வவுனியாவில் திருடர்களை விடுதலை செய்த பொலிஸார் – photo

Spread the love

வவுனியாவில் திருடர்களை விடுதலை செய்த பொலிஸார் – photo

வவுனியாவில் திருடர்களை விடுதலை செய்த பொலிஸார் : இரவில் பொலிஸ் நிலையம் முன் திரண்ட இளைஞர்கள்

வவுனியா பாரதிபுரம் பகுதியில் மூன்று திருடர்களை மடக்கி பிடித்து இளைஞர்கள் பொலிஸ் நிலையத்தில்

ஒப்படைந்திருந்த நிலையில் இரு திருடர்களை பொலிஸார் விடுதலை செய்துள்ளதாக தெரிவித்து நேற்றையதினம்

(17.02.2020) இரவு 10.00 மணியளவில் அக்கிராம இளைஞர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டனர்

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் , விநாயகபுரம் , 50வீட்டுத்திட்டம்

போன்ற பகுதிகளில் கடந்த 15.02.2020 அன்றையதினம் சில வீடுகளிலிருந்த முச்சக்கரவண்டியின் பேட்ரிகள் களவாளப்பட்டிருந்தன.

இதனையடுத்து நேற்று முன்தினம் (16.02) அப்பகுதி இளைஞர்கள் ஒன்றினைந்து நள்ளிரவில் குறித்த பகுதிகளில் நடமாடியவர்களின் விபரங்களை கேட்டறிந்து குறித்த

திருடர்களில் இருவரை மடக்கி பிடித்து (16.02.2020) அன்றையதினமே வவுனியா பொலிஸ் நிலையத்தில்

ஒப்படைத்திருந்தனர் . எனினும் பொலிஸார் குறித்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆயர்படுத்துவதற்குரிய

எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது அவர்களை அன்றையதினமே விடுதலை செய்துள்ளனர்.

பொலிஸில் ஒப்படைந்த திருடர்கள் நேற்றையதினம் (17.02) அப்பகுதியில் நடமாடியதினை கண்ட அப்பகுதி

இளைஞர்கள் அவர்களை மடக்கி பிடித்து தொலைபேசியில் அவர்களை வாக்குமூலத்தினை பெற்றுள்ளனர்.

இதன் போது மூவர் இணைந்து இவ் திருட்டு சம்பவத்தில் தொடர்புபட்டுள்ளனர் என கண்டறிப்பட்டது.

இதனையடுத்து குறித்த மூன்று திருடர்களையும் நேற்றையதினம் மாலை 5.30 மணியளவில் வவுனியா

பொலிஸ் நிலையத்தில் மீண்டும் ஒப்படைத்த சமயத்தில் அவர்களில் இருவரை பொலிஸார் விடுதலை செய்துள்ளதாக

தெரிவித்து அக்கிராம இளைஞர்கள் வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக இரவு 10.00 மணி தொடக்கம் 11.30

மணிவரை தீர்வு கிடைக்க வேண்டுமேன தெரிவித்து காத்திருந்தனர்.

அதன் பின்னர் வன்னி பிராந்திய தமிழ் மொழி மூல பொலிஸ் முறைப்பாட்டு பிரிவுக்கு இவ்விடயத்தினை

தெரியப்படுத்தியமையினையடுத்து அவர்கள் உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக தெரிவித்தமையினையடுத்து குறித்த இளைஞர்கள் வீடு திரும்பினர்.

எனினும் இது வரை பொலிஸாரினால் விடுதலை செய்யப்பட்ட இரு திருடர்களை பொலிஸார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் திருடர்களை

Leave a Reply