Author: நிருபர் காவலன்
லண்டனில் எகிறும் வீடு அற்றவர்கள் எண்ணிக்கை
உலக
லண்டனில் எகிறும் வீடு அற்றவர்கள் எண்ணிக்கை
பிரிட்டனில் கடந்த மாசி மாதம் முதல் இதுவரை 62,250 பேர் வீடு அற்று வீதிகளில் உறங்கும் அவலம் அதிகரித்துள்ளது
இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க மறந்து வருவதான குற்ற சாட்டுக்கள் அதிகரித்துள்ளது
வீதியில் இவ்விதம் உறங்கும் நபர்கள் அரசினால் கைவிட பட்ட எவ்வித உதவிகளும் அற்றவர்கள் என தெரிவிக்க படுகிறது
மான் குட்டிக்கு உதவிய நபர் -= வைரலாகும் வீடியோ
மான் குட்டிக்கு உதவிய நபர் -= வைரலாகும் வீடியோ
நபர் ஒருவர் தனது ஊந்துருளியில் பயணத்தை மேற்கொள்கிறார் ,அவ்வேளை அந்த சாலையில் மான் குட்டி ஒன்று தனித்து நின்றதால் ,பீதியடைந்து ஓடுகிறது ,அவ்வேளை தனது வண்டியின்
இயந்திரத்தை அணைத்து அது பயமில்லாமல் கடந்து போக உதவிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது
இப்படியும் மனிதாபிமானிகள் இருக்கத்தான் செய்கின்றனர்
ஆசிய பசுபிக் பகுதியில் பிரிட்டன் போர் கப்பல்கள்
ஆசிய பசுபிக் பகுதியில் பிரிட்டன் போர் கப்பல்கள்
பிரிட்டன் தனது நாட்டின் பாதுகாப்பபு கருதி ஆசியா மற்றும் பசுபிக் கடல் பகுதியில் தனது இரண்டு போர் கப்பல்களை நிரந்தரமாக தரித்து வைக்க முடிவு செய்துள்ளது
ஜப்பானில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடி மற்றும் சீனாவின் அத்துமீறல் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக தெரிவிக்க படுகிறது
மறு முனையில் ஆசியாவை நோக்கி அமெரிக்கா கூட்டு படைகள் ஆக்கிரமிக்கும் செயல்
நடவடிக்கை எதிர் வரும் காலங்களில் முன்னெடுக்கும் அபாயம் உள்ளதாக போரியல் நிபுணர்கள் எச்சரிகை விடுத்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது
சீனா வெள்ளத்தில் சிக்கி 25 பேர் மரணம்
சீனா வெள்ளத்தில் சிக்கி 25 பேர் மரணம்
சீனாவில் பரவிய வெள்ள பெருக்கு காரணமாக இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இரண்டு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயர் கல்லறையை தேடும் அதிகாரிகள்
200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயர் கல்லறையை தேடும் அதிகாரிகள்
ஐகோர்ட்டு உத்தரவின்படி கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயரின் கல்லறையை திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலர்கள் தேடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயர் கல்லறையை கண்டறியும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்.
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
திண்டுக்கல்:
ஐரோப்பாவை சேர்ந்தவர் ஒயிட்என்னிஸ். இவர் கடந்த 1810-ம் ஆண்டு சென்னை மாகாண கலெக்டராக இருந்தவர். இவருடைய கல்லறை திண்டுக்கல்லில் இருக்கலாம் என்று சந்தேகம்
எழுந்தது. இதனையடுத்து அதுகுறித்து ஆராய மதுரை ஐகோர்ட்டு கிளை திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து மாவட்டகலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் மேற்பார்வையில் நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில்
கல்லறையை தேடும் பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரம் பகுதியில் உள்ள காமராஜ்நகரில் கல்லறை தோட்டம் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
இதனையடுத்து புதர்மண்டி கிடந்த அந்த பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது அங்கு 40-க்கும் மேற்பட்ட கல்லறைகள் இருப்பதை பார்த்து
அதிர்ச்சி அடைந்தனர். இதில் பெரும்பாலானோர் ஆங்கிலேயே அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிறிஸ்தவ மத போதகர்கள் ஆகியோரின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் ஒயிட்என்னிஸ் கல்லறை கிடைக்கவில்லை. இதனையடுத்து வேறு ஏதேனும் பகுதியில் அவரது கல்லறை உள்ளதா என்று தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லறை இருந்ததே
தெரியாமல் அப்பகுதி மக்கள் வசித்து வந்தநிலையில் தற்போது 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகரில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பெண்களின் தொடைப் பகுதியில் கொழுப்பு சேரக்காரணம் ஏன் தெரியுமா
பெண்களின் தொடைப் பகுதியில் கொழுப்பு சேரக்காரணம் ஏன் தெரியுமா
ஆண்களை விட பெண்களுக்குத்தான் தொடை பகுதியில் கூடுதல் கொழுப்புகள் சேரும். அதற்கான காரணங்களையும், அதை குறைக்கும் வழிமுறைகளையும் அறிந்து கொள்ளலாம்.
சிலருக்கு தொடை பகுதியில் கொழுப்பு படிந்து காணப்படும். பொதுவாக நேராக நிமிர்ந்து நிற்கும்போது இடுப்பு பகுதியில் இருந்து மூட்டு பகுதி வரை ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்க
வேண்டும். அப்படி இல்லாமல் தொடைப் பகுதியில் தசைகள் குவிந்திருந்தால் அங்கு கொழுப்பு சேர்ந்திருப்பதாக அர்த்தம். அவை ‘சாடில் பேக்குகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த
கொழுப்பை கரைப்பது சற்று கடினமானது. ஆனால் சாத்தியமற்றது அல்ல. சில எளிய பயிற்சிகள்
மூலம் கொழுப்பு சேர்வதை தடுத்துவிடலாம். ஆண்களை விட பெண்களுக்குத்தான் தொடை பகுதியில் கூடுதல் கொழுப்புகள் சேரும். அதற்கான காரணங்கள்:
மரபியல்: தொடையின் வெளிப்புற பகுதியில் கொழுப்புகளை உருவாக்குவதில் மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தாய் அல்லது பாட்டி மூலம் மரபணு ரீதியாக ‘சாடில் பேக்குகள்’ பிரச்சினை தோன்றுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
பருவமடைதல்: இளம் பெண்களாக வளர்ந்து பருவமடையும்போது மார்பகங்கள், இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் கொழுப்பு சேர தொடங்கும்.
சில நேரங்களில் கூடுதல் கொழுப்புகள் தொடையின் வெளிப்புற பகுதிகளில் குவிந்துவிடும்.
கர்ப்பம்: ‘சாடில் பேக்குகள்’ பிரச்சினைக்கு கர்ப்பமும் மற்றொரு காரணியாக அமைந்திருக்கிறது. கர்ப்பகாலத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் பங்களிப்பு
முக்கியமானது. இவை கர்ப்பகாலம் முழுவதும் சுரக்கக்கூடியது. இதில் ஈஸ்ட்ரோஜன், தொடைப் பகுதியுடன் வயிற்று பகுதியை சுற்றி கொழுப்பு குவிவதற்கு காரணமாகிவிடுகிறது.
உட்காருதல்: உடல் இயக்க செயல்பாடுகள் இல்லாதது, ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். நாள் முழுவதும் ஒரே இடத்தில் நீண்ட நேரம்
பெண்களின் தொடைப் பகுதியில் கொழுப்பு சேரக்காரணம் ஏன் தெரியுமா
உட்கார்ந்திருக்கும்போது உடல் இயக்கம் அதிகம் இல்லாததால் ரத்த ஓட்டம் குறையும். அது ‘சாடில் பேக்குகள்’ எனப்படும் தொடையில் கொழுப்புகள் சேருவதற்கு வழிவகுத்துவிடும்.
கொழுப்பு: உடலில் கொழுப்புகள் சேருவதற்கு இடம் கொடுப்பது ‘சாடில் பேக்குகள்’ பிரச் சினைக்கு பிரதான காரணமாக அமைந்திருக்கும்.
உடலில் கொழுப்பு சதவீதத்தின் அளவை குறைப்பது ‘சாடில் பேக்குகள்’ உருவாக்கத்தை கட்டுப்படுத்திவிடும்.
உணவு: ஒரு நாளைக்கு மூன்று முறை சாலட் சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஆரோக்கியமற்ற
‘ஜங்க் புட்’ சாப்பிடுவது தொடையில் கொழுப்பு சேர்வதற்கு வழிவகுத்துவிடும். புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சீரான உணவை உண்ணுங்கள்.
முதுகு: முதுகின் அடிப்பகுதிக்கும், ‘சாடில் பேக்குகளுக்கும்’ இடையே நேரடி தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
முதுகு பகுதி ஆரோக்கியமாக இருந்தால் தொடையில் கொழுப்புகள் சேருவதற்கான வாய்ப்புகள் குறைவு.
விமான தளத்தை பாதுகாக்க – அமெரிக்கா உதவியை கோரும் துருக்கிய அதிபர்
விமான தளத்தை பாதுகாக்க – அமெரிக்கா உதவியை கோரும் துருக்கிய அதிபர்
ஆப்கானில் இருந்து அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் வெளியேறிய நிலையில் காபூல்
சர்வதேச விமான நிலையத்தை துருக்கிய இராணுவத்தினர் காவல் காத்து வருகின்றனர்
தலிபான்கள் ஆதிக்கம் மீள படர்ந்து வரும் நிலையில் எவ்வேளையும் விமான தளம் மீது தாக்குதல்
நடத்தி அதனை அவர்கள் தம்வச படுத்தலாம் என்பதால் அமெரிக்கா இராணுவ உதவியை துருக்கி கோரியுள்ளது
இதுவே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
அமெரிக்கா முக்கிய நிறுவனங்கள் மீது சீனா சைபர் தாக்குதல்
அமெரிக்கா முக்கிய நிறுவனங்கள் மீது சீனா சைபர் தாக்குதல்
அமெரிக்காவின் மிக முக்கிய நிறுவனங்களை இலக்கு வைத்து சீனாவின் இணையை சைபர் தாக்குதல் பிரிவினர் கைக்கிங் செய்துள்ளனர்
மைக்கிரோ சொப்ட் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா பாதுகாப்பு துறைக்குள்ளும் நுழைந்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதனால் இரு நாடுகளுக்கு இடையில் கடும் வாய் மோதல் இடம்பெற்று வருகிறது ,சீனாவின் மீது ஆளும் அமெரிக்கா அதிபர் தொடர் தடைகளை விதிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
உளவுத்துறை எச்சரிக்கை – டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய தடை
.உளவுத்துறை எச்சரிக்கை – டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய தடை
சுதந்திர தினத்திற்கு முன்பு ஆள் இல்லா விமானம் மூலம் டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி – டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய ஆகஸ்டு 15 வரை தடை
டெல்லி செங்கோட்டை
நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பலப்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு டெல்லியில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதென கூறப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. அந்த நாளில் டெல்லியில் தாக்குதல் நடத்த
வாய்ப்பிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் காஷ்மீர் பகுதிகளில்
ஆளில்லா விமானம் மூலம் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த சம்பவங்கள் உளவுத்துறையின் சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
ஆபரேஷன் ஜிகாத் என்ற பெயரில் பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் இந்த தாக்குதலை டெல்லியில் நடத்தக்கூடும் என கூறப்படுகிறது.
இதற்கேற்றாற் போல், உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட அல்-கொய்தா இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள்,
சுதந்திர தினத்தினை முன்னிட்டு பெரிய அளவில் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள செய்தியில் இன்று முதல் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டம் முடிவடையும் வரை டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
மதுசூதனனை ஒரே நேரத்தில் பார்க்க வந்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா
மதுசூதனனை ஒரே நேரத்தில் பார்க்க வந்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா
தேர்தல் நேரத்தில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக முதலில் அறிவித்தார். பின்னர் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டு ஒதுங்கி இருந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறைக்கு சென்றார்.
இதன்பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒன்றிணைந்து அவரை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார்கள்.
தேர்தல் நேரத்தில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக முதலில் அறிவித்தார். பின்னர் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டு ஒதுங்கி இருந்தார்.
தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. வினருடன் அவர் பேசிய பரபரப்பான ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. அ.தி.மு. க.வினருடன் பேசும் ஆடியோக்களில், ‘நான் மீண்டும் வந்துவிடுவேன்’ என்று அவர் கூறி வருகிறார். இதனால் சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனனை சந்திக்க சசிகலா இன்று மதியம் 12.45 மணி அளவில் திடீரென வருகை தந்தார்.
அதிமுக
அவரது காரில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டு இருந்தது. ஆஸ்பத்திரிக்கு சென்ற சசிகலா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மதுசூதனனின் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
அ.தி.மு.க.வினருடன் தொலைபேசி வாயிலாக மட்டும் பேசிக்கொண்டிருந்த சசிகலா முதல் முறையாக கட்சியின் மூத்த நிர்வாகியான மதுசூதனனின் உடல்நிலை பற்றி கேட்டறிய ஆஸ்பத்திரிக்கே நேரில் சென்றிருப்பது, அ.தி.மு.க. வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சசிகலா அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு தான் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி, மதுசூதனனின் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி ஆஸ்பத்திரிக்குள் இருக்கும் போது சசிகலாவின் கார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நுழைந்தது.
சசிகலா, மதுசூதனனை சந்திக்க சென்றபோது எடப்பாடி பழனிசாமிஆஸ்பத்திரியில் இல்லை. அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேறிவிட்டார்.
பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான பிறகு சசிகலா தி.நகரில் உள்ள வீட்டிலேயே இருந்து வருகிறார். இதுவரை வெளியில் வந்ததில்லை.
முதல்முறையாக இன்று வீட்டில் இருந்து அவர் வெளியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் கடல் பகுதியில் நடமாடி சென்ற ஈரானிய கப்பல்
பிரிட்டன் கடல் பகுதியில் நடமாடி சென்ற ஈரானிய கப்பல்
தெற்கு பிரிட்டன் கடல் பகுதிக்குள் இரண்டு ஈரானிய போர் கப்பல்கள் ஊடுருவி உளவு பார்த்து சென்றுள்ளன
மேற்படி சம்பவம் நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
ரசியா ,மற்றும் ஈரானிய கப்பல்கள் ஊடுருவல் பிரிட்டனை கொதிப்பில் ஆழ்தியுள்ளது
பிரபலங்கள் கைபேசியை கைக் புரியும் இஸ்ரேல் இராணுவம்
பிரபலங்கள் கைபேசியை கைக் புரியும் இஸ்ரேல் இராணுவம்
உலக நாடுகளில் மிக முக்கிய பிரபலங்களது கைப்பேசிக்குள் நுழைந்து அவர்களுக்கு தெரியாது அவர்களது இரகசியங்களை திருடி செல்வதாக இஸ்ரேல் மீது குற்றம் சுமத்த பட்டுள்ளது
இவர்களது பிரதான இலக்கு ஊடக நபர்கள்மீது நடத்த பட்டுள்ளது
இவர்க்ளுடன் தொடர்பில் இருந்த முக்கிய பிரபலங்களும் இதில் சிக்கியுள்ளதான ஆதார குற்ற சட்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
எனினும் மேற்படி குற்ற சாட்டை இஸ்ரேல் மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
AstraZeneca செலுத்திய பெண்ணுக்கு இரத்தஉறைதல் – 77 நாளின் பின் உயிர் தப்பிய அதிசயம்
AstraZeneca செலுத்திய பெண்ணுக்கு இரத்தஉறைதல் – 77 நாளின் பின் உயிர் தப்பிய அதிசயம்
அவுஸ்ரேலியாவில் மூதாட்டி ஒருவருக்கு அஷ்டா செனிக்கா ஊசி செலுத்த பட்டது ,அதில் அவரது
இரத்தம் உறைந்துள்ளது ,இதனால பெரிதும் அவதியுற்ற அவர் 77 நாட்கள் தீவிர சிகிச்சையின் பின்னர் மீள் உயிர் தப்பி வந்துள்ளார்
ஆனாலும் அவரது கைகளில் இப்பொழுதும் இரத்த கண்டல்கள் உள்ளதை காணமுடிகிறது
படங்களை பாருங்கள்


சசிகலாவால் -அதிமுகவை வீழ்த்த முடியாது – எடப்பாடி
சசிகலாவால் -அதிமுகவை வீழ்த்த முடியாது – எடப்பாடி
சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றி விட்டது. வாக்குகளைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தி.மு.க. மக்களை ஏமாற்றி விட்டது.
சசிகலா எத்தனை பொய்யான தகவல்களைப் பரப்பினாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது. சசிகலா அ.தி.மு.க.விலிருந்த காலகட்டத்திலும் தேர்தலில் அ.தி.மு.க .தோல்வியைச் சந்தித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை நாங்கள் வேண்டுமென்றே வீணடிக்கவில்லை. ஆரம்பக் காலத்தில் விழிப்புணர்வு இல்லாமல் கொரோனா தடுப்பூசி வீணடிக்கப்பட்டது என தெரிவித்தார்.
விநாயகர் கோவில் கட்டிய கிறிஸ்தவ தொழிலதிபர்
விநாயகர் கோவில் கட்டிய கிறிஸ்தவ தொழிலதிபர்
தனது தந்தை, தாயின் நினைவாக ஒரு விநாயகர் கோவிலை கட்டித் தந்த கிறிஸ்தவ தொழிலதிபரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ரூ.2 கோடி மதிப்பில் சித்தி விநாயகர் கோவில் கட்டிய கிறிஸ்தவ தொழிலதிபர்
சித்தி விநாயகர் கோவில்
உடுப்பியில் ஒரு கிறிஸ்தவ தொழில் அதிபர் ரூ.2 கோடி செலவில் விநாயகர் கோவிலை கட்டி அந்த கோவிலை இந்து பக்தர்களுக்கு அர்ப்பணித்து சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:
உடுப்பி மாவட்டம் சிருவா பகுதியை சேர்ந்தவர் கேபிரியல் நாசரேத் (77). இவர் தொழிலதிபர் ஆவார்.
கேபிரியலின் தந்தை பேபியன் செபஸ்டின் உயிரிழப்பதற்கு முன் கேபிரியலுக்கு 15 சென்ட் நிலத்தைக் கொடுத்து இருந்தார். பின்னர் உடல்நலக்குறைவால் செபஸ்டினும், அவரது மனைவி சபீனாவும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தனது தந்தை, தாயின் நினைவாக 15 சென்ட் நிலத்தில் ஒரு விநாயகர் கோவிலை கட்ட கேபிரியல் முடிவு செய்தார். அதன்படி ரூ.2 கோடி செலவில் சித்தி விநாயகர் கோவிலையும், அதன் அருகே அர்ச்சகர் தங்க ஒரு வீட்டையும் கேபிரியல் கட்டி முடித்தார்.
கேபிரியல் நாசரேத்
அந்த கோவிலுக்குள் 36 அங்குலம் விநாயகர் சிலை உள்ளது. பின்னர் அந்தக் கோவிலை இந்து பக்தர்களுக்கு அவர் அர்ப்பணித்தார்.
இந்தக் கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு கேபிரியலின் நண்பர்களான சதீஷ் ஷெட்டி, ரத்னாகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கேபிரியல் கூறுகையில், நான் கடந்த 1959-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்ததும் வேலைக்காக மும்பைக்குச் சென்றேன். மும்பையில் உள்ள பிரபாதேவி கோவிலுக்கு
தினமும் செல்வேன். அப்போது எனக்கு சொந்த செலவில் விநாயகர் கோவில் கட்ட வேண்டும் என்று ஆசை வந்தது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சிருவாவுக்கு வந்த நான் கோவிலை கட்ட முடிவு
செய்து, தற்போது கட்டி முடித்து இந்து நணபர்களுக்கு அர்ப்பணித்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா உலங்கு வானூர்தி
வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா உலங்கு வானூர்தி
அமெரிக்கா கடல் படை கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த MH-60 “Knighthawk ரக உலங்கு வானூர்தி ஒன்று கலிபோனியா பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது
எனினும் இதில் பயணித்த நால்வரும் காப்பாற்ற பட்டுள்ளனர் என இராணுவம் தெரிவித்துள்ளது
மேற்படி வானூர்தி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
ஒயில் டாங்கர் வெடித்து சிதறியதில் உடல் கருகி 13 பேர் மரணம்
ஒயில் டாங்கர் வெடித்து சிதறியதில் உடல் கருகி 13 பேர் மரணம்
தெற்கு கென்யாவில் ஆயில் ஏற்றி கொண்டு பயணித்த தாங்கி திடீரென வெடித்து சிதறியதில் 13 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் பேர் ஏறி காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
அரசை பதவி விலக கோரி -தாய்லாந்தில் மக்கள் போலீசார் மோதல்
அரசை பதவி விலக கோரி -தாய்லாந்தில் மக்கள் போலீசார் மோதல்
தாய்லாந்தில் ஆளும் அதிபரை பதிவை விலக கோரி மக்கள்பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
மக்கள் போராட்டத்தை நசுக்கும் நோக்குடன் தண்ணியடி ,மற்றும் ரப்பர் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டு வருகின்றது
எனினும் மக்கள் காவல்துறையின் அடக்குமுறையை உடைத்தெறிந்து போராடிய வண்ணம் உள்ளனர்
இந்தியா நிலச் சரிவில் சிக்கி 20 பேர் மரணம்
இந்தியா நிலச் சரிவில் சிக்கி 20 பேர் மரணம்
இந்திய மும்பாய் பகுதியில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இருபது
பேர் பலியாகியுள்ளனர்
மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர்
பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
வடக்கு சைபிரஸ் புது நாடாக உருவாக்கம் – துருக்கி அதிரடி
வடக்கு சைபிரஸ் புது நாடாக உருவாக்கம் – துருக்கி அதிரடி
சைபிரஸ் மற்றும் கிரேக் ஆகியவற்றுக்கு இடையில் நீண்டு வந்த பெரும் பகைமை காரணமாக
அந்த பகுதிகள் தொடர்ந்து பர பரப்பு மிகுந்த வலயமாக இருந்து வந்தது ,இவ்வேளையில் துருக்கிய அதிபர் எடகோன்
வடக்கு சைபிரஸ் பகுதிக்கு இரு நாள் உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்
இதனை அடுத்து வடக்கை சைபிரஸ் புதிய நாடக உருவாகும் நிலை இடம்பெறுகிறது
இதற்கான அறிவிப்பை துருக்கி வெளியிட்டுள்ளது ஐரோப்பிய யூனியனுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள்து
இதனை தடுக்க கிரேக்கம் என்ன செய்ய போகிறது என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்







