Author: நிருபர் காவலன்
கடன் மறுசீரமைப்பு நாணய நிதியம் முக்கிய அறிவிப்பு
கடன் மறுசீரமைப்பு நாணய நிதியம் முக்கிய அறிவிப்பு
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தொடரின் போது, ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்கள பணிப்பாளர், கிருஷ்ணா ஶ்ரீநிவாசன் இது தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
இலங்கையில் அதிகரித்திருந்த பணவீக்கம் தற்போது குறைவடைந்துள்ள போதும், நிதிக் கொள்கைகள் ஊடாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கிருஷ்ணா ஶ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
வெசாக் பண்டிகையில் விசேட பாதுகாப்பு
வெசாக் பண்டிகையில் விசேட பாதுகாப்பு
வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வெசாக் போயா தினத்தை முன்னிட்டு பிரதான நகரங்களிலுள்ள வெசாக் வலயங்களுக்கு வருகை தரும் பொது மக்களினது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேலதிக பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதற்கமைய போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், நேரில் சோதனை செய்வதற்கும் மேலதிக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
Featured
ஐரோப்பாவில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு 5 மணித்தியாலத்தில் பயணிக்கும் புதிய விமானம்
ஐரோப்பாவில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு 5 மணித்தியாலத்தில் பயணிக்கும் புதிய விமானம்
ஐரோப்பாவில் இருந்து
அவுஸ்ரேலியாவுக்கு 5 மணித்தியாலத்தில் பயணிக்கும்
, hypersonic, hydrogen-பவர் கொண்ட விமானங்கள் தயாரிக்க பட்டு வருகின்றன ,
ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கும் இந்த விமானதை சேவைக்கு கொண்டு வரும் நகர்வுகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஐரோப்பாவில் இருந்து 90 நிமிடத்தில்
துபாய்க்கு சென்று விடும் என தெரிவிக்க படுகிறது .
இதுவரை பயன்பாட்டில் இல்லாத புதிய வகை விமானமாக இவை காண படுகின்றன
வெள்ளத்தில் சிக்கி 129 பேர் மரணம்
வெள்ளத்தில் சிக்கி 129 பேர் மரணம்
ரூவாண்டாவில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளம் காரணமாக
இதுவரை 129 பேர் பலியாகியுள்ளனர் .
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன ..
தொடர்ந்து வெள்ளம் அடித்து பாய்வதால்
மக்கள் சொத்துக்கள் வீதிகள் என்பன
அழிந்த நிலையில் காணப்படுகின்றன .
மீட்பு பணிகள் மந்த கதியில் தொடர்கின்றன .
உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
பாகிஸ்தானில் 7 ஆசிரியர்கள் சுட்டு கொலை
பாகிஸ்தானில் 7 ஆசிரியர்கள் சுட்டு கொலை
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பள்ளி ஒன்றில்,
வியாழக்கிழமை துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்
ஏழு ஆசிரியர்கள் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள
பராச்சினாரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்த
துப்பாக்கிச் சூடு இடம்பற்றுள்ளது
துப்பாக்கிச் சூடு நடந்தபோது பள்ளியில் மாணவர்கள்
ஆண்டுத் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.
இச்சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும்,
இது தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என போலீசார்
சந்தேகம் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் விமானத்தை வீழ்த்திய ஈரான் ஏவுகணை
இஸ்ரேல் விமானத்தை வீழ்த்திய ஈரான் ஏவுகணை
இஸ்ரேல் விமானத்தை வீழ்த்திய ஈரான் ஏவுகணை,
இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் முறுகல் உச்சம் .
இஸ்ரேல் விமானத்தை வீழ்த்திய ஈரான் ஏவுகணை
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; பல அழகிகள் கைது
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; பல அழகிகள் கைது
ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகரால் நடத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் 6 யுவதிகள் உட்பட 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக குருநாகல் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல் கண்டி வீதியில் கட்டுவான சந்திக்கு அருகில் தங்குமிடம் என்ற போர்வையில் இந்த விபச்சார விடுதி நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது, சிறிய அளவிலான ஐஸ் மற்றும் சிறிய அளவிலான கஞ்சாவை கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; பல அழகிகள் கைது
விபச்சாரத்தில் ஈடுபடும் யுவதிகள் இந்த போதைப்பொருட்களை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதில், கைது செய்யப்பட்ட யுவதிகள் மொனராகலை, அனுராதபுரம், கொழும்பு மற்றும் பத்தரமுல்லை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 19 – 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
குறித்த இடத்தில் அவருடன் தங்கியிருந்த இளைஞர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்
Featured
அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான்
அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான்
அமெரிக்கா கப்பலை ஈரான் கடை படையினர் சிறை பிடிப்பு
,விடுவிக்க கோரி அமெரிக்கா ஈரானுக்கு எச்சரிக்கை .
ரஷ்ய அகோர தாக்குதல் பல டசின் மக்கள் காயம்
ரஷ்ய அகோர தாக்குதல் பல டசின் மக்கள் காயம்
உக்ரைன் கேர்சன் பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்ய நடத்திய ,
அகோர ஏவுகணை மாற்று வான்வழி
தாக்குதலில் 21 மக்கள் உயிரிழந்தனர் மேலும் 48 க்கு மேட்பட்ட மக்கள் விழுப்பும் அடைந்தனர் .
ரயில்வே நிலையம் ,மலிகை கடைகள் ,வீதிகள் ,வீடுகள், என்பனவற்றில் ,
வசித்து மக்கள் , குண்டுகள் வீழ்ந்து
வெடித்ததல் , அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன .
ரஸ்யாவின் எண்ணெய் கிடங்கு ,துறைமுகம் ,விமான நிலையங்கள் மீது,
உக்ரைன் தாக்குதலை நடத்திய நிலையில் ,தற்போது ,
பழிவாங்கும் தாக்குதலாக ,இந்த வெறித்தன தாக்குதலை ரஷ்ய நடத்தியுள்ளது
.ரஷ்ய அகோர தாக்குதல் பல டசின் மக்கள் காயம்
கோடை காலம் ஆரம்பித்துள்ளதால் ,ஆரம்பத்தில் நடத்திய போரை போல,
ரஷ்ய படைகள் ,புது வேக தாக்குதல்களை ,
புதியவகை ஆயுத பயன்பாட்டுடன் ஆரம்பித்துள்ளன .
இதனாலேயே உக்ரைன் இராணுவத்தினருக்கு,
பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .
நான்கு ஆள் இல்லா உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ,
உக்ரைன் விமான படையினர் அறிவித்துள்ளனர் .
மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா 300 மில்லியன் டொலர் பெறுமதியான ,
உடனடி பயன் பாட்டிற்குரிய ஆயுத உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது .
புட்டீன் மாளிகை மீது உக்ரைன் விமானங்கள் தாக்குதல்
புட்டீன் மாளிகை மீது உக்ரைன் விமானங்கள் தாக்குதல்
ரஷ்ய ஜனாதிபதிவிளாதிமீர் புட்டீன் கிரெம்ளின் மாளிகை
மீதான தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
உக்ரைன் இரண்டு ஆள் இல்லா தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர் .
ஆனால் ரஷ்ய வான்படையால் அவை இரண்டும் சுட்டு வீழ்த்த பட்டன ,
இந்த விமானங்கள் ஊடுருவலை அடுத்து
குறித்த பகுதிகள் மேலாக உளவு விமானங்கள் பறக்க
தடை விதிக்க பட்டுள்ளது .
புட்டீனை போட்டு தள்ளினால் உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்பது,
உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகள் திட்டமாக உள்ளதை,
இந்த தாக்குதல் விடயம் வெளிக்காட்டி நிற்கிறது .
உக்ரைன் மேற்கொள்ளும் மிக ஆபத்தான விளையாட்டால்,
தற்போது உக்ரைன் மீது
ரஷ்ய பழிவாங்கும் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .
ஈரானை தொட்டால் இஸ்ரேல் தலைநகர் அழியும் எச்சரிக்கை
ஈரானை தொட்டால் இஸ்ரேல் தலைநகர் அழியும் எச்சரிக்கை
ஈரானை தொட்டால் இஸ்ரேல்
தலைநகர் அழியும் ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை ,
பதட்டமாகும் எதிரி நாடுகள்.
ஈரானை தொட்டால் இஸ்ரேல் தலைநகர் அழியும் எச்சரிக்கை
லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி
லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி
லண்டனில் நடைபெறவுள்ள மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04) காலை பிரித்தானியாவுக்கு பயணமானார்.
லண்டனின் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 6 ஆம் திகதி நடைபெறும் முடிசூட்டு விழாவில் அரச குடும்ப உறுப்பினர்கள், உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது தாயார் 2 ஆம் எலிசபெத் மகாராணியின் மரணத்திற்குப் பிறகு மன்னர் சார்ள்ஸ் அரியணை ஏறியமை குறிப்பிடத்தக்கது.
Featured
இறைச்சிக் கடைகள் 03 தினங்கள் மூட உத்தரவு
இறைச்சிக் கடைகள் 03 தினங்கள் மூட உத்தரவு
கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் யாவும் மூடப்பட வேண்டும் என மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி பணிப்புரை விடுத்துள்ளார்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக நாடு முழுவதும் 04ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 06ஆம் திகதி சனிக்கிழமை வரையான 03 நாட்களுக்கு மாடு, ஆடு மற்றும் கோழி என்பன அறுத்து, விற்பனை செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் மேற்படி 03 தினங்களும் கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் யாவும் மூடப்பட வேண்டும் என மாநகர ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் கல்முனை மாநகர சபை எல்லையினுள் சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை மணல்சேனை மருதமுனை பெரியநீலாவணை பாண்டிருப்பு சாய்ந்தமருது கல்முனை மாநகர பகுதிகளில் மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் இயங்கி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதே வேளை, கல்முனை மாநகர சபை எல்லையினுள் மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலையில் விற்பதற்கு சில இறைச்சிக்கடை உரிமையாளர்கள் உதாசீனமாக செயற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இறைச்சிக் கடைகள் 03 தினங்கள் மூட உத்தரவு
அண்மையில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இறைச்சிக் கடை உரிமையாளர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது அவர்களது இணக்கப்பாட்டுடன் கட்டுப்பாட்டு விலை தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டிருந்தது.
இதன்படி, ஒரு கிலோ கிராம் தனி இறைச்சியை 2,000 ரூபாவுக்கும் 200 கிராம் முள் சேர்க்கபட்ட ஒரு கிலோ கிராம் இறைச்சியை 1,800 ரூபாவுக்கும் விற்பனை செய்வதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இவ்விலைப்பட்டியலை அனைத்து இறைச்சிக் கடைகளிலும் காட்சிப்படுத்தும் பொருட்டு குறித்த விலைப்பட்டியல் ஆணையாளரினால் இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன.
ஆனால் ,சில இறைச்சி கடை உரிமையாளர்கள் குறித்த கட்டுப்பாட்டு விலையை மீறி தான்தோன்றித்தனமாக விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Featured
யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்: தையிட்டியில் பதற்றம்
யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்: தையிட்டியில் பதற்றம்
யாழ்ப்பாணம் வலிகாமம், வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி நேற்று இரவு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் காரணமாக தையிட்டி பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.
மேலும் குறித்த பகுதிக்குள் உள்நுழைய முடியாதவாறு பொலிஸார் வாகனங்களை வீதிக்கு குறுக்கே நிறுத்தி தடையேற்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் உள்ளிட்ட சிலர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து போராட்டப்பகுதியினை சுற்றி இராணுவத்தினர் முள் வேலிகளை அமைத்திருந்ததுடன், அப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவு ஒன்றுக்கூடியதுடன், பதற்றமான சூழல் நிலவியிருந்தது
Featured
யாழ். தையிட்டியில் இருவர் கைது
யாழ். தையிட்டியில் இருவர் கைது
யாழ்ப்பாணம், தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற இருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று திகாலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரை பார்க்க சென்றவர்களில் இருவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவரும் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை பொலிஸார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Featured
கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்
கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்
வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாளையும், நாளை மறுதினமும் இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கைதிகளின் உறவினர்களின் மூலம் அவர்களின் வீடுகளில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவுப்பொதி மற்றும் இனிப்புப் பண்டங்களை ஒருவருக்கு போதுமான அளவில் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
Featured
இஸ்ரேல் கடும் தாக்குதல் 21 விமானங்கள் வீழ்த்தல்
இஸ்ரேல் கடும் தாக்குதல் 21 விமானங்கள் வீழ்த்தல் ,
எரியும் எண்ணெய் வயல்கள் ,விமானங்கள் .
இஸ்ரேல் கடும் தாக்குதல் 21 விமானங்கள் வீழ்த்தல் .
வயல் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு
வயல் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு
வயல் ஒன்றில் விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (02) உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரஜனபத பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பின்னால் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வல்ஹிங்குருகெட்டிய உரகஸ்மன்ஹ பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் வீழ்ந்த இடத்திற்கு அருகாமையில் சட்டவிரோத மின் வேலி ஒன்றும் காணப்படுவதாகவும், மின் வேலியில் மோதி குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Featured
வசந்த கரன்னாகொட எழுதிய காட்டமான கடிதம்
வசந்த கரன்னாகொட எழுதிய காட்டமான கடிதம்
தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட , இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 27ம் திகதி வடமேற்கு மாகாண ஆளுநரும், கடற்படையின் முன்னாள் தளபதியுமான அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி அசோகா கரன்னாகொட ஆகியோர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
வசந்த கரன்னாகொட எழுதிய காட்டமான கடிதம்
அவர் கடற்படைத் தளபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமது நாட்டிற்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கு, குறித்த தடை தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
உரிய நடவடிக்கையின் மூலம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சட்டரீதியான சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் தமக்கு அறிவிக்கவில்லை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
3 நாட்கள் நிர்வாணமாக நின்ற பெண்
3 நாட்கள் நிர்வாணமாக நின்ற பெண்
கம்பளை – அம்புலுவா சரணாலயத்தில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறிக் கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக பொலிஸார் இன்று கண்டுபிடித்துள்ளனர்.
சுமார் மூன்று நாட்களாக வனப்பகுதியில் அவ்வப்போது பெண் ஒருவர் அலறல் சத்தம் கேட்டதாக தெரிவித்த உள்ளூர்வாசிகள் குழு, குறித்த வனப்பகுதிக்குள் சென்று ஆராய்ந்தனர்.
அப்போது ஒரு பெண் உடலில் ஆடை இல்லாமல் இருப்பதைக் கண்ட பிரதேசவாசிகள் கம்பளை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்
கம்பளை தலைமையக பொலிஸாரின் பெண் உத்தியோகத்தர்கள்
குழுவொன்று வந்து அந்த பெண்ணுக்கு ஆடை அணிவித்து அதிகாரிகளின் காவலில் எடுத்துச் சென்றுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட பெண் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.











































