யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

காதலை மறுத்ததால் கத்திக்குத்து

காதலை மறுத்ததால் கத்திக்குத்து

தான் காதலை தெரிவித்தபோது அதை ஏற்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி காயப்படுத்திய இளைஞன் நாராஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் கொழும்பு நாராஹேன்பிட்டி நில அளவை திணைக்களத்தின் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் காலி பின்னதுவ வலஹந்துவா பகுதியைச் சேர்ந்த 29 வயது யுவதி ஆவார்.

குறித்த யுவதி காலியிலிருந்து கொழும்பு நாரஹேன்பிட்டி நோக்கி பயணித்த பஸ்ஸில் பயணித்த போது சந்தேக நபரும் அதே பேருந்தில் பயணித்துள்ளார்.

காதலை மறுத்ததால் கத்திக்குத்து

குறித்த பஸ் யுவதியின் வேலையிடத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டவுடன், இறங்குவதற்கு தயாரான யுவதியை சந்தேக நபர் தன்னிடம் இருந்த கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார்.

காயமடைந்த யுவதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் அர்ஜுன
Posted in இலங்கை செய்திகள்

கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் அர்ஜுன

கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் அர்ஜுன

இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராக நேற்று நியமிக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்க,


நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் பின்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின்
அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் மனைவியை 17 தடவை குத்தி கொன்ற கணவன்

இந்தியாவில் மனைவியை 17 தடவை குத்தி கொன்ற கணவன்

இந்தியாவில் தாதியாக வேலை புரிந்து வந்த 26 வயதுடைய மனைவியை
கணவன் 17 தடவை கத்தியால் குற்றி இல்லாது அழித்துள்ளார்

இவரது தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனறி உயிரிழந்தார் .


இந்த சம்பவம் தொடர்ப்பில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் ,
குற்றவாளியாக அடையும் காணப்பட்ட கணவனுக்கு
ஆயூள் தண்டனை வழங்க பட்டுள்ளது .

மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில்
இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

உக்ரைனை பழிவாங்கிய ரஷ்ய 23விமானங்கள் அழிப்பு
Posted in உலக செய்திகள்

உக்ரைனை பழிவாங்கிய ரஷ்ய 23விமானங்கள் அழிப்பு

உக்ரைனை பழிவாங்கிய ரஷ்ய 23விமானங்கள் அழிப்பு

ரஷ்ய இலக்குகளை நோக்கி உக்ரைன் இராணுவம் கடும் தாக்குதலை நடத்தியது .


இந்த தாக்குதலின் பொழுது உக்ரைன் படைகள் ஏவிய அமெரிக்காவின் இரண்டு ஹைமாஸ் ஏவுகணைகள்
23 தாக்குதல் விமானங்கள் என்பன தமது வான் பாதுகாப்பு படைகளினால் அழிக்க பட்டதாக தெரிவித்துள்ளது

குப்யான்ஸ்க் பகுதியில் உக்ரைனின் ஆறு முன்னேற்ற தாக்குதல்களை
முறியடித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமது படைகள் நடத்திய உக்கிர தாக்குதலில் . 135 உக்ரேனிய ஆயுதப்படைகள்பலியாகியும் ,


இரண்டு கவச போர் வாகனங்கள் மற்றும் மூன்று பிக்கப்மற்றும் டிரக்குகள்,”
என்பனவற்றை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது

பாகிஸ்தான் இராணுவம் கிளர்ச்சி படைகள் மோதல் இருபகுதியிலும் பலத்த இழப்பு
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தான் இராணுவம் கிளர்ச்சி படைகள் மோதல் இருபகுதியிலும் பலத்த இழப்பு

பாகிஸ்தான் இராணுவம் கிளர்ச்சி படைகள் மோதல் இருபகுதியிலும் பலத்த இழப்பு

கடந்த தினம் கைபர் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும்
கிளர்ச்சி படைகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில்
நான்கு பாகிஸ்தான் அரச இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,,மேலும் சிலர் காயமடைந்துள்ளனர் .

அதே போல கிளர்ச்சி படைகள் தர்பில் மூவர் பலியாகியும் ,
நால்வர் காயமடைந்ததாக தெரிவிக்க பட்டுளள்து .

பாகிஸ்தான் இராணுவம் மற்றும் காவல்துறையை இலக்கு வைத்து கிளர்ச்சி படைகள்தொடராக தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .

அமெரிக்கா விமான தளங்கள் மீது ரொக்கட் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் நகரங்களை நோக்கி ஹமாஸ் ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் நகரங்களை நோக்கி ஹமாஸ் ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் நகரங்களை நோக்கி ஹமாஸ் அமைப்பின் Al-Qassam Brigades
16 ரொக்கட் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது .

இஸ்ரேலின் தெற்கு குடியேற்ற பகுதிகளாக விளங்கி வரும்
Haifa ஹைபா Nahariya நகரிய பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .


லெபனானில் உள்ள ஹமாஸ் அமைப்பின் கிளை பிரிவினரால் இந்த தாக்குதல் நடத்த பட்டுளள்து .

இஸ்ரேல் நகரங்களை நோக்கி ஹமாஸ் ரொக்கட் தாக்குதல்

இவ்வாறு ஏவப்பட்ட ரொக்கட் யாவும் அயாண்டோம் ஏவுகணைகளினால் தடுத்து அழிக்க
பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

இவ்வாறு இடைமறித்து தாக்கி அழிக்க படும் காட்சிகளை மக்கள் காணொளி பிடித்து
சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர் .இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தெரியவரவில்லை .

இந்த காணொளி காட்சிகள் வைபர் பக்கத்தில் இணைக்க பட்டுள்ளது ,
அதனை பார்வையிட விரும்பும் அன்பர்களுக்கு இணைப்பு கீழே வழங்க பட்டுளள்து

தேர்தல் மையத்தில் மாவோயிஸ்ட் தாக்குதல் நால்வர் காயம்
Posted in உலக செய்திகள்

தேர்தல் மையத்தில் மாவோயிஸ்ட் தாக்குதல் நால்வர் காயம்

தேர்தல் மையத்தில் மாவோயிஸ்ட் தாக்குதல் நால்வர் காயம்

தேர்தல் நடவடக்கை இடம்பெற்று கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல்
இடம்பெற்றுள்ளது .இதன்பொழுதே மேற்படி இழப்பு ஏற்பட்டுள்ளது .


குண்டு தாக்குதல் இடம்பெற்ற பகுதிகள் சுற்றைவளைக்க பட்டு
தேடுதல்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன

ரஷ்ய கப்பல் சேதம் வெளிவந்த காணொளி
Posted in உலக செய்திகள்

ரஷ்ய கப்பல் சேதம் வெளிவந்த காணொளி

ரஷ்ய கப்பல் சேதம் வெளிவந்த காணொளி

கிரிமியாவில் உள்ள ஜாலிவ் கப்பல் கட்டும் தளத்தில் தரித்து நின்ற ரசியாவின்
அஸ்கோல்ட் ஏவுகணை கப்பல் தாக்கி அழிக்கப்படும் காணொளியை உக்ரைன் வெளியிட்டுள்ளது .

கப்பல் மேல்தளத்தில் ஏவுகணை வீழ்ந்து வெடிக்கிறது .
இதன் பொழுது அந்த கப்பல் பலத்த புகைமணடலத்துடன் காணப்படுகிறது .
உடனடி பாவனைக்கு எடுத்து கொள்ள முடியாதவாறு பலத்த சேதமடைந்துள்ளது .

தமது முக்கிய போர்க்கப்பல் ஒன்று உக்ரைன் படைகளினால் ,
அழிக்க பட்டதற்கு பதிலடி வழங்கும் முகமாகவே
உக்ரைன் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளை இலக்குவைத்து,
ரஷ்ய கடும் தாக்குதலை நடத்தி இருந்தமை குறிப்பிட தக்கது .

தெற்கு கசாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

மத்திய கிழக்கின் எந்த பகுதியையும் எம்மால் தாக்க முடியும் இஸ்ரேல்

மத்திய கிழக்கின் எந்த பகுதியையும் எம்மால் தாக்க முடியும் இஸ்ரேல்

வடக்கு காசா பகுதி எம் வசம் வீழ்ந்து விட்டதாகவும் ,இப்பொழுது
எங்களினால் மத்திய கிழக்கின் எந்த நாட்டையும் சென்று தாக்கலாம் என
இஸ்ரேல் இராணுவ தலைமை தளபதி தெரிவித்துள்ளார் .

இதுவரையான தாக்குதலில் தற்போது உச்ச கட்ட இலக்கை அடைந்து விட்டோம் எங்கள் எதிரிகள் எங்கள் தாக்குதல் இலக்கிற்கு வந்து விட்டார்கள் என்பது இவரது கருத்தாகிறது

அவர்கள் நேரடியா கூற வருவது ஈரான் எங்கள் தாக்குதல் இலக்கிற்குள் வந்து விட்டது .


இனி அவர்களுக்கு ஆபத்தான காலம் உருவாகி விட்டது என்பதை இஸ்ரேல் இராணுவம் தெளிவாக
கூறியுள்ளது

இஸ்ரேலின் 48 கவச வண்டிகள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலின் 48 கவச வண்டிகள் அழிப்பு

இஸ்ரேலின் 48 கவச வண்டிகள் அழிப்பு

வடக்கு காச பகுதி ஊடக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்த
இஸ்ரேல் இராணுவத்தின் கொமாண்டோ அணிகளுக்கும் ,ஹமாஸ் அல்காசாம்
சிறப்பு படைகளுக்கும் இடையில் கடும் யுத்தம் இடம்பெற்றது .

இதான் பொழுது இஸ்ரேல் இராணுவத்தின் 48 கவச வண்டிகள் கடந்த 48 மணித்தியாலத்தில் அழிக்க
பட்டுள்ளதாக அந்த அமைப்பினர் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர் .

அந்த வண்டிகளை இயக்கி பயணித்து கொண்டிருந்த அனைத்து இஸ்ரேலிய இராணுவத்தினரும்பலியாகியுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது .


ஒவ்வொரு வண்டிகளிலும் ஐந்து பேர் இருந்துள்ளனர் என்கிறது ,
தாக்குதலை நாடத்திய ஹமாஸ் படை பிரிவிவினர் .

இஸ்ரேலின் 48 கவச வண்டிகள் அழிப்பு

அவ்வாறு நோக்கின் கிட்டத்தட்ட 250 இஸ்ரேல் இராணுவத்தினர் பலியாகியோ அல்லது காயமடைந்தோ
இருக்கலாம் என்கின்ற தகவல் வெளியிட பட்டுள்ளது .

காசா போராட்ட காரர்கள் இவ்வாறு அறிவித்துள்ள பொழுதும் ,இந்த படைக்கல ,ஆளணி இழப்பு
தொடர்பில் இஸ்ரேல் இராணுவம் இதுவரை உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை

வீடியோ


இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்


இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல் ,
ரொக்கட்டுக்காளால் அதிர்ந்த இஸ்ரேல் இராணுவ முகாம்கள்

வீடியோ

விமானங்கள் மூலம் இஸ்ரேலை தாக்க போகிறோம் கவுதிய படைகள் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

விமானங்கள் மூலம் இஸ்ரேலை தாக்க போகிறோம் கவுதிய படைகள் அறிவிப்பு

விமானங்கள் மூலம் இஸ்ரேலை தாக்க போகிறோம் கவுதிய படைகள் அறிவிப்பு

பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் புரிந்து வரும் தாக்குதலுக்கு பதலடியாகவும் ,அந்த மக்களை காப்பாற்றும் நோக்குடன் ,இஸ்ரேல் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த போகிறோம் என ஏமன் ஆயுதப் படைகளின் ஜெனரல் யாஹ்யா சாரீ தெரிவித்துள்ளார் .

வரும் நாட்களில் மிக அதிகமான தாக்குதல்களை நாம் மேற்கொள்ள போகிறோம் என அவர் சூளுரைத்துளளார் .

அவர்களால் கூறியது போன்று தாக்குதலை நாடத்தியும் இருந்தனர் ,வரும் நாட்களில்அதி தீவிரமான தாக்குதல்களை மேற்கொள்ள போகின்றார்கள் என்கின்ற அறிவிப்பு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

விமானங்கள் மூலம் இஸ்ரேலை தாக்க போகிறோம் கவுதிய படைகள் அறிவிப்பு

இவர்களினால் ஏவ பட்ட ஏவுகணைகள் விமானங்கள் யாவும் சுட்டு வீழ்த்த பட்டன .ஆனல் இரண்டு ஏவுகணைகள் வெட்ட வெளியில் வீழ்ந்து வெடித்ததாக இஸ்ரேல்இராணுவம் தெரிவித்து இருந்தமை இங்கே நினைவு கூற தக்கது .

வீடியோ


இன்றைய பாலஸ்தீனம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இன்றைய பாலஸ்தீனம்

இன்றைய பாலஸ்தீனம் ..

மூச்சு விட முடியாது
முண்டியடிக்கும் கூட்டம்
காற்று வரும் திசையறிந்து
கை காட்டி நிற்கிறது

வீச்சு வலை வீசி இஸ்ரேல்
விதமாய் உயிர் குடிக்கிறது
காத்துவிட மாட்டாயா
கரங்கள் தொழுகிறது

பேச்சு இழந்து போக வா
பெரும் கூட்டம் திரள்கிறது
பேர் பெற்ற வல்லரசின்
பெருமை நன்றே தெரிகிறது

வாலாட்டி திரிவதுவோ
வாழ்க்கை சிரிக்கிறது
கோலேற்றி வாழ்ந்து விட
கொள்கை துடிக்கிறது

நாள் ஒன்று கழிகையிலே
நாடி சோர்கிறது
நான் இறந்து போவேனோ
நம்பிக்கை இழக்கிறது

இப்படித்தான் ஊர்கிறது
இன்றைய பாலஸ்தீனம்
இறந்தாலும் அழுது விட
இங்கு இன்னும் தடை தான் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-11-2023

பலஸ்தீன யுத்தம் அல் அசாத் புயல்; நடவடிக்கையின் பின்னர் அழிக்கப்டும் மக்கள் கண்டு

வீடியோ

இஸ்ரேல் அருகில் அமெரிக்கா அணுகுண்டு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் அருகில் அமெரிக்கா அணுகுண்டு


இஸ்ரேல் அருகில் அமெரிக்கா அணுகுண்டு

அமெரிக்கா அணுகுண்டு கப்பல் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல் பட மேற்கு ஆசிய நோக்கி விரைவு
பதட்டமாகும் களம்

வீடியோ

துருக்கியில் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்-எண்ணெய் தடைபடுமா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

துருக்கியில் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்-எண்ணெய் தடைபடுமா

துருக்கியில் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்-எண்ணெய் தடைபடுமா

துருக்கி நாடானது இஸ்ரேலில் இருந்து தமது தூதரக அதிகாரிகளை மீள பெற்றுள்ள நிலையில் ,
விடயத்தின் பாரதூரத்தை விளங்கி கொண்ட அமெரிக்கா .

தனது வெளியுறவு அமைச்சை துருக்கி அனுப்பி வைத்து பேச்சில் ஈடுபட்டுளளார் .


இஸ்ரேல் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை புறிந்து வருவதாக துருக்கி அறிவித்த நிலையில் பெரும் பதட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இவ்வாறான நிலையில் ஆண்டனி பிலின்கடன் துருக்கி சென்று பேசியுளளார் ,
இந்த பேச்சு வெற்றி பெறுமா என்பது தொடர்பில் சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .

எண்ணெய் டதை படுமா ..?

இஸ்ரேல் தொடர்ந்து கடும் காட்டு மிராண்டி தனமான தாக்குத்லை
நடத்தி கொண்டிருக்கும் இவ்வேளை
இவரது பயணம் தோல்வியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது

லெபனான் ஹிஸ்புல்லா மூன்று இராணுவ தளங்கள் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

லெபனான் ஹிஸ்புல்லா மூன்று இராணுவ தளங்கள் மீது தாக்குதல்

லெபனான் ஹிஸ்புல்லா மூன்று இராணுவ தளங்கள் மீது தாக்குதல்

தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பினர் எல்லையோரத்தில்
உள்ள மூன்று இஸ்ரேலிய இராணுவத்திர் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்

மக்கள் வாழ்விடங்களை காசாவில் இஸ்ரேல் இராணுவம் அழித்து கொண்டிருக்க இவர்களோ இராணுவத்தின் முக்கிய முகாம்களை அழித்த வண்ணம் உள்ளனர்

லெபனான் ஹிஸ்புல்லா மூன்று இராணுவ தளங்கள் மீது தாக்குதல்

இங்கிருந்த படைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆயுத தளபாடங்கள் அழிக்க
பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் .

இந்த தாக்குதல் இழப்பு தொடர்பாக இஸ்ரேல் இராணுவத்தில்
இருந்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை

வீடியோ


இஸ்ரேல் கவசப்படை தளபதி மரணம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கவசப்படை தளபதி மரணம்


இஸ்ரேல் கவசப்படை தளபதி மரணம்

இஸ்ரேல் இராணுவத்தின் கவச படை தளபதி மரணம் ,
தொடரும் ஹமாஸ் கொமாண்டோ தாக்குதல்

வீடியோ
முல்லைத்தீவில் கொள்ளை கும்பலின் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் கொள்ளை கும்பலின் அட்டகாசம்

முல்லைத்தீவில் கொள்ளை கும்பலின் அட்டகாசம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் மூன்று பெண்கள் மாத்திரம் இருந்த பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் மகளின்

கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ள நிலையில், குறித்த குடும்பம் செய்வதறியாது தவித்து வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் கடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில்

கணவனை இழந்துவிட்ட நிலையில், தனது மகளை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வளர்த்து வருவதோடு தனது தாயாரையும் பராமரித்து வருகின்றார் சிறீபாலன் ஜுட் கிறிஸ்ரா.

இவ்வாறான பிண்ணனியில் மூன்று பெண்கள் மாத்திரம் வசித்துவரும் குறித்த வீட்டின் கூரையை பிரித்து நேற்று முன்தினம் (04) இரவு 11.00 மணியளவில் வீட்டினுள் நுழைந்த மூன்று கொள்ளையர்கள் குறித்த வீட்டில் இருந்த தாய், மகள், தாயின் தாய் ஆகிய மூவரின் கண்கள் கைகளை கட்டிவிட்டு வீட்டில் கொள்ளையிட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் கொள்ளை கும்பலின் அட்டகாசம்

மகளிர் சிறு சேமிப்பு குழுவின் தலைவியான குறித்த பெண்ணிடம் மக்கள் வழங்கிய பணம், பாடசாலை வகுப்பு தலைவியான மகள் பாடசாலை மாணவர்களிடம் பாடசாலையில் இடம்பெறவுள்ள நிகழ்வுக்கு சேமித்த பணம்,

வாழ்வாதாரத்துக்காக அவர்கள் நடாத்திவரும் சிறு கடையின் வியாபார பணம் என 90,000 ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தினை கொள்ளையிடப்பட்டுள்ளது.

அத்தோடு மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மகளை கொலை செய்யப்போவதாக மிரட்டி நகைகளை கோரி அவர்களிடம் இருந்த சுமார் ஆறு

பவுனுக்கும் அதிகளவான நகைகளையும் கொள்ளையடித்து அவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்

இரவு 11.00 மணியளவில் வீட்டில் நுழைந்த குறித்த கொள்ளையர்கள் அதிகாலை 3.00 மணிக்கு பின்னரே வீட்டை விட்டு சென்றதாகவும், தமது கடையில் இருந்த சிகரெட்களை எடுத்து வந்து தமக்கு முன்னால் புகைத்து

கடையில் இருந்த சோடாவை எடுத்து குடித்து தம்மை கெட்ட வார்த்தைகளால் பேசி பல்வேறு அட்டகாசம் புரிந்து சென்றதாகவும் குறித்த தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் கொள்ளை கும்பலின் அட்டகாசம்

முன்னைய காலத்தில் நாம் எந்த பயமும் இன்றி வாழ்ந்தோம் ஆனால் இன்று நிம்மதியாக வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எம்மை பொலிசுக்கோ ஊடகங்களுக்கோ தகவல் வழங்க கூடாது எனவும் அதை மீறி கூறினால் மூவரையும் வந்து கொலை செய்வோம் எனவும் மிரட்டி சென்றுள்ளனர் என அந்த தாய் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் கிடையாது

சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் கிடையாது

ஐக்கிய குடியரசு முன்னணிக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாடலி சம்பிக்க ரணவிக்க நேற்று (05) சம்மாந்துறையில் ‘கட்டியெழுப்புவோம்’ எனும் தலைமைப்பில் பொது மக்களை சந்திக்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார்.

இதன் போது அங்கு வருகை தந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

நமது நாட்டை இக்கட்டான நிலையிலிருந்து மீட்பதற்கு சரியான தலைமை வேண்டும். கடந்த வருடம் எங்களுக்கு பெற்றோல், உரம், மின்சாரம், கேஸ் என்று எதுமே இருக்கவில்லை. இதற்கு பிரதான காரணம் எங்களிடம் டொலர் இல்லையென்று கூறப்பட்டது.

வங்கியில் நாங்கள் ஒரு கடனைப் பெற வேண்டுமென்றால் அதற்கான ஆவணங்களை வழங்க வேண்டும். வங்கியில் பெற்ற கடன் மூலமாக வியாபாரத்தை சரியாக செய்யாது விட்டால் கடனை மீளச் செலுத்துவது கடினமாக இருக்கும். அப்போது வங்கி நம்மை வங்குரோத்து அடைந்தவர் என்று கண்டு கொள்ளும்.

இந்நிலையில் கடனுக்காக எமது சொத்தை வங்கியில் வைத்திருந்தால் அதனை வங்கி எடுத்துக் கொள்ளும்.

சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் கிடையாது

இது போலவே கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கடன்களைப் பெற்று வீதிகள், விமான நிலையங்கள் போன்றவற்றை அமைத்தோம். அவற்றால் எமக்கு எந்த இலாபமுமில்லை. அதனால் கடனை அடைக்க முடியாது போனது. நாடு வங்குரோத்தடைந்தது.

எங்களுக்கு கடனாக டொலர்களை தந்தவர்கள் வழங்கு தொடர்ந்துள்ளார்கள். இந்நிலையில் உலக வங்கி கடன்களை தந்தவர்களிடம் நீங்கள் அவசரப்பட வேண்டாம், கடனை தருவதற்குரிய ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம்.

அதனால் வழக்குத் தொடர வேண்டாமென்று வேண்டியுள்ளது.

இப்போது அரசாங்கம் மின்சாரத்தின் விலையையும், பால் மாவின் விலையையும், கேஸ், எரிபொருட்ளின் விலையையும், ஏனைய பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது.

இதைத்தான் அரசாங்கம் செய்கின்றதே ஒழியே உற்பத்தியை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை.

ஒரு சில தொழில்களை வழங்கினாலும், கடந்த 03 வருடங்களாக இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கவில்லை. தொழில் வழங்கினால் சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் கிடையாது.

வைத்தியர்கள், பொறியிலாளர்கள், கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் எங்களினால் சிறந்த சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயினும், இங்கு வந்து வாக்குறுதிகளை தருவார்கள். அவற்றை நிறைவேற்றும் பணம் யாரிடமும் கிடையாது. இதிலிருந்து மீள வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் படித்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து 2025 முதல் 2028 ஆண்டு வரையான காலப் பகுதியில் இந்த நாட்டை பழைய நிலைக்கு கொண்டு வரலாமென்ற திட்டத்தை முன் வைத்துள்ளோம்.

இதற்கு முதல் எங்கள் கடனை அடைக்கும் பணம் இக்காலப் பகுதியில் எம்மிடமில்லை. அதனால் 2028 இலக்காகக் கொண்டு செயற்படுகிறோம். இந்த குறுகிய 03 வருட காலத்தில் எங்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய வழியை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் கிடையாது

வைத்தியசாலைகளில் மருந்து வேண்டும். தாதிகள் இருக்க வேண்டும். வைத்தியர்கள் இருக்க வேண்டும். உபகரணங்கள் இருக்க வேண்டும். இதனை தீர்க்க வேண்டும். மாணவர்கள் காலையில் சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும். பாடசாலைகளில் உபகரணங்கள் இருக்க வேண்டும்.இதனை விட உணவுப் பிரச்சினை உள்ளது.

பசளையில்லா காரணங்களினால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. முட்டை உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி மூலமாக மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

சூரிய சக்தி மின்சாரத்தை புத்தளம் முதல் முல்லைத்தீவு வரை மேற்கொள்ள முடியும். யாழ் பிரதேசத்தில் காற்றாடி மூலமாக மின்சார உற்பத்தியை மேற்கொள்ள முடியும். அதனால் புதிய முறையில் டொலரை தேட வேண்டியுள்ளது. அயல்நாடான தமிழ் நாடு கேரளா போன்ற பிரதேசங்கள் மிகவும் முன்னேற்றம் அடைவதற்கு காரணம் என்ன? கொரியா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் மிகவும் வேகமாக முன்னேறுவதற்கு காரணம் என்ன?

அவர்கள் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை விடவும் டிஜிடல் சேவையை அனுப்புவதன் மூலமாகத்தான் முன்னேற்றமடைந்துள்ளனர். ஆதலால் டிஜிடல் மூலமாக அதிகம் சம்பாதிக்க முடியும்.

இந்த வேலைத் திட்டங்களை செய்வதற்கு ஒரு நிபந்தனை இருக்கின்றது.

அதுதான் நாங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டும்.கடந்த 40 வருடங்களில் தமிழ் இளைஞர்கள் நினைத்தார்கள். தமிழர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்கினால் அதன் மூலமாக வளமான நாட்டை உருவாக்க முடியுமென்று நினைத்தார்கள். அதன் மூலமாக அவர்கள் மட்டுமல்ல நாங்களும் பாதிக்கப்பட்டோம்.

ஜே.வி.பி நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று புரட்சி செய்தார்கள். அவர்களும் அழிந்து போனார்கள்.

முஸ்லிம்களிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அதிகமான உயிர்களை பலி கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்தோம். ஆதலால் நாம் ஒன்றுபட வேண்டும்.

பரம்பரையாக செய்யும் அரசியலை மாற்ற வேண்டும். தந்தைக்கு பின் மகன், தாய்க்கு பின் மகள் என்ற அரசியல் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். திறமைக்கு முதலிடம் அளிக்கும் அரசியல் சூழலை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

அது ஊழல் என எனக்குத் தெரியும்
Posted in இலங்கை செய்திகள்

அது ஊழல் என எனக்குத் தெரியும்

அது ஊழல் என எனக்குத் தெரியும்

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நத்தார் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

கிரிக்கெட் மற்றும் இந்த தோல்வி பற்றி உங்கள் கருத்து என்ன? என ஊடகவியலாளர் ஒருவர் கேட்கையில்,

”வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். வீரர்களாகிய நாங்கள் வெற்றியில் அந்த பெருமையை எடுத்துக்கொள்வதில்லை, தோல்வியில் அதை

சாதாரணமாக ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் நான் இன்றும் நம்புகிறேன், அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், பல ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜுன ரணதுங்க கூறியதை நான் அறிவேன்.

வருடங்கள் செல்ல செல்ல இந்த நாட்டில் கிரிக்கெட் இந்த நிலைமைக்கு தள்ளப்படும். மீண்டு வர முடியாது என்றார். அவர் சொன்னது இன்று உண்மையாகிவிட்டது. கிரிக்கெட் நிர்வாகம் மட்டுமல்ல, பணத்தின் கீழ்

இருக்கும் கிரிக்கெட்டையும் அங்கிருந்து அகற்ற வேண்டும். விளையாட்டுத்துறை அமைச்சர் ஏதாவது நல்லது செய்வார் என்ற நாட்டு மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுங்கள். அவர் நல்ல முடிவுகளை எடுப்பார் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

அது ஊழல் என எனக்குத் தெரியும்

ஊடகவியலாளர்- கடுமையான தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர் பதவி விலகுமாறு கிரிக்கட் சபைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் பதவி விலகவில்லையே.

பதில் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இடைக்கால நிர்வாகக் குழுவிற்கு விதிக்க முடியாத நிபந்தனைகளைக் கொண்டுள்ளது. அர்ஜுன ரணதுங்க சொல்வது போல் கிரிக்கெட் தேர்தல் நடந்தாலும் முகநூல்காரர்களும்

சூதாட்டக்காரர்களும் தான் வெற்றி பெறுவார்கள். கிரிக்கெட்டை விரும்புபவர்கள் அல்ல. நாட்டு மக்களும் அதற்கான பயிற்சி பெற்றுள்ளனர்.

ஊடகவியலாளர் – அர்ஜுன ரணதுங்க கூறியது போல் பணம் பறிக்கப்படுவதை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

பதில் – நானும் பல வருடங்கள் கிரிக்கெட் சபையில் இருந்தேன். இதில் உள்ள மற்ற ஊழல்கள் எனக்கு தெரியும்.

ஊடகவியலாளர் – அமைச்சரே ஏன் அவைகளை நிறுத்தவில்லை?

பதில் – விளையாட்டுத்துறை அமைச்சர் சில நல்ல முடிவுகளை எடுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக அறிகிறேன். அதற்கு அனைவரும் உதவுவார்கள். அப்படிச் செய்தால் ஒரு வருடத்தில் பலன் கூட

எதிர்பார்க்க முடியாது. நாம் கிரிக்கெட்டை வளர்க்க வேண்டுமானால், அர்ஜுன ரணதுங்க தலைவராக இருந்தபோது, கிரிக்கெட் போட்டிகள் நடந்தபோது, திறமையான வீரர்களைத் தேடி காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் எனப் பல இடங்களுக்குச் செல்வோம்.

அது ஊழல் என எனக்குத் தெரியும்

அவர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு அவர் அனைத்து வீரர்களையும் தனது வீட்டில் வைத்து அவர்களை கிளப்புகளுடன் இணைத்தார். அப்படித்தான் அந்த வீரர்கள் உருவானார்கள். இன்று வீரர்களைத் தேடுவது இல்லை. அந்த போட்டியை வீரர்கள் விளையாடும் நேர சுற்றுப்பயணம் உள்ளது. குழு

உணர்வுடன், உங்கள் தனிப்பட்ட சாதனைகளுக்குப் பதிலாக அணியாகப் போட்டியிட்டால் போட்டிகளில் வெற்றி பெறலாம். மேலும் தியாகம் செய்யக்கூடிய அணி இருந்தால், கிரிக்கெட்டில் எதிர்காலத்தை பார்க்க முடியும்” என அமைச்சர் தெரிவித்தார்.

video