Posted in Uncategorized

சில நாட்களுக்கு சேவைகள் முழுமையாக தடை படும் நன்றி

சில நாட்களுக்கு சேவைகள் முழுமையாக தடை படும் நன்றி 0044 7536707793

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

எப்படி சொல்வேன்

எப்படி சொல்வேன்

எழுதாத தாள் மேலே – உனை
எழுத வைத்த பேரழகே
தொலையாமல் இருக்குமா – மனம்
தொலைத்து விட்டேன் உன் மேலே

உடையாத பாறையாய்
உச்சி மலை இருந்தென்னை
கன்ன குழி சிரிப்பழகில்
கடைந்து விட்டாய் நீ என்னை

இடை பிடிக்கும் உன் விரலின்
இடையிலே என் விழிகள்
ஊடுருவி பார்க்குதடி
உடல் பரவசம் ஆகுதடி

வேர்க்காத உன் உதட்டில்
வேலை ஒன்று செய்திடவா ..?
சந்தனத்து உடல் அழகை
சாயும் காலம் மென்றிடவா ..?

இல்லாத மார்புக்கு
இடையில் என்ன சாளரமோ ..?
உடையாத பூவுக்குள்
உள்ளே என்ன எந்திரமோ ..?

எப்படி சொல்வேன்

மார்பு தடவும் கூந்தலின்
மல்லிகை வாசத்தை
முகர்ந்து பார்க்க துடிக்கிறதோ
முன்னுள்ள நுரையீரல் …?

வாலிபத்தை நோகடித்து
வாசல் வந்து நின்னவளே
நாள் ஒன்று வீனாகி
நலிந்து போனேன் என்னவளே

இச்சைக்கு வரி வைத்து
இயங்கும் உலகிலே
நீதி கேட்பீரா
நின்று பதில் சொல்வீரா …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 22-08-2021
http://ethirinews.com/

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    உன்னால் அழுகிறேன்

    உன்னால் அழுகிறேன்

    விழியின் ஓரமா -உன்
    நினைவு துளிகளே
    கடந்து போகுமா – அந்த
    காதல் நினைவுகள் …?

    ஆடும் காற்றிலே
    அடி வாங்கும் அலைகளாய்
    வாழ்வு நோகுதே – இந்த
    வையம் வெறுக்குதே

    மீனை போல துள்ள
    எனக்கு தெரியவில்லை
    புலி போல பாய
    உனக்கு புரியவில்லை

    இரு வேறா பிரிவதற்கா
    இணைந்தோம் அன்று
    என் உயிரே என் உயிரே
    எனக்கு பதில் சொல் நன்று

    விதி போட்ட சாலையிலே
    வீழ்ந்தவர்கள் நூறு
    இதில் நீயும் நானும்
    இந்த நூறில் ஒன்று

    அழுவதால் காயம் ஆறுமா
    ஆறுதல் சொல்ல இங்கு யாரம்மா
    படைத்தவனே பழியை ஏற்பானா
    பகலவனே பதில் சொல்வானா …?

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 17-08-2021
    http://ethirinews.com/

    வன்னி மைந்தன் கவிதைகள்

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      உயிரே பதில் சொல்லாயோ

      உயிரே பதில் சொல்லாயோ

      காட்சிகளாய் என் விழியில்
      காலமெல்லாம் வீழ்பவளே – உன்
      மூச்சு காற்று பட்டே
      முழுதாக செயல் இழந்தேனே

      தொடை தொட்டாடும்
      தோகை கூந்தலை
      வலை போட்டு நான் பிடிக்க
      வாசலுக்கு வந்து விடு

      செவந்த சட்டையில
      செவப்பா நீ இருக்க
      உன் உதட்டு பூவிதழை
      உரிக்காம விடுவேனா ..?

      கரை தேடும் அலைபோல
      கண்ணால கதை சொல்ல
      கறுத்த வான் மேகம்
      கன மழை கொட்டுதடி

      வீடு வந்த வெள்ளம் போல
      விழி எல்லாம் நீ இருக்க
      உன்னை மனம் மறந்திடுமோ
      உயிரே பதில் சொல்லாயோ ..?

      வன்னி மைந்தன்
      ஆக்கம் 16-08-2021
      http://ethirinews.com/

      வன்னி மைந்தன் கவிதைகள்

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        நித்தம் நீயே வா

        நித்தம் நீயே வா

        முரண்டு பிடிக்கும் உன் உடம்பை
        முள்ளு மீசை கொண்டு குற்றவா ..?
        என் எச்சி பட்டே உன் உடலை
        எந் நாளும் நனைக்கவா ..?

        இடையாட்டும் காற்றை பிடித்து
        இன்று சிறை வைக்கவா ..?
        நனையாமல் நீ செல்ல
        நானும் குடை பிடிக்கவா ..?

        தலையாட்டும் கூந்தலை
        தாங்கமே தந்திட வா
        தாலாட்டு நான் பாட
        தங்கமே உறங்க வா

        முன் பகலை இரவாக்கி
        முழு நிலவில் தோய்க்கவா ..?
        உன் சாமி நான் ஆனேன்
        உயிரே நித்தம் வணங்க வா ….

        ஆகாய சூரியனாய்
        அன்றாடம் வருபவளே
        நித்தம் என் உறக்கத்தை
        நீயே கலைக்க வா …!

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 15-08-2021
        http://ethirinews.com/

        வன்னி மைந்தன் கவிதைகள்

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          இப்போ என்ன சொல்வாய்

          இப்போ என்ன சொல்வாய்

          உன் சிரிப்பை நான் கேட்டால்
          உனக்கென்ன கோபமோ ..?
          என் சிரிப்பை நான் தந்தால்
          ஏன் எடுக்க வெட்கமோ …?

          வங்கி என்றால் கடன் கொடு
          வட்டி முதல் தந்திடுவேன்
          வாங்கியதை தந்து விட்டால்
          வழி வெட்டி என்னை விட்டு விடு

          முத்தமிடும் மழைத்துளியை
          முற்றம் ஏற்க மறுப்பதில்லை
          பின்னிரவில் மனிதரெல்லாம்
          பிள்ளை பெற்றும் உறைவதில்லை

          இப்போ என்ன சொல்வாய்
          இப்போ என்ன சொல்வாய்

          அந்தி மட்டும் உறங்காவிடின்
          அணைத்து பால் கதறுமடி
          படைத்தவனை நினைத்து பார்
          பகலிரவின் முழுமையடி

          முழு நூல்கள் படித்து விட்டால்
          முத்தி இன்று பெற்றிடுவாய்
          இத் திரையில் நீ இருப்பாய்
          இன்றே கடவுளாவாய் …!

          வன்னி மைந்தன்
          ஆக்கம் 14-08-2021
          http://ethirinews.com/

          வன்னி மைந்தன் கவிதைகள்

            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            என்னோடு வா

            என்னோடு வா

            விட்டுப்போன உறவென்று- உனை
            விட்டு விட முடியவில்லை
            தொட்டு பார்க்கும் எண்ணத்தால்- உனை
            தொலைத்து விட இயலவில்லை

            கட்டி வைத்த மாலையாக
            காய்கின்ற பேரழகே….
            உனை கொய்தவனை கொன்றிடவா..?
            உன் உயிரை காத்திடவா?

            மண்ணுக்குள் வேரெடுத்து
            மழை நீரில் குளியலிட்டு….
            விண்ணுலகை பார்த்தவளே
            வீழ்ந்ததின்று எப்படியோ?

            நிமிடம் ஒன்று சிந்திக்க
            நினைவிழந்து போனதினால்
            சுனாமி அலைக்குள்ளே
            சுயம் வரத்தில் வீழ்ந்தாயோ ..?

            அலை கடந்து வீடுடைத்த
            ஆழி பேரலையாய்
            மீதி வாழ்வுக்குள்
            மிதந்து போராயோ …?

            ஓயாது பெருக்கெடுக்கும்
            ஒப்பாரி கண்ணீரை
            தடுத்திடுவேன் வந்து விடு
            தங்கமே நம்பி விடு …!

            வன்னி மைந்தன்
            ஆக்கம் 13-08-2021
            http://ethirinews.com/

            வன்னி மைந்தன் கவிதைகள்

              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              உன் பதில் என்ன

              உன் பதில் என்ன

              புத்தியில நீ இருந்து – உன்
              புன் முகத்தை காட்டையில
              நெத்தி வேர்வை கலையுதடி – உன்
              நேர் விழியால் மங்குதடி

              தாகத்தில நீ தவிக்க
              தண்ணீர் இனிக்குதடி
              தாமரையே செவ்விதழ்
              தரை புரண்டு வெடிக்குதடி

              தாலிபான் போர் போல
              தடை உடைத்து வென்றவேளே
              நீ இருக்க என் கவலை
              நினைவே ஏறு தோள் மேலே

              இறக்கும் முன்னர் எனை வந்து
              என் உயிரே பார்த்து விடு
              இறக்கும் முன்னர் என் ஏக்கம்
              இன்றே தனித்து விடு

              உன் பதில் என்ன

              உன் மடியை ஒரு நிமிடம்
              உறங்க கொஞ்சம் தந்து விடு
              உயிர் விட்டு சென்றிடுவேன்
              உயிரே வாழ்ந்து விடு

              ஊர் கதையை காதில் விட்டால்
              உயிரே வாழ மாட்டாய்
              உனக்கான சாலை இட்டால்
              உயிரே நீ வாழ்ந்திடுவாய்

              நானிருக்கும் காலமதில்
              நாம் வாழ வேண்டுமடி
              நம்பிக்கை நட்டவளே
              நலமுடன் பதிலிடுவாய் ….!

              வன்னி மைந்தன்
              ஆக்கம் 12-08-2021
              http://ethirinews.com/

              வன்னி மைந்தன் கவிதைகள்

                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                நீ வேண்டும் எனக்கு

                நீ வேண்டும் எனக்கு

                தேம்ஸ் நதியின் ஓரத்திலே
                தெரு விளக்காய் எரிபவளே
                நயாகரா அருவியாக
                நான் ஓடி வந்திடவா ..?

                கூலி இன்றி ஆறு வெட்டி
                குரல் எழுப்பி ஆடி வரும்
                அழகான நதி போல
                அன்பே நான் வந்திட வா …?

                உள்ளிருந்து துள்ளி வரும்
                உருவத்தில் சிறிதான
                மீன் போல நான் வரவா
                மின்னல் போல் ஒளி தரவா ..?

                குமரியில பூவெய்தி
                குலை குலையாய் காய் காய்த்து
                பழமாய் உதிர்கின்ற
                பருவத்தில் வந்திட வா …?

                எதுவாக நான் வரவோ
                என் அன்பே பதில் தர வா
                ஏங்கும் மனதொன்றின்
                ஏக்கத்தை தனித்திட வா …..!

                வன்னி மைந்தன்
                ஆக்கம் 11-08-2021

                உலக புகழ் பெற்ற
                தேம்ஸ் நதி (லண்டன்
                நயாகரா ( கனடா )
                http://ethirinews.com/

                  Posted in Uncategorized

                  ஈரான் எல்லையில் இஸ்ரேல் உளவாளிகள் மடக்கி பிடிப்பு

                  ஈரான் எல்லையில் இஸ்ரேல் உளவாளிகள் மடக்கி பிடிப்பு

                  ஈரான் மேற்குக்கரை எல்லையில் ஊடுருவிய இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது செய்ய பட்டுள்ளனர்


                  ஈரானிய உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து நடத்த பட்ட முற்றுகையில் இந்த உளவுத்துறையினர் மடக்கி பிடிக்க பட்டுள்னர்

                  கைதானவர்க்ளிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                  ஈரானில் பெரும் தாக்குதலை நடத்திட இவர்கள் திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது

                    Posted in Uncategorized உலக செய்திகள்

                    இந்தியா எல்லையில் 4,000 இராணுவம் குவிப்பு

                    இந்தியா எல்லையில் 4,000 இராணுவம் குவிப்பு

                    இந்தியா அசாமில் இடம் பெற்ற எல்லையோர கலவரத்தை அடுத்து தற்போது நான்காயிரம்

                    இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர்

                    மேலும் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதை தடுக்கும் முகமாக இந்த படை குவிப்பு

                    இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                      Posted in Uncategorized

                      ஜெர்மனியில் பாரிய வெடிப்பு -2 பேர் மரணம் -31 பேர் காயம்

                      ஜெர்மனியில் பாரிய வெடிப்பு -2 பேர் மரணம் -31 பேர் காயம்

                      ஜெர்மனியில் இடம்பெற்ற கெமிக்கல் பக்டரியில் இடம்பெற்ற பாரிய வெடி விபத்தில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர்

                      மேலும் எட்டு பேர் காணாமல் போயுள்ளனர்

                      இதுவரை 31 பேர் படு காயமடைந்துள்ளனர்

                      இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                        Posted in மருத்துவம்

                        மாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்

                        மாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்

                        மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படுகிற மாற்றங்கள்.


                        இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                        மாதவிலக்கு நெருங்கும் நாட்களில் வயிறு, இடுப்பு, தொடைகள் போன்றவை வலிப்பதைப் போலவே பல பெண்களுக்கும் மார்பகங்களில் வலி இருக்கும். மார்பகங்களில் வீக்கம், கனத்த

                        உணர்வு, வலி போன்ற அந்த மாற்றங்களின் பின்னணி, தீர்வுகள், வாழ்க்கை முறை பற்றி பார்க்கலாம்.

                        மாதவிலக்கு நெருங்கும்போது மார்பகங்களில் ஏற்படுகிற இந்த அறிகுறிகளுக்கும் ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம்(premenstrual syndrome) பிரச்னைதான் காரணம். மார்பகங்களில் வலி,

                        வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படுகிற மாற்றங்கள்.

                        இந்த அறிகுறிகள் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்கள் முன் ஆரம்பித்து, மாதவிலக்கின்போது உச்சத்தை அடைந்து பிறகு தானாகவே சரியாகி
                        விடக்கூடியவை.

                        பயப்படத் தேவையில்லை. அதற்காக இப்படி எல்லா அறிகுறிகளையுமே சாதாரணம் என நினைத்து அலட்சியப்படுத்தவும் கூடாது.

                        எவை எல்லாம் சாதாரணமானவை?

                        • வீக்கம்
                        • மென்மையாதல்
                        • வலி
                        • எரிச்சல்

                        மார்பகங்களின் அடர்த்தியில் மாற்றம் என்ன செய்யலாம்?

                        மாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்

                        • கொழுப்பு அதிகமான உணவுகளைத் தவிர்த்து குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடவும்.
                        • கஃபைன் உள்ள காபி, டீ, கோலா, சாக்லேட் என எல்லாவற்றையும் தவிர்க்கவும்.
                        • மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துவிடவும்.
                        • மார்பகங்களை உறுத்தாத, சிரமப்படுத்தாத சப்போர்ட் கொடுக்கும்படியான வசதியான உள்ளாடை அணியவும்.
                        • உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளவும்.

                        எவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது?

                        • மார்பகங்களிலோ அல்லது அக்குள் பகுதிகளிலோ அசாதாரணமான கட்டி, வீக்கம், வலி போன்றவை தென்பட்டால்.
                        • மார்பகங்களிலிருந்து திரவமோ, ரத்தமோ கசிந்தால்.
                        • உணவு, உடற்பயிற்சி, உள்ளாடை என மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் பின்பற்றிய பிறகும் ஒருவித அசவுகரியத்தை உணர்ந்தால்.
                        • தூக்கம் கெட்டுப்போகும் அளவுக்கு அது உங்களைப் பாதித்தால்.
                        • மாதவிலக்கு முடிந்தபிறகும் இந்த அறிகுறிகள் தொடர்ந்தால்.
                        • மார்பகங்களின் வடிவத்தில் மாற்றங்களை உணர்ந்தால்.
                        • மார்பகத்தின் சருமமானது சிவந்துபோவது, அரிப்பது, குழிகள் விழுந்து காணப்படுவது போன்ற மாற்றங்களை சந்தித்தால்.

                        இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மகளிர் மருத்துவரை அணுகிப் பரிசோதனையும் ஆலோசனையும் மேற்கொள்வது பாதுகாப்பானது.
                        வாழ்வியல் மாற்றங்களும் அவசியம்

                        • மார்பகங்களில் வலியோ, வீக்கமோ இருக்கும் நாட்களில் இரவில் உள்ளாடை அணிவதைத் தவிர்க்கவும்.
                        • மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் இ மற்றும் மக்னீசியம் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.
                        • நடைப்பயிற்சி, இரவில் வெதுவெதுப்பான நீரில் குளியல் போன்றவையும் இதமளிக்கும்.

                        சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

                        • வேர்க்கடலை மற்றும் ஹேசில் நட்ஸ்
                        • பசலைக்கீரை
                        • ஆலிவ்
                        • சோளம்
                        • கேரட்
                        • வாழைப்பழம்
                        • பழுப்பரிசி
                          Posted in Uncategorized

                          பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

                          பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

                          பேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

                          பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு – தமிழக அரசு
                          பேரறிவாளன்

                          முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் (49), சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கொரோனா பரவல் காரணமாக

                          பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார்.

                          இதனைத்தொடர்ந்து தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. இதன்படி கடந்த மே மாதம் 28-ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வந்த பேரறிவாளன்,

                          அங்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். இதனையடுத்து ஒரு மாதம் பரோல் காலம் முடிந்து பேரறிவாளன் கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பியபோது, மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

                          ஜூலை 28-ம் தேதியுடன் பரோல் முடிவடைய இருந்தநிலையில், பேரறிவாளன் சென்னை புழல் சிறைக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்டு வந்தனர்.

                          இந்நிலையில், அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

                          Posted in Uncategorized

                          இந்தியா வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 192 ஆக உயர்வு

                          இந்தியா வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 192 ஆக உயர்வு

                          மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 800 பாலங்கள் மற்றும் 290 சாலைகள் சேதமடைந்தன.

                          மகாராஷ்டிராவில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 192 ஆக உயர்வு

                          மகாராஷ்டிரா மாநிலயத்தில் கடந்த வாரம் 2 நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் கொங்கன் மற்றும் மேற்கு மகாராஷ்டிர மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன.

                          குறிப்பாக ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, தானே, பால்கர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. பல நகர்ப்புறங்களும், கிராமங்களும் வெள்ளத்தில் மிதந்தன.

                          மேலும் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், ஆங்காங்கே நடந்த நிலச்சரிவில் புதைந்தும் உயிரிழந்தனர். இந்த வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள்.

                          இந்நிலையில், வெள்ளப் பாதிப்பு குறித்து முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மும்பையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

                          உத்தவ் தாக்கரே

                          வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 192 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் பலர்

                          காயம் அடைந்து உள்ளனர். வெள்ள பாதிப்புக்குரிய இடத்தில் இருந்து 2 லட்சத்து 29 ஆயிரத்து 74 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

                          வெள்ளம் காரணமாக 290 சாலைகளை சீர் செய்ய வேண்டியது உள்ளது. 800 பாலங்கள் சேதம் அடைந்து உள்ளன. பாதிக்கப்பட்ட 746 கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யும் பணி நடந்து வருகிறது.

                          மேலும், நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மிக விரைவாக நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதல் மந்திரி அறிவுறுத்தி உள்ளார் என தெரிவித்துள்ளது.

                            Posted in Uncategorized

                            22 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து

                            22 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து

                            அமெரிக்கா அதிவேக சாலையில் பயணித்து கொண்டிருந்த வாகனங்கள் 22 ஒன்றுடன் ஒன்று

                            மோதி விபத்தில் சிக்கின ,இந்த பாரிய விபத்தில் சிக்க பலர் படுகாயமடைந்துள்ளனர்

                            மேற்படி விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது

                            இதே போன்று நூறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized

                              அகதிகள் படகு கவிழ்ந்ததில் 53 பேர் கடலில் மூழ்கி பலி

                              அகதிகள் படகு கவிழ்ந்ததில் 53 பேர் கடலில் மூழ்கி பலி

                              லிபியாவில் இருந்து அகதிகளை காவியபடி பயணித்த படகு ஒன்று கடலில் மூழ்கியதில் அதில் பயணித்த 57 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்

                              இவ்வாறு இறந்தவர்களில் சிறுவர்கள் ,பெண்கள் உள்ளடங்குவார்கள் என தெரிவிக்க படுகிறது

                              உயிர் காக்க ஆபத்தான கடல்வழி பயணத்தை மேற்கொண்ட அகதிகள் படகுகள் கவிழ்ந்து இருபது

                              ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பரிதாபகரமாக பலியாகியமை குறிபிட தக்கது

                                Posted in Uncategorized

                                ஆயுத தாரி வெறியாட்டம் – 14 பேர் சூட்டு கொலை

                                ஆயுத தாரி வெறியாட்டம் – 14 பேர் சூட்டு கொலை

                                மாலியில் அரச அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் மீது ஊந்துருளியில் பயணித்த ஆயுததாரி திடீரென தாக்குதலை நடத்தினார்

                                இதில் சம்பவ இடத்தில 14 மக்கள் பலியாகினர்

                                தாக்குதலை அடுத்து மேலதிக இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

                                  Posted in Uncategorized

                                  பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது- சுப்ரீம் கோர்ட்டு.

                                  பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது- சுப்ரீம் கோர்ட்டு.

                                  பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு அளிக்கக்கூடிய திட்டங்களை அவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டும்.

                                  பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட மறுப்பு

                                  டெல்லியை சேர்ந்த குஷ்கர்லா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தார்.

                                  டெல்லி நகரில் உள்ள சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இப்போது கொரோனா காலத்தில் இந்த பிச்சைக்காரர்களால் மற்றவர்களுக்கு கொரோனா நோய்

                                  பரவும் நிலை உருவாகி உள்ளது. எனவே நகரில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

                                  கொரோனா வைரஸ்

                                  இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது என்று கூறினார்கள்.

                                  மனுதாரர் தெருக்களில் பிச்சை எடுப்பவர்களை தடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

                                  அவர்கள் ஏன் பிச்சை எடுப்பதற்காக தெருக்களுக்கு வருகிறார்கள்? வறுமை வாட்டும்போது அவர்கள் தெரு வீதிக்கு வர வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

                                  சுப்ரீம் கோர்ட்டால் அவர்களை தடுப்பதற்கு உத்தரவு போட முடியாது. அதற்கான வாய்ப்புகள் இல்லை. இது ஒரு சமூக பிரச்சினை. அரசு சமூக நல கொள்கைகளை வகுத்து இதற்கு தீர்வு காண வேண்டும்.

                                  அவர்கள் நம் கண்ணில் படக்கூடாது என்று எங்களால் எந்த உத்தரவும் போட முடியாது.

                                  பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு அளிக்கக்கூடிய திட்டங்களை அவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டும்.

                                  எந்த சூழ்நிலையில் அவர்கள் பிச்சை எடுக்க வருகிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இது சமூக பொருளாதார பிரச்சினை. அவர்களுக்கு தடை விதிப்பதன் மூலம் இதை சரி செய்துவிட

                                  முடியாது. இது சம்பந்தமாக மத்திய அரசு, டெல்லி நகர அரசு ஆகியவை விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.

                                  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

                                  அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சின்மாய் ‌ஷர்மா கூறும்போது, ‘‘எங்கள் தரப்பு

                                  மனுதாரர் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில்தான் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்’’ என்று கூறினார்.

                                  இந்த வழக்கை 2 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

                                    Posted in Uncategorized

                                    வெள்ளத்தில் மிதக்கும் london – வீடியோ

                                    வெள்ளத்தில் மிதக்கும் london – வீடியோ

                                    லண்டனில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் லண்டன் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
                                    இதனால இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது

                                    கீழே காணொளி பாருங்கள்