Author: நிருபர் காவலன்
அந்த வேடத்தில் மட்டும் நடிக்க மாட்டேன்
அந்த வேடத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் – மீனா
எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் என்பதில் நடிகை மீனா உறுதியாக இருக்கிறாராம்.
அந்த வேடத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் – மீனா
மீனா
நடிகை மீனா 1991-ம் ஆண்டு வெளியான `என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் ரஜினி,
கமல், விஜய், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக
வலம் வந்தார். திருமணத்துக்கு பின்னர் படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான மீனா, மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். குழந்தை பெற்றுக்கொண்ட
கதாநாயகிகளை பெரும்பாலும்,`அம்மா’ வேடத்துக்கு தள்ளிவிடுவார்கள்.
மீனா
ஆனால் மீனாவோ எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், கதாநாயகனின் அம்மாவாக நடிக்க மாட்டேன்” என்பதில்
உறுதியாக இருக்கிறாராம். இப்போது அவர், சிவா-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் `அண்ணாத்த’ படத்திலும், வெப் தொடர்
ஒன்றிலும் நடித்து வருகிறார். பிடித்தமான வேடங்கள் வந்தால், தொடர்ந்து வெப் தொடரில் நடிக்க மீனா முடிவு செய்து இருக்கிறாராம்.
பெண்களை போதை பொருளாக பார்க்கிறார்கள் – ரகுல் ப்ரீத் சிங்
பெண்களை போதை பொருளாக பார்க்கிறார்கள் – ரகுல் ப்ரீத் சிங்
தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், இந்த சமூகம் பெண்களை போதை பொருளாக பார்ப்பதாக கூறியுள்ளார்.
பெண்களை போதை பொருளாக பார்க்கிறார்கள் – ரகுல் ப்ரீத் சிங் வேதனை
ரகுல் ப்ரீத் சிங்
தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை சமூக
வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவற்றுக்கு விமர்சனங்களும் எழுகின்றன. சிலர் ஆபாசமாக திட்டி கருத்து பதிவிட்டனர்.
இதற்கு பதிலடி கொடுத்து ரகுல் பிரீத் சிங் கூறியிருப்பதாவது:- “நடிகைகளை சிலர் கேவலமாக பார்க்கிறார்கள். சினிமாவில்
நடிப்பவர்கள்தானே இவர்களால் நம்மை என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள். அதனால் சமூக வலைத்தளங்களில்
என்னைப்பற்றி ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் கருத்துகளை பதிவிடுகிறார்கள்.
ரகுல் ப்ரீத் சிங்
இவை மனதளவில் என்னை மிகவும் பாதித்து உள்ளன. பெண்களை போதை பொருளாக இந்த சமூகம் பார்க்கிறது. அந்த நிலைமை மாற
வேண்டும். சமூக வலைத்தளத்தில் ஒருவர், நான் அணிந்த உடை குறித்து எல்லை மீறி ஆபாசமாக பேசினார். எனக்கு கோபம் வந்தது. அவரை திட்டினேன்.
போலி கணக்குகள் பின்னால் ஒளிந்து உண்மையான முகத்தை வெளிகாட்ட துணிச்சல் இல்லாத கோழைகள்தான் நடிகைகளின்
வலைத்தள பக்கத்தில் இதுபோன்ற ஆபாச கருத்துகளை பதிவிடுகிறார்கள். இவர்களுக்கு சமூக வலைத்தள பக்கத்தில்
கணக்குகள் தொடங்க முடியாத நிலையை உருவாக்க வேண்டும். அப்படி என்றால்தான் இதுபோன்ற அத்துமீறல்களை தடுக்க முடியும்”.
இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.

ஆர்யாவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை
ஆர்யாவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்யாவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை
ஆர்யா
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இவர் தற்போது ஆர்யா
நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு, ‘சல்பேட்டா’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது. குத்துச்சண்டை
விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஆர்யா பாக்ஸராக நடித்துள்ளார். படத்தில் விறுவிறுப்பான குத்துச்சண்டை காட்சிகள் உள்ளன.
பா.ரஞ்சித், துஷாரா
இந்நிலையில், இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை துஷாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்
ஏற்கனவே ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் முக்கிய கதாபாத்திரத்தில்
நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது

தனுஷ் படத்துக்காக தோற்றத்தை மாற்றிய மலையாள நடிகை
தனுஷ் படத்துக்காக தோற்றத்தை மாற்றிய மலையாள நடிகை
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்துக்காக மலையாள நடிகை ஒருவர் தனது தோற்றத்தை மாற்றி நடித்துள்ளார்.
தனுஷ் படத்துக்காக தோற்றத்தை மாற்றிய மலையாள நடிகை
தனுஷ்
மலையாளத்தில் கடந்த 2016ல் அனுராக கரிக்கின் வெள்ளம் என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை
வென்றார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ரஜிஷா விஜயன்
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தில் தென் தமிழகத்தை சேர்ந்த கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் ரஜிஷா. சமீபத்தில் இந்தப்படத்தில் இவர் நடிக்கும் கதாபாத்திரத்தின்
புகைப்படங்கள் வெளியாகி ஆச்சர்யப்படுத்தியுள்ளன. இதுவரை இவர் நடித்து வந்த கதாபாத்திரங்களுக்கு சம்பந்தமில்லாமல்,
இவரது நிஜ தோற்றத்தும் சம்பந்தமில்லாமல் ஆளே மாறிப்போயுள்ளார் ரஜிஷா விஜயன்.

நயன்தாரா – வைரலாகும் புகைப்படங்கள்
நயன்தாரா – வைரலாகும் புகைப்படங்கள்
மகளிர் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடைபயண பேரணியை நடிகை நயன்தாரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மகளிர் தின விழாவில் நயன்தாரா – வைரலாகும் புகைப்படங்கள்
நயன்தாரா
உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற நடைபயண பேரணி நடந்தது. பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது. இன்று காலை 7 மணிக்கு பேரணி தொடங்கியது. பேரணியை நடிகை நயன்தாரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தொடங்கி எத்திராஜ் சாலை, கல்லூரி சாலை, ஹாடேவ்ஸ் சாலை, ஆயகர் பவன் வழியாக
நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு கன்வென்ட் அரங்கத்தை அடைந்தது. அங்கு பேரணி நிறைவு விழா நடந்தது. கல்லூரிகளுக்கிடையே நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
நயன்தாரா
பேரணியையொட்டி பெண் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நடிகை நயன்தாராவுடன் ‘செல்பி’
எடுத்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கு கருப்பு நிற உடையில் ஸ்டைலாக வந்த நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேன் – ஜான்வி
அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேன் – ஜான்வி
நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிப்பதாக ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் கூறியிருக்கிறார்.
நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேன் – ஜான்வி
ஜான்வி கபூர்
ஸ்ரீதேவி மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார், அவரது மகளும், நடிகையுமான ஜான்வி கபூர்.
சமீபத்தில், தன் தாயின் இரண்டாவது நினைவு நாள் அன்று, தன் குழந்தை பருவத்தில் எடுத்த, கறுப்பு – வெள்ளை புகைப்படத்தை
சமூக வலைதளத்தில் வெளியிட்டு, ‘ஒவ்வொரு நாளும் உங்கள் இழப்பை உணர்கிறேன்’ என, பதிவிட்டிருந்தார் ஜான்வி.
ஜான்வி கபூர்
”படப்பிடிப்பு, சுற்றுலா, தோழியருடன் ஊர் சுற்றுதல் என, நாட்கள் பரபரப்பாக நகர்ந்தாலும், என்னுடன் இப்போது அம்மா இல்லை
என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன். அவரது நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

அஜித் பெயரில் போலி அறிக்கை – ரசிகர்கள் அதிர்ச்சி
அஜித் பெயரில் போலி அறிக்கை – ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார் பெயரில் போலி அறிக்கை ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அஜித் பெயரில் போலி அறிக்கை – ரசிகர்கள் அதிர்ச்சி
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். ரசிக மன்றங்களை கலைத்துவிட்ட அஜித் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட
அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் ஒதுங்கியே இருக்கிறார். ஆனால், அவருடைய ரசிகர்கள் சமூகவலை தளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.
நேற்று அஜித் பெயரில் ஒரு கடிதம் சமூகவலைதளங்களில் பரவியது. அது அஜித் கையெழுத்துடன் அவரது லெட்டர் பேடில்
வெளியானதால் பரபரப்பானது. அந்த அறிக்கையில், “என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர்
அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன்.
அஜித்
இதற்கான காரணங்களைப் பலமுறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். தற்போது மீண்டும் சமூக வலைதளத்தில்
இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. சைபர் கிரைம் அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய
உத்தியோகபூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன்மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதனைக் காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது
எனக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக அஜித் தரப்பில் விசாரித்த போது, “அந்த அறிக்கை போலியானது என்று விளக்கம் அளித்துள்ளனர்.

நாகரிகம் இருந்தால் விஷால் வரமாட்டார் – பாரதிராஜா
நாகரிகம் இருந்தால் விஷால் வரமாட்டார் – பாரதிராஜா
நாகரிகம் தெரிந்தவராக இருந்தால் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று விஷால் வரமாட்டார் என்று பாரதிராஜா பேட்டியளித்துள்ளார்.
நாகரிகம் இருந்தால் விஷால் வரமாட்டார் – பாரதிராஜா
பாரதிராஜா – விஷால்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் விஷாலின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வந்தது.
சங்கத்துக்கு தேர்தல் நடத்த விருந்த நிலையில், அதில் முறை கேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தனி அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த
நீதிபதி, ஜூன் 30ம் தேதிக்குள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் இன்றைய நிலை குறித்து சென்னையில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார்,
முரளிதரன், பாரதிராஜா உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது: –
பாரதிராஜா
‘தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் என்பது தேவை இல்லை. ஒற்றுமை இல்லாமல் அனைவரும் பல அணிகளாக பிரிந்து
நிற்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். தலைவர் பதவிக்கு வருபவர்களுக்கு சேவை மனப்பான்மை இருக்க வேண்டும்.
ஆனால் பலதரப்பட்ட போட்டி வரும்போது சேவை மனப்பான்மை இருக்காது. ஆகவே தான் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களில்
முக்கியமான சிலர் கூடிப் பேசி ஒரு நல்ல தலைவரை தேர்வு செய்யலாம் என நினைக்கிறோம்.
பதவிக்கு வரும் நபர்கள் தன்னுடைய அடையாளத்தை தொலைத்து விட்டு செயலாற்ற வேண்டும். தேர்தல் இல்லாமல் வயதில் மூத்த தயாரிப்பாளர்கள் சொல்வதை கேட்டு ஒத்துப் போகும் ஒருவர்
தலைமை இடத்திற்கு வர வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். விஷால் மீது பல்வேறு ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளன.
எனவே நாகரிகம் தெரிந்தவராக இருந்தால் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று விஷால் வரமாட்டார். பொது வாழ்வில் குற்றம் இல்லாதவர் தான் தேர்தலில் நிற்க வேண்டும்.
இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

இரகசிய ஏவுகணை தொழிற் சாலையை கைப்பற்றிய இராணுவம்
இரகசிய ஏவுகணை தொழிற் சாலையை கைப்பற்றிய இராணுவம்
சிரியாவில் துருக்கிய ஆதரவு படைகளுக்கு எதிராக தாக்குதலை
தீவிர படுத்திய சிரியாஅரச படைகள் தற்பொழுது
தாம் மிகவும் இரகசியமாக இயங்கி வந்த கிளர்ச்சி படைகளின்
3 ஏவுகணை தொழில் சாலைகளை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது
இட்டிலி ,அலெப்போ பகுதிகளில் மண் மீட்பு போரை நடத்திய
படையினர் இந்த ஆயுத கூடத்தை மீட்டுள்ளதாகவும் அதில்
ஆட்டிலொறிகள் ,ஏவுகணைகள்,மற்றும் மோட்டார் குண்டுகள் என்பன தயாரித்து வந்துள்ளதாக காட்சி படங்களுடன்
வெளியிட்டுள்ளன ,மேலும் அங்கிருந்த ஏராளமான ஏவுகணைகள் ,மோட்டார்,குண்டுகள் என்பனவற்றையும் மீட்டுள்ளன
சிரியா இராணுவம் ,ஈரான் மற்றும் ரசியாவின் ஆதரவுடன் துருக்கிய ஆதரவு படைகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
இழந்த கணிசமான பகுதிகளை மீட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

சிரியாவில் கடும் மோதல் 6100 கிளர்ச்சி படைகள் பலி -2550 பேர் காயம் video
சிரியாவில் கடும் மோதல் 6100 கிளர்ச்சி படைகள் பலி -2550 பேர் காயம் video
சிரியாவின் இட்லிப் மற்றும் அலெப்போ பகுதியில்
இடம்பெற்று வந்த கடும் மோதலில் சிரியா அரச இராணுவத்தால் துருக்கிய அதரவு கிளர்ச்சி படைகள் 6100 பேர் படுகொலை செய்ய
பட்டுள்ளதாகவும் மேலும் #
சுமார் 2550 பேர் படுகாயமடைந்துள்ளதாக சிரியா அரச இராணுவம் அறிவித்துள்ளது
காணொளியில் முழுமையான செய்திகளை பாருங்கள்

சவூதி எண்ணெய் கப்பல் மீது ஆள் இல்லா படகு தற்கொலை தாக்குதல்
சவூதி எண்ணெய் கப்பல் மீது ஆள் இல்லா படகு தற்கொலை தாக்குதல்
அரேபிய கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த சவூதி நாட்டின் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது திடீர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,குறித்த கப்பலை திடீரென சுற்றிவளைத்த நான்கு படகுகள் .
இதில் ஒன்று ஆள் இல்லாது ரிமோட் கொன்றோல் மூலம் இயங்க வல்லது ,அந்த படகுக்குள் வெடிமருந்துகள் நிரப்ப பட்டு தாக்குதலை
நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது ,மேற்படி தாக்குதல் சம்பவம் பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் இவை எமன்
கடல்வழி பயணத்திற்கும் ,அரேபிய கப்பல் போக்குவரத்து பாதைக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
மேற்படி தாக்குதல் தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இது ஈரான் திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம்
என சந்தேகிக்க படுகிற பொழுதும் அதனை வெளிப்படையாக சவூதி தெரிவிக்கவில்லை
தமது பழிவாங்கும் தாக்குதல் தொடரும் என ஈரான் அறிவித்திருந்தது ,அதன் ஒரு அங்கமாக இதனை பார்க்க முடிகிறது

.
கொரனோ வால் – லண்டனில் தமிழர் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு
கொரனோ வால் – லண்டனில் தமிழர் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு
கொரனோ நோய் பரவிய நிலையில் வர்த்தக துறையில் பெரும் தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளது ,இலங்கை நாட்டில் இருந்து
பறந்து வரும் இலங்கை பொருட்கள் பிரிட்டனில் குறிப்பாக லண்டன் தமிழர் கடைகளில் விலையானாலும் வாங்கிட முடியும் ,ஆனால் சில
வாரங்களாக அதனை பெற முடியாது தமிழர்கள் தவித்து வருகின்றனர் .தூள்,அரிசி,மரக்கறிகள்,மற்றும் ,பிஸ்கட் போன்றவற்றுக்கு பெரும் தட்டு பாடு நிலவுகிறது
விமான போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதமே இதற்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்து வருகின்றனர் ,இதனால் தமிழர்கள் பெரும் சோகத்தில் உறைந்துள்ளனர் ,
தமிழர் கடைகளில் மக்கள் முண்டியடித்து பொருட்களை வாங்கி சேமித்தும் வருகின்றனர் என்பதை காண முடிகிறது ,

இஸ்ரேல் ,அமெரிக்கா திடீர் இராணுவ ஒத்திகை – மிரளுமா ஈரான் ..?
இஸ்ரேல் ,அமெரிக்கா திடீர் இராணுவ ஒத்திகை – மிரளுமா ஈரான் ..?
அமெரிக்கா,மற்றும் இஸ்ரேல் படைகள் திடீர் இராணுவ போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,சுமார் பத்தாயிரம் படைகள் இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் .
இவ்வாறு பெரும் தொகையில் இந்த இராணுவ பயிற்சியில் ஈடுபடுவது ஈரான் தாக்குதல் அச்சம் மற்றும் அவர்களை இதன்
ஊடாக மிரள வைக்கும் முயற்சியில் ஒன்று என எதிர் பார்க்க படுகிறது
கொரனோ வைரஸ் உலகை ஆட்டி படைத்தது கொண்டிருக்கும் நிலையில் இவர்களோ தமது இராணுவ தாக்குதல் முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளனர்
ஈரான் தமது இரண்டாம் நிலை தலைவரும் ,தளபதியுமான சுலைமானியின் படுகொலைக்கு பழிவாங்கும் தாக்குதல்களை
தொடுப்போம் என அறிவித்திருந்த நிலையில் இந்த ஒத்திகை அவசரமாக பெரும் தொகையில் இடம்பெற்றுள்ளது
உள்ளக ரீதியாக ஏதோ ஒன்று இடம்பெற போவதை இவை உணர்துகின்றன .
மேலும் இந்த இராணுவ ஒத்திகைக்கு ஜூனிபர் கோப்ரா வான் பாதுகாப்பு பயிற்சி என பெயர் சூட்ட பட்டுள்ளதுடன் இங்கே
ஏவுகணைகள் என்பனவும் ஏவி தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன என்பதை கவனியுங்கள்
சமாச்சாரம் வேறு திசையி செல்ல போவதை இவை உணர்த்துகின்றன

விவாகரத்தான இயக்குனரை மணக்கும் அனுஷ்கா
விவாகரத்தான இயக்குனரை மணக்கும் அனுஷ்கா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, விவாகரத்தான இயக்குனரை திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
விவாகரத்தான இயக்குனரை மணக்கும் அனுஷ்கா?
அனுஷ்கா
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அனுஷ்காவுக்கு இப்போது 38
வயது. இவருக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன. அதை இருவரும் மறுத்தார்கள். பின்னர்
தொழில் அதிபரை அனுஷ்கா மணக்க இருப்பதாக தகவல் வெளியானது. அப்படி எதுவும் நடக்கவில்லை.
இதையடுத்து கிரிக்கெட் வீரரை அனுஷ்கா காதலிப்பதாகவும், அவருடன் டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் பரவின. இதற்கு
மறுப்பு தெரிவித்த அனுஷ்கா, தனது திருமண முடிவை பெற்றோரிடம் விட்டுவிட்டதாக கூறினார்.
அனுஷ்கா, பிரகாஷ் கோவலமுடி
இந்நிலையில், தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடிக்கும், அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தற்போது
புதிய தகவல் பரவி வருகிறது. அனுஷ்கா நடித்து தெலுங்கில் சைஸ் ஜீரோ, தமிழில் இஞ்சி இடுப்பழகி பெயர்களில் வந்த படத்தை பிரகாஷ் கோவலமுடி இயக்கி இருந்தார்.
இஞ்சி இடுப்பழகி படத்துக்காக அனுஷ்கா உடல் எடையை கூட்டி நடித்தது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குனர் ராகவேந்திரராவின்
மகனான பிரகாஷ் கோவலமுடிக்கு 44 வயது ஆகிறது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் எடையை குறைத்த இலியானா
உடல் எடையை குறைத்த இலியானா
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள இலியானா, தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.
உடல் எடையை குறைத்த இலியானா
இலியானா
நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’
திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம்
வந்தார். ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார்.
இலியானா
இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி
வருகின்றார், அதுவும் தென்னிந்திய பக்கம் வரலாம் என்றும் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் இலியானா நீச்சலுடையில் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருநங்கைகளுக்கு வீடு – லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார்
திருநங்கைகளுக்கு வீடு – லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார்
வீடில்லா திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தரும் லாரன்ஸ் அறக்கட்டளைக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரூ.1.5 கோடி நிதி வழங்கினார்.
திருநங்கைகளுக்கு வீடு – லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார்
திருநங்கைகளுடன் ராகவா லாரன்ஸ், அக்ஷய் குமார்
தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும்
வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில்
லாரன்ஸ் இயக்கி வருகிறார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர், இயக்குனர், டான்சர் என பன்முகத்திறமை கொண்ட ராகவா லாரன்ஸ், சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதற்காக
அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். 15 ஆண்டுகளாக இந்த அறக்கட்டளையை நடத்தி வரும் அவர், வீடில்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தர திட்டமிட்டிருந்தார்.
திருநங்கைகளுடன் ராகவா லாரன்ஸ், அக்ஷய் குமார்
லட்சுமி பாம் படத்தின் படப்பிடிப்பின் போது இந்த திட்டம் தொடர்பாக அக்ஷய் குமாரிடம் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். உடனே
அக்ஷய் குமார் இந்த திட்டத்திற்காக 1.5 கோடி ரூபாய் கொடுத்து உதவியதாக ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நாட்டில் அமைதியை நிலைநாட்ட தயாராக இருக்கிறேன் – ரஜினி
நாட்டில் அமைதியை நிலைநாட்ட தயாராக இருக்கிறேன் – ரஜினி
நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அமைதியை நிலைநாட்ட தயாராக இருக்கிறேன் – ரஜினிகாந்த்
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இஸ்லாமிய மதகுருமார்கள் நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்துப் பேசினார்கள்.
இந்நிலையில் நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் டிவிட்
இதுகுறித்து தனது டுவிட்டரில் மேலும் கருத்து தெரிவித்த ரஜினி, “இன்று தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளை
சந்தித்து, அவர்கள் தரப்பு ஆலோசனைகளைச் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் அன்பும், ஒற்றுமையும்
அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்காமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில்
அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் – வரலட்சுமி.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் – நடிகை – படிக்க இதில் அழுத்துங்க
பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட் செய்யும்படி சிலர் தன்னிடம் கேட்டதாக நடிகை வரலட்சுமி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் – வரலட்சுமி பகீர் புகார்
வரலட்சுமி சரத்குமார்
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் எல்லா துறைகளிலும் உள்ளது. சினிமாவில் இது சற்று அதிகமாகவே உள்ளது. சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை பாலியல்
கொடுமைக்கு உட்படுத்துவது நடக்கிறது. சமீபத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை மீடூ மூலம் நடிகைகள் சொல்ல ஆரம்பித்தனர். இந்நிலையில் தமிழில் பல படங்களில் பிசியாக
நடித்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரும், தான் இதுபோன்ற பிரச்சினையை சந்தித்ததாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
வரலட்சுமி சரத்குமார்
அதில், ‘’தான் ஒரு வாரிசு நடிகை என தெரிந்தும் கூட தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர். தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட் செய்யும்படி சிலர் என்னிடம்
கூறினர். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டேன். அப்படி பேசியவர்களின் ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. எல்லாம் நடந்து முடிந்த பிறகு பெண்கள் புகார்
தெரிவிப்பது ஏற்க முடியாது. பெண்கள் தங்களை பாதுகாக்க தயார் செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சிரியா விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி – உக்கிர மோதல் தொடர்கிறது
சிரியா விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி – உக்கிர மோதல் தொடர்கிறது
சிரியாவின் இட்லி பகுதிக்கு மேலாக பறந்து துருக்கிய படைகள்
மீது வான் தாக்குதலை மேற்கொண்ட சிரியா அரச இராணுவத்தின்
போர் விமானம் ஒன்றை துருக்கிய இராணுவம் சற்று முன்னர் சுட்டு வீழ்த்தியுள்ளது .
இந்த ஜெட் தாக்குதல் விமானம் வீழ்ந்து நொறுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன
இதுவரை சிரியா இராணுவத்தின் ஐந்து வானூர்திகளை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது
தொடர்ந்து இரு பகுதிக்கும் இடையில் கடும் மோதல்கள் இட்லி பகுதியில் தொடர்ந்த வண்ணம் உள்ளது
மிக விரைவில் சிரியா இராணுவம் பலத்த இழப்புக்களை சந்திக்கும் என துருக்கி அதிரடியாக அறிவித்துள்ளது .மேலதிகமாக துருக்கிய படைகள் கவச வாகனங்கள் மற்றும் டாங்கிகள் சகிதம் சிரியாவுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளன
எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையே தற்பொழுது அந்த களமுனையில் இடம்பிடித்துள்ளது

தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி – தொடர்ந்து வீழ்ச்சி நிலையில் -விபரம் உள்ளே
தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி – தொடர்ந்து வீழ்ச்சி நிலையில் -விபரம் உள்ளே
கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச தங்கத்தின் விலையில் அதிரடி வீழ்ச்சி ஏற்பட்டது .சந்தை திறக்கும் பொழுது 1649 எட்டிய அதன்
உச்சம் வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளை அது பாரிய வீழ்ச்சியை எட்டியது வரலாற்று சாதனையாக கிட்ட தட்ட 90 பிக்ஸ் வீழ்ச்சி அடைந்துள்ளது .
இயல்பாக 50 பிப்ஸ் உள்ளாகவே இந்த சந்தை இறக்க ,ஏற்றத்தை காண்பிக்கும் ஆனால் வெள்ளிக்கிழமை பலரது கணக்குகளில் பணம் காணாமல் போயிருக்கும் .
அதாவது சுனாமி தாக்கம் இடம்பெற்றுள்ளது .மேலும் எதிர்வரும் வாரமும் தங்கம் வீழ்ச்சி நிலையில் காணப்படும்
அதாவது 1535 முதல் 1620 வரைக்குள் இதன் நகர்வு இருக்கும் என அவதானிக்க முடிகிறது
சாட் அவ்விதம் எச்சரிக்கிறது .சில ஊடகங்கள் இதன் விபரம் தெரியாது தவறாக செய்திகளை வெளியிட்டுள்ளன ,இதோ இது சாட் விபரம் உள்ளே .









