கோடீஸ்வரர் விபச்சார நிலையம் முற்றுகை |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

நடமாடும் விபசார நிலையம் முற்றுகை

நடமாடும் விபசார நிலையம் முற்றுகை

இளம் பெண்களை ஆகக் கூடுதலான விலைக்கு விற்பனைச் செய்யும் நடமாடும் விபசார நிலையத்தை நடத்திச் சென்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அரகலய ஏற்பாட்டாளர் உள்ளிட்ட ஏழுவர் அங்குருவாத்தொட ரெமுன பிரதேசத்தில் வைத்து, பாணந்துறை வலான மோசடி தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்களில், விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் நால்வர், அவர்களை வாடகை வாகனத்தில் அமர்த்திச் சென்ற சந்தேகநபர்கள் இருவரும் அடங்குகின்றனர்.

பிரதான சந்தேகநபர் அரகலயவின் முக்கிய அமைப்பாளராக செயற்பட்ட மொரட்டுவையை வசிப்பிடமாகக் கொண்ட 33 வயதானவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

நடமாடும் விபசார நிலையம் முற்றுகை

சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களை முன்னெடுக்கும் மேற்படி நபர், நடமாடும் விபசார நிலையத்தை நடத்திச் சென்றுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒரு மூலோபாயத்தை கையாண்டு 50 ஆயிரம் ரூபாய்க்கு பெண்ணொருவரை பொலிஸார் விலைபேசியுள்ளனர்.

அதனடிப்படையில் சந்தேகநபர், சனிக்கிழமை (20) இரவு நான்கு பெண்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்தபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான சந்தேகநபர், பல வருடங்களாக விபசார வியாபாரத்தை நடத்திச் சென்றுள்ளார். அதனூடாக பெருந்​தொகையான பணத்தை அவர் சம்பாதித்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்கு ஆளுநருடன் சுமந்திரன் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

கிழக்கு ஆளுநருடன் சுமந்திரன் பேச்சு

கிழக்கு ஆளுநருடன் சுமந்திரன் பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடினார்.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு திங்கட்கிழமை (22) இடம்பெற்றது.

உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

உக்ரைன் அரசின் வேண்டுதலுக்கு இணங்க ,
அமெரிக்கா அரசு 375 மில்லியன் டொலர் பெறுமதியிலான,
நவீன ஆயுதங்களை மேலும் வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது .

உக்ரைனின் அவசர தேவை கருதி இந்த ஆயுதங்களை ,
அவசரமாக வழங்கிட அமெரிக்கா தயாராகி வருகிறது .
எதிர்வரும் சில வாரங்களில் உக்கிரனுக்கு மேற்படி
ஆயுதங்கள் சென்றடையும் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த ஆயுத தொகுதியில் ,கைமாஸ் ஏவுகணைகள் ,
பீரங்கி குண்டுகள் என்பன அதிகமாக வழங்கிட
இணக்கம் தெரிவித்துள்ளது .

உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

15 மாதங்கள் கடந்து செல்லும் போரில் ,உக்ரைன் உள் கட்டமைப்பு சிதைந்து ,
பொருளாதாரத்தில் நலிந்து ,எலும்பு கூடு போல உக்ரைன்
அழகிய நாடு காட்சி அளிக்கிறது .

ஜெலன்ஸியி பிடிவாதமும் ,மேற்குலக நாடுகளின் ,தூண்டுதலினால்
உக்ரைன் நாடும் ,மக்களும் பேரழிவை சந்தித்த வண்ணம் உள்ளன .

வெற்றி வாகை சூட போவது ரஷ்ய மட்டும் தான் என்பதை,
சமீப நாட்கள் ,பொரியல் நகர்வுகள் வெளிச்சம் இட்டு காட்டுகின்றன .

ஆப்கானிஸ்தானில் வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வானூர்தி
Posted in உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வானூர்தி

ஆப்கானிஸ்தானில் வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வானூர்தி

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு சொந்தமான ஹெலிகாப்டர்,
ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகளும்
கொல்லப்பட்டனர்.

ஹெலிகாப்டர் மின்கம்பியில் மோதியதால் இந்த
விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,
தாழ்வாக பறந்து சென்ற பொழுதே மேற்படி
விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஹிஸ்புல்லா போர் ஒத்திகை பதட்டத்தில் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

ஹிஸ்புல்லா போர் ஒத்திகை பதட்டத்தில் இஸ்ரேல்

ஹிஸ்புல்லா போர் ஒத்திகை பதட்டத்தில் இஸ்ரேல்

ஹிஸ்புல்லா போர் ஒத்திகை பதட்டத்தில் இஸ்ரேல்

மண்சரிவு அபாயம் இரு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

காலி மாவட்டத்தின் யக்கலமுல்ல, எல்பிட்டிய மற்றும் பத்தேகம பிரதேச செய்லாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் இஸ்ரேல் மோதல் பல இராணுவம் பலி
Posted in உளவு செய்திகள்

ஈரான் இஸ்ரேல் மோதல் பல இராணுவம் பலி

ஈரான் இஸ்ரேல் மோதல் பல இராணுவம் பலி

ஈரான் இஸ்ரேல் மோதல் பல இராணுவம் பலி ,
எல்லைகளில் இராணுவம் ஏவுகணைகள் குவிப்பு ,

மகிழ்வாய் இருக்க விழித்து கொள்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

மகிழ்வாய் இருக்க விழித்து கொள்

மகிழ்வாய் இருக்க விழித்து கொள்

நீளும் இந்த இரவுக்குள்ளே
நினைவுகளை பகிர்வோமா
நீண்ட நாள் ஆசைகளை
நின்று கொஞ்சம் ருசிப்போமா

நாம் கண்ட கனவுகளை
நலமுடனே காண்போமா
நாள் எல்லாம் மகிழ்ந்திடவே
நலமோடு வாழ்வோமா

அசிங்கத்தில் பிறந்தோமே
அதை இன்று மறந்தோமே
ஆனாலும் நல்லவராய்
அகிலத்தில் உரைத்தோமே

சிந்தனையை சிறைவைத்து
சிகரத்தில் இருந்தோமே
சிறை உடைத்து பறந்திடவே
சிறகு இரண்டு தரிப்போமே

படைத்தவனோ வாழ்வினில
பாதி வாழ்வை சிறை வைத்தான்
பட்டு துயர் கழியு முன்னே
பாவி நாம் மூப்பானோம்

எது வரைக்கும் இத் துயரை
ஏற்று நாம் பயணிப்போம்
இன்றே நாம் விழித்து விட்டால்
இத்துயரில் நாம் எழுவோம் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-05-2023

இறைவனை தேடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இறைவனை தேடு

இறைவனை தேடு

ஏழை சொல்லு ஏறாதடா – வலி
எவருக்கும் புரியாதடா
பார்த்து பார்த்து சிரிப்பாங்க
பல் இழித்து நகைப்பாங்க

விட்டு தள்ளடா – காலம்
விரைவில் வெற்றி பகிருமடா
நீயும் நானும் ஒன்னடா
நீர் விழியில் இல்லைடா

மனிதனை புரிஞ்சிக்க
மன்றில் நாடகம் நடக்குதடா
மாளிகையில் வாழும் போது
மனிதர் மட்டும் வையடா

சுய நல உலகத்தில
சூரியனும் உதிக்குதடா
சூடும் குளிரும்
சுழற்சியில் பகிருதடா

கால நிலை தான் வாழ்க்கை
கற்று தெரிந்தால் விடு செருக்கை
நீயும் நானும் மனிதனா
நின்மதி இப்போ இருக்கா

பதில் இல்லா அலைந்தாயே
படைத்தவன் தெளிய வைத்தேனே
இன்று என்ன செய்வாய்
இறைவனை தேடு இறைவனை தேடு .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 19-05-2023

வெடித்த கடும் யுத்தம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உளவு செய்திகள்

வெடித்த கடும் யுத்தம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

வெடித்த கடும் யுத்தம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

வெடித்த கடும் யுத்தம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,
பல்லாயிரம் இராணுவம் உயிரிழப்பு ,

வெடித்த கடும் யுத்தம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்


இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நகர்வுகள் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நகர்வுகள் ஆரம்பம்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நகர்வுகள் ஆரம்பம்

இலங்கையில் நடந்த இறுதிப்போர் தமிழ் இனப்படுகொலை தொடர்பான விடயத்தை சர்வதேச நீதிமன்றில் பாரப் படுத்தும் நகர்வுகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

கனடாவின் ஆதரவுடன் இதனை நடைமுறை படுத்த, தமிழர் தரப்புக்கள்
முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன .

ஐரோப்பிய உலக தமிழர் அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து ,இந்த
வெற்றிகர நகர்வுகளை ஆரம்பிக்க உள்ளதாக உள்ளக கசிவுகள் வெளியாகியுள்ளன .

14 வருடங்கள் கழிந்துதீர்வு கிட்டப்படவில்லை ,குற்றவாளிகள் சுதந்திரமாக ,
உலவிய வண்ணம் உள்ளனர் .

அதனால் உடனடி தீர்வை ,
காணும் நோக்கில் ,புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் ஒன்று
பட்டு செயலாற்ற முன் வந்துள்ள செயல் ,மகிழ்வை தருவதாக
தமிழர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர் .

No posts found.
14 வயது சிறுமி மீது பாலியல் சேட்டை இளைஞன் தலைமறைவு
Posted in இலங்கை செய்திகள்

தாய் முன்னிலையில் மகளை நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு

தாய் முன்னிலையில் மகளை நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு

தாயின் முன்னிலையில் 26 வயதான மாற்றுத்திரனாளியான மகளை நிர்வாணமாக்கி, அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது மட்டுமன்றி கடுமையாகத் தாக்கினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்வதற்கு தேடப்பட்டுக்கொண்டிருக்கும் பொலிஸ் கான்ஸ்டபிள், வாழைத்தோட்ட பொலிஸில் இணைக்கப்பட்டு, கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் காரியாலயத்தில் கடமையாற்றுகின்றார்.

இந்த கான்ஸ்டபிளின் நோய்வாய்ப்பட்ட தாயை கவனித்துக்கொள்வதற்காக, இந்த யுவதியுடன் அவருடைய தாய், இரண்டு வருடங்களாக அந்த கான்ஸ்டபிளின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு சொந்தமான 10 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில், தாயையும் மகளையும் அறை​யொன்றுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

தாய் முன்னிலையில் மகளை நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு

அங்குவைத்து தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு அந்த யுவதியிடம் பொலிஸ் கான்ஸ்டபிள் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அக்கோரிக்கையை அந்த யுவதி நிராகரித்துள்ளார் என யுவதியின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், அந்த யுவதியை கடுமையாக தாக்கிய கான்ஸ்டபிள், தாயின் முன்னிலையில் யுவதியை நிர்வாணமாக்கி, வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளார். இதுதொடர்பில், கொஸ்கம பொலிஸ் நிலையத்தில், வௌ்ளிக்கிழமை (19) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த யுவதி முறைப்பாடு செய்வதற்கு முன்னர், கொஸ்கம பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள், தன்னுடைய 10 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது தொடர்பில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மாற்றுத்திரனாளியான 26 வயதான யுவதியை, வைத்திய பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கொஸ்கம பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

No posts found.
தர்மபுரம் பகுதியில் 500 கிலோ விமானக் குண்டு மீட்டு
Posted in இலங்கை செய்திகள்

தர்மபுரம் பகுதியில் 500 கிலோ விமானக் குண்டு மீட்டு

தர்மபுரம் பகுதியில் 500 கிலோ விமானக் குண்டு மீட்டு

தாக்குதல் விமானத்தின் ஊடாக பூமிக்கு கொட்டப்பட்ட சுமார் 500 கிலோகிராம் நிறையுடைய அதிசக்திவாய்ந்த விமானக் குண்டொன்று, கிளிநொச்சி தர்மபுரம், மயில்வானகம் காட்டுப்பகுதியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

யுத்தக்காலத்தில் பயங்கரவாதிகளை இலக்குவைத்து கிபீர் விமானத்தால் கீழே கொட்டப்பட்ட வெடிக்காத குண்டே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

தர்மபுரம் பகுதியில் 500 கிலோ விமானக் குண்டு மீட்டு

பிரதேசவாசியினால் தர்மபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த சக்திவாய்ந்த குண்டு கண்டறியப்பட்டள்ளது.

3 அடி நீளமும், 3 அடி சுற்றுவட்டமும் கொண்ட இந்த குண்டு, இன்றைக்கு 15 வருடங்களுக்கு முன்னர் பூமியை நோக்கி கொட்டப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் அக்குண்டு பதிந்தமையால், இரும்புக்கரல் பிடித்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

No posts found.
ஜனாதிபதிக்கு அஸ்கிரிய பீடம் விசேட குறிப்பாணை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு அஸ்கிரிய பீடம் விசேட குறிப்பாணை

ஜனாதிபதிக்கு அஸ்கிரிய பீடம் விசேட குறிப்பாணை

நாட்டில் இனவாத மற்றும் மதவாத நெருக்கடி நிலை உருவாகி வருவதை தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து எழும் சம்பவங்கள் மூலம் தெரியவருவதால், இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த தேவையான

நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசேட மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஷ்யாமோபாலி மகா நிகாயாவின் அஸ்கிரி பார்ஷவ மகா நாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரரினால் இந்த விசேட மகஜர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டி மல்வத்து அஸ்கிரி மஹாநாயக்க தேரர்களை சனிக்கிழமை (20) சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இதன்போதே அஸ்கிரி மஹாநாயக்க தேரர் இந்த விசேட செய்தியை கையளித்தார்.

ஜனாதிபதிக்கு அஸ்கிரிய பீடம் விசேட குறிப்பாணை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள விகாரைகள் மற்றும் நாடெங்கிலும் உள்ள தனித்துவமான வரலாற்று சிறப்புமிக்க பௌத்த விகாரைகளை புனரமைப்பதில் உள்ள தடைகள் நீக்கப்பட்டு அந்த பணிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் மூன்று விடயங்கள் அடங்கிய குறிப்பாணையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது தீவின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தொல்பொருள் இடங்கள் தொடர்பான திட்டங்கள் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுவதுடன், வெளி தரப்பினர் வழங்கும் உதவிகளை அதற்காகப் பயன்படுத்த வேண்டும்.

மேற்படி விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தி அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அந்த குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதைகுழிக்கு பொலிஸ் பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

புதைகுழிக்கு பொலிஸ் பாதுகாப்பு

புதைகுழிக்கு பொலிஸ் பாதுகாப்பு

நீதிமன்ற உத்தரவையடுத்து, தினேஷ் ஷாஃப்டரின் உடல் மே 25ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில், அவரது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் டிசெம்பர் 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இதன்படி தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், சுமார் 100 இற்கும் மேற்பட்ட வாக்கு மூலங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன

தெற்கு லண்டனில் ஆயுதங்களுடன் நபர் கைது
Posted in உலக செய்திகள்

தெற்கு லண்டனில் ஆயுதங்களுடன் நபர் கைது

தெற்கு லண்டனில் ஆயுதங்களுடன் நபர் கைது

தெற்கு லண்டனில் உள்ள Colliers Wood பகுதியில்
47 வயதுடைய நபர் , துப்பாக்கிச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் சுமத்தப்பட்ட பின்னர்,Croydon இல் உள்ள மாஜிஸ்திரேட்களால் காவலில் வைக்கப்பட்டார்.

வியாழன் காலை அவர் கைது செய்யப்பட்ட பொழுது ,
அவரது காரில் இருந்து 9mm வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட துப்பாககிகள் ,
குண்டுகளை அதிகாரிகள் மீட்டனர்.

வெடிமருந்துகள் வைத்திருந்தது குற்றத்தின்
பேரில் வழக்கு தொடுக்க பட்டு விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .

இஸ்ரேல் நெதன்யாகுவிற்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போர்க்கொடி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் அரசுக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போராட்டம்

இஸ்ரேல் அரசுக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போராட்டம்

இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக
மக்கள் பாரிய போராட்டத்தை நடத்தினர் .

பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு
மிக பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினர் .

ஆளும் நெதன்யாகுவினால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட
நீதி சீர் திருத்தத்தை மீள பெற கோரி மக்கள் ,
போராட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இஸ்ரேல் அரசுக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போராட்டம்

பல மாதங்களாக தொடர்ந்து இடம்பெறும் இந்த,
போராட்டத்திற்கு மதிப்பளிக்க மறுத்து ,
தான் தோன்றித்தனமாக நெதன்யாகு செயல் பட்டு வருவதால் ,
மக்கள் மேலும் கொதிப்படைந்து
தொடர் போராட்டங்களால் ஈடுபட தயாராகி வருகின்றனர் .

மக்களை திசை திருப்ப ஈரான் ,பலஸ்தீன போராளிகள் மீது,
தாக்குதலை நடத்திய பொழுதும் ,அதனை மறந்து ,
மக்கள் நெதன்யாகுவிற்கு எதிராக, போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ,
பெரும் நெருக்கடியில் ஐயா நெதன்யா சிக்கி தவிக்கிறார் .

கோட்டபாயாவை போல நெதன்யாகுவும் மக்களினால் விரட்டியடிக்க படும்
நிலை வரும் என எதிர் பார்க்க படுகிறது.

வெடித்த கடும் யுத்தம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

வெடித்த கடும் யுத்தம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

வெடித்த கடும் யுத்தம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் முக்கிய நகரம் வீழ்ந்தது ,அதிர்ச்சியில் இராணுவம் ,

வீழ்ந்த விமானம் ரியல் காணொளி உள்ளே


வீழ்ந்து நொறுங்கிய எகிப்த் போர் விமானம்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய ஸ்பெயின் இராணுவ போர் விமானம்

வெடித்து சிதறிய ஸ்பெயின் இராணுவ போர் விமானம்

ஸ்பெயின்நாட்டின் போர் விமானம் ஒன்று ,
விமான தளம் அருகே வெடித்து சிதறியது .

விமானம் வீழ்ந்து நொறுங்கு முன்பாக, விமானி
பாராசூட் மூலம் தப்பித்து கொண்டார் .

பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் ,
இராணுவ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற
வண்ணம் உள்ளார் .

விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

மரண பொறிக்குள் சிக்கிய உக்ரைன் வீழ்ந்த முக்கிய நகர்
Posted in உளவு செய்திகள்

மரண பொறிக்குள் சிக்கிய உக்ரைன் வீழ்ந்த முக்கிய நகர்

மரண பொறிக்குள் சிக்கிய உக்ரைன் வீழ்ந்த முக்கிய நகர் ,
கொண்டாடும் வாக்னர் குழு வெடித்த கடும் யுத்தம் ,