ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

குளத்தில் மூழ்கிய மூன்று சிறுமிகள் சடலமாக மீட்பு

குளத்தில் மூழ்கிய மூன்று சிறுமிகள் சடலமாக மீட்பு

இலங்கை ஆரா குள பகுதியில் படகு ஒன்று குளத்தில் கவிழந்ததில் ,அதில் பயணம் செய்த மூன்று சிறுமிகளும் பலியாகினர் .

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 மற்றும் 18 வயது சிறுமிகள் அடங்குவர் .

காணாமல் போன சிறுமிகள் சடலம் இன்று மீட்க பட்டது .

இந்த சிறுமிகள் மரணம், அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்தியா இராணுவத்தால் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்தியா இராணுவத்தால் கைது

இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்தியா இராணுவத்தால் கைது

இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்தியா கடலோர காவல் படையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர் .

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்கின்ற குற்ற சாட்டில் ,இந்த அப்பாவி மீனவர்கள் 11 பெரும் கைது செய்யப் பட்டுள்ளனர் .

கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பார்ப் படுத்த படவுள்ளனர் .

இந்தியா இலங்கை கடல் படையால் ,இரு மீனவர்களும் மாறி மாறி கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

பிள்ளைகள் இரண்டை வீட்டில் தவிக்க விட்டு தப்பி சென்ற பெற்றோர்கள்
Posted in இலங்கை செய்திகள்

பிள்ளைகள் இரண்டை வீட்டில் தவிக்க விட்டு தப்பி சென்ற பெற்றோர்கள்

பிள்ளைகள் இரண்டை வீட்டில் தவிக்க விட்டு தப்பி சென்ற பெற்றோர்கள்

பெற்றோர் தனது குழந்தைகள் இருவரை வீடொன்றில் கைவிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று அம்பலாங்கொடை பகுதியில் பதிவாகியுள்ளது.

இது குறித்து அறிந்த அயலவர்கள் நேற்று (11) இரவு அம்பலாங்கொடை பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அம்பலாங்கொடை குலீகொட ரங்கோத் விஹார மாவத்தையில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அதன்படி பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று இரு குழந்தைகளையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பிள்ளைகள் இரண்டை வீட்டில் தவிக்க விட்டு தப்பி சென்ற பெற்றோர்கள்

2 மற்றும் 3 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளனர்.

தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ள இரண்டு குழந்தைகளையும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பதற்கான அனுமதியை நீதிமன்றில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த குழந்தைகளின் பெற்றோரைக் கண்டறிய பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No posts found.
உக்கிரேன் இராணுவத்தை ஓடவைக்கும் ஈரான் ஏவுகணைகள்
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் இராணுவத்தை ஓடவைக்கும் ஈரான் ஏவுகணைகள்

உக்கிரேன் இராணுவத்தை ஓடவைக்கும் ஈரான் ஏவுகணைகள்

உக்கிரேன் மீதான போரின் பின்னடைவு காரணமாக ,ரசியா தற்போது ஈரான் ஏவுகணைகளை கொள்வனவு செய்து தாக்கி வருகிறது .

ஈரான் கரும்புலி தாக்குதல் விமானங்கள் ,கோரமான தாக்குதலை உக்கிரேனில் நடத்தி வந்தன .

அதனை அடுத்து தற்பொழுது ஈரான் நாட்டின் கூறும் தூர Fateh-110 and Zolfaghar types ஏவுகணைகளை ரசிய கொள்வனவு செய்துள்ளது .

இந்த ஏவுகணைகள் மூலமே அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை தாக்கி வருவதுடன் ,உக்ரேன் முக்கிய நிலைகள் மீதும் தாக்குதல் நடத்துகிறது .

உக்கிரேன் இராணுவத்தை ஓடவைக்கும் ஈரான் ஏவுகணைகள்

ரசியாவுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் , அமெரிக்கா பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன .

அது கடந்து தற்பொழுது , ஈரான் ஆயுத உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது .

ஈரான் நாட்டினை முற்றாக அழித்துவிடலாம் என வால் ஆட்டிய அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு ,ஈரான் உக்கிரேன் களத்தில் , இந்த நாடுகளின் ஏவுகணைகள் பலத்தை சோதனை செய்கிறது .

ஈராக் அமெரிக்கா முகாம் மீது நடத்த பட்ட ஈரான் ஏவுகணை தாக்குதலில் ,130 பேருக்கு மேற்பட்ட அமெரிக்கா இராணுவத்தினர், மண்டை கலங்கிய நிலையில் பாதிக்க பட்டனர் .

அவ்வாறான கொடிய வகை ஆயுதத்தை , ரசியா ஈரானிடம் கொள்வனவு செய்து, தாக்குதலை மேற்கொள்கிறது, என்கிறது மேற்குலக நாடுகளின் உளவுத்துறைகள் .

கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு
Posted in உளவு செய்திகள்

கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு

கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு

தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளை ,வடகொரியா தாக்கி அழித்து விடும் என்பதல் ,தற்போது தென் கொரியா மேலாக அமெரிக்காவின் அணுகுண்டு விமானங்கள் பறப்பில் ஈடுபடுத்த படவுள்ளன .

தென் கொரியா மாற்றும் ஜப்பான் நாடுகளில் உள்ள, இரகசிய வான் தளம் ஒன்றில், இந்த அணுகுண்டுகளை காவிய விமானங்கள், தயார் நிலையில் வைக்க படவுள்ளன .

அதன் ஊடக வடகொரியா மேற்கொள்ளும் தாக்குதல்களை, தடுத்து விட முடியும் என்கிறது தென் கொரியா .

தமது நாட்டின் மீது போர் தொடுக்க பட்டால் ,போரை தொடுக்கும் நாடுகள் வரைபடத்தில் காணமல் போகும் என்பதான தொனியில் ,வடகொரியா இராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது .

கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு

சில வாரங்களுக்கு முன்னராக ஜப்பன் ,தென் கொரியா கடல் நீர் எரிப் பகுதியை இலக்கு வைத்து ,ஏவுகணைகள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டிலறி குண்டுகள் வீச பட்டன .

இவ்வாறான நிலையில் அமெரிக்காவின் அணுகுண்டு விமானங்கள் பறந்து சென்று. ஜப்பான் ,தென் கொரியா பகுதியில் தரித்து நிற்கும் ஏற்பாடுகள் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் மரணம்

ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் மரணம்

எகிப்த் நாட்டில் பயணிக்களை காவிய படி பயணித்த மினி பஸ் ஒன்று ,Egypt‘s Nile River ஆற்றுக்குள் கவிழ்ந்தது .

சாரதியின் காட்டுப் பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த பேரூந்தில் ,பயணித்த 21 பேர் பலியாகியுள்ளனர் .

பலியானவர்களில் , மூன்று சிறுவர்களும் அடங்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

சராதிகளின் அலட்சியம் , வீதி விதிகளை பின்பற்றாமை காரணமாக ,இந்த விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது .

ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஒருமாத கால பகுதியில் இடம்பெற்ற, இரண்டாவது மிக பெரும் விபத்தாக இது பதிய பெற்றுள்ளது .

அதில் அமைக்க பட்ட பாலங்கள் சேதமடைந்தன .
Posted in உலக செய்திகள்

குளத்தை உடைத்த ரசியா – வெள்ளத்தில் மிதக்கும் உக்கிரேன் நகரம்

குளத்தை உடைத்த ரசியா – வெள்ளத்தில் மிதக்கும் உக்கிரேன் நகரம்

ரசியா இராணுவத்தினால் கட்டுப் பாட்டில் இருந்த கேர்சன் மாநிலம் விடுவித்து ரசியா இராணுவம் பின் வாங்கியது .

ரசியா இராணுவம் பின்வாங்கியதும் ,Nova Kharkova குளத்தை உடைத்துள்ளது .அதில் அமைக்க பட்ட பாலங்கள் சேதமடைந்தன .

மேலும் குளக்கட்டு உடைந்து வெள்ளம் பாய்ந்து வருகிறது .

இதனால் விடுவிக்க பட்ட கேர்சன் பகுதியில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன .

குளத்தை உடைத்த ரசியா – வெள்ளத்தில் மிதக்கும் உக்கிரேன் நகரம்


இந்த குளத்தில் இருந்தே அதிக நீரினை, குறித்த பகுதி மக்கள் பெற்று கொள்கின்றனர் .

குளிர் காலத்தில் பெருக்கெடுத்துள்ள வெள்ள பெருக்கால் ,மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் .

கேர்சன் பகுதியில் நிலைகொண்டிருந்த முப்பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் பின் வாங்கி சென்றுள்ளனர் .


அதன் பின்னர் முக்கிய பகுதியில் அமைக்க பட்டுள்ள ,பாலம் மற்றும் ,குளங்களை ரசியா உடைத்துள்ள காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .

பின்தங்கிய மக்களுக்கு மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியா முதல் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை அதை செய்க -ஜனாதிபதிக்கு மனோ கடிதம்

நுவரெலியா முதல் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை பெருந்தோட்டத்துறையை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து ஆவன செய்ய வேண்டும்

  • ஜனாதிபதிக்கு மனோ அவசர கடிதம்

மத்திய மாகாண நுவரெலியா, கண்டி, மாத்தளை, ஊவா மாகாண பதுளை, மொனராகலை, சப்ரகமுவ இரத்தினபுரி, கேகாலை, மேல் மாகாண களுத்துறை, தென் மாகாண காலி, மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்ட

அவிசாவளை வரை படர்ந்துள்ள பெருந்தோட்டத்துறை குடியிருப்புக்களை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும் என இலங்கை ஜனாதிபதி ரணில்

விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள அவசர கடிதம் எழுதியுள்ளேன். இது தொடர்பான விசேட வாழ்வாதார உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கி உதவுங்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், தமிழக

நுவரெலியா முதல் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை அதை செய்க -ஜனாதிபதிக்கு மனோ கடிதம்

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும், கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் ஊடாக கோருகிறேன்.

பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்நடவடிக்கை அவசர நிலையாக கருதி முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இலங்கையில் “வறுமை” பற்றிய கணக்கெடுப்பு அறிக்கையில் உலக வங்கி, இலங்கையின் தேசிய வறுமை மட்டம் 26 விகிதமாக உயர்ந்துள்ள வேளையில் பெருந்தோட்ட துறையில் வறுமை 53 விகிதமாக அதீதமாக உயர்ந்து இருக்கின்றது.

அதேவேளை, ஐநா உலக உணவு நிறுவனத்தின் இலங்கை பற்றிய அறிக்கையில் “உணவின்மை”, நகர துறையில் 43% என்றும், கிராமிய துறையில் 34% என்றும், பெருந்தோட்ட துறையில் 51%, என்றும் கூறுகிறது.

ஆகவேதான், மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் முதல், மேல் மாகாண களுத்துறை, கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை படர்ந்துள்ள

பெருந்தோட்டத்துறை மக்கள் வாழும் குடியிருப்புக்களை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும்.

நம் நாட்டில் இன்று நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள, உணவின்மை பிரச்சினையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள

இந்திய வம்சாவளி மலையக பெருந்தோட்ட மக்களுக்கு விசேட உதவிகளை வழங்கிட இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் முன்வர வேண்டும்.

இலங்கை முழு நாட்டுக்கும் இந்திய மத்திய அரசு
வழங்கிடும் உதவிகள், மிகவும் நலிவுற்ற நிலையில் வாடும் இந்திய வம்சாவளி
பெருந்தோட்ட மக்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என்பதை மிகவும் பொறுப்புடன்


இந்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்திய வம்சாவளி


பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி கோருகிறது.

பொறிக்குள் உக்கிரேன் இராணுவம் பேரழிவு ஆயுதங்களை பாவிக்க தயராகும் ரசியா
Posted in உளவு செய்திகள்

பொறிக்குள் உக்கிரேன் இராணுவம் பேரழிவு ஆயுதங்களை பாவிக்க தயராகும் ரசியா

பொறிக்குள் உக்கிரேன் இராணுவம் பேரழிவு ஆயுதங்களை பாவிக்க தயராகும் ரசியா

உக்கிரேன் களமுனையில் ரசியா இராணுவம் மிக பெரும் பேரழிவு ஆயுதங்களை பயன் படுத்த தயாராகி வருகிறது .


கைபிரட் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்தி , பேரிழிவை ஏற்படுத்திட , ரசியா முயற்சிகளை மேற்கொள்ள கூடும் என்கின்ற ,திகில் தகவல்கள் வெளியாகியுள்ளன .

பொறிக்குள் சிக்கியுள்ள உக்கிரன் இராணுவம், சந்திக்க போவது என்ன காணொளியை பாருங்கள் .

இதில் அழுத்தியும் காணொளி பார்க்க

https://www.youtube.com/watch?v=c6fbWUfzTbg
பொலிஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்

பொலிஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்

இலங்கை ஹொரண மில்லனிய பகுதி காவல்துறை ஓ ஐ சி ஒருவர் திடீர் இடமாற்றம் செய்ய பட்டுளளார் .

இவர் தொடர்பான சர்ச்சைக்குரிய ஒலி நாடா ஒன்று ,சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் ,இவர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்க படுகிறது .

இலங்கை காவல்துறையின் தலைமை அதிகாரிகள் ,அதிகார துஸ்பிரயோகம் செய்து வருவதாக ஒன்பதாயிரம் முறைப்பாடுகள் பாதிவாகி இருந்தமை குறிப்பிட தக்கது .

No posts found.
ரயில் மோதி வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

ரயில் மோதி வாலிபன் மரணம்

ரயில் மோதி வாலிபன் மரணம்

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி வாலிபர் ஒருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .

முறைக்கொட்டான் சேனை பகுதியில் இடம்பற்ற விபத்திலே வாலிபர் மரணமாகியுள்ளார் .

சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு வடபடுத்த பட்டுள்ளது .

ஆண்டு தோறும் ரயில் விபத்துக்களில் சிக்கி , பல டசின் மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .

No posts found.
மலிவு விலையில் வாகனங்கள் விற்பனவு
Posted in இலங்கை செய்திகள்

மலிவு விலையில் வாகனங்கள் விற்பனவு

மலிவு விலையில் வாகனங்கள் விற்பனவு

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு இடைக்கால டதை விதிக்க பட்டுள்ள பொழுதும் ,வாகனங்கள் மலிந்த விலையில் விற்க பட்டு வருகின்றன .

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த அவல நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது .

தொடர்ந்து இவ்வாறு எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்க படுமாக இருந்தால் ,நாடு மிக மோசமான நெருக்கடியை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

எரிபொருள் விலை அதிகரிப்பு மக்கள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிப்பு மக்கள் அவதி

எரிபொருள் விலை அதிகரிப்பு மக்கள் அவதி

இலங்கையில் இன்று அதிகாலை முதல் ஏரி பொருட்களின் விலை அதிகரிக்க பட்டுள்ளது .

நாள் தோறும் பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வதால் பெரும் நெருக்கடியில் மக்கள் சிக்கியுள்ளனர் .

தொடர்ந்து நீடிக்கும் பொருளாதார நெருக்கடியால் இலங்கை சிக்கி தவித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

No posts found.
தீபாவளி உண்மையும் புரட்டும்
Posted in இலங்கை செய்திகள்

தீபாவளி உண்மையும் புரட்டும்

தீபாவளி உண்மையும் புரட்டும்!

ஆரியர்கள் சமண, புத்த ஆலயங்களை இந்துக் கடவுள் ஆலயங்களாக மாற்றியது போல, அவர்களின் விழாக்களையும் இந்துப் பண்டிகைகளாக மாற்றினர். அதற்கேற்ப புராணக் கதைகளைப் புனைந்தனர்.

இதை நாம் மட்டும் சொல்லவில்லை, அறிஞர் பெருமக்களே அழுத்திக் கூறியுள்ளனர்.

சமண சமயப் பண்டிகையே தீபாவளி

தீபாவளி சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண் மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார்.

இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது.

வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.

வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர்.

அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான்.

அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவலி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப் படுகிறது.

தீபாவளி உண்மையும் புரட்டும்

விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!

சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர்.

இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள்.

திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று.

அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம்.

சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்யமில்லை.

ஆனால், இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.


ஆசிரியர்: கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி, நூல்: “சமணமும் தமிழும்’’
பக்கம் 79, 80

அறிவுக்குப் பொருத்தமற்ற கதை
வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர். அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடியிருந்த மக்களுக்கு-இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார்.

நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத்திலேயே உறங்கி-விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே வீடு பேறு அடைந்தார். பொழுது விடிந்தது. எல்லோரும் விழித்து எழுந்தனர்.

மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன் கூடி யோசித்தான்.

மகாவீரரை மக்கள் ஆண்டுதோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடு பெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான்.

(தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை, தீபாவலி = விளக்கு வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால், தீபாவளி விடியற்காலையில் மக்களால் கொண்டாடப்-படுகிறது.

இந்த உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்த-மற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட்டது என்பது அறிஞர் கருத்து.

சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத்தில் சமணர்கள் சைவ வைணவங்-களைத் தழுவினர். அந்நிலையிலும் தீபாவளியைக் கொண்டாடினர்.

அப்பழக்கம் பிற சமயத்தாரிடையேயும் நாளடைவில் புகுந்து விட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் முதலியோர் இன்றும் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும்.

ஆசிரியர்: டாக்டர் மா.இராசமாணிக்கனார், நூல்: “தமிழர் நாகரிகமும், பண்பாடும்’’, பக்கம்: 33, 34

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி!

வடநாட்டில் அக்காலத்திலிருந்த தமிழ் மேன்மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர்.

அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று.

தீபாவளி உண்மையும் புரட்டும்

கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படு வதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்டதொன்றாகும்.

பார்ப்பனர் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர்.

தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும்.

தீபாவளி என்பது தீப+ஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்.. ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.
ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள், நூல்: “தமிழர் மதம்’’, பக்கம்: 200-201

தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!


தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது.

அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர்.

ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர். ஆதலின் அசரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.
ஆசிரியர்: கா.சுப்பிரமணியன் (பிள்ளை),
நூல்: “தமிழ் சமயம்’’, பக்கம் : 62

தீபாவளி விஷ்ணுவுக்குரியது அல்ல!

நரகாசுரன் என்பவனைக் கொன்ற நாள்-தான் தீபாவளி என்கிறார்கள். அறிவுக்குப் பொருத்தமில்லாத பல கதைகளைக் கூறி தீபாவளி கொண்டாடுகிறார்கள். அவற்றை-யெல்லாம் மறைந்த திருமுருக கிருபானந்த வாரியார் மறுக்கிறார்.

தீபாவளி சிவனுக்குரிய திருநாள் என்கிறார். இதன்மூலம் கிருஷ்ணனுக்கு உரியது (வைணவர்-களுக்கு உரியது) என்பது மறுக்கப்படுகிறது.
தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக யாண்டுங் கொண்டாடு-கின்றார்கள்.

ஆனால் அதன் உண்மை யறிந்தவர்கள் ஒரு சிலரே யாவார்கள். அதனைச் சிறிது இங்கு விளக்குவோம்.


பெரும்பாலோர், நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனை யழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.


நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு, ஒரு கொண்டாட்டம் நிகழ்வது, யாண்டும் எக்காலத்தும் இருந்ததில்லை.

அப்படி யிருக்குமாயின், இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனைப் _ பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே, அந்தகாசுரன்,

சலந்தராசுரன், இரண்யாட்சன், திருவணாவர்த்தன், இப்படி புகழ் படைத்த அரக்கர்கள் ஒவ்வொருவரையுங் கொன்ற நாட்களையெல்லாம் கொண்டாடு வதாயின், ஆயுளே அதற்குச் சரியாகிவிடும்.

ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்காக தீபாவளி ஏற்பட்டதன்று.
தீபம் _ விளக்கு; ஆவலி _ வரிசை.
தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெரு-மானை வழிபடுவதற்கு உரிய நாள். தீபாவளி எனவுணர்க.

தீபமங்கள ஜோதியாக விளங்கும் பெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்கு-கின்றார்களன்றோ?


“விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்’’
என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.
(நூல்: வாரியார் விரிவுரை விருந்து)

அகராதிக் குறிப்பில் நரகாசுரன் கதை
இரண்யாட்சதன்: இவன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள், இருடிகள் முதலியோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணுமூர்த்தி சுவேதவராக (பன்றி)வுருக் கொண்டு கொம்பினால் இவன் மார்பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார்.

(இந்தக் கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மதவாதத்தை வற்புறுத்துகிறது) (169)
நரகாசுரன்: வராக (பன்றி) உருக்கொண்ட விஷ்ணுவிற்கும், பூமி தேவிக்கும் பிறந்த அசுரன் (934)


சுரர்: பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர் (705)
அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந்தும் ஆரியப் பார்ப்பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள்) (24)
– நூல்: அபிதான சிந்தாமணி, ஆசிரியர்: சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்


மிகவும் புகழ்பெற்ற தமிழ் அகராதியான ‘அபிதான சிந்தாமணி’ கூறியுள்ள மேற்கண்ட கதை ஆரியர்களால் புனையப்பட்டது.


தீபாவலி என்பதே தீபாவளி ஆனது. தீபம் +ஆவலி = தீபாவலி. தீப வரிசை என்பது அதன் பொருள். அது சமணப் பண்டிகைக்கே பொருந்தும். நரகாசுரன் கதைக்குப் பொருந்தாது.

இந்த மண்ணின் மைந்தன் நரகாசுரன். எனவே, பூமியை பாதுகாத்தவன். ஆரியர் கைப்பற்றாமல் நம் மண்ணை பாதுகாத்தவன் என்பதால் அவனை ஆரியர்கள் வெறுத்தனர்.

அந்த வெறுப்பின் வெளிப்பாடே மேற்கண்ட புராணம்.
சமணப் பண்டிகையை, விஷ்ணு பண்டிகையாக மாற்றி, இந்துப் பண்டிகை என்று கொண்டாடுவது மோசடியாகும்.


வாரியார் வைஷ்ணவ பண்டிகை என்பதை மறுக்கிறார். மற்ற அறிஞர்கள் தீபாவளி சமணப் பண்டிகை என்று உறுதி செய்துள்ளனர்.


எனவே, ஆரியப் புரட்டான இத் தீபாவளிப் பண்டிகையை நாம் புறக்கணிப்போம்.

நம்மை இழிவுபடுத்தும் பண்டிகையை நாம் கொண்டாடக் கூடாது என்று முடிவு எடுப்போம்! அதுவே அறிவுக்கும், மானத்திற்கும் உகந்த செயல் ஆகும்.

மஞ்சை வசந்தன்

ஒலியை விட 20 மடங்கு வேகம் - வடகொரியா ஏவுகணை சுட்டுவீழ்த்த முடியாது
Posted in உலக செய்திகள்

ஒலியை விட 20 மடங்கு வேகம் – வடகொரியா ஏவுகணை சுட்டுவீழ்த்த முடியாது

ஒலியை விட 20 மடங்கு வேகம் – வடகொரியா ஏவுகணை சுட்டுவீழ்த்த முடியாது

வடகொரியா சோதனை நடத்திய ஏவுகணைகளில், ஒலியை விட இருபது மடங்கு வேகமாக பயணிக்கும் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது .

இந்த ஏவுகணைகளை அமெரிக்காவினால் கூட சுட்டு வீழ்த்த முடியாது என்கிறது வடகொரியா .

அது மட்டுமா அமெரிக்கா வெள்ளை மாளிகையை இலக்குவைத்து தாக்கும் ஏவுகணைகளையும் தயாரித்து ,சோதனை விட்டுள்ளது என்கிறது வடகொரியா .

ஒரே நாளில் 23 ஏவுகணைகளை கடல் ,நிலத்தடி சுரங்கம் ,ரயில் ,நீர்மூழ்கி கப்பல்,விமானம் என பல்வேறு பட்ட நிலைகளில் இருந்து சோதனைகளை நடத்தியுள்ளது .

இந்த ஏவுகணை சோதனை வடகொரியாவின் எதிரிகளை மிரள வைத்துள்ளது .

முடிந்தால் வந்து மோதி பார் என்கிறது வடகொரியா ,வாலாட்டிய அமெரிக்கா இப்பொழுது வாலை சுருட்டி கொண்டது எனலாம் .

வடகொரியாவா கொக்கா .இப்படி ஒரு தலைவர் இந்த உலகத்திற்கு அவசியம் தான் போலும் .

உக்கிரேனுக்கு ஏவுகணைகள் - சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத வியாபாரம்
Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு ஏவுகணைகள் – சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத வியாபாரம்

உக்கிரேனுக்கு ஏவுகணைகள் – சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத வியாபாரம்

அமெரிக்கா உக்கிரேனுக்கு 400 மில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கு Avenger air defence systems ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத தொகுதிகளை அவசரமாக வழங்குகிறது .

இந்த ஆயுதங்கள் ,உக்கிரேன் இராணுவத்தால் மீள விடுவிக்க பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பதற்கு என்கிறது அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகோன் .

உக்கிரேன் நாட்டு மக்களையும் ,அதன் இராணுவத்தையும் ,இறைமையையும் பாதுகாக்கும் நோக்குடன் ,இந்த ஆயுத வழங்குதல் இடம்பெறுகிறது என்கிறது அமெரிக்கா.

உக்கிரேனுக்கு ஏவுகணைகள் – சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத வியாபாரம்

உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் ஆரம்பித்த நாள் முதல் ,இதுவரை அமெரிக் பல பில்லியன் டொலர்களுக்கு உக்கிரேனுக்கு ஆயுதங்களை விற்றுள்ளது .

உதவி என்கின்ற போர்வையில் தமது ஆயுத வியாபாரத்தை, மிக கச்சிதமாக அமெரிக்கா நடத்திய வண்ணம் உள்ளதை, இதன் மூலம் மீண்டும் ஒருமுறை காண முடிகிறது .

ஆடு நனைகிறது என ஓணானான் அழுத கதையாக அமெரிக்கா ஆயுத விற்பனை உள்ளது பாருங்க .

லேசர் ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

லேசர் ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தல்

லேசர் ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தல்

பிரிட்டன் இராணுவத்தின் கடற்படையினர் ,வானில் பறந்து கொண்டிருந்த உளவு விமானம் ஒன்றை ,லேசர் ஏவுகணைகளை பயன் படுத்தி சுட்டு வீழ்த்தியுள்ளனர் .

இரண்டு மைல் தொலைவில் பறந்து கொண்டிருந்த உளவு விமானத்தையே துல்லியமாக தமது லேசர் ஆயுதங்கள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது என்கிறது ,பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு .

லேசர் ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தல்

சத்தம் இல்லாது தாக்குதலை மேற்கொள்ளும் லேசர் ஆயுத பாவனைகள் ,புதிய சந்ததியின் ஆயுத பாவனை என்கிறது ,ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் .

உக்கிரேன் களமுனையில் ,தமது போராயுதங்களை சோதனை செய்து வரும் ,பிரிட்டன் தற்போது தமது ஆயுத தளபாடங்களில் புதிய மேம்படுத்தலை செய்திட வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .

அவ்வாறன லேசர் ஆயுதமும் மூலம் ,உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது, என்ற செய்தி ஊடக ரசியாவை எச்சரிக்கிறது பிரிட்டன் எனலாம் .

அதன் ஒரு வளர் நிலையாகவே இந்த லேசர் ஆயுதங்கள் உள்ளன .இவ்வாறான லேசர் ஆயுதங்கள் ரசியவிடமும் உள்ளது என்பது இங்கே குறிப்பிட தக்கது .

97 தீவிரவாதிகள் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

97 தீவிரவாதிகள் சுட்டு கொலை

97 தீவிரவாதிகள் சுட்டு கொலை

சோமாலியா அரச இராணுவத்தினரால் தமது தேச விடுதலைக்கு போராடி வரும் தீவிரவாதிகள் என அழைக்க படும் அல் சபா போராளி குழுவை சேர்ந்த 97 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

இராணுவத்தினர் மேற்கொண்ட தேடி அழிப்பு தாக்குதல் நடவடிக்கையின் பொழுது ,மூன்று நகர் பகுதிகளில் இவர்கள் சுட்டு கொலை செய்யப் பட்டுளனர் என்கிறது சோமாலியா இராணுவம் .

அப்பாவி மக்களை கொன்று குவித்து, அவர்களையும் தீவிரவாத பட்டியலில் இணைத்து அறிக்கை விடுத்தது வருகிறது ,சோமாலிய அரச இராணுவம் என்பது ,இங்கே குறிப்பிட தக்கது .

எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க
Posted in சமையல் cook

எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க

எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க

கடையில் மீன் வாங்கினால் இந்த முறையில் செய்து பாருங்க ,சுவையோ வேற லேவலாக இருக்கும் .

சமைப்பது முக்கியமல்ல ,அதனை சுவையாக சமைப்பதில் தான் அதன் வெற்றி உள்ளது .

வாய்க்கு சுவையாக ருசித்து சாப்பிட இது போல பண்ணுங்க மக்களே .

வாங்க இப்ப மீன் குழம்பு செய்முறைக்குள் போகலாம் .

மீன் குழம்பு செய்வது எப்படி ..?
சுவையானமீன் குழம்பு செய்திட தேவையான பொருட்கள்
.

புளி எடுத்து பாத்திரத்தில் ஊற வைத்திடுங்க .


இப்போ கடாய் சூடாக்கி அதில எண்ணெய் விட்டு ,ஒரு கப் அளவு பொடியாக வெட்டிய வெங்காயம் போட்டு வதக்கி வாங்க .கூடவே பூண்டு ,கருவேப்பிலை ,சீரகம் ,மிளகு ,நன்றாக வதக்கி வாங்க .

எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க

இவை ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க .

அதன் பின்னர் அதே கடாயில் மூன்று கரண்டி நல்லெண்ணெய் , ஒரு கரண்டி கடுகு வெந்தயம் ,கருவேப்பிலை ,பொடியாக வெட்டிய வெங்காயம் ,இரண்டு பச்சை மிளகாய் ,பொடியாக வெட்டியா தக்காளி ,சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

அதன் பின்னர் மசலா சேர்க்கணும் .இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,கரம் மசலா ,மல்லி தூள் ,மஞ்சள் தூள் ,போட்டு நன்றாக வதக்கி வாங்க .

மசாலா பச்சை வாசம் போன பின்னர் அரைத்து வைத்த விழுதுகளை சேர்த்து நன்றாக கலக்கிடுங்க .

அதன் பின்னர் தேவையான அளவு தண்ணீ,புளி தண்ணியை விட்டு கலக்கி விடுங்க .

இவை நன்றாக சூடானதும் ,மீனை போட்டு மூடி போட்டு மூடி வேக வைத்திடுங்க .திக்கா வேணுமா என்றால் அதற்கு ஏற்ப வேக வைத்திடுங்க .

இப்போ சுவையான மீன் குழம்பு ரெடியாடிச்சு .இது போலவே நாளும் செய்து சாப்பிடுங்க மக்களே .

Home made KFC Chicken வீட்டிலேயே ஈசியா செய்ங்க
Posted in சமையல் cook

Home made KFC Chicken வீட்டிலேயே ஈசியா செய்ங்க

Home made KFC Chicken வீட்டிலேயே ஈசியா செய்ங்க

மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் Home made KFC Chicken வீட்டில் ஈசியாக செய்வது என்பது பற்றி கவலை வேண்டாம் .

வாங்க இப்பொழுதே நாங்கள் நம்ம வீட்டில் Home made KFC Chicken செய்து அசத்தலாம் வாங்க .

Home made KFC Chicken செய்முறை ஒன்று

தேவையான அளவு சிக்கின் எடுத்து ,அது கூட மோர் சேர்த்து உப்பு சேர்த்து நனறாக மிக்ஸ் பண்ணி விடுங்க .
ஐந்து மணிநேரமா இவ்வாறு ஊறிய பின்னர் அதனை எடுத்து பாவிக்கலாம் .

இப்போ ஒரு பாத்திரத்தில் இரண்டு கரண்டி இஞ்சி பூண்டு தூள் ,இரண்டு கரண்டி மிக்ஸ் பேபி ,இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,ஒரு கரண்டி மிளகு தூள் ,
இரண்டு கரண்டி வெனிகர் ,ஒரு கரண்டி சோயா சோஸ் ,தக்காளி சோஸ் ,சில்லி சோஸ் ,உப்பு பொறு நன்றாக மிக்ஸ் பண்ணி விடுங்க .

Home made KFC Chicken வீட்டிலேயே ஈசியா செய்ங்க

இது கூட மோரில் ஊற வைத்த சிக்கனை எடுத்து போட்டு நன்றாக மிக்ஸ் பண்ணி விடுங்க . மாசலா சிக்கனில் நன்றாக கலக்கி, மூன்று மணி நேரம் ஊற வைங்க .

இப்போ மைதா மா மற்றும் பால் பவுடர் ,மிளகாய் தூள் ,உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி விடுங்க .


இப்போ ஊறவைத்த சிக்கனை எடுத்து, இந்த மாவிலை போட்டு எடுங்க .


இப்போ மாவை அரித்து எடுத்து விடுங்க .மீளவும் இதை பாவிக்க போறம் ,கட்டிகள் அகன்ற பின்னர் இரண்டாவது தடவை பாவிக்கணும் .

அதன் பின்னர் தண்ணியில போட்டு, மீளவும் மாவிலை போட்டு எடுத்து ,அதன் பின்னர் அடுப்பில கடாய வைத்து எண்ணையில் போட்டு பொரித்து எடுங்க .

நன்றாக மொறு மொறு சிக்கன் நமக்கு கிடைக்கும் .

Home made KFC Chicken இப்போ ரெடியாடிச்சு .இதை இப்பொழுது சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை நனறாக விரும்பி சாப்பிடுவாங்க .
அம்புட்டு தாங்க Home made KFC Chicken வீட்டில ரெடியாகிடிச்சு . .