முகக் கவசம்‌ அணியுமாறு அறிவுறுத்தல்
Posted in இலங்கை செய்திகள்

முகக் கவசம்‌ அணியுமாறு அறிவுறுத்தல்

முகக் கவசம்‌ அணியுமாறு அறிவுறுத்தல்

வெசாக் வாரத்தில் மக்களுடன் அதிகமாக வெளியே நடமாடுவதால் முகக் கவசம் அணிவது சிறந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மீண்டும் கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மக்களை மிகவும் கவனமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முகக் கவசம் அணிவது ஒரு கட்டாய சட்டம் அல்ல, ஆனால் ஒரு கோரிக்கை என அவர் கூறியுள்ளார். சுகாதாரப் பழக்க வழக்கங்களை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளாார்

இஸ்ரேலில் வெடித்த குண்டு அதிர்ச்சியில் இராணுவம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலில் வெடித்த குண்டு அதிர்ச்சியில் இராணுவம்

இஸ்ரேலில் வெடித்த குண்டு அதிர்ச்சியில் இராணுவம்

இஸ்ரேலில் வெடித்த குண்டு அதிர்ச்சியில் இராணுவம் ,
எப்படி இந்த குண்டு வெடித்தது தெரியுமா .

இஸ்ரேலில் வெடித்த குண்டுஅதிர்ச்சியில் இராணுவம்

முல்லைத்தீவில் புத்தரை சேதப்படுத்தியவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் புத்தரை சேதப்படுத்தியவர் கைது

முல்லைத்தீவில் புத்தரை சேதப்படுத்தியவர் கைது

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம்பகுதியில் அமைந்துள்ள பௌத்த சிலை ஒன்றினை சேதப்படுத்திய சந்தேகத்தில் ஒருவரை கொக்கிளாய் பொலிஸார் இன்று (01) கைதுசெய்துள்ளனர்.

கொக்குளாய் மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள முகத்துவாரம் பகுதியில் பெரும்பான்மை மக்களால் வணங்கப்பட்டு வந்த புத்தர் கோவில்

ஒன்றில் இருந்த புத்தர் சிலை ஒன்று உடைக்கப்பட்டுள்ளதாக கொக்குளாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

முல்லைத்தீவில் புத்தரை சேதப்படுத்தியவர் கைது

1.5அடி உயரம் கொண்ட புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு உடப்பு பகுதியினை சேர்ந்த 33 அகவையுடைய ஒருவர் கொக்குளாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் மீன்பிடி தொழிலுக்காக கொக்குளாய் முகத்துவாரம் பகுதியில் வந்திருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது மேலதிக விசாரணையினை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

செல் எரிபொருள் நிறுவனம் 115 வருடத்தின் பின்னர் அள்ளிய இலாபம்
Posted in இலங்கை செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை திருத்தத்திற்கு அமைவாக பெற்றோல் லீற்றரின் புதிய விலை 333 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை திருத்தத்துக்கு அமைய 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 365 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

மேலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 310 ரூபாவாகும்.

அதேபோல், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 135 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

அதன்படி, 465 ரூபாவாக இருந்த சூப்பர் டீசலின் புதிய விலை 330 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

எனினும், மண்ணெண்ணெய் விலையில் மாற்றங்கள் எதுவும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது .

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் பிரதான வீதியில் இயங்கி வரும் வாகன திருத்தகம் ஒன்றில் வாகனத்தில் மின் பாய்ச்சி ஒட்டும் போது குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் ஆத்திசூடி வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா சுஜிதரன் (வயது 40) என்பவரை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லியவத்தை பாலத்திற்கு அருகில் உள்ள ஹெமில்டன் கால்வாயில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (30) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், உயிரிழந்தவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், 5 அடி 2 அங்குல உயரம் கொண்டவர் எனவும், பழுப்பு நிற சாரம் மற்றும் வெள்ளை நிற கை நீண்ட சட்டை அணிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் இளைஞன் கைது

6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் இளைஞன் கைது

வவுனியாவில் 6 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகின்றார். தந்தை இல்லை. வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் மாதாந்த கொடுப்பனவின் அடிப்படையில் குறித்த சிறுமி தங்கி இருந்துள்ளார்.

குறித்த சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இருந்து அசாதாரண இரத்தப்போக்கை அவதானித்த வைத்தியர்கள் பூவரசன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீடடில் தங்கியிருந்த இளைஞரை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இன்று சர்வதேச தொழிலாளர் தினம் கொழும்பில் பலத்த பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

இன்று சர்வதேச தொழிலாளர் தினம் கொழும்பில் பலத்த பாதுகாப்பு

இன்று சர்வதேச தொழிலாளர் தினம் கொழும்பில் பலத்த பாதுகாப்பு

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது.

1886ஆம் ஆண்டு மே 1ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் திரண்டு 8 மணி நேர பணி மாறுதல் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல நாட்கள் நீடித்த போராட்டங்களுக்கு பொலிஸ் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது ஏராளமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர்.

1889 ஆம் ஆண்டு, தொழிலாளர் போராட்டம் தொடங்கிய மே முதல் நாள், சர்வதேச தொழிலாளர் அமைப்பால் உலக தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் மே மாதம் முதல் நாள் சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதுடன், தொழிலாளர் தினத்தை கொண்டாடும் வகையில் மே தின கூட்டங்கள், பேரணிகள் மற்றும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

இன்று சர்வதேச தொழிலாளர் தினம் கொழும்பில் பலத்த பாதுகாப்பு

இதேவேளை, இன்று (01) இலங்கையில் நடைபெறவுள்ள அரசியல் கூட்டங்களுக்கு சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர் இதனை தெரிவித்தார்.

கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த பிரதேசங்களில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெறும் மே தினப் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக 3,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வெடித்த கண்ணிவெடி துருக்கிய இராணுவம் பலி
Posted in உலக செய்திகள்

வெடித்த கண்ணிவெடி துருக்கிய இராணுவம் பலி

வெடித்த கண்ணிவெடி துருக்கிய இராணுவம் பலி

வடக்கு சிரியா நகரமான டெல் அபியாடில் உள்ள சோதனைச் சாவடியில்
கண்ணிவெடி வெடித்ததில் இரண்டு துருக்கிய வீரர்கள் கொல்லப்பட்டனர்
மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் துருக்கிய இராணுவம் மற்றும் அதனுடன் இணைந்த
ஆயுதக் குழுக்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .

சிரியாவின் எல்லையில் சிரியா அரச படைகளுக்கு
எதிராக துருக்கிய இராணுவம் போரிட்ட வண்ணம் உள்ளமை
குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் ஜெர்மன்
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் ஜெர்மன்

உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் ஜெர்மன்

ஜேர்மன் அரசாங்கம் உக்ரைனின் ஆயுதப் படைகளுக்கு
கூடுதல் இராணுவ உதவியை வழங்கியுள்ளது,
இதில் இரண்டாவது IRIS-T வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு களையும்
அள்ளி வழங்குகிறது .

ஏப்ரல் 19 அன்று, உக்ரைனின் ஜெர்மனியிடமிருந்து இரண்டாவது
IRIS-T வான் பாதுகாப்பு அமைப்பை உக்ரைன் பெற்றதாக பாதுகாப்பு
அமைச்சர் தெரிவித்தார் .

ஜெர்மன் வழங்கிய விமான எதிர்ப்பு ஏவுகணைகள் 20 கிலோமீட்டர் உயரம் மற்றும் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை.


அவ்வாறான ஏவுகணைகளை ஜெர்மன் உக்ரைனுக்கு வழங்கிய நிலையில்
ரஷ்ய கொதிப்பில் உறைந்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist
உக்ரைன் முக்கிய நகருக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்ரைன் முக்கிய நகருக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம்

உக்ரைன் முக்கிய நகருக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம்

உக்ரைன் முக்கிய நகருக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம் ,
தொடரும் கடும் யுத்தம் ,
உக்ரைன் முக்கிய நகருக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம் .


உன்னால் துடிக்கும் இதயம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் துடிக்கும் இதயம்

உன்னால் துடிக்கும் இதயம்

எழுதாத காகிதத்தில்
எழுதி வைத்த நினைவுகளை
எடுத்து படிக்கையில
ஏங்கி மனம் துடிக்குதே

புதைத்து வைத்த ஆசைகளை
புரட்டி எடுத்து பார்க்கையில
கண்ணீர் மட்டும் பரிசாச்சே
கல்லாகி மனம் போச்சே

தோகை மயில் ஆடையில-உன்
தொங்கும் கூந்தல் தெரியுமடி
பாடி குயில் போகையில – உன்
பாட்டு ஒலிக்குமடி

எனெக்கெனவே நீ ஆக்கி
எடுத்து வந்த உணவுகளோ
இன்று நினைத்தாலும் ருசிக்குதடி
இன்றும் மனம் தேடுதடி

கை பேசி இல்லா காலத்தில – உன்
கை வரைந்த கடிதங்களை
தூசி தட்டி படித்தே
தூரிகையால் வரைகிறேன்

தொலையாமல் நெஞ்சுக்குள்
தொல்லை தருகிறாய்
தொடர்பு இன்றி பிரிந்தாலும் – தினமுனை
தொட்டு தொட்டே பேசுகிறேன் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-04-2023

பஞ்சாபில் எரிவாயு கசிந்ததில் 9 பேர் பலி
Posted in உலக செய்திகள்

பஞ்சாபில் எரிவாயு கசிந்ததில் 9 பேர் பலி

பஞ்சாபில் எரிவாயு கசிந்ததில் 9 பேர் பலி

வட இந்திய மாநிலமான பஞ்சாபில் உள்ள ,
லூதியானாவில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் இறந்தனர்
மற்றும் 11 பேர் காயமடைந்தனர் .

ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் பாதிக்க பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

பாதிக்க பட்ட பகுதியில் ,
தேசிய பேரிடர் மீட்புப் படையின் மீட்பு பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

இந்த வெடிப்புக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

Error: View 9293b2au4w may not exist
ஈரான் தளபதி கொலை விமானங்கள் சேதம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் தளபதி கொலை விமானங்கள் சேதம்

ஈரான் தளபதி கொலை விமானங்கள் சேதம்

ஈரான் உளவுத்துறை தளபதி படு கொலை,
விமானங்கள் சேதம் ,தொடரும் போர் பதட்டம் ,

ஈரான் தளபதி கொலை விமானங்கள் சேதம்


பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 11 வயது பிக்கு
Posted in இலங்கை செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 11 வயது பிக்கு

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 11 வயது பிக்கு

11 வயதுடைய பிக்கு ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் விகாரையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயாகல கொகரதெனிய விகாரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிக்குவின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 11 வயது பிக்கு

2021ஆம் ஆண்டு முதல் குறித்த பிக்கு, விகாராதிபதி தேரர் மற்றும் இரண்டு தேரர்களால் அவர்களது அறைகளில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த பிக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பயாகல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் உபாந்த டி சில்வா தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மனைவியை ஐந்து துண்டாக வெட்டி எறிந்த கணவன் | உலக செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

பெண் ஒருவர் படுகொலை

பெண் ஒருவர் படுகொலை

மிஹிந்தலை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கொலையாளி பெண்ணை வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரமடலாவ பகுதியில் நேற்று (29) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் தனது தாயாருடன் வீட்டில் தங்கியிருந்ததாகவும், தாய் அருகில் உள்ள வீட்டிற்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில், அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டிற்கு வந்து, குறித்த பெண்ணை வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

51 வயதான தொரமடலாவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த 47 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை தாமரை கோபுரத்தில் இடம்பெற்ற ஸ்கை டைவிங்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை தாமரை கோபுரத்தில் இடம்பெற்ற ஸ்கை டைவிங்

இலங்கை தாமரை கோபுரத்தில் இடம்பெற்ற ஸ்கை டைவிங்

உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான ஸ்கை டைவிங் (Sky diving) இலங்கையில் அண்மையில் இடம்பெற்றிருந்தது..

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தில் இந்த சாகச விளையாட்டு நடாத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுலாத்துறையை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்தும் வகையில், உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான ஸ்கை டைவிங் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை தாமரை கோபுரத்தில் இடம்பெற்ற ஸ்கை டைவிங்

அதன்படி, இரண்டு ஸ்கை டைவிங் சாம்பியன்கள் அண்மையில் இலங்கை வந்திருந்தனர்.

கண்காட்சி நிகழ்வாக முதல் முறையாக தாமரை கோபுரத்தில் இருந்து கீழே குதித்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர்.

இந்த செயற்திட்டம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் எனவும் அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களின் இலங்கை மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் எனவும் கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூடானில் இருந்து 14 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
Posted in இலங்கை செய்திகள்

சூடானில் இருந்து 14 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

சூடானில் இருந்து 14 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

சூடானில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, அங்கு தங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட 14 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த குழுவினர் நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, ​​அவர்களை வரவேற்க வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சின் ஒருங்கிணைப்பில், சவுதி அரசாங்கத்தின் ஆதரவுடன், குறித்த தரப்பினர் மீட்கப்பட்டுள்ளனர்.

சூடானில் இருந்து 14 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

சூடான் இராணுவத்தினருக்கும் அந்நாட்டு துணை இராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தீவிரமான சூழ்நிலையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சூடானில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களின் இரண்டாவது குழு சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட இரண்டாவது குழுவில் 6 இலங்கையர்களும் உள்ளடங்குவதாக சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

சூடான் துணை இராணுவத்திற்கும் மற்றும் சூடான் இராணுவத்துக்கும் இடையே மோதல் கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெற்று வருகின்றது.

பல சந்தர்ப்பங்களில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், நாட்டின் தலைநகர் கார்டூம் உட்பட பல நகரங்களில் மோதல்கள் தொடர்கின்றன.

வன்முறை மோதல்களில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 4000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ரஷ்ய உக்ரைன் கடும் மோதல்
Posted in உலக செய்திகள்

ரஷ்ய உக்ரைன் கடும் மோதல்

ரஷ்ய உக்ரைன் கடும் மோதல்

ரஷ்ய இராணுவம் உக்ரைனும் கிழக்கு கேர்சன் பக்மூட்
உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து கடுமையன
ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதலை நடத்தியது .

ரஸ்யாவின் தாக்குதலில்
கேர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பல எரிந்த வண்ணம் உள்ளன
,கட்டடங்கள் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் என்பன அழிக்க பட்டுள்ளன .
டசின் கணக்கான மக்கள் பலியாகியும் காயமடைந்து உள்ளனர் .

ரஷ்ய உக்ரைன் கடும் மோதல்

தொடர்ந்து மூர்க்கதானமான பழி வாங்கும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .


பக்மூட் வீதியை கைப்பற்றும் நோக்கில் படையெடுப்பை நடத்தி ரஷ்ய அதனை கைப்பற்றுவதற்கு அதிக
தொலைவில் உள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன .

தொடர்ந்து சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வெடித்த பாரிய குண்டு எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

வெடித்த பாரிய குண்டு எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்

வெடித்த பாரிய குண்டு எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்

வெடித்த பாரிய குண்டு எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம் ,
இஸ்ரேல் தலைநகர் அருகில் நடந்த பயங்கரம் ,அதிர்ச்சியில் இஸ்ரேல் இராணுவம் ,

வெடித்த பாரிய குண்டு எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்