Posted in உலக செய்திகள் சினிமா

லட்சுமி ராமகிருஷ்ணன் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுகிறார் – வனிதா பரபரப்பு புகார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுகிறார் – வனிதா பரபரப்பு புகார்.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னிடம் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுவதாக நடிகை வனிதா பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுகிறார் – வனிதா பரபரப்பு புகார்
வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன்


நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் வனிதா பற்றி லட்சுமி

ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்தார். இதனால் இருவரும் யூடியூப் சேனல் ஒன்றில் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் லட்சுமி

ராமகிருஷ்ணன் பற்றி வனிதா தரக்குறைவாக பேசினார். இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதாவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அந்த நோட்டீசை தனது டுவிட்டரில் வெளியிட்டு வனிதா கூறியிருப்பதாவது: நல்ல மனசுள்ள சமூக ஆர்வலர் (லட்சுமி

ராமகிருஷ்ணன்) தன் வழக்கறிஞர் மூலம் ரூ. 1.25 கோடி கேட்டு என்னை மிரட்டுவதை பாருங்கள். ஒரு குடும்பத்திற்கு உதவி

செய்வது போன்று, தேவையில்லாமல் என் தனிப்பட்ட வாழ்க்கையில்

தலையிட்டு, போலி நீதிபதியாக இருக்கவும் முயற்சி செய்கிறார். அப்பாவிகளின் ரத்தத்தை குடிக்கிறார்.

இது தொடர்பாக என் தரப்பு வழக்கறிஞர் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளார்.

இது ஒன்றும் நீதிமன்ற ஆவணமில்லை. அவரது வழக்கறிஞர் பணம் கேட்டு

அனுப்பியது தான். எல்லாவற்றையும் சட்டப்படி எதிர்கொள்வேன் என வனிதா கூறியுள்ளார்.

      Posted in உளவு செய்திகள்

      அடேல் பாலசிங்கம் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டாராம் -அவரை கைது செய்ய வேண்டும் – பிரிட்டன் mp

      அடேல் பாலசிங்கம் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டாராம் -அவரை கைது செய்ய வேண்டும் – பிரிட்டன் mp

      தமிழீ விடுதலைப்புலிகளின் அரசியல் தத்துவ குரலாக விளங்கிய ஆண்டான் பாலசிங்கம் அவர்கள் அடேல் அவர்களை திருமணம் செய்தார் .

      இவர் விடுதலை போருக்கு முக்கிய பங்குகளை ஆற்றி வந்துள்ளார்

      இவ்வாறான ஆடேல் பாலசிங்கம் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில்

      இணைந்து பயிற்சி பெற்று ,விடுதலை புலிகளுக்கு சிறார்களை

      படையில் இனைத்தார் என பிரிட்டன் பாரளுமன்ற குழு ஒன்று தெரிரிவித்துள்ளது

      இவ்வாறான ஒருவரை உடனே கைது செய்து தண்டிக்க வேண்டும் என்கிறார் அவர் ,ஆனால் இல்லாத புலிகளை எப்படி அழைத்து வர போகின்றார் …?

      இலங்கை ஒரு நாடாக உள்ளது ,எங்கும் சிங்கள அரச அபாயங்கரவாத

      இராணுவம் தரித்துள்ளது ,தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்டு சொல்லென்னா துயரை சந்தித்து வருகின்றனர்

      இவ்வாறான வேளையில் இவரது கருத்து இவ்விதம் அமைந்துளளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது

      அடேல் பாலசிங்கம் ஆட்சேர்ப்பில்
      அடேல் பாலசிங்கம் ஆட்சேர்ப்பில்
          Posted in பங்கு சந்தை Forex Trade

          GBP USD வீழ்ச்சி நிலையில் இவ்வாரம்

          GBP USD வீழ்ச்சி நிலையில் இவ்வாரம்

          பிரிட்டன் பணம் எகிறியது இலங்கை பணம் 31-07-202-0 இன்று 244 ரூபா மேலும் அதிகரிக்கும் -good newsஇன்று பித்தானியா ஒரு பவுண்டு 244

          ரூபாவாக உள்ளது ,இதுவே வரும் நாள் அல்லது மணித்தியாலம் அதிகரித்து

          கிட்ட தட்ட 250 ரூபாவாக அதிகரித்து பின்னர் பாரிய வீழ்ச்சி நோக்கி

          செல்லும் ,அதாவது 220 ரூபா வரை வீழ்ச்சிக்கு செல்லும் நிலையை சந்தை

          தெளிவாக காண்பிக்கிறது ,அதுபோலவே தங்கமும் , எனவே பணத்தை ,

          அனுப்புவார்கள் இந்த வார விடுமுறை முந்தி சென்று அனுப்பி கொள்ளுங்கள்

          ,காரணம் அதிக உச்சத்தில் கையர் கையில் சந்தை உள்ளது ,இதுவே 1,31647

          தொட்டது ,இது 1,2500 நோக்கி செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது வரும் வரம் இது இடம்பெறலாம் ,நல்லது மகிழ்ச்சி – வன்னி மைந்தன்

          GBP USD வீழ்ச்சி நிலையில் இவ்வாரம்
          GBP USD வீழ்ச்சி நிலையில் இவ்வாரம்
            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            உன்னை காப்பாற்று ….!

            உன்னை காப்பாற்று ….!

            கொழும்பு நகர் வீதியிலே
            கொழுத்து பருத்து போறவளே
            பரா ஊர்தி வருகுதடி
            பார்த்து சாலை போயிடடி

            கட்ட காலி நாய்கள் எல்லாம்
            கால் வைத்து நடக்குதடி
            கிழிந்த ஆடை உடல் காட்டி
            கிளிப்புள்ள போகையில

            நாய் வந்து கடிக்காத
            நாராய் தான் உரிக்காத …?
            கற்பை தின்று உடல் வீசும்
            கடை வீதி திறக்காதே

            சுதந்திர நாட்டுக்குள்
            சுட்டு காட்டை விதைக்காதே
            பெண் எல்லாம் அழகி என்ற
            பேரழகை துவைக்காதே

            கறுப்பு தார் வீதியில
            கால் வைத்து போகையில
            வீடு வர வேண்டுமடி
            வேண்டி நீ நடந்திடடி

            வன்னி மைந்தன் (ஜெகன் )
            ஆக்கம் 30-06-2020

            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            ஏ மனமே கவலை விடு …!

            ஏ மனமே கவலை விடு …!

            ஈர் விழியில் நீர் தாங்கி
            இடிந்து போய் நிற்பவளே
            உன் பாதி சுமை தாங்கி
            உதவுகிறேன் வா மகளே

            ஊற்றெடுக்கும் கண்ணீரை
            உள்ளே கொஞ்சம் அடைத்து விடு
            உள்ளத்தில் தென்பை மட்டும்
            உரமாக ஏற்றிவிடு

            ஓடி வரும் தோல்விகளை
            ஓரமா எறிந்து விடு
            ஓட கொஞ்சம் காற்றும் கொண்டால்
            ஓடி விடும் தெரிந்து விடு

            ஏறும் போதே படிகளை
            எண்ணி நீ ஏறி விடு
            எண் கணக்கு சரி என்றால்
            ஏற்றம் வரும் கொஞ்சி விடு

            திட்டங்கள் இரண்டு வைத்து
            தினம் தோறும் நடந்து விடு
            துரத்தி வரும் துயர் எல்லாம்
            துகள்களாகும் புரிந்து விடு

            எவரெஸ்ட்டாய் என்றுமே
            எண்ணி நீ நடந்து விடு
            எவரெஸ்ட்டாய் நீ இருப்பாய்
            ஏ மனமே கவலை விடு

            வன்னி மைந்தன்
            ஆக்கம் -30-07-2020

            Posted in உலக செய்திகள் சினிமா

            சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. காதலி கைதாவாரா?

            சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. காதலி கைதாவாரா?

            தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரவர்த்தி கைதாவாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

            சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. காதலி கைதாவாரா?
            சுஷாந்த் சிங், ரியா சக்ரவர்த்தி


            கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையில் நடித்து பிரபலமான இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை செய்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. வாரிசு நடிகர்கள்

            ஆதிக்கத்தாலும், தனக்கு வந்த படவாய்ப்புகளை அவர்கள் தடுத்ததாலும் மன அழுத்தத்தில் சுஷாந்த் தற்கொலை செய்து

            கொண்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 35-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

            இந்நிலையில் திடீர் திருப்பமாக சுஷாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்தி காரணம் என்று சுஷாந்த் சிங்கின் தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்துள்ளார்.

            சுஷாந்த் சிங் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரியா சக்கரவர்த்தி பணம் எடுத்துள்ளார் என்றும், சுஷாந்த் சிங் கணக்கில் இருந்து ரூ.15

            கோடியை வேறு ஒரு கணக்குக்கு மாற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

            சுஷாந்த் சிங், ரியா சக்ரவர்த்தி

            ரியாவும் இன்னும் சிலரும் சேர்ந்து மன ரீதியாக சுஷாந்துக்கு தொல்லை கொடுத்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதையடுத்து ரியா சக்ரவர்த்தி மீது பாட்னா போலீசார்

            வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்த தனிப்படை மும்பை விரைந்துள்ளது. இதனால் ரியா சக்கரவர்த்தி

            கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் முன்ஜாமீன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

            சுஷாந்த் சிங் தற்கொலை
            சுஷாந்த் சிங் தற்கொலை
                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                எப்படி நம்புவேன் …?

                எப்படி நம்புவேன் …?

                நீ நினைத்த போதெல்லாம்
                நிற்காமல் வந்தவன்
                நீ அழைத்த போதினில்
                நிற்காமல் போபவன்

                ஏன் என்று கேளாது
                ஏராளம் செய்தவன்
                ஏய் நீ கேட்டுமே – இப்போ
                ஏதுமே செய்யாதவன்

                போலி என்று உன்னை
                பொறுப்புடன் கண்டபின்
                நான் தேடி வருவேனா ..?
                நம்பிக்கை நடுவேனா …?

                காயங்கள் ஏராளம்
                கட்டிகளாய் நெஞ்சுக்குள்
                வலிக்கிறது விழி
                வழி எலலாம் கண்ணீர்

                கோபத்தில் அறைந்திருந்தால்
                கோடி மகிழ்ந்திருப்பேன்
                ஏமாற்றி நடக்கையில
                எப்படி நம்புவேன் …?

                வன்னி மைந்தன்
                ஆக்கம் -29-07-2020

                Posted in சினிமா

                திருமணத்தை நினைத்தால் பயம் வருகிறது – நடிகை பூர்ணா

                திருமணத்தை நினைத்தால் பயம் வருகிறது – நடிகை பூர்ணா

                தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நடிகை பூர்ணா, திருமணத்தை நினைத்தால் பயம் வருவதாக கூறி உள்ளார்.

                திருமணத்தை நினைத்தால் பயம் வருகிறது – நடிகை பூர்ணா
                பூர்ணா


                தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ள பூர்ணாவை சமீபத்தில் ஒரு கும்பல் திருமண சம்பந்தம் பேசி பண மோசடியில்

                ஈடுபட்ட சம்பவம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. புகாரின் பேரில் குற்றவாளிகளை கைது செய்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

                இந்த நிலையில் பூர்ணா அளித்துள்ள பேட்டி வருமாறு: “எனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்பினர். இதற்காக

                மாப்பிள்ளை பார்த்தனர். அப்போது இந்த மோசடி கும்பல் எங்களை பெண்கேட்டு அணுகியது. இரு குடும்பத்தினரும் பேசி

                திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். என்னை மணக்க இருந்தவரும் நானும் திருமணத்துக்கு பிறகு எப்படி வாழ வேண்டும் என்பது பற்றியெல்லாம் பேசினோம்.

                பூர்ணா

                அதன்பிறகு எதிர்பாராத சம்பவங்களால் நிலைமை மாறிவிட்டது. அந்த போலிகும்பல் எங்களிடம் அன்பாக பழகி ஏமாற்றினார்கள்.

                அவர்களை நினைத்தாலே எனக்கு அச்சம் வருகிறது. யாரை நம்புவது என்றே தெரியவில்லை. எனவே இப்போது திருமணம்

                வேண்டாம் என்று பெற்றோர்களிடம் கூறிவிட்டேன். திருமணத்தை நினைத்தாலே எனக்கு பயம் வருகிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து

                மீள நடனத்தில் கவனம் செலுத்துகிறேன்.” இவ்வாறு பூர்ணா கூறினார்.

                    Posted in சினிமா

                    தனுஷிடம் வாய்ப்பு கேட்ட பிரபல நடிகை

                    தனுஷிடம் வாய்ப்பு கேட்ட பிரபல நடிகை

                    பிரபல நடிகை ஒருவர் தனுசுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி நடிக்க வாய்ப்பு வேண்டும் என்று வெளிப்படையாக கேட்டிருக்கிறார்.

                    பிறந்தநாள் வாழ்த்து கூறி தனுஷிடம் வாய்ப்பு கேட்ட பிரபல நடிகை
                    தனுஷ்


                    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இவருக்கு

                    திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

                    அப்படி ட்விட்டரில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும்

                    மாளவிகா மோகனன் தனுஷை வாழ்த்தி ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது..

                    “ஹாப்பி பர்த்டே தனுஷ் சார். வருகின்ற வருடம் சிறப்பானதாக இருக்கட்டும்.

                    உங்களுடன் பணியாற்ற உற்சாகமாக இருக்கிறேன் (யாராவது நம் இருவரையும்

                    ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க வைப்பார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்)” என குறிப்பிட்டுள்ளார்

                    மாளவிகா மோகனன்

                    நடிகர் தனுஷுடன் ஜோடி சேர தான் விரும்புவதாக வெளிப்படையாக கூறி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

                        Posted in சினிமா

                        இயக்குனர் ராஜமவுலி குடும்பத்தினரை தாக்கிய கொரோனா

                        இயக்குனர் ராஜமவுலி குடும்பத்தினரை தாக்கிய கொரோனா

                        பாகுபலி என்னும் பிரமாண்ட படத்தை இயக்கிய ராஜமவுலி மற்றும் அவருடைய குடும்பத்தினரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.

                        இயக்குனர் ராஜமவுலி குடும்பத்தினரை தாக்கிய கொரோனா
                        ராஜமவுலி
                        இந்திய அளவில் கொரோனா அச்சுறுத்தல் என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன்,

                        ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

                        தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமவுலிக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “

                        சில தினங்களுக்கு முன்பு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அது தானாகவே சரியாகிவிட்டாலும்,

                        நாங்கள் பரிசோதனை செய்து கொண்டோம். இன்று பரிசோதனை முடிவில் மிதமான கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

                        ராஜமௌலியின் பதிவு

                        மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் எங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் நன்றாக உள்ளோம். ஆனால், அனைத்து

                        வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம்”

                            Posted in சினிமா

                            சண்டைக் கோழி -நடிகை வனிதா மீது வழக்கு பதிவு

                            சண்டைக்கோழி -நடிகை வனிதா மீது வழக்கு பதிவு

                            நடிகை வனிதா மீது சென்னை போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

                            நடிகை வனிதா மீது வழக்கு பதிவு
                            வனிதா
                            நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பாலை திருமணம் செய்து

                            கொண்டார். இந்த திருமணம் சர்ச்சை ஆனது. இந்நிலையில் நடிகை வனிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

                            ஐயப்பன்தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பு

                            சங்க பொதுசெயலாளர் நிஷாதோட்டா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

                            வனிதா

                            தனது திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் ஆட்களை திரளசெய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த

                            புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

                            முன்னதாக தன்னையும், தனது கணவரையும் தாக்கி பேசியதாக நடிகை வனிதா விஜயகுமார் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் போலீசில்

                            புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

                                ஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்
                                Posted in மருத்துவம்

                                ஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்

                                ஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்

                                ஆணுறை இவ்வளவு பயன்மிக்கதாய் இருந்தும், அதை சரியான இடத்தில் பத்திரமாக வைத்து பாதுகாக்காவிட்டால் பயனிழந்து

                                விடும். பலருக்கு ஆணுறைக்கு காலாவதி தேதி உண்டு என்ற விஷயம் தெரியாமல் இருக்கக்கூடும்.

                                காலாவதியான ஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்
                                காலாவதியான ஆணுறை


                                பாலியல் மூலம் பரவும் நோய்களைத் தவிர்ப்பதற்கும் கருத்தடை செய்வதற்கும் ஆணுறைகள் நிறையப் பயன்படுத்தப்படுகின்றன. ஆணுறை உதவியுடன், நீங்கள் கவலைப்படாமல் உடலுறவை

                                அனுபவிக்க முடியும். சிறந்த விஷயம் என்னவென்றால், ஆணுறைகள் சந்தையில் மலிவான விலையில் கிடைக்கின்றன, ஆணுறைகள் அரசாங்கத்திடமிருந்து இலவசமாக

                                வழங்கப்படுகின்றன. ஆணுறைகள் பல நன்மைகளைக் கொண்டுள்ளன, மேலும் அவற்றைப் பயன்படுத்துவது மிகவும்

                                எளிதானவை. பெரும்பாலான தம்பதிகள் தங்கள் வீட்டில் நிறைய ஆணுறைகளை வாங்குவதற்கான காரணம் இது தான். ஆனால்,

                                ஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்

                                ஆணுறைகளும் காலாவதியாகும் என்ற உண்மையை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

                                காண்டம்’ என்று அழைக்கப்படும் ஆணுறை, அத்தியாவசியான ஒரு பயன்பாட்டு பொருளாகும். வேண்டாத கர்ப்பத்தை தடுப்பதுடன், எய்ட்ஸ் போன்ற தீவிர நோய்கள் மற்றும் பால்வினை நோய்கள்

                                தொற்றிவிடாமல் காத்துக்கொள்ளவும் இது உதவுகிறது.. ஆணின் விந்து பெண்ணுறுப்புக்குள் சென்றுவிடாமல் ஆணுறையின் நுனியிலேயே தங்கி விடும். இவை பல்வேறு வடிவங்கள் மற்றும்

                                அளவுகளில் எளிதாக கிடைக்கக்கூடியவை. சில ஆணுறைகள் விந்து வெளியாகும் நேரத்தை நீட்டித்து அதிக தாம்பத்ய இன்பம் பெறவும் உதவக்கூடியவை என்றும் கூறப்படுகிறது. பயமில்லாமல் முழு

                                இன்பத்தை சுகிப்பதற்கு ஆணுறை உதவுகிறது. ஆணுறை இவ்வளவு பயன்மிக்கதாய் இருந்தும், அதை சரியான இடத்தில் பத்திரமாக

                                வைத்து பாதுகாக்காவிட்டால் பயனிழந்து விடும். பலருக்கு ஆணுறைக்கு காலாவதி தேதி உண்டு என்ற விஷயம் தெரியாமல் இருக்கக்கூடும்.

                                ஆணுறை பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்:.

                                ஆணுறையை பயன்படுத்த எடுக்கும்போது நெகிழும் தன்மை குறைவாக இருப்பதாக அல்லது வறண்டு இருப்பதாக அல்லது கையில் ஒட்டிக் கொள்வதுபோல் உணர்ந்தால் பயன்படுத்த

                                வேண்டாம். புதிய ஒன்றை வாங்குவது நன்று. நிறம் வெளிறி அல்லது பூஞ்சை பிடித்தது போன்ற மணம் இருந்தாலும் அந்த ஆணுறையை தவிர்க்கவும்..

                                தேவைப்படும்போது பயன்படுத்துவதற்காக ஆணுறையை வாங்கி பாதுகாப்பான இடத்தில் வைப்பது முக்கியம். சரியான இடத்தில்

                                வைக்காவிட்டால் ஆணுறையில் கீறல் விழலாம் அல்லது வறண்டு போகலாம். குளிரான ஆனால் ஈரமில்லாத இடங்களில் ஆணுறையை பாதுகாப்பாக வைக்க வேண்டும்..

                                ஆணுறை, உயவு பொருள் மிகுந்ததாக, வழுக்கும் தன்மை கொண்டதாக இருந்தால்தான் உறவு இன்பமாக அமையும். பாக்கெட்டை பிரிப்பதற்கு கத்தரிக்கோலை

                                பயன்படுத்தவேண்டாம். தவறிப்போய் அது ஆணுறையை கிழித்து விடக்கூடும். பிரிக்கும்போது விரல் நகங்கள் அல்லது கார் மற்றும் மோட்டார் சைக்கிள் இவற்றின் சாவி ஆணுறையை சேதப்படுத்திவிடாமல் கவனமாக இருக்கவேண்டும்..

                                ஆணுறையை பயன்படுத்தும் முன்னர் காலாவதி தேதியை (எக்ஸ்பயரேஷன் டேட்) கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். காலாவதி தேதி நெருங்கும்போது தங்கள் மீட்சித்தன்மையை அவை

                                ஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்

                                இழந்து விடும். பார்ப்பதற்கு நன்றாக இருப்பதாக தோன்றினாலும், பயன்படுத்தும்போது கிழிந்துபோய் இக்கட்டான நிலையை

                                ஏற்படுத்தி விடும். ஆகவே, வைத்திருக்கும் ஆணுறையின் காலாவதி தேதி நெருங்கினால் அதை தவிர்த்துவிடுவது நல்லது. ஆணுறையை கவனிப்பதுபோன்று, தாம்பத்ய உறவின்போது என்ன உயவுப்

                                பொருள் பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம். எண்ணெய் பசை மிக்க உயவுப் பொருளை பயன்படுத்தவேண்டாம். அது

                                ஆணுறையை சேதப்படுத்திவிட வாய்ப்புண்டு. ஆணுறை போன்ற முக்கியமான விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது பிற்கால கவலைகளை தடுக்கும்.

                                Posted in சினிமா

                                எடை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஹன்சிகா

                                எடை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஹன்சிகா

                                தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஹன்சிகா, உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போயுள்ளார்.

                                உடல் எடை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன
                                தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய்,

                                சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா.

                                இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு

                                இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே

                                முடங்கி இருக்கும் ஹன்சிகா, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

                                ஹன்சிகா

                                இந்நிலையில், அவரின் சமீபத்திய போட்டோஷுட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காரணம், கொழுகொழுவென இருந்த ஹன்சிகா உடல் எடையை குறைத்து ஒல்லியானது தான்.

                                ஆரஞ்சு நிற மாடர்ன் உடையில் இருக்கும் ஹன்சிகாவின் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

                                    Posted in சினிமா

                                    தூக்கிப் போட மனமில்லை… அவர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமா வச்சிருக்கேன் – கீர்த்தி சுரேஷ்

                                    தூக்கிப் போட மனமில்லை… அவர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமா வச்சிருக்கேன் – கீர்த்தி சுரேஷ்

                                    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனக்கு வந்த காதல் கடிதம் குறித்து தெரிவித்துள்ளார்.

                                    தூக்கிப் போட மனமில்லை… அவர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமா வச்சிருக்கேன் – கீர்த்தி சுரேஷ்
                                    கீர்த்தி சுரேஷ்


                                    ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.

                                    நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘மகாநடி’ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றார். அடுத்ததாக ரஜினி-சிவா

                                    கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுதவிர 3 தெலுங்கு படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

                                    இந்நிலையில், தனக்கு வந்த காதல் கடிதம் குறித்து கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது: நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது என் தீவிர ரசிகர் ஒருவர்

                                    எனக்கு கிப்ட் கொடுத்தார். அந்த கிப்டை திறந்து பார்த்தபோது, அதில் என் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் மற்றும் ஒரு காதல் கடிதம் இருந்தது.

                                    கீர்த்தி சுரேஷ்

                                    என் மீது கொண்ட காதலை அவர் அந்த கடிதத்தில் வெளிப்படுத்தியதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியிருந்தார். நான் கல்லூரியில் படித்தபோது ஒருவர் கூட எனக்கு

                                    காதல் கடிதம் கொடுத்ததில்லை. அதனால் அந்த ரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை தூக்கிப் போட மனமின்றி பத்திரமாக வைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

                                        Posted in சினிமா

                                        இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது- ஏ.ஆர். ரகுமான்

                                        இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது- ஏ.ஆர். ரகுமான்

                                        இழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம். இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது என ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.

                                        இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது: கடந்து செல்வதே சிறந்தது- ஏ.ஆர். ரகுமான்
                                        ஏ.ஆர். ரகுமான்


                                        மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தில் பெச்சாரே’ என்ற திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

                                        நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து பேட்டியளித்த ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது:-

                                        பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே

                                        இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்திகளை பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்.

                                        ‘தில் பெச்சாரா’ படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார். இரண்டு நாட்களில் அவரிடம் நான்கு பாடல்களை கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், ‘‘பலர்

                                        என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று கூறினார்கள். அவர்கள் ஏதேதோ கதைகளை சொல்கிறார்கள்’’ என்று கூறினார்.

                                        அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இந்த தவறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று.

                                        பரவாயில்லை. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான்.

                                        எனக்கு வரும் படங்களுக்கு நான் இசையமைக்கிறேன். அனைவரையுமே நான் வரவேற்கிறேன்.
                                        இவ்வாறு ஏ.ஆர். ரகுமான் கூறியுள்ளார்.

                                        இவ்வாறு கூறிய ரஹ்மானுக்கு சினிமா உலகம் ஆதரவு தெரிவித்து வருகிறது. சேகர் கபூர் ‘‘பாலிவுட் உங்களை கையாண்டதை விட அதிகமான திறமை உள்ளதை நிரூபித்து விட்டீர்கள்’’ என்று தெரிவித்திருந்தார்.

                                        இந்நிலையில் ரஹ்மான் ‘‘இழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம், ஆனால், நாமது வாழ்க்கையில் இழந்த

                                        முக்கியமான நேரத்தை ஒருபோதும் திரும்ப பெற முடியாது. அமைதி! இதில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும். செய்வதற்கு

                                        இன்னும் சிறந்த விசயங்கள் உள்ளன’’ என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

                                            Posted in சினிமா வினோத வீடுப்பு

                                            நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

                                            நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

                                            ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

                                            நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

                                            தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. அதைத்தொடர்ந்து ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

                                            இந்த நிலையில் அவர் சென்னை திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு

                                            முயன்றுள்ளார். இதையடுத்து அவர் சென்னை அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக

                                            அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

                                            விஜயலட்சுமி

                                            கண் விழித்த பின் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை போலீசார் விசாரிக்க இருக்கிறார்கள். தற்கொலை முயற்சி செய்யும்

                                            முன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                                            நடிகை-விஜயலட்சுமி-தற்கொல
                                            நடிகை-விஜயலட்சுமி-தற்கொல
                                                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                                காதலிக்க சம்மதமா ….?

                                                காதலிக்க சம்மதமா ….?

                                                பாவாடை தாவணியில்
                                                பாவை நீ போகையில
                                                உன்னை விழி தொடருதே
                                                உடைந்து மனம் வாடுதே

                                                தோகை மயில் கூந்தலில
                                                தொங்கும் பூ வாசத்திலே
                                                மனது மயங்குதே
                                                மானே உன்னை தேடுதே

                                                வீசும் காற்றில் கையை வீசி
                                                விடலை நீ போகையில
                                                உன்னை விழி தொடராதோ …?
                                                உயிரே அணைக்க துடிக்காதோ …?

                                                சின்ன விழி பார்வையில
                                                சிரித்து நீ போகையில
                                                தேவைதையை தேடேனோ
                                                தெரு தெருவா சுற்றேனோ …?

                                                ஒத்த நொடி உன்னை கண்டு
                                                உலகை மறந்தேனே
                                                இந்த உயிர் வாழ்ந்திடவே
                                                என் உயிரே நீ வேண்டும்

                                                வன்னி மைந்தன்
                                                ஆக்கம் -25-07-2020

                                                Posted in சினிமா வினோத வீடுப்பு

                                                பார்த்தவுடன் கட்டிப்பிடித்துவிட்டேன் – வரலட்சுமி

                                                பார்த்தவுடன் கட்டிப்பிடித்துவிட்டேன் – வரலட்சுமி

                                                தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், பார்த்தவுடன் கட்டிப் பிடித்துவிட்டேன் என்று பேட்டியளித்துள்ளார்.

                                                பார்த்தவுடன் கட்டிப்பிடித்துவிட்டேன் – வரலட்சுமி
                                                வரலட்சுமி சரத்குமார்
                                                பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை

                                                கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் டேனி. இப்படத்தை சந்தானமூர்த்தி இயக்கியுள்ளார். வரலட்சுமியுடன் யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய

                                                கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

                                                தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த காவல் நிலையத்தின் மையத்துக்குள்

                                                நடக்கும் ஒரு கொலையைத் துப்பறியும் காவல்துறை அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அவருடன் பிங்கி என்ற ஒரு நாய்

                                                நடித்திருக்கிறது. படத்தில் அதன் பெயர் தான் டேனி. உடனிருக்கும் மனிதர்களை நம்பாமல், வரலட்சுமி – டேனி இணைந்து எப்படி

                                                அந்தக் கொலையை துப்பு துலக்கினார்கள் என்பதே ‘டேனி’ படத்தின் கதை.

                                                இந்தப் படத்தைப் பற்றி வரலட்சுமி சரத்குமார் கூறும்போது, ‘டேனி என்கிற நாய் தான் படத்தின் ஹீரோ. இதில் இன்ஸ்பெக்டராக நான் நடித்துள்ளேன். நான் எந்தக் கதாபாத்திரத்துக்கும் யாரிடமும்

                                                கற்றுக் கொள்வதில்லை. இந்தப் படத்தில் காவல்துறை உடையணிந்தவுடன், இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதற்கு ஏற்றார் போல் நடித்துள்ளேன்.

                                                டேனியுடன் வரலட்சுமி

                                                நாய்க்குட்டியுடன் நடித்தது இந்த படத்தில் எனக்கு பிடித்த விஷயம். கதை ரொம்ப அழகாக இருந்தது. ஒரு கொலை நடக்கிறது, அதை

                                                எப்படி ஒவ்வொரு கட்டமாக தாண்டி கண்டுபிடிக்கிறார்கள் என்ற கதை. தேவையில்லாமல் எந்தவொரு காட்சியுமே இருக்காது.

                                                படப்பிடிப்பு தளத்தில் நாயைப் பார்த்தவுடன் முதலில் போய் கட்டிப்பிடித்துவிட்டேன். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்குப்

                                                போனதிலிருந்து டேனி எப்போது வருகிறது என்று தான் கேட்டுக் கொண்டே இருந்தேன். தன்னுடைய காட்சிகளுக்குப் பிறகு அழகாக போய் அதன் இருக்கையில் அமர்ந்து கொள்ளும். நமக்கு இது

                                                கேமரா, படப்பிடிப்பு என்றெல்லாம் புரியும். ஆனால், டேனியே பல டேக்குகள் வாங்காமல் ட்ரெய்னர் என்ன சொல்றாரோ அதை சரியாக செய்துக் கொடுத்தது’ என்றார்..

                                                    Posted in சினிமா

                                                    சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு – கங்கனா ரணாவத்துக்கு போலீஸ் சம்மன்

                                                    சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு – கங்கனா ரணாவத்துக்கு போலீஸ் சம்மன்

                                                    இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு தொடர்பாக பிரபல நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

                                                    சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு – கங்கனா ரணாவத்துக்கு போலீஸ் சம்மன்
                                                    கங்கனா ரணாவத் – சுஷாந்த் சிங்


                                                    பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14-ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது

                                                    தற்கொலை இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

                                                    சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து,பிரபல நடிகை கங்கனா ரணாவத் இந்தி திரையுலகை கடுமையாக சாடி இருந்தார். மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத் மனநல ரீதியில் பலவீனமானவர் அல்ல

                                                    என்றும், தகுதிவாய்ந்த அவரது படங்களும், அவரது நடிப்பும் எந்த விருதுகளாலும் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கருத்து தெரிவித்தார்.

                                                    கங்கனா ரணாவத் – சுஷாந்த் சிங்

                                                    இந்தநிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக கங்கனா ரணாவத்தின் வாக்குமூலத்தை பதிவு செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர். தற்போது கங்கனா ரணாவத் மணாலியில்

                                                    இருக்கிறார். இதன் காரணமாக போலீசார் அந்த சம்மனை தபால் மூலம் அவருக்கு அனுப்பி இருக்கிறார்கள். கடந்த 3-ந் தேதியே

                                                    அவரை மும்பைக்கு வரவழைத்து வாக்குமூலத்தை பதிவு செய்ய திட்டமிட்டு இருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

                                                        Posted in சினிமா வினோத வீடுப்பு

                                                        பிக்பாஸ் நடிகை தற்கொலை முயற்சி

                                                        பிக்பாஸ் நடிகை தற்கொலை முயற்சி

                                                        கன்னடத்தில் வளம்வரும் இளம் நடிகையாக அறியப்படுபவர் ஜெயஸ்ரீ ராமையா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு கன்னட பிக்பாஸ்

                                                        சீசன் 3-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். கன்னட கொத்திலா, உப்பு குலி காரா ஆகிய படங்களிலும் ஜெயஸ்ரீ ராமையா நடித்து இருந்தார்.

                                                        இந்த நிலையில் ஜெயஸ்ரீ ராமையா தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் நான் மனசோர்வாக உள்ளேன். இந்த உலகத்தில் இருந்து

                                                        விடைபெறுகிறேன் என்று கூறியிருந்தார். இந்த பதிவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பதிவை பார்த்த ஜெயஸ்ரீ

                                                        ராமையாவின் நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் அவர் செல்போன் அழைப்பை எடுத்து பேசவில்லை.

                                                        இந்த நிலையில் ஜெயஸ்ரீ ராமையா தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அவரது

                                                        தோழியும், நடிகையுமான அஸ்வதி ஷெட்டி முற்றிலுமாக மறுத்தார்.

                                                        ஜெயஸ்ரீ ராமையா

                                                        இந்த நிலையில் நேற்று மாலை ஜெயஸ்ரீ ராமையா தனது முகநூல் பக்கத்தில் இன்னொரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் நான் பாதுகாப்பாகவும், நலமாகவும் உள்ளேன். அனைவரையும்

                                                        நேசிக்கிறேன் என்று கூறி இருந்தார். மேலும் அவர் முந்தைய பதிவையும் அழித்து இருந்தார். ஜெயஸ்ரீ ராமையா கடந்த சில

                                                        தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் புதிதாக ஒரு வீட்டை வாங்கி இருந்தார்.

                                                        இதுதொடர்பாக அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதனால் மனஅழுத்தத்தில்

                                                        இருந்த ஜெயஸ்ரீ ராமையா தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கன்னட நடிகை தற்கொலைக்கு

                                                        முயன்றதாக கூறப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.