Posted in இலங்கை செய்திகள்

பதவி விலகும் அமைச்சர்கள்

.இலங்கையில் நிகழ் கலா அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் கோட்டாவுக்கு இடையிலான முறுகளை அடுத்து

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இவர் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் என அறியமுடிகின்றது.

    Posted in இலங்கை செய்திகள்

    கிராமத்திற்குள் புகுந்த புலி – பீதியில் மக்கள்

    கிராமத்திற்குள் புகுந்த புலி – பீதியில் மக்கள்

    எநோர்வூட்- போட்ரி தோட்டப் பாடசாலைக்கு அருகிலுள்ள மரமொன்றில் சிறுத்தையொன்று தனது இரண்டு குட்டிகளுடன் ஏறியதால், மாணவர்களும் ஆசிரியர்களும் பீதியடைந்த சம்பவம் நோர்வூட்டில் பதிவாகியுள்ளது.

    போட்ரி தோட்டத்தில் உலவித் திரியும் குறித்த சிறுத்தை, தனது குட்டிகளுடன் இரைத் தேடி வந்து அங்கிருந்த நாய்களை வேட்டையாட முயற்சித்துள்ளது. எனினும்

    இதன்போது அங்கிருந்த தொழிலாளர்கள் கூக்குரலிட்டதால், குறித்த சிறுத்தை குட்டிகளுடன் பாடசாலைக்கு அருகிலிருந்த மரத்தின் மீது ஏறியுள்ளது.

    இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு நோர்வூட் பொலிஸார் அறிவித்த நிலையில், வனஜீவராசிகள்

    திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகைத் தந்து குட்டிகளுடன் சிறுத்தையை தேயிலைத் தோட்டத்துக்குள் துரத்தியுள்ளனர்.

    அத்துடன் போட்ரி தோட்டத்தில் உலவும் இந்த சிறுத்தையை காட்டுக்கு துரத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் உறுதி வழங்கியுள்ளனர்

      Posted in இலங்கை செய்திகள்

      எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவம்

      எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவம்

      இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திடீரென இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

      அண்மைக்காலங்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைபெற்ற அசாதாரண

      சம்பவங்களை அடுத்து, இவற்றை கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

      இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கைக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க சீன அரசாங்கம் தயார்

        இலங்கைக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க சீன அரசாங்கம் தயார்

        இலங்கைக்கு தேவையான எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க சீன அரசாங்கம் தயார் என இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷெங் ஹேங் தெரிவித்துள்ளார்.

        இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சீன திட்டங்கள் ஊடாக 11 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் உருவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

        கொழும்பு துறைமுக நகரத்துக்கு 1.5 அமெரிக்க மில்லியன் டொலர்கள் முதலீடு கிடைத்திருப்பதாகவும் சீன தூதுவர் குறிப்பிட்டார்.

        உத்தேச அம்பாந்தோட்டை தொழிற்சாலை வலயத்தில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

        இலங்கைக்கு ஒன்று தசம் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் சீனத் தூதுவர் கூறினார். கொழும்பில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதுதொடர்பாக சீன தூதுவர் மேலும் தெரிவிக்கையில்.இலங்கைக்கு சீனா மேலும் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.இது கடன் அடிப்படையில் வழங்கப்படவிருப்பதாகவும் கூறினார்.

        2020 ஆம் ஆண்டு தொடக்கம் சீனாவினால் இதுவரையில் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக வழங்கப்பட்டுள்ளது.1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணய பரிமாற்றல் நடவடிக்கைக்காக வழங்கப்பட்டவையாகும்.இலங்கை தற்பொழுது எதிர்கொண்டுள்ள நிலைமையை பயன்படுத்தி பயனடைவதற்கு சீனா எந்த வகையிலும் தயார் இல்லை என்றும் குறிப்பிட்டார்

        இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டின் வெளிநாட்டு செலாவணி நெருக்கடி ஏற்பட பிரதான காரணம் கொவிட் தொற்றும் உலக நாடுகளில் நிலவும் யுத்த முரண்பாடும் ஆகும் என அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் முதலீடு செய்யுமாறு தமது நாட்டு முதலீட்டாளர்களுக்கு சீன அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சீன முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் முதலீட்டு வாய்ப்புக்கள் துணை புரியும். இதற்காக சீன அரசாங்கம் நேரடியாகத் தலையிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

        கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட சீனாவில் கல்வி கற்ற மாணவர்கள் மீண்டும் சீனா செல்லும் போது எதிர்நோக்கும் நெருக்கடி பற்றியும் இதன் போது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சீனத் தூதுவர், தமது நேரடி மத்தியஸ்தத்தின் கீழ், இதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.

        கொரோனா வைரஸ் பரவலினால் சீனாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்பினார்கள் என்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷெங் ஹேங் தெரிவித்துள்ளார்

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில், எதிர்வரும் 30ம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு

        இலங்கையில், எதிர்வரும் 30ம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு

        பிம்ஸ்ரெக்ஸ் அமைப்பின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 30ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

        இம்முறை இந்த அமைப்பின் தலைமைத்துவம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

        இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் வரவுள்ளார். அடுத்த தலைமைத்துவம் அவருக்கு வழங்கப்படவுள்ளது.

        ஏனைய நாடுகளின் தலைவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். எதிர்வரும் 29ம் திகதி 7 உறுப்பு நாடுகளின் வெளிவிவகார

        அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்

          Posted in இலங்கை செய்திகள்

          அமெரிக்கா முக்கிய அதிகாரி இலங்கை வருகிறார்

          அமெரிக்கா முக்கிய அதிகாரி இலங்கை வருகிறார்

          அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா

          நுலாண்ட் எதிர்வரும் புதன்கிழமை (23) இலங்கைக்கு உத்தியோகபூர்வ


          விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது

            Posted in சினிமா

            பாலிவுட்டில் களம் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

            .பாலிவுட்டில் களம் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

            3, வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக பாலிவுட்டில் களம் இறங்கியுள்ளார்.

            பாலிவுட்டில் களம் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
            ஐஸ்வர்யா ரஜினிகாந்த்


            ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து

            இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். அதன் பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை.

            ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன்பின் பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் ஒரு

            திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஐஸ்வர்யா அவருடைய அடுத்த படம் குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

            ஐஸ்வர்யா ஹிந்தியில் புதிய படமொன்றை இயக்க ஒப்பந்தமாகிவுள்ளார். இவர் இயக்கவிருக்கும் முதல் ஹிந்தி திரைப்படம் இது. இந்த படத்திற்கு ’ ஓ சாதிசால்’ என்று

            பெயரிடப்பட்டுள்ளது, இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு, இதன் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்

            Posted in சினிமா

            கதாநாயகனான புகழ்.. குவியும் வாழ்த்துக்கள்

            கதாநாயகனான புகழ்.. குவியும் வாழ்த்துக்கள்


            குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ், தற்போது கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.

            கதாநாயகனான புகழ்.. குவியும் வாழ்த்துக்கள்
            குக் வித் கோமாளி புகழ்


            ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது பெரியத்திரையில் நடிக்க தொடங்கி

            இருக்கிறார். சந்தானத்துடன் சபாபதி, அருண் விஜய்யின் யானை, உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திலும், சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார்.

            இவர் ஆரம்பத்தில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதாகவும், பின்பு தனியார் தொலைக்காட்சியில் கிடைத்த வாய்ப்பை

            சரியாக பயன்படுத்தி கடின உழைப்பினால் முன்னேறியதாகவும் அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

            சினிமாவில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் தோன்றி அனைவரையும் கவர்ந்து வந்த புகழ், தற்போது கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார். மிஸ்டர் சூ கீப்பர் (Mr Zoo

            Keeper) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரை புகழ் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            பிரிட்டனில் 108 மில்லியன் மக்கள் கடனில் வாழ்க்கை -சூத்து மாத்து விட்ட வங்கிகள்

            பிரிட்டனில் 108 மில்லியன் மக்கள் கடனில் வாழ்க்கை -சூத்து மாத்து விட்ட வங்கிகள்

            பிரிட்டனில் நூற்றி எட்டு மில்லியன் மக்கள் வங்கிகளிடம் இந்து கடனை பெற்றுள்ளது
            தெரிய வந்துள்ளது

            இவ்வாறு கடன் பெற்ற மக்கள் அதனை மீள் செலுத்த முடியாது திணறி வருகின்றனர்

            இவ்விதம் கடன் பெற்ற மக்களில் மூன்று தடவைகள் இந்த பணத்தினை செலுத்த முடியாது திணறியுள்ளதான புள்ளி விபரம் வெளியாகியுள்ளது

            இதில் அதிக வட்டிக்கு பணத்தினை வழங்கும் தனியார் வங்கிகளும் உள்ளன ,இவை

            ஆயிரம் பவுண்டுக்கு மாதம் இருநூறு பவுண்டுகள் வட்டி பெறுகின்றன ,இது கந்து வட்டி போன்றது

            இவ்விதமான வங்கிகள் சட்ட விரோதமாக செயல் படுவது கண்டுபிடிக்க பட்டுள்ளது

            ,நான்காயிரத்திற்கு மேற்பட்ட இடை தரகர்கள் ஊடக இந்த பணம் வழங்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளதாம்

            நிகழ்கால கொரனோ காலத்தில் மக்கள் வேலை இழந்து தவித்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கணிக்க பெறுகிறது

              Posted in Uncategorized

              ரஷியா போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது -அமெரிக்கா – முறுகல் உச்சம்

              ரஷியா போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது -அமெரிக்கா – முறுகல் உச்சம்

              ரசியா உக்கிரேன் மீது இராணுவ நகர்வை ஆரம்பித்து அகோரமான தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது

              இடைவிடாது நடத்த படும் இந்த தாக்குதலில் உக்கிரேன் எண்பது வீதமான பகுதிகள் அழிக்க பட்டோ அல்லது செயல் முடக்க பட்டோ உள்ளது

              இவ்வாறான வேளை அந்த மண்ணில் ரசிய படைகள் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா இராணுவ தலைமையகம் குற்றம் சுமத்தியுள்ளது

              மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து அப்பாவி மக்களை கொன்று குவித்து, அந்த

              நாட்டு அதிபர்களை தூக்கிலிட்டு தனது சர்வாதிகாரத்தை காண்பித்து ஏப்பம் விட்ட அமெரிக்கா இவ்விதம் கூக்குரல் போடுகிறது

              இனஅழிப்பு என்ற பத்ததை மறைத்து போர்க் குற்றம் என்கிறது

              அப்படி என்றால் அமெரிக்கா பாயங்கரவாதம் என்ற போர்வையில் நடத்திய இனப் படு

              கொலைக்கு என்று தீர்வு கிட்டும் என்பது பாதிக்க பட்ட நாடுகளின் மக்களின் கேள்வியாக உள்ளது

              இது ஒரு புறம் இருக்க ,ரஷியா மீது தடைகள் தொடர்ந்தால் அதுவே மூன்றாம் உலக யுத்தமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபானர்கள் எச்சரிக்கின்றனர்

                Posted in Uncategorized

                அமெரிக்காவுடன் தூதரக உறவை முறிப்போம்- ரஷியா எச்சரிக்கை

                அமெரிக்காவுடன் தூதரக உறவை முறிப்போம்- ரஷியா எச்சரிக்கை
                ரஷிய கொடி, அமெரிக்கா கொடி

                உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து நிலையில், அந்நாட்டின் அதிபர் புதின் குறித்து, அமெரிக்க அதிபர் ஜே பைடன் அண்மையில், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்திருந்தார்.

                புதின் போர் குற்றவாளி என்றும், ஒரு கொலைகார சர்வாதிகாரி, மூர்க்கத்தனம் கொண்டவர் என்றும் பைடன் குற்றம் சாட்டியிருந்தார்.

                பைடன், புதின்

                இந்நிலையில், பைடன் விமர்சனத்திற்கு ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜான்

                சல்லிவனை, நேரில் அழைத்து தமது எதிர்ப்பை ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

                இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புதின் குறித்த பைடன் கருத்துக்கள் ஏற்றுக் முடியாதவை என்றும், உயர்த்த பதவியில் இருப்பவருக்கு இது போன்ற வார்த்தைகள் தகுதியானதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                ரஷியா-அமெரிக்கா உறவு விளிம்பு நிலையில் இருப்பதாகவும், மீண்டும் இது தொடர்ந்தால் தூதரக உறவை முறித்துக் கொள்வோம் என்றும், ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  தமிழ் முற்போக்கு கூட்டணி சர்வ கட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளாது

                  தமிழ் முற்போக்கு கூட்டணி சர்வ கட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளாது

                  • கூட்டணி தலைவர் மனோ கணேசன்
                    பொருளாதார துறையில் மட்டுமல்லாது, பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக நம் நாடு அரசியல், சமூக, கலாச்சார துறைகள் உள்ளிட்ட சகல துறைகளிலும் அதல பாதாளத்தில் விழுந்துள்ள பின்னணியில், சர்வகட்சி மாநாட்டில்
                  • கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை கவனமாக பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்துக்கொள்வதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

                  கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

                  அரசாங்கத்தின் தோல்வியை எதிரணியின் தலைகளில் சுமத்துவதற்கான முயற்சியாகவும், அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை

                  திருப்தி படுத்த அரசாங்கம் செய்யும் முயற்சியாகவும், இந்த அழைப்பை, பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சியாக நாம் கணிக்கிறோம்.

                    Posted in உலக செய்திகள்

                    வடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி

                    வடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி

                    வடகொரியா கடந்த புதன்கிழமை புதிய குறும் தூர ஏவுகணை ஒன்றை சோதனை நடத்தியது ,ஆனால் இந்த சோதனை தோல்வியில் முடிவடைந்துள்ளது

                    தோல்வியின் விடயங்கள் ஆராயப்பட்டு அவை மீள் சோதனைக்கு உள்ளாக்க படும் என தெரிவிக்க படுகிறது

                    தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணை சோதனை அவசியம் என்கிறது வடகொரியா

                      Posted in Uncategorized

                      ஆயுதங்களை போடுங்கள் ரஷியா வேண்டுதல் – மறுக்கும் உக்கிரேன்

                      ஆயுதங்களை போடுங்கள் ரஷியா வேண்டுதல் – மறுக்கும் உக்கிரேன்

                      உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் பேச்சுக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                      இந்த பேச்சு மேசையில் உக்கிரேன் இராணுவத்தினர் ஆயுதங்களை கையளித்து சரணடையுமாறு கூறிவருகிறது

                      அதற்கு உக்கிரேன் மறுத்து வருகிறது ,இதனால் அந்த பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளது

                      மேலும் தமது இலக்கு நோக்கி மூர்க்கத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவாறு ரசியா படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளன

                        Posted in Uncategorized

                        கார் பந்தயத்திற்குள் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் – 27 பேர் காயம்

                        கார் பந்தயத்திற்குள் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் – 27 பேர் காயம்

                        Arkansas பகுதியில் இடம் பெற்ற கார் ஓட்ட பந்தய காட்சிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த

                        நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார் ,மேலும் 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                        இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                        காயமடைந்தவர்களில் சில ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

                          Posted in Uncategorized

                          படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் ஒருவரை காணாவில்லை

                          படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் ஒருவரை காணாவில்லை

                          நியுசுலாந்தில் மீன் பிடி படகு ஒன்று புயலில் சிக்கி கவிழ்ந்ததில் நான்கு பேர்

                          பலியாகியுள்ளனர் ,மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார்

                          ஐவர் காப்பாற்ற பட்டுள்ளனர் ,உயிர் தப்பியவர்க்ள கரைக்கு திரும்பினர்

                            Posted in சினிமா

                            கவர்ச்சி உடையில் தமன்னா

                            கவர்ச்சி உடையில் தமன்னா

                            தங்கம் போன்று மின்னும் நிறம் கொண்ட அழகிகளில் ஒருவரான நடிகை தமன்னா வித்யாசமான கவர்ச்சி உடையில் வலம் வந்தார்.

                            வித்யாசமான கவர்ச்சிகாட்டும் உடையில் தமன்னா


                            தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் 5 படங்களிலும், இந்தியில் மூன்று படங்களிலும்

                            நடித்து கொண்டிருக்கிறார். சிம்ரனுக்கு அடுத்தபடியாக ‘இடுப்பழகி’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

                            ஹோலி பண்டிகையையொட்டி தமன்னாவுக்கு புதிய உடை அணிந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அழுக்கு படிந்த, கிழிந்த மற்றும் பாதங்களை முழுவதுமாக மூடக்கூடிய

                            வகையில் வித்தியாசமான ஒரு பேண்ட் மற்றும் கவர்ச்சிகரமான உடை அணிந்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

                            ஹோலி பண்டிகையை கொண்டாட வேறு நல்ல உடை இல்லையா?’, ‘இப்படியா கவர்ச்சியாக உடை அணிந்து வருவதா?’ என்று வசை பாடுகிறார்கள். ‘கண்ணாடி

                            போன்ற இந்த உடை உங்களுக்கு கச்சிதமாக இருக்கிறது’, என்று தமன்னாவுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து பதிவிடுகிறார்கள்

                              Posted in சினிமா

                              கார் விபத்தில் நடிகை மரணம்

                              கார் விபத்தில் நடிகை மரணம்

                              .தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து மக்களிடம் பிரபலம் ஆனவர் காயத்ரி. படங்களில் நடிப்பதை தாண்டி வெப் சீரியஸ், தொலைக்காட்சி தொடர்கள் போன்றவற்றிலும் நடித்துள்ளார்.


                              நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எல்லோரும் கொண்டாட காயத்ரியும் தனது நண்பர்களுடன் ஹோலி பண்டிகை

                              கொண்டாடியுள்ளார். கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது படு பயங்கர கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.


                              கார் மருத்துவமனை முன் வேலை செய்துகொண்டிருந்த பெண் மீது மோத அந்த பெண்ணும், நடிகை காயத்ரியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரை

                              ஓட்டிவந்த அவரது நண்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
                              மது போதையில் காயத்ரியின் நண்பர் கார் வேகமாக ஓட்டியதே விபத்தின் காரணம்

                              என கூறப்படுகிறது. 26 வயதான நடிகையின் இந்த மரணம் தெலுங்கு சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் விபத்து – ஒருவர் மரணம் -22 பேர் காயம்

                                முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் விபத்து – ஒருவர் மரணம் -22 பேர் காயம்

                                .யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து

                                விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                                முன்னால் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸை, பின்னால்

                                சென்ற தனியார் பஸ் முந்தி செல்ல முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

                                இந்த பஸ்ஸில் 23 பேர் பயணித்துள்ளதாக முதற்கட்ட தகவல்களில் அறியமுடிகிறது.

                                இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  ரயில் பயணச்சீட்டு விலைகள் தொடர்பில் ஆலோசனை

                                  ரயில் பயணச்சீட்டு விலைகள் தொடர்பில் ஆலோசனை

                                  ரயில் பயணச்சீட்டு விலைகள் தொடர்பில் ரயில் தொழிற்சங்கங்களுக்கும்,

                                  விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

                                  பயணச்சீட்டு கட்டணத்தை அதிகரிக்குமாறு ரயில்வே பொது முகாமையாளர் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அவரது இந்த

                                  யோசனைக்கு தாம் கடும் எதிர்ப்பை வெளியிட்டதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

                                  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் மக்கள் அவதியுறும் வேளையில் ரயில் கட்டண உயர்வை மேற்கொள்ளக் கூடாது என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.

                                  ரயில் கட்டணத்தை அதிகரிக்காமல் மாற்று முறைகளின் மூலம் திணைக்களத்துக்கு

                                  ஏற்படும் நட்டத்தை குறைக்க முடியும் என நிலைய அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

                                  அத்துடன், இந்த விடயங்கள் உள்ளிட்ட பல்வேற காரணிகள் தொடர்பில் இன்றைய

                                  கலந்துரையாடலில் கலந்துரையாடப்படவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது