Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றில் போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றில் போராட்டம்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உர தட்டுப்பாட்டிற்கு விரைவில் உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கதை வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற சபா பிடத்தில் இவ்வாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

கையில் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Posted in இலங்கை செய்திகள்

பெண்ணுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்

பெண்ணுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்

மனிதர்களுக்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் விலங்குகளின் உறுப்புகளைப் பயன்படுத்துவதற்கான சோதனைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி சோதனையை மேற்கொண்ட மருத்துவர்கள், சோதனை வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.

சிறுநீரகச் செயல்பாடு முடக்கப் பிரச்னையுடன் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் பெற்றோரது அனுமதி பெற்று, அவருக்கு வென்டிலேட்டர் சப்போர்ட் எடுக்கப்படுவதற்கு முன்னதாக இந்தச் சோதனையை மருத்துவர்கள் நியூயார்க் நகரத்தில் உள்ள NYU Langone மருத்துவ மையத்தில் மேற்கொண்டுள்ளனர்.

மனிதர்களுக்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் விலங்குகளின் உறுப்புகளைப் பயன்படுத்துவதற்கான சோதனைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதற்கான தேவையும் தற்காலத்தில் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 1,07,000 பேர் மாற்று உறுப்பு அறுவைசிகிச்சைக்காகக்

மனித உடலுறுப்புகள் மாற்று சிகிச்சைக்கு, உறுப்புகள் கிடைப்பது மிகப்பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. கள்ளச் சந்தையில் உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் அவலமும் தொடர்கிறது.

இந்தச் சூழல் ஓரளவு மாற, உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு உலகம் முழுவதும் நடைபெற்று வந்தாலும், விலங்கின் உறுப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்வது முக்கியமான தீர்வுக்கான முதல்படி என மருத்துவ உலகம் நம்புகிறது.

சிறுநீரகம், ரத்தத்தில் இருக்கும் கழிவுகள் மற்றும் தேவையற்ற திரவத்தை வெளியேற்ற செயல்படும் உறுப்பு. இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற மேலே குறிப்பிட்ட அறுவை சிகிச்சையில், பன்றியின் சிறுநீரகத்தை மூளைச் சாவு அடைந்த பெண்ணின் ரத்த நாளங்களில் பொருத்தி, அதை மூன்று நாள்களுக்குக் கண்காணித்தனர். சிறுநீரகம் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் சரிவர செயல்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

17-ம் நூற்றாண்டு முதலே விலங்கின் உடலுறுப்புகளை மனிதனுக்கு மாற்றுவதற்கான மருத்துவ அறிவியல் யோசனைகள் பிறக்கத் தொடங்கின. ஆரம்பத்தில் ரத்தமாற்று சிகிச்சைக்காக விலங்கு ரத்தம் மனிதனுக்குச் செலுத்தப்பட்டு அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

20-ம் நூற்றாண்டில் விலங்குகளின் உறுப்புகளை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். உயிரிழக்கவிருந்த குழந்தை, 21 நாள்கள் மனிதக் குரங்கின் இதயத்தைக் கொண்டு இதற்கு முன்பு உயிர்பிழைத்திருந்தது.

ஆனால், மனிதர்களுக்கு பன்றிகள்தான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் குரங்குகளை விட வெற்றிக்கான அதிக சாத்தியக் கூறுகளைக் கொண்டுள்ளன. எனவேதான் இந்த முயற்சியில் பன்றிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது முதல்கட்ட பரிசோதனை வெற்றி பெற்றிருப்பதையடுத்து, சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நோயாளிகளை நோக்கி அடுத்தகட்டப் பரிசோதனைகள் இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

Posted in Uncategorized

பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும்- அறிவிப்பு

பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும்- அறிவிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள், ஒக்டோபர் மாதம்31ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் அமுலில் இருக்குமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும்

என்று கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு இல்லை – அமைச்சர்

நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு இல்லை – அமைச்சர்

நாட்டில் எரிபொருளுக்கு எந்தவொரு தட்டுப்பாடும் இல்லையென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் அவசியமற்ற வகையில் பீதிகொள்ளத் தேவையில்லை.

கடந்த 4 மாத காலமாக தொழிற்சங்கங்களும் எதிர்க்கட்சியினரும் அடிக்கடி எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என அடிப்படையற்ற வகையிலான கருத்துக்களை வெளியிட்டு

வருகின்றனர். எனினும், எரிபொருளுக்கு அவ்வாறான தட்டுப்பாடு இல்லையென அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

    Posted in Uncategorized

    சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தற்காலிக தடை

    சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தற்காலிக தடை

    வெல்லவாய – வெலியார பிரதேசத்திற்கு சுற்றுலாப் பிரயாணிகள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

    குறித்த பிரதேசத்திற்கு கடந்த சில தினங்களில் சென்ற சிலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதன் காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சுற்றுலா செயற்றிட்டத்தின் கீழ் பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட பின்னர் குறித்த பிரதேசம் மீண்டும் சுற்றுலாப் பிரயாணிகளுக்குத் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்

      Posted in இலங்கை செய்திகள்

      உயிர் குடித்த வேகம் – கண்ணீரில் கண்கள்

      உயிர் குடித்த வேகம் – கண்ணீரில் கண்கள்

      தவரன்குளம் – அனுராதபுரம் வீதியின் வங்கி ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

      20 வயதுடைய குருன்தன்குளம் பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

      அதிக வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

      விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

        Posted in சினிமா

        நயன்தாராவை காதலித்து ஆறு வருடம் – காதலன் நெகிழ்ச்சி

        நயன்தாராவை காதலித்து ஆறு வருடம் – காதலன் நெகிழ்ச்சி

        இயக்குனர் பாடலாசிரியராக இருக்கும் விக்னேஷ் சிவன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

        6 ஆண்டுகள் ஆகிவிட்டது – விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி
        நயன்தாரா – விக்னேஷ் சிவன்


        இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போடா போடி. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு ‘நானும் ரவுடி தான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதில் நயன்தாரா

        மற்றும் விஜய் சேதுபதி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படமும் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது.

        நானும் ரவுடி தான் படத்தின் மூலம் ஒன்றாக இணைந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிஜ வாழ்க்கையிலும் இணைய முடிவு செய்தனர்.

        பின்பு இருவரும் காதலிப்பதாக கூறினார்கள். மேலும் இருவரும் அடிக்கடி ஒன்றாக இணைந்து வெளிநாடுகளுக்கு சென்று நேரத்தை செலவிடுவார்கள்.

        விக்னேஷ் சிவன், நயன்தாரா வெளிநாட்டுக்கு மட்டுமில்லாமல் கோயில்களுக்கும் அடிக்கடி செல்வார்கள். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருக்கும் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.

        நயன் தாரா – விக்னேஷ் சிவன்

        இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘ நானும் ரவுடி தான்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவுப்பெற்றுள்ளது. இதனால் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில்

        நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘ 6 ஆண்டுகள் ஆகியது போல் தெரியவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

          Posted in சினிமா

          நண்பர் மீது மோசடி புகார் கொடுத்த சஞ்சனா

          நண்பர் மீது மோசடி புகார் கொடுத்த சஞ்சனா

          போதை பொருள் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் சஞ்சனா கல்ராணி, நண்பர் மீது மோசடி புகார் கூறியிருக்கிறார்.

          நண்பர் மீது மோசடி புகார் கொடுத்த சஞ்சனா கல்ராணி
          சஞ்சனா கல்ராணி


          கடந்த ஆண்டு போதை பொருள் விற்பனை மற்றும் போதை பொருள் பயன்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் கன்னட நடிகை

          சஞ்சனா கல்ராணி. தற்போது அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் விடுதலையாகி படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.

          சில நாட்களுக்கு முன்பு ஒரு கால் டாக்சி டிரைவர் சஞ்சனா மீது போலீசில் புகார் அளித்தார். கார் பயணத்தில் தன்னை ஆபாசமாக திட்டியதாக அவர் புகாரில் கூறியிருந்தார். இந்நிலையில், தனது

          நண்பர் ராகுல் டான்சி என்பவர் மீது நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கோவா மற்றும் கொழும்பில் இருக்கும் முதலீட்டு நிறுவனத்தின்

          நிர்வாக இயக்குநராக பணியாற்றுவதாக என் நண்பர் ராகுல் டான்சி கூறியிருந்தார். அவரது பேச்சை நம்பி, கடந்த 3 ஆண்டுகளாக பணத்தை முதலீடு செய்தேன்.

          சஞ்சனா கல்ராணி

          ராகுல் டான்சி உள்பட 3 பேரின் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பினேன். ஆனால், முதலீட்டுக்கான எந்தவித வட்டியையும் கொடுக்கவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டால்

          மிரட்டுகின்றனர். ராகுல் டான்சி உள்ளிட்டோர் என் பணத்தை சட்டவிரோத செயல்களில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கின்றனர். என் கவுரவத்தை பாதிக்கும் வகையில் பொய்யான

          குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

            Posted in சினிமா

            நாயகியாக களமிறங்கும் கோவை சரளா

            நாயகியாக களமிறங்கும் கோவை சரளா

            பல படங்களில் காமெடி வேடம் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய கோவை சரளா, தற்போது நாயகியாக களமிறங்க இருக்கிறார்.

            நாயகியாக களமிறங்கும் கோவை சரளா
            கோவை சரளா


            தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் கோவை சரளா. ‘வெள்ளி ரதம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர்,

            ‘முந்தானை முடிச்சு’ ‘வைதேகி காத்திருந்தாள்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

            இவர் கமல்ஹாசன் நடித்த ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்நிலையில் மைனா, கும்கி உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய பிரபு

            சாலமன் இயக்கும் புதிய படத்தில் கதையின் நாயகியாக கோவை சரளா நடிக்கவுள்ளார். பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள கோவை சரளா, தனது பேத்திக்கு நிகழ்ந்த அநீதிக்கு, நீதி வாங்கித்தரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

            கோவை சரளா

            பிரபு சாலமன், தனது வழக்கமான படங்கள் போன்று முழுக்க முழுக்க மலை சார்ந்த பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார். விரைவில் இப்படத்தின் முழு விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

              Posted in சினிமா

              வைரலாகும் அமலாபாலின் புதிய புகைப்படங்கள்

              வைரலாகும் அமலாபாலின் புதிய புகைப்படங்கள்

              பிரபல நடிகையாக இருக்கும் அமலாபால், தனது சமூக வலைத்தள பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.

              வைரலாகும் அமலாபாலின் புதிய புகைப்படங்கள்
              அமலாபால்


              தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். ஆனால் அவரது முதல் படமே சர்ச்சையை ஏற்படுத்தியது. மைனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

              அதன் பின்னர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர்

              விவாகரத்து பெற்றார். இதையடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம் போன்ற படங்கள் உள்ளன.

              அமலாபால்

              சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலாபால், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது புதிய புகைப்படங்களை பதிவு செய்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

                Posted in சினிமா

                மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை சமந்தா

                மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை சமந்தா

                தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

                மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை சமந்தா
                சமந்தா


                தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 ஆண்டுகளாக நீடித்து வந்த இவர்களது திருமண உறவு, அண்மையில் முடிவுக்கு வந்தது.

                இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது. இதைத் தொடர்ந்து சமந்தா-வின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டன.

                சமந்தா

                இந்நிலையில், விவாகரத்து விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறாக தகவல்களை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட்

                ராவ் என்கிற வழக்கறிஞர், தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாக பேசியதால், அவர்மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சமந்தா

                  Posted in சினிமா

                  ஷாருக்கான் ஜெயிலுக்கு சென்று மகனை நேரில் பார்த்து ஆறுதல்

                  ஷாருக்கான் ஜெயிலுக்கு சென்று மகனை நேரில் பார்த்து ஆறுதல்

                  போதைபொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யான் கானை, அவரது தந்தை ஷாருக்கான் இன்று நேரில் சந்தித்தார்.

                  நடிகர் ஷாருக்கான் ஜெயிலுக்கு சென்று மகனை நேரில் பார்த்து ஆறுதல்: தைரியமாக இருக்கும்படி கூறினார்
                  ஷாருக்கான்
                  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                  பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கடந்த 3-ந்தேதி சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது கூட்டாளிகள் 7 பேரும் பிடிபட்டனர். அவர்களை கைது செய்த போதை தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

                  சிறைக்குள் ஆர்யன்கான் மற்ற குற்றவாளிகளுடன் சேர்த்து அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அவரது கை செலவுக்காக ரூ.4 ஆயிரத்து 500-ஐ நடிகர் ஷாருக்கான் அனுப்பி இருந்தார்.

                  ஆர்யன்கானை ஜாமீனில் எடுப்பதற்காக நடிகர் ஷாருக்கான் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க சிறப்பு கோர்ட்டு மறுத்துவிட்டது. வாட்ஸ்அப் தகவல்களில் ஆர்யன்கான் முதன்மை குற்றவாளி என்பதற்கு ஆதாரம் இருப்பதாக கூறி அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

                  இதையடுத்து ஆர்யன்கான் மும்பை ஐகோர்ட்டில் தன்னை விடுதலை செய்யக்கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது ஆர்யன்கான் விடுதலை ஆவாரா? என்பது தெரியவரும்.

                  ஆர்யன்கானுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் அவரை அவரது குடும்பத்தினர் சந்தித்து பேச அனுமதி வழங்கப்படுவதாக மும்பை ஆர்தர் ஜெயில் நிர்வாகம் நேற்று அறிவித்தது. ஆர்யன்கான் வெளியில் இருந்து சட்ட விதிக்கு உட்பட்டு உதவிகளை பெறலாம் என்றும் சிறைத்துறை கூறி இருந்தது.

                  இதன் காரணமாக நடிகர் ஷாருக்கான் இன்று காலை 9 மணிக்கு மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறைச்சாலைக்கு சென்றார். அங்கு அவர் அனுமதி பெற்று ஆர்யன்கானை சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் மகனுடன் ஷாருக்கான் பேசிக்கொண்டு இருந்தார்.

                  அப்போது அவர் கண்ணீர் மல்க தைரியமாக இருக்கும்படி ஆர்யன்கானிடம் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பு மிகவும் உருக்கமானதாக இருந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

                  9.35 மணிக்கு ஷாருக்கான் அங்கிருந்து விடைபெற்று காரில் புறப்பட்டு சென்றார். ஷாருக்கான் சிறைக்கு வந்திருக்கும் தகவல் அறிந்ததும் ஏராளமானோர் ஆர்தர் சாலையில் குவிந்தனர். இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.

                    Posted in Uncategorized

                    தம்பியை அடித்து கொன்ற அண்ணன்

                    தம்பியை அடித்து கொன்ற அண்ணன்

                    கிரான்பாஸ், கஜீமா ​தோட்டம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது.

                    சகோதரர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற பணப்பிரச்சினை காரணமாக இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                    26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                    சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் 28 வயதுடைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                    கிரான்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

                      Posted in Uncategorized

                      குண்டை காட்டி மனைவியை மிரட்டிய கணவன்

                      குண்டை காட்டி மனைவியை மிரட்டிய கணவன்

                      கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவு பகுதியில் கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த நபரை, இம்மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.பி.அன்பர், நேற்று (20) உத்தரவிட்டார்.

                      கிண்ணியா,பூவரசந்தீவு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

                      இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவில் சேவையாற்றிய இவர், முறையான அங்கிகாரத்துடன் இராணுவ சேவையில் இருந்து விலகிவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                      கணவனுக்கும் மனைவிக்குமிடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், கணவரான முன்னாள் இராணுவ வீரர், தனது மனைவியை கைக்குண்டை காட்டி பயமுறுத்துவதற்காக பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                      சந்தேகநபர் தொடர்பாக கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபரை கைக்குண்டுடன் கைது செய்து, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

                        Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                        வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

                        வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

                        தூங்கிக் கொண்டிருந்த யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலியை திருடன் ஒருவன் அறுத்துச் சென்றுள்ள சம்பவமொன்று, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – பதுரியா நகரிலுள்ள வீடொன்றிலே நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது.

                        வீட்டார் தூங்கிக் கொண்டிருக்கும் போது, கதவை உடைத்து உள்நுழைந்த திருடன், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 10,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தையும் நகையையும் திருடிவிட்டு, தூங்கிக்

                        கொண்டிருந்த யுவதியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியையும் அறுத்துச் சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

                        இவ்வாறு திருட்டில் ஈடுபட்ட திருடன், அலுமாரியில் இருந்த விலையுயர்ந்த கையடக்கத் தொலைபேசியை திருடாமல் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

                        இத் திருட்டுச் சம்பவத்தை கண்டுபிடிக்க வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

                          Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                          அரிசி விலை மீண்டும் அதிகரிப்பு

                          அரிசி விலை மீண்டும் அதிகரிப்பு

                          பொலன்னறுவை பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் அரிசியின் விலைகளை, மீண்டும் உயர்த்தியுள்ளனர்.

                          அதன்படி, கீரி சம்பா அரிசியின் விலை கிலோவுக்கு 30 ரூபாயும், சம்பா நாட்டு அரிசி கிலோ 15 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

                          இதற்கமைய, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி 195 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம்சம்பா அரிசி 155 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் நாட்டு அரிசி 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்

                            Posted in Uncategorized

                            பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

                            பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

                            நாட்டிலுள்ள, 200 மாணவர்களை விட குறைந்த பாடசாலைகளை நாளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

                            மாணவர்களுக்கு இலவசக் கல்வியை தொடர்வதற்கான சூழலை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் பெற்றோரின் பங்களிப்போடு

                            மேற்கொள்ளப்படுகின்றன. பாடசாலைகளுக்குச் சென்று கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

                            ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க ஜனாதிபதியும் பிரதமரும் உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். காய்ச்சல் தடிமன் – சளி

                            போன்ற அடையாளங்கள் காணப்படும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று கல்வி அமைச்சு, பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான சேதன பசளை

                              கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான சேதன பசளை

                              கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு சேதன திரவம், நைதரசன் சாறு, களைநாசினி போன்றவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

                              கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இரசாயன உரங்களை முழுமையாக தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

                              இரசாயன உரப் பாவனையை தடை செய்வது என்பது, உடனடித் தீர்மானம் இல்லையெனவும் ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதன் அடிப்படையில் இரசாயன கலப்பற்ற உணவுகளை மக்களுக்கு வழங்கும் நோக்கத்திலான தீர்மானம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

                              அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக சேதனத் திரவம், நைதரசன் சாறு போன்றவற்றை உடனடியாக பெற்று விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

                              Posted in சினிமா

                              சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது

                              சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது

                              பிக்பாஸ் பிரபலம் ஒருவர், பட்டியலின சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

                              சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது
                              யுவிகா சவுத்ரி கைது செய்யப்பட்ட போது எடுத்த புகைப்படம்


                              பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி. இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தினமும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

                              அந்த வகையில் கடந்த மே மாதம் பட்டியலின சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து, இவர் வெளியிட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியது. நடிகை யுவிகா சவுதிரி மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

                              இந்நிலையில், இந்த வழக்கில் நடிகை யுவிகா சவுத்ரியை அரியானா போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை அடுத்து ஜாமீன் கோரி அவர், அரியானா ஐகோர்ட்டில் மனு

                              தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகை யுவிகா சவுத்ரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நடிகை யுவிகா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

                              Posted in சினிமா

                              பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து செய்த செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்

                              பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து செய்த செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்

                              நமீதா மாரிமுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், தற்போது முதன்முறையாக தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

                              பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து செய்த செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்
                              நமீதா மாரிமுத்து


                              பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 3-ந் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 18

                              போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நமீதா மாரிமுத்து என்கிற திருநங்கையும் ஒருவர். தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்துகொண்டது இதுவே முதன்முறை.

                              இந்நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து, தான் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து பேசியது காண்போரை கண்கலங்க வைத்தது. இதன்மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நமீதா, அந்நிகழ்ச்சியில் இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஒரே வாரத்தில் வெளியேறினார்.

                              பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், தற்போது முதன்முறையாக தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில், அவர் ஏழை

                              மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நமீதா மாரிமுத்துவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.