இட்லி பொடியை இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க| idli podi recipe in tamil
Posted in சமையல் cook

இட்லி பொடியை இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க| idli podi recipe in tamil

இட்லி பொடியை இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க| idli podi recipe in tamil

நம்ம வீட்டில இட்லி போடி மிக இலகுவாக எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாமா வாங்க .

சுலபமான முறையில் ,சுவையாக உடனடியாக இட்லி பொடி தயாரிப்பது எப்படி..?

உங்கள் கேள்விக்கு இதோ செய்முறை விளக்கம்

இட்லி பொடி செய்வது எப்படி ..?
இட்லி செய்வதற்கு தேவியான பொருட்கள் என்ன ..?

சுவையான இட்லி பொடி செய்முறை ஒன்று

இந்த பொடி செய்திட காடயில ஒரு கப் அளவு உளுந்து பருப்பு போடு வறுத்திடுங்க .உளுந்து வாசம் வரும் வரை வறுத்திடுங்க .
உளுந்து கலர் மாறியதும் உளுந்தை நிப்பாட்டி கொள்ளுங்க .

இட்லி பொடியை இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க| idli podi recipe in tamil

அதே கடையில அரை கப் அளவு கடலைப் பருப்பு போட்டு அதனையும் ,அதே போல வறுத்து எடுத்திடுங்க .

அப்புறம் வெள்ளை எள்ளு சேர்த்து அதனையும் நன்றாக வறுத்து எடுத்திடுங்க .

அதே கடையில 10 வறுமிளகாய் நன்றாக கலர்மாறி வரும் வரை வறுத்து எடுத்திடுங்க .இறுதியாக கருவேப்பிலையும் போடு அதுபோலவே, வறுத்து எடுத்திடுங்க .

இப்போ சீரகம் மிளகு சேர்த்து இத்தனையும் வறுத்து எடுத்திடுங்க .
வறுத்த எல்லா பொருளையும் மிக்சியில் போட்டு ,உப்பு பெருங்காயம் சேர்த்து நன்றாக மாவு போல அரைத்து எடுத்திருங்க .

இப்போ செமையான இட்லி பொடி ரெடியாடிச்சு .இட்லி பொடி கூட நல்லெண்ணெய் கலந்து சாப்பிடுங்க .
அவ்வளவு தாங்க .சுலபமாக வேலை முடிஞ்சிருச்சு.

ரயில் மோதி வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

200 வருட வேம்பு சரிந்து முறிந்து வீழ்ந்து உடைந்த வீடுகள்

200 வருட வேம்பு சரிந்து முறிந்து வீழ்ந்து உடைந்த வீடுகள்

யாழ்ப்பாணம் கச்சரிக்கு அருகில் நிலைத்து செழிப்பு தந்த ,200 வருட பழமை வாய்ந்த வேம்பு மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது .

இந்த வேம்பு மரம் சரிந்து வீழ்ந்ததில் அருகில் உள்ள வீட்டு மதில்கள் உடைந்தன .

எனினும் உயி சேதங்கள் ஏற்படவில்லை .

இதனால் வீதி போக்குவரத்தில் சாற்று நெரிசல் ஏற்பட்டது .

15 வயது சிறுமியை காணாவில்லை தேடும் பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

15 வயது சிறுமியை காணாவில்லை தேடும் பொலிஸ்

15 வயது சிறுமியை காணாவில்லை தேடும் பொலிஸ்

இலங்கை  கண்டி புஸ்ஸலாவவை பகுதியில் 15 வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ளார் .

கடந்த 30 ஆம் திகதி முதல் இவர் காணாமல் போயுள்ளார் .

ஒரே ஒரு மகளான இவர் காணாமல் போயுள்ளதால் பெற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

காணாமல் போன சிறுமியை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

யாழில் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு

யாழில் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ். ஒழுங்கையில் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே பெண்ணை வீதியில் மறித்து இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளனர்.

நேற்று மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வழிப்பறி தொடர்பான சி.சி.ரி.வி. பதிவு காணொளி விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது.

சங்கிலி பறிகொடுத்த பெண் ஒவ்வொரு திங்கட்கிழமை ஆலயத்துக்கு வழிபடச் செல்பவர் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது

விபத்தில் தந்தை மகள் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் தந்தை மகள் பலி

விபத்தில் தந்தை மகள் பலி

பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரிகம பஸ்யால வீதியில் கொட்டகந்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

மீரிகமவில் இருந்து பஸ்யால நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த தந்தை மற்றும் மகள் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் மகளும் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

கல்எலிய பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மகளும் 54 வயதுடைய தந்தையுமே இதில் உயிரிழந்துள்ளனர்.

மேலதிக வகுப்பு முடிந்து தந்தை தனது மகளை வீட்டிற்கு அழைத்து வரும் போது இந்த விபத்து நடந்துள்ளது.

தப்பியோடிய கார் சாரதியை பல்லேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்து வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போது அவர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மயங்கி விழுந்த 44 மாணவிகள்
Posted in இலங்கை செய்திகள்

மயங்கி விழுந்த 44 மாணவிகள்

மயங்கி விழுந்த 44 மாணவிகள்

மாத்தளை– கும்பியாங்கொடை சுஜாதா மகளிர் கல்லூரியின் மாணவிகள் 44 பேர் இன்று (15) காலை திடீர் சுகவீனம் காரணமாக மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளில் சிலர் கல்லூரியின் 19 வயதுக்குட்பட்ட வலைப்பந்தாட்ட அணியைச் சேர்ந்த மாணவிகள்

என்பதுடன், வென்னப்புவ பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியிலும் கலந்துகொண்டு வெற்றிப்பெற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயங்கி விழுந்த 44 மாணவிகள்

இவர்களின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக இன்று காலை பாடசாலையில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இதில் கலந்துகொண்ட போதே, மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர்.

இதனையடுத்து மாணவிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மாணவிகளின் நிலை சாதாரணமாக இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வும் கண்காட்சியும்
Posted in இலங்கை செய்திகள்

சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வும், கண்காட்சியும்

சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வும், கண்காட்சியும்

சர்வதேச நீரிழிவு தினத்தையொட்டி கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் – இலங்கையுடன்

இணைந்து திருகோணமலை, கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலை ஊடாக நடாத்திய சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வும், கண்காட்சியும்

நேற்றும் (14) இன்றும் (15) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அன்டென் அனஸ்ரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு

பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் யாழ்ப்பாண அலுவலக துணைத் தூதர் ஸ்ரீ ராக்கேஷ் நட்ராஜ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சுதேச

மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் மற்றும் திருகோணமலை நகரசபை செயலாளர் வி.ராஜசேகர்

உள்ளிட்ட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த விழிப்புணர்வுக் கண்காட்சியில் நீரிழிவு நோய்க்கான இரத்தப்

பரிசோதனைகளுடன் மருத்துவ ஆலோசனைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

அத்துடன், நீரிழிவு நோயை எவ்வாறு கட்டுப்படுத்தி சுக வாழ்வுடன் வாழவேண்டும் என்ற ஆலோசனை வழிமுறைகள் பற்றிய தெளிவான

விளக்கங்களை வைத்தியர்கள் வழங்கி வைத்து அதுதொடர்பிலான வழிகாட்டி கையேடுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், திருகோணமலை கேம்பஸ் உள்ளகப்பயிற்சி வைத்தியர்களினால் யோகாப் பயிற்சி செய்முறைகளும் செய்து காட்டப்பட்டு அதுதொடர்பிலான

விளக்களை அதிதிகளுக்கும், பொதுமக்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் காட்சிப்படுத்தப்பட்ட
அதேவேளை பொதுமக்கள் கொள்வனவு செய்வதற்காக அந்த உணவு
வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அபு அலா –

வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகும்.
Posted in இலங்கை செய்திகள்

வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகும்.

வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகும்.

எதிர்வரும் 22ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெற்று அன்றையதினம் மாலை ஐந்து மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறும். வரவு செலவுத்திட்ட

குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம திகதி முதல் டிசம்பர் எட்டாம் திகதி வரை இடம்பெறும். இதன் வாக்கெடுப்பு டிசம்பர் எட்டாம் திகதி மாலை இடம்பெறும்.

இன்று முதல் டிசம்பர் எட்டாம் திகதி வரை ஞாயிறு மற்றும் போயா தினங்கள் தவிர்ந்த வாரத்தின் அனைத்து நாட்களிலும் பாராளுமன்றம் கூடும். வரவு செலவுத்திட்ட விவாதம் இடம்பெறும் காலப்பகுதியில் வாய்மொழிமூல

பதில்களை எதிர்பார்க்கும் கேள்விகளை கேட்க முடியாது என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.


டிசம்பர் ஒன்பதாம் திகதி பாராளுமன்றம் கூடும். அன்றையதினம் வாய்மொழிமூல பதில்களை
எதிர்பார்க்கும் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அல் சபா தலைவருக்கு 10 மில்லியன் சன்மானம் அறிவித்த அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

அல் சபா தலைவரை காட்டிக் கொடுப்பவருக்கு 10 மில்லியன் சன்மானம் அறிவித்த அமெரிக்கா

அல் சபா தலைவரை காட்டிக் கொடுப்பவருக்கு 10 மில்லியன் சன்மானம் அறிவித்த அமெரிக்கா

சோமாலியா அரசுக்கு எதிராக போராடி வரும் ,அல் சபா அமைப்பினரின் தலைவரை காட்டி கொடுப்பவருக்கு ,பத்து மில்லியன் அமெரிக்கா டொலர்கள் வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது .

இந்த அமைப்பினருக்கு எங்கிருந்து நிதி செல்கிறது ,என்பதை கண்டறியும் நோக்குடனும் ,அவர்களுக்கு நிதி வழங்கி வரும் நபர்களை கைது செய்திடவும் இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது .

பின்லாடனை காட்டி கொடுப்பவர்களுக்கு சன்மானம் அறிவித்தது போல ,அல் சபா தலைவரும் மற்றும் முக்கிய நபர்களுக்கும் இந்த சன்மானம் அறிவிக்க பட்டுள்ளது .

அப்படி என்றால் விரைவில், அல் சபா புலிகளை போல அழிக்க பட போகின்றனர் என்பது தெளிவாகிறது .

கடல் வழியாக லண்டனுக்குள் நுழைந்த அகதிகள் -திணறும் அரசு
Posted in உலக செய்திகள்

கடல் வழியாக லண்டனுக்குள் நுழைந்த அகதிகள் -திணறும் அரசு

கடல் வழியாக லண்டனுக்குள் நுழைந்த அகதிகள் -திணறும் அரசு

லண்டனுக்கு பிரான்சில் இருந்து கடல் வழியாக படகுகள் மூலம் அகதிகள் நுழைந்தனர் .

பலத்த பாதுகாப்பு மற்றும் கடல் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ள நிலையிலும் ,அகதிகள் படகுகள் மூலம் ஆபத்தான கடலை கடந்து நுழைகின்றனர் .

இவ்வாறு இந்த வருடத்திற்குள் மட்டும் 40.ஆயிரம் அகதிகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

அகதிகள் வருகையை கட்டுப்படுத்த ,இறுக்கமான நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ள பொழுதும் ,அகதிகள் தொடர்ந்து லண்டனுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளமை அரசுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுளளது .

இலங்கை முஸ்லீம் செல்வந்தர் தாலிபான்களுடன் தொடர்பு -அமெரிக்கா தடை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவுக்குள் நுழைய 42 ரசியா ஆதரவாளர்களுக்கு தடை

அமெரிக்காவுக்குள் நுழைய 42 ரசியா ஆதரவாளர்களுக்கு தடை

அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு ரசியா ஆதரவாளர்கள் என கருதப்படும் 42 பேருக்கு எதிராக தடை விதிக்க பட்டுள்ளது .

இந்த புதிய பட்டியலில் இணைக்க பட்டுள்ளவர்கள் ,ரசியா இராணுவத்தின் தொழில் நுட்ப பிரிவில் இணைந்து செயல் படுகின்றவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .

ரசியாவின் பொருளாதார மற்றும் ,இராணுவ பலத்தை ,சிதைக்கும் முகமாக இந்த தடைகள் விதிக்க படுகின்றன .

இவ்வாறான தடைகள் ஊடாக ,ரசியாவை கட்டு படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்-மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் வரவு செலவு திட்ட உரை எமது மக்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்து விட்டது

ஜனாதிபதியின் வரவு செலவு திட்ட உரை எமது மக்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்து விட்டது

  • தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி

நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவு திட்ட உரையில் காணப்படுகின்ற, தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர பாமர மக்கள் தொடர்பிலான அலட்சியப்போக்கு எம்மை

ஏமாற்றமடைய செய்துள்ளது கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என மனோ கணேசன் கூறியுள்ளார்.

இன்றைய வரவு செலவு திட்டம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

உலக வங்கி, ஐநா நிறுவனமான உலக உணவு திட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றால், உணவின்மை மற்றும் வறுமை ஆகிய விடயங்களில் இலங்கையிலேயே

மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பின்தங்கிய பிரிவினராக பெருந்தோட்ட மக்கள் மற்றும் மாநகர பாமர மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த பின்தங்கிய பிரிவினருக்கான விசேட ஒதுக்கீட்டு திட்டங்களை ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டார்.

ஜனாதிபதியின் வரவு செலவு திட்ட உரை எமது மக்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்து விட்டது

ஆனால் அது நடைபெறவில்லை. உடனடியாக நிவாரண திட்டங்கள் இல்லாவிட்டாலும் கூட, இம்மக்களின் இக்குறைபாடுகள் பற்றி தான் அறிந்துள்ளேன் என்பதை ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டு கூறி இருக்க வேண்டும்.

அப்படியாயின், இந்த நலிவடைந்த மக்களை அது ஓரளவு சாந்தப்படுத்தி இருக்கும். தமது பிரச்சினைகள் பற்றி ஆளுகின்ற அரசு அறிந்து வைத்துள்ளது என்பதை அறிந்து மக்கள் சற்று நம்பிக்கை அடைந்து இருப்பார்கள். தீர்வுகள் தாமதமாகி வரும் என ஆறுதல் அடைந்து இருப்பார்கள்.

ஆனால், உயிருள்ள உழைக்கும் மக்களை மறந்து விட்டு,
தோட்டங்களில் உள்ள காணிகளை பற்றி பேசி, பயிரிடப்படாத காணிகளை, புதிய முதலீட்டாளர்களுக்கு


பகிர்ந்து கொடுக்க போவதாக நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வரவு செலவு திட்ட உரையில் கூறி உள்ளார்.

நமது மக்களுக்கு பயிரிடப்படாத காணிகள் தருவதாக எனக்கு பாராளுமன்றத்தில் தந்த வாக்குறுதியை அவர் மறந்து விட்டார்.
அப்போது அவர் பிரதமர். இப்போது ஜனாதிபதி.

ஆனால், நாம் மறக்கவில்லை.
நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை வரை துன்பப்படும் நமது மக்களை, இந்த அலட்சியம் கொல்லாமல் கொல்கிறது.

லண்டனில் கவிழ்ந்த கார் தப்பிய சாரதி
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் கவிழ்ந்த கார் தப்பிய சாரதி

லண்டனில் கவிழ்ந்த கார் தப்பிய சாரதி

காதலனை கூலி படையை ஏவி தாக்குதல் நடத்திய காதலி

கடந்த தினம் மேற்கு லண்டன் பார்க் பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று முடக்கும் திரும்புகையில் கவிழ்ந்தது .

அதி வேகமாக சாரதி காரை செலுத்தி சென்ற நிலையில் ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து ,கார் விபத்தில் சிக்கியது .

இந்த விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்தது .எனினும் ஓய்வூதியம் பெறும் வயதான சாரதி காயங்கள் இன்றி தெய்வாதீனமாக தப்பித்து கொண்டார் .

வானில் மோதி சிதறிய இரு விமானங்கள்

காவல்துறையினர் ,மீட்பு படைகள் களமுனைக்கு விரைந்து ,காரை மீட்டு ,வீதி போக்குவரத்து நெரிசலை தவிர்த்தனர் .

இவ்விதம் தொடராக லண்டன் பகுதியில் கார்கள் கவிழ்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

கத்தி தி முனையில் வாகனங்களை சோதனை செய்திடும் ரவுடி கும்பல்
Posted in இலங்கை செய்திகள்

கத்தி தி முனையில் வாகனங்களை சோதனை செய்திடும் ரவுடி கும்பல்

கத்தி தி முனையில் வாகனங்களை சோதனை செய்திடும் ரவுடி கும்பல்

இலங்கை அங்கமுவ பிரதேசத்தில் வீதியில் செல்லும் வாகனங்களை ரவுடி கும்பல் ஒன்று கத்தி முனையில் மிரட்டி சோதனை செய்திடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன .

இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உறைந்துள்ளனர் .

யாழ்ப்பாணத்தை போலவே தற்பொழுது சிங்கள பகுதியில் ஆவ குழுவை போன்ற கும்பல் அடி தடியில் ஈடுபட்டு வருகிறது .

மக்கள் புகாரை அடுத்து காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்க பட்டுள்ளது .

நளினி கணவன் முருகன் சிறப்பு முகாமில் அடைப்பு
Posted in இலங்கை செய்திகள்

நளினி கணவன் முருகன் சிறப்பு முகாமில் அடைப்பு

நளினி கணவன் முருகன் சிறப்பு முகாமில் அடைப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன், ரவிச்சந்திரன் மற்றும்

ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களின் விடுதலை குறித்து முடிவெடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்த நிலையில் கடந்த மே மாதம் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

இதே காரணத்தை கொண்டு நீதிமன்றத்தை அணுகியிருந்த நளினி, முருகன் உள்ளிட்ட ஆறு பேரையும் அண்மையில் நீதிமன்றம் விடுதலை செய்தது.

எவ்வாறு இருப்பினும் நளினியும், ரவிச்சந்திரனும் மாத்திம் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நளினி கணவன் முருகன் சிறப்பு முகாமில் அடைப்பு

எனினும் ராபர்ட் பயஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் நளினியின் கணவர் முருகன் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இலங்கை திரும்பும் வரை இங்குதான் தங்கி இருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக” 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த இவர்களை சிறப்பு முகாமில் அடைக்காமல் முழுவதுமாக விடுதலை செய்ய வேண்டும் ”என தமிழ அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு பின்னால் இருக்கும் பிரச்னை குறித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ்காந்தி விளக்கியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “30 வருட சிறைக்கு பிறகும் நால்வரை சிறப்பு முகாமில் அடைப்பது ஏற்புடையது அல்ல என்ற ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு.

ஆனால் சட்டப்படி வெளிநாட்டவர் இங்கு இருந்தால் அகதியாகவோ அல்லது வெளிநாட்டவர் சட்டம் பிரிவு-12 ன் படி ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட விசா அனுமதியோடு தான் இருக்க முடியும்.

அவர்கள் விரும்பிய நாடு செல்ல உரிய கடவுச் சீட்டு,விசா ஆவணங்களை அவர்கள் ஏற்பாடு செய்யும் வரை தற்காலிகமாக சிறப்பு முகாமில் (அகதி அந்தஸ்து இல்லாது)தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எப்போதும் போல் சட்ட நடைமுறை தெரியாத சில கட்சியினர் தமிழ்நாடு அரசை குறை கூறி தங்கள் இருப்பே காட்ட ஆரம்பித்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது சிறப்பு முகாமில் உள்ள இவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப ‘க்யூ’ பிரிவு பொலிஸார் முயன்று வருகின்றனர். இதற்கு தேவையான ஆவணங்களையும் தயாரித்து வருகின்றனர்.

இதில் முருகன் மேல் மற்றொரு வழக்கு இருப்பதால் அவரை இலங்கைக்கு அனுப்ப தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது.

இவ்விவகாரத்தில் முருகன் மற்றும் ஜெயக்குமார் இந்திய குடிமக்களை திருமணம் செய்துள்ளதால் அவர்களுக்கு இந்திய
குடியுரிமை கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு புகுந்து தாய் 3 பிள்ளைகள் மீது கத்தி வெட்டு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

வீடு புகுந்து தாய் 3 பிள்ளைகள் மீது கத்தி வெட்டு தாக்குதல்

வீடு புகுந்து தாய் 3 பிள்ளைகள் மீது கத்தி வெட்டு தாக்குதல்

மாத்தளை– உக்குவளை லேலிஅம்ப பிரதேசத்தில் தாயும் பிள்ளைகள் மூவரும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், 3 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சகோதரர்கள் இருவரும் பாடசாலை செல்ல தயாராகிக்கொண்டிருந்த போது, அவர்களது வீட்டுக்கு வந்த நபர் ஒருவர்

இவ்வாறு சிறுவர்களின் தாயையும் பிள்ளைகளையும் தாக்கி காயப்படுத்தியதாகவும் இதன்போது அவர்களின் தந்தை தொழிலுக்குச் சென்றிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு புகுந்து தாய் 3 பிள்ளைகள் மீது கத்தி வெட்டு தாக்குதல்

இச்சம்பவத்தில் லேலிஅம்ப பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது தாயும் 19 வயது மகளும் மற்றுமொரு சிறுவனும் பாரிய காயங்களுடன் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்பவர் என்றும் தெரியவந்துள்ளதுடன்

தாக்குதலுக்கான காரணம் தொடர்பில்
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஜேவிபியுடன் இணையும் அரசியல் கட்சி
Posted in இலங்கை செய்திகள்

ஜேவிபியுடன் இணையும் அரசியல் கட்சி

ஜேவிபியுடன் இணையும் அரசியல் கட்சி

இலங்கையில் ஆட்சி கவிழ்ப்பை மேற்கொண்டு ஜேவிபி என்கின்ற குற்ற சாட்டு பலமாக வைக்க பட்டு வருகிறது .

இவ்வேளை அதே ஜேவீபியுடன் புதிய அரசியல் கட்சி ஒன்று இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளது .

இந்த புது கூட்டு முயற்சிகள் இலங்கை வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது .

தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் அதிக ரயில் தடம்புரள்வு இம்மாதம் அதிகரிப்பு

இலங்கையில் அதிக ரயில் தடம்புரள்வு இம்மாதம் அதிகரிப்பு

இலங்கையின் வரலாற்றில் அதிகமான ரயில்கள் தடம் புரள்வு மற்றும் தாமதமாக இம் மாதம் மட்டும் அதிகம் இடம்பெற்றுள்ளது என் ரயில்வே போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது .

இலங்கை வரலாற்றில் இம் மாதம் இந்த சாதனை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

No posts found.
பெற்றோர்களின் கவனம் பிள்ளைகள் மீது முழுமையாக இருக்கவேண்டும்
Posted in இலங்கை செய்திகள்

பெற்றோர்களின் கவனம் பிள்ளைகள் மீது முழுமையாக இருக்கவேண்டும்

பெற்றோர்களின் கவனம் பிள்ளைகள் மீது முழுமையாக இருக்கவேண்டும்

மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துக்கொண்டு வருகின்ற இக்காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மீது

முழுமையான கவனத்தினை செலுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் தொழில் பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி (திருமதி) கிரிதன் சுகந்தினி தெரிவித்தார்.

“போதையற்ற மாணவர்கள் சமூதாயத்தை உருவாக்கல்” என்ற தொனிப்பொருளில் இலங்கை காப்போம் நிறுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு

நேற்று மாலை (13) திருமலை வளாக சித்த மருத்துவ பிரயோக விஞ்ஞான பீட தொழில் நுட்பவியல் கருத்தரங்கு மண்டபத்தில் காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.

பெற்றோர்களின் கவனம் பிள்ளைகள் மீது முழுமையாக இருக்கவேண்டும்

பிரதீப்கரன் (திலீப்) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைப்பது மட்டுமே பெற்றோர்களின் கடமையல்ல. தனது பிள்ளையின் கல்வி செயற்பாடுகளையும், அவர்கள் யார் யாருடன் நட்பு ரீதியான தொடர்புகளை வைத்துள்ளார்கள் என்பதையும் நன்கு அவதானிக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் பிள்ளைகள் பிழையான நண்பர்களின் உறவினால் வழிதவறிச் செல்லும் நிலைமை ஏற்படுகின்றது.

பணம் சம்பாதிக்கும் நோக்கில் போதைப்பொருள் வியாபாரிகள் பாடசாலை மாணவ சமூதாயத்தைக்கூட விட்டு வைக்கவில்லை.

அவர்களின் இந்த மோசமான செயற்பாடுகளுக்கு பழியாகுவது எமது பிள்ளைகளாகிய இளம் சந்ததியினராகும்.

எமது பிள்ளைகளை பாதுகாப்பது ஆசிரிய சமூகம் மாத்திரமல்ல என்பதை பெற்றோர்கள் புரிந்துகொண்டு தங்களின் பிள்ளைகள் மீது முழுமையான கவனத்தினை செலுத்துவது இன்றைய காலத்தின் தேவையாகும் என்பதை அனைத்துப்பெற்றோர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.

இதன்போது, இலங்கை காப்போம் நிறுவத்தினால் ஏற்பாடில் திருமலை வளாக சித்த மருத்துவ பிரயோக விஞ்ஞான பீட தொழில் நுட்பவியல் வளாகத்தில் அதிதிகளினால் மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், சித்த மருத்துவ பிரயோக விஞ்ஞான பீட தொழில் நுட்பவியல் மாணவர்கள்
ஒன்றியத்தின் தமிழறி தலைவர் தியாகராசா துகேந்தன், சன்சைன் முன்பள்ளி பாடசாலையின் பொறுப்பதிகாரிகள்,


இலங்கை காப்போம் நிறுவத்தின் செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

காதலனை கூலி படை வைத்து தாக்கிய காதலி
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

காதலனை கூலி படை வைத்து தாக்கிய காதலி

காதலனை கூலி படை வைத்து தாக்கிய காதலி

தமிழகம் கன்னியாகுமாரி பகுதியில் ,முன்னாள் காதலனை புதிய காதலனுடன் இணைந்து ,கூலி படை வைத்து தாக்கியுள்ளார் காதலி .

ஊந்துருளியில் வருகை தந்த காதலனை அவ்வழியே வந்த கூலி படையினர் ,அவரது ஊந்துருளியால் மோதி தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர் .

முன்னாள் காதலன் தாக்குவதை வேடிக்கை பார்த்து ரசித்துள்ளார் 19 வயது காதலி .

காதலனை கூலி படை வைத்து தாக்கும் காட்சிகள் ,அருகில் இருந்த கமராவில் பதிவாகிய நிலையில் ,காதலி ,புதிய காதலன் உள்ளிட்ட நான்கு கூலிப்படையை காவல்துறையினர் தேடி வருகின்றனர் .

பலத்த காயமடைந்த நிலையில் முன்னாள் காதலன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

பெண் புத்தி பின் புத்தி என்பதை இதை தான் சொல்லுவாங்க போல .இதுக்கு பேர் தான் காதலோ ..?