Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

முடிந்தால் வென்று பார் …!

முடிந்தால் வென்று பார் …!

தொங்கும் பதாகையில்
தொல்லை நீங்கிடுமா ..?
தங்கள் மொழி வாக்கு
தமிழரில் பலித்திடுமா ..?

கருணை அம்மானே
காட்டி கொடுத்தவரே
வீடுகள் தேடுகின்றீர்
விவரம் என்னாச்சு ..?

அறிவில் பூத்தவராம்
அகிலத்தில் மூத்தவராம்
தொங்கும் பட்டியலில்
தொலையா இருப்பவராம் ….

கறுப்பு கண்ணாடி
கலராய் முன்னாடி
இருட்டாய் தெரிகிறதா ..?
இல்லை ஏதோ புரிகிறதா ..?

வதை பட்டார் இழப்பீடு
வாங்கி சென்று விடு
வெற்றி மகனா …?- எங்கே
வென்று காட்டி விடு ….!

வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் 23-06-2020

முடிந்தால் வென்று பார்
முடிந்தால் வென்று பார்
      Posted in சினிமா

      விஜய் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்.

      விஜய் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்.

      நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறி அசத்தி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

      விஜய் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்
      விஜய் – கீர்த்தி சுரேஷ்


      தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு

      திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

      இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்க்காக குட்டி ஸ்டோரி பாடலை வயலின் வாசித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

      கீர்த்தி சுரேஷ்

      விஜய்யும் கீர்த்தி சுரேஷும் இணைந்து பைரவா மற்றும் சர்கார் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

          Posted in உலக செய்திகள் சினிமா

          சுஷாந்த் ரசிகர்களுக்கு ஆதரவாக இருங்கள் – சல்மான்கான் வேண்டுகோள்

          சுஷாந்த் ரசிகர்களுக்கு ஆதரவாக இருங்கள் – சல்மான்கான் வேண்டுகோள்

          அவதூறுகளை பொருட்படுத்தாமல் சுஷாந்த் சிங்கின் ரசிகர்களுக்கு ஆதரவாக இருங்கள் என நடிகர் சல்மான் கான் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

          சுஷாந்த் ரசிகர்களுக்கு ஆதரவாக இருங்கள் – சல்மான்கான் வேண்டுகோள்
          சல்மான்கான், சுஷாந்த் சிங்


          இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வாரிசு நடிகர்கள் கொடுத்த மன அழுத்தத்தினால் நடந்துள்ளது என்று சர்ச்சைகள் எழுந்துள்ளன. சுஷாந்த் சிங் தற்கொலைக்கு சல்மான்கான், இயக்குனர் கரண்

          ஜோகர் ஆகியோர் காரணம் என்று வழக்கும் தொடர்ந்துள்ளனர். சல்மான்கான், கரண் ஜோகர், சோனம் கபூர், அலியாபட், சோனாக்சி

          சின்ஹா ஆகியோரை சமூக வலைத்தளத்தில் பின் தொடரும் ரசிகர்களும் குறைந்துள்ளனர்.

          இந்தி பட உலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் உள்ளது என்று சாடிய கங்கனா ரணாவத்துக்கு இன்ஸ்டாகிராமில் கூடுதலாக 20 லட்சம்

          ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். சல்மான்கானை வலைத்தளத்தில் பின் தொடர்ந்த 10 லட்சம் ரசிகர்கள் வெளியேறி விட்டனர். சோனம் கபூர்

          2 லட்சத்து 50 ஆயிரம் பேரையும் அலியாபட்டை 5 லட்சம் பேரையும் இழந்துள்ளனர். சல்மான்கானை வலைத்தளத்தில் பலரும் வசைபாடுகின்றனர்.

          சல்மான் கானின் டுவிட்டர் பதிவு

          இதையடுத்து சல்மான்கான் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சுஷாந்த் சிங் ரசிகர்களுக்கு உறுதுணையாக இருக்கும்படி எனது அனைத்து ரசிகர்களையும்

          வேண்டிக்கொள்கிறேன். அவர்களின் அவதூறு வார்த்தைகளை பொருட்படுத்தாமல் அதற்கு பின்னால் இருக்கும் உணர்வுகளுக்கு

          முக்கியத்துவம் கொடுங்கள். நாம் விரும்பும் ஒருவரின் இழப்பு வலி மிகுந்தது. எனவே அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆதரவாக இருங்கள்” என்று கூறியுள்ளார்

              Posted in சினிமா

              நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணம் விஜய் தான் – பிரபல நடிகர்

              நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணம் விஜய் தான் – பிரபல நடிகர்

              நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணம் விஜய் தான் என்று பிரபல நடிகர் ட்விட் செய்து வாழ்த்துக் கூறி இருக்கிறார்.

              நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணம் விஜய் தான் – பிரபல நடிகர்
              விஜய்


              விஜய்யின் பிறந்த நாளான இன்று ஜூன் 22ஆம் தேதியில் அதிகாலை 12 மணிமுதல் வெகு சிறப்பாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

              விஜய்யின் பிறந்தநாளை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகின் அனைத்து பிரபலங்களும் தங்களுடைய சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருவார்கள். அந்த

              வகையில் நடிகரும், தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் ’நான்

              சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவரே விஜய்தான்’ என்று டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

              உதயநிதி ட்விட்

              உதயநிதி ஸ்டாலின் தனது டுவீட்டில் மேலும் கூறியிருப்பதாவது: நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில்

              வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்… என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக

              எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  துரோகியே செத்து போ …!

                  துரோகியே செத்து போ …!

                  ஏர் பிடித்து நான் உழுத
                  ஏக்கர் காணிகளை
                  யார் பிடித்து ஆள்வதுவோ
                  யாகம் நடக்கிறது

                  போர் பிடித்து மண் பறித்த
                  பொல்லா படை ஆழ
                  யார் பிடித்து இன்றென்ன
                  யாவரும் ஆழட்டும்

                  வேர் பிடித்து நாம் ஆளும்
                  வேளையது வருவீர்
                  வேண்டி நீர் பறித்தீர்
                  வேண்டி வந்து தருவீர்

                  ஆணவம் தலை பிடித்து
                  ஆடி அன்று நின்றீர்
                  ஆதலால் இன்று
                  அடி பணிந்து வந்தீர்

                  கூ னுள்ளம் புடை சூழ
                  கூனி போனீர்
                  எது செய்வீர் இனி
                  எழுந்தே இறந்து போவீர் …!

                  வன்னி மைந்தன் (ஜெகன் )
                  ஆக்கம் 22-06-2020

                  துரோகியே செத்து போ
                  துரோகியே செத்து போ
                      Posted in சினிமா

                      நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா?

                      நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா?

                      நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், அதன் உண்மை நிலை குறித்து பார்ப்போம்.

                      நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா?
                      விக்னேஷ் சிவன், நயன்தாரா


                      உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் அதன்

                      பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நோய் பரவல் அதிகமாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது.

                      இதனிடையே சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நடிகை நயன்தாரா,

                      இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும், இதனால் அவர்கள் தனிமையில் இருப்பதாகவும் செய்திகள் பரவின.

                      விக்னேஷ் சிவன், நயன்தாரா

                      இந்நிலையில், இந்த செய்திகள் உண்மையில்லை என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தாங்கள் இருவரும்

                      நலமாக இருப்பதாக கூறியுள்ள அவர், தான் படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும், நயன்தாரா, உடற்பயிற்சி

                      உள்ளிட்ட அன்றாட பணிகளை செய்து வருவதாகவும் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

                          Posted in சினிமா

                          எனக்கு திருமணம் -குஷியில் நடிகை

                          எனக்கு திருமணம் -குஷியில் நடிகை

                          விஜய் சேதுபதி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஒருவர், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

                          ‘என்னுடையவர்’… திருமண அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி பட ஹீரோயின்
                          வெங்கட சைதன்ய ஜோனாலகாடு, நிஹாரிகா


                          விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்‘ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக

                          அறிமுகமானவர் நிஹாரிகா. தற்போது அசோக் செலவன் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ஒக்க மனசு,

                          ஹேப்பி வெட்டிங், சூர்ய காந்த, சைரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெப் தொடர்கள் தயாரித்தும் வருகிறார்.

                          இவர் முன்னணி தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் ஆவார். நிஹாரிகாவும் தெலுங்கு நடிகர் பிரபாசும்

                          காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதனை இருவரும்

                          மறுத்தனர். நிஹாரிகாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக நாகபாபு கூறியிருந்தார்.

                          நிஹாரிகா, வெங்கட சைதன்ய ஜோனாலகாடு

                          இந்த நிலையில் நிஹாரிகா திருமணம் முடிவாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் நடக்க

                          போகும் தகவலை மறைமுகமாக தெரிவித்து இருந்தார். மாப்பிள்ளை முகம் தெரியாத வகையில் கட்டிப்பிடித்தபடி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

                          தற்போது மணமகன் முகம் தெரியும் இன்னொரு படத்தை வெளியிட்டு, அதில் என்னுடையவர் என குறிப்பிட்டு திருமணத்தை உறுதி செய்துள்ளார். மணமகன் பெயர் வெங்கட சைதன்ய

                          ஜோனாலகாடு. குண்டூரை சேர்ந்தவர். ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நிஹாரிகாவுக்கு நடிகர் நடிகைகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

                              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                              நான் படித்த புத்தகம் நீ …!

                              நான் படித்த புத்தகம் நீ …!

                              நான் படித்த புத்தகத்தில்
                              நீ ஓர் பக்கமடி
                              வாழ்க்கை புத்தகத்தில்
                              வரலாறாய் ஆனாயடி

                              தேடி படித்ததில
                              தெவிட்டாத வரலாறு
                              கற்று நான் தேற
                              கற்கை ஆனதடி

                              உடல் கூற்று ஆய்வினிலே
                              உன் கூற்று முதல் பதிப்பு
                              படித்த புத்தகத்தில்
                              பாவை நீ முதல் பதிப்பு

                              ஆய்வு கூடத்தில
                              அழகான கூட்டலடி
                              இன்று நினைத்தாலும்
                              இளமை உருகுதடி …..

                              இயற்கை அவன் படைப்பு
                              இதுவே தினம் பிடிப்பு
                              அழியா உன் நினைவுகளை
                              ஆள் மனதில் சுமக்கின்றேன் …!

                              வன்னி மைந்தன் (ஜெகன் )
                              ஆக்கம் 21-06-2020.

                                  Posted in சினிமா

                                  கவர்ச்சி உடை அணிந்தால் விமர்சிப்பதா? – ரியா சென் ஆவேசம்

                                  கவர்ச்சி உடை அணிந்தால் விமர்சிப்பதா? – ரியா சென் ஆவேசம்

                                  கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டால் விமர்சிக்கிறார்கள் என்று நடிகை ரியாசென் கோபமாக கூறியிருக்கிறார்.

                                  கவர்ச்சி உடை அணிந்தால் விமர்சிப்பதா? – ரியா சென் ஆவேசம்
                                  ரியா சென்


                                  பாரதிராஜா இயக்கத்தில் அவரது மகன் மனோஜ் கதாநாயகனாக நடித்த தாஜ்மகால் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரியா சென். தொடர்ந்து குட்லக், அரசாட்சி ஆகிய படங்களிலும்

                                  நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் பிரபல இந்தி நடிகை மூன் மூன் சென்னின் மகள் ஆவார்.

                                  ரியாசென் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி அரைகுறை உடையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

                                  திரைப்படங்களில் எல்லை மீறி கவர்ச்சி காட்டுவதாகவும் முத்தகாட்சிகளில் நடிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு பதில் அளித்து ரியா சென் கூறியதாவது:-

                                  ரியா சென்

                                  “நான் குட்டை பாவாடை அணிவதை சர்ச்சையாக்குகின்றனர். முத்தகாட்சியிலும் கவர்ச்சியாகவும் நடித்தால் துணிச்சலாக

                                  செய்துள்ளார் என்கின்றனர். முன்னணி நடிகைகள் இதுபோல் உடை அணிந்தாலோ முத்த காட்சிகளில் நடித்தாலோ யாரும் கண்டு

                                  கொள்வது இல்லை. என்னை மட்டும் குறிவைத்து தாக்குகின்றனர். சினிமாவில் எனக்கு நண்பர்களாக இருக்கும் நடிகர் நடிகைகள்

                                  உன்னை மட்டும் ஏன் தொடர்ந்து அசிங்கப்படுத்துகிறார்கள் என்று கேட்கின்றனர்.எனது படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் இந்த தாக்குதல் நடக்கிறது.“ இவ்வாறு அவர் கூறியுள்ளார்

                                      Posted in பங்கு சந்தை Forex Trade

                                      திங்கட்கிழமை தங்கத்தின் சந்தை நிலவரம் இவ்வாறு அமையலாம்

                                      திங்கட்கிழமை தங்கத்தின் சந்தை நிலவரம் இவ்வாறு அமையலாம்

                                      எதிர்வரும் 22/06/2020 வாரம் முழுவதுமான தங்க சந்தை ஏற்ற இறக்கம் 1775 உச்சத்தையும் 1540 அதிக வீழ்ச்சியை நோக்கி

                                      செல்ல நேரிடும் ,ரெண்டிங் அடிப்படை சூட்டுதல் திசை நோக்கி இவற்றை மெய்ப் பட வைக்கிறது ,

                                      எனினும் திங்கட்கிழமை முழு நாள் வரைக்கும் 1775 ஆகவும் அதேவேளை 1705 கீழ் நிலை நோக்கி பயணிக்கலாம் .

                                      எனினும் இதில் முக்கிய உடைப்பு நிலைகளாக அதாவது சப்போர்ட் நிலைகளாக 1731 மற்றும் 1724 என்பன உள்ளன

                                      இவையே திருப்பி மேல் நோக்கி அனுப்புதல் முக்கியமான தடுப்பு காவல் அரணாக உள்ளது . இந்த இலக்கம் உள்ள பகுதி உடைத்தால் அவை கீழ் நோக்கி செல்லும்

                                      எனவே sell விற்பனை செய்பவர்கள் , buy வாங்கி கொள்வார்கள் இந்த இடங்களில் உங்கள் இலாபத்தை எடுத்து கொள்வது சால

                                      சிறந்தது , காத்திருந்து உடைப்பு அல்லது திருப்பு முனைகளை கண்டறிந்து அதன் திசை நோக்கி பயணியுங்கள்

                                      சந்தையின் முக்கிய முதல் நாளில் மகிழ்வோடு ,சலனம் இன்றி உங்கள் ,உலக பங்கு சந்தையில் தங்கத்தை வாங்கியும் ,விற்றும்

                                      பணத்தை சம்பாதியுங்கள் .சொல்வது நாம் ,தீர்மானிப்பது நீங்கள் .இதோ சாட் ஆதாரம்

                                      நன்றி – வன்னி மைந்தன் help call 0044 7536 707793

                                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                          அறியா பருவத்தில் புரியாதவை ….!

                                          அறியா பருவத்தில் புரியாதவை ….!

                                          உருகி உருகி அழுதேனே
                                          உன்னால் தானே துடித்தேன
                                          காளை உந்தன் இரசனை எல்லாம்
                                          காமத்தின் முடிவிலா ..?

                                          கண்டதும் நீர் பாய்ச்சும்
                                          கால் வாயின் கோலமா ..?
                                          வெட்டாத ஆற்றுக்குள்
                                          வெள்ளம் தேடி வரலாமா ..?

                                          சத்தான காய் கறிகள்
                                          சந்தைக்கு விடலாமா ..? ..?
                                          பட்டணத்து விலைவாசி
                                          பட்டாடை கட்டிடவோ …?

                                          எது சொன்னேன் புரியலையோ
                                          என் மனசே தெரியலையோ ..?
                                          விதி போடும் விளையாட்டில்
                                          விவரங்கள் தாமதமே

                                          நாள் கடந்து விழித்தெழுந்து
                                          நமக்கேதும் பயனில்லை
                                          முற் போக்கை முன் வைத்து
                                          முன்னேறு கை வைத்து

                                          வன்னி மைந்தன் (ஜெகன் )
                                          ஆக்கம் 20-06-2020

                                          அறியா பருவத்தில்
                                          அறியா பருவத்தில்
                                              Posted in சினிமா

                                              நடிகை யாஷிகாவின் திடீர் முடிவு

                                              நடிகை யாஷிகாவின் திடீர் முடிவு

                                              நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவரான யாஷிகா ஆனந்த் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

                                              நடிகை யாஷிகாவின் திடீர் முடிவு
                                              யாஷிகா ஆனந்த்


                                              தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக பிரபல மானவர் யாஷிகா ஆனந்த். மேலும் பிக்பாஸ் இரண்டாவது

                                              சீசனிலும் போட்டியாளராக அவர் கலந்து கொண்டு தமிழர்கள் மத்தியில்

                                              பிரபலம் ஆனார். தமிழ் பேச தெரியவில்லை என்றாலும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர்.

                                              பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழை கொண்டு அவருக்கு அதிகளவில்

                                              சினிமா வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே கமிட்டானார்.

                                              இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் பிரபல தொலைக்காட்சியில்

                                              ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

                                                  Posted in சினிமா

                                                  காதலித்த பெண்ணை கரம் பிடிக்கும் கும்கி அஸ்வின்

                                                  காதலித்த பெண்ணை கரம் பிடிக்கும் கும்கி அஸ்வின்

                                                  கும்கி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அஸ்வின், காதலித்த பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார்.

                                                  காதலித்த பெண்ணை கரம் பிடிக்கும் கும்கி அஸ்வின்
                                                  கும்கி அஸ்வின்


                                                  ‘கும்கி’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர், அஸ்வின். இவர், ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ பட அதிபர்களில்

                                                  ஒருவரான சுவாமிநாதனின் மகன் ஆவார். ‘பாஸ் என்ற பாஸ்கரன்,’ ‘ஈட்டி,’ ‘ஜாக்பாட்,’ ‘கணிதன்’ உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருக்கிறார்.

                                                  இவருக்கும், சென்னை கே.கே.நகரை சேர்ந்த ராஜசேகரின் மகள் வித்யாஸ்ரீக்கும் காதல் மலர்ந்தது. வித்யாஸ்ரீ, அமெரிக்காவில் படித்து, ‘எம்.எஸ்.’ பட்டம் பெற்றவர்.

                                                  அஸ்வின்

                                                  இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து ‘கும்கி’ அஸ்வின்-வித்யாஸ்ரீ இருவருக்கும்

                                                  திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்கள் திருமணம் வருகிற 24-ந் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள அஸ்வின் வீட்டில் நடக்கிறது.

                                                  காதலித்த பெண்ணை
                                                  காதலித்த பெண்ணை
                                                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                                      பொறுத்திரு வருகிறேன் …!

                                                      பொறுத்திரு வருகிறேன் …!

                                                      திக்கு வாயில் மொழி சிக்க
                                                      திண்ணையிலே இருக்கேண்டி
                                                      கத்துக்கிட்டு வாறேன்டி
                                                      காத்திருக்க மாட்டாயா ..?

                                                      பத்திரமா நெஞ்சுக்குள்ளே
                                                      பாசமா இருக்கிறியே
                                                      செத்திடவா போறேன்
                                                      செவந்து விழி எதுக்கடி …?

                                                      கத்திடமா இருக்குமா
                                                      கடல் அலை இல்லையடி
                                                      பத்து மாதம் சுமப்பவளே
                                                      பாதகமாய் வேணாண்டி

                                                      சத்துணவு நான் தாரேன்
                                                      சாந்தமாய் இருந்திடடி
                                                      பந்தியிலே அழைக்கிறேன்
                                                      பரவசம் கூடிடடி

                                                      சாரல் வந்து அடிக்குதடி
                                                      சாளரத்தை பூட்டிடடி
                                                      செந்தணலை ஏற்றிடவே
                                                      செந்தாமரையே காத்திடடி

                                                      வன்னி மைந்தன் (ஜெகன் )
                                                      ஆக்கம் 19-06-2020

                                                          Posted in சினிமா

                                                          இறப்பு ஒரு கலைஞனின் வெற்றியை நிறுத்திவிடாது – சுஷாந்த் குறித்து சிம்பு உருக்கம்

                                                          இறப்பு ஒரு கலைஞனின் வெற்றியை நிறுத்திவிடாது – சுஷாந்த் குறித்து சிம்பு உருக்கம்

                                                          தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, சுஷாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

                                                          இறப்பு ஒரு கலைஞனின் வெற்றியை நிறுத்திவிடாது – சுஷாந்த் குறித்து சிம்பு உருக்கம்
                                                          சுஷாந்த், சிம்பு


                                                          நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “மிகுந்த துயரமான நாட்களாக இந்த சில நாட்கள் கடந்து போகின்றன.. டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா,

                                                          சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகிய மூவருமே எனது அன்பிற்குரிய நண்பர்கள். இவர்களது இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது.

                                                          சினிமாவிற்கான இழப்பாகப் பார்க்கிறேன். எனது நண்பர்களை இழந்துவிட்ட பேரிழப்பாகப் பார்க்கிறேன். இவர்களின் ஆன்மா, இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்.

                                                          இழப்பால் துயருறும் மூவரின் குடும்பத்திற்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஆறுதலும் அவர்களைத்

                                                          தேற்றிவிடாது என்பதறிவேன். எனது கண்ணீரும் இதயமும் உங்களின் இந்த நிலையை மீட்டெடுக்க வேண்டிக் கொண்டே

                                                          இருக்கும். இதேபோல் கொரோனா காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸின் சத்தம். இறப்பின் கதறல்.

                                                          சிம்பு

                                                          கொரானாவின் பாதிப்பில் மரணமடைந்த குடும்பத்திற்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர் சுஷாந்த் சிங்

                                                          ராஜ்புத்தின் தில் பேச்சுரா இசைப்புயலின் வேண்டுகோள் போல, அவரின் ரசிகர்களின் அபிமானத்தின்படி திரையரங்கில்

                                                          வெளியாகி பெரு வெற்றி பெற வேண்டும். இறப்பு ஒரு கலைஞனின் வெற்றியை நிறுத்திவிடாது என்பதை உலகறியச் செய்ய

                                                          திரையரங்கில் வெளியாகட்டும். எனது வேண்டுகோளும் ஆசையும் அதுவே.” என சிம்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

                                                              Posted in சினிமா

                                                              நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

                                                              நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

                                                              சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

                                                              நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
                                                              ரஜினிகாந்த்

                                                              சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று காலை சுமார் 10.30 மணியளவில் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்

                                                              வந்தது. காவல் நிலைய கட்டுபாட்டு அறைக்கு போனில் இந்த தகவலை தெரிவித்த மர்ம நபர், வேறு எந்த விவரங்களையும் செல்லாமல் தொடர்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.

                                                              இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு காவல்துறையினர் 4 வெடிகுண்டு நிபுணர்கள், 2 மோப்ப

                                                              நாய்களுடன் சென்று தீவிர சோதனை நடத்தினர். ரஜினிகாந்தின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் சுமார் 1 மணி நேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

                                                              இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், காவல்துறைக்கு கிடைத்த தகவல் பொய்யானது என்று போலீசார்

                                                              உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு போன் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

                                                                  Posted in சினிமா

                                                                  உன்னை குழந்தையாக கையில் ஏந்த காத்திருக்கிறேன் – சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி உருக்கம்

                                                                  உன்னை குழந்தையாக கையில் ஏந்த காத்திருக்கிறேன் – சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி உருக்கம்

                                                                  மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

                                                                  உன்னை குழந்தையாக கையில் ஏந்த காத்திருக்கிறேன் – சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி உருக்கம்
                                                                  மேக்னா ராஜ், சிரஞ்சீவி சார்ஜா


                                                                  கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வலம்வந்த சிரஞ்சீவி சார்ஜா, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சமீபத்தில்

                                                                  உயிரிழந்தார். 39 வயதே ஆகும் சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் கன்னட திரையுலகம் மட்டுமல்லாது இந்திய திரையுலகினரையே

                                                                  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிரஞ்சீவி சார்ஜா, கடந்த 2018-ம் ஆண்டு நடிகை மேக்னா ராஜை காதலித்து திருமணம் செய்து

                                                                  கொண்டார். தற்போது மேக்னா கர்ப்பமாக இருக்கும் நிலையில், சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் மரணமடைந்தார்.

                                                                  இந்நிலையில், கணவரை பிரிந்து வாடும் மேக்னா, கணவர் குறித்து டுவிட்டரில் கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “சிரு, நான் உன்னிடம் சொல்ல நினைத்ததை வார்த்தைகளாக்கி சொல்ல

                                                                  மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகிலிருக்கும் அத்தனை வார்த்தைகளைச் சேர்த்தாலும் விவரிக்க

                                                                  முடியாது. என் நண்பன், என் காதலன், என் பார்ட்னர், என் குழந்தை, என் நம்பிக்கைக்குரியவர், என் கணவர் – இவை அனைத்தையும் விட மேலானவன் நீ. என் ஆன்மாவின் ஒரு அங்கம் நீ.

                                                                  சிரஞ்சீவி சார்ஜா

                                                                  நான் ஒவ்வொரு முறையும் வாசல் கதவைப் பார்க்கும்போதும் இனம் கண்டுகொள்ள முடியாத ஒரு வலி என் ஆன்மாவைத் தாக்குகிறது. நீ உள்ளே நுழைந்து நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று சொல்வதை

                                                                  பார்க்க முடியவில்லையே என்று. ஒரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் உன்னைத் தொட முடியாததை உணரும்போது, என் இதயம்

                                                                  மூழ்குவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. நான் சோர்வடையும் போதெல்லாம் நீ என்னைக் காக்கும் தேவதையாக என்னைச் சுற்றி இருக்கிறாய்.

                                                                  நீ என்மீது அளவில்லா காதல் வைத்திருப்பதால்தான் உன்னால் என்னைத் தனியாக விட்டுப் போக முடியவில்லை. இல்லையா? நம்

                                                                  காதலின் சின்னமாக, நீ எனக்குத் தந்த விலை மதிப்பில்லா பரிசுதான் நம் குழந்தை. அந்த இனிய அற்புதத்துக்காக நான் என்றென்றும் உனக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன்.

                                                                  உன்னை நம் குழந்தை வடிவில் இந்த பூமிக்குக் மீண்டும் கொண்டு வரும் நாளை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன். மீண்டும் உன்னை

                                                                  குழந்தையாக என் கையில் ஏந்தும் நாளுக்காக காத்திருக்கிறேன். உன் சிரிப்பை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அறையையே

                                                                  ஒளிரச் செய்யும் உன் சிரிப்பைக் கேட்க ஆவலுடன் உள்ளேன். நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன். நீங்களும் எனக்காகக் காத்திரு.

                                                                  என் மூச்சு இருக்கும்வரை நீயும் வாழ்வாய். நீ என்னுள் இருக்கிறாய்.” என குறிப்பிட்டுள்ளார்.

                                                                  சிரஞ்சீவி சார்ஜா
                                                                  சிரஞ்சீவி சார்ஜா
                                                                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                                                      என் காதலை ஏற்று விடு …!

                                                                      என் காதலை ஏற்று விடு …!

                                                                      எச்சி ஊறும் உன் அழகை
                                                                      ஏய் பிடிக்க நான் வரவா ..?
                                                                      அர்த்தமுள்ள பாசமதை
                                                                      அள்ளி வந்து தந்திடவா ..?

                                                                      அழகான மாம்பழமே
                                                                      அணில் கொத்த போகுதடி
                                                                      அகிலமே உன் பின்னால்
                                                                      அடியெடுத்து வைக்குதடி

                                                                      காற் றுடைக்கும் மெல்லிடையில்
                                                                      கண் வந்து தாக்குதடி
                                                                      மூச்சிழுக்கும் உன் அழகில்
                                                                      முழு உடலும் கொதிக்குதடி

                                                                      பேரழகை கண்டதினால்
                                                                      பேச்சு வர மறுக்குதடி
                                                                      பேரின்பம் நெஞ்சில் வந்து
                                                                      பேரலையாய் தாக்குதடி

                                                                      எவர் செய்த சிலையதுவோ
                                                                      ஏங்க வைத்து போகுதே ..
                                                                      என் தூக்கம் பறித்தவளே
                                                                      எனை ஏற்க மாட்டாயா …?

                                                                      வன்னி மைந்தன் (ஜெகன் )
                                                                      ஆக்கம் 18-06-2020

                                                                      Posted in சினிமா வினோத வீடுப்பு

                                                                      வனிதாவிற்கு திருமணம் – 3 மாப்பிள்ளை யார் தெரியுமா?

                                                                      வனிதாவிற்கு திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?

                                                                      நடிகையும் பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமானவருமான வனிதாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

                                                                      வனிதாவிற்கு திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?
                                                                      நடிகை வனிதா


                                                                      பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

                                                                      இந்நிலையில் நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் ஜூன் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

                                                                      பீட்டர் பால்

                                                                      பீட்டர் பற்றி வனிதா கூறும்பொழுது “அவர் ஒரு சினிமா தொழில் நுட்ப கலைஞர்.

                                                                      வெளிவர இருக்கும் படங்கள் மூலம் அவரை, நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

                                                                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                                                          வெற்றி தந்த மகிழ்வு ….!

                                                                          வெற்றி தந்த மகிழ்வு ….!

                                                                          ஆறாம் அறிவை தட்டு
                                                                          அகிலம் எழுந்து முட்டு
                                                                          தெரியா தென்று இருக்காதே
                                                                          தெரிந்தாய் இன்று மறக்காதே

                                                                          முடியும் என்று முன்னேறு
                                                                          மூட்டி பாரு நீ போரு
                                                                          கட்டி போட்டார் கட்டெல்லாம்
                                                                          கைகள் வெட்டி பறக்கும்

                                                                          தட்டி கழித்தார் கை எல்லாம்
                                                                          தட்டி உன்னை அழைக்கும்
                                                                          சிந்தை திறந்தால் போதும்
                                                                          சிகரம் கட்டி அணைக்கும்

                                                                          பங்கு சந்தை பின்னல்
                                                                          பகுத் தறிந்தால் மின்னல்
                                                                          கோடி அள்ளி வீசும்
                                                                          கோடி மணம் வீசும்

                                                                          தளரா துணிவை நட்டு
                                                                          தமிழ் கொடியை வா நட்டு
                                                                          முடியும் என்று சொன்னேன்
                                                                          முடிவு விரைவில் சொல்வேன்

                                                                          மூன்று ஆண்டு போரு
                                                                          முடிவில் கண்டேன் வேரு
                                                                          நாளை மலர்வேன் நன்று
                                                                          நம்பி சொன்னேன் இன்று

                                                                          வன்னி மைந்தன் (ஜெகன் )
                                                                          ஆக்கம் 17-06-2020