Author: நிருபர் காவலன்
இரத்த அழுத்தம், மன அழுத்தம் போக்க – இதை பண்ணுங்க
இரத்த அழுத்தம், மன அழுத்தம் போக்க – இதை பண்ணுங்க
இன்றைய பரபரப்பான உலகில் மன அழுத்தம், அதனால் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதயக் கோளாறு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்.
இவர்கள் அனைவரும் சாந்தி ஆசனம் கட்டாயம் செய்ய வேண்டும். செய்தால் மன அழுத்தம் இல்லாமல், ரத்த அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம்.
செய்முறை:
விரிப்பில் கிழக்கு திசையில் தலை வைத்து மேற்கில் கால் வைத்து கை கால்களை அகற்றி படுத்துக் கொள்ளவும்.
தலையை லேசாக இடப்பக்கம் சாய்த்துக் கொள்ளவும் கைவிரல்கள் வானத்தை பார்த்து இருக்கவும். (படத்தை
பார்க்கவும்). கண்களை மூடிக் கொள்ளவும். இப்பொழுது உங்கள் மனதை நண்பனாக்கி மனதின் மூலம் கீழ்கண்டவாறு பயிற்சி செய்யவும்.
உங்கள் மனதை தலை வெளி தசைகளில் நிலை நிறுத்தவும். அதில் உள்ள எல்லா டென்ஷனையும். அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்துவிட்டேன்.
அதில் எந்த டென்ஷனும் இல்லை என்று எண்ணத்தினால் ரிலாக்ஸ் செய்யவும். பின்பு உங்கள் மனதை தொண்டை வெளி சதையில் நிலை நிறுத் தவும்
. அதிலுள்ள டென்ஷன், அழுத்தம் அனைத்தையும் பூமிக்கு அர்பணித்ததாக எண்ணி உடலை தளர்த்தவும்.
பின்பு உங்கள் மனதை தோள்பட்டை பகுதியில் நிலைநிறுத்தி அந்த தசைகளிலுள்ள எல்லா டென்ஷனையும்
அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்துவிட்டேன் என்று மனதால் தளர்த்திக் கொண்டே வரவும். பின்பு உங்கள்
மனதை இருதயத்தின் வெளி தசைகளில் நிலை நிறுத்தவும். அதிலுள்ள எல்லா டென்ஷன், அழுத்தங்களையும் பூமிக்கு
அர்ப்பணித்ததாக எண்ணி ரிலாக்ஸ் செய்யவும்.
பின்பு உங்கள் மனதை வயிற்று வெளி தசைகளில் நிறுத்தி அதிலுள்ள டென்ஷன், அழுத்தங்களை பூமிக்கு
அர்ப்பணித்ததாக எண்ணவும். பின் வலதுகால் வெளி தசைகள், இடதுகால் வெளி தசைகளில் நிலை நிறுத்தி
ரிலாக்ஸ் செய்யவும். தலை முதல் கால் வரை உடல் வெளி தசைகளில் இருந்து அழுத்தத்தை மனதால் ரிலாக்ஸ் செய்யவும்.
இப்பொழுது உங்கள் மனதை மூளை உள் பகுதியில் நிலை நிறுத்தி அந்தப் பகுதியிலுள்ள எல்லா டென்ஷன், அழுத்தம்,
உடலைவிட்டு நீங்குவதாக எண்ணி தளர்த்தவும். மூளைக்கு கீழ் இரண்டு நாளமில்லா சுரப்பிகள் உள்ளது. உங்கள் ஆழ்
மனதை அதில் நிலை நிறுத்தி அந்த சுரப்பியில் உள்ள டென்ஷன் வெளியேறுவதாக தளர்த்தவும்.
பின் உங்கள் மனதை தொண்டை உள் பகுதி தைராய்டு பகுதியில் நிலை நிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷனும்
வெளியேறுவதாக எண்ணி தளர்த்தவும்.
பின் இருதயம், நுரையீரல், தைமஸ் சுரப்பி அதில் உங்கள்
இரத்த அழுத்தம், மன அழுத்தம் போக்க – இதை பண்ணுங்க
மனதை நிலை நிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக எண்ணி தளர்த்தவும். எனது
இதயத்துடிப்பு சீராக இயங்குகின்றது, அந்தப் பகுதியில் எந்த டென்ஷனும் இல்லை என்று எண்ணி தளர்த்தவும்.
பின் வயிற்று உள் பகுதியில் சிறுகுடல், பெருங்குடல், கணையம், அட்ரினல் சுரப்பியில் நிலை நிறுத்தி அதிலுள்ள
எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக மனதால் நினைத்து தளர்த்தவும். பின் வலதுகால்; உள்பகுதி, இடதுகால்
உள்பகுதியில் மனதை நிலை நிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக எண்ணி தளர்த்தவும்.
மூச்சில் கவனம்
இப்பொழுது இரு நாசி வழியாக மிக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். மூச்சை உள் இழுக்கும் பொழுது நல்ல சக்தி
வாய்ந்த பிராணக் காற்றை உள் இழுப்பதாக எண்ணவும். உடன் மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். மூச்சை
வெளியிடும் பொழுது நம் உடல், மனதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக எண்ணவும். இதுபோல்
இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை செய்யவும்.
இப்பொழுது இயல்பாக நடைபெறும் மூச்சோட்டத்தை மட்டும் கூர்ந்து கவனிக் கவும். மூச்சு இயற்கையாக
நடைபெறு கின்றது. அந்த மூச்சு உள் வருவதையும் வெளியே செல்வதையும் மூன்று நிமிடங்கள் கூர்ந்து கவனிக்கவும்.
பின்பு அவசரப்படாமல் மெதுவாக இரு கால்களையும் சேர்க்கவும். பின் இரு கைகளை மெதுவாக ஒன்று
சேர்க்கவும். பின் 10 விநாடிகள் அமைதி யாக இருந்துவிட்டு இடது பக்கம் மெதுவாகத் திரும்பி எழுந்து உட்காரவும்.
பலன்கள்
இந்த சாந்தி ஆசனம் தான் மிகக் கடினமான ஆசனம் என்று யோகிகள் கூறுவார்கள். மற்ற கடினமான ஆசனங்களை செய்துவிடலாம். ஆனால் இதில் உங்கள் மனதை
முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, மனதிற்கு கட்டளையிட்டு அதனை செயல்படுத்த வேண்டும். முதலில் பயிற்சி செய்யும் பொழுது 100 சதவீத மனோலயம்
இருக்காது. கவலை வேண்டாம். தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். முழுமையான பலன் கிட்டும்.
மனிதனின் அனைத்து வியாதிக்கும் மன அழுத்தம் கவலை தான் காரணம். மன அழுத்தத்தால் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்காக இயங்காமல் பல
வகையான நோய்கள் வருகின்றது. இந்த சாந்தி ஆசனம் ஒன்று தான் உடல் வெளி தசைகள், உடலுக்குள் உள்ள நாளமில்லா சுரப்பிகளிலுள்ள டென்ஷனை வெளியேற்றி
மீண்டும் சிறப்பாக இயங்கச் செய்கின்றது.ரத்த அழுத்தம், நீரிழிவு நீங்கும். இதயம் பாதுகாக்கப்படும். மன அழுத்தம் நீங்கி மன அமைதி கிடைக்கும். உடலுக்கு
பிராண சக்தி கிடைக்கின்றது. உடலில் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் சரியாக இயங்கும். நரம்புத் தளர்ச்சி, படபடப்பு நீங்கும்.
கோபம் நீங்கும். சாந்தம், பொறுமை குணம் வளரும். அடி முதுகு வலி, கழுத்து முதுகு வலி நீங்கும். சுறு சுறுப்பாக திகழலாம்.
அவர்கள் எனக்கு கடவுள் மாதிரி – தமன்னா
அவர்கள் எனக்கு கடவுள் மாதிரி – தமன்னா
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் தமன்னா, திருச்சியில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றிருக்கிறார். அங்கு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,
13 ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருந்து வருகிறேன். இந்த ஆண்டு எனக்கு ரொம்ப மகிழ்ச்சியான ஆண்டு என்றே கருதுகிறேன். நான் கதாநாயகியாக நடித்த கண்ணே கலைமானே, சைரா, ஆக்ஷன், பெட்ரோமாக்ஸ் உள்ளிட்ட 7 படங்கள் வெளியாகி உள்ளது. அவற்றில் தெலுங்கில் ஒரு படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. புதுப்புது கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதாலும், தொடர்ந்து ரசிகர்கள் எனக்கு தரும் ஆதரவும் தான் என்னை நிலைத்து நிற்க செய்துள்ளது.
ரஜினி – தமன்னா – கமல்
ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறீர்கள். அவர்களுடன் நடிக்க தயாராக உள்ளீர்களா? என்ற கேள்விக்கு, ‘அவர்களது படங்களை நான் ஒரு ரசிகையாக ரசித்து பார்த்திருக்கிறேன். இருவரையும் நான் சின்ன வயதில் இருந்து கடவுள் மாதிரி பார்த்து வருகிறேன். எனவே, அவர்களுடன் நடிக்க யார்தான் மாட்டேன் என்பார்கள். ரஜினி, கமலுக்கு ஏற்ற கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருந்தால் நிச்சயம் இருவருடனும் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்’ என்றார்.
ரைசாவிடம் போன் நம்பர் கேட்கும் ரசிகர்கள்
ரைசாவிடம் போன் நம்பர் கேட்கும் ரசிகர்கள்
விஐபி 2 உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்த ‘நடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த ’பியார் பிரேமா காதல்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கல்லுாரியில் படிக்கும் போதே, ‘மாடலிங்’ துறையில் ஈடுபட்டவர்.
இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் என்னுடைய லேன்ட்லைன் நம்பருக்கு போன் செய்யுங்கள் என்று போனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், உங்களுடைய போன் நம்பர் கொடுங்கள், நாங்கள் போன் செய்கிறோம் என்று பலரும் அவரிடம் கேட்டு வருகிறார்கள்.
வதந்திகளை நம்பாதீர்கள் – யோகி பாபு வேண்டுகோள்
வதந்திகளை நம்பாதீர்கள் – யோகி பாபு வேண்டுகோள்
ரஜினியுடன் ‘தர்பார்’, சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’, விஜய் சேதுபதியுடன் ‘கடைசி விவசாயி’ என யோகி பாபுவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. கதையின் நாயகனாக ‘மண்டேலா’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே ‘சத்யம்’ இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் யோகிபாபு ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த பெண் யோகிபாபுவின் வருங்கால மனைவி என்றும் செய்திகள் வெளியானது.
யோகிபாபு
இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகர் யோகி பாபு ட்விட்டர் பக்கத்தில், ‘என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி.’ என்று பதிவு செய்துள்ளார்.
கோட்டாவை குனிந்து கும்பிட்ட மைத்திரி
கோட்டாவை குனிந்து கும்பிட்ட மைத்திரி –
இலங்கையில் நடைஒளிபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்த்லில் ஆட்சியை பிடித்த கோட்டா சர்வாதிகாரத்தின் மிதந்து வரும் நிலையில் அவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குனிந்த்து கூப்பிட்டு சென்றுள்ள காட்சிகள் வெளியாகி நகைப்பை ஏற்படுத்தியுள்ளது
50 அடி பள்ளத்தில் வீழ்ந்து நொறுங்கிய வான்
50 அடி பள்ளத்தில் வீழ்ந்து நொறுங்கிய வான்
பலாங்கொட பகுதியில் இருந்து நோர்வுட் பகுதிக்கு மரக்கறி ஏற்றி சென்ற லொறி பொகவந்தலாவ ஜெப்பல்டன் பகுதியில் பன்றி ஒன்று குருக்கே சென்றமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் லொறியில் இருந்த பெருமளவிலான மரக்கறி வகைகள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது
நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டால் மட்டுமே இராணுவம் பாவிக்க படும் – பாதுகாப்பு மந்திரி
நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டால் மட்டுமே இராணுவம் பாவிக்க படும் – பாதுகாப்பு மந்திரி
இலங்கையில் -நாட்டை நிர்வகிக்க முடியாது ,போனால் அதாவது கலவரங்கள் ,குழப்பங்கள் ஏற்பட்டடால் மட்டுமே இராணுவம் பாவிக்க படும் என பாதுகாப்பபு துறை மந்திரி அதிரடியாக கருத்தை வெளியிட்டுள்ளார் , இராணுவ ஆட்சி தொடரும் என்கின்ற பீதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையிலே இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்
இலங்கை கடல்பகுதியில் கரை ஒதுங்கிய கடல் சிங்கம்
இலங்கை கடல்பகுதியில் கரை ஒதுங்கிய கடல் சிங்கம்
இலங்கை – Unawatuna பகுதியில் கடல் சிங்கங்கள் திடீரென கரை ஒதுங்கியுள்ளன ,இதனை அறிந்த கடற்படையினர் அவற்றை மீட்டு பத்திரமாக பாதுகாத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன ,இதேபோல இலங்கையின் பிற சில கடல் பகுதியில் இந்த கடல் சிங்கங்கள் கரை தட்டியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
மக்களுக்கான வேலை திட்டம் ஒருவாரத்தில் ஆரம்பிக்க படும் – மகிந்தா முழக்கம்
மக்களுக்கான வேலை திட்டம் ஒருவாரத்தில் ஆரம்பிக்க படும் – மகிந்தா முழக்கம்
இலங்கையில் ஏழாவது எஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ஜனாதிபதியின் கொள்கை பிரகடத்தின் அறிவிப்பின் படி மக்களுக்கானா வேலைத்திட்டம் வரும் வாரத்தில் இருந்து ஆரம்பிக்க படும் என மகிந்தா முழங்கியுள்ளார்
நாம் ஆட்சிக்கு வந்தால் – தமிழர்களை பாதுகாப்போம் – பிரிட்டன் தொழில் கட்சி அறிவிப்பு
பிரிட்டனில் எதிர்வரும் டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல் இடம் பெறவுள்ளது ,இதில் தாம் வெற்றி பெற்றால் இலங்கையில் தமிழர்கள் மீது கவனம் செலுத்தப்படுவதுடன் ,மனித உரிமை மற்றும் பாதுகாப்பபு தொடர்பில் தீவிர கவனம் செலுத்துவோம் என பிரிட்டன் தொழில் கட்சி அதிரடி அறைவிப்பை வெளியிட்டுள்ளது
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்தான உணவுகள்
முடி வளர்ச்சிக்கு உதவும் சத்தான உணவு வகை
பெண்கள் நீண்ட கூந்தல் பராமரிப்புக் காக சந்தையில் விதவிதமான எண்ணெய்கள் ஷாம்புக்கள் கிடைக்கின்றன,அதனால் கூந்தல் வளரவும் வேகம் .
அவை வெளிப்புற பராமரிப்புக்கு உதவுமே தவிர, உள்ளிருந்து ஊட்டமளிக்காது. கூந்தலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை உண்டால்தான் பலன் கிடைக்கும்.
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்தான உணவுகள்
உறுதியான கூந்தலுக்கு விட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக அவசியம்.
இவை முடி உதிர்வை தவிர்க்கவும், நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடியவை. எந்தெந்த சத்துக்கள் முடி வளர்ச்சிக்கும்,
ஆரோக்கியத்துக்கும் அவசியம், எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வைத் தவிர்க்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
- முட்டையில் புரோட்டீன், விட்டமின் பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய
- ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடியவை. முட்டையில்
- உள்ள வெள்ளைப் பகுதியில் ‘அல்புமின்’ என்ற புரதம்
- உள்ளது. அது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதில் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் பயோட்டின்
- என்கிற விட்டமினும் உள்ளது.
- பீன்ஸில் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தக்கூடிய இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக பீன்ஸ்,
- சோயா பீன்ஸ், கறுப்பு பீன்ஸ் ஆகியவை கூந்தல்
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்தான உணவுகள்
- அடர்த்தியாக வளர உதவி புரிகின்றன.
- ஓட்ஸில் விட்டமின் பி-யும், தாது உப்புக்களும் நிறைவாக உள்ளன. மெலனின் என்ற நிறமி, முடிக்கு
- நிறமளிக்கக்கூடியது. ஓட்ஸில் உள்ள சத்துக்கள் முடி வேகமாகவும், கருமையான நிறத்திலும் வளரத்
- தேவையானவை ஆகும்.
- கேரட்டில் விட்டமின் ஏ உள்ளதால் முடியோடு சேர்த்து, கண்களுக்கும் நல்லது. தோல் மற்றும் முடியை
- பாதுகாக்கும் தன்மை இதற்கு உண்டு.
- கேரட்டில் அதிக அளவு பீட்டாகரோட்டின் சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்குத் தூண்டுகின்றன.
- பாதாம், பீநட்ஸ், வால்நட், முந்திரி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- இவை முடிக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுப்பதோடு முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும்.
- தோலுக்கு நல்ல நிறத்தையும், முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.
சிம்பு மீது ஈர்ப்பு – நடிகை தன்ஷிகா பேட்டி
சிம்பு மீது ஈர்ப்பு – நடிகை தன்ஷிகா பேட்டி
சிம்பு மீது ஈர்ப்பு – நடிகை தன்ஷிகா பேட்டி
தமிழ் சினிமாவில் பேராண்மை, அரவாண், பரதேசி, கபாலி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தன்ஷிகா. கடந்த வருடம் வெளியான காலக்கூத்து படத்தினை தொடர்ந்து தற்போது கிட்னா, யோகிடா, இருட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். கபாலி படத்தில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டினர்.
தன்ஷிகா
இந்நிலையில் தற்போது சமீபத்தில் நடைப்பெற்ற பேட்டி ஒன்றில் தன்ஷிகா கூறியதை கேட்டு ரசிகர்கள் வியந்து வருகின்றனர். அந்த பேட்டியில் தன்ஷிகா நடிகர் சிம்பு மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு வரவேண்டிய கணவர் நம்பிக்கையுடையவராக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஒரு பாடலுக்கு ஆட ஒரு கோடி கேட்ட பிரபல நடிகை
ஒரு பாடலுக்கு ஆட ஒரு கோடி கேட்ட பிரபல நடிகை
ஒரு பாடலுக்கு ஆட ஒரு கோடி கேட்ட பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக பழனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். ஆனால் இவர் அதற்கு முன்பு தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானவர். பின்னர் தெலுங்கில் வெளியான மகதீரா என்ற படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவியவே, முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கி விட்டார்.
இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில் இன்றும் பிசியாக இருந்து வரும் நடிகை காஜல் அகர்வாலிடம் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இவரை அழைத்துள்ளனர்.
காஜல் அகர்வால்
அதற்கு காஜல் சம்பளமாக ஒரு கோடி கேட்டுள்ளார். இதனை கேட்ட தயாரிப்பாளர் ஒரு படத்திற்கு ஒரு நடிகை பெறும் சம்பளத்தை ஒரு பாடலுக்கு இவர் கேட்கிறாரே என அதிர்ச்சியாகி உள்ளார். இதனால் அந்த பாடலுக்கு நடனம் ஆடுவரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ரஜினி பிறந்தநாளுக்கு ரீ-ரிலீசாகும் பாட்ஷா
ரஜினி பிறந்தநாளுக்கு ரீ-ரிலீசாகும் பாட்ஷா
ஜினிகாந்தின் தர்பார் படத்துக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் தற்போது வெளியான தகவல் அவர்களை மேலும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 1995 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் ‘பாட்ஷா’. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் ’பாட்ஷா’. இந்த படம் சமீபத்தில் டிஜிட்டல் வடிவில் மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டது.
ரஜினி
இந்நிலையில், கோவா திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் கோல்டன் ஐகான் விருது பெற்றதை வரவேற்கும் விதமாகவும், அவரது பிறந்தநாள் அடுத்த மாதம் 12 ந் தேதி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டும் பாட்ஷா படத்தை மீண்டும் திரையிட அதன் தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவிஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அதில், “டிசம்பர் 11ம் தேதி ரஜினியின் பாட்ஷா படம் உலக அளவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திரையிடப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டபாயாவை தெரியாது என – முழங்கிய சந்திரிக்கா
இலங்கையில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோட்டபாயாவை எனக்கு யார் என தெரியாது என சந்திரிக்கா முழங்கியுளளார் .மகிந்தாவை மட்டுமே தெரியும் எனவும் கோட்டாவை தெரியாது எனவும் இதற்கு பின்னர் என்னுடன் பேசிட அனுமதி பெறவனேடிய சூழல் உங்களுக்கு ஏற்படும் என காட்டமாக பதில் அளித்தாராம் சந்திரிக்கா
ரணில் இராணுவ பாதுகாப்பு அதிரடியாக – நீக்கம்
முன்னாள் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட இராணுவ பாதுகாப்பு நீக்க பட்டுள்ளது ,எனினும் சஜித் பாதுகாப்பு நீக்க படவில்லை
பிக்குகள் இனி பாராளுமன்றம் செல்லா மாட்டார்கள்
இலங்கையின் நாயகன் கோட்டபாய பதவி ஏற்றுள்ள நிலையில் நாடும் ,மக்களும் பாதுகாப்பாக உள்ளனர் ,எனவே பிக்குகள் எவரும் வரும் தேர்தலிலோ அன்றி பாராளு மன்றத்திற்கோ செல்ல மாட்டனர் என கோத்தபாயவின் வாயாக செயல் படும் பிக்கு தெரிவித்துளளார் .
சிங்கள பவுத்த அரசை அமைக்கும் முயற்சியில் கோத்தா
இலங்கையில் ஜனாதிபதியாக அதிகாரத்தில் அமர்ந்துள்ள கோட்டபாய சிங்கள பவுத்த இனவாத அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் ,இதனை முழுமையாக அவர் செயல் ஆற்றுவார் எனின் அது சிறுபான்மை மக்களை பாதிப்பதுடன் ,அச்சம் கொள்ள வைக்கும் .இவரது இந்த செயலை உணராது மக்களும் வாக்குகளை அளித்துள்ளனர் .
சிங்கள வாக்குகள் மூலம் நான் வென்றேன் என மார் தட்டி இவர் செல்வார் எனின் பலவிளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜேவிபி எச்சரித்துள்ளது
1550 செக்ஸ் பட சீடிகளுடன் நபர் கைது
இலங்கை- மல்லிப்பூவை பகுதியில் வைத்து நபர் ஒருவர் 1550 செக்ஸ் பட சீடிகளுடன் கைது செய்ய பட்டுள்ளார் ,கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்ய பட்டுளளார்
கொழும்பில் ன் வீதியில் வாகன நெரிசல்களை குறைக்க பொலிசாருக்கு உத்தரவு
கொழும்பில் ன் வீதியில் வாகன நெரிசல்களை குறைக்க பொலிசாருக்கு உத்தரவு ,பாதுகாப்பு மந்திரி உயர் காவல்துறை அதிகாரிகளுடன் சந்தித்து கட்டளை பிறப்பித்தார்







