அகதிகள் படகு கவிழ்ந்து 100 பேர் மரணம் – கடலில் நடந்த சோகம்
. அகதிகள் படகு கவிழ்ந்து 100 பேர் மரணம் – கடலில் நடந்த சோகம்
மத்திய ட்ரை கடல்வழியாக ஐரோப்பாவுக்குள் நுழையும், நோக்குடன்
புறப்பட்ட அகதிகள் படகு ஒன்று திடீரென கவிழந்ததில் அதில் பயணித்த
அகதிகளில் நூறு பேர் பலியாகியுள்ளனர்
இவ்விதம் சர்வதேச கடல்வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற
அகதிகளில் 15 ஆயிரத்திற்கு மேலானவர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
போதை விருந்தில் சிக்கிய நடிகை
போதை விருந்தில் சிக்கிய நடிகை
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்த நடிகை போதை விருந்தில் சிக்கியுள்ளார்.
போதை விருந்தில் சிக்கிய விஜய் சேதுபதி பட நடிகை
நிகாரிகா
முதலில் அந்த ஓட்டலின் இமெயிலுக்கு தகவல் அனுப்ப வேண்டும். ஓட்டல் தரப்பிலிருந்து அனுப்பப்படும் ஓ.டி.பி மூலம் எந்த மேஜை ஒதுக்கப்பட்டுள்ளது என
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் தனியார் 5 நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் போதை விருந்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்
அவர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவார்கள். அந்த எஸ்.எம்.எஸ்-ஐ காட்டினால் மட்டுமே செக்யூரிட்டிகள் ஓட்டலுக்குள் அனுமதிப்பார்கள்.
இந்த ஓட்டலில் நள்ளிரவு ஒரு மணி வரை மது விருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ஓட்டலில் போதை விருந்து நடைபெறுவதாக
ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஜோயல் டேவிஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ஓட்டலுக்குள் அதிரடியாக புகுந்தனர்.
அங்கு போதை விருந்தில் கலந்து கொண்ட 148 பேரை சுற்றி வளைத்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆந்திரா மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, தம்பி நாக பாபுவின் மகள் நிகாரிகா, திரைப்பட பாடகர் ராகுல், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ரேணுகா சவுத்ரி
மகள், ஆந்திரா முன்னாள் டி.ஜி.பி மகள் மற்றும் முன்னாள் எம்.பியின் மகன் என விஐபியின் பிள்ளைகள் கலந்து கொண்டது தெரியவந்தது.
இவர்களுக்கு அந்த ஓட்டலில் பிரவுன் சுகர், கொகைன் உள்ளிட்ட போதைப் பொருள் சப்ளை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஓட்டலில்
வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதற்காக 5 பாக்கெட்டுகளில் வைத்திருந்த 12 கிராம் எடையுள்ள கொகைன் பறிமுதல் செய்தனர்.
நிகாரிகாவிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் பின்னர் அவரை விடுவித்தனர். விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக்கின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நிகாரிகா நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நிகாரிகாவின் தந்தை வெளியிட்டுள்ள விடியோவில் என் மகள் அந்த
விடுதியில் இருந்தது உண்மை. ஆனால் அவர் எந்த தவறும் செய்யவில்லை. இதனால் வதந்திகளை நம்பாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்
பந்து விளையாடும் சன்னி லியோன்
பந்து விளையாடும் சன்னி லியோன்
பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பந்து விளையாடும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
பந்து விளையாடும் சன்னி லியோன்… வைரலாகும் வீடியோ
சன்னி லியோன்
ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது
தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பேய்ப்படம் ஒன்றில் காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக
வைத்துள்ளார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற சன்னி லியோன் பிகினி உடையில் கவர்ச்சியாக எடுத்துகொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், கூடைப்பந்து விளையாடும் வீடியோவை சன்னி லியோன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்
இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்
இலங்கையில் கிட்ட தட்ட 13 ஆண்டுகளுக்கு உள்ளாக ஆட்சி புரிந்து வரும்
ராஜபக்ஸ குடும்பம் இரண்டு லட்சம் மில்லியன் டொலர்களை கொள்ளையடித்துள்ளது
என புதிய உள்ளக கசிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,இவ்வாறு கொள்ளையடித்த சொத்துக்கள் உலக நாடுகளில் பலவற்றில் முதலீடு செய்ய பட்டுள்ளன
அவை கொட்டல்,விமானம்,வீடுகள்,எரிபொருள் நிலையங்கள் என பலவற்றிலும் முதலீடு செய்ய பட்டுள்ளது
அமர போகும் தலைமை கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்ப சொத்துக்களை அரசுடைமையாக்கி மக்கள் போராட்டங்களுக்கு தீர்வு எழுதும் என ஏதிர் பார்க்க படுகிறது
புதிய ஆட்சி இவர்களது அனைத்து கொள்ளைகளையும் புட்டு புட்டு வைக்கும் எனவும் , அவை உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது
மக்கள் எதிர் பார்க்கும் இந்த கொள்கை நிலைப்பாட்டை அலுப்போகும் அரசியல் தலைமைகள் மக்கள் மனதின் கோப கொந்தளிப்பை ஏற்று பணியாற்றுமா என்பது சநதேகமே
இலங்கை மக்கள் வாழ்வியல் மற்றும்நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அங்கு ஆட்சி செய்திட ஆண்ட அல்லது அரசியல் கட்சிகளில் முதன்மை நபர்களாக விளங்குபவர்கள் புரட்சிகர சிந்தனையுடன் செயல் ஆற்றும் நிலையில் இல்லை என்பதே யதார்த்தம்
இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்
இவ்விதமான அரசியல் ஊழல் நிறைந்த அரசியல் வதிகளே நாட்டில் கொழுத்து பருத்து உள்ளனர்
கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை லஞ்சத்தில் ஊறிக் கிடப்பதால் அந்த அழுக்கு ஓடையில் இருந்து இவர்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்பது யானைக்கும் மீசை என்பது போலாகும்
இரண்டு லட்சம் டொலர்களை கொள்ளையடித்து ஏப்பம் இட்ட மகிந்த ராஜபக்சே குடும்பம் அதன் பரம்பரை ஆட்சியில் இல்லா விட்டாலும் ஆள்வதற்கு ஏற்ற பணத்தினை கொள்ளையடித்துள்ளனர்
இவ்வாறான குடும்ப ஆட்சி எதிர் வரும் காலங்களில் இலங்கையில் இடம்பெறா வண்ணம் இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பிக்க பட வேண்டும் ,அது தவறின் நாடு சோமாலியா போன்று மாற்றம் பெறுவதை தடுக்க முடியாது
- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்
- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை
- மேற்குக் கரை எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் மூடவுள்ளது
- அல்-அக்ஸா மீது முழுமையான கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்த இஸ்ரேல் வழி வகுக்கிறது
- நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது
- சுற்றுலாவில் உலகளவில் முன்னேறிய முதல் 10 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது
- தென்னாப்பிரிக்காவில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் குறைந்தது 27 பேர் பலி
- கடைகளில் திடீர் சோதனை
- சேவைச் சிறப்பிற்காக 15 வட மாகாணப் பிரதேச செயலகங்கள் அங்கீகரிக்கப்பட்டன
- தெற்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வரை காற்று வீசும்
- 2027-க்குப் பிறகு இலங்கையை சர்வதேச நாணய நிதியம்
- பத்தேகம துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்
- இன்று பல பகுதிகளில் மழை
- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்
பிள்ளையான் வீடு முற்றுகை – பரவும் கோட்டா எதிர்ப்பு போர்
பிள்ளையான் வீடு முற்றுகை – பரவும் கோட்டா எதிர்ப்பு போர்
மட்டக்களப்பில் உள்ள தேசத்துரோகி பிள்ளையான் மற்றும் அவரது
அலுவலகம் என்பன மக்களினால் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
கோட்டாவே வீட்டுக்கு போ அவரின் அடியாள் வீட்டுக்கு போ என இந்த முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன ,
தொடர்ந்து நாடெங்கிலும் இந்த போராட்டம் வெடித்து பறக்கிறது
வேறு வழியின்றி ஆட்சியை இழந்து மகிந்த சகோதர்கள் ஓடும் நிலை ஏற்பட போகிறது
கோட்டா ஆயுத விற்பனை தலைவர் நாட்டை விட்டு மலேசியாவுக்கு குடும்பத்துடன் தப்பி ஓட்டம்
கோட்டா ஆயுத விற்பனை தலைவர் நாட்டை விட்டு மலேசியாவுக்கு குடும்பத்துடன் தப்பி ஓட்டம்,
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோத்தபாய கடல்சார் பாதுகாப்பு என கூறிய
படி அவன்கார்ட் ஆயுத வியாபார சர்வதே அளவில் நடத்தி வந்தார்
இவர் சோமாலியா ,கென்யா போன்ற நாடுகளில் போராடும் ஆயுத
குழுக்களுக்கு கப்பல் கப்பலாக ஆயுதங்களை விற்று பல மில்லியன் டொலர்களை நாள் தோறும் சம்பாதித்து வந்தார்
அடுத்து சீனி வியாபாரம் செய்து வந்தார் ,தற்போது ஆட்சி கவிழ்க்க பட்டு சிறை பிடிக்க படலாம் என்ற நிலையில்
இவரது வர்த்தகர் மூவர் ,மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையை விட்டு நாள் தோறும் ஓடிய வண்ணம் உள்ளனர்
இவ்விதம் அவன்கார்டு ஆயுத கப்பல் விபாரத்தை நடத்தி வந்த கோட்டாவின்
நேரடி வியாபாரங்களை கவனித்து வந்த முக்கியஸ்த்ர SriLankan Airlines flight UL-102 என விமானத்தில் மலேசியாவுக்கு தப்பி சென்றுள்ளார்
உக்கிரம் பெறும் மக்கள் போராட்டத்தை அடுத்து இவர்களும் நடத்தி விட்டு
தப்பி ஓடும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
மகிந்தா,கோட்டா பதவி விலகு உக்கிரம் பெறும் போர் – பிரதமர் இல்லாம முன்பாக இராணுவம் குவிப்பு
மகிந்தா,கோட்டா பதவி விலகு உக்கிரம் பெறும் போர் – பிரதமர் இல்லாம முன்பாக இராணுவம் குவிப்பு
இலங்கையில் ஆளும் சகோதரர்களான மகிந்தா ,கோட்டா உடனே தமது
அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் என மக்கள் மூன்றாவது நாளாக
தொடர்ந்து போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்
நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த போராட்டம் உச்சம் பெற்றுள்ள
நிலையில் தற்போது மகிந்த அதிகார காரியாலய இல்லம் முன்பாக
இராணுவம் குவிக்க பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு போட பட்டுள்ளது
கூட்டாட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வருமாறு அழைப்பு விடுத்த போதும்
அது பயனளிக்காத நிலையில் தற்போது
ஆட்சி கவிழும் நிலையில் உள்ளதால் நாட்டில் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது
புலி தளபதிகள் வீழ்ந்த நாளில் தள்ளாடும் கோட்டா அரசு
புலி தளபதிகள் வீழ்ந்த நாளில் தள்ளாடும் கோட்டா அரசு
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன். இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி
தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு
இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.
தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது. தீபனை இயக்கத்தில் சேர்த்த
மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய
காரணமாகவிருந்த 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.
1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் “தாங்கோ பாப்பா” ஆகும். இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார். 1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.
1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள். இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.
பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை. 1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.
தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச் சமருக்குத்தலைமை தாங்கினார்.
தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக் கொடுத்தது. இந்த இரண்டு ரி 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.
1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.
1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.
1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.
யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல் மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது
முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.
தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள்
கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.
ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும்
நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.
இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண்
அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.
இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக
நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு
வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத் தவறிவிட்டார்.
1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத
அலைகள் 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.
1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.
ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத்
தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம். இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம்
பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.
குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம்
கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன். 2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம்
படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.
அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான ‘L’ வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள் (2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன். கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம்
திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக
திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக்குண்டுத்தாக்குதலில் வீரகாவியமானார்.
25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது. சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை
நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்கப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே
வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.” தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது
எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பது .
எம்பி வீட்டை சுற்றிவளைத்த மக்கள் – உலங்குவானூர்தியில் தப்பி ஓட்டம்
எம்பி வீட்டை சுற்றிவளைத்த மக்கள் – உலங்குவானூர்தியில் தப்பி ஓட்டம்
ஆளும் கோத்தபாயவின் ஆட்சிக்கு எதிராக நாடெங்கும் மக்கள் போராட்டம்
நடத்தி வருகின்றனர்
இவ்வாறான கால பகுதியில் கேகாலை மாவட்டத்தில் உள்ள கனக கேரத்தின்
வீடு முற்றுகைக்கு உள்ளாக்க பட்டது
மக்கள் சுற்றிவளைத்த நிலையில் வீட்டில் தங்கி இருக்க முடியாத நிலையில்
அவர் அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் கண்டிக்கு தப்பி ஓடியுள்ளார்
தொடர்ந்து பல எம்பிக்கள் வீடு முற்றுகைக்கு உள்ளாகி பட்டு வருகினறமை குறிப்பிட தக்கது
ஒரு அமெரிக்கா டொலர் 300 ரூபாவை எட்டியது
ஒரு அமெரிக்கா டொலர் 300 ரூபாவை எட்டியது
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அதனால் ஏற்பட்ட பண
வீக்கம் காரணமாக
ஒரு அமெரிக்கா டொலர் இலங்கை ரூபாவுக்கு 300 ஆக எட்டி பிடித்துள்ளது
இந்த பணவீக்கம் மேலும் மூன்று மத காலத்திற்கு அதிகரிக்க கூடும் என
எதிர்வு கூறப்பட்டுள்ளது
வெளி நாடுகளில் உள்ள மக்கள் முண்டியடித்து பணத்தை அனுப்புவதில்
தீவிரம் காட்டி வருகின்றனர்
கோட்டா எம்பிக்கள் பதவிவிலக கோரி – வீடு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
கோட்டா எம்பிக்கள் பதவிவிலக கோரி – வீடு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
கோட்டா ஆட்சியில் அங்கம் வகிக்கும் அவர் தம் எம்பிக்கள் வீடு முன்பாக
மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்
அமைச்சர்கள் பதவிகளை இராயீனமா செய்துள்ள நிலையில் இந்த
போராடட்ம முன்னெடுக்க பட்டுள்ளது
தற்போது Ramesh Pathirana, Janaka Tennekoon, Kanchana Wijesekara, Nimal Lanza and
Shasheendra Rajapaksa. ஆகியோர் வீடுகள் முன்பாக மக்கள் கூடி தமது எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் உள்ளனர்
மேலும் உடனடியாக தமது பதவிகளை இராயீனமா செய்திட கோரி இந்த
போராட்டம் முன்னெடுக்க பட்டுள்ளது
யாழ் பல்கலைக் கழகம் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்டு
யாழ் பல்கலைக் கழகம் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்டு
யாழ்ப் பல்கலைக் கழகம் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது ,
திடீரென இந்த அறிவித்தல் வெளியானது மாணவர்கள் எழுச்சியை தடுக்கும்
நோக்குடன் மேற்கொள்ள பட்ட விடயமாக பார்க்க படுகிறது
இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – நிலவும் பரபரப்பு
இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – நிலவும் பரபரப்பு
இலங்கையில் கோட்டா ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடி வரும்நிலையில் முப்படையினரும்
அரசுக்கு எதிராக திசை திரும்பும் நிலை தோற்றம் பெற்றுள்ளதால்
இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மகிந்தா கோட்டாவை வீட்டு காவலில்
வைத்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற நிலை ஏற்படலாம் என கணிக்க பெறுகிறது
இவ்விதமான போராட்ட காலங்களில் சில நாடுகளில் இராணுவம் ஆட்சி நிலை
நிறுத்த பட்டு பின்னர் ஜனநாயக அரசியல் தோற்றம் பெற்றது வரலாறாகி உள்ளது
இதனை மைய ப்படுத்தியே இந்த போராட்டம் வெடித்து வருவதால் இராணுவ
அடச்சியின் மூலம் கோட்டா ஆட்சி அகற்ற பட்டு ஜனநாயக அரசியல்
திரும்பலாம் என எதிர் பார்க்க படுகிறது ,நிகழ்கால சம்பவங்கள் பல
திசை மாறும் புதிய வரலாற்றை இலங்கையில் எழுதும் காலமாக இது மாற்றம் பெரும் என எதிர்பார்க்கலாம்
கோட்டா அரசுக்கு எதிராக திரும்பிய பொலிஸ் – புரட்சியாகும் போராட்டம்
கோட்டா அரசுக்கு எதிராக திரும்பிய பொலிஸ் – புரட்சியாகும் போராட்டம்
இலங்கை கோட்டா ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டெழுந்து போராடி வரும்
நிலையில் அந்த போராட்ட களத்தில் பாதுகாப்பு வழங்கி மக்களை தடுக்க
வந்த போலீஸ் அதிகாரி அந்த மக்களுடன் இணைந்து தாமும் போராடத்திற்கு
ஆதரவு என தெரிவித்த நிலையில் மக்கள்; கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்
தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
பிரிட்டன் கடலில் வீழ்ந்து மூழ்கிய விமானம் – தேடும் கடற்படை
பிரிட்டன் கடலில் வீழ்ந்து மூழ்கிய விமானம் – தேடும் கடற்படை
பிரிட்டன் ஆங்கில கால்வாய்க்குள் இலகுரக விமானம் ஒன்று பறந்து
கொண்டிருந்தது ,திடீரென அது அந்த கடலில் வீழ்ந்து மூழ்கியது
இவ்விதம் காணாமல் போன அந்த விமானத்தை தேடும் பணியில் பிரிட்டன்
கடல் படை ஈடுபட்டுள்ளது
இந்த விபத்துக்கான கரணம் தெரியவரவில்லை
ஈராக்கில் உள்ள துருக்கி இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல்
ஈராக்கில் உள்ள துருக்கி இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல்
ஈராக் மொசூல் பகுதியில் நிலைகொண்டுள்ள துருக்கிய இராணுவத்தின் Zelikan
முகாம் மீது பாரிய தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இந்த தாக்குதலின் பொழுது அந்த முகாம் பாரிய சேதம் அடைந்துள்ளதாக
தெரிவிக்க படுகிறது
இஸ்ரேல் தலைநகர் அருகில் குண்டு வெடிப்பு
இஸ்ரேல் தலைநகர் அருகில் குண்டு வெடிப்பு
இஸ்ரேல் தலைநகர் Tel Aviv பகுதியில் பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது
இந்த குண்டு வெடிப்பால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை
நிதி அமைச்சராக முஸ்லீம் ஒருவர் தெரிவு – கண்துடைப்பு நாடகம் அம்பலம்
நிதி அமைச்சராக முஸ்லீம் ஒருவர் தெரிவு – கண்துடைப்பு நாடகம் அம்பலம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர் நெருக்கடிக்கு மத்தியில் நாடு தள்ளாடி வரும் நிலையில்,கோத்தபாயவினால் புதிய அமைச்சர்கள் நியமிக்க பட்டனர்.
இவ்விதம் நிதி அமைச்சர் – அலி சப்ரி
கல்வி அமைச்சர் – தினேஷ் குணவர்தன
வெளிவிவகார அமைச்சர் – பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.
நெடுஞ்சாலைகள் அமைச்சர் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தெரிவு செய்ய பட்டுள்ளனர்.
பசில் பதவி பிடுங்க பட்டு வீட்டுக்கு அனுப்ப பட்டுள்ளார்,இதனால் குடும்பத்திற்குள் சண்டை வலுத்துள்ளது.
மகிந்தா குடும்பத்திற்குள் வெடித்த சண்டை
மகிந்தா குடும்பத்திற்குள் வெடித்த சண்டை
இலங்கையில் ஆளும் கோட்டாபயா ஆட்சிக்கு எதிராக மக்கள் பொங்கி எழுந்த
நிலையில் இவரது ஆட்சியில் அமைச்சர்களாக அங்கம் வகித்த பசிலுக்கும்
மகிந்தவுக்கு இடையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன
மேலும் ,பீரிஸ்,தினேஸ்குணவர்தன ,பசில் ஆகியோர் ராஜீனமா கடிதத்தில்
கையொப்பம் இடைவில்லை என தெரிவிக்க படுகிது
இதனால் அங்கு பெரும் மோதல் வெடித்த நிலையில் இன்று கோட்டாவை மகிந்தா சந்திக்கிறார்
இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்க படும் என எதிர் பார்க்க படுகிறது
அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்ற பொழுதும் அதனால்
ஏற்பட போவது ஏதும் இல்லை என்பதே இன்றைய களநிலவரமாக உள்ளது
மத்திய வாங்கி ஆளுநர் பதவி விலகி ஓட்டம் – தள்ளாடும் கோட்டா அரசு
மத்திய வாங்கி ஆளுநர் பதவி விலகி ஓட்டம் – தள்ளாடும் கோட்டா அரசு
இலங்கையில் பொருளாதரத்தை நிர்ணயம் செய்திடும் நிலையில் உள்ளது
மத்திய வங்கி ஆகும் ,இதன் ஆளுநர் ர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது பதவியை இராயீனமா செய்துள்ளார்
இதனால் மத்திய வங்கிக்கு புதிய ஒருவரை நியமிக்க வேண்டிய நிலையில் கோட்டா தள்ள பட்டுள்ளார்
புதிய அமைச்சர்கள் ,புதிய ஆளுநர்கள் நியமிக்க பட்டாலும் நாடு தற்போது
உள்ள நிலையினை சமாளிக்க முடியுமா என்பதே கேள்வியாக உள்ளது






















