Author: நிருபர் காவலன்
தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்
தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்
பலருக்கும் அதிலும் குறிப்பாக இளவயது பெண்களுக்கு தூக்கத்தில் நறநறவென பற்களை கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இது பல
நேரங்களில் அருகில் படுத்திருப்பவர்களின் தூக்கத்தை கெடுத்து விடும். இப்படி பற்களை கடிப்பது ஏன்? என கேட்கலாம்.
மன அழுத்தத்துக்கான வடிகால் இல்லாமல் போகும்போதுதான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது என்கிறார்கள், மருத்துவர்கள்.
வெறுப்பு, கோபம், இயலாமை, ஏமாற்றம் என்று பல்வேறான மன அழுத்தங்களுக்கு தீர்வு காணாமல், மனதுக்குள்ளேயே போட்டு
புதைத்துக்கொண்டால், அவை தூக்கத்தின் போது இப்படி வெளிப்படும் என்கிறார்கள், உளவியலாளர்கள்.
பொதுவாக டீன்-ஏஜ் பருவத்தில் இருப்பவர்கள்தான் இந்த பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களின் மன அழுத்தத்திற்கு தேர்வு பயம் முக்கிய காரணமாக இருக்கிறது.
அதற்கடுத்து காதல் விவகாரங்களும் சேர்ந்து கொள்கிறது. பிரச்சினை என்னவென்று தெரிந்துகொண்டால் தீர்ப்பதும் சுலபம்.
தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்
பற்கள் தொடர்ந்து இப்படி நறநறவென்று அரைபடுவதால் நாளடைவில் கீழ்த்தாடையின் முன்பற்கள் தேய்ந்து, கூச ஆரம்பித்துவிடும். எந்தவொரு இனிப்பான உணவையும், சூடான
அல்லது குளிர்ச்சியான பானங்களையும் சாப்பிட முடியாது. வெகுநாட்கள் இந்த பிரச்சினை தொடர்ந்தால் தாடையின் சதைகள் இறுகி முகத்தின் அமைப்பே குலைந்து போய்விடும். தாடை
எலும்பை மண்டை ஓட்டோடு இணைத்திருக்கும் மூட்டு பகுதியும் பாதிக்கப்பட்டு வலி உண்டாக்கும்.
தூக்கத்தில் பற்களை கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தற்காலிக தீர்வாக ‘சாப்ட் ஸ்ப்லின்ட்’ என்ற கிளிப்பை பயன்படுத்தலாம். படுக்கப்போகும்போது மட்டும் இதை பற்களில்
பொறுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் பற்களின் கீழ் தாடையும் மேல் தாடையும் ஒட்டாமல், உரசாமல் தடுக்கலாம். ஆனாலும் இது நிரந்தரமான தீர்வு அல்ல.
மன அழுத்தத்துக்கான காரணத்தை தேடி, அதை சரி செய்த பிறகே இந்த பிரச்சினையில் இருந்து முழுமையாக வெளிவர முடியும்.
இதற்கு மனநல ஆலோசகரின் அறிவுரை, யோகா, தியானம் போன்ற வழிமுறைகளை நாடலாம்..
அவர் எனக்கு காதலை தெரிவித்து 26 வருடங்கள் ஆகிவிட்டது… குஷ்பு
அவர் எனக்கு காதலை தெரிவித்து 26 வருடங்கள் ஆகிவிட்டது… குஷ்பு
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பு. வருஷம் 16 என்ற திரைப்படத்தின் மூலம்
கதாநாயகியாக அறிமுகமான அவர் அதனை தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும்
ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருந்தார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் குஷ்பு. அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
சுந்தர் சி – குஷ்பு
இந்த நிலையில் இன்று சுந்தர் சி குஷ்புக்கு காதலை தெரிவித்து 26 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தனது
ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர், சுந்தர் சி காதலைத் கூறி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிறது. அப்போது எது உங்களது காதலை உடனே ஏற்க வைத்தது என்று எனக்கு
தெரியவில்லை. அந்த மாதிரியான நேரத்தில் உள்ளுணர்வை நம்பி எடுக்கும் முடிவு சிறப்பாக அமையும். அதையேதான் நானும்
செய்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்
நடிக்க வாங்க – வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன்
நடிக்க வாங்க – வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன்
திரைப்படங்களில் நடிக்க தடை விதித்ததால் ஒதுங்கி இருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேல் சமீபத்தில் வாட்ஸ் அப் குழு நண்பர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது,
“நான் நடிக்காமல் 10 வருடங்களாக வீட்டில் முடங்கி கிடப்பது பெரிய ரணம். எனது உடலில் தெம்பு இருக்கிறது. நடிக்கவும் ஆசை
இருக்கிறது. ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை” என்றார். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற பாடலை பாடியும் கண்கலங்கினார்.
அதைப் பார்த்து வருந்திய நடிகை மீரா மிதுன் வெளியிட்டுள்ள வீடியோவில், “வடிவேலுவின் சமீபத்திய பேச்சுகள், பேட்டிகளை பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்று வருத்தப்பட்டு
இருந்தார். எப்போதும் வெற்றிகரமான ஒரு மனிதரை வஞ்சகமாகவும், மோசடி செய்தும்தான் வீழ்த்துவார்கள். ஆனாலும்
யாரையும் யாருமே ஒதுக்க முடியாது. இது எனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம்.
மீரா மிதுன்
உங்கள் தெனாலிராமன் படம் பார்த்து இருக்கிறேன். அந்த படத்துக்கு நான் பெரிய ரசிகை. நிறைய பேர் நடிப்புக்கான
விதிமுறையே தெரியாமல் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் பெரிய சகாப்தம். கண்கலங்க கூடாது. நான்
சொந்தமாக படம் தயாரிக்கிறேன். எனது படத்தில் உங்களுக்கு நடிக்க விருப்பம் இருந்தால் நடியுங்கள். பெருமைப்படுவேன்” என்று கூறியுள்ளார்.
இராணுவம் போர் குற்றத்தில் ஈடுபடவில்லை- இலங்கை திமிர் பேச்சு
இலங்கை ஹிட்லர் ர் மகிந்த ஆட்சியில் மேற்கொள்ள பட்ட தமிழ் இனப் படுகொலையின்
பொழுது இலங்கை அரச இராணுவம் எவ்வித போர் குற்றங்களிலோ ,மனித உரிமை மீறல்களிலோ ஈடுபடவில்லை என இலங்கை அரசு திமிராக பேசி வருகிறது
புலிகள் மீது குற்ற சாட்டு
அனைத்து குற்றங்களையும் புரிந்தவர்கள் ஒன்று பட்ட இலங்கை சோஷலிச குடியரசை இரண்டாக உடைக்க பிரிவினைவாத போரில்
ஈடுபட்ட தமிழீழ விடுதலை புலிகளே என ஆளும் இராணுவ மயப்படுத்தப் பட்ட இலங்கை பவுத்த பேரினவாத தேசம் தெரிவித்துள்ளது
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இடம் பெற்று வரும் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இறுக்கமான நிலைகள் எட்ட பட்டு
அவை சர்வதேச விசாரணை வரை செல்ல வேண்டும் என்ற எழுத்துமூல வாக்குறுதிகள் காண்பிக்க பட்டுள்ள பொழுதும்
ஏற்று கொள்ள மறுக்கும் இலங்கை
,ஐநாவில் வெளியிட பட்ட இந்த அறிக்கையை எம்மால் ஏற்று கொள்ள முடியாது எனவும், அது ஆதாரங்கள் இலலாத பொய் புனைவுகள் என இலங்கை அரச ஆட்சியாளார்கள் மீளவும் கூறி வருகின்றனர்
பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு இலங்கை உட்பட்டு, பாதிக்க பட்ட மக்களுக்கு நேர்த்தியான தீர்வினை வழங்க வேண்டும்
என்கிறது ஐநா மனித உரிமை ஆணையம் ,ஆனால் அதனை செவி மடுத்து கொள்ளும் நோக்கில் இலங்கை செயல்படவில்லை
இந்தியாவை பணியவைத்து குறித்த குற்றங்களுக்கு எதிராக தனது நிலை காப்பை எடுத்து இலங்கை நகர்ந்து வருகிறது
கொழும்பு துறைமுக அபிவிருத்தி பணி கிளறலும் ,இதனை மையப்
படுத்திய இலங்கையின் பிராந்திய நலன் சார்ந்த நகர்வாக மாற்றம் பெற்றுளளது
இந்தியாவை அடக்கும் தந்திரம்
இந்தியாவை சீண்டி ,தமது கொள்கைக்குள் அடிபணிய வைக்கும் நரித்திட்ட நகர்வில் இலங்கை இராய தந்திரம் நகர்ந்து செல்கிறது
சுருங்க செல்ல போனால் தொட்டிலையும் ஆட்டி ,பிள்ளையையும் நுள்ளி விடுகின்ற நிலையில் சீனா,இந்தியா உறவு நகர்ந்து செல்கிறது
எனக்கு இரு பொண்டாட்டி ,வேணும் என்பவருடன் எப்பொழுதும் சென்று விடுவேன் .,மற்றவரை கைவிட்டு விடுவேன் என்பது தான் இலங்கையின் நிலைப் பாடாக நகர்கிறது
மேற்படி இலங்கையின் இந்த இராய தந்திர நகர்வுக்கு இந்தியாவால் கட்டு போட முடியாத நிலை ஏற்படுகிறது ,
மாறாத இந்தியா புலிகள் நிலை
இந்திய கொள்கை வகுப்பாளர்களின் நகர்வுகள் ,புலிகள் இல்லாத காலத்திலும் ,புலிகள் நிலைப் பாடுகள் மீது கோபம் கொள்ள காரணமாக அமைந்து செல்கிறது
இந்திரா காந்தி வளர்த்த புலிகள் ,தமிழக முதல்வர் எம் யீ ஆரால் வளர்க்க பட்ட புலிகளுக்கு ,அதே நாடு ஒற்றை காரணத்தை வைத்து எதிராக நிற்பது வேடிக்கையாக உள்ளது
மாறும் உலக அரசியல்
இது கால மாற்றத்தில் மறையும் நிலை ஏற்படும் ,ஈராக்,ஈரான் பரம எதிரி நாடுகள் ,பெரும் போரை கூட தொடுத்தன ,ஆனால் இப்பொழுது இரு நாடுகளும் இணைந்து பொது எதிரிகளை வெளியேற்றுவதில் கங்கணம் கட்டி நிற்கின்றன
அவ்விதமான சூழல் எதிர்வரும் பத்து ஆண்டுக்குள் இலங்கையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அடித்து சொல்கிறோம்
நீதி நிலை நாட்டும் ஐநா ..?
ஐநா மனித உரிமை பொது உலக சமாதானத்தை நிலை நாட்டை வேண்டும் எனின் ,தமிழர் இன படுகொலைக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் ,
அது ,பிரிந்து செல்லும் நாடு அமைத்தல் ,அல்லது மாநில சுயாட்சி முறைமையான ஆட்சி பகிர்வாக இது அமைய பெறும் ,பிரிட்டனில் மூன்று மானில சுயாட்சிகள் உள்ளமை குறிப்பிட தக்கது
அதுபோன்ற நிலை ஒன்றே இலங்கையை வசப்படுத்தும் ,நிலைக்கு இலங்கையின் ஆளும் அதிகாரங்கள் வழியமைத்து செல்கின்றன
புதைகுழி தோண்டும் கோட்டா,மகிந்தா
நிரந்தர அரசியல் தீர்வுக்கு சாதகமான பல வழிமுறைகள் கிடைக்க பெற்ற பொழுதும், இனவாத வெறியுடன் ,அடக்குமுறையை விரித்து செல்லும் நிலையினால் ,தவறான வரலாற்றை ஆளும் ஆட்சியாளர்கள் எழுதி வைக்க போகின்றனர்
அதுவே அவர்கள் ஆட்சிக்கு சாவு மணி அடிக்கும் ஒன்றாகவும் மாற்றம் பெற போகிறது ,நிலை மாறும் இலங்கை ஆளும் சிந்தையில்,திசை மாறும் உலகின் திடீர் நகர்வுகளுக்குள் சிக்கும் பேராபத்து ஏற்பட போகிறது …!
– வன்னி மைந்தன் –
நடிகையிடம் ரசிகர்கள் ஆபாச கோரிக்கை
சமூகவலைதளங்களால் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் எளிதாக தொடர்பில் இருக்க முடிகிறது. ஆனால் சில நெகட்டிவான மனிதர்களின் வக்கிரமான செயல்களையும் இதில் தவிர்க்க
இளம் நடிகை பிரியா
முடிவதில்லை. இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், ‘ஓரு அதார் லவ்’ படத்தின் ‘மாணிக்க மலராய பூவி’ என்ற பாடலில் கண் சிமிட்டியதால், 2018-ஆம் ஆண்டில் இணையத்தில் வைரலானார்.
பின்னர் அவர் இந்திய அளவில் கவனிக்கப்பட்டார். அதோடு ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும்
பெற்றார். சமூக ஊடகங்களில் தீவிரமாக உள்ள பிரியா, ‘ஹேப்பி நியூ இயர்’ என்ற படத்தில் இடம் பெற்றுள்ள ‘மான்வா லாகே’ பாடலுக்கு உதட்டை அசைத்து வீடியோ ஒன்றை பதிவேற்றியிருந்தார்.
பிரியா வாரியர் பதிவிட்ட புகைப்படம்
இதற்கு பிரியாவின் நண்பரும், இணைய பிரபலமுமான ஷரன் நாயர், “உங்கள் உதட்டை எப்படி கடிக்க வேண்டும் என்று எனக்குக் கற்றுக் கொடுங்கள்” என்று கேட்டிருந்தார். எதிர்பார்ப்புகளுக்கு
மாறாக இருபத்தி இரண்டு வயதான நடிகை பிரியா, “ஹ்ம்ம்ம்ம் நான் செய்வேன்” என்று பதிலளித்திருந்தார். இப்போது தங்களுக்கும்
அதை கற்பிக்க வேண்டுமென, மற்றவர்களும் பிரியாவுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நடிக்க உடம்பில் தெம்பு இருக்கு…. யாரும் வாய்ப்பு தருவதில்லை – கண்கலங்கிய வடிவேலு
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய
படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.
இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி அவருக்கு வாய்ப்பு அளிக்க பட அதிபர்கள் தயங்குகின்றனர்.
வடிவேலு
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வடிவேலு, பட வாய்ப்பு கிடைக்காதது குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது: “உங்களுக்கெல்லாம் ஒரு வருஷம் தான் லாக்டவுன்.
பட வாய்ப்பு இல்லை வடிவேலு
ஆனால் நான் பத்து வருஷமா லாக்டவுனிலேயே தான் இருக்கிறேன். இப்போதும் நடிக்க உடம்பில் தெம்பு இருக்கு, ஆனால் யாரும்
வாய்ப்பு தருவதில்லை எனக்கூறிய வடிவேலு, கர்ணன் படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலில் வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற வரியை பாடும்போது கண்கலங்கினாராம்.
பிறந்து 12 நாட்களே ஆன குழந்தைக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நடிகை
பிறந்து 12 நாட்களே ஆன குழந்தைக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நடிகை
தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர்
இயக்கிய சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்
. ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கு, இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
கணவருடன் அனிதா ஹசானந்தனி
கடந்த 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 9-ந்
தேதி ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயரை வைத்துள்ளனர். நடிகை அனிதா
ஹசானந்தனி, தனது குழந்தை ஆரவ் ரெட்டிக்காக இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய பக்கத்தையும் ஆரம்பித்துள்ளார்.
அதில் தனது குழந்தையின் புகைப்படங்களை பதிவிடுவதற்காக இந்த பக்கத்தை அவர் தொடங்கி உள்ளார்
உடல் எடையை குறைக்க
உலகிலேயே நியூசிலாந்தில்தான் இந்த பழம் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. நியூசிலாந்து நாட்டு மக்களை ‘கிவிஸ்’ என்று செல்லமாக அழைப்பது உண்டு.
உடல் எடை
‘கிவி’ என்று இந்த பழத்திற்கு பெயர் ஏற்பட்டதும் அதன் தொடர்ச்சிதான். நியூசிலாந்துதான் ‘கிவி’ பழத்தை அதிகம் விளைவிக்கும் நாடு என்றாலும், அந்த பழத்துடன் பாரம்பரிய
தொடர்பு கொண்ட நாடு சீனா. அதனால் இந்த பழத்துக்கு ‘சீனத்து நெல்லிக்கனி’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. பல ஆயிரம்
ஆண்டுகளாக கிவி பழமானது சீனாவில் விளைவிக்கப்படுகிறது. தவிர, இத்தாலியிலும் இது விளைகிறது.
இந்தியாவுக்குள் கிவி பழங்களை இறக்குமதி செய்ய வேண்டியது இருப்பதால் அதன் விலை சற்று அதிகமாக இருக்கிறது. ஆனாலும், அந்த பழத்தில் உள்ள நிறைந்த மருத்துவக் குணங்களுக்காக அவற்றை நாம் சாப்பிடலாம். ‘
இதை சாப்பிடுங்க
கிவி’ பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதை விரும்பி சாப்பிடலாம். வைட்டமின் ‘சி’ அதிகம் கொண்ட இந்தப் பழம், மனிதனுக்கு நோய்
தடுப்பாற்றல் சக்தியை அதிகம் தரக்கூடியது. உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற
நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
மாரடைப்பு தடுப்பு
மாரடைப்பை தடுப்பதிலும் கிவி முக்கிய பங்காற்றுகிறது. இதய தமனிகளில் ரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கவும் ‘கிவி’ பழம் உதவுகிறது. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான
போலேட் என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களைவிட கிவி பழத்தில் மிகவும் அதிக அளவில் உள்ளது. கிவி பழம், இனிப்பானதுதான் என்றாலும், அதன் சர்க்கரை குறியீடின்
அளவானது மிகவும் குறைவு. அதனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மற்ற பழங்களைப் போன்று விரைவாக
அதிகமாக்காமல், கொஞ்சமாகவும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் இதை உண்ணலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.
மலச்சிக்கலுக்கு மருந்து
மலச்சிக்கலுக்கு மருந்தாக கிவி பயன்படுகிறது. இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை மிகவும் எளிதாக
அகற்ற முடியும். சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்கவும் உதவுகிறது.
வயாகரா’ ஆண்மைக் குறைபாட்டை போக்குமா?
வயாகரா கண்டு பிடிக்கப்பட்டவுடன் மாத்திரை மூலமாக ஆண்மைக் குறைவை சரி செய்துவிடலாம் என்ற எண்ணம் உலகம் முழுவதும் உருவானது.
வயாகரா
ஆனால் ‘வயாகரா’ பற்றி அறிந்திராத அதிர்ச்சியான விஷயங்கள் உள்ளன. அவை என்ன தெரியுமா?
உலக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, வயாகரா. ஆண்களின் பாலியல்
செயல்பாட்டை மேம்படுத்தும் இந்த மாத்திரைகளை பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ‘ஆண்கள்
சமூகத்திற்கு கிடைத்த அற்புதம்’ என்றும் இதனை புகழ்கிறார்கள். ஆனால் இது கண்டு பிடிக்கப் பட்ட விதம் ரொம்பவும் வினோதமானது.
பன்னாட்டு மருந்து
பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இதய நோயுள்ளவர்களுக்கு ரத்தத்தை அதிகமாக இதயத் தினுள் செலுத்தும் புதிய மருந்தைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்தது.
அவர்கள் கண்டுபிடித்த மருந்தின் பெயர் ‘சில்டெனபில் சிட்ரேட்’. அதனை மூவாயிரம் பேர் களுக்குக் கொடுத்து ஆய்வு செய்ததில்,
அந்த மருந்து தோல்விக்குரிய ஒரு கண்டுபிடிப்பு என தெரியவந்தது. அதாவது இதயத்திற்குள் அது அதிக அளவில் ரத்தத்தை செலுத்தவில்லை.
அதே நேரத்தில் அந்த மருந்தை உட்கொண்டவர்கள் தங்களுடைய உடலுறவில் இன்பம் அதிகரித்ததாகக் கூறினர். உடனே அந்த நிறுவனம் அதனை ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கான
மருந்தாக ஆராய்ச்சி செய்து, மேம்படுத்தி வயாகரா என்ற பெயரில் வெளியிட்டது. உலகம் முழுவதும் அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
ஆண்மைக் குறைபாட்டை போக்க
ஆண்மைக் குறைபாட்டை போக்க பலவகையான மருந்துகள் உள்ளன. எதனால் ஆண்மைக் குறைவு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து அதற்காக பரிந்துரை செய்யப்படும் மருந்தும் மாறுபடும்.
ஆனால், வயாகரா கண்டு பிடிக்கப்பட்டவுடன் மாத்திரை மூலமாக ஆண்மைக் குறைவை சரி செய்துவிடலாம் என்ற எண்ணம் உலகம் முழுவதும் உருவானது. அதுவே, பரபரப்புக்கு ஒரு காரணம்.
வயாகரா சாப்பிடுவதன் மூலம் ரத்த ஓட்டம் குறிப்பிட்ட பகுதிக்கு பாய்ந்து விறைப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது.
இதனால் பல்வேறு விதமான பின்விளைவுகளும் தோன்றின. தலைசுற்றல், வாந்தி, மயக்கம், கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்பட்டன. இதய நோயுள்ளவர்கள் உயிர் இழக்கும் அபாயமும்
ஏற்பட்டது. அதனால் வயாகராவை டாக்டரின் பரிந்துரையின்றி உட்கொள்ளக்கூடாது. நோயில்லாத அமெரிக்க ஆண்களில் நிறைய பேர் இதனை கண்டபடி பயன்படுத்தியதால், பெண்களுக்கு எதிரான
பாலியல் வன்முறைகள்
பாலியல் வன்முறைகள் அதிகரித்ததாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின. எய்ட்ஸ் நோய்-பால்வினை நோய்கள்
பெருகியதாகவும் கூறப்பட்டது. வயாகரா மாத்திரையை நோயாளிகள் யாரும் பயன்படுத்திவிடக்கூடாது. தற்போது
ஆண்மைக் குறைவுக்கு அதைவிட சக்திமிக்க, பின்விளைவுகளற்ற மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பித்த சிவகார்த்திகேயன்
2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். நடிகர், நடிகையர், இலக்கியம், நடனம், இசை, நாடகம், தெருக்கூத்து,
வில்லிசை, பம்பைக்கலைஞர், இசை நாடக நடிகர், மெல்லிசை கலைஞர் உள்ளிட்ட பிரிவுகளில் 134 பேருக்கு விருது வழங்கப்பட்டது
விருதுபெற்ற திரையுலக பிரபலங்ளுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு கிடைத்த விருதை தன் தாய்க்கு சமர்ப்பணம் செய்வதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
முதல்வரிடம் இருந்து விருது பெற்ற சிவகார்த்திகேயன்
‘சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற
எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்’ என சிவகார்த்திகேயன் கூறி உள்ளார்.
அத்துடன், முதலமைச்சரிடம் இருந்து விருது பெற்றபோது எடுத்த புகைப்படம் மற்றும் அந்த விருதை தாயாரிடம் கொடுத்து, அவரது
காலில் விழுந்து ஆசி பெற்றபோது எடுத்த புகைப்படத்தையும் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஓவியா
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சென்னை வந்தபோது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘கோபேக் மோடி’ என்ற ஹேஷ்டேக் உருவானது. அதில் நடிகை ஓவியாவும் மோடிக்கு எதிரான பதிவை
வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியாவை பலர் கண்டித்தனர்.
நடிகை காயத்ரி ரகுராமும் “வாயை மூடு. உன்னை அவமதிப்பதற்கு எதுவும் இல்லை. இது தி.மு.கவின் திசை திருப்பும் வேலைதான். ஓவியாவை வேலைக்கு அமர்த்தி இதை செய்ய வைத்துள்ளனர்”
என்று சாடினார். ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
ஓவியா
இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஓவியா தனது சமூக வலைத்தள பக்கத்தில், “ஜெய்ஹிந்த் கருத்து சுதந்திரம்” என்று பதிவிட்டுள்ளார். கருத்து சொல்ல உரிமை இருக்கிறது என்று
எதிர்ப்பாளர்களுக்கு இதன் மூலம் பதிலடி கொடுத்து இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி ஓவியாவின் பதிவை வைரலாக்கி வருகிறார்கள்.
தாய்வானுக்குள் நுளைந்து மிரட்டி சென்ற 8 சீனா போர் விமானங்கள்
தாய்வான் நட்டு வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சீனாவின் எட்டு போர் விமானங்கள் மிரட்டி சென்றுள்ளன- அதிகரித்துள்ள போர் பதட்டம்
சீனா அத்துமீறல்
,தாய்வான் தனது நாட்டி ஒரு பகுதி எனசீனா தொடர்ந்து கூறி வரும் நிலையில் ,இரு நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகல் இடம் பெற்ற வண்ணம் உள்ளது
இராணுவ நடவடிக்கை
சீனா எவ்வேளையும் இராணுவ படையெடுப்பை நடத்த கூடும் என்ற எதிர் பார்ப்பு வலுத்து வரும் நிலையில் சீனாவின் இந்த வான்வழி அத்துமீறல் நுழைவு இடம்பெற்றுள்ளது
ஒரே தாடையில் எட்டு விமானங்கள் திடீரென நுழைந்தமை ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,
அமெரிக்கா ஏவுகணைகள்
சீனாவின் இந்த அத்துமீறல் நடவடிக்கைக்கு அமெரிக்கா விழுந்தடித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது
,அமெரிக்காவின் முக்கிய ஏவுகணைகள் இங்கே குவிக்க பட்டுள்ள நிலையில் சீனா கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது
அதன் வெளிப்பாடே இந்த அத்துமீறல் நுழைவு மிரட்டல் என நம்ப படுகிறது
பெண்களின் மார்பகத்தில் இவ்வளவு விஷயம் இருக்க
பெண்களின் மார்பகத்தில் இவ்வளவு விஷயம் இருக்க
பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிக்கானவை அல்ல. தாய்மைக்கானவை. ஒவ்வொரு பெண்ணும் தாயாகி, தனது குழந்தைகளுக்கு பாலூட்ட படைக்கப்பட்ட உறுப்புகள் அவை. அதே
நேரத்தில் பெண்கள் தங்கள் இதர உறுப்புகளை பாதுகாத்து, பராமரித்து, அழகுபடுத்த அக்கறை செலுத்துவதுபோல் இதிலும் கவனம் செலுத்தவேண்டும்.
பெண்களுக்குள் இளம் வயதில் அதிக கேள்விகளை எழுப்பும் உறுப்பாகவும், மனக் குழப்பங்களை உருவாக்கும் உறுப்பாகவும் மார்பகங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது சிறிய மார்பகங்களை கொண்ட பெண்கள், தங்களுக்கு அவை பெரிதாகிவிட்டால் தங்கள் உடல் அமைப்பு கச்சிதமாக அமைந்துவிடும் என நினைக்கிறார்கள்.
அதுபோல் பெரிய மார்பகத்தால் அவதிப்படுகிறவர்கள் தங்களுக்கு சிறியதாகிவிட்டால் பெரும் மகிழ்ச்சி ஏற்படும் என்று நம்புகிறார்கள்.
இவை இரண்டிற்கும் இடைபட்ட நிஜங்களையும், அதற்குரிய ஆபரேஷன்களை பற்றியும் பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
மார்பகங்களை பெரிதாக்குவதற்கு ஜெனரல் அனஸ்தீஸ்யா கொடுத்து மயக்க நிலைக்கு கொண்டு சென்று, வெளிப்படையாக தழும்புகள் தெரியாத அளவுக்கு மார்புகளின் அடிப்பகுதியிலோ,
அக்குள் பகுதியிலோ கீறலை ஏற்படுத்துவார்கள். அதன் உள்ளே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிலிக்கான் இம்பிளான்டினை
செலுத்துவார்கள். அதனால் மார்பகங்கள் பெரிய தோற்றத்தினை பெறும். சிலிக்கான் இம்பிளான்ட் எனப்படும் பலூன்கள் முழுவட்டம்,
அரைவட்டம், உருண்டை போன்ற பலதரப்பட்ட வடிவங்களில் கிடைக்கின்றன. இவை பத்து முதல் பதினெட்டு வருடங்கள் வரை பலன்கொடுக்கும்.
தரமற்ற பலூன்களை மார்பகத்திற்குள் பொருத்திவிட்டால், அவை மார்புக்குள்ளே உடைந்து அவைகளில் இருக்கும் திரவம் பரவிவிடும். சிலிக்கான் பலூனில் மிக நுண்ணிய ஓட்டைகள் இருந்தாலும்
சிலிக்கான் திரவம் வெளியேறி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொருத்தப்படும் சிலிக்கான் பலூன்கள் சில வருடங்கள் ஆனதும் சுருண்டு மடங்கிவிடுவதும் உண்டு. சில பெண்களின் உடல்
திசுக்கள் சிலிக்கானுக்கு எதிராக செயல்பட்டு அதனை சுற்றிலும் திட்டுப்போன்ற படலத்தை உருவாக்கிவிடவும் செய்யும். சிலருக்கு இந்த இணைப்பினை உருவாக்கிய பின்பு மார்பின் உள்ளே வலியும்,
கிருமித்தொற்றும் உருவாகிவிடும். இதை எல்லாம் நன்றாக ஆராய்ந்த பின்பே பெண்கள் சிலிக்கான் இம்பிளான்ட் செய்துகொள்வது பற்றி இறுதி முடிவு எடுக்கவேண்டும்.
வயதாகும்போது பெரும்பாலான பெண்களுக்கு இயல்பாகவே உடல் எடை அதிகரிக்கும். அப்போது மார்பகத்தின் அளவும் அதிகரித்துவிடும். அதனால் அவர்களது உடல் மெருகு குலைவதோடு
மட்டுமல்லாமல், வேறு பல உடல்சார்ந்த அவஸ்தைகளும் ஏற்படும். தொடர்ச்சியாக கழுத்து, முதுகு, தோள்பட்டை வலி ஏற்படலாம். பெண்கள் தங்கள் பெரிய மார்பகங்களை ஆபரேஷன் மூலம்
சிறிதாக்கலாம். அதற்கு ‘பிரெஸ்ட் டிடெக்ஷன்’ என்று பெயர். அதோடு மார்பகத்தை மேல்நோக்கி தூக்கி நிலைநிறுத்தும் ‘பிரெஸ்ட் லிப்ட்’டும் செய்யலாம்.
சில மணிநேரம் நடக்கும் இந்த ஆபரேஷனில் சில பின்விளைவுகளும் உண்டு. காயத்தில் தொற்று உருவானால்
பாதிப்பு ஏற்படும். ஆபரேஷனுக்கு பிறகு தாய்ப்பால் புகட்டுவது சிரமமாகும். மார்பக காம்புகளில் தொடு உணர்ச்சியும் குறையும்.
சில பெண்களுக்கு மார்பக காம்புகள் உள்அமுங்கிய நிலையில் இருக்கும். அதனால் கணவருடன் திருப்தியான தாம்பத்ய உறவு கொள்ள முடியாது என்றும், எதிர்காலத்தில் தங்கள் குழந்தைக்கு
பால்புகட்ட முடியாது என்றும் கருதுகிறார்கள். அதெல்லாம் தவறான நம்பிக்கைகள். மார்பக காம்பு உள்அமுங்கியிருந்தால் ‘ஸ்கின் கிரீம்’ பயன்படுத்தி, உள்வட்டத்தில் இருந்து நிதானமாக தினமும் 15 முதல்
30 நிமிடங் கள் மசாஜ் செய்துவரவேண்டும். அதிலும் சரியாகாவிட்டால் சிறிய அளவிலான ஆபரேஷன் தேவைப்படும்.
இதை நினைத்து பெண்கள் மனக்கலக்கம் அடையவேண்டியதில்லை.
பெண்களில் சிலருக்கு மார்பகம் சரிந்து காணப்படும். சிலருக்கு சிறிய பை போன்றும் தோன்றும். அவர்களுக்கு ‘பிரெஸ்ட் லிப்ட்’, ‘போடோக்ஸ்’, ‘திரெட் லிப்ட்’ போன்றவை பலன்தரும். மார்பகத்தில்
இளமையை தக்கவைக்க பிரெஸ்ட் லிப்ட் செய்கிறார்கள். அதன் பின்பு அவர்கள் ‘சப்போர்ட் பிரா’ அணிய வேண்டியதிருக்கும். மார்பகம் ஓரளவுதான் தொங்கிய நிலையில் இருக்கிறது என்றால்
‘போடோக்ஸ்’ என்ற ஊசி மருந்து போதுமானது. மார்பக சருமத்தின் அடியில் பிரத்யேக நூலை செலுத்தி மேல்நோக்கி தூக்கி நிறுத்துவது ‘திரெட் லிப்ட்’ எனப்படுகிறது. இது தற்காலிக பலனையே தரும்.
மார்பகங்களை எதிர்கால சந்ததிக்கு தேவையான உணவினை வழங்க இயற்கை படைத்திருக்கிறது. தாய்மையின் அடையாளமாக
திகழும் அவைகளை ஆரோக்கியத்தோடும், அழகோடும் பராமரிப்பது மிக அவசியம்.
ஷங்கர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ராஷ்மிகா
ஷங்கர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ராஷ்மிகா
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான ‘கிரிக்பார்ட்டி’ மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த கீதா
கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படங்கள் தமிழிலும் வெளியாகி வரவேற்பை பெற்றன.
தமிழில் இவர் நடித்துள்ள முதல் படம் சுல்தான். இப்படம் வருகிற ஏப்ரல்
மாதம் ரிலீசாக உள்ளது. இது தவிர இரண்டு பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா.
இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகாவுக்கு, ஒரு பிரம்மாண்ட பட
வாய்ப்பு தேடி வந்துள்ளதாம். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்க
உள்ள புதிய படத்தில் ராஷ்மிகா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு – சிவகார்த்திகேயன் உள்பட 42 பேருக்கு விருது
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு – சிவகார்த்திகேயன் உள்பட 42 பேருக்கு விருது
தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது
சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கலைமாமணி விருது பெறும் நடிகர்கள்
ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கலைமாமணி விருது பெறும் நடிகைகள்
பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி ஆகியோருக்கும், நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ்
, தேவதர்ஷினி, மதுமிதா ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது பெறுவோர் பட்டியல்
கலைமாமணி விருது பெறும் இசையமைப்பாளர்கள், பாடகர்கள்
இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா ஆகியோருக்கும், பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது பெறும் தயாரிப்பாளர்கள்
கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ் ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கலைமாமணி விருது பெறுவோர் பட்டியல்
கலைமாமணி விருது பெறும் இயக்குனர்கள்
கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா ஆகிய நால்வருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது.
கலைமாமணி விருது பெறும் சீரியல் நடிகர்கள்
நடிகர் நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ் மற்றும் நித்யா ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது பெறுவோர் பட்டியல்
இதுதவிர ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ், நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காமகொடியன், காதல் மதி,
வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுனாத ரெட்டி ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முடிந்தால் அடக்கு
முடிந்தால் அடக்கு …!
அடக்கு முறை இங்கு வெடிக்குதடா
அடக்க என்னை துடிக்குதுடா
மிதித்தால் எழுத்து அடங்குமோ ..?
மிதவாத கால் பணியுமோ ..?
பெண்ணுடன் ஒரு சிங்கமாம்
புனைந்ததால் ஒரு வம்சமாம்
ஆளுது அங்கொரு நாடடா
அதனால் தினம் தொல்லைடா
அஞ்சி பாதம் வீழ்வதோ
அடிமையாய் யான் மாய்வதோ
கெஞ்சி விழும் நிலையிலே
கேடு கெட்டு வாழ்வதோ
கொஞ்சி தமிழ் பேசிடும்
கொள்கை மண்ணில் வீழுமோ ..?
அஞ்சிடாத புலியவன்
ஆண்ட மண் பரம்பரை
செய்தவன் கொலை காலிலே
செந்தமிழ் இன்று வீழ்வதோ ..?
உண்மை மறைத்து உலகிலே
ஊடகத்தை ஆள்வதோ ..?
செவந்து குருதி ஓடலாம் – மண்ணில்
செத்தே இன்று வீழலாம்
கொத்து கொத்தாய் கொன்றவன்
கொலை காலிலே வீழ்ந்திடேன்
முகநூலை முடக்க துடிக்கிறாய்
,முடக்கு முடக்கு போகிறேன்
நேரம் கொஞ்சம் மிஞ்சிடும்
நேர்த்தி பொங்கி எழுந்திடும்
ஏதும் இல்லா காலத்தில்
எழுந்து நாம் நடந்தவர்
ஏது இங்கு வேணுமோ
எழுதினேன் இழுத்து முடக்கு
எதிரி எனக்கு இருக்கு
எதிரி யான் உனக்கு
எரியும் இனி விளக்கு
எழுதுறேன் இனி உழக்கு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 19-02-2021
முகநூலை நிரந்தரமாக முடக்குவதாக இப்போது செய்தி வந்த போது –
கட்டிப்பிடித்தபடி தூங்கினால் அதுக்கு நல்லது
ஆரோக்கிய வாழ்வுக்கு தூக்கம் முக்கிய அங்கம் வகிக்கிறது. தூங்கும் போது இதை பிடித்துக்கொண்டு தூங்கினால் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.
தூக்கம்
ஆரோக்கிய வாழ்வுக்கு தூக்கம் முக்கிய அங்கம் வகிக்கிறது. இரவு நன்றாக தூங்கியும் காலையில் சோர்வாக எழுந்தால் தூங்கும் முறை அதற்கு காரணமாக இருக்கலாம். படுக்கையில் முதுகு பகுதிக்கு
அழுத்தம்கொடுத்து தூங்குவது, வயிற்றுப்பகுதிக்கு அழுத்தம்கொடுத்து குப்புறப்படுத்து தூங்குவது, இடதுபுறம், வலதுபுறம் திரும்பிப்படுப்பது என தூங்கும் விதம் மாறுபடுகிறத
தலையணை
தலையணையை கட்டிப்பிடித்து தூங்குவது, காலில் தலையணையைவைத்து தூங்குவது, ஒரு காலை தூக்கியபடி தூங்குவது என பலவிதமான முறைகளை நிறையபேர் கையாள்கிறார்கள்.
முதுகை பின்னோக்கி சாய்த்து தூங்குவது, இடதுபுறமாக உடலை திருப்பி தூங்குவதுதான் தூக்கத்தில் சிறந்த நிலையாக கருதப்படுகிறது. வயிற்றுப்பகுதியை படுக்கையில்
அழுத்திக்கொண்டு தூங்குவது குடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்றும் கூறப்படுகிறது. அறிவியல் ரீதியாக எந்த தூக்க முறை சிறந்தது என்று பார்ப்போம்.
- முதுகுப் பகுதியை சாய்த்து நேராக படுப்பது சிறந்த நிலையாக கருதப்படுகிறது. அப்போது முதுகு மற்றும் தலை பகுதியை நேராக வைத்திருப்பதும் உடலுக்கு நல்லது. அதற்கு காரணம், இந்த நிலையில் தூங்கும்போது உடலின் அனைத்து பாகங்களின் எடையும் ஒரே மாதிரியாக இருக்கும். மேலும் எலும்புகள் மற்றும் தசைகளுக்கு எந்தவிதமான அழுத்தமும் ஏற்படாது. படுக்கை நேரத்தில் உடலில் உள்ள பல நரம்புகள் ஒருங்கிணைக்கப்படுவதால் உடலின் ரத்த ஓட்டத்தை மூளை சீராக கட்டுப்படுத்தும்.
- உடலை சுருட்டிக்கொண்டு படுக்க விரும்புபவர்கள் இடது பக்கமாக திரும்பி தூங்கலாம். பெரும்பாலானோர் இந்த நிலையில்தான் படுப்பதற்கு விரும்புகிறார்கள். அவ்வாறு படுப்பதால் உடலுக்கு முக்கிய உறுப்பாக இருக்கும் இதயத்திற்கும், அதை சார்ந்த இதய கட்டமைப்புகளுக்கும் பெரிய அளவில் அழுத்தம் ஏற்படாது.
- வலது பக்கத்தில் தூங்குவது அவ்வளவு மோசமான நிலை அல்ல. ஆனால் தொடர்ந்து அப்படியே தூங்கும்போது ரத்த நாளங்களுக்கும், ரத்த ஓட்டத்திற்கும் இடையூறு ஏற் படலாம். இது தவிர நுரையீரலும் அழுத்தத்திற்கு உள்ளாகலாம். நெஞ்செரிச்சல், அசி டிட்டி பாதிப்புக்குள்ளாகுபவர்கள், கர்ப்பிணி பெண்கள் வலது பக்கமாக ஒருக்களித்து தூங்கக்கூடாது.
- வயிற்று பகுதியை படுக்கையில் அழுத்திக்கொண்டு குப்புறப்படுத்து தூங்குவது சரியான நிலை அல்ல. அப்படி தூங்கும்போது வாய், கைகளை உள்புறமாக வைத்திருப்பது
- உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த முறையில் தூங்கும்போது உறுப்புகளின் அத்தியாவசிய செயல்பாடுகள் தடைபடக்கூடும். சில சமயங்களில் உடல் வலி மற்றும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
- ஒரு காலை மேலே தூக்கிக்கொண்டு தூங்குவதும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதனால் இடுப்பு பகுதிக்கு பாதிப்பு நேரும். மேலும் காலை தூக்கும்போது இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்வதற்கும் ரத்த நாளங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். முதுகுவலி ஏற்படும் சமயத்தில் இந்த நிலையில் சில மணி நேரம் தூங்கலாம். ஆனால் நீண்ட நேரம் தூங்குவது நல்லதல்ல.
புகைப்பழக்கம் மனைவியின் கருவைப் பாதிக்கும்
புகைப்பழக்கம் மனைவியின் கருவைப் பாதிக்கும்
கணவரிடம் புகைப்பழக்கம் இருந்தால் அது மனைவியின் கருவைப் பாதிக்கும். புகையில் உள்ள நச்சுப் பொருள்கள் ஆண்களின் உயிரணுக்களைப் பாதிப்பதால், அவர்களுக்கு குறைபாடான
பிறவிக் குறைபாடு
அணுக்கள் உருவாகும். அதன் மூலம் மனைவி கர்ப்பம்தரிக்கும்போது பிறவிக் குறைபாடு கொண்ட குழந்தை
பிறக்கும் சூழ்நிலை ஏற்படலாம். குழந்தை எடை குறைவாகவும் பிறக்க நேரிடும். புகையிலையின் பாதிப்பு உள்ளவர்களின்
எடை குறைவு
குழந்தை, அப்பழக்கம் இல்லாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைவிட இருநூறு கிராம் குறைவான எடையுடன் இருக்கும்.
கணவர் வெளியிடும் புகையை மனைவியும் சுவாசிக்கும் சூழ் நிலை உருவாகும். மனைவி கர்ப்பிணியாக இருக்கும்போது, சுவாசத்தின் வழியாக உள்ளே செல்லும் நிக்கோட்டின் நச்சு கருவில் உள்ள
குழந்தையைப் பாதிக்கும். சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு, மனைவியின் ரத்த ஓட்டத்தில் கலப்பதால் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறையும். இதனால்
குழந்தைக்குச் செல்லும் ஆக்சிஜனில் பற்றாக்குறை தோன்றும். இதன் விளைவாக, குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கும் சூழ்நிலை உருவாகலாம்.
பிரசவத்தின்போது சிக்கல்
அதோடு பிரசவத்தின்போது, தாய் வேறு சில நெருக்கடியான கட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அதனால் மனைவி ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று
விரும்புகிறவர்களும், எதிர்கால வாரிசு நலமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களும் புகைப்பிடிக்கும் பழக்கத்தில்
இருந்துவிடுபடவேண்டும். அவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவது, அவர்களது எதிர்கால சந்ததியின் சிறப்பான வாழ்க்கைக்கு வழங்கும் பரிசாக இருக்கும்.
உறவுக்குள் திருமணம் செய்து தவிர்க்கவும்
அதுபோல் உறவுக்குள் திருமணம் செய்து கொள்வதையும் முடிந்த அளவு தவிர்த்திடவேண்டும். உறவுக்குள் திருமணம் செய்து கொள்ளும்போது ரத்தம் வழியாக பல பரம்பரை நோய்கள்
கடத்தப்படுவதால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். அந்த ஜோடிகளுக்குள் ரத்தப்பொருத்தம் சரியாக அமையாவிட்டால், பெண்ணின் வயிற்றிலே குழந்தை இறக்கும்
நிலையும் ஏற்படலாம். இப்படி பலவிதமான சிக்கல்கள் இருப்பதால் பெரும்பாலானவர்கள் உறவுக்குள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை.
திருமணமான இளம்பெண்களில்
திருமணமான இளம்பெண்களில் பலர் தொடக்கத்தில் தாங்கள் கருத்தரித்திருப்பதையே அறியாதவர்களாக இருக்கிறார்கள். சில அறிகுறிகளை வைத்து கர்ப்பமாகியிருப்பதை உணர்ந்து
கொள்ளலாம். மாதவிலக்கு தள்ளிப்போகுதல், குமட்டல், உடல் நலன் குன்றியிருப்பது போன்ற உணர்வைத் தரும் மசக்கை, அடிக்கடி சிறுநீர் பிரிதல், புண்ணோ- எரிச்சலோ இல்லாமல்
வெள்ளைப்படுதல், வாசனையைக் கண்டால் தலைச்சுற்று போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும்.
மார்பகங்களில் மாற்றங்கள்
கர்ப்பமாகிவிட்டால் மார்பகங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவாகும். மார்பகங்கள் பெரியதாவதோடு வலி மற்றும் உறுத்தல்
தோன்றும். மார்பக நரம்புகள் புடைத்தும், காம்புகள் கறுப்பாகியும், முன்பக்கம் சற்று நீட்டியவாறும் மாறும். மலச்சிக்கல் இருப்பது
போன்ற உணர்வு ஏற்படும். புளி, களிமண் அல்லது ஐஸ்கட்டி போன்ற வழக்கத்துக்கு மாறான பொருள்களை சுவைக்கும் ஆசை ஏற்படலாம்.
வயிறு பெருத்தல்
இவைதவிர, நாட்கள் செல்லும்போது வயிறு பெருத்தல், கரு நெளிதல் போன்ற அறிகுறிகளும் தென்படும். அனைவருக்கும் ஒரே
மாதிரியான அறிகுறி ஏற்படும் என்று சொல்லமுடியாது. கர்ப்பத்தை துல்லியமாக அறிந்துகொள்ள அதற்குரிய பரிசோதனையை பெண்கள் மேற்கொள்ளவேண்டும்.
விபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக உன்னை தேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மாளவிகா. அதனை தொடர்ந்து அவர் ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம்,
வெற்றிக்கொடிகட்டு, பேரழகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என ஏராளமான திரைப்படங்களில் நடித்தார்.
திருமணம்
2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். அவருக்கு இரு பிள்ளைகள்
உள்ளனர். இவர் அவ்வப்போது சமூகவலைதளப்பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவார்.
மாளவிகா
இந்நிலையில் நடிகை மாளவிகா சைக்கிளிங் செல்லும் போது விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் தன்னுடைய கைவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
நான் ஒரு போர் வீராங்கனை விரைவில் மீண்டு வருவேன் என புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
உயிருக்கு போராடும் நடிகை
தமிழில் அங்காடி தெரு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சிந்து. இவர் மார்பகப் புற்றுநோயால்
பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமின்றி போராடி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டார்.
- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்

சிந்து
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி,
சிந்துவின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு,
ஆரம்ப கட்ட சிகிச்சை முடிந்த நிலையில் தற்போது புற்றுநோய் மேலும் பரவியதால்
அடுத்த கட்ட சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. இதனால் நண்பர்கள், ரசிகர்கள் உதவுமாறு கேட்டுள்ளார்.







