Author: நலன் விரும்பி
கத்தியால் குத்தி ஒருவர் கொலை
கத்தியால் குத்தி ஒருவர் கொலை
நிட்டம்புவ – ஹொரகொல்ல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில்
ஏற்பட்ட சண்டை காரணமாக கத்தி குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
முச்சக்கரவண்டி சாரதிக்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும் இடையில் ஏற்பட்ட
வாய்த்தர்க்கமே இந்த கத்தி குத்துக்கான காரணம் என பொலிஸார் கூறுகின்றனர்.
சம்பவத்தில் 29 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு உபரணங்கள் வழங்கி வைப்பு!
கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு உபரணங்கள் வழங்கி வைப்பு!
பைஷல் இஸ்மாயில் –
கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (18) கல்முனை பிராந்திய ஆயுள்வேத
இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் தலைமையில் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில்
இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் பிரதம அதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.ஆர்.எம்.தெளபீக், கல்முனை பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ், இராஜாங்க அமைச்சர் சிறிர ஜயக்கொடியின் கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளின் அபிவிருத்தி இணைப்பு அதிகாரி வைத்தியர் ஏ.சி.டில்சாத், கிழக்கு மாகாண
சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளர் சுலைமாலெப்பை நாசிறூன் ஆகியோர் கெளரவ அதிகளாக கலந்துகொண்டனர்.
கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை, நிந்தவூர் மற்றும் கல்முனை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை, திருக்கோவில் கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலை,
முகம்மதியாபுரம் மருந்து உற்பத்தி நிலையம், காரைதீவு, மருதமுனை மத்திய மருந்தகம் போன்ற இடங்களுக்கான வைத்திய உபகரணங்கள் மற்றும் தளபாடப்
பொருட்களை குறித்த நிறுவனத்தின் வைத்திய பொறுப்பதிகாரிகளிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்ற நோயாளிகளை கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள
மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் பார்வையிட்டதுடன் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
நாங்கள் உங்களை கப்பபோம் – யாழில் மகிந்தா பேச்சு
நாங்கள் உங்களை கப்பபோம் – யாழில் மகிந்தா பேச்சு
யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது.
விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்தியநிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. யாழ்ப்பாணம், மட்டுவில் நகருக்கு வருகை தந்த கௌரவ பிரதமருக்கு அப்பகுதி மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன், யாழ் விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்து நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.
சேதன பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை மற்றும் நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இந்த விசேட பொருளாதார மத்தியநிலையத்திற்கு பதுளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் யாழ் சந்தையிலிருந்து அத்தியாவசிய மரக்கறிகள் மற்றும் பழங்கள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாண விசேட பொருளாதார மத்தியநிலையத்தை திறந்து வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய முழுமையான உரை வருமாறு, உங்கள் அனைவரையும் சந்திப்பதில் சந்தோஷம் என தமிழில் உரையாற்றினார்.
யாழ்ப்பாணத்தின் மூன்று யுகங்களை நான் கண்டிருக்கிறேன். 1970களில் யாழ்ப்பாணம் எப்படி இருந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது யாழ் மக்களுக்கும் கொழும்பு மக்களுக்கும் இடையே சிறந்த தொடர்பு இருந்தது. யாழ்ப்பாணத்தில் சிங்கள முதலாளிமார் இருந்தார்கள்.
இங்கிருந்த பெரும்பாலான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது கொழும்பில் இருந்தனர். இன்றும் அப்படித்தான். யாழ்ப்பாணத்திலிருந்து ரயிலிலே கொழும்பு வந்துசென்றனர்.
கொழும்பில் பணிபுரியும் அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மாலை ரயிலில் ஏறி காலையில் யாழ்ப்பாணத்தை சென்றடைவர். அது ஒரு காலம். அந்தக் காலத்தில் யாழ்ப்பாணம் எங்களுக்கு வெகு தொலைவில் இல்லை. மிக நெருக்கமாக உணர்ந்தோம்.
அந்த சகாப்தம் 1980க்குப் பின்னர் திடீரென மறைந்தது. யாழ்ப்பாணம் செல்லும் ரயில் பாதையை உடைத்தனர். தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் செல்ல வேண்டிய யாழ்தேவி நின்றது. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பண்பாட்டுப் பாலமாக யாழ்தேவியைப் பார்க்கிறேன்.
வடக்கு மக்கள் சுதந்திரத்தை இழக்க ஆரம்பித்தனர். வடக்கில் விவசாயி நெல் வயலுக்குச் செல்ல முடியவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. வடக்கு பதுங்கு குழியாக மாறியது.
சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் உரிமையை இழந்தனர். எந்த நேரத்திலும் தமது சொந்த வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது.
வடக்கில் உள்ள மக்கள் அகதிகளாக பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆரம்ப காலத்தில் இந்தியாவிற்கும் சென்றனர். ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றனர். அவர்களுக்கு தாயகம் இருந்தாலும் அங்கு சுதந்திரமாக வாழமுடியாமல், தெரியாத பிரதேசங்களிலும், நாடுகளிலும் அகதிகளாக வாழ வேண்டியதாயிற்று.
30 ஆண்டுகளாக அந்த இருண்ட சகாப்தம் இருந்தது. அந்த இருண்ட காலத்தில் வடக்கு மக்களின் வாழ்வுரிமையும் அபிவிருத்தியும் பறிக்கப்பட்டன. மே 19, 2019 அன்று அந்த இருண்ட சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது. அதன் பின்னர் வடக்கு மக்கள் இழந்த உயிர்களை தவிர அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம்.
யுத்தம் முடிவடையும் போது இன்று வடக்கில் உள்ள எதையும் அன்று காணமுடியவில்லை. சுட்டு வீழ்த்தப்பட்ட கட்டிடங்கள், உடைந்த சாலைகள், வீடற்ற மக்கள். ஆனால் ஓரிரு வருடங்களில் அனைத்தையும் திருப்பிக் கொடுத்தோம். சாலைகள் அமைக்கப்பட்டன, தண்ணீர் வழங்கப்பட்டன, நூறாயிரக்கணக்கான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன. மின்னல் வேகத்தில் மின்சாரம் கொடுக்கப்பட்டது என்று சொல்வதே சரியாக இருக்கும். பாடசாலைகள், மருத்துவமனைகள், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் கட்டப்பட்டன.
அன்று வடக்கு மக்கள் சாப்பிடுவதற்கும், பல் துலக்குவதற்கும் மட்டுமே வாய் திறக்கிறார்கள் என்ற கதை காணப்பட்டது. அந்த மக்களை நாம் விடுவித்தோம். பல ஆண்டுகள் கழித்து ரயில் பாதை அமைக்கப்பட்டது. வடக்கும் தெற்கும் யாழ்தேவியால் இணைக்கப்பட்டன. வடக்கில் மாகாண சபை மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டது.
ஆனால் அந்த சகாப்தத்திற்கு 2015 இல் இடையூறு ஏற்பட்டது. 2015இன் பின்னர் நாங்கள் நாங்கள் செய்த வேலைகள் இடைநிறுத்தப்பட்டன. நல்லிணக்கம் என்ற திட்டம் வந்தது.
அவசரகாலச் சட்டங்களை நீக்கி நாம் ஏற்படுத்திய மாகாண சபை நல்லாட்சியுடன் கலைக்கப்பட்டது. நல்லாட்சி காலத்தில் ஒரு வீதி அபிவிருத்தியோ அல்லது மின்சார திட்டமோ யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கவில்லை. நாட்டிற்கும் கிடைக்கவில்லை.
புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டிருந்தால் யாழ்ப்பாண மக்கள் இன்று இருளில் மூழ்கியிருக்க மாட்டார்கள்.
ஆனால் அந்த நல்லிணக்கத் திட்டத்திற்காக பில்லியன்கள் செலவிடப்பட்டன.
சமாதானம் பற்றிய பாடலுக்கு பில்லியன்கள் செலவழிக்கப்பட்டன. யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு குடிநீர் குழாய் வழங்கப்படவில்லை.
நாங்கள் செய்து கொண்டிருந்த பணி 2015ல் நிறுத்தப்பட்டது. நாம் அதை மீண்டும் தொடங்க வேண்டும். 2019ஆம் ஆண்டு மீண்டும் இந்த நாட்டைக் கைப்பற்றிய போது, நல்லாட்சியின் மூலம் பின்னோக்கிச் சென்ற நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப திட்டமிட்டோம்.
ஆனால் திடீரென்று கொவிட் தொற்று ஏற்பட்டது. அந்த நேரத்தில் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் எமது மக்களைப் பாதுகாக்கவே விரும்பினோம். நாம் அதை செய்தோம்.
வடக்கு மக்களைப் போன்று தென்னிலங்கை மக்களையும் தொற்று நோயிலிருந்து பாதுகாக்க முடிந்தது.
உங்கள் மாகாணங்களில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளையும், மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளையும் ஆரம்பிப்போம் என உறுதியளிக்கின்றோம். உங்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் தெரிவித்தார்.
தொடர்ந்து நாம் உங்களை மறக்கமாட்டோம். கைவிடமாட்டோம் என தமிழில் உரையாற்றினார்.
120 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் கடத்தல்
120 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் கடத்தல்
இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு 120 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட நபரொருவரை ஆர்மர் வீதி பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குறித்த தங்கத்தை கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு எடுத்து செல்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு கொண்டுசெல்லும் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மோசடியில் ஈடுபட்ட மற்றுமொருவர் இன்று யாழ்ப்பாணம் மாதகல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
இலங்கையில் ஒரு காஸ் சிலிண்டர் 4,199 ரூபாவாக அதிகரிப்பு
இலங்கையில் ஒரு காஸ் சிலிண்டர் 4,199 ரூபாவாக அதிகரிப்பு
இலங்கையில் 12.5kg domestic LP gas cylinder ஒன்றின் விழி 4,199 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது
தொடர்ந்து எரிவாயுவுக்கு தட்டு பாடு நிலவுவதால் மக்கள் சொல்லென்னா துயரில் சிக்கி தவித்து வருகின்றனர்
இலங்கை வாழ் மக்கள் இந்த பொருளாதார நெருக்கடியில் வாழ்வது எப்படி என தெரியாது தவித்து வருகின்றனர்
புதுக்குடியிருப்பில் மாணவன் கடத்தல்
புதுக்குடியிருப்பில் மாணவன் கடத்தல்
புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் வெள்ளைவானில் கடத்தி
செல்ல பட்டுளளார் , கடத்தி செல்ல பட்ட இவர் அந்த வானில் இருந்து தப்பித்து வந்துள்ளார்
இவரை கடத்திய அதே வானில் இருவர் கடத்த பட்டு கால்கள் கட்டப்பட்டு ,வாய்க்கு
பிலஸ்ட்ரார் ஓட்ட பட்டு இருந்துள்ளதாக தப்பி வந்த மாணவர் தெரிவித்துள்ளார்
பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான இவர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
குறித்த கடத்தல் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கையில் ஒரு கப் தேநீர் 100 ரூபா
இலங்கையில் ஒரு கப் தேநீர் 100 ரூபா
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாள்தோறும்
பொருட்களின் விலை ஏற்ற பட்டு வருகிறது
இதறகு அமைய ஒரு கப் தேநீர் நூறு ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது
அத்துடன் பால்மா விலை எரிபொருள் விலை மீளவும் அதிகரிக்க பட்டுள்ளது
மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தவர் மயங்கி விழுந்து மரணம்
மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தவர் மயங்கி விழுந்து மரணம்
கண்டி வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதானவர், மண்ணெண்ணெய்
வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த போது, மயங்கி விழுந்து நேற்று (19) உயிரிழந்திருந்தார்.
மாகொலையைச் சேர்ந்த ஓட்டோ சாரதியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். மயங்கி
விழுந்தவர், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்
மரணமடைந்துவிட்டார் என கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடவத்தையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில்
காத்திருந்த 70 வயது முதியவர் மயங்கி விழுந்து இன்று ( 20) உயிரிழந்துள்ளார்
குப்பைகளினால் நாறும் கொழும்பு
குப்பைகளினால் நாறும் கொழும்பு
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு நகரின் சில பகுதிகளில் குப்பை
சேகரிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் (CMC) மூத்த உறுப்பினர் மகேந்திர டி சில்வா இன்று தெரிவித்தார்.
கங்காராம பிரதேசம், நாரஹேன்பிட்டி, பொரளை மற்றும் தெமட்டகொட
பிரதேசங்களில் குப்பைகளை சேகரிக்கும் பாரவூர்திகளில் எரிபொருள் தீர்ந்துள்ளதால் குப்பை சேகரிப்பு ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கழிவுகளை அகற்றுவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட மற்ற
பகுதிகளில் சேவை முன்னெடுக்கப்படுவதாகவும், எனினும், மேற்குறிப்பிட்ட இந்த பகுதிகளில் குப்பை சேகரிப்பு CMC மூலம் செய்யப்படுகிறது.
தனியார் ஒப்பந்ததாரர் லொரிகளுக்கு தேவையான எரிபொருளை கையில் எடுத்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் பிரச்சினை காரணமாக கொழும்பு நகரில் குப்பைகள் சேகரிக்கப்படுவது மார்ச் முதல் வாரத்திலும் பாதிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது
யாழில் மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
யாழில் மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள் வீதியில் வழிமறிக்கப்பட்டு வாகன ஓட்டுநர் பொலிஸாரின் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை இன்று திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிலையில் குறித்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
அதில் கலந்து கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பேருந்தில் வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மட்டுவில் அம்மன் கோவிலுக்கு
அருகில் வழிமறித்த பொலிஸார், வாகனத்தில் இருந்து எவரையும் இறங்க விடாதவாறு, வாகனத்தின் இரு வாசல்களிலும் காவலுக்கு நிற்கும் நிலையில் ஓட்டுநரை கடுமையான விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.
இதேவேளை, பொலிஸாரின் காவலையும் மீறி பஸ்ஸில் இருந்து இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியில் அழுது புரண்டு போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய நிலைய பகுதியில் பெருமளவான பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
லண்டன் Maidstone பகுதியில் 5 போலீசாரை அடித்து காயப்படுத்திய பெண்
லண்டன் Maidstone பகுதியில் 5 போலீசாரை அடித்து காயப்படுத்திய பெண்
லண்டன் Maidstone பகுதியில் ஐந்து காவல்துரை ஊழியர்களை பெண் ஒருவர் மதுபான
போத்தல்கள் மூலம் தாக்குதலை நடத்தி காய படுத்தியுள்ளார்
அதிக போதையில் ரகளை புரிந்த பெண் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்
போலீசாருக்கு பாரிய காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது
லண்டன்,பிரான்ஸ் ,கப்பல் சேவைகள் முடக்கம் – மக்கள் அவதி
லண்டன்,பிரான்ஸ் ,கப்பல் சேவைகள் முடக்கம் – மக்கள் அவதி
பிரிட்டன் டோவரில் இருந்து பிரான்ஸ் கலை நோக்கி பயணிக்கும் கப்பல் சேவை இரத்து செய்ய பட்டுள்ளது
இந்த கப்பல் சேவை இரத்தினால் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளது
மேலும் இந்த கப்பல் போக்குவரத்து கொலண்ட் ரொட்டர்டாம் பகுதிக்கு இடம்பெற்று வருகிறது அந்த பயணமும் இரத்து செய்ய பட்டுள்ளது
பிரிட்டன் பிரனஸ்க்கு இடையிலான ஊழியர்கள் விலகலே இதற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
மத்திய தரை கடலில் ஈரான் இராணுவம் திடீர் ரோந்து காவல்
மத்திய தரை கடலில் ஈரான் இராணுவம் திடீர் ரோந்து காவல்
ஈரான் எல்லை பகுதி ஊடாக எதிரிகள் ஊடுருவி தாக்குதலை நடத்த கூடும் என்பதல்
ஈரான் இராணுவத்தின் கடல் படையினர் விசேட சுற்று காவல் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
உளவு விமானங்கள் தகவல் வழங்க கடல் படையினர் குழு குழுவாக இந்த சுற்று காவல் நடவடிக்கையில் ஈடு பட்டுளள்னர்
இலகுரக கலங்கள் முதல் அதி நவீன மிதக்கும் போர் கப்பல்கள் வரை
இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
ரசியா இராணுவத்தால் உக்கிரேன் ஊடக நபர் கடத்தல்
ரசியா இராணுவத்தால் உக்கிரேன் ஊடக நபர் கடத்தல்
உக்கிரேன் மீது ரஷியா இராணுவம் 25 நாட்கள் கழிந்து போரினை நடத்தி வருகிறது
உக்கிரேன் முற்றாக வீழ்ச்சி அடையும் நிலையில் உள்ளது
சுருங்க கூறின் இறுதி கட்ட தாக்குதல்கள் அகோரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இவ்வேளை உக்கிரேன் அரசுக்கும் இராணுவத்திற்கு ஆதரவாகவும் ,ரசியா அரசுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த முக்கிய
ஊடக நபர் ஒருவரை ரசியா இராணுவம் கடத்தி சென்றுள்ளதாக உக்கிரேன் குற்ற சுமத்தியுள்ளது
இணையத்தை கலக்கும் ஜாலியோ ஜிம்கானா
இணையத்தை கலக்கும் ஜாலியோ ஜிம்கானா
விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் இடம் பெற்றிருக்கும் 2வது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இணையத்தை கலக்கும் ஜாலியோ ஜிம்கானா…. பீஸ்ட் 2வது சிங்கிள்
பீஸ்ட் படத்தில் விஜய் – பூஜா ஹெக்டே
‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே
கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தற்போது பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல்
மாதம் வெளியாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முதல் சிங்கிளான அரபிக் குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் 2வது சிங்கிளான ‘ஜாலியோ ஜிம்கானா…’ என்ற பாடலை படக்குழுவினர்
இன்று வெளியிட்டனர். விஜய் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து இணையத்தை கலக்
ரஜினி ஒரு சிறந்த கதாசிரியர் – இளையராஜா
ரஜினி ஒரு சிறந்த கதாசிரியர் – இளையராஜா
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இளையராஜாவின் இசைக்கச்சேரியில், ரஜினியை பற்றி பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.
ரஜினி ஒரு சிறந்த கதாசிரியர் – இளையராஜா புகழாரம்
ரஜினி – இளையராஜா
இளையராஜாவின் இசைக்கச்சேரி ராக் வித் ராஜா என்ற பெயரில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. முதல் முறையாகத் தமிழ்நாடு சுற்றுலா இந்த நிகழ்ச்சிக்காக இடத்தைக் கொடுத்திருந்தது. பதினைந்தாயிரம் பேர் கலந்து கொண்ட
இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், காவல்துறையை சேர்ந்த உயரதிகாரிகள் பலரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தனுஷ், கங்கை அமரன் உட்பட திரையுலகினர்
பலரும் கலந்து கொண்டனர். வான வேடிக்கை முழங்க, ரசிகர்கள் எழுந்து நின்று கரகோசம் செய்தனர். சரியாக 7.20 மணிக்கு இளையராஜா மேடைக்கு வந்து தனது ஜனனி ஜனனி பாடலோடு ஆரம்பித்தார்.
அடுத்தடுத்து இளமை இதோ..இதோ. மாமன் வூடு மச்சு வூடு, ராக்கு முத்து ராக்கு, நிலாவே வா, மேகம் கொட்டட்டும், என் உள்ளே போன்ற பாடல்கள் ஒலித்தன.
எஸ்.பி.பாலசுப்ரமணியன் பாடலை சரணும், மனோவும், பாடினார்கள். ஆனால் அந்த இடத்தை அவர்களால் எட்ட முடியவில்லை. எஸ்.பி.பி., லதா மங்கேஷ்கருக்கு ஒரு நிமிடம்
மௌன அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியின் இடையே இளையராஜா பேசியதாவது,
என் பால்ய சினேகிதன் பாலு இந்த நேரத்தில் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. அநியாயமாக கொரோனாவால் இறந்து விட்டார். வள்ளி படத்தில் இடம் பெற்ற
என்னுள்ளே பாடலைக்கேட்டுக் கைதட்டினீர்கள். அந்த பாடல் அவ்வளவு அழகாக இருக்கக் காரணம் ரஜினிகாந்த் என்னிடம் கதையை அப்படி அழகாக விளக்கினார்.
ரஜினி – இளையராஜா
அவரை ஒரு நடிகராக நான் பார்த்திருக்கிறேன். அவருக்குள் ஒரு சிறந்த திரைக்கதையாசிரியர் இருந்ததை நான் அன்றுதான் பார்த்தேன். நல்ல கதாசிரியர்
ரஜினி. என்று புகழ்ந்து பேசிவிட்டு தனுஷ் எழுந்து நில்லு இந்தப் பாடல் இவ்வளவு அழகாக வர உன் மாமனார்தான் காரணம் என்று கூறினார். இதைக்கேட்டு ரசிகர்கள் கரகோசம் செய்தனர்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் எண்பதுகளின் மெலடி பாடல்களைப் பாடி ரசிகர்களை உற்சாகம் குறையாமல் வைத்தார் இளையராஜா.
நோர்வேயில் அமெரிக்கா போர் விமானம் மாயம் – தேடும் இராணுவம்
நோர்வேயில் அமெரிக்கா போர் விமானம் மாயம் – தேடும் இராணுவம்
வடக்கு நோர்வையில் தளம் அமைத்து தங்கியுள்ள அமெரிக்கா இராணுவத்தின் MV-22B ரக போர் விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது
இவ்வேளை இந்த விமானத்தில் நான்கு பேர் இருந்ததாகவும் இவர்களுக்கு என்ன ஆனது
என்பது தொடர்பில் தெரியாது இராணுவம் திணறி வருகிறது
விமானம் கடத்த பட்டதா அல்லது சுட்டு வீழ்த்த பட்டதா என்பது தொடர்பில்
விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
சீனாவில் பரவும் புதியவகை கொரனோ – பல்லாயிரம் பேர் பாதிப்பு
.
சீனாவில் பரவும் புதியவகை கொரனோ – பல்லாயிரம் பேர் பாதிப்பு
சீனாவில் தற்போது புதிய கொரனோ நோயானது பரவி வருகிரது ,இந்த நோயின்
தாக்குதலில் இருந்து மீள சீனாவை காப்பாற்றி கொள்ள பல நகரங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன
இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 2,228 பேர் பாதிக்க பட்டும் ஒருவர்
மரணமடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது
சீனாவை துரத்தும் இந்த நோயானது விரைவில் ஐரோப்பா எங்கும் பரவ கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது
அந்த நடிகையை திருமணம் செய்யும் இந்த நடிகர்
அந்த நடிகையை திருமணம் செய்யும் இந்த நடிகர்
டார்லிங், சார்லி சாப்ளின் படங்களில் நடித்த நிக்கி கல்ராணியை ஈரம் படம் அறிமுகமான நடிகர் ஆதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிக்கி கல்ராணியை திருமணம் செய்யும் ஆதி
ஆதி – நிக்கி கல்ராணி
தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்
. நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் யாகவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயபட்டதாக கூறப்பட்டது. இதனை அவர்கள் மறுக்கவில்லை.
ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சிகளில் நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி நெருக்கத்தை உறுதிப்படுத்தியது. மிருகம் படத்தில் ஆதி
அறிமுகமாகி ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம், யு டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
ஆதி – நிக்கி கல்ராணி
இந்த நிலையில் நிக்கி கல்ராணிக்கும், ஆதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும்
கூறப்படுகிறது. ஆனாலும் இதனை இருவர் தரப்பிலும் உறுதிப்படுத்தவில்லை
ஏமாற்றம்தான்-நம்பிக்கையுடன் இருக்கிறேன் – ஹன்சிகா
ஏமாற்றம்தான்-நம்பிக்கையுடன் இருக்கிறேன் – ஹன்சிகா
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா, தன்னுடைய படம் பற்றி சமீபத்தில் பேட்டியளித்து இருக்கிறார்.
ஏமாற்றம்தான்… ஆனால் நம்பிக்கையுடன் இருக்கிறேன் – ஹன்சிகா
ஹன்சிகா
நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மஹா’. இது அவருடைய 50வது திரைப்படம். இதில் நடிகர் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் ஶ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா, பேபி மானஸ்வி, மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மஹா படம் நீண்ட காலமாக உருவாகி வருகிறது. இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. உங்களின் 50வது படம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்பது
உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா? என்று ஹன்சிகாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஆமா, வருத்தமாக இருக்குது என்று நான் சொல்லமாட்டேன், ஆனால் அதற்கு இவ்வளவு காலம் எடுத்துக்கிட்டிருக்கிறது ஏமாற்றம் என்று சொல்லலாம்.
ஆனால் இது எனது 50வது படம் என்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இன்று என்னுடைய 55வது படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். ஆனால் பரவாயில்லை!
ஒவ்வொரு படத்திற்கும் விதி-ன்னு ஒன்று இருக்கிறது. அது மாதிரி மஹா படத்திற்கும் அதன் விதி இருக்கிறது. மஹா ரிலீசை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். விரைவில்
எல்லாம் சீராகும். இந்த தாமதம் உள்பட எல்லாமே படத்திற்கு சாதகமாக அமையும் என்றும் நம்புகிறேன்’ என்றார்









