Author: நிருபர் காவலன்
பிரிட்டனை அதிரவைத்த படுகொலை
பிரிட்டனை அதிரவைத்த படுகொலை
பிரிட்டன் மத்திய நகரமான நாட்டிங்ஹாமில் மூன்று பேர் இறந்த நிலையில் சடலங்களாக மீட்க பட்டனர் .
மேலும் மூன்று பேர் மீது வான் ஒன்றால் அடித்து படுகொலை செய்ய முற்பட்ட வேளை ,அந்த நபர் மடக்கி பிடிக்க பட்டுளளார் .
தப்பி ஓட முயன்றதைத் தொடர்ந்து கொலையாளி என்ற சந்தேகத்தின் பேரில் ,ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிரித்தானியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
நகரின் மையத்தில் அதிகாலை 4 மணிக்குப் பிறகு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ,இது திட்டஇடப்பட்ட
படுகொலை எனபடுகிறது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
ஈரான் கண்டுபிடித்த காசு செப்பு மலை
ஈரான் கண்டுபிடித்த காசு செப்பு மலை
ஈரான் ண்டனாது தற்போது புதிய செப்பட்டு மலை ஒன்றை கண்டு பிஇடித்துள்ளது .
இந்த மலையி சுமார் 3 பில்லியன் மெட்ரிக் டன் செப்பு தாதுவைக் கொண்டுள்ளது
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கனிம வைப்பு 93,000 மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, அந்த அறிக்கையின்படி, அப்பகுதியில் சுமார் 106 இடங்களில் ஆய்வு நடவடிக்கைகள் நடத்தப்பட்டுவருகின்றன .
அதே பிராந்தியத்தில் 80,000 மீட்டர் பரப்பளவில் ,
60 இடங்களில் இரண்டாவது கட்ட ஆய்வு நடத்தப்படும் என்றும்,
இந்த செயல்பாட்டின் மூலம் ,டெபாசிட்டின் போர்பிரி காப்பரின் அளவை,
4 பில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.
இதனால் ஈரான் காட்டில் இப்பொழுது பணமழை கொட்டுகிறது
தமிழ் மக்களின் காணிகள் சிங்கள மக்களால் அபகரிப்பு
தமிழ் மக்களின் காணிகள் சிங்கள மக்களால் அபகரிப்பு
வீரபுரம் பகுதியில் தமிழ்மக்களுக்கு வழங்கபடவேண்டிய 250 ஏக்கர் காணி, சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
வவுனியா ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நேற்று (13) நடைபெற்றது. இதன்போதே குறித்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், “1994ஆம் ஆண்டு செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரபுரம் மக்களுக்காக 400 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு, வாழ்வாதாரத்திற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஏக்கர் வழங்குவதாக கூறி குடியமர்த்தப்பட்டார்கள். ஆனால், தற்போது வரை அந்த மக்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை.
தமிழ் மக்களின் காணிகள் சிங்கள மக்களால் அபகரிப்பு
“ஆனால், ஒதுக்கப்பட்ட காணிகளில் 75 சதவீதமான காணிகள், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தை சேர்ந்த பெரும்பாண்மையின சிங்கள மக்கள் அபகரித்திருக்கின்றார்கள்.
“இதேவேளை, எமது மதுராகநகரை சேர்ந்த பொதுமக்கள் தெற்கு சிங்கள பிரிவிற்குள் சென்று குடியேறுவதற்காக சிறு துண்டு காணியை கேட்டபோது, அதற்கு அந்தப் பகுதியில் உள்ள பௌத்த மதகுரு சம்மதித்தால் தான் இவர்கள் தமது பிரிவிற்குள் வரமுடியும் என்று மாவட்டச் செயலக மட்டத்தில் அன்று எனக்கு பதில் வழங்கப்பட்டது.
“ஆனால், தற்போது 250 ஏக்கருக்கும் மேற்ப்பட்ட காணிகளை தெற்கில் இருக்கும் மக்கள் அபகரித்திருக்கின்றார்கள். எனவே, வீரபுரம் மக்களுக்கு அந்த காணிகள் வழங்கப்பட வேண்டும்” என்றார்.
பேருந்து கட்டணங்களை குறைக்க திட்டம்
பேருந்து கட்டணங்களை குறைக்க திட்டம்
ஜூலை 1 முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் உட்பட அனைத்து பேருந்து கட்டணங்களையும் கிட்டத்தட்ட 20% குறைப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
ஜூலை 1 ஆம் திகதி பஸ் கட்டணத்தை குறைக்கும் பொறுப்பு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், 12 பிரிவுகள் தொடர்பான கணக்கீடுகளை ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி தற்போது 30 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களும் குறைக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
செலவிட்ட பணம் திரும்பிக் கிடைக்காது
செலவிட்ட பணம் திரும்பிக் கிடைக்காது
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியுமானாலும் தேர்தலுக்காக இதுவரை
செலவிட்ட மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ மக்களுக்கு ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொடுக்கவோ அரசாங்கத்துக்கு முடியாமல்
இருக்கிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மருத்துவத்தில் இலங்கை இராணுவம் சாதனை
மருத்துவத்தில் இலங்கை இராணுவம் சாதனை
உலகின் மிகப்பெரிய மற்றும் சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
2023 ஜூன் முதலாம் திகதியன்று கொழும்பு இராணுவ மருத்துவமனையில் அந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிறுநீரக மருத்துவர், லெப்டினன்ட் கேணல் கே. சுதர்ஷன் தலைமையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது
அமெரிக்கா விமானத்தை வீழ்த்திய ஈரான்
அமெரிக்கா விமானத்தை வீழ்த்திய ஈரான்
இரு நாடுகளுக்கு இடையில்தொடரும் கடும் மோதல் பெரும்போர் வெடிக்கும் அபாயம் தாக்குதல்
நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
நிலச்சரிவு காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தவிர கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் அலபத, நிவித்திகல, கல்வான, அஹெலியகொட மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களுக்கு அம்பர் நிறத்துடன் கூடிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க பிரதேச செயலகம், கிரியெல்ல, அயகம, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுல்ல ஆகிய இடங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய பின்வாங்கல் உக்ரைன் அறிவிப்பு
ரஷ்ய பின்வாங்கல் உக்ரைன் அறிவிப்பு
உக்ரைன் கிழக்கு பக்மூட் முன்னரங்க பகுதியியல் நிலை கொண்டிருந்த ,
எதிரிகள் மீது மேற்கொள்ள பட்ட கடும் தாக்குதலில் ,
அவர்கள் முன்னரங்களில் இருந்து 250 முதல் 700 மீட்டர் பின்வாங்கி ,
சென்றுள்ளனர் என உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
எமது நில மீட்பில் இவை பெரும் முன்னேற்றம் என்கிறது,
உக்ரைன் படைகள் .
இது போன்றே கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் ,
அறிவித்து ,முன்னேறியுள்ளதாக பரப்புரை புரிந்த உக்ரைன்,
படைகளை உள்ளே வறட்டு ,அபாயகர பொறி வெடிகள் மிதிவெடிகள்,
புதைக்க பட்ட பகுதிக்குள் வைத்து ரஷ்ய
படைகள் துரத்தி தாக்கி அவர்கள் முன்னரங்க பகுதிகளை மீட்டனர் .
ரஷ்ய பின்வாங்கல் உக்ரைன் அறிவிப்பு
அதே போன்றே அளவில் இப்பொழுது முன்றியுள்ள ,
உக்ரைன் படைகள் மீது ரஷ்யா உள்ளே விட்டு தாக்கும் ,
தாக்குதலை வரும்க் நாட்களில் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
மேலும் குள உடைப்பால் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் ,
இதுவரை பது பத்து பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
தொடருந்து இரு தரப்புக்கும் இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது,ரஷ்ய படைகள் தொலை தொடர்பு மையம் மீது குண்டு வீசி ,
அழித்துள்ள காட்சிகளை உக்ரைன் வெளியிட்டுள்ளது
ஈரான் ஒயிலை வாங்கும் ஜெரம்னா நேட்டோவுக்குள் குழப்பம்
ஈரான் ஒயிலை வாங்கும் ஜெரம்னா நேட்டோவுக்குள் குழப்பம்
ஈரான் நாட்டிடம் இருந்து எரிபொருள் மற்றும் ஒயிலை,
கொள்வனவு செய்திட ஜெர்மன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது .
நேட்டோ நாடுகளின் முக்கிய பங்காளியாக விளங்கும் ,
ஜெராமன் ,அமெரிக்கா கூட்டு நாடுக்ளின் தடைகளின் பின்னால் ,
ஈரானிடம் இருந்து இவற்றை கொள்வனவு செய்ய உள்ள செயல்,
நேட்டோ நாடுகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஈரான் ஒயிலை வாங்கும் ஜெரம்னா நேட்டோவுக்குள் குழப்பம்
அமெரிக்கா,இஸ்ரேலின் கண்மூடித்தனமான பொருளாதார தடை ,
அறிவிப்புகளினால்,தமது நாட்டின் பொருளாதரம் ,மக்கள்
கொந்தளிப்பை தடுக்க வேண்டும் என்றால் ,மலிந்த விலையில் ,
எரிபொருளை பெற்று கொள்ள வேண்டிய தேவை இவர்களுக்கு உள்ளது .
ஈராக்,சிரியாவில் இருந்து அமெரிக்கா எரிபொருளை கொள்ளையடித்து,
செல்கிறது என ,இரு நாடுகளும் கூறி வரும் நிலையில் ,
ஜெர்மன் இந்த டீலில் களம் குதித்துள்ளது குறிப்பிட தக்கது .
முன்னாள் இராணுவ வீரர் கைது
முன்னாள் இராணுவ வீரர் கைது
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் தெய்யந்தர பிரதேசத்தில் வைத்து இராணுவ விசேட அதிரடிப்படையின் முன்னாள் வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
மொரட்டுவ விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படியில் சந்தேகத்தின் பேரில் 44 வயதான முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்
மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
மாத்தறை – தெமட்டபிட்டிய, திக்வெல்ல பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்த தந்தை (40), தாய் (39), மகன் (13) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று துல்ஹிரிய பிரதேசத்தில் எதிர்திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை வரகாபொல பொலிஸார் கைது செய்துள்ளதுடன், உயிரிழந்த மூவரின் சடலங்களும் வரகாபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
பிரபாகரனை புகழ்ந்த தமிழ் நடிகை
பிரபாகரனை புகழ்ந்த தமிழ் நடிகை
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை இந்திய தமிழ்
நடிகையை புகழ்ந்து பேசியுள்ளார் .
கனடாவில் இடம்பெற்ற Easy Entertaining Night -2023 நிகழ்வில் ,
கலந்து சிறப்பித்து உரையாற்றும் பொழுதே இவ்வாறு குறிப்பிட்டார் .
பிரபாகரன் விட்ட இடத்தில இருந்து விடுதலை பயணத்தை ,
தமிழர்கள் தொட்டு நகர்த்த வேண்டும் என்கின்ற விடயத்தை அங்கே முன்வைத்தார் .
பிரபாகரனை புகழ்ந்த தமிழ் நடிகை
நாம் தமிழர் கட்சியில் இணைந்த பின்னர் ,ஈழ தமிழர்கள் மத்தியில் ,
நம்பிக்க மிகுந்த ஒருவராக கஸ்தூரி விளங்கி வருகிறார் .
தமிழ் நடிகைகள் அரசியலுக்காக மாற்றி பேசும் இவ்வேளையில் ,
நாம் தமிழர் கட்சியின் வருகையின் பின்னர் ,அதில் சற்று மாற்றங்கள்,
இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது .
இந்த நிகழ்வில் செந்தமிழன் சீமான் அவர்களும்,
காணொளி வாயிலாக உரை நிகழ்த்தினார் .
வெள்ளவத்தையில் வெடிகுண்டு மீட்பு
வெள்ளவத்தையில் வெடிகுண்டு மீட்பு
இலங்கை தலைநகர் கொழும்பின் அருகே உள்ள வெள்ளவத்தை ,
பகுதியில் வெடிகுண்டு ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .
பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,
மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பொழுது ,
வெளிநாட்டு தயரிப்பிலான கைக்குண்டு ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இந்த குண்டு எவ்வாறு அங்கு வந்தது என்பது தொடர்பில் ,
குற்ற தடுப்பு பிரிவினர் ,விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இலங்கையில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில் ,மாதம் தோறும் பலர்
கொலை செய்யப்பட்டு வருகின்றமை .குறிப்பிட தக்கது
ஜெர்மன் டங்கிகள் 12 ஐ அழித்தொழித்த ரஷ்யா
ஜெர்மன் டங்கிகள் 12 ஐ அழித்தொழித்த ரஷ்யா
உக்ரைன் இராணுவத்தினருக்கு ஜெர்மன் இராணுவத்தினரால்,
சிறுத்தை 2 என்ற குறியீட்டு பெயர் கொண்ட ,
டாங்கிகளை 18 பங்குனி மதம் வழங்கியது .
இந்த டாங்கிகள் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பிலும் பயிற்சிகள் வழங்க பட்டன .
,மேற்படி தாங்கிகள் உக்ரைனுக்கு வழங்க வேண்டாம் என ரசியா கேட்டு கொண்டது .
ஆஅப்பை வழங்க பட்டால் அழிக்க படும் என மிரட்டியது .
,ரஷ்ய கூறியது போன்றே ,ஜெர்மன் வழங்கிய 18 டாக்கிகளில் ,
12 ஐ ரஷ்யா வெற்றிகரமாக அழித்துள்ளது .
ஜெர்மன் டங்கிகள் 12 ஐ அழித்தொழித்த ரஷ்யா
கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட ,
கடும் மோதல்களில் ,மேற்குலக ஆயுத தளபாடங்களை இலக்கு வைத்து ,
ரஷ்ய மோட்டார் படைகள் தாக்குதல் நடத்தி அழித்துள்ளன .
இதனால் டங்கி பாடியை இழந்துள்ள உக்ரைன் ,ஜெர்மனியிடம் இதே போன்ற டாங்கிகளை மேலும்
வழங்கும் படி வேண்டுதல் விடுத்துள்ளது .
ஒரே நாளில் ஜெர்மன் வாழங்கிய 12 டாங்கிகளை ,
ரஷ்ய அழித்து ஜெர்மனுக்கும் ,நேட்டோவுக்கு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்துள்ளது .
தொடர்ந்து மேற்கு நாடுகளின் ஆயுதங்கள் அழிக்க படும் என்பதை போல ரஷ்ய ,
அழித்தொழிப்பு நடவடிக்கை எடுத்து காட்டுகிறது .
ஆயுத குழு வெறியாட்டம் 46 மக்கள் படுகொலை
ஆயுத குழு வெறியாட்டம் 46 மக்கள் படுகொலை
வடகிழக்கு காங்கோ பகுதியில் அகதிமுகாம் மீது ,
போராளிகள் நடத்திய தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டனர்.
வடகிழக்கு இடூரி மாகாணத்தில் உள்ள முகாமை,
அப்பகுதியில் பல கொடூரமான ,இனக் கொலைகளில் ஈடுபட்ட போராளிக் குழு
தாக்கியது .
இந்த லாலா அகதி முகாமில் 46 பேர் சடலங்களாக மீட்க பட்டனர் .
இவ்வாறு இறந்தவர்களில் , 23 பேர் குழந்தைகள் என தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த ஆயுத குழுவின் வெறி செயலின் பின் ,
குறித்த பகுதி மக்கள் மத்தியில், தெடர்ந்து அச்ச நிலை காணப்படுகிறது .
ஏவுகணைகளை உடைத்தெறிந்த ஈரான் விமானங்கள்
ஏவுகணைகளை உடைத்தெறிந்த ஈரான் விமானங்கள்
உக்ரைன் ரஷ்ய கடும் மோதல்
உக்ரைன் ரஷ்ய கடும் மோதல்
உக்ரைன் கிழக்கு பகுதியி ரஷ்ய உக்ரைன் படைகளுக்கு இடையில் ,
கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன .
தமது பகுதிகளுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற,
உக்ரைன் அதி உயர் சண்டை விமானங்கள் மூன்று ,
டிரோன்கள் என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ரஷ்ய தெரிவித்துள்ளது .
பதிலுக்கு தாமும் நடத்திய தாக்குதலில் , ஈரான் கெமிகச்சிக்கல் விமானங்கள் ,
டாங்கிகள் ,பீரங்கிகள் என்பனவற்றை அழித்துள்ளோம் என
உக்ரைன் அறிவித்துள்ளது .
உக்ரைன் ரஷ்ய கடும் மோதல்
மூன்று முனைகள் ஊடக பாரிய முன்னேற்ற நடநடிகையை மேற்கொண்ட
உக்கிரேன் படைகள் முன்னேற்றம் தடுக்க பட்டு ,
பலத்த இழப்புக்களை வழங்கியுள்ளோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது .
இரு தரப்பிலும் தாமே வெற்றியாளர்கள் என்ற அறிவுப்பு ,
இந்த ஆயுத தளபாட அழிப்பின் ஊடாக வெளியாகியுள்ளது .
திருப்பதியில் வாகன விபத்து 2 பேர் பலி 9 பேர் காயம்
திருப்பதியில் வாகன விபத்து 2 பேர் பலி 9 பேர் காயம்
திருப்பதி பகுதியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாகியும்
9 பேர் காயமடைந்தனர்,
பயணிகளை காவிய படி பயணித்த மினிபஸ் ஒன்று ,
லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது ,
வான் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .
காயமடைந்தவர்கல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர் ,குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .















































