Author: நிருபர் காவலன்
20 வது மலசலகூடம் கையளிப்பு |வன்னிமைந்தன் உதவித்திட்டம் | நன்றி அமரர் தவராசா அண்ணா குடும்பம் லண்டன்
20 வது மலசலகூடம் கையளிப்பு |வன்னிமைந்தன் உதவித்திட்டம் | நன்றி அமரர் தவராசா அண்ணா குடும்பம் லண்டன்
20 வது மலசலகூடம் கையளிப்பு |வன்னிமைந்தன் உதவித்திட்டம் | நன்றி அமரர் தவராசா அண்ணா குடும்பம் லண்டன்
கொலையாளி குறித்து அடுத்தடுத்து வெளிவரும் செய்திகள்
கொலையாளி குறித்து அடுத்தடுத்து வெளிவரும் செய்திகள்
கொலையாளி குறித்து அடுத்தடுத்து வெளிவரும் செய்திகள் ,கனேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் குறித்து மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டு வருகின்றனர்.
அவர் தொடர்பாக சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க,
புத்தளம் பாலாவி பகுதியில் கைது செய்யப்பட்ட இந்த நபர் பல பெயர்களில் தோன்றியவர் என்று தெரிவித்தார்.
அவரிடம் பல அடையாள அட்டைகள் இருப்பதாகவும், அதில் ஒன்றில் சட்டத்தரணியாக பணிபுரிவதைக் குறிக்க தயாரிக்கப்பட்ட சட்டத்தரணி அடையாள அட்டையும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.
அவர் முதலில் மொஹமட் அஸ்மன் ஷெரிப்தீன் என்ற பெயரிலும், பின்னர் சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தனராச்சி என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கொடிகாரகே கசுன் பிரபாத் நிஸ்ஸங்க என்ற பெயரைக் கொண்ட போலியான சட்டத்தரணி அடையாள அட்டையையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அதன்படி, எதிர்கால விசாரணைகளில், இந்த சந்தேக நபர் மற்றும் கனேமுல்ல சஞ்சீவவின் கொலையில் அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த அனைவரையும் பற்றிய உண்மையான தகவல்களை வெளிக்கொணர முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிதாரியும், அவருக்கு உதவிய பெண் குறித்த செய்தியும் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது
டில்லி முதல்வராகிறார் ரேகா குப்தா
டில்லி முதல்வராகிறார் ரேகா குப்தா
டில்லி முதல்வராகிறார் ரேகா குப்தா ,டில்லி பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். அவர் இன்று பதவியேற்கிறார்.
டில்லியின் பா.ஜ.க. முதல்வரை முடிவு செய்ய, அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் பா.ஜ.கவின் 48 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
இதில் டில்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
டில்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா அவர்களை வரவேற்றார்.
தொடர்ந்து டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தற்போது பெண் முதல்வர்கள் எவருமே இல்லை.
இதனால், எதிர்கட்சிகளின் மிகவும் முக்கியத் தலைவரான மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பதிலளிக்கும் வகையில் டில்லியின் முதல்வராக ஒரு பெண் அமரும் வாய்ப்புகளும் உள்ளன என தெரிவிக்கப்பட்டது . அது தற்போது உறுதியாகி உள்ளது.
டில்லியின் ராம்லீலா மைதானத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு துணைநிலை ஆளுநர் புதிய முதல்வர் ரேகா குப்தாவுக்கு பதவி ஏற்பு செய்து வைக்கிறார். இவருடன் புதிய அமைச்சர்களும் இதே மேடையில் பதவி ஏற்க உள்ளனர்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள், திரை நட்சத்திரங்களுடன் முக்கியத் துறவிகளும் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. டில்லியின் 70 சட்டப்பேரவை தொகுதிகளில் பா.ஜ.க. 48, ஆம் ஆத்மி 22 இடங்களை பெற்றிருந்தன.
டில்லியின் அடுத்த முதல்வராக டெல்லி பா.ஜ.கவின் பல்வேறு முக்கிய தலைவர்களின் பெயர்கள் சொல்லப்பட்டன. இந்த நிலையில் ரேகா குப்தா முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்
நெடுந்தீவில் ஆறு மீனவர்கள் கைது
நெடுந்தீவில் ஆறு மீனவர்கள் கைது
நெடுந்தீவில் ஆறு மீனவர்கள் கைது ,யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு அருகே இன்று இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு படகையும் அதிலிருந்த ஆறு மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய பெண்
கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய பெண்
கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய பெண் ,கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய, பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
பெயர்:- இஷாரா செவ்வந்தி
வயது: – 25 ஆண்டுகள்
அடையாள அட்டை – 995892480
முகவரி:- 243/01, நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தை, கட்டுவெல்லேகம.
குறித்த பெண் தொடர்பான தகவல்களை கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவின் பணிப்பாளரின் அலைபேசி இலக்கமான 071 – 8591727 அல்லது பொறுப்பதிகாரியின் 071 – 8591735 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பெண் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கு பணப்பரிசு வழங்க தயாராக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தகவல் வழங்குவோரின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சொகுசு வாகனங்களை வாடகைக்கு வாங்கி விற்றவர் கைது
சொகுசு வாகனங்களை வாடகைக்கு வாங்கி விற்றவர் கைது
சொகுசு வாகனங்களை வாடகைக்கு வாங்கி விற்றவர் கைது ,சுமார் 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனங்களை வாடகைக்கு எடுத்து மற்றவர்களுக்கு விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவ்வாறு விற்கப்பட்ட 30 வாகனங்களுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர், வாடகைக்கு வாகனங்களை வழங்கும் சேவைகளை அணுகி, போலி நிறுவனத்தின் பெயரில் ஆவணங்களை வழங்கி சொகுசு வாகனங்களை வாடகைக்கு எடுத்துள்ளார்.
அத்துடன், தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலைக்கு அந்த வாகனங்களை மற்றவர்களுக்கு விற்றதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் அதுருகிரிய பகுதியில் வசிப்பவர் என்றும், அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சொகுசு வாகனங்களை நிறுத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது.
குறித்த நபர், ரூ. 25 மில்லியன் மதிப்புள்ள வாகனத்தை ரூ. 20 மில்லியனுக்கு விற்பனை செய்து வாகன உரிமை ஆவணங்கள் விற்பனைக்குப் பிறகு சில நாட்களில் ஒப்படைக்கப்படும் என்று கூறி தனிநபர்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கொலையாளியை அழைத்துச் சென்ற வேன் ஓட்டுநர் கைது
கொலையாளியை அழைத்துச் சென்ற வேன் ஓட்டுநர் கைது
கொலையாளியை அழைத்துச் சென்ற வேன் ஓட்டுநர் கைதுகணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பாராளுமன்றத்தில் இதனை இன்று (20) தெரிவித்தார்.
புது ,க்கடை நீதிமன்றத்தில் நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, பிரதான சந்தேக நபர் நேற்று (19) புத்தளம் பாலவி பகுதியில் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், சட்டத்தரணி போல வேடமணிந்து வந்து கொலையாளிக்கு
உதவிய பெண் குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தா
இளநீர் விலை 300 ஐ தாண்டியது
இளநீர் விலை 300 ஐ தாண்டியது
இளநீர் விலை 300 ஐ தாண்டியது ,கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இளநீர் விலை கடந்த நாட்களில் 300 ரூபாயைத் தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிய அளவிலான இளநீர் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக இளநீருக்கான தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு காரணமாகும்.
இதற்கிடையில், சந்தையில் ஒரு தேங்காய் விலை 200 ரூபாயைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்கடும் மிரட்டல் |ஈரான் புதிய ஏவுகணை சோதனை
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்கடும் மிரட்டல் |ஈரான் புதிய ஏவுகணை சோதனை
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்கடும் மிரட்டல் |ஈரான் புதிய ஏவுகணை சோதனை
இவன் துரோகி அடித்து விட்டார் ஐயா |கொளுத்தி போட்டார் வசூல் ராஜா |Vanni mainthan
இவன் துரோகி அடித்து விட்டார் ஐயா |கொளுத்தி போட்டார் வசூல் ராஜா |Vanni mainthan
இவன் துரோகி அடித்து விட்டார் ஐயா |கொளுத்தி போட்டார் வசூல் ராஜா |Vanni mainthan
உணவு பொருட்களின் விலைகளை அதிகரிப்போருக்கு சிக்கல்
உணவு பொருட்களின் விலைகளை அதிகரிப்போருக்கு சிக்கல்
உணவு பொருட்களின் விலைகளை அதிகரிப்போருக்கு சிக்கல் செவ்வாய்க்கிழமை (18) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் உணவு வகைகளின் விலைகள் திடீரென அதிகரிக்குமாறு கோருகின்ற சங்கங்களின்
சட்டத் தன்மை தொடர்பில் ஆராயப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
தற்போது பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும் திடீரென உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த முறை அரசாங்கம் சமர்ப்பித்துள்ள பாதீட்டில் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கப்படாமையினால் தேநீர், பால் தேநீர் உள்ளிட்டவற்றின் விலையை
அதிகரிப்பதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (18) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த உணவு வகைகளின் விலையை அதிகரிப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
உப்பு, தேங்காய், முட்டை, கோழி இறைச்சி உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் தங்களது தொழிற்துறை வெகுவாக பாதிப்படைவதாகவும் அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்
காத்திருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
காத்திருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
காத்திருக்கும் அமைச்சர் சந்திரசேகர் ,கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கண் சிகிச்சைக்காக, புதன்கிழமை (19) சென்றிருந்தார்.
நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த பிறகு வைத்தியரை அவர் சந்தித்தார்.
அமைச்சராக இருந்த போதிலும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தாது, ஏனைய நோயாளிகளுடன் வரிசையில் நின்று அமைச்சர் சிகிச்சை பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவன் மரணம்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவன் மரணம்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவன் மரணம் ,மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (19) அவர் உயிரிழந்தார்.
மித்தெனிய, கடேவத்த சந்தி பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் குழுவொன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டையடுத்து, நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார், அவரது மகனும் மகளும் காயமடைந்தனர்.
பின்னர் தங்காலை மற்றும் எம்பிலிப்பிட்டிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மகள் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கணவனுக்கு ஐஸ் மனைவி கைது
கணவனுக்கு ஐஸ் மனைவி கைது
கணவனுக்கு ஐஸ் மனைவி கைது ,சிறையிலிருக்கும் தனது கணவனுக்கு கொடுப்பதற்காக உணவுடன் ஒரு கிராம் ஜஸ் போதைப் பொருளை சூட்சுமமாக மறைத்து கொண்டு சென்ற குறித்த சந்தேக நபரின் மனைவியை
செவ்வாய்க்கிழமை மாலை (18) சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் ஜஸ் போதைப் பொருளுடன் கைது
செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவுக்கு அமைய மட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கணவனை பார்ப்பதற்காக உணவு மற்றும் புகையிலைகளை மனைவி எடுத்துச் சென்றுள்ளார். அவைகளை சிறைச்சாலை அதிகாரிகள் சோதனையிட்ட போது
புகையிலைக்குள் சூட்சகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டதுடன் குறித்த பெண்ணை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஓட்டமாவடி 3ஆம் பிரிவு உசேனியா வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் கீதநாத் காசிலிங்கம்
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் கீதநாத் காசிலிங்கம்
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் கீதநாத் காசிலிங்கம் ,இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாண நூலகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.100 மில்லியன் ஒதுக்கியதற்காக ஜனாதிபதி அனுரகுமார
திசாநாயக்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் நன்றி தெரிவித்துள்ளார்.
ஒரு அறிக்கையை வெளியிட்ட கீதநாத் காசிலிங்கம், மிகவும் யதார்த்தமான மற்றும் புதுப்பித்த அணுகுமுறையை மேலும் முன்மொழிந்தார், இந்த நிதியின் ஒரு பகுதியை நூலகத்தின் சேகரிப்பை டிஜிட்டல் மயமாக்கப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
“டிஜிட்டலுக்கு மாறுவதன் மூலம், இந்த விலைமதிப்பற்ற புத்தகங்களை சேதம், திருட்டு அல்லது கடந்த காலத்தில் பல மதிப்புமிக்க புத்தகங்களை அழித்த தீ போன்ற பேரழிவுகளிலிருந்து நாம் பாதுகாக்க முடியும். கூடுதலாக,
மாணவர்கள் மத்தியில் டிஜிட்டல் ஆராய்ச்சி கருவிப் பயன்பாட்டை ஊக்குவிப்பது முக்கியம். இது இன்றைய உலகில் வெற்றிபெற அவர்களுக்குத் தேவையான வளங்களை வழங்கும்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்கால நூலகம் புத்தகங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், நவீன டிஜிட்டல் வளங்கள், ஊடாடும் கற்றல் இடங்கள், கல்விக்கான மெய்நிகர் யதார்த்தம் மற்றும் மாணவர்கள் திட்டங்களில் ஒத்துழைப்பதற்கான பகுதிகளையும் வழங்க வேண்டும் என்று கீதநாத் காசிலிங்கம் மேலும் கூறினார்.
“தெற்காசியாவின் பிற நாடுகள் தங்கள் மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதற்காக ஏற்கனவே இதை நடைமுறைப்படுத்தியுள்ளன.
நூலகத்தை டிஜிட்டல் மயமாக்குவது நமது கலாச்சார வரலாற்றைப் பாதுகாப்பதிலும், மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதிலும் ஒரு முதலீடாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.
திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாண பொது நூலகத்தை மேம்படுத்துவதற்காக ரூ. 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நூலகங்களின் மேம்பாட்டிற்காக ரூ. 200 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
நீதிமன்றத்தில் வைத்து சுடப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ
நீதிமன்றத்தில் வைத்து சுடப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ
நீதிமன்றத்தில் வைத்து சுடப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ ,கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ, நீதிமன்ற வளாகத்துக்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சட்டத்தரணி போல வேடமணிந்து வந்த நபரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், விசேட அதிரடிப்படையினர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கணேமுல்ல சஞ்சீவ இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.
டொராண்டோ விபத்தில் டெல்டா விமானம் தலைகீழாக கவிழ்ந்தது
டொராண்டோ விபத்தில் டெல்டா விமானம் தலைகீழாக கவிழ்ந்தது
டொராண்டோ விபத்தில் டெல்டா விமானம் தலைகீழாக கவிழ்ந்தது ,திங்களன்று 80 பேருடன் டெல்டா ஏர் லைன்ஸ் ஜெட் டோரன்டோ விமான நிலையத்தில் தரையிறங்கியது, தலைகீழாக கவிழ்ந்தது மற்றும் குறைந்தது 15
பேர் காயமடைந்தனர், ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
76 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் எண்டெவர் ஏர் விமானம் 4819, அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மின்னியாபோலிஸிலிருந்து புறப்பட்டு கனடாவின் மிகப்பெரிய நகரத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் தரையிறங்கியது என்று ஏர்லைன்ஸ் கூறியதாக தி நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு குழந்தை, 60 வயதுடைய ஒரு ஆண் மற்றும் 40 வயதுடைய ஒரு பெண் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர் என்று 15 பேர் காயமடைந்ததாக துணை மருத்துவ சேவைகள் AFP யிடம் தெரிவித்தன.
சிறிய காயங்கள் உள்ளவர்கள் உட்பட காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் அல்லது ஹெலிகாப்டர் மூலம் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக துணை மருத்துவ சேவை தெரிவித்துள்ளது.
உள்ளூர் ஒளிபரப்புகள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வியத்தகு படங்கள், தலைகீழான CRJ-900 விமானத்தில் இருந்து மக்கள் தடுமாறி, காற்றின் காற்றில் இருந்து தங்கள் முகங்களைக் காப்பாற்றுவதைக் காட்டியது.
இத்தாலியின் சவோனா துறைமுகத்தில் பாறைக் கப்பல் வெடித்தது
இத்தாலியின் சவோனா துறைமுகத்தில் பாறைக் கப்பல் வெடித்தது
இத்தாலியின் சவோனா துறைமுகத்தில் பாறைக் கப்பல் வெடித்தது ,இரண்டு குண்டுவெடிப்புகள் சீஜுவெல் டேங்கரைத் தாக்கியது, அதன் மேலோட்டத்தில் ஒரு துளை ஏற்பட்டது.
சம்பவம் நடந்தபோது மால்டா கொடியுடன் கூடிய கப்பலில் எண்ணெய் ஏற்றிக்கொண்டிருந்ததாக ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக, எண்ணெய் கசிவுகள் அல்லது காயங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை,
ஆனால் விவரிக்க முடியாத செயலிழப்பு காரணமாக இறக்குதல் நிறுத்தப்பட்டது
ஈரானில் மிகப்பெரிய செயல்பாட்டு பயிற்சி
ஈரானில் மிகப்பெரிய செயல்பாட்டு பயிற்சி
ஈரானில் மிகப்பெரிய செயல்பாட்டு பயிற்சி இஸ்லாமிய புரட்சியின் காவலர்களின் இராணுவத்தின் தரைப்படைகள் தென்கிழக்கு ஈரானில் மிகப்பெரிய செயல்பாட்டு பயிற்சியை நடத்தியது.
இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தரைப்படைகள் தென்மேற்கு ஈரானில் அவர்களின் மிகப்பெரிய செயல்பாட்டு பயிற்சியான கிரேட் நபி 19 இன் இரண்டாம் கட்டத்தை தொடங்கினர்.
இந்த பயிற்சியில் மேம்பட்ட போர் தந்திரங்கள், கவச தாக்குதல்கள், ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்களை மேம்படுத்த ஏவுகணை தாக்குதல்கள் உள்ளன.
IRGC தரைப்படைகளால் நடத்தப்பட்ட கிரேட் நபி 19 இராணுவ ஒத்திகையின் இரண்டாம் கட்டம், செவ்வாய்க்கிழமை தென்மேற்கு ஈரானில் தொடங்கியது, இது படையின் மிகப்பெரிய செயல்பாட்டு பயிற்சியைக் குறிக்கிறது.
இந்த கட்டம் கெர்மன்ஷாவின் அஸ்கெலே பகுதியில் ஆரம்ப பாதுகாப்பு-மையப்படுத்தப்பட்ட பயிற்சியை பின்பற்றுகிறது மற்றும் தென்மேற்கில் உள்ள IRGC தரைப்படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் முகமது பக்பூர்
முன்னிலையில் தொடங்கப்பட்டது. பல்வேறு IRGC அலகுகள் மற்றும் சிறப்புப் பிரிவுகளின் பங்கேற்புடன், இரண்டாம் கட்ட நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக Shaveriyeh பகுதியில் தொடங்கியது.
இந்த கட்டத்தில், IRGC தரைப்படைகள் தொடர்ச்சியான தாக்குதல் மற்றும் தற்காப்பு சூழ்ச்சிகள், மின்னணு போர் நடவடிக்கைகள் மற்றும் பெரிய அளவிலான கவச, ஏவுகணை, ட்ரோன் மற்றும் பீரங்கி தாக்குதல்களை மேற்கொள்ளும். இப்பயிற்சி வரும் நாட்களில் தொடரும்.
IRGC பிரிவுகளுக்குள் புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களுக்கான சோதனைக் களமாகவும் இந்த பயிற்சியானது நவீன போர் தந்திரங்கள் மற்றும் உத்திகளை செயல்படுத்துகிறது.
வரலாற்றில் கல்விக்காக அதிக தொகையை ஒதுக்கிய பட்ஜெட்
வரலாற்றில் கல்விக்காக அதிக தொகையை ஒதுக்கிய பட்ஜெட்
நாட்டில் திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், வரலாற்றில் முதன்முறையாக கல்விக்கு என்று அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கல்வி நிலையை உயர்த்துவதற்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் பின்வருமாறு:
- முன்பள்ளி சிறார்களின் போசனையை அதிகரிக்க, காலை உணவு வழங்குவதற்காக ஒரு வேலை உணவுக்கு வழங்கப்படும் 60 ரூபாவினை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டது. அதற்காக 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- தெரிவுசெய்யப்பட்ட ஆரம்பகால சிறு பராய அபிவிருத்தி நிலையங்களின் அபிவிருத்திக்காக ரூ.80 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
- முன்பள்ளி ஆசிரியர்களின் சேவைகளுக்காக தற்போது வழங்கப்படும் கொடுப்பனவை 1000 ரூபாவினால் அதிகரிக்க 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாயும் பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக 135 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் முன்மொழியப்பட்டது.
- தற்போதுள்ள பாடசாலை முறைமையை மீளாய்வு செய்து தேசிய திட்டமொன்றை தயாரிப்பதற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை 750 ரூபாயில் இருந்து 1500 ரூபா வரையில் அதிகரிக்க 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- விளையாட்டுத் துறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு மேலதிக உணவு உதவித்தொகை 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தவும், தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகையை 4,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக அதிகரிக்கவும் ரூ. 200 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்டது.
- பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல உதவித்தொகையை ரூபா 5,000 இலிருந்து ரூபா 7,500 ஆக அதிகரிக்கவும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாணவர் உதவித் தொகையை ரூபா 4,000 இலிருந்து ரூபா 6,500 ஆக அதிகரிக்கவும் 4,600 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- உயர்தர பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக திறமையானவர்களுக்கு வெளிநாடுகளில் கல்வி கற்கத் தேவையான ஏற்பாடுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க 200 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள நூலகங்களை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- ஐந்து மாகாணங்களில் விசேட விளையாட்டுப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டது

























