொரோனா தடுப்பூசியையும் , 56,363 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
30 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 30 வீதமாகும், 2 வது தடுப்பூசியை பெற்றவர்களின் எண்ணிக்கை 68 வீதமாகும்
கடந்த வாரம் முதல் தெரிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களில் கடமையாற்றுகின்ற 30 வயதிற்கு இடைப்பட்ட வர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப் பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது.
அத்தோடு விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன., தரவுகளும், சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.என்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
கடந்த இரு நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 101 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் 66 பேர் நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்கள்.
இவர்களில் அதிகமானவர்கள் மன்னார், வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
தற்போது வரை 1966 கொரோனா தொற்றாளர்களும்,இவ்வருடம் மாத்திரம் 1949 தொற்றாளர்களும்,இந்த மாதம் 282 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு கொத்தணி உடன் தொடர்புடைய 1613 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா தொற்றாளர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் கடைசியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை 63 வயதுடைய ஆண் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை 30 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத அனைவருக்கும் நாளையும்; தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது. கட்டையடம்பன் மகா வித்தியாலயத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
30 வயதிற்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பீ.சி.ஆர். அல்லது அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டால் அவர்களை இடை நிலை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் என்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மேலும் தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம்
இலங்கை மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம்
2021 செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷ அவர்களினால், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அவர் தனது கடமைகளை, இம்மாதம் 15ஆம் திகதியன்று பொறுப்பேற்கவுள்ளார்.
பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால் அவர்கள், இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகக்
கடமையாற்றியுள்ளதோடு, சுமார் 9 வருடக் காலப்பகுதி வரை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







