Posted in இலங்கை செய்திகள்

30 மில்லியன் போதைவஸ்துடன் இருவர் கைது

இலங்கையில் வெளிநாட்டு போதைவஸ்துக்களை கடத்தி வந்த நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

நவீன முறையில் நாட்டை கோட்டபாய பாதுகாப்பார் – நாமல்

நவீன முறைகளை பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கக்கூடும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்

Posted in இலங்கை செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் வாழ்த்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு கடிதம் மூலம் அவர் இந்த வாழ்த்துச் செய்தியை அறிவித்துள்ளார்.

Posted in சினிமா

காதல் சர்ச்சையில் சிக்கிய அனுபமா

காதல் சர்ச்சையில் சிக்கிய அனுபமா

கொடி படம் மூலம், தமிழில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தற்போது, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர், இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக, சமீபத்தில் தகவல் வெளியானது. உடனடியாக, அனுபமா அதை மறுத்தார். இந்நிலையில், இந்தி நடிகர் ஒருவருடன், அனுபமாவுக்கு காதல் என, தகவல்கள் வெளியாகின.

அனுபமா பரமேஸ்வரன்

இதனால், ஆத்திரம் அடைந்த அனுபமா, ”காதலிப்பதோ, திருமணம் செய்து கொள்வதோ, அவரவரின் தனிப்பட்ட விஷயம். இதில், அடுத்தவர் தலையிடுவது அநாகரிகம். என் வாழ்க்கையை தீர்மானிக்க, எனக்கு தெரியும். இது குறித்து, பிறர் கவலைப்பட வேண்டாம்,” என, கோபமாக தெரிவித்துள்ளார்.

மிஞ்சிய சாதம் தூக்கி போடாமல் 10 நிமிடத்தில் தித்திக்கும் ஸ்வீட் செஞ்சு அசத்துங்க|LeftOverRice Sweet
Posted in சினிமா

என் வாழ்க்கையை மாற்றியது அவர்தான் – ரஜினிகாந்த்

என் வாழ்க்கையை மாற்றியது அவர்தான் – ரஜினிகாந்த்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்ற மத்திய அரசின் சிறப்பு விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. இதையொட்டி ரஜினிகாந்த் தூர்தர்‌ஷன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோல்டன் ஐகான் விருது அறிவிக்கப்பட்டது ஆச்சர்யத்தை அளித்தது. இந்த விருதுக்கு நான் தகுதியானவனா என்ற எண்ணம் கூட ஏற்பட்டது. இருப்பினும், பெருமையுடன் விருதை ஏற்று கொண்டேன். விருதை அறிவித்த அரசிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மற்றவர்களை போல தான் நானும் வாழ்கிறேன். பாலச்சந்தரை சந்தித்தது திருப்பு முனையாக இருந்தது. அவர்தான் எனது வாழ்க்கையை மாற்றினார். நான் கதாநாயகனாக வருவேன் என நினைத்தது இல்லை. பாலசந்தர் தான் என்னை தமிழ் படிக்குமாறு கூறினார். எனக்குள் இருந்த திறமையை வெளிக்காட்டினார். பழைய நண்பர்களுடன் தொடர்பில் உள்ளேன். அவர்களுடன் இருக்கும் போது, மகிழ்ச்சியாக உள்ளேன்.

ரஜினிகாந்த்

சிவாஜி ராவாக உணர்கிறேன். வாழ்க்கையில் அனைத்தும் நடிப்பு தான். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிக்க வேண்டும். எனது துறையை, நடிப்பை மிகவும் ரசிக்கிறேன். ராகவேந்திரர் மீது நம்பிக்கை உள்ளது. இமயமலை செல்வதால், எனக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இளம் நடிகர்கள், தங்களது பணியை எந்த பணியாக இருந்தாலும், அதனை ரசித்து செய்ய வேண்டும்.

Posted in இலங்கை செய்திகள்

தமிழ் மக்கள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல் – படங்கள் உள்ளே

மீண்டும் வாக்களித்த தெரனியகல நூரி தோட்ட மக்கள் அச்சத்தில்
இராணுவ முகாம் அகற்றபட்டமை இந்த நிலமைக்கு காரணம்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று (16) கேகாலை மாவட்;டம் தெரனியகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நூரி தோட்டத்தில் வாக்களிக்க சென்று திரும்பிக் கெண்டிருந்த ஆர். பிரகாஷ் என்பவரை தாக்கி போத்தலால் குத்தி கையில் காயப்படுத்திய சம்பவத்தை தொடர்ந்து இவர் கைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது விடு திரும்பி உள்ளார். தொடர்ந்து இந்த தோட்டத்தில் குறித்த சில வீடுகளும் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த சம்பவத்துடன் தொடர்பு உடைய சந்தேக நபர்கள் ஆறு பேர் கைது செய்யபட்டு நிதிமன்றில் ஆஜர்படுத்தி பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு மீண்டும் 25.11.2019 இடம் பெறவுள்ளது.

இந் நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் இந்த மக்களின் நாளாந்தம் செயற்பாடுகளுக்கு அச்சுருத்தலாகவும் இடையூராகவும் இருந்து வருவதினால் மக்கள அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த விடயம் குறித்து பொலிஸாருக்கும் புகார் செய்யபட்டு உள்ளது.

குறிப்பாக இந்த பிரதேசத்தில் அடிக்கடி இவ்வாறன சமூக முரண்பாடான விடயங்களும் இன முரண்பாடன விடயங்களும் அன்மை காலம் தொட்டு நடந்து வருகின்றது. இதனை இல்லாது ஒழிக்கவும் பாதுகாப்பை உறுதி செயய்யவும் முன்னைய காலத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் விஷேட இராணுவ முகாம் ஒன்றினை நிறுவி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். தொடர்ந்து வந்த அரசாங்கம் அதனை அகற்றபட்டமையினாலயே இந்த பிரச்சனை தோன்றி உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தும் அதே நேரம் மீண்டும் அந்த இராணுவ முகாமை நிறுவுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் தற்போது ஜனாதிபதியாக உள்ள அதே கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கு கடிதம் மூலம் நகல் ஒன்றினையும் அனுப்பி உள்ளனர்

இந்த நகல் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

தெரனியகல பிரதேச செயலகம் பஸ்னாலக கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட நூரி தோட்டத்தில் சுமார் 07 வருடத்தற்கு முன்னர் தோட்ட முகாமையாளர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை சம்வத்தை தொடர்ந்து. சம்பவத்துடன் தொடர்புபட்ட 18 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கபட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த தோட்டத்தில் பாதுகாப்பு நிமித்தம் விஷேட இராணுவ முகாம் ஒன்றினை நிறுவி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். தொடர்ந்து வந்த அரசாங்கம் அதனை அகற்றியது. இந் நிலையிலேயே இவ்வாறான பிரச்சனைகள் தோன்றி வருகின்றன.

இந்த காலப்பகுதியில் தோட்டத்திலும் தோட்டத்திறகு அண்டிய கிராம பகுதியிலும். பாதுகாப்பு உறுதிப்படுத்தபட்டதுடன். சட்டவிரோத மதுபான உற்பத்தி¸ சட்டவிரோத மரம் வெட்டுதல்¸ கற்பழிப்புக்கள்¸ கள்ளத்தனமான மணல் விற்பனை¸ போன்ற சட்ட விரோதமான செயற்பாடுகள அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததுடன் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் மேற்படி சட்டவிரோதமான செயற்பாடுகள் அனைத்தும் இப்பிரதேசத்தில் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாகவே மேற்படி தேர்தல் காலத்தில் ஏற்பட்ட பிரச்சனையுமாகும். இதனை தற்போது இந்த நாட்டிற்கு புதிய ஜனாதிபதியாக உள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் கவனத்திற் கொண்டு நீங்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் இருந்த பாதுகாப்பை மீண்டும் பெற்று தருமாறும் சட்டவிரோதமான செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து எங்களின் வாழ்வில் ஒளியோற்றுமாறும் மக்கள மேலும் பெற்றுத்தறுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

அமைச்சர் ஆனார் டக்கிளஸ் – வடக்கில் ஆட்டம் ஆரம்பம்

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோட்டபாய தலைமையில் புதிய அமைச்சர்கள் நியமிக்க பட்டனர் .இவ்வாறு அமைக்க பட்ட 15 பேர்களில் டக்கிளஸ் அமைச்சு பதவியை பெற்றுள்ளார் ,இவர் வடக்கின் வசந்தம் என்ற பாணியில் இனி அபிவிருத்தியை செய்வாராம்- இதன்போது கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

திருகோணமலையில் இரண்டு குழுக்களுக்கிடையில் கடும் மோதல்

திருகோணமலையில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் போது இருவர் காயமடைந்துள்ளனர்.

திருகோணமலையில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் போது இருவர் பலத்த காயங்களுக்குள்ளானதோடு,சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கும் பணி ஆரம்பம்

இலங்கையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்ய பட்ட நிலையில் தற்போது கோட்டபாய முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு இடம்பெற்ற வண்ணம் உள்ளது

கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL
Posted in இலங்கை செய்திகள்

பணி மூப்பு அடிப்படையில் ஆசன தெரிவு – கோட்டபாய புதிய உத்தி

இலங்கையில் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டபாய தெரிவு செய்ய பட்ட நிலையில் பாராளுமன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் .இதில் அவர் தம் பணிமூப்பு அடிப்படையில் ஆசனங்களை தெரிவு செய்ய உள்ளனராம்

Posted in இலங்கை செய்திகள்

பற்றி எரியும் கெமிக்கல் பக்டரீ

இலங்கை -மொரட்டுவ பகுதியில் உள்ள இராசயன தொழில் சாலையில் திடீரென பற்றி பிடித்தா தீயினால் அந்த மாடி கட்டிடம் தீ பற்றி எரிந்த வண்ணம் உள்ளது ,தீயணைப்பு படையினர் மற்றும் விமான படையினர் தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

மக்களின் எதிர்ப்பின் மத்தியில் வெற்றிபெற்றோம் – எனவே மக்களுக்கு நல்லது செய்யுங்கள் அமைச்சர்களுக்கு கோட்டா உத்தரவு

தெரிவுக் குழுவின் அனுமதியின் கீழ் மாத்திரமே அரச நிறுவனங்களுக்கான உயர் அதிகாரிகளை நியமிக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மாத்திரமே இடைக்கால அரசாங்கத்திற்கு அமைச்சரவை நியமிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

பாரிய எதிர்ப்பார்ப்புடனே பொதுமக்கள் எம்மை வெற்றியடையச் செய்தனர்.

எமக்கு பாரிய சவால்கள் உள்ளன. இந்த சவால்களை வெற்றிக் கொள்ள வேண்டும். அதேபோல் பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புக்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

கடந்த காலப்பகுதியில் நிலவிய அரசியல் கலாசாரம் தொடர்பில் பொதுமக்கள் பாரியளவில் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

புதிய அரசாங்கம் அந்த கலாசாரத்தில் இருந்து வௌியே வந்து பொதுமக்கள் எதிர்ப்பார்த்த புதிய சகாப்தத்திற்கு செல்ல வேண்டும்.

அதற்காக, நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொதுமக்களிடம் உறுதியளித்த விடயங்களை செயற்படுத்த இன்று நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் உதவியை எதிர்ப்பார்க்கிறேன்.

நாம் அமைச்சரவையை 15 ஆக மட்டுப்படுத்தியுள்ளோம். அந்த அமைச்சர்களின் கீழ் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

Posted in சினிமா

தனுஷ் படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா

தனுஷ் படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கிய படம் அசுரன். தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள இப்படம் 50 நாட்களை கடந்து திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை டோலிவுட்,பாலிவுட் பிரபலங்களும் பார்த்து பாராட்டினர்.

மஞ்சு வாரியர், தனுஷ்

அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கி உள்ளன. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. முன்னணி நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் முதலில் ஸ்ரேயா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் அனுஷ்காவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Posted in சினிமா

இதற்காக தான் தினமும் 12 மாத்திரைகள் சாப்பிட்டேன் – இலியானா

இதற்காக தான் தினமும் 12 மாத்திரைகள் சாப்பிட்டேன் – இலியானா

நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரூவை தீவிரமாக காதலித்து வந்தார். இலியானாவுக்கும் அவரது காதலருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்துவிட்டனர்.

காதல் முறிந்ததை அடுத்து அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருந்தார். தன் காதலரை விட்டு பிரிந்ததால் இலியானா மிகவும் மன அழுத்தத்துக்கு உள்ளானதாகவும், அதிலிருந்து மீண்டது குறித்து அவர் கூறியதாவது:- வாரந்தோறும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வருவதால் படங்களில் நடிப்பதை கூட ஒத்தி வைத்திருக்கிறேன்.

இலியானா

மன அழுத்தத்தால் சில சமயங்களில் ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் சாப்பிட்டு வந்தேன். அதனால் உடல் எடையும் அதிகமாக கூடி விட்டது. உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்முக்கு சென்று விட்டு வெளியே வரும்போது அந்த புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பலர் பதிவிடுகிறார்கள். இதனாலேயே நான் ஜிம்முக்கு செல்வதையும் தவிர்த்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

Posted in சினிமா

16 வயதில் டேட்டிங் சென்றேன் – ராசி கன்னா

16 வயதில் டேட்டிங் சென்றேன் – ராசி கன்னா

தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் ராசி கன்னா. தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் நடிப்பில் கடந்த வாரம் சங்கத்தமிழன் படம் திரைக்கு வந்தது.

ராசி கன்னா

இந்த படத்தில் இவரின் நடிப்பு எல்லோராலும் கவரப்பட்டுள்ளது, இந்த நிலையில் ராசி கன்னா ஒரு பேட்டியில் தான் டேட்டிங் சென்றது குறித்து பேசியுள்ளார். அதில் ‘நான் 16 வயதில் ஒரு பையனுடன் டேட்டிங் சென்றேன். அந்த பையனின் வயதும் 16 தான்’ என்று கூறியுள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்கா – வெள்ளை மாளிகைக்குள் புகுந்த மர்ம கார் – போலீசார் குவிப்பு

அமெரிக்கா – வெள்ளை மாளிகைக்குள் புகுந்த மர்ம கார் – போலீசார் குவிப்பு

அமெரிக்கா அவெள்ளை மலைக்கு அருகில் பென்ஸ் ரக கார் ஒன்று புக முனைந்துள்ளது ,சோதனையில் நின்ற போலீசார் காரை நிறுத்தி சோதனை செய்து வருவதுடன் குறித்த சாரதி கைது செய்ய பட்டுளளார் ,இவர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை ,இது தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டதாக இருக்கலாம் என அஞ்ச படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

பிரான்ஸ் -கப்பலுக்குள் லொறிக்குள் பதுங்கி வந்த 16 பேர் கைது

கப்பலுக்குள் லொறிக்குள் பதுங்கி வந்த 16 பேர் கைது

பிரான்சில் இருந்து லொறி ஒன்றுக்குள் மறைத்து வந்த 16 குடியேற்ற வாசிகள் கைதுசெய்ய பட்டுள்ளனர் ,ferry from France bound for Ireland.லொறிக்குள் இருந்தே இவர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் ,மூன்று நாட்கள் உணவு ஏதுமின்றி சோர்ந்து போனநிலையில் இவர்கள் கண்டு பிடிக்க பட்டனர்

,லாரியின் பின்வழியாக இவர்கள் இருப்பதை அவதானித்த சாரதி கப்பல் ஊழியர்களுக்கு தெரிவித்த நிலையில் அவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து கைது செய்ய பட்டனர் ,

எனினும் உடன் விரைந்து சூடான காபி மற்றும் உணவுகளை என்பன வழங்க பட்டு மருத்துவ சோதனைக்கு உள்ளாக்க பட்ட்தாக கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம் நிகழும்: சீமான் பதிலடி

ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம் நிகழும்: சீமான் பதிலடி

அவரது ட்விட்டர் பதிவு:

“ஆம்! அதிசயம் நிகழும். ‘தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்’ என்கிற நினைப்பிலும்,மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடகவெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021-ல் நடக்கும், நடந்தே தீரும்”.

இவ்வாறு சீமான் பதிவிட்டுள்ளார்.

அதற்குக் கீழே ரஜினி ரசிகர்கள் அதுதான் சீமானை வெற்றுப் பிம்பம் என்று விமர்சித்துவிட்டு எதற்காக அவரைப் பற்றி பேச வேண்டும். பயமா? எனக் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

நான் அறிவிக்காத – போலியான செய்திகள் பரப்ப படுகின்றது – கோத்தா கூவல்

என்னால் அறிவிக்கப்பட்ட “அரச முடிவுகள்” என, சமூக ஊடகங்களில் பல தவறான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. எனது எந்தவொரு முடிவு அறிவிப்பும் – ஜனாதிபதி செயலகத்தின் முத்திரை பொறிக்கப்பட்டு, ஜனாதிபதி ஊடகப் பிரினாலோ அல்லது எனது அதிகாரபூர்வ சமூக ஊடக தளங்களின் ஊடாகவோ மட்டுமே அறிவிக்கப்படும். click here

கோட்டா
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் நாளுக்கு இதுவரை இடையூறு இல்லை – சிறிதரன்

மாவீரர் நாளுக்கு இதுவரை இடையூறு இல்லை – சிறிதரன்

தமிழீழ மக்களின் சுதந்திர வாழ்விற்கு தம்மை அர்ப்பணித்த புனித தெய்வங்களாம் மாவீரர் நாளினை இம்முறை மக்கள் மேற்கொள்ள தயாராகி வருகின்றனர் ,மாவீரர் மாயணங்கள் துப்பரவு பணிகள் என்பன இடம்பெற்று வருகின்றன

,.இதுவரை அந்த மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்விற்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படவில்லை ,அவ்வாறு ஏற்படின் அவ்வேளை அது தொடர்பாக பரிசீலனைக்கு உட்படுத்துவோம் என மக்கள் நாயகன் சிறிதரன் முழங்கியுள்ளார்