Author: நிருபர் காவலன்
வயல் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு
வயல் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு
வயல் ஒன்றில் விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (02) உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரஜனபத பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பின்னால் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வல்ஹிங்குருகெட்டிய உரகஸ்மன்ஹ பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் வீழ்ந்த இடத்திற்கு அருகாமையில் சட்டவிரோத மின் வேலி ஒன்றும் காணப்படுவதாகவும், மின் வேலியில் மோதி குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Featured
வசந்த கரன்னாகொட எழுதிய காட்டமான கடிதம்
வசந்த கரன்னாகொட எழுதிய காட்டமான கடிதம்
தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட , இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 27ம் திகதி வடமேற்கு மாகாண ஆளுநரும், கடற்படையின் முன்னாள் தளபதியுமான அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி அசோகா கரன்னாகொட ஆகியோர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
வசந்த கரன்னாகொட எழுதிய காட்டமான கடிதம்
அவர் கடற்படைத் தளபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமது நாட்டிற்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கு, குறித்த தடை தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
உரிய நடவடிக்கையின் மூலம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சட்டரீதியான சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் தமக்கு அறிவிக்கவில்லை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
3 நாட்கள் நிர்வாணமாக நின்ற பெண்
3 நாட்கள் நிர்வாணமாக நின்ற பெண்
கம்பளை – அம்புலுவா சரணாலயத்தில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறிக் கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக பொலிஸார் இன்று கண்டுபிடித்துள்ளனர்.
சுமார் மூன்று நாட்களாக வனப்பகுதியில் அவ்வப்போது பெண் ஒருவர் அலறல் சத்தம் கேட்டதாக தெரிவித்த உள்ளூர்வாசிகள் குழு, குறித்த வனப்பகுதிக்குள் சென்று ஆராய்ந்தனர்.
அப்போது ஒரு பெண் உடலில் ஆடை இல்லாமல் இருப்பதைக் கண்ட பிரதேசவாசிகள் கம்பளை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்
கம்பளை தலைமையக பொலிஸாரின் பெண் உத்தியோகத்தர்கள்
குழுவொன்று வந்து அந்த பெண்ணுக்கு ஆடை அணிவித்து அதிகாரிகளின் காவலில் எடுத்துச் சென்றுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட பெண் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Featured
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு
3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கேகாலை, பதுளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் கேகாலை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், மாத்தறை மாவட்டத்தில் கொடபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று (03) மாலை 4 மணி வரை இந்த அபாய அறிவிப்பு செல்லுபடியாகும்
Featured
அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு
அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு
அமெரிக்கா மெஸ்ஸிக்கோ எல்லையில் திடீரென மேலதிகமாக 1500 இராணுவத்தினர்குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டு கண்காணிப்பு தீவிரமாக்க பட்டுள்ளது .
மே 11 ஆம் தேதி அகதிகள் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் ,
அமெரிக்காவுக்குள் குடியேறுபவர்கள் அதிகமாக நுழைய கூடும் என்பதல் ,
அதனை கட்டு படுத்த ,இவ்வாறு இராணுவம் திடீரென குவிக்க பட்டுள்ளது .
ஆளும் பைடன் நிர்வாகத்தினால் ,அகதிகள் நுழைந்திட அனுமதி வழங்க பட்டுள்ள நிலையில் ,
பல்லாயிரம் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர் .
இதனால் அமெரிக்கா பூர்வீக குடிகள்
ஆளும் அரசு மீது கொந்தளிப்பில் உறைந்துள்ளனர் .
மீளவும் டிரம்ப் ஆட்சியில் அமர்ந்தால் அகதிகள் வரவு தடுக்க பட்டு ,
மீளவும் அகதிகள் ,அவர் தம் நாடுகளுக்கு திருப்பி அனுப்ப படும் நிகழ்வுகள்,
ஆரம்பிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
சோமாலியா இராணுவம் வேட்டை 60 போராளிகள் மரணம்
சோமாலியா இராணுவம் வேட்டை 60 போராளிகள் மரணம்
சோமாலியா அரச இராணுவம் நடத்திய அதிரடி தேடி அழிப்பு தாக்குதலில்
அல் சபா போராளிகள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர் .
மத்திய மாகாணத்தில் சோமாலியா இராணுவம் நடத்திய நடவடிக்கையில்
60 அல்-ஷபாப் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக, அரச இராணுவம் அறிவித்துள்ளது .
சோமாலியாவின் 40 வீதத்திற்க்கு அதிகமான ,
நிலப்பரப்புகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர் .
அவ்வாறான போராளிகளே சோமாலியா அரச இராணுவத்தை ,
நிலை குலைய வைக்கும் தாக்குதல்களை
நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .
ரஷ்ய வான் பாதுகாப்பை ஏமாற்றக்கூடிய DIY ஏவுகணையை உருவாக்கும் உக்ரேன்
ரஷ்ய வான் பாதுகாப்பை ஏமாற்றக்கூடிய DIY ஏவுகணையை உருவாக்கும் உக்ரேன்
உக்கிரேனிய ஆயுத தயாரிப்பு நிபுணர்கள் குழு ஒன்று
மக்கள் ஏவுகணையை வடிவமைத்ததாக கூறுகின்றனர்,
இது அமெரிக்காவினால் வழங்கப்பட்ட ஹிமார்ஸ் ராக்கெட்டை விட,
இருமடங்கு தாக்குதல் சக்தியை கொண்டது என்கின்றனர்
ரஸ்யாவின் வான் பாதுகாப்பை ஏமாற்றி உடைத்தெறிந்து
இலக்கை துல்லியமாக சென்று தாக்கும் திறன் கொண்ட வகையில்
உருவாக்க பட்டுள்ளது என்கின்றனர் .
ஜெர்மன் V1 போன்ற அதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த ஏவுகணை,
உக்ரேனிய மொழியில் ட்ரெம்பிடா என்று பெயரிடப்பட்டுள்ளது .
ரஷ்ய வான் பாதுகாப்பை ஏமாற்றக்கூடிய DIY ஏவுகணையை உருவாக்கும் உக்ரேன்
இந்த வடிவமைப்பின் பின்னணியில்,
ரஷ்ய எதிர்ப்பு Vidsich எதிர்ப்புக் குழு உள்ளது என தெரிவிக்க படுகிறது .
இது அன்றாடம் கிடைக்கும் பொருட்களிலிருந்து
மலிவாக உற்பத்தி செய்யப்படலாம் என அந்த குழு தெரிவிக்கிறது .
இந்த புதிய ஆயுதம் 140 கிலோ மீட்டர் ,
இலக்கை குறிவைத்து தாக்கும் சக்தி வாய்ந்தது என்கிறது ஆயுத
தயாரிப்பு குழு .
20 கிலோ வேதிப்பொருளை சுமந்து செல்லும் இந்த ஏவுகணை ,ரஸ்யாவுக்கு மிக பெரும்பேரழிவை ஏற்படுத்தும் புதிய தொழில் நுடபத்துடன் கூடியது என்பதால் .
ரஸ்யாவின் முக்கிய இராணுவ இலக்குகளை தாக்கிட இவை பயன் படுத்த படலம் என்பதால் ,உக்ரைன் ரஸ்யாவுக்குள் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது .
எரியும் ஈரான் ஆயுதகிடங்கு இஸ்ரேல் பதில் தாக்குதல்
எரியும் ஈரான் ஆயுதகிடங்கு இஸ்ரேல் பதில் தாக்குதல்
எரியும் ஈரான் ஆயுதகிடங்கு இஸ்ரேல் பழிவாங்க நடத்திய
பதிலடி பதில் தாக்குதல் ,ஈரான் திருப்பி தாக்கலாம்
என்பதால் பதட்டம்
எரியும் ஈரான் ஆயுதகிடங்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் .
70 பயணிகளுடன் பயணித்த பஸ் விபத்து
70 பயணிகளுடன் பயணித்த பஸ் விபத்து
நீர்கொழும்பில் இருந்து ஹங்வெல்ல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று கம்பஹா வத்துருகம எனுமிடத்தில் இன்று (02) காலை விபத்துக்குள்ளானது.
விபத்தும் இடம்பெற்றபோது 70 பயணிகள் பேருந்தில் பயணித்துள்ளனர். காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதிகவேகம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Featured
பற்றி எரிந்த கப்பல் சுற்றி வளைத்த இராணுவம்
பற்றி எரிந்த கப்பல் சுற்றி வளைத்த இராணுவம்
மலேசியா நாட்டின் தெற்கு கடற்கரையில் பயணித்த எண்ணெய் கப்பல் ஒன்று திடீரென தீ பிடித்து கொண்டது .
தீப்பிடித்த எண்ணெய் டேங்கரில் இருந்து ஊழியர்கள் கடலில் குதித்தனர் ,
அருகில் பயணித்த மூன்று கப்பல்கள் 25 பேரை காப்பாற்றியது ,ஆனால் தொடர்ந்து மூன்று பணியாளர்கள் காணாமல் போயுள்ளனர் .
காணாமல் போன மூவரை தேடி இராணுவம் , கடல் படை என்பன
இணைந்து தேடுதலை நடத்தி வருகின்றன .
பற்றி எரிந்த கப்பல் சுற்றி வளைத்த இராணுவம்
கப்பல் தீ பிடித்த பொழுதும் அருகில் பயணித்த கப்பல்களுக்கு,
தீ பரவல் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது .
சீனாவில் இருந்து சிங்கப்பூர் பயணித்த கப்பலில்,
தீ விபத்து ஏற்பட்டபோது, அடர்த்தியான, கரும் புகை சூழ்ந்ததாக ,
மலேசிய கடல் சார் அமுலாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் விமான நிலையம் கடும் சேதம்
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் விமான நிலையம் கடும் சேதம்
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் விமான நிலையம் கடும் சேதம் ,
இரு தரப்பு பபழிவாங்கும் செயல்களினால் போர் பதட்டம் அதிகரிப்பு .
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் விமான நிலையம் கடும் சேதம் .
இஸ்ரேலில் வெடித்த குண்டு
இஸ்ரேலில் வெடித்த குண்டு
வடக்கு இஸ்ரேல் முக்கிய இராணுவ மையம் அருகே பாரிய
குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது .
இந்த காரா குண்டு வெடித்து சிதறியதில்
ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியும் ,பலர் காயமடைந்துள்ளனர் .
பலத்த பாதுகாப்பபு நிறைந்த பகுதியில் இடம்பெற்ற ,
இந்த குண்டு வெடிப்பு சம்பவம்
இஸ்ரேல் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது .
நெதன்யாகு ற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்
அதனை திசை திருப்பிடவும் ,அச்சுறுத்தவும் , இவ்வாறான குண்டு தாக்குதலை
கூலி படைகளை கொண்டு நடத்தியுள்ளதாக சந்தேகிக்க படுகிறது .
இராணுவ மையத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் இடம்பெற்று
சில நாட்களில் இவை இடம்பெற்றுள்ளதே, இந்த சந்தேகம் வலுக்க காரணமாக
அமைய பெற்றுள்ளது .
Featured
ஐ எஸ் தலைவர் தற்கொலை துருக்கி அறிவிப்பு
ஐ எஸ் தலைவர் தற்கொலை துருக்கி அறிவிப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ் உலகளாவிய தலைவருக்கு எதிரான தனது வெற்றிகரமான
நடவடிக்கை குறித்த புதிய விவரங்களை திங்களன்று துருக்கி வெளியிட்டது,
காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக தற்கொலை அங்கியை
மாட்டிக் கொண்டு அவர் வெடித்து சிதறியதாக தெரிவித்துள்ளது ..
ஜனாதிபதி எர்டோகன் [ISIS] தலைவரான சந்தேகத்திற்குரிய,
அபு ஹுசைன் அல்-குராஷியின் குறியீட்டு பெயர் இறந்ததாக அறிவித்தார்.
ஐ எஸ் தலைவர் தற்கொலை துருக்கி அறிவிப்பு
குராஷி பதுங்கியிருப்பதாகக் கூறும் இரண்டு மாடி வீட்டின்
ஒரு பகுதி சுவரை உடைத்து உள்நுழைய முன்யன்றது உயிரோடு பிடி படப்போவதை உணர்ந்த அவர் ,தற்கொலை அங்கியை வெடிக்க வைத்து
தற்கொலை செய்துள்ளதாக துருக்கிய உளவுத்துறை தெரிவித்துள்ளது
ஐ.எஸ்.ஐ.எஸ் அதன் முந்தைய தலைவரான அபு ஹசன் ,
அல்-ஹாஷிமி அல்-குராஷி நவம்பர் 30 அன்று இறந்த
பின்னர் தற்போது இந்த முக்கிய தலைவர் பலியாகியுள்ளார் .
ஐ எஸ் அமைப்பிற்குள் இடம்பெற்றுள்ள மிக பெரும்,
இழப்பாக இவை பார்க்க படுகிறது .
20 000 இராணுவம் பலி
20 000 இராணுவம் பலி
உக்ரைன் முன்னரங்க பக்மூட் பகுதியில் இடம்பெற்று வரும் தாக்குதலில்
மட்டும் ,ரஷ்ய படைகளில் இருபது ஆயிரம் பேர்
பலியாகியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை மையம் தெரிவித்துள்ளது
பக் மூட் பகுதியை மீட்டுவிட ரஷ்ய கடும் போரை தொடுத்த வண்ணம் உள்ளது ,
ஆனால் பலத்த உயிரிழப்புக்கள் மத்தியில் இதுவரை ,
முற்றுமுழுதாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை எனவும் ,
இந்த கொடிய போரில் இங்கு மட்டும் இருபதாயிரம் பேர் இறந்துள்ளனர் ,என்கின்ற புள்ளி விபரத்தை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஆனால் உக்ரைன் தரப்பில் ஏற்பட்ட இழப்பை ,அமெரிக்கா இப்போதும் தெரிவிக்கவில்லை ,அமெரிக்கா மேற்குலகம் என்பன இணைந்து உக்ரைனுக்கு ,ஆதரவாக பரப்புரை புரிவதாக இந்த கூற்று உள்ளதாக ,
விமர்சனங்கள் வீழ்ந்து வெடிக்கின்றன .
விலைமாதுக்கள் கைகலப்பு ஒருவர் காயம் – பொலிஸார் விசாரணை
விலைமாதுக்கள் கைகலப்பு ஒருவர் காயம் – பொலிஸார் விசாரணை
வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் விலைமாதுக்கள் இருவர் கைகலப்பில் ஈடுபட்டமை தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா, பழைய பேரூந்து நிலையத்தில் நடமாடித் திரிகின்ற இரு விலைமாதுக்கள் விடுமுறையில் செல்லும் ஒருவரை யார் அழைப்பது என தமக்கு முரண்பட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் விலைமாது ஒருவர் காயமடைந்த நிலையில், வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் விபச்சாரத் தொழில் ஈடுபடுவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்களும், சமூக அமைப்புக்களும் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Featured
கொழும்பில் துப்பாக்கி சூடு 8 பேர் காயம்
கொழும்பில் துப்பாக்கி சூடு 8 பேர் காயம்
கொழும்பில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு துறைமுகம் ஊடாக செல்கின்ற அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குள் சிலர் அத்துமீறி பிரவேசிக்க முயற்சித்துள்ளனர்.
இதன்போது, குறித்த சந்தேகநபர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Featured
குளவி கொட்டு ஐவர் பாதிப்பு
குளவி கொட்டு ஐவர் பாதிப்பு
பொகவந்தலாவ எல்பட தமிழ் வித்தியாலய கட்டடத்துக்கு அருகில் உள்ள ஆலமரத்தில் கட்டியிருந்த குளவி கூடு இன்று (02) காலை கலைந்து கொட்டியதில் ஐவர் பாதிப்பு. பாதிக்கப்பட்டவர்களில் மூவர் மாணவர்கள்,
ஏனைய இருவரும் காப்பாற்றச் சென்றவர்கள் என அறியமுகின்றது. குளவி கூடுகள் பல கட்டப்பட்டிருக்கும் அந்த ஆலமரத்தை அடியோடு அறுத்து
தள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும். ஆலமரத்தை அறுத்தால் அது சாமி குற்றமாகிவிடும் என பலரும் அஞ்சுகின்றனர்.
Featured
முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்
முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்
வெசாக் வாரத்தில் மக்களுடன் அதிகமாக வெளியே நடமாடுவதால் முகக் கவசம் அணிவது சிறந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மீண்டும் கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மக்களை மிகவும் கவனமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முகக் கவசம் அணிவது ஒரு கட்டாய சட்டம் அல்ல, ஆனால் ஒரு கோரிக்கை என அவர் கூறியுள்ளார். சுகாதாரப் பழக்க வழக்கங்களை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளாார்
இஸ்ரேலில் வெடித்த குண்டு அதிர்ச்சியில் இராணுவம்
முல்லைத்தீவில் புத்தரை சேதப்படுத்தியவர் கைது
முல்லைத்தீவில் புத்தரை சேதப்படுத்தியவர் கைது
முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம்பகுதியில் அமைந்துள்ள பௌத்த சிலை ஒன்றினை சேதப்படுத்திய சந்தேகத்தில் ஒருவரை கொக்கிளாய் பொலிஸார் இன்று (01) கைதுசெய்துள்ளனர்.
கொக்குளாய் மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள முகத்துவாரம் பகுதியில் பெரும்பான்மை மக்களால் வணங்கப்பட்டு வந்த புத்தர் கோவில்
ஒன்றில் இருந்த புத்தர் சிலை ஒன்று உடைக்கப்பட்டுள்ளதாக கொக்குளாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
முல்லைத்தீவில் புத்தரை சேதப்படுத்தியவர் கைது
1.5அடி உயரம் கொண்ட புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு உடப்பு பகுதியினை சேர்ந்த 33 அகவையுடைய ஒருவர் கொக்குளாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் மீன்பிடி தொழிலுக்காக கொக்குளாய் முகத்துவாரம் பகுதியில் வந்திருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது மேலதிக விசாரணையினை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.













































