Author: நிருபர் காவலன்
அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய ஜோதிகா.
அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய ஜோதிகா.
நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய ஜோதிகா
ஜோதிகா
நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக்
காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார்.
தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக்
கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டு உள்ளது.
இரா.சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார்
சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா
பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள்
தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார். இதையடுத்தே தன் பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார் ஜோதிகா.
ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
பெற்றுக் கொண்டார். “ஜோதிகா செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி” என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
முகநூலில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை
முகநூலில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை
திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாக உள்ள நடிகை முகநூலில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துள்ளார்.
முகநூலில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை
அனுபமா பதக்
கொரோனா ஊரடங்கில் நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் திரையுலகை உலுக்கி வருகிறது. இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தூக்கில் தொங்கி
இறந்தார். தொடர்ந்து இந்தி டி.வி. நடிகர் மன்மீத் கிரேவல், டி.வி. நடிகை பிரேக்ஷா மேத்தா, மராத்தி நடிகர் அசுதோஷ் பாக்ரே
ஆகியோரும் தற்கொலை செய்து கொண்டனர். இரு தினங்களுக்கு முன்பு இந்தி டி.வி. நடிகர் சமீர் ஷர்மாவும் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.
இந்த நிலையில் தற்போது போஜ்புரி திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாக உள்ள நடிகை அனுபமா பதக்கும் தற்கொலை செய்துள்ளார்.
அனுபமா பதக்
பீகார் மாநிலம் புர்னியாவை சேர்ந்த இவர் மும்பையில் உள்ள தஹிசர் பகுதியில் தங்கி படங்களில் நடித்து வந்தார். சில
தினங்களுக்கு முன்பு அனுபமா பதக் தனது முகநூல் பக்கத்தில், “சிலர் தன்னை ஏமாற்றி விட்டனர் என்றும், முதலீடு செய்த
பணத்தை ஒரு நிறுவனம் திருப்பி தரவில்லை என்றும், தனது இரு சக்கர வாகனத்தை ஒருவர் எடுத்து சென்று விட்டார் என்றும், இங்கு யாரையும் நம்ப முடியவில்லை” என்றும் வீடியோவில் பேசி
வெளியிட்டு இருந்தார். இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது
நீ வேண்டும் எனக்கு …!
நீ வேண்டும் எனக்கு …!
ஆழ குழியெடுத்து
அடியே நீ புதைத் தாலும்
வேர் பிடித்து நான் எழுவேன்
வேண்டும் வரம் பெற்றிடுவேன்
ஆழ நெஞ்சுக்குள்
அடியே நான் நினைத்து விட்டேன்
சாகு முன்னே நான்
சக்களத்தி கை பிடிப்பேன்
பிடிக்கலை என்றென்னை
பின் தொடரா போபவளே
பிடித்திருக்கு உனை எனக்கு
பிரியத்தை என் செய்வேன் …?
தனியே நீ போகையில
தற்காப்பு தருகிறேன்
பிரியத்தை கண்டேனும்
பிள்ளை மனம் மாறாயோ …?
உன் உரிமம் எனக்கென்று
உயில் எழுதி தந்து விடு
பின் தொடரா போகிறேன்
பிரியமுடன் உனை விட்டு
வன்னி மைந்தன்
ஆக்கம் -06-08-2020
இவன் தான் மனிதன்
இவன் தான் மனிதன்
சாதியில் இவனொரு சலவை
மதியில் இவனொரு கலவை
அன்பால் அணைத்த தந்தை
அழுதாள் இங்கொரு மங்கை
நனைந்தன எந்தன் விழிகள்
நடந்தன எந்தன் நடைகள்
பறந்தன எந்தன் கவலை
முளைத்தன புதிய சிறகு
கற்றது பள்ளியில் குறைவு
கற்றேன் இங்கே நிறைவு
விதையை எனக்குள் விதைத்த
வித்தக மனிதன் என்றேன்
இரு நாள் இவரை படித்தேன்
இதயம் மலர்ந்து கனத்தேன்
ஒரு நாள் உன்னை பார்ப்பேன்
ஒன்றாய் இருந்து சுவைப்பேன்
அந்த நாளை வளர்ப்பேன்
அதற்காய் இன்றே உழைப்பேன்
அனுபவம் உயர்ந்த கல்வி
அதனை தந்தது உந்தன் செவ்வி
-வன்னி மைந்தன் –
06-08-2020
பெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்
பெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்
உடலுறவின் போது பெண்களுக்குக் கடுமையான வலி உண்டாகிறது எனில் அது சாதாரண விஷயம் எனக் கடந்துவிடாதீர்கள். அதற்குப் பின் பல காரணங்கள் இருக்கலாம்.
பெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்
பெண்களுக்கு அந்த நேரத்தில் அதிக வலி ஏற்பட்டால் இது தான் காரணம்
உடலுறவின் போது பெண்களுக்குக் கடுமையான வலி உண்டாகிறது எனில் அது சாதாரண விஷயம் எனக்
கடந்துவிடாதீர்கள். அதற்குப் பின் பல காரணங்கள் இருக்கலாம். அவை என்னென்ன என தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கும் அதுபோன்ற அறிகுறி இருந்தால் கவனம் செலுத்துதல் அவசியம்.
கர்ப்பப்பை வாய் தொற்று : கர்ப்பப்பையின் வாய் பகுதி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் உடலுறவின் போதோ அல்லது பின்பும் கடுமையான வலியை உண்டாக்கும்.
பெண்ணுறுப்பு வறட்சி : உடலுறவின் போது மென்மையாக இருக்க பெண்ணுறுப்பின் வாய்ப் பகுதியில் திரவம் வெளியேறவில்லை எனில் வலி ஏற்படும்.
முடி , காயம் : பிறப்புறுப்பில் முடியின் தொற்றால் பருக்கள் உண்டாகி உராய்வின் போது வலியை உண்டாக்கலாம். உட்புறத்தில் காயங்கள் இருந்தாலும் உராய்வினால் வலி ஏற்படலாம்.
தவறான நிலை : உடலுறவு நிலைகளை படத்தில் பார்த்துவிட்டு அப்படியே முயற்சி செய்யாதீர்கள். புதிதாக அந்த நிலைகளை மேற்கொண்டாலும், தவறாக செய்தாலும் வலி உண்டாகும்.
குழந்தை பெற்ற தாய் : சமீபத்தில் தான் குழந்தையை ஈன்றிருக்கிறீகள் என்றாலும் வலி உண்டாகும்
ஆக்ரோஷமான உடலுறவு : ஆக்ரோஷமாக உடலுறவு மேற்கொண்டாலும் அடி வயிற்றில் , பிறப்புறுப்பில் வலி உண்டாகும்.
பாலியல் தொற்று : பலருடன் உடலுறவு மேற்கொள்பவர் எனில் அதனால் தொற்று ஏற்பட்டிருந்தால் வலி உண்டாகலாம். ஒருவருடன் உடலுறவு வைத்துக்கொண்டாலும் சில நேரங்களில் தொற்று ஏற்படலாம்.
கருத்தடை பயன்பாட்டில் சிக்கல் : ஆணுறையை சரியாக அணியவில்லை என்றாலும் பிறப்புறுப்பிற்குள் சென்று வலியை உண்டாக்கலாம்.
விருப்பமின்மை : உடலுறவில் விருப்பமில்லை எனில் பெண்களின் பிறப்புறுப்பு ஆண்களுக்கு இணைந்து கொடுக்காது. பிடிப்புடன் இருக்கும். அந்த சமயத்தில் நுழைய முடியாமல் வற்புறுத்தும்போது வலி ஏற்படும்.
பயம் , பதட்டம் : உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மை, பயம், பதட்டம் போன்றவை இருந்தாலும் அந்த உடலுறவை அசௌகரியமாக்கும். அந்த சமயத்தில் உடலுறவு மேற்கொண்டாலும் அது வலி கொண்டதாக இருக்கும்.
ஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி
ஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி
பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி, ஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.
ஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி
பார்வதி
தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். தற்போது
பார்வதி சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது நீண்டநாள் ஆசையான மூக்குத்தி
குத்திக்கொள்ளும் வைபவத்தை தனது வீட்டிலேயே அரங்கேற்றி இருப்பதாக பார்வதி பதிவு செய்துள்ளார்.
பார்வதி அவரது தாய்
இதுபற்றி கூறியுள்ள பார்வதி, “உரிய சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தான் மூக்குத்தி குத்திக்கொண்டேன்.
மூக்குத்தி அணிந்த பின்னர் நானும் எனது தாயைப்போலவே இருப்பதை உணர்ந்தேன். அம்மா குட்டியைப்போல ஒரு
அம்மிணிக்குட்டி” என்று கூறியதுடன் தனது தாயின் மூக்குத்தி அணிந்த புகைப்படத்தையும் சேர்த்து பகிர்ந்துள்ளார்.
150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் மம்முட்டி
150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் மம்முட்டி
தமிழ், மலையாளம் மொழிகளில் பிரபலமாக இருக்கும் மம்மூட்டி 150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்று அவரது மகன் துல்கர் சல்மான் கூறியுள்ளார்.
150 நாட்களாக வீட்டுக்குள்ளே இருக்கும் மம்முட்டி
மம்முட்டி
மலையாளத்தில் உச்ச நடிகராக இருப்பவர் மம்முட்டி. இவருக்கு தமிழிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய மகன்
நடிகர் துல்கர் சல்மானும் தமிழ், மலையாள மொழிகளில் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நடிகர் துல்கர் சல்மான், மாணவர்களுடன் சமீபத்தில் பேசிய உரையாடலில், தனது அப்பா மம்மூட்டி 150 நாட்களாக வீட்டை விட்டு
வெளியே செல்லவில்லை என்றும், அவர் வெளியே செல்லாமல் எவ்வளவு நாட்கள் தன்னால் இருக்க முடியும் என்பதை பார்க்க
விரும்புவதாகவும், தனக்கு தானே சவால் விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மம்முட்டி – துல்கர் சல்மான்
மேலும் தனது தந்தையை வெளியே ஒரு டிரைவுக்காக செல்ல அழைத்த போது அவர் ஆர்வம் காட்டவில்லை. அவரைப் போல்
என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை என்றும், சலிப்பாக இருப்பதாகவும், வெளியே செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் துல்கர் கூறியுள்ளார்.
திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா
திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா
பிரபல நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்ததாக கூறியிருக்கிறார்.
திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா
சமந்தா
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா. இவரிடம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள், வர்த்தக
படங்கள் இந்த இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு:-
“நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் பெயர் வரும். வர்த்தக படங்களில் நடித்தால் வளர்ச்சி வேறுமாதிரி
இருக்கும் என்றெல்லாம் பிரித்து பார்த்து நான் கணக்கு போட்டது இல்லை. எதிர்பார்க்காமல் சினிமா துறைக்கு வந்து நடிகையானேன். அதிர்ஷ்டம் கூட சேர்ந்ததால் சிறந்த நடிகை என்று பெயர் வாங்கினேன்.
சமந்தா
என்னை விட அழகானவர்கள். திறமையானவர்கள் எவ்வளவோ பேர் இருந்தும் அவர்களை மீறி முன்னுக்கு வந்து இருக்கிறேன்.
எதிர்பாராமல் இந்த தொழிலுக்கு வந்தாலும் இப்போது சினிமாதான் எனது வாழ்க்கை என்று சொல்லும் அளவுக்கு நடிப்பு மீது காதலை
வளர்த்துக்கொண்டேன். அதனால்தான் அந்தமாதிரி படம் இந்த மாதிரி படம் என்றெல்லாம் வேறுபடுத்தி பார்க்காமல் எல்லாவிதமான கதைகளிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.”
இவ்வாறு சமந்தா கூறினார்.
உன் இறப்பு நாளை …!
உன் இறப்பு நாளை …!
ஊரெல்லாம் விளம் பரமாய்
உடல் காட்டி போறவளே
எவன் வந்து உனை பிடிக்க
ஏன் இந்த விளம்பரமோ …?
காந்தியது சத்தியத்தை
கடை பிடிக்க வந்தாயோ ..?
கஞ்ச தன ஆடை வெட்டி
காவேரி நடந்தாயோ ..?
ஊரெல்லாம் எச்சியில
உனை கழுவி ஊற்றுதடி
ஊரடங்கு போட்டு விட
ஊர் சபை துடிக்குதடி
அழகு ராணி போட்டியில
அரங்கேற்றம் செய்தாயோ ..?
அடியே உன் காலடியை
ஆடவர்கள் நொதியாதோ …?
விலை மாது என்றார்கள்
விவரம் இது வாச்சோ..?
உயிர் கொல்லி நோய் ஒன்று
உனை உருக்க காத்திருக்கு ….!
வன்னி மைந்தன்
ஆக்கம் -05-08-2020
ஈரான் ஆயுத கப்பலை லெபனான் துறைமுகத்தில் அழித்த இஸ்ரேல் – 3000 பேர் காயம் – பேர் வெடிக்கும் அபாயம் 7 video
ஈரான் ஆயுத கப்பலை லெபனான் துறைமுகத்தில் அழித்த இஸ்ரேல் – 3000 பேர் காயம் – பேர் வெடிக்கும் அபாயம் video
லெபனான் நாட்டில் தளம் அமைத்து போராடி வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்களுக்கு ஈரான் நேரடியாக ஆயுதங்களை வழங்கி வருகிறது
மேற்படி அமைப்பிற்கு ஈரான் ஒரு லட்சம் ர்க்கட,மற்றும் எறிகணைகளை வழங்கியுள்ளது ,அரபு நாடுகளில் உள்ள
அமெரிக்கா படைகள் முற்றாக துடைத்து அழிக்க படும் என ஈரான் அறிவித்திருந்த
நிலையில் ,சிரியாவில் ஈரான் இராணுவம் நேரடியாக தரை இறங்கி சிரியா அரசுக்கும் உதவி வருகிறது
விரைவில் லெபனான் ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் மீது பெரும் தாக்குதல்
ஒன்றை நடத்துவார்கள் என கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பகிரங்கமாக இஸ்ரல் உளவுத்துறை அறிவித்தது
அதன் பின்னர் கடந்த மூன்று வாரங்களில் இஸ்ரேல் லெபனான் மீது தொடர்
வலிந்து தாக்குதலை நேரடியாக நடத்தி வந்தது ,முக்கிய தளபதிகளை
உளவு விமானம் மூலம் கொலை வெறி தாக்குதல் நடத்தியது ,ஆனால் அதில் இருந்து அவர்கள் தப்பித்து கொண்டனர்
ஈரான் உளவு விமானம் ஒன்றும் கடந்த வாரம் சுட்டு வீழ்த்த பட்டது,இராணுவ சிப்பாய் ஒருவர் உயிருடன் பிடிக்க பட்டார்
அதன் பழிவாங்கும் உச்சகட்ட தாக்குதலாக இன்று லெபனான் தலைநகர்
பேரூட்டில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தில் ஆயுத கப்பலில் வந்திறங்கிய ஆயுதங்களை அப்படியே அழி த்துள்ளது இஸ்ரேல்
நாம் எங்கும் எப்பொழுதும் தாக்குதல் நடத்துவோம் என்பதை இஸ்ரேல் மொஸாட் வெளியாக உளவுத்துறை மீண்டும் அடித்து கூறியுள்ளது
மேற்படி குண்டு தாக்குதலில் அந்த துறைமுகம் சுடு காடாக காட்சி அளிக்கிறது ,
மேலும் இதுவரை முப்பது பேர் பலியாகியுள்ளனர் ,2500 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடை ந்துள்ளனர் ,உயிரிழப்பு நூற்றுக்கு மேல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது
இந்த தாக்குதலுக்கும் எமக்கும் சம்பந்தம் இல்லை என விழுந்தடித்து இஸ்ரேல் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது,இவ்வளவு வேகமாக இஸ்ரேல் கூறுவதற்கு காரணம் என்ன ..?
இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆயுத கப்பலுடன் ரொக்கட்கள் வெடித்து சிதறியுள்ளது
இஸ்ரேல் புரிந்த இந்த தாக்குதலுக்கு லெபனான் நேரடி தாக்குதலை வரும் மணித்தியாலங்களில் நடத்த கூடும் என்ற பரப்பு
நிகழ்கிறது,உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு மந்திரிகள் ,முக்கிய தலைவர்களுடன் லெபனான் அரசர் அவசர சந்திப்பை நடாத்தியுள்ளார்
இது மிக பெரும் போராக வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது
வரும் மணித்தியாலங்கள் எதுவும் நடக்கலாம் என்பதே இப்போதுள்ள கள நில வரமாகும் .
பயந்தவர்கள் இந்த காணொளி பார்க்காதீங்க இதில் அழுத்துங்க
லெபனான் தாக்குதலை எதிர்கொள்ள எல்லை பகுதியில் இஸ்ரேல் இராணுவம் அதிகமாக ,இரு வரங்களுக்கு முன்னதாகேவே குவிக்க பட்டதும் ,தற்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ,
இஸ்ரேலின் நீண்ட நாள் திட்டத்தின் தயார் படுத்தலின் உச்சம் இதுவாக பார்க்க முடிகிறது
லெபனான் ,ஈரான் இனைந்து அடுத்து என்ன செய்ய போகின்றன ..?
சொலை மானியை கொலை செய்த இஸ்ரேல் உளவுத்துறைக்கு ஈரான் தரப்போகும் அடுத்த பதிலடி எதுவாக இருக்க போகிறது ..?
இப்போது அமெரிக்கா ,இஸ்ரேல் நிலைகள் மீது எவ்வேளையும் எங்கும் தாக்க படலாம் என்ற அச்சம் நிலவுகிறது
அடுத்து வரும் நாட்களில் இவை கண்டிப்பாக நடக்கும் என்பதை அடித்து கூறலாம் ,இரண்டு குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது ஐந்தாயிரம் பேர் காயம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது
இஸ்ரேல் வழிந்து தாக்குதல் முற்று பெற்றுள்ளது, அடுத்து நேரடி தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவம் தயார் நிலையில் உள்ளது
என்பதையும் ஊகிக்கலாம் ,அதுவே தான் நடக்க போகிறது .உலக போர் இங்கிருந்து ஆரம்பிக்குமா ..?
- வன்னி மைந்தன் –
மாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை
மாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் பாடல் ஒன்றுக்கு பிகில் படத்தில் நடித்த நடிகை ஒருவர் சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார்.
மாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை
விஜய்
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி,
மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக குட்டி
ஸ்டோரி பாடல் மட்டும் யூடியூப்பில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்தது. இந்த பாடலுக்கு பல பிரபலங்களும் நடனம் ஆடி வீடியோ
வெளியிட்டார்கள். இந்நிலையில், விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்து அணியில் நடித்த வினயா சேஷன் வெளிநாட்டில்
நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.
விஜய் – வினயா ஷேசன்
இந்த வீடியோவை நடிகை வினயா சேஷன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
என்னை கிழவி என்பதா? – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்
என்னை கிழவி என்பதா? – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்
அஜித் ரசிகர்கள் தன்னை கிழவி எனக்கூறி கிண்டல் அடித்ததால், நடிகை கஸ்தூரி அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
என்னை கிழவி என்பதா? – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்
கஸ்தூரி
தமிழ் பட உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த கஸ்தூரி தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்திலும் பரபரப்பாக இயங்கி சமூக அரசியல்
விஷயங்கள் பற்றி சர்ச்சை கருத்துகளை பகிர்ந்து வருகிறார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது. 3-வது திருமணம் செய்த வனிதாவுடன் தகராறு ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அஜித் ரசிகர்களுக்கும் கஸ்தூரிக்கும் வலைத்தளத்தில் ஏற்பட்ட மோதல் இப்போது மீண்டும் வெடித்துள்ளது. டுவிட்டர் முகப்பில் அஜித் புகைப்படத்தை
வைத்துள்ள ரசிகர் ஒருவர் கஸ்தூரி கதாநாயகியாக நடித்த பழைய படத்தில் இருந்து அவரது பாடல் காட்சி வீடியோவை வெளியிட்டு
இது நம்ம கஸ்தூரி கிழவிதானே என்று குறிப்பிட்டு அந்த காலத்தில் அழகாக இருந்துள்ளார் என்று சுட்டி காட்டி பதிவிட்டுள்ளார். மேலும்
பல ரசிகர்கள் அதை ஆமோதித்து பதிவுகளை பகிர்ந்தனர். இது கஸ்தூரிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
கஸ்தூரி
அந்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “எதற்கு தேவையில்லாமல் ஆணியை புடுங்குவானேன்? அதை எனக்கு சிசி பண்ணுவானேன். இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? அஜித்
கேட்டாரா அவர் பெயரை சொல்லி அசிங்கமா பேசுங்கன்னு. கஸ்தூரி கிழவிக்கு அஜித்தை விட ஐந்து வயது குறைவுதான். போய் வேற வேலை இருந்தால் பாருங்கள்.
உங்களை மாதிரியான மோசமான ரசிகர்களால் அஜித்தின் அனைத்து நல்ல ரசிகர்களுக்கும் கெட்ட பெயர். அதை புரிகிற
அளவுக்காவது அறிவு இருக்கிறதா இல்லையா. அஜித்குமார் சிறந்த மனிதர். அவரை மதிக்கிறேன். அவருக்கு பெருமை சேருங்கள்.
இதுபோல் மோசமாக செயல்பட வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த மோதல் வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.
என்னை மறந்தவளுக்கு இறுதி மடல் …!
என்னை மறந்தவளுக்கு இறுதி மடல் …!
அகமெல்லாம் கோடையது
அக்கனியாய் கொதிக்கிறது
விழியேனோ மார்கழியாய்
விழுந்தேனோ நனைகிறது
நெஞ்சேனோ நித்தம் – உன்
நினைவால் துடிக்கிறது
கத்தும் கடல் அலை போல
கரை தேடி அலைகிறது
பகல் எல்லாம் தேடுகிறேன்
பாலை வனம் ஆகிறது
இறுதி போர் முற்றுகையாய்
இதயம் ஏன் இருக்கிறது …?
நான் இட்ட முத்தத்தை
நகல் எடுத்து இன்று வை
நான் இறந்த பின்னாலே
நாளும் நீ ருசித்து வை
ஒன்றாக இருக்கையிலே
ஓராயிரம் சண்டைகள்
ஒருமையில வாடையில
உனை வாட்டும் தனிமைகள்
காரணங்கள் ஏதுமின்றி
கல் எறிந்தாய் நெஞ்சமதில்
விட்டெறிந்து நீ போனாய்
விழுந்து விட்டேன் நோயதினில்
பிணம் எடுக்கும் வேளையில
பிரண்டழுவாய் நீ மட்டும்
பின்னே வந்த மாதங்களில்
என்னை மறப்பாய் நீ முற்றும்
மறத்தல் தான் வாழ்வினிலே
மனதிற்கு நின்மதி
மரண ஓட்டம் தான்
மனிதனின் தலை விதி
எதை எடுப் பாய் எதை எறிவாய்
எண்ணிப் பாய் நீ தான்
என் மனதில் உள்ளவற்றை
எழுதிவிட்டேன் மன்னிப்பாய் ..!
வன்னி மைந்தன்
ஆக்கம் -03-08-2020
துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி
துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
வீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி
கங்கனா ரணாவத்
ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்த கங்கனா ரணாவத் தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்
தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள் காரணம் என்று கங்கனா குற்றம்சாட்டியது சர்ச்சையானது. இந்நிலையில் மணாலியில் உள்ள
கங்கனாவின் இல்லத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து கங்கனா கூறியதாவது: “இரவு 11.30 மணிக்கு எனது அறையில் நான் படித்துக்கொண்டு இருந்தபோது எனது வீட்டின் அருகில் இரண்டு முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. 8
வினாடி இடைவெளியில் 2 முறை சுட்டனர். வீட்டின் பின்புறத்தில் இருந்து யாரோ சுட்டுள்ளனர். எனது வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுக்குள் தப்பி சென்று இருக்கலாம்.
கங்கனா ரணாவத்
சில நாட்களுக்கு முன்பு முதல் அமைச்சர் மகன் குறித்து நான் கருத்து தெரிவித்ததற்காக கூட இத்தகைய மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். சத்தம் கேட்டதும்
பாதுகாவலர்கள் சென்று தேடியபோது யாரும் இல்லை. உள்ளூரில் யாருக்காவது பணம் கொடுத்து இப்படி செய்து இருக்கலாம்.
சுஷாந்த் சிங்கையும் இப்படித்தான் மிரட்டப்பட்டு பயமுறுத்தி இருக்க வேண்டும். யார் எப்படி என்னை மிரட்டினாலும் சரி, அஞ்ச
மாட்டேன் தொடர்ந்து கேள்வி கேட்பேன்” என்றார். இதையடுத்து கங்கனா வீட்டில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்
வட இந்திய தொழில் அதிபரை காதலிக்கிறாரா ஜூலி
வட இந்திய தொழில் அதிபரை காதலிக்கிறாரா ஜூலி
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஜூலி, வட இந்திய தொழில் அதிபரை காதலிப்பதாக வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வட இந்திய தொழில் அதிபரை காதலிக்கிறாரா ஜூலி?
ஜூலி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஜூலிக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. பொல்லாத உலகில் பயங்கர கேம்
படத்தில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.
ஜூலி
இந்த நிலையில் ஜூலி வட இந்திய தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளாமல் அவரோடு சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல்
பரவியது. இதை பார்த்து அதிர்ச்சியான ஜூலி தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த போலியான
செய்தியை பரப்புவது கேவலமானது. ஒருவரை அவதூறு செய்யும் இதுபோன்ற செயலை ஊக்குவிக்க வேண்டாம். ஊடகங்களில் எனது
திருமணம் குறித்து வெளியாகும் தகவல்கள் போலியானவை” என்று கூறியுள்ளார்.
50 கோடி பணத்தை கொள்ளையடித்த மருத்துவர் சத்தியமூர்த்தி -பலரை கொலை செய்தது அம்பலம்
50 கோடி பணத்தை கொள்ளையடித்த மருத்துவர் சத்தியமூர்த்தி -பலரை கொலை செய்தது அம்பலம்
யாழ்ப்பாண மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகமாக விளங்கி வரும் மருத்துவர் சத்திய மூர்த்தி புரிந்த
பல்வேறு பட்ட ஊழல்கள் ,கொலைகள் ,பழிவாங்கும் செயல்பாடுகள் தற்போது வெளிவந்துள்ளன
இவர் சுவிசில் உள்ள கஞ்சா வியாபாரிகளுடன் இணைந்து போதை வஸ்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ,மேலும் இவரது நடவடிக்கைகள் கண்ணுற்ற குறித்த மருத்துவ மனையில்
பணிபுரிந்த சக மருத்துவர்கள் பழிவாங்க பட்டு பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்களில் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர் .
மேலும் சிலர் வாகன விபத்தில் இறந்ததான முறையில் படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,சுவிஸில் இருந்து வித்தியா படுகொலை
தொடர்பில் சம்பந்த பட்ட கும்பலுடன் இணைந்து சத்திய மூர்த்தி இந்த விடயத்தை அரங்கேறி வருகின்றார்
கொரனோ நோயால் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டவர்கள் யாழ்ப்பாண மருத்துவமனையில் மட்டும் இறந்துள்ளனர் ,அவ்விதம்
இறந்தவர்கள் எலிக்காய்ச்சல்,,மஞ்சள் காமாலை ,மற்றும் மலேரியா நோயினால் இறந்ததாக கூறி அவர்களுக்கு மரண சான்றிதழ்
வழங்கி பெரும் அடாவடியில் ஈடுபட்டு வருகிறார் இந்த சத்திய மூர்த்தி
மேலும் சில மருத்துவ மனைகளுக்கு ஒதுக்க பட்ட நிதிகள் சுமார் ஐம்பது கோடி வரை இவர் மற்றும் பிராந்தியா சுகாதார பணிப்பாளருடன் இணைந்து மோசடி புரிந்துள்ளாராம் .
தமது லஞ்ச ஊழல் ,மோசடிகள் ,தெரிந்தவர்கள் பல்வேறு பட்ட முறையில் பழிவாங்க பட்டு வருகின்றனர்
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இவர் கொரனோ நோய் தொடர்பில் வழங்கிய பேட்டிகளை கண்ணுற்றால் இவர் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதை ,அவதானித்திருப்பீர்கள்
நாம மேற்படி விடயத்தை சுட்டி காட்டிய பின்னர் அவர் பேட்டி வழங்குவதை நிறுத்தி கொண்டார் .
மூன்று மருத்துவர்கள் இவரினால் இல்லாத பழி சுமத்த பட்டு இட மாற்றம் செய்யப்பட்டதுடன் சிலர் சிறைகளுக்கு தள்ள பட்டுள்ளனர்
மேலும் பல தாதிகள் மற்றும் அங்கு பணிபுரியும் சிலரும் இவரினால் பாலியல் வல்லுறவுவுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் என்ற விடயங்கள்
உள்ளக வாயிலாக கசிகிறது ,போதைவஸ்து கும்பலுடன் தொடர்பு வைத்து பல்வேறு பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் .
தனது பணி நேரம் முடிவதற்கு முன்பாகவே மருத்துவ மனையை விட்டு கிளம்பி விடுகிறார்
தனியார் மருத்துவ மனைகளில் பணிபுரிந்து வருகிறார் ,.இவரது இந்த செயல்களை தெரிந்து மாகாண சுகாதார அமைச்சர் ,மற்றும் பணிப்பாளர்கள் கண்டு கொள்ளாது இருந்து வருகின்றனர்
இவர் சில கல்வி மான்களிடம் இணைந்து கல்விக்கு என புலம் பெயர் மக்களினால் வழங்க பட்ட நிதியையும் மோசடி செய்து வருகின்றார் என தெரிவிக்க படுகிறது
தேர்தல் முடிவடைந்ததும் ,கொரனோ நோய் தொடர்பில் வெளி வரும் தகவல்களை வைத்து மக்கள் இந்த மருத்துவர் சத்திய மூர்த்தி
மற்றும் இவரது பின்புல செயல் பாடுகள் தொடர்பில் மக்கள் தெரிந்து கொள்வீர்கள்
வரும் வாரத்தின் பின்னர் மேற்படி விடயங்கள் தடலடியாக வெளிவரும் என்பதை அடித்து கூறுகிறோம்
மனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி
மனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி
நம் உடலில் நன்மை விளைவிக்கும் ஒரு உயிர் அணுவை மற்றொரு நல்ல உயிர் அணு அழிப்பதுதான் சைட்டோகைன் புயல் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
மனிதர்களின் உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி?
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் ஒரு இடத்தை தொட்டால், அந்த இடத்தை மற்றொருவர் தொடும் போது அவருக்கு நோய்க்கிருமி பரவுகிறது. அப்படி உடலின் வெளிப்புறத்தில் பரவிய
கொரோனா வைரஸ் கண், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றின் மூலம் தொண்டை குழாய் வழியாக உடலுக்குள் செல்கிறது.
அந்த வைரஸ் மூக்கும், வாயும் சேரும் இடத்தில் சில நாட்கள் தங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் அறிகுறிதான்
தொண்டை வலி. தொண்டை வலி வந்தவுடன் உரிய சிகிச்சை மூலம் வைரசை அழிக்க வேண்டும். அப்படி அழிக்கவில்லை என்றால் அது மூச்சுக்குழாய் வழியாக உடலுக்குள் சென்று விடும்.
உடலுக்குள் சென்ற வைரஸ் எப்படி நம் உடலில் உள்ள ஒவ்வொரு நோய் எதிர்ப்பு உயிர் அணுக்களையும் (செல்) பல கோணங்களில்
மனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி
தாக்கி அழித்து முக்கிய உடல் உறுப்புகளை எப்படி செயல் இழக்கச் செய்து கொல்கிறது என்பது பற்றி ‘பிராண்டியர்ஸ் இன் பப்ளிக்
ஹெல்த்’ என்ற அறிவியல் இதழில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து அந்த இதழில் கூறியிருப்பதாவது:-
மனிதர்களுக்கு நோய் ஏற்பட்டால் அதை எதிர்த்து போரிடுவதற்கு நம் உடலில் ஏராளமான நோய் எதிர்ப்பு உயிர் அணுக்கள் உள்ளன. ஆனால் அந்த உயிர் அணுக்களை கொரோனா வைரஸ்
புதுமையான முறையில் அழிக்கிறது. அதற்கு ‘சைட்டோகைன் புயல்’ என்று பெயர்.
நம் உடலில் நன்மை விளைவிக்கும் ஒரு உயிர் அணுவை மற்றொரு நல்ல உயிர் அணு அழிப்பதுதான் சைட்டோகைன் புயல் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
உடலில் நோய்களை எதிர்த்து போராடும் அதிகப்படியான ‘லிம்போ சைட்ஸ்’ மற்றும் ‘நியூட்ரோபைல்ஸ்’ என்று அழைக்கப்படும் ரத்த வெள்ளை அணுக்களை ஒன்றோடொன்று தாக்கிக் கொள்ள
கொரோனா வைரஸ் தூண்டுகிறது. இதனால் அவை அழிந்து போய் விடுகின்றன. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்
ரத்த வெள்ளை அணுக்கள் இறந்த பின்னர் கொரோனா வைரஸ் நுரையீரலுக்குள் எளிதாக ஊடுருவி சேதத்தை ஏற்படுத்துகிறது.
அடுத்து சைட்டோகைன் புயல் என்ற நிகழ்வு உடலில் அதிகப்படியான காய்ச்சலை உருவாக்கி ரத்த அணுக்களில் கசிவை ஏற்படுத்தி ரத்தத்தை உறையச் செய்கிறது. இதுதவிர குறைந்த ரத்த
அழுத்தத்தை உண்டாக்கி ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தி, ரத்தத்தில் அமிலத்தன்மையை உருவாக்குகிறது. இதனால் நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது.
மேலும் கொரோனா வைரஸ் ரத்த வெள்ளை அணுக்களை தவறாக வழிநடத்தி ஆரோக்கியமான திசுக்களை தாக்கி வீக்கத்தை உருவாக்குகிறது. இதனால் நுரையீரல், இதயம், குடல், கல்லீரல்,
மனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி
சிறுநீரகம், பிறப்பு உறுப்புகள் செயல் இழந்து விடுகின்றன. இப்படி பல உடல் உறுப்புகளை செயல் இழக்கச் செய்து நுரையீரலின்
செயலை கொரோனா வைரஸ் முடக்கி விடுகிறது. இதனால் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
இது எதனால் ஏற்படுகிறது என்றால் கொரோனா வைரஸ் கொன்ற உயிர் அணுக்கள், புரதங்களின் கழிவுகள் ஆகியவை நுரையீரலில்
தேங்கி விடுவதால் ஆக்சிஜனை உள்ளிழுக்கும் திறனை நுரையீரல் இழந்து விடுகிறது. எனவே தான் கொரோனா பாதிப்பினால்
உயிரிழப்பவர்கள் பெரும்பாலானவர்கள் மூச்சுச் திணறி இறக்கிறார்கள்.
கொரோனா வைரசை அழிக்க மருந்து இல்லாத காரணத்தினால் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் அதை எதிர்த்து போரிடுவதற்கு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. அதாவது கொரோனா வைரஸ்
பாதிப்பை ஏற்படுத்தும் உடல் உறுப்புகளை அதி தீவிரமாக கண்காணித்து செயல்பட வைப்பதின் மூலமே இறப்பு விகிதத்தை
குறைக்க முடியும். இது எப்படி சாத்தியமென்றால், கல்லீரலில் உள்ள ரத்தத்தை செயற்கை முறையில் எப்படி சுத்திகரிக்கிறோமோ
அல்லது சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தை சுத்திகரிக்க டயாலிசிஸ் முறையை எப்படி பயன்படுத்துகிறோமோ
அதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை செயற்கையாக செயல்பட வைத்து இறப்பை தடுக்க முடியும்.
கொரோனா தாக்கத்தினால் நுரையீரல் செயலிழந்து விட்டால், அதற்கு மாற்றாக தொண்டை குழாய் வழியாக செயற்கை சுவாச
எந்திரத்தை(வென்டிலேட்டர்) இணைக்காமல் செயற்கை காற்று குழாய் மூலமாக இளஞ்சூடான ஈரப்பதமிக்க ஆக்சிஜனை மூக்கு
வழியாக செலுத்தினால் உயிர் பிழைக்க வைக்க முடியும். இதனால்தான், கொரோனா வைரஸ் உடல் உறுப்புகளை தாக்கி
செயல் இழக்கும் அளவுக்கு அதை வளர விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காத்துக் கொள்ள வேண்டுமென்றால் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்
ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். இதன் மூலம் இதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகள் மோசமடைவதை தடுக்கலாம்.
கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கும் நயன்தாரா?
கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கும் நயன்தாரா?
சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடிகை நயன்தாரா கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாரா நயன்தாரா?
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கி ஐதராபாத் திரைப்பட நகரில் விறுவிறுப்பாக நடந்தது.
ஆனால் திடீரென்று கிளம்பிய கொரோனா பரவலால் படப்பிடிப்பு நின்று போனது. கிட்டத்தட்ட 4 மாதங்களாக படப்பிடிப்பு முடங்கி இருக்கிறது.
மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கானோர்
பங்கேற்கும் நிலை இருப்பதால் கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகே படப்பிடிப்பை தொடங்க வாய்ப்பு இருப்பதாக
கூறப்படுகிறது. தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்த இந்த படத்தை பொங்கல் பண்டிகைக்கு தள்ளி வைத்தனர்.
படப்பிடிப்புகளை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டு வருதால் பொங்கலுக்கு படம் ரிலீசாகுமா என்பதும்
கேள்விக்குறியாக உள்ளது. இன்னும் 50 சதவீத படப்பிடிப்புகள் பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாத்த பட போஸ்டர்
இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் கதை இது தான் எனக் கூறி ஒரு கதை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ரஜினியின்
முறைப் பெண்களான குஷ்புவும், மீனாவும் அவரை திருமணம் செய்ய போட்டி போடுகிறார்களாம். இருவரின் மனதையும்
புண்புடுத்த வேண்டாம் என ரஜினி நயன்தாராவை திருமணம் செய்து கொள்கிறாராம்.
நயன்தாரா, ரஜினி தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷை எப்படியாவது தங்கள் வீட்டு மருமகளாக்க குஷ்புவும், மீனாவும்
பின்னர் போட்டி போடுகிறார்களாம். அந்த போட்டியால் ஏற்படும் பிரச்சனைகளும், சிக்கல்களும் தான் படத்தின் கதை என்று
கூறப்படுகிறது. முன்னதாக நயன்தாரா, அண்ணாத்த படத்தில் வழக்கறிஞராக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது
கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிப்பதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது
சுஷாந்துடன் ஓராண்டு ஒன்றாக வாழ்ந்தேன் – காதலி ரியா
சுஷாந்துடன் ஓராண்டு ஒன்றாக வாழ்ந்தேன் – காதலி ரியா
சுஷாந்துடன் லிவ்விங்-டூ-கெதராக ஓராண்டு வாழ்ந்ததாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
சுஷாந்துடன் ‘லிவ்விங்-டூ-கெதர்’… ஓராண்டு வாழ்ந்தேன் – காதலி ரியா
சுஷாந்த் சிங், ரியா சக்ரவர்த்தி#
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை செய்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன்
சுஷாந்தின் தந்தை, சுஷாந்த் காதலி ரியா சக்ரவர்த்தி மீது பாட்னா போலீசில் புகார் அளித்திருந்தார். ரியா மற்றும் அவரது
குடும்பத்தினர் சுஷாந்தை ஏமாற்றியதாகவும், மன ரீதியாக துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டியதாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
சுஷாந்த் சிங், ரியா சக்ரவர்த்தி
இந்நிலையில், தன் மீதான புகாரை பாட்னாவிலிருந்து மும்பைக்கு மாற்றக்கோரி நடிகை ரியா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை
அளித்துள்ளாராம். அதில், சுஷாந்துடன் நான் கடந்த ஓராண்டு காலமாக லிவ்விங்-டூ-கெதராக ஜுன் 8 வரை வாழ்ந்தேன். அதன்பின்
அவரது வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். சுஷாந்த் கடுமையான மனஉளைச்சலில் இருந்ததாகவும் ரியா அந்த மனுவில்
குறிப்பிட்டுள்ளாராம். மேலும், தன்னைத் துன்புறுத்தவே சுஷாந்த்தின் தந்தை, இப்படி ஒரு புகாரை கொடுத்துள்ளதாக நடிகை ரியா, குற்றம் சாட்டியுள்ளார்.
முதுகுவலி உணர்த்தும் பிற நோயின் அறிகுறிகள்
முதுகுவலி உணர்த்தும் பிற நோயின் அறிகுறிகள்
மனிதனின் உடல் உள் உறுப்புக்கள் பழுதடைந்தால், ஒழுங்காக இயங்கவில்லை என்றால் அது முதுகெலும்பில் வலியாக
உணர்த்துகின்றது. கழுத்து முதுகுவலி ஏற்பட்டால் இதயம், நுரையீரல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம்.
முதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்
முதுகுவலி
மனிதனுக்கு அழகு எது? முதுகெலும்புதான். யாராவது நம் வாழ்வில் அதிகம் உதவி செய்தால் இவர்தான் என் வாழ்க்கையின்
முதுகெலும்பாகத் திகழ்கிறார் என்று கூறுவது வழக்கம். மனிதன் ஒருவனே தனது முதுகெலும்பை தரையில் படுக்கவைத்து உறங்கும்
நிலையைப் பெற்றுள்ளான். மற்ற விலங்கினங்கள் எதுவுமே தனது முதுகெலும்பை தரையில் படுக்க வைத்து உறங்க முடியாது.
முதுகுத்தண்டின் நீளம் பதினாறரை அங்குலம். இது நரம்பு நாளங்களால் ஆனது. இதிலிருந்து 12 இணை நரம்புகள் மூளைக்குச்
செல்கிறது. மேலும் முப்பத்தாறு இணை நரம்புகள் உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. அதனால் முதுகுத்தண்டு மனிதனின் இரண்டாவது மூளை என அழைக்கப்படுகின்றது.
மூளைக்கும், உடலின் உறுப்புகளுக்கும் இணைப்பு நிலையமாக திகழ்வது இந்த முதுகுத் தண்டு தான். மேலும் இதயம், நுரையீரல்,
இரைப்பை, குடல் முதலிய உறுப்புகளின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதும் இந்த முதுகுத்தண்டு தான்.
மனித உடலில் நடுப்பகுதியான முதுகில் 33 முதுகெலும்புகள் ஒன்றின் மீது ஒன்றாக நேர் வரிசையில் அடுக்கப்பட்டு அற்புதமாக இந்த உடல் கட்டப்பட்டுள்ளது. இந்த முதுகெலும்பு வழியாகத் தான்
முதுகுத் தண்டுவடம் உள்ளே செல்கின்றது. இந்த முதுகெலும்பில் 24 எலும்புகள் தனித் தனியானவை. அசையும் தன்மை வாய்ந்தது.
மற்ற ஒன்பது எலும்புகள் இணைந்து இரண்டு அசையா எலும்புகளாக பெரியவர்களாக வளரும் பொழுது இடுப்புக்கு அடியில் மாறிவிடும்.
முதுகுவலி உணர்த்துவது என்ன?
மனிதனின் உடல் உள் உறுப்புக்கள் பழுதடைந்தால், ஒழுங்காக இயங்கவில்லை என்றால் அது முதுகெலும்பில் வலியாக
உணர்த்துகின்றது. அடிமுதுகு வலி ஏற்பட்டால் நமது உடலில் கோணாடு சுரப்பி ஒழுங்காக இயங்கவில்லை. அதனால் சிறுநீரகம் சம்பந்தமான வியாதி வருவதற்கு ஒரு அறிகுறிதான் அடிமுதுகு வலி.
இதேபோல் நடுமுதுகு வலி ஏற்பட்டால் சிறுகுடல், பெருங்குடல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம். கழுத்து முதுகுவலி
ஏற்பட்டால் இதயம், நுரையீரல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம்.
முதுகுவலி வரக் காரணங்கள்
உடல் பயிற்சி செய்யாமல், நன்றாக அதிகம் சாப்பிட்டு தொப்பை போடுபவர்களுக்கு அடிமுதுகுவலி வரும். சிறுநீரகப் பிரச்சினை இருக்கும். இவர்களுக்கு நடுமுதுகுவலியும் வரும். சிறுகுடல்,
பெருங்குடல் பிரச்சனை இருக்கும். அதிக நேரம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு அடி முதுகுவலி வரும்.
தொடர்ந்து அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடற் பயிற்சி செய்யாதிருந்தால் முதுகுவலி (கழுத்து முதுகுவலி) வரும்.
ஒரே இடத்தில் பல மணி நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி ஏற்படும்.
அடிக்கடி சளி பிடித்தல், மூக்கடைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு கழுத்து, முதுகுவலி ஏற்படும். நுரையீரல் பழுதடைவதால், கழுத்து முதுகுவலி வருகின்றது.
அதிகம் கவலைப்படுபவர்களுக்கு இதயம் பாதிப்பால் கழுத்து முதுகுவலி ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகி
அதனால் அடிக்கடி காய்ச்சல் வருபவர்களுக்கு முதுகு முழுவதும் வலி இருக்கும்.
காய்ச்சல் எல்லாம் நோயல்ல கழிவுகள் வெளியேற்றம்தான். ஏதாவது ஒரு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிமுதுகுவலி, கழுத்து முதுகு வலி ஏற்படும்.
எதிர்பாராத விபத்தினாலும், முதுகில் பலம் வாய்ந்த எடையுள்ள பொருட்கள் விழுந்தாலும் அடி முதுகில் வலி ஏற்படுகின்றது. இனி
கவலையை விடுங்கள். முதுகுவலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அற்புத யோகக்கலையினை பயிலப் போகின்றோம்.
மனித உடல்
நம் உடல் எப்பொழுதும் தன்னைக்காப்பாற்றிக் கொள்ள முயன்று கொண்டேயிருக்கும். அதற்கு யாரும் சொல்லித்தர தேவையில்லை. இந்த உடல் தன்னை பாதுகாக்க தானாக ஒவ்வாத உணவை
வெளித்தள்ளுகின்றது. எங்காவது பறவை, நாய், பூனை, தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி மருத்துவரிடம் சென்றதைப் பார்த்துள்ளீர்களா? இயற்கையோடு இயற்கையாக வளரும்
பிராணிகளுக்கு நோய் வராது. வந்தாலும் தானே சரி செய்துவிடும். ஒவ்வொரு விலங்கிற்கும், மனித உடலுக்கும் அந்த பண்பு உண்டு.
ஏன் இதை இங்கு தெரிவிக்கிறேன் என்றால் எனக்கு முதுகுவலி வந்துவிட்டது என்று யாரும் வருந்த வேண்டாம். பயப்பட வேண்டாம். அவசரப்பட்டு ஒரு மருத்துவர் கூறினார் என்று உடன் அறுவை
சிகிச்சைக்கு சென்றுவிடாதீர்கள். முதுகெலும்பில் கத்தியே வைக்கக்கூடாது. அதற்கு நம் புத்தியைக் கூர்மையாக்கி இனிவரும் யோகக்கலையினை பயில்வோம்.
தன் உடலே தன்னைப் பாதுகாக்க முயலும் பொழுது, நீங்கள் இயற்கையான மருந்தில்லா மருத்துவமான யோக்கலைகளை செய்தால் உடல் மிக நன்றாக ஒத்துழைக்கும். விரைவில் பலன்
கிடைக்கும். இன்றைய அவசரமான உலகில் முதுகுவலி உள்ளவர்களும், இல்லாதவர்களும் கீழ்கண்ட யோகப் பயிற்சியை தினமும் காலை மாலை பத்து நிமிடங்கள் செய்யுங்கள். வலி
இருந்தால் படிப்படியாகக் குறையும். முதுகுவலி இல்லாதவர்களுக்கு நிச்சயமாக பிற்காலத்தில் வராமல் தடுக்கும்.







